Jump to content

நான்கு அமைச்சர்கள்... இன்று, பதவியேற்கவுள்ளதாக தகவல்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

நான்கு அமைச்சர்கள்... இன்று, பதவியேற்கவுள்ளதாக தகவல்.

நான்கு அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகளே வழங்கப்படம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகாரம், காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சு, தினேஷ் குணவர்தன கல்வி, பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு அமைச்சை கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2022/1281830

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரமாதித்தன் கதை போல... மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது... 

சர்வ கட்சி இடைக்கால அரசு என்னாங்க.. இப்ப நரி தலைமையில் மொட்டு ஆட்சி தானே மலருது. மீண்டும் மீண்டும் ஏன் இந்த வாசமில்லா.. மொட்டை மலர வைக்கிறாங்கள்.. ஆள் மாத்தி ஆள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

விக்கிரமாதித்தன் கதை போல... மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது... 

சர்வ கட்சி இடைக்கால அரசு என்னாங்க.. இப்ப நரி தலைமையில் மொட்டு ஆட்சி தானே மலருது. மீண்டும் மீண்டும் ஏன் இந்த வாசமில்லா.. மொட்டை மலர வைக்கிறாங்கள்.. ஆள் மாத்தி ஆள். 

May be an image of 1 person and text that says 'முகத்தை மாற்று சத்திர சிகிச்சை செய்துகொண்ட ராஜபக்சே'

பிளாஸ்ரிக் சர்ஜரி செய்த... மகிந்த. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு தேவை.. கட்சி அரசு அல்ல.. மதிநுட்ப மக்கள் நல அரசு மட்டுமே.

அந்த வகையில் கட்சி ஆக்களை எல்லாம் தூக்கி வெளில போட்டிட்டு.. நல்ல துறைசார் மதிநுட்பமும்.. மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களும் உள்ளடங்கிய ஒரு அரசை அமைப்பதே இலங்கைக்கு தேவை. அதைச் செய்யத் தவறினால்.. இலங்கை எனி தேறாது. 

மீண்டும் மீண்டும் ஒரே வேதாளங்களை முருங்கை மரத்தில் ஏற்றுவதால் எந்த மாற்றமும் வராது.. பயனும் இல்லை. அதே தவறுகள் தான் மீளும். அதை ரணில் செய்தால் என்ன.. மகிந்த செய்தால் என்ன.. சஜித் செய்தால் என்ன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி முகத்திடலில்  போராடியவர்களின் நோக்கம் வேறாக இருக்க...
சைக்கிள் காப்பில், சர்வதேசம் தனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டது.

இதில்... அமெரிக்கா, இந்தியா, கோத்தா, ரணில்... கள நிலைமையை,
தமக்கு சாதகமாக மாற்றி விட்டார்கள்.

மகிந்த எதிர்க்கட்சி தலைவராக... வர, சாத்தியக் கூறு உள்ளது என்கிறார்கள்.
அப்படி வந்தால்... பிரதமருக்கு உரிய சகல வசதிகளும்,
சலுகைகளும்.. மகிந்தவுக்கு உண்டு.

போராடிய இளைஞர்களை... தந்திரமாக  ஏமாற்றி  விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

புதிய அமைச்சர்கள்... நால்வர், சற்றுமுன்னர் பதவியேற்பு !

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்தவகையில் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இதேவேளை பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர, மின்/எரிசக்தி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

https://athavannews.com/2022/1281850

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம்.🤣

அது சரி விஜகலா இல்லையோ? 😎

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம். சந்திரிக்கா காலத்திலை இருந்தே  உருட்டிக்கொண்டிருக்கிறார்.🤣

அது சரி விஜகலா இல்லையோ?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம்.🤣

அது சரி விஜகலா இல்லையோ? 😎

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம். சந்திரிக்கா காலத்திலை இருந்தே  உருட்டிக்கொண்டிருக்கிறார்.🤣

அது சரி விஜகலா இல்லையோ?😎

spacer.png

spacer.png

spacer.png

ரணில் பிரதமராக  வந்ததுக்கு,   ஸ்ரீலங்காவிலேயே... 
யாழ்ப்பாணத்தில் மட்டும்தான்....  வெடி கொழுத்தி,  கொண்டாடியவர்கள்.
அதற்காகத் தன்னும்... 4, 5 தமிழ் ஆட்களுக்கு, ரணில்... அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம்.🤣

அது சரி விஜகலா இல்லையோ? 😎

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம். சந்திரிக்கா காலத்திலை இருந்தே  உருட்டிக்கொண்டிருக்கிறார்.🤣

அது சரி விஜகலா இல்லையோ?😎

விஜயகலா பாராளுமன்ற உருப்பினர் இல்லையென்றபடியால்  அவ்வுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சிங்கள இன இளையவர்கள் நாட்டை முன்னேற்றத்துடிக்கும் சமூகம் போராடினாலும் காலங்காலமாக பிழையான ஆட்சிமுறையைக்கையாண்டவர்கள் கைகளிலேயே மீளவும் அதிகாரம் என்பது இலங்கையின் சாபக்கேடு. மாற்றத்தை உருவாக்குவோம் என்று நம்பிக்கையுடன் சாத்வீகப் போராட்டங்களில் குதித்து செயற்பட்ட இளையவர்கள் தங்கள் கையாலாக நிலையால் விரக்தியுறுவதைத் தவிர்க்க முடியாது. இனி மெல்ல மெல்ல அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அரசியல் விளையாடும் ... சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மெதுவாக ஒவ்வொரு விடயத்திலும் பழிவாங்கப்படுவார்கள். உருப்படியான மாற்றத்தை செய்யாததன் விளைவை இனிவரம் காலங்களில் எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

புதிய அமைச்சர்கள்... நால்வர், சற்றுமுன்னர் பதவியேற்பு !

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்தவகையில் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இதேவேளை பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர, மின்/எரிசக்தி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

https://athavannews.com/2022/1281850

அதுக்குள்ள, மகிந்தர் எப்படி வந்தவர்? 😁😁

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.