Jump to content

உக்ரேனில் ரஸ்ஸிய றாணுவ பட்டாலியன் தாக்கியழிப்பு, பல கனரக வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனில் ரஸ்ஸிய றாணுவ பட்டாலியன் தாக்கியழிப்பு, பல கனரக வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன

The Russians Lost An Entire Battalion Trying To Cross A River In Eastern Ukraine

உக்ரேனிலிருந்து ரஸ்ஸியாவினால் சுதந்திரப் பிராந்தியங்களாக அறிவித்துப் பிரிக்கப்பட்ட டொனெஸ்ட் பிராந்தியத்தினை உக்ரேனுடன் இணைக்கும் ஆற்றின் மீதான பாலத்தினைக் கடக்க எத்தனித்த ரஸ்ஸிய பட்டாலியன் ஒன்று மீது உக்ரேனிய விசேட படைகள் நடத்திய தாக்குதலில் பல ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

Charred remains of another Russian convoy: drone footage shows the aftermath of the Ukrainian ambush - Global Happenings

கிழக்கு உக்ரேனில் இருக்கும் இந்த ஆற்றினை செயற்கையான மிதக்கும் பொன்டூன் பாலங்களைப் பாவித்து ரஸ்ஸிய ராணுவம் கடக்க எத்தனித்திருந்தது. இந்த பாலம் பூர்த்தியானதும் ஆற்றினைக் கடப்பதற்கென்று தாங்கிகள் உட்பட பல கனரக வாகனங்களின் அணியொன்று ஆற்றின் அருகே காத்திருந்த வேளையில் இப்பாலத்தின்மீதும், அருகே அணிவகுத்து நின்ற ரஸ்ஸிய அணிமீதும் பலமான தாக்குதல்களை உக்ரேனிய ராணுவம் மேற்கொண்டிருக்கிறது.

இத்தாக்குதலில் சுமார் மூன்று டசின் தாங்கிகள் உட்பட பல கனரக வாகங்கள் அழிக்கப்பட்டிருப்பதுடன், ஏறக்குறைய ஆயிரம் ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் ஒன்றில் கொல்லப்பட்டோ அல்லது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டோ இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Russian battalion wiped out trying to cross river of death | News | The Times

செய்மதிகளூடாக எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இத்தாக்குதலின் வீரியத்தைக் கட்டியங்கூறி நிற்கின்றன.

ஆனாலும், கிழக்கில் ரஸ்ஸியா நடத்திவரும் ஆக்கிரமிப்பு இத்தாக்குதலின்மூலம் நிறுத்தபடுமென்று தாம் நம்பவில்லை என்று மேறுகுலக ராணுவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆற்றைக் கடக்க முற்பட்ட படைப்பிரிவு உக்ரேனுடையதா அல்லது ரஸ்யாவினுடையதா என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

இவை பெரும்பாலும் உக்ரேனுடைய இராணுவத்தின் ஒரு பிரிவினர் என்றே இராணுவ வல்லுனர்களால் / அவதானிகளால் ஊகிக்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

ஆற்றைக் கடக்க முற்பட்ட படைப்பிரிவு உக்ரேனுடையதா அல்லது ரஸ்யாவினுடையதா என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

இவை பெரும்பாலும் உக்ரேனுடைய இராணுவத்தின் ஒரு பிரிவினர் என்றே இராணுவ வல்லுனர்களால் / அவதானிகளால் ஊகிக்கப்படுகிறது. 

உக்ரேன் இராணுவம்... தன்னுடைய இழப்பை மறைக்க, 
ரஷ்ய ராணுவம் என்று சொல்லி மாட்டுப் பட்டுப் போய் நிக்குது. 😂
பொய்ச்  செய்திகளை பரப்புவதில், 
உலகிலேயே... உக்ரேன் முதன்மையான நாடு. நாசிக் கூட்டம். 😡

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

உக்ரேனில் ரஸ்ஸிய றாணுவ பட்டாலியன் தாக்கியழிப்பு, பல கனரக வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன

மகிழ்ச்சி  நான் ரஷ்ய தொலைக்காட்சி சனல்களையே பார்த்து கொண்டிருப்பதால் இந்த செய்தியை காணவில்லை😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

உக்ரேன் இராணுவம்... தன்னுடைய இழப்பை மறைக்க, 
ரஷ்ய ராணுவம் என்று சொல்லி மாட்டுப் பட்டுப் போய் நிக்குது. 😂
பொய்ச்  செய்திகளை பரப்புவதில், 
உலகிலேயே... உக்ரேன் முதன்மையான நாடு. நாசிக் கூட்டம். 😡

உக்ரேனுக்கு நடந்த அடி பலம் எண்டபடியாலை தானே இவையாள் புது ரெக்னிக் ஆயுதங்களை குடுக்க வெளிக்கிடினம்.😂

உக்ரேன் நாஷிகளை அழிக்கும் மட்டும் ரஷ்யா தன்ரை தாக்குதலை நிப்பாட்டாது எண்டு நான் நினைக்கிறன்👍👍👍👍💪

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்திக்கு 'உண்மை' வடிவம் கொடுக்க பிரிட்டனும் பிபிசியும் படுற பாடிருக்கே.. அப்படி இருந்தும் இது ஒரு மிகைப்படுத்திய செய்தின்னு சொல்ல வேண்டி வந்திட்டுது. 

உக்ரைனை விட உக்ரைனுக்கு ஊட்டிக்கொடுக்கிறவை தான் ரஷ்சியா தோற்பதாகக் காட்டுவதில் உறுதியா இருக்கினம். ஏன்னா.. தங்கட உதவி எல்லாம் வீணாப் போனது என்று தெரிந்தால்.. தங்கட பலமெல்லாம்.. வீணாப் போவது வெளில தெரிந்திடுமே என்ற பயம். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

(மேற்கத்திய ஊடகமாம் Channel 4 )  வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

மேற்கத்திய ஊடகமாம் Channel 4 )  வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

தனக்காக தமிழர்களிடம் தமிழில் பிரசாரம் செய்ய தமிழர்கள் கிடைத்தது விளாடிமிர் புரினின் பெரிய அதிஷ்டம்.

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

ஆற்றைக் கடக்க முற்பட்ட படைப்பிரிவு உக்ரேனுடையதா அல்லது ரஸ்யாவினுடையதா என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

இவை பெரும்பாலும் உக்ரேனுடைய இராணுவத்தின் ஒரு பிரிவினர் என்றே இராணுவ வல்லுனர்களால் / அவதானிகளால் ஊகிக்கப்படுகிறது. 

CNN வந்து சொன்னால் நம்புவம். 😁

ஈராக்கிலை மனிதகுலத்துக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய கெமிக்கல் ஆயுதம் இருக்கெண்டு சொன்ன மாதிரி.....  🤪

CNN ன்ரை திறம் தெரிஞ்சு தானே டொனால்ட் ரம்ப் எட்டத்தையே வைச்சிருந்தவர் :cool:

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

(மேற்கத்திய ஊடகமாம் Channel 4 )  வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

அந்த ஒரு ஊடகம் செய்த நற்செயலுக்காக ஏனைய ஊத்தைவாளிவ் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை நம்ப வேண்டிய நன்றிக்கடன் ஒருவருக்கும் இருக்கக்கூடாது.

மேற்குலகம் எமக்கு தஞ்சம் தந்தது என்பதற்காக எம்மவர் அழிவுகளை உதாசினப்படுத்தி தமக்கானவர்களின் அழிவுகளை நியாயப்படுத்தும் மேற்குலக ஊடகங்களை நானும் என்னைப்போன்றவர்களும் வெறுக்கின்றோம்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீதி நேர்மை நியாயம் தர்மம் அதர்மம் எல்லாம் பார்க்க கூடாது நமது இனம் வாழனும் அவ்வளவே அதுக்கு என்ன வழி ?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இங்கு நீதி நேர்மை நியாயம் தர்மம் அதர்மம் எல்லாம் பார்க்க கூடாது நமது இனம் வாழனும் அவ்வளவே அதுக்கு என்ன வழி ?

உக்ரேனுக்காக மட்டும் மனமுருகி தேவாரம் பாடாதே. கட்டுரைகள் வரையாதே. கவிதைகள் வடியாதே. நீயும் உன் பாடுமாய் இரு.
நானும் அப்படியே இருப்பேன். 😁

 • Like 4
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தனக்காக தமிழர்களிடம் தமிழில் பிரசாரம் செய்ய தமிழர்கள் கிடைத்தது விளாடிமிர் புரினின் பெரிய அதிஷ்டம்.

நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோக்களுக்கு  தாளம் போட உங்களை போல ஆட்கள் இருக்கும் போது புட்டினுக்கும் ஆட்கள் இருப்பினம் தானே.!!!

2 hours ago, Sasi_varnam said:

(மேற்கத்திய ஊடகமாம் Channel 4 )  வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

எங்களை அழித்த அதே ஆட்கள் தான் நாசிஸ்டுகளுக்கு ஆயுதம். கொடுக்கினம். இரசாயன ஆயுத ஆய்வுகூடங்கள் வைத்து ஆய்வுகள் நடத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

உக்ரேனுக்காக மட்டும் மனமுருகி தேவாரம் பாடாதே. கட்டுரைகள் வரையாதே. கவிதைகள் வடியாதே. நீயும் உன் பாடுமாய் இரு.
நானும் அப்படியே இருப்பேன். 😁

உக்கிரேனோ  ரசியாவோ இந்தியாவ அமெரிக்கனோ சீனாவோ ஜப்பானோ எமக்காக இதுவரை அழவில்லை  அழபோவதும் இல்லை காரணம் உலக அரசியல் அப்படிதான் அதை புரிந்து கொள்பவன் ஞானி .

பக்கத்து வீட்டு  வெள்ளைக்கு உங்கள் ஆட்கள் முறையாக பிரித்து போட்டு இங்கு வந்திருந்தால் நான் இங்கு வருகிறேன் என்று என்னிடம்  திட்டு வாங்குவார்  அவருக்கு சிட்டுக்குருவி புறா காகக்துக்கு நான் உணவளிப்பது துப்புரவாய் பிடிக்காது அதுகளால் நோய் பரவுதாம் . பிரான்சு பக்கம் போவதென்றால் தானே வந்து உதவுவார் காரணம் போர்டெக்ஸ் வைன். 

இந்த வைன்  கதை இங்கு சொல்வதுக்கு  காரணம் இருக்கு .

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

தனக்காக தமிழர்களிடம் தமிழில் பிரசாரம் செய்ய தமிழர்கள் கிடைத்தது விளாடிமிர் புரினின் பெரிய அதிஷ்டம்.

ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், வெனிசுவேலா, கொலம்பியா, கியூபா, வியட்னாம், லாவோஸ், கம்போடியா, போன்ற நாடுகளை அழித்தொழித்த அமெரிக்காவிற்கு ஒத்தூத ஆட்களிருக்கும்போது ரஸ்யாவிற்கு ஆட்களிருப்பது ஒன்றும் வியப்பில்லையே 😉

5 hours ago, Sasi_varnam said:

(மேற்கத்திய ஊடகமாம் Channel 4 )  வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

நீங்கள் தற்போதும் channel 4 மட்டும்தான்  பார்க்கிறீர்களெனக் கூறுவதை நம்புகிறேன். 😉

3 hours ago, குமாரசாமி said:

அந்த ஒரு ஊடகம் செய்த நற்செயலுக்காக ஏனைய ஊத்தைவாளிவ் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை நம்ப வேண்டிய நன்றிக்கடன் ஒருவருக்கும் இருக்கக்கூடாது.

மேற்குலகம் எமக்கு தஞ்சம் தந்தது என்பதற்காக எம்மவர் அழிவுகளை உதாசினப்படுத்தி தமக்கானவர்களின் அழிவுகளை நியாயப்படுத்தும் மேற்குலக ஊடகங்களை நானும் என்னைப்போன்றவர்களும் வெறுக்கின்றோம்.

சசி தன்னை நன்றியுணர்வுள்ள ஆள் எனக் கூறுவதாக அர்த்தம் கொள்ளலாமா ? 

அழிவுக்குள்ளான அந்தப் படைப்பிரிவு ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களது என்று ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எவனுடையதாக இருந்தாலும் சந்தோசமே. 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

அவருக்கு சிட்டுக்குருவி புறா காகக்துக்கு நான் உணவளிப்பது துப்புரவாய் பிடிக்காது அதுகளால் நோய் பரவுதாம்

இந்த ஒரு விஷயத்தில் நான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்..

பறவைகள் மிருகங்களுக்கு நாங்கள் உணவளித்தால் அவை தமது இரைதேடும் திறமையை இழந்து அத்திறமை அதன் குஞ்சுகளுக்கும் இல்லாமல் போய் ஒரு கட்டத்தில் இவ்வுயிரினம் அருக நேரலாம். நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதும் உண்மை தான்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

உக்கிரேனோ  ரசியாவோ இந்தியாவ அமெரிக்கனோ சீனாவோ ஜப்பானோ எமக்காக இதுவரை அழவில்லை  அழபோவதும் இல்லை காரணம் உலக அரசியல் அப்படிதான் அதை புரிந்து கொள்பவன் ஞானி

அதைத்தான் திரும்பதிரும்ப கூறுகின்றேன். உனக்காக அழாதவனுக்கு நீ ஏன் அழவேண்டும்?
அழுத கண்ணீரும் கடன்.

அரசியல்,வியாபார,கௌரவ குறைச்சலுக்காக  நடக்கும் சண்டையை  இனவிடுதலை போரில் அழிந்த  முள்ளிவாக்காலுடன் ஒப்பிட ஒரு மனத்தைரியம் வேண்டும்.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அதைத்தான் திரும்பதிரும்ப கூறுகின்றேன். உனக்காக அழாதவனுக்கு நீ ஏன் அழவேண்டும்?
அழுத கண்ணீரும் கடன்.

சமீபத்தில் யாழ் வந்த அமெரிக்க தூதர் தமிழ் மக்களின் கதையை கேட்டு அழுதவவாம் அதாவது வெளியாள்  நீதி நேர்மை நியாயம் தர்மம் அதர்மம்  கருணை உண்மை எல்லாம் இருப்பது போல் அது இந்த உலகிற்கு தேவையென்பது போல் நடிக்கணும் நடிக்க தெரிந்து இருக்கனும் உள்ளுக்குள் நமது இனம் நாடு என்று வரும் போது அதெல்லாவற்ரையும் தூக்கி எறிந்து விடணும் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒரு உண்மைச்சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். நம்புவதும் நம்பாமல் விடுவதும் உங்கள் பிரச்சனை.

சென்ற  இரு வாரங்களாக ஒரு உக்ரேனிய பெண் என்னுடன் வேலை செய்கின்றார். அவர் ஜேர்மனிக்கு விருந்தாளியாக வந்துள்ளார்(அகதி)  நான் அவரிடம் சொல்லாத ஆறுதல் வார்த்தைகள் இல்லை. புட்டினை திட்டாத வார்த்தைகளும் இல்லை.

நிற்க....

அவர் என்னிடம் ஒரு  சிறிய விளக்கம் கேட்டார். அதை இன்றிரவு 22.00 மணிக்கு பின்னர் கூறுகின்றேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

அவர் என்னிடம் ஒரு  சிறிய விளக்கம் கேட்டார். அதை இன்றிரவு 22.00 மணிக்கு பின்னர் கூறுகின்றேன்.

இன்றைக்கு இரவு 22:00 மணி எப்ப வரும் என்று,
ஆவலுடன்…. பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

அவர் என்னிடம் ஒரு  சிறிய விளக்கம் கேட்டார். அதை இன்றிரவு 22.00 மணிக்கு பின்னர் கூறுகின்றேன்.

21.59 க்கு அட்டமிநவமி கூடுது சார்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, kalyani said:

நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோக்களுக்கு  தாளம் போட உங்களை போல ஆட்கள் இருக்கும் போது புட்டினுக்கும் ஆட்கள் இருப்பினம் தானே.!!!

ஜனநாயக மேற்குலக நாடுகளின் பக்கம் சேரவிரும்பும் உக்ரைனை ஆக்கிரமிக்க வெறிகொண்டு போர் செய்கின்ற ரஷ்யாவின் அநீதியோடு நீங்கள் சொல்கின்ற

20 hours ago, kalyani said:

நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோக்களுக்கு  தாளம் போட உங்களை போல ஆட்கள் இருக்கும் போது புட்டினுக்கும் ஆட்கள் இருப்பினம் தானே.!!!

நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோ  நாடுகள் தான் எங்களுக்கு கல்வி, வேலைவாய்பு தந்து வாழ்கையில் நல்ல நிலைக்கு வர உதவியவை. இந்த நாடுகளில் இருந்து தான் இலங்கைக்கு உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்பி உதவிகள் செய்ய முடிகின்றது.  இலங்கையில் தமிழர்கள் ஒரளவுக்காவது பாதுகாப்பாக இருக்கவும் இந்த நாடுகளே தலையிடுகின்றன.  ஆகவே நாம் நாசிட்டு திருட்டு நேட்டோ நாடுகளுக்காக தாளமும் போடுவோம் தேவாரமும் பாடுவோம். ஆனால்  இந்த நாடுகளில் வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் இலங்கை தமிழர்கள் சிலர்  இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிற்கின்ற ரஷ்யாவுக்காக தேவாரம் பாடுவது தான் விளங்கவில்லை.

 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புட்டினை திட்டாத வார்த்தைகளும் இல்லை

புட்டினை திட்டலாமா மனித காப்பாளர் புரினை திட்டலாமா 😭

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
56 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புட்டினை திட்டாத வார்த்தைகளும் இல்லை

புட்டினை திட்டலாமா மனித காப்பாளர் புரினை திட்டலாமா 😭

நீங்களும் விடுறதாய் இல்லை.

ரஸ்ஸியாவினால் உக்ரேனில் ஏற்படுத்தப்படும் அழிவும், ரஸ்ஸியாவுக்கு ஏற்பட்டுவரும் ஆள், தளபாட இழப்பும் பரம ரகசியமல்ல. இங்கே சிலர் அதனை பொய்யென்று நிறுவ தலைகீழாய் முயன்றாலும், அதுவே உண்மையென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே நீங்கள் அவ்வளவாகச் சிரமப்படத் தேவையில்லையென்பதே எனது தாழ்மையான கருத்து!

Edited by ரஞ்சித்
 • Like 1
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.