Jump to content

இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணி தமிழகத்தில் தீவிரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணி தமிழகத்தில் தீவிரம்

இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொருட்கள் அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு: இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணி தீவிரம்

இதன்படி, ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் தொன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள் ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 தொன் பால் மா ஆகியவற்றை இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்தப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலர் ஜெசிந்தா லாலரஸ், நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர், ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

https://www.virakesari.lk/article/127405

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தின் போது  கஞ்சிக்கு கூட வழியற்று எத்தனை உயிர்களை இழந்தோம் இப்ப சிங்களவன் பசியுடன் இருக்கிறான் என்றவுடன் ..........................................................................விரும்பியவாறு நிரப்பி  உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

தமிழன் சாகலாம் ஆனால் சிங்களவர் ஒருத்தன் பசியோடு சாக கூடாது நல்ல கொள்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

இறுதி யுத்தத்தின் போது  கஞ்சிக்கு கூட வழியற்று எத்தனை உயிர்களை இழந்தோம் இப்ப சிங்களவன் பசியுடன் இருக்கிறான் என்றவுடன் ..........................................................................விரும்பியவாறு நிரப்பி  உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

தமிழன் சாகலாம் ஆனால் சிங்களவர் ஒருத்தன் பசியோடு சாக கூடாது நல்ல கொள்கை .

இந்த கருணாநிதி குழுமத்தின் முதலீடுகளுக்களைப் பாதுகாக்க உதவியென்ற போர்வையில் இலஞ்சம் கொடுக்கிறார்களென்றே தோன்றுகிறது. அதைவிட இரத்த உறவுகளான சிங்களவர் சாகலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணி தமிழகத்தில் தீவிரம்

மருத்துவத்துக்காக போன அம்மாவை திருப்பி அனுப்பியது தான் நினைவுக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங்கள  இன பொருட் சேர்ப்புக்கு தமிழகத்தில் இருந்து ஒரு எதிர்ப்புக் குரலையும் காணோமே...இன உணர்வும் மழுங்கடிக்கப்பட்டதா ?...சுப்பர் கிங்ஸ்  சிங்கள   இன போலர்..தட்டிக் கொடுக்கப் படுவதும்..இன்னுமொரு போலர் உள்வாங்கப் பட இருப்பதும் ..இவர்களுக்கான ஒப்பந்த அடிப்படைதானோ..

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.