Jump to content

புதிய பிரதமராக... ரணில்? – இன்று அல்லது நாளை, பதவியேற்பு!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

அமைச்சுப் பதவி, பங்கு போடுகிறார்களாம்…..
விஜயகலா மகேஸ்வரனை…  ஊரிலை நிக்காமல்,  
உடனே கொழும்புக்கு போகச் சொல்லுங்கோ. 😛
 

பிள்ளையானும், சுரேன் ராகவனும் தான்… பாவங்கள்.
இரண்டு நாள் கூட… அமைச்சராக இருக்க முடியாமல் போட்டுது. 😂

டக்கியர், என்ன பாவம் செய்தவர்...

Link to comment
Share on other sites

4 hours ago, இசைக்கலைஞன் said:

இந்த ஆளை வைத்து மேற்கு நாடுகளில் கடன் வாங்க திட்டமிடப்படுது.

தோழரை கண்டதில் மகிழ்ச்சி 👌 தொடர்ந்து இணைந்திருங்கள்.👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சவாலான பணியை பெறுப்பேற்றுள்ள பிரதமர் ரணிலுடன் ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன் - ஜனாதிபதி

(இராஜதுரை ஹஷான்)

உறுதியான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No description available.

நாடு மிகவும் கொந்தளிப்பான தருணத்தில் இருக்கும் நிலையில் மிகவும் சவாலான பணியை பொறுப்பேற்பதற்கு முன்வந்து பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் உறுதியான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
 

https://www.virakesari.lk/article/127389

சுமந்திரன் என்ன கூறுகின்றார்? 

இலங்கையில் புதிதாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சுமந்திரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில்,

“ஜனாதிபதி முற்றாக பெரும்பான்மை தன்மையை இழந்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது பாராளுமன்றில் வாக்களிப்பு நடத்த உள்ளது.

இதேவேளை, விக்ரமசிங்கவிற்கு ஆரம்பத்திலிருந்தே தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.” என்றுள்ளார். (R)
https://www.tamilmirror.lk/செய்திகள்/சுமந்திரன்-என்ன-கூறுகின்றார்/175-296343

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில்,

“ஜனாதிபதி முற்றாக பெரும்பான்மை தன்மையை இழந்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது பாராளுமன்றில் வாக்களிப்பு நடத்த உள்ளது.

இதேவேளை, விக்ரமசிங்கவிற்கு ஆரம்பத்திலிருந்தே தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.” என்றுள்ளார். (R)
https://www.tamilmirror.lk/செய்திகள்/சுமந்திரன்-என்ன-கூறுகின்றார்/175-296343

இது பொருள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இது பொருள்.

நமக்கு புரிவதே, தெரியாத சுமந்தின் பிழையான அரசியல் புரிதல்....

ரணில், இந்திய, மேற்கு தெரிவு.

இவருக்கு, கோத்தாவின் மொட்டு கட்சி, இதொக, மற்றும் பதவிக்கு அழையும், நம்ம ரவூப் நாணா கட்சி, ரிசாட் கட்சி, சஜித்திடம் இருந்து, கிளம்பப்போகும் கோஸ்டிகள் ஆதரவு கிடைக்கும்.

பெரும்பான்மை நிரூபணம் ஆகும். 🤗

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் அலசல்👇🏾
 

புதிய பிரதமர் யார்?

இந்தக் கேள்விதான் நாடு முழுக்க இப்போது பேசுபொருள். பிரதமர் தெரிவில், உள்ளூர் அரசியல் காய்நகர்த்தல்கள் மட்டுமல்ல, வெளிச் சக்திகளின் புவிசார் அரசியல் நிகழ்ச்சிநிரலும் (Geopolitical Agenda) உள்ளது.

புதிய பிரதமர் தெரிவும் புதிய அமைச்சரவை நியமனமும், ஒரு வார காலத்திற்குள் நடந்தேறும் என, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவே முன்னாள் பிரதமர் ரணிலோடு ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அரசியல் அரங்கில் பிரதமர் பதவிக்காக அடிபட்ட, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் இப்போது பின்தள்ளப்பட்டு விட்டது.

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) விலகி, சுயாதீனமாக செயற்படப் போவதாக ஹரீன் பெர்னாண்டோ நேற்றிரவு அறிவித்திருக்கிறார். மனுஷ நாணயக்கார, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பலர் ஹரீனுடன் அணி சேர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பிளவு அரசியல் வட்டாரங்களில் முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். புதிய ஜனாதிபதியாக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை (கவனிக்க: சஜித்தை அல்ல), ஹரீன் பாராளுமன்றத்தில் பரிந்துரை செய்ததையும், அப்போதே லக்ஷ்மன் கிரியெல்ல அதை மறுத்ததையும் இங்கு சுட்டிக் காட்டலாம். மேதினத்தில் ஹரீனுக்கும் பொன்சேகாவுக்குமிடையே நடந்த வாக்குவாதத்தையும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள முடியும்.

ராஜபக்சக்களுக்கு மிகவும் தோதான ஒரு தெரிவு ரணில்தான். அத்தோடு பிராந்திய - சர்வதேச கூட்டணிக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ரணில் மிகவும் ஏற்புடையவர்.

இவ்வாறான அரசியல் அணிச் சேர்க்கைகள், புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புபட்டிருப்பதை ஊகிப்பதொன்றும் அவ்வளவு கடினமானதல்ல.

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணிலுக்கு, இந்த நெருக்கடி நிலமையைக் 'கையாளக் கூடிய' (கவனிக்க: 'தீர்க்கக் கூடிய' என்று சொல்லவில்லை) திறமையும் நீண்ட அனுபவமும் உள்ளது என்தில் சந்தேகம் இல்லை.

ஆனால், இந்த மக்கள் போராட்டத்தின் அபிலாசைகளை திசைதிருப்பும் 'டீல்' அரசியலில், அவரது வகிபாகம் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரிந்ததுதான். இன்னும் சில வாரங்களில் அது இன்னும் தெளிவாகத் தெரிந்து விடும். ராஜபக்சக்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதுமான ஒரு வெளிச்செல்லும் உத்தியை (Exit Strategy) அவர் ஏற்படுத்திக் கொடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தியா மற்றும் மேற்கு முகாமினதும் பன்னாட்டு நிறுவனங்களினதும் நிதியுதவியை வென்றெடுப்பதில் ரணில் வெற்றிபெறுவார் என்பதிலும் சந்தேகமில்லை. 

ஒரு வகையில் ரணில் அவசியமானவர். இன்னொரு வகையில் ஆபத்தானவர். இதன் பரிமாணம் பற்றிய  ஒவ்வொருவரின் புரிதல் அளவும் வேறுபட்டது. இந்த 'ஆபத்தான அவசியத்தை' இடைக்காலத் தீர்வாகக் கையாளலாம் என்று ராஜபக்சக்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் எண்ணுகின்றன. 

இந்த அரசியல் சுழியில் அடிபட்டுப் போகப் போவது சஜித்தான். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை சரியாகச் செய்ய இயலாத தடுமாற்றமும், நெருக்கடி காலகட்டத்திற்கு தலைமை வழங்க முடியாத அவரது இயலாமையும், அவரது அரசியல் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கின்றன.

செயல்வேகம் குன்றிய, உயர் பதவிக்கு அவசியமான அறிவாளுமைப் போதாமையுடைய அவரை, பிரேமதாஸவின் மகன் என்பதற்காக மட்டும் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அநேகமாக, அடுத்த தேர்தலில் சஜித் மிகவும் பலவீனப்பட்டு நிற்பார். ஐக்கிய மக்கள் சக்தியும் பலவீனமடைந்து விடும்.

இது ஒரு புறம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலமடையச் செய்யும். மறுபுறம், ஆட்டம் கண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியை, சுதந்திரக் கட்சி குறி வைத்து இயங்கும். இது அதிகார சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்தப் புதிய அரசியல் நகர்வுகளால், தற்போது நலிவடைந்து பின்தள்ளப்பட்டிருக்கும் பிரதான கட்சிகளான ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன ஒப்பீட்டளவில் முன்னரங்குக்கு வரும் சாத்தியங்கள் அதிகம். அதனால்தான் சந்திரிக்கா தரப்பும் களமாடுகிறது.

இதேவேளை, சம்பிக்க ரணவக்கவும் அவரது 43 ஆவது படையணியும் சஜித் அணியிலிருந்து ஒதுங்கி, தற்போது அடிபட்டு நிற்கும் சிங்களத் தேசியவாதத்தின் மீட்பராக தம்மை முன்னிறுத்தி இயங்குகின்றனர். அடுத்த பிரதமருக்கான போட்டிக் களத்தில் சம்பிக்கவும் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், இது நாட்டுக்கு மிக ஆபத்தான முன்னெடுப்பு.

இது இவ்வாறிருக்க, பிரதான கட்சிகள் மீதான அதிருப்தி அலையொன்று நாட்டில் பலமாக உருவெடுத்திருக்கிறது. சீரியஸான மாற்றத்தையே இது வேண்டி நிற்கிறது. இதன் பலனை அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்யும் வாய்ப்புகளே அதிகம். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நகர்வு இன்னும் விரிவும் வீரியமும் பெற வேண்டும். 

எது எப்படிப் போனாலும்,திசைகாட்டி முன்னெப்போதை விடவும் பெருமளவு ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், புதிய பாராளுமன்றத்தில் அதுவும் ஒரு தீர்மானகரமான சக்தியாக இருக்கும். 

எது எப்படியோ, அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்குப் பின்னர், பொதுத் தேர்தலொன்று இடம்பெறும் சாத்தியம் மிக அதிகளவில் உள்ளது. இப்போதுள்ள அரசியல் ஸ்திரமின்மையில் இருந்து வெளியேற அதுவே பொருத்தமான தீர்வாகும்.

புதிய பிரதமர் தெரிவு, அடுத்த தேர்தலை மையமாகக் கொண்ட ஒரு நகர்வு என்பதை, அரசியல் நடப்புகளை நன்கு ஊன்றிக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

அதனால்தான் புதிய பிரதமராவதற்குத் தயார் என்று ஏகப்பட்ட ஆட்கள் அறிவிப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பலமுனைகளில் துண்டு துண்டாக உடைந்து நிற்கும் அரசியல் தரப்புகளை, தேர்தலின் பின்னர் அணி சேர்க்கும் வேலையை பிராந்திய மற்றும் புவிசார் அரசியல் சக்திகள் செய்யும்.

இலங்கை விவகாரத்தில் ஒப்பீட்டளவில் சீனாவின் செல்வாக்கு குறைந்து, இந்தியாவின் கை ஓங்கியிருக்கிறது என்பது பகிரங்க ரகசியம். தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்குக் கிடைத்த பொன்முட்டையாக ஆகியிருக்கிறது.

இந்த நகர்வுகள் இடைக்காலத் தீர்வாகவே வருகின்றன. அதேவேளை, இவை இறுதித் தீர்வில் தாக்கம் செலுத்த வல்லன.

மக்கள் போராட்டத்தைத் திசைதிருப்பவும், தமக்கு வாய்ப்பாக வளைத்தெடுக்கவும் பல்வேறு சக்திகள் களமிறங்கியுள்ளதைக் காண முடிகிறது.  
எந்த சக்தி வந்து எந்த ஆட்டத்தைப் போட்டாவும், நாம்தான் விழிப்பாக இருக்க வேண்டும். ஏமாறக் கூடாது.

இந்த நாட்டுக்கு ஒரு தீர்க்கமான மாற்றம் தேவை. அது அடிப்படையான முறைமை மாற்றம் (System Change) என்பதில் மக்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் படிக்கத் தயாரென்றால்தான், நமது தலைவிதியை மாற்ற முடியும். இல்லாவிட்டால் 'பழைய குருடி கதவைத் திறடி' கதைதான் தொடரும்.

தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்து விட்டு நகரப் போகிறோமா? அல்லது நமது எதிர்காலத்தை ஆக்கபூர்வமாக வடிவமைக்கப் போகிறோமா?

இப்போதைக்கு யார் பிரதமராக வந்தாலும், நாம் காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டும்.

சிராஜ் மஷ்ஹூர்
12.05.2022
 

https://www.facebook.com/100004555895600/posts/2177783849050124/?d=n

Link to comment
Share on other sites

“2ஆம் உலக யுத்தம் தொடங்கிய போது வின்சன்ட் சேர்ச் நான்கே நான்கு பேரின் ஆதரவில் தான் பிரித்தானியாவின் பிரதமராக ஆனார். ஏன்? ஏனென்றால் அது நெருக்கடி காலம். நானும் அப்படித்தான்.”
ரணில் பதவியேற்றதும் சொன்னது இது.
பிரேமதாச 1993 மே தினத்தன்று கொல்லப்பட்ட வேளை டீ.பி.விஜேதுங்க ஜனாதிபதியின் இடத்துக்கு நிரப்பப்பட்டார். அது தொடக்கம் ஆறு தடவைகள் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.
• 17 மே 1993 – 19 ஓகஸ்ட் 1994
• 09 டிசம்பர் 2001 – 6 ஏப்ரல் 2004
• 08 ஜனவரி 2015 - 26 ஓகஸ்ட் 2015,
• 17 ஓகஸ்ட் 2015 – 20 ஒக்டோபர் 2018
• 16 டிசம்பர் 2018 – 21 நவம்பர் 2019
• இப்போது 12 மே 2022 அன்று ஆறாவது தடவை பிரதமராக பதவியேற்றிருக்கிறார்
 
ரணில் – மகிந்த :
• 2004 – ரணில் போனார் மகிந்த வந்தார்
• 2015 – மகிந்த போனார் ரணில் வந்தார்
• 2018 – ரணில் போனார் மகிந்த வந்தார்
• 2018 – மகிந்த போனார் ரணில் வந்தார்
• 2019 – ரணில் போனார் மகிந்த வந்தார்
• 2022 – மகிந்த போனார் ரணில் வந்தார்.
 
இலங்கையின் வரலாற்றில் ஆறு தடவைகள் பிரதமராக இருந்த சாதனையும் ரணிலுக்குத் தான். ஒரு தடவை கூட முழுமையாக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ய முடியாமல் போன பிரதமரும் ரணில் தான்.
77 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 45 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருக்கிறார்.
ஒன்பது தேர்தலில் போட்டியிட்டு ஐந்து தடவைகள் கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்புகளை பெற்றிருந்த அவர் இறுதித் தேர்தலில் தோற்றே போனார்.
பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போனவர் பிரதமராக ஆகியிருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி முற்றுமுழுதாக தோற்றுப் போய் வெறும் போனஸ் ஆசனத்தை மட்டுமே பெற்றுக்கொண்ட நிலையில் அந்த ஒரேயொரு போனஸ் ஆசனத்தின் வழியாக வந்தவர் ரணில்.
பாராளுமன்ற வரலாற்றில் ஒரே ஒரு ஆசனத்தைப் பெற்ற கட்சியொன்றைச் சேர்ந்தவர் பிரதமராக தெரிவாகும் முதல் சந்தர்ப்பமாகவும் இது இருக்கும்.
 
-சரவணன் 
 
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: மக்களை எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீட்டெடுப்பேன் - புதிய பிரதமர் ரணில் உறுதி

12 மே 2022, 13:46 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை பிரதமர் ரணில்

பட மூலாதாரம்,SL PRESIDENT’S MEDIA DIVISION

இலங்கை மக்களை எதிர்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கவுள்ள சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமராக வியாழக்கிழமை மாலையில் பதவியேற்றுக் கொண்ட பிறகு ஊடகங்களுக்கு பேசினார் ரணில். அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைகளை தனியாக தம்மால் முன்னெடுக்க முடியாது என்றும் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகள் அத்தியாவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ளும் வகையிலான பிரஜைகளாக இலங்கையர்கள் இருக்க வேண்டும். இலங்கை ரூபாவிற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன், இளைஞர்களுக்கு எதிர்காலமொன்று இருக்க வேண்டும் என்றும் ரணில் தெரிவித்தார்.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவித்த அவர், திங்கட்கிழமை அளவிலேயே அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் எனவும் ரணில் குறிப்பிட்டார்.

இலங்கையில் தீவிரமாகி வரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரணில், போராட்டத்தை தொடர்ந்தும் நடத்திச் செல்ல இடமளிப்பதாக தெரிவித்தார்.

''கோட்டா கோ கம மீது நான் கை வைக்க மாட்டேன். அதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். போலீஸாரும் அதற்கு எதையும் செய்ய மாட்டார்கள். போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்" என்றும் ரணில் கூறினார். இதைத்தொடர்ந்து ரணிலிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்த பதில்களின் விவரம்:

 

ரணில் விக்ரமசிங்க

கேள்வி:- ரணில் கோ கம என்ற ஒரு போராட்ட வடிவம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தற்போது கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில் :- ரணில் கோ கம என்று ஒன்று உருவாக்கவில்லை. ரணில் கோ ஹோம் கம என்ற உருவாக்கி, எமது வீட்டிற்கு முன்பாக இருந்தனர். அது பிரச்னையாகியது. இந்த இடத்தில் ஒன்று மாத்திரமே உள்ளது. கோட்டா கோ கம என்ற அமைப்பு மாத்திரமே உள்ளது. ஏனையோருக்கும் கோ ஹோம் என கூற முடியும் அல்லவா?"

கேள்வி:- நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஒன்று காணப்படுகின்றது. இதற்கு நிரந்தர தீர்வொன்று கிடைக்குமா?

பதில் :- ஆம்... ஆம்..

கேள்வி:- பெரும்பான்மை தொடர்பில் ஏதாவது பிரச்னை வருமா?

பதில் :- இல்லை. இல்லை.. பெரும்பான்மை தொடர்பில் பிரச்னை இல்லை. பெரும்பான்மை காண்பிக்கின்றேன்.

கேள்வி:- நாடாளுமன்றத்திற்குள் எவ்வாறு பெரும்பான்மையை காண்பிப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து பெரும்பான்மை கிடைத்துள்ளதையா நீங்கள்

கூறுகின்றீர்கள்?

பதில்:- எனக்கு இரண்டு பக்கங்களிலும் பெரும்பான்மை உள்ளது. நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் இன்று துன்பங்களை அனுபவித்து வருவதை நிறுத்த வேண்டுமா? இல்லையா? நீங்கள் கூறுகின்றீர்கள், குறுகிய அரசியலை நடத்துவதற்காக மூன்று வேளைகளிலும் உணவு உட்கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. எமக்கு பெட்ரோல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எமக்கு டீசல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எமக்கு மின்சாரம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்த அனைத்தையும் நான் பெற்றுக்கொடுப்பேன், நாடாளுமன்றத்திலுள்ள அனைவரது ஆதரவுடனும் இதனை நான் பெற்றுக்கொடுப்பேன்.

ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என கடுமையான சூழ்நிலை நிலவுகிறது. இவற்றைத் தடுக்க ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியாகக் கூறி பொதுமக்கள் இலங்கையின் பல நகரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் பதவி வகித்து வந்த மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வந்த வேளையில், மஹிந்த மட்டும் கடந்த திங்கட்கிழமை பதவி விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக ஒரே ஒரு உறுப்பினர் பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 73 வயதான ரணில் விக்ரமசிங்கவுடனும் கோட்டாபய ராஜபக்ஷ பேசினார்.

இந்த நிலையில், ரணில் இன்று நாட்டின் பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.

நாட்டின் பிரதமராக ஐந்து முறை பதவி வகித்த விக்ரமசிங்க, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறிசேனவால் மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்றார்.

ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி ஆதரவுடன் அவர் பிரதமராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணிலுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

முன்னதாக, சஜித் பிரேமதாசாவை பிரதமர் பதவி ஏற்க வறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், ஜனாதிபதி பதவி விலகினால், அந்த வாய்ப்பை ஏற்பதாக சஜித் கூறியிருந்தார். இந்த நிலையில், அவருக்கு ஜனாதிபதி வழங்கியிருந்த அவகாசம் காலாவதியான நிலையில், நியமன உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க இலங்கை பிரதமராகியிருக்கிறார்.

அவருக்கு 160க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில், 1994ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தலைவராகவும் 1994, 2001, 2004, 2015 ஆகிய ஆண்டுகில் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கிறார் ரணில்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் பலம் உளளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61423157

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:
2ஆம் உலக யுத்தம் தொடங்கிய போது வின்சன்ட் சேர்ச் நான்கே நான்கு பேரின் ஆதரவில் தான் பிரித்தானியாவின் பிரதமராக ஆனார். ஏன்? ஏனென்றால் அது நெருக்கடி காலம். நானும் அப்படித்தான்.”
ரணில் பதவியேற்றதும் சொன்னது இது.

அதே யுத்த வெற்றி நாயகனை பொருளாதார மறுமலர்ச்சி பிரிட்டிஸ் க்கு தேவை  என்று வந்தவுடன் பிரிட்டிஸ் மக்கள் தூக்கி எறிந்ததும் வரலாற்றில் உள்ளது .

 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 6வது முறையாக பிரதமர் ஆன இவர் யார்?

 • ரஞ்சன் அருண் பிரசாத்
 • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,UNP

இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார சிக்கலில், நிச்சயமற்ற நிலையில் தவிக்கும்போது 6-வது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியலில் என்றுமே தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழ்ந்து வருகின்றார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்றுமே இல்லாத தோல்வியை ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன சந்தித்திருந்தன.

தேர்தலின் ஊடாக ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை கூட ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எனினும், இலங்கையில் காணப்படுகின்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாக, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் கிடைத்தது.

இந்த ஒரு நாடாளுமன்ற ஆசனத்தின் ஊடாக, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்திலுள்ள 225 பேருக்கு மத்தியில் தனியொருவராக அமர்ந்து, தனது அரசியலை நடத்தி வந்தார்.

இவ்வாறு தனியொருவராக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் ரணில் விக்ரமசிங்க, இன்று பிரதமர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக பரிமாணம் பெற்றுள்ள இந்த ரணில் விக்ரமசிங்க யார்?

எசுமண்ட் விக்கிரமசிங்க மற்றும் நளினி விக்ரமசிங்க ஆகியோருக்கு 1949ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி ரணில் விக்ரமசிங்க மகனாக பிறந்தார்.

கொழும்பு ராயல் கல்லூரியில் கல்வியை தொடர்ந்த ரணில் விக்ரமசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை தொடர்ந்தார்.

தொழில் ரீதியாக வழக்குரைஞராக செயற்பட்ட அவர், பின்னர் அரசியலில் நுழைந்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை

 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,UNP

கம்பஹா மாவட்டத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி பிரதான அமைப்பாளராக 1970ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டு, பின்னர் பியகம தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பியகம தொகுதியிலிருந்து நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ரணில் விக்ரமசிங்க, ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கத்தில் இளம் அமைச்சராக பதவி வகித்தார்.

இளையோர் விவகாரம் மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சர் பதவியே, ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்த முதலாவது அமைச்சு பொறுப்பாகும்.

இவ்வாறு தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிர்க்க முடியாத ஒரு தலைமைத்துவத்தை நோக்கி நகரத் தொடங்கினார்.

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, 1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இதையடுத்து, இடைகால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்ட நிலையில், அந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க 1993ம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிரதமராக நியமிக்கப்பட்டார்.

 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதனைத் தொடர்ந்து, 2001ம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப்பட்டார்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ரணில் - மைத்திரி கூட்டணி வெற்றியீட்டியதை அடுத்து, மூன்றாவது தடவையாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, நான்காவது தடவையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

நல்லாட்சி காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழுப்பகர நிலைமையினால், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,UNP

எனினும், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய ரணில் விக்ரமசிங்க, இந்த ஆட்சியின் கீழ் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பாரிய வீழ்ச்சியுடன் தோல்வியை சந்தித்தார்.

எனினும், தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனத்தை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, மீண்டும் நாடாளுமன்ற பிரவேசத்தை ரணில் விக்ரமசிங்க பெற்றார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வந்த பின்னணியில், ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை மற்றும் சர்வதேச விவகார ஆளுமை ஆகியவற்றினால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஆளுமை அவருக்கு உள்ளதாக பெரும்பாலானோர் கூறியிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே, ரணில் விக்கிரமசிங்க 6வது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் ரீதியில் பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் பலம், பலவீனம், ஆளுமை என்ன?

இது தொடர்பில் மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழிடம் பேசினார்.

''ரணில் விக்கிரமசிங்கவின் பொறுமை, ராஜதந்திரிகளுடனான உறவு, அவசர தீர்மானங்களை எடுக்காமை போன்ற பல்வேறு பலங்கள் அவரிடம் உள்ளன. அத்துடன், அனைத்து கட்சிகளுடனான உறவு மற்றும் அனைத்து விதமான அரசியல் விமர்சனங்களையும் தாங்குதல் போன்றவை மிக பெரிய பலமாக இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு வகையிலான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், அது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க எந்தவித பதிலும் கூறவில்லை. அது அவரின் நிலைப்பாடு என கூறி விமர்சனங்களை தாங்கிக்கொண்;டார். இதனாலேயே, இன்று அவர் பிரதமராக பதவியேற்கும் போதுகூட, அவரால் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியதாக இருக்கின்றது. இவை அவரது பலம்" என்கிறார் ஆர்.சிவராஜா.

ரணில் விக்கிரமசிங்கவின் பலவீனம் என்ன?

''பலவீனம்... மஹிந்த ராஜபக்ஷ, பிரேமதாஸ போன்ற தலைவர்களை போன்று, அடிமட்ட மக்களை கவனிப்பது இல்லை என்பதே அவரது பலவீனமாகும். ஆனால் அவரது பலவீனம் என்னவென்று இப்போது அவருக்கு தெரியும். அதை இப்போது அவர் சரி செய்துக்கொள்ள முடியும். சாதாரண குடிசைவாசியின் வீட்டிற்குள் அவரால் செல்ல முடியாது. ஏனென்றால், அவர் வாழ்ந்த அரசியல் சூழல் அப்படியாக இருந்தது. ஏமாற்றுவதற்காக அவ்வாறு அவரால் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதுவே அவரது பலவீனமாகும். அப்படி செய்திருந்தால் அவர் போலியாகியிருப்பார். ஆனால் இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில், அந்த போலி நாடகத்திற்கு இடமில்லை. அதனாலேயே ரணில் மீண்டும் உள்ளே வருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. பலவீனம் உதவி செய்த ஒரே தலைவன் ரணில் விக்ரமசிங்க தான்" என அவர் கூறுகின்றார்.

 

மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா

பட மூலாதாரம்,SIVARAJA

 

படக்குறிப்பு,

மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா

ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு உறவுகள்?

''ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் மிகவும் பரந்தது. சாதாரண நிலையில் வந்து, இன்று இலங்கையின் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். அவருடைய காலப் பகுதியிலேயே இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை எல்லாம் நல்லதொரு இடத்திற்கு வந்தது. அப்போதிருந்து, இன்று வரையான அரசியல் அனுபவம்தான் வெளிநாட்டு தொடர்புகளுக்கு மேலும் உறுதுணையாக இருந்தது.

கொழும்பில் ஒரு வெளிநாட்டு நிகழ்வு நடந்தால், அவர் எதிர்கட்சியில் இருந்தாலும், சாதாரண எம்.பியாக இருந்தாலும் அவருக்கு அந்த நிகழ்வில் முன்னுரிமை கொடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் இவர் பேச ஆரம்பித்தால், சபாநாயகர் அதற்கான மரியாதை கொடுப்பார். ஏனென்றால், அவர் ஐந்து தடவைகள் பிரதமராக இருந்துள்ளார். அதற்குரிய அனுபவம் தான். சீனாவையும், இந்தியாவையும் எவ்வாறு நடுநிலையாக கையாள வேண்டும் என்பதை அறிந்த ஒரேயொருவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே. அதனாலேயே விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தையை நடத்த அனைத்து நாடுகளும் முன்வந்திருந்தன. அந்த உறவு இருந்ததால் தான் இவ்வாறு நடந்தது. எந்தவொரு தலைவருக்கும் இல்லாத ஒரு சர்வதேச தொடர்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருக்கின்றது. அதுதான் சர்வதேசத்துடனான அவரின் பலம்" என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61418553

Link to comment
Share on other sites

தனியாக போன ரணில் 113 பேருடன் இப்பொழுது போகிறார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. இதற்கு உதாரணம் ரணில் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இலங்கை நெருக்கடி: மக்களை எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீட்டெடுப்பேன் - புதிய பிரதமர் ரணில் உறுதி

12 மே 2022, 13:46 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை பிரதமர் ரணில்

அண்மைக்கால போராட்டங்களின் சாரம்சமே கோ கோத்தபாய தானே?
மகிந்த போனாலும் கோத்தபாய ஏன் இன்னும் போகாமல் இருக்கிறார்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அண்மைக்கால போராட்டங்களின் சாரம்சமே கோ கோத்தபாய தானே?
மகிந்த போனாலும் கோத்தபாய ஏன் இன்னும் போகாமல் இருக்கிறார்?

கோத்தபாயவுக்கு…. வருகின்ற செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்,
நம்பிக்கையில்லா தீர்மானம். கொண்டு வருகின்றார்கள்.
அதில் அவருக்கு பாதகமாக வந்தால், அவர் போக வேண்டி வர…
பிரதமர் ரணில் ஜனாதிபதி ஆகின்றார். இது, திட்டம் என்கிறார்கள்.

அந்த நம்பிக்கயில்லா தீர்மானத்தில்… கோத்தா வென்றால்.
ஆதரவாக வாக்களித்த எம்.பி. களின் வீடு கொழுத்துதல் என்று கலவரம் தொடரலாம்.

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

கோத்தபாயவுக்கு…. வருகின்ற செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்,
நம்பிக்கையில்லா தீர்மானம். கொண்டு வருகின்றார்கள்.
அதில் அவருக்கு பாதகமாக வந்தால், அவர் போக வேண்டி வர…
பிரதமர் ரணில் ஜனாதிபதி ஆகின்றார். இது, திட்டம் என்கிறார்கள்.

அந்த நம்பிக்கயில்லா தீர்மானத்தில்… கோத்தா வென்றால்.
ஆதரவாக வாக்களித்த எம்.பி. களின் வீடு கொழுத்துதல் என்று கலவரம் தொடரலாம்.

 

கோத்தாவுக்கு எதிராக எத்தனை வாக்குகள் விழவேண்டும்?

முழு பாராளுமன்ற உறுப்பினர்களும் கோத்தாவை நிராகரித்தாலே ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென எண்ணுகிறேன்.

இதுபற்றி யாராவது கூடுதல் தகவல் தெரியுமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

 

கோத்தாவுக்கு எதிராக எத்தனை வாக்குகள் விழவேண்டும்?

முழு பாராளுமன்ற உறுப்பினர்களும் கோத்தாவை நிராகரித்தாலே ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென எண்ணுகிறேன்.

இதுபற்றி யாராவது கூடுதல் தகவல் தெரியுமா?

அதனைப் பற்றி சரியாகத் தெரியவில்லை, ஈழப்பிரியன்.
முழு பாராளுமன்றமும் நிராகரிப்பது என்றால்…
அத்தைக்கு… மீசை முளைச்ச கதைதான். 😂

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 1 person and text that says 'வடைத்தீவு காகம் கா கா... என்றது வடை கீழே விழுந்தது நரி வடையைத் தூக்கிக் கொண்டு ஓடியது'

காகம்... கா,கா, என்றது....
வடை... கீழே விழுந்தது,
நரி... வடையை, தூக்கிக் கொண்டு ஓடியது. 🤣

Andavar Selva 

 

##################    #################   #################

 

May be an image of text that says 'நான் பிரதமர் பதவியை ஏற்பதென்றால் கோட்டா பதவி விலக வேண்டும் சஜித் நான் பிரதமர் பதவியை ஏற்பதென்றால் கோட்டா பதவி விலக வேண்டும் அனுர நான் பிரதமர் பதவியை ஏற்பதென்றால் எந்தக் காரணம் கொண்டும் கோல்பேஸ் ஆர்ப்பாட்டக் காரர்களை அகற்ற எத்தணிக்கக் கூடாது ரணில் மேலே உள்ள இருவரும் சொன்ன அதே விடயத்தை ரணில் எவ்வாறு சொல்லியிருக்கார் பார்த்தீர்களா??? இதுதான் ரணிலுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.'

மூவரும் சொல்லிய விடயம், ஒன்றுதான்.
எதை எப்படிச் சொல்லுவது என்பதே.. தந்திரம்.
தந்திரமானது,  நரி. 😂
 
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அந்த நம்பிக்கயில்லா தீர்மானத்தில்… கோத்தா வென்றால்.
ஆதரவாக வாக்களித்த எம்.பி. களின் வீடு கொழுத்துதல் என்று கலவரம் தொடரலாம்.

அப்பிடியெண்டால் ஒவ்வொருத்தருக்கும் எங்கையெங்கை வீடுகள் கிடக்கு எத்தினை வீடுகள் கிடக்கு எண்ட விபரங்களை இப்பவே திரட்டி வைச்சிருப்பினம் 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

கோத்தாவுக்கு எதிராக எத்தனை வாக்குகள் விழவேண்டும்?

முழு பாராளுமன்ற உறுப்பினர்களும் கோத்தாவை நிராகரித்தாலே ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென எண்ணுகிறேன்.

இதுபற்றி யாராவது கூடுதல் தகவல் தெரியுமா?

2/3 வாக்குகள் தேவை 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் ஒவ்வொருத்தருக்கும் எங்கையெங்கை வீடுகள் கிடக்கு எத்தினை வீடுகள் கிடக்கு எண்ட விபரங்களை இப்பவே திரட்டி வைச்சிருப்பினம் 😎

விரும்பினால் நீங்களும் உதவலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of one or more people

 

May be an image of 3 people, people standing and text that says 'சஜித் கோட்டா ரணில்'

அவள், பறந்து போனாளே... 

 

May be an illustration

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மூவரும் சொன்னது ஒன்று தான் ஆனால் ரணில் பிரதமர் பதவியை எற்றதான் மூலம் செய்தது சொன்னதுக்கு நேர் எதிரானது ....கோத்தா [நண்பரே ]உமது மிகுதி பதவிக்காலம் வரைபதவியில் இரு.  என்பதாகும்.  இந்த பிரதமர் பதவி கோத்தா விரும்பும் நேரம் கலைக்க முடியும் என்னெனில்  ரணில் தனியாக நிற்கிறார்.  பெரும்பான்மை இல்லை என்பதுடன் சிறுபான்மை கூட இல்லை 🤣😂உண்மையில் அருமையாக நடந்த போராட்டத்தை பலவீனமாக செய்து விட்டார் ஒரே காரணம் சாதி குறைந்த சஜித் பிரதமர்...ஐனதிபதி. ....பதவிகள் வகிக்கக்கூடாது என்ற கொள்கை ஆகும்   

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கதிர் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை! தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.   இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.   120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர்,  squat பிரிவில் 330 கிலோ கிராமையும் , benchpress பிரிவில் 175 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார். இதில் squat மற்றும் deadlift பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.   அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் படைத்துள்ளார்.   தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை! | உதயன் | UTHAYAN (newuthayan.com)
  • சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவசரவேண்டுகோளை சீன தூதரகம் விடுத்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் செல்வது குறித்து இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இலங்கையின் முக்கிய அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை சீன தூதரகம் கோரியுள்ளது. கப்பல் பயணத்தை தாமதிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்த வேண்டுகோள் கிடைத்ததும் இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை தூதரகம் கோரியுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கப்பல் விவகாரம்- இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கு சீன தூதரகம் முயற்சி | Virakesari.lk
  • By T. SARANYA 08 AUG, 2022 | 10:20 AM தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில்  உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தனிக்கட்சிகளுடைய எந்தவொரு நாட்டாமைத்தனத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நாம் காப்பாற்ற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாவிட்டால் அது இல்லாமல் போகும். வெறும் உதட்டளவிலேயே தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. உளப்பூர்வமான விடுதலையை தொடர்பாக பேசவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் அண்ணன் தம்பி என்று நாட்டாமைத்தனம் வேண்டாம். எங்கள் மக்கள் தற்போது இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள் அவன் பிழை இவன் பிழை என நாம் கூறுகின்றோம். மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற இனத்தை விடுதலை செய்கின்ற விடயங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோமா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது ஆலோசனைகளை பெறுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ண வேண்டும். தற்போது வந்தவர்கள் தமிழரசு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்கின்ற செயலை செய்கின்றனர். இதனை ஒரு காலம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 22 இல் இருந்து தற்போது 10 ஆக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறி உள்ளது. ரணில் விக்ரமசிங்க பற்றி உங்களுக்கு தெரியும். விடுதலைப் புலிகளை உடைத்தவர். அவருடைய ராஜதந்திரத்தை பற்றி சொல்கின்ற போது நரித் தந்திரம் என்பார்கள். அந்த தந்திரமே விடுதலைப்புலிகளையும் பிரித்தாண்டது. அந்த தந்திரத்தையே நாங்கள் அண்மையில் பேசுகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாண்டார். கூட்டமைப்பில் சிலர் தனக்கு வாக்களித்தார்கள் என கூறினர். சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் அதனை எதிர்த்து கதைத்தார்கள். வெளியில் வந்த போது ரணில் இவ்வாறு கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ரணிலின் கருத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற வகையிலும் ஒரு சிலரின் கருத்துக்கள் இருந்தது. அதனால் யாருக்கு வெற்றி என்று சொன்னால் அது ரணிலுக்கே வெற்றி. நாகரீகம் கருதி நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மாநாடு என்பதால் நான் பெயரைச் சொல்லி விரும்பவில்லை. இது யாருக்கு நட்டம்.  ஜனாதிபதி சரியாக காயை நகர்த்தி இருக்கின்றார். அதனை நாங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு எங்களுடைய மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம்.  ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது. இருக்கின்றது. இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது. பலமாக 22 ஆசனங்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும். விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இணைந்து செயல்படுகின்ற சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என்றார். கூட்டமைப்பினுள் கறுப்பாடுகளை அனுமதிக்க முடியாது - செல்வம் அடைக்கலநாதன் | Virakesari.lk
  • By T. SARANYA 08 AUG, 2022 | 04:35 PM (எம்.நியூட்டன்) வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோமென்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அன்னராசா இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடற்றொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் அதில் தங்கி வாழும் மக்கள் என அண்ணளவாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்த பாதிப்பு கடற்றொழில் சமூகத்தை பட்டினியை நோக்கி தள்ளுகின்றது. கடந்த 60 நாட்களுக்கு மேல் எமக்குரிய மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. நூற்றுக்கு எண்பது வீதமான கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மண்ணெண்ணெய் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று சொல்லி ஏக்கத்தோடு இரண்டு மாதங்களை கடந்து விட்டோம்.  மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. எங்கள் சமூகம் பட்டினியை நோக்கி நகர்கின்றது. இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. எரிபொருள் பற்றாக்குறை இன்றளவில் நிவர்த்தி செய்யப்படுவதாக கூறப்பட்டாலும் கூட கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் இன்று வரை கிடைக்கவில்லை. கடந்த வாரம் 6600 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதை ஆறு கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு பகிர்ந்தளித்திருக்கின்றோம்.  நூற்றுக்கணக்கான சங்கங்கள் எரிபொருளின்மையால் தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. ஜனாதிபதி, எரிசக்தி அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து மண்ணெண்ணெய் விரைவாக வழங்க நடவடிக்கை வேண்டும் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற நல்லூர் மகோற்சவம் இடம்பெற்று வருவதனால் மீன் உண்பவர்களின் தேவை குறைந்து இருக்கின்றது. அதனால் எங்கள் பாதிப்பு வெளித்தெரியவில்லை.அதனை தாண்டி நாங்களே உணவை உண்ண முடியாத நிலையில் இருக்கின்றோம். எங்கள் பிரச்சினை தொடர்பான விடங்களை மாவட்ட நிர்வாகம் உரிய தரப்புகளுக்கு அனுப்பவேண்டும். நாங்கள் யாரிடம் நிவாரணம் கேட்கவில்லை. உதவி கேட்கவில்லை மண்ணெண்ணெய் தந்தால் போதும் கடற்றொழில் சமூகம் அதற்கான பணத்தை வழங்கும். இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவிடமும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிடமும் நான் ஒரு பகிரங்க கோரிக்கையை விடுக்கின்றேன். வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோம். வடபகுதி கடற்றொழிலாளர்கள் மீது கருணை காட்டி இந்தியத் தூதரகம் விரைந்து செயற்பட வேண்டும்  என்றார். மண்ணெண்ணெயை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் | Virakesari.lk
  • இப்படியான செய்திகளை, அதில் கருத்து பகிர்வதை சுயதணிக்கை அடிப்படையில் தவிர்ப்பது என்று அண்மையில் நம்மில் பலர் எடுத்து கொண்ட உறுதிமொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.