Jump to content

மஹிந்தவின் அடுத்த திட்டம் அம்பலமானது!


Recommended Posts

மஹிந்தவின் அடுத்த திட்டம் அம்பலமானது!

 
mahinda-3-586x365.jpg
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர்கள் கோரலாம் என்று கூறப்படுகின்றது.
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிப் பக்கத்தில் சுயாதீன அணியாக இருந்து புதிய பிரதமரை ஆதரிப்பதற்கே சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
அந்தக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சரவையில் பதவிகளை வகித்தாலும் அவர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக இருந்தே பதவிகளை வகிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் எதிர்க்கட்சிப் பக்கத்தில் தமக்கே பெரும்பான்மை இருப்பதாக காட்டி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது பெரும்பான்மையை சஜித் பிரேமதாசவுக்கு காட்ட முடியாத நிலைமை ஏற்படுமாயின் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்கலாம் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://oosai.lk/4937/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இதனால் எதிர்க்கட்சிப் பக்கத்தில் தமக்கே பெரும்பான்மை இருப்பதாக காட்டி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது பெரும்பான்மையை சஜித் பிரேமதாசவுக்கு காட்ட முடியாத நிலைமை ஏற்படுமாயின் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம்.

சஜித்துக்குத்தான்... எல்லாப் பக்கத்தாலையும் கஸ்ரகாலம்.
லட்சுமி  ஒரு முறைதான்... கதவை தட்டி சந்தர்ப்பம் கொடுப்பார்.
அதை... தவற விட்டால், அடுத்த சந்தர்ப்பம் வருவதற்கு இடையில்...
தலை நரைத்து... பொல்லு பிடிக்க வேண்டி வரலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சஜித்துக்குத்தான்... எல்லாப் பக்கத்தாலையும் கஸ்ரகாலம்.
லட்சுமி  ஒரு முறைதான்... கதவை தட்டி சந்தர்ப்பம் கொடுப்பார்.
அதை... தவற விட்டால், அடுத்த சந்தர்ப்பம் வருவதற்கு இடையில்...
தலை நரைத்து... பொல்லு பிடிக்க வேண்டி வரலாம்.  

மாங்காய் மடையரை விடுங்கோ...

அதேவேளை மகிந்தா வருவதில் கோத்தாவுக்கு உடன்பாடு இல்லை. மேலும், மொட்டுகாரர்கள் 4 பேர் இன்று அமைச்சர்கள் ஆகி உள்ள நிலையில், மகிந்தா எதிர்க்கட்சி தலைவர் ஆக முடியாதே.

அது தவிர, மகிந்தாவின் பேராசை(க்கு விழுந்த அடி)யால் தான், இன்று நேவி காம்பில் சிறையில் இருக்கிறார்.

இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

மாங்காய் மடையரை விடுங்கோ...

அதேவேளை மகிந்தா வருவதில் கோத்தாவுக்கு உடன்பாடு இல்லை. மேலும், மொட்டுகாரர்கள் 4 பேர் இன்று அமைச்சர்கள் ஆகி உள்ள நிலையில், மகிந்தா எதிர்க்கட்சி தலைவர் ஆக முடியாதே.

அது தவிர, மகிந்தாவின் பேராசை(க்கு விழுந்த அடி)யால் தான், இன்று நேவி காம்பில் சிறையில் இருக்கிறார்.

இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. 

நாதம்ஸ்... நீங்கள், உங்கள் விருப்பங்களை, செய்தி ஆக்க முனைகிறீர்கள். 🤣
மகிந்த கடற்படை முகாமில் சிறையில் இருக்கவில்லை.
அவரின் முழுக்  குடும்பத்துடன், 
முகாமில் உள்ள பங்களாவில்.. உல்லாசமாக இருக்கிறார் என்பதே உண்மை. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த குடும்பத்தில் எவரும் சிறை செல்லக்கூடாது என்பதற்கிணங்கவே இலங்கையில் அரசியல்....

சப்பா முடியல.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்... நீங்கள், உங்கள் விருப்பங்களை, செய்தி ஆக்க முனைகிறீர்கள். 🤣
மகிந்த கடற்படை முகாமில் சிறையில் இருக்கவில்லை.
அவரின் முழுக்  குடும்பத்துடன், 
முகாமில் உள்ள பங்களாவில்.. உல்லாசமாக இருக்கிறார் என்பதே உண்மை. 😁

மகன் விவசாயம் செய்கிறார்.

அப்படியா, எந்த ஊரிலை?

புழல் சிறையில்..... 🤔

யோக்கியனுக்கு, நேவி காம்பில என்ன வேலை? 😁

உங்களுக்கு பயந்து, இப்பவெல்லாம் ஒண்டுக்கு மேல ஒண்டா, 10 ஜட்டி போட்டுகொண்டு நிக்கிறாராமே....  😜

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.