Jump to content

ரணிலின் இலங்கை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் இலங்கை

அரசியலில் மிகவும் துரதிஷ்ட்டம் மிக்க நபர். ஒவொரு முறையும் பிரதமராகி, பதவியில் இருக்கும் ஜனாதிபதியுடன் முரண்பட்டு பதவி இழக்கும் ஒரு மனிதர்.

கடந்த தேர்தலில், மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட நிலையில், விகிதாசார முறைமையில், நாடு முழுவதும் விழுந்த  கொஞ்ச வாக்குகளினால் கிடைத்த ஒரேயொரு நியமன சீட் மூலம் எம்பியாகி இன்று கட்சி பலமே இல்லாமல், பலவீனமான நிலையில், அதே போல் மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஜனாதிபதியுடன் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு பிரதமர் ஆகிறார்.

இது, குருடன் சுமக்கும் நொண்டி வழிகாட்டி ஊர் போற கதை.

எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில், சக்கடதார் ஏறுறார்.

கவுண்டு விழத்தான் போறார்.

அவருக்கு, இழக்க எதுவும் இல்லாதால் முயல்கிறார்.

இவர் முன்னால் உள்ளவை இமாலய பிரச்சனை.

51 பில்லியன் மொத்த கடனில், 38 பில்லியன் கடன் முறி.

அதாவது, அரசு வாக்குறித்து தந்து உலகளாவிய ரீதியில், முதலீட்டாளர்களிடம் வாங்கிய கடன்.

இவருமே சேர்ந்து வாங்கி, திருடி....திண்டு,

கூடுதலாக குடும்பமாக திருடி, கூத்தடித்த மனிதர், நேவி காம்புக்குள்ள ஜாலியா இருக்கிறார்.

இவர் செய்யப்போவது, பிச்சை மற்றும் கடன் வாங்குதல்.

யுத்தகுற்றவாளிகளான ராஜபக்சேக்கலிலும் பார்க்க, தான் கேட்டால் தரக்கூடும் என்று நினைக்கலாம். ஆனாலும், கோத்தா, அரசு தலைவராக தொடர்வது, சிக்கல் ஆகும். தருபவர்கள் நம்பமாட்டார்கள்.

ஆனால், கிடைக்கும் பணமோ, கட்டுசோறு தான். நீண்ட நாட்களுக்கு வராது.

மறுபடியும் முதலாவது சதுரம் தான்.

ஆக, இவருக்கு உள்ள தெரிவுகள் இவை:

1. மக்களுக்கு, உணவு, எரிபொருள், மருத்துவம் கிடைப்பதை 
 உறுதி செய்வது. அதன் மூலம், இயல்பு வாழ்க்கைக்கு நாட்டினை கொண்டு செல்வது.
2.  முக்கியமாக, உல்லாச பயண துறையை இயங்க வைப்பதன் மூலம், பண ஓட்டத்தினை அதிகரிப்பது.
3. அரசியல் அமைப்பினை, கோத்தாவை வைத்துக்கொண்டே மாத்துவது.
4. தமிழர் பிரச்சனையை அதனூடு தீர்ப்பது, அதன் மூலம் புலம் பெயர் தமிழரை திருப்திப்படுத்தி, பொருளாதார முதலீடுகளை பெறுவது.

இவரிடம் எதிர்பார்க்க அதிகம் இல்லை.

மக்களுக்கு, இப்போதைக்கு உணவு கிடைத்தால், உல்லாச பயண துறையும் திறந்து கொண்டால் போதும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஆக, இவருக்கு உள்ள தெரிவுகள் இவை:

1. மக்களுக்கு, உணவு, எரிபொருள், மருத்துவம் கிடைப்பதை 
 உறுதி செய்வது. அதன் மூலம், இயல்பு வாழ்க்கைக்கு நாட்டினை கொண்டு செல்வது.
2.  முக்கியமாக, உல்லாச பயண துறையை இயங்க வைப்பதன் மூலம், பண ஓட்டத்தினை அதிகரிப்பது.
3. அரசியல் அமைப்பினை, கோத்தாவை வைத்துக்கொண்டே மாத்துவது.
4. தமிழர் பிரச்சனையை அதனூடு தீர்ப்பது, அதன் மூலம் புலம் பெயர் தமிழரை திருப்திப்படுத்தி, பொருளாதார முதலீடுகளை பெறுவது.

கடைசி இரண்டுக்கும்…. சந்தர்ப்பமே இல்லை. அதை ரணில் நிறைவேற்றினால்,
நாதமுனியருக்கு…  உக்ரேனுக்கு சென்று வர விமான ரிக்கற் பரிசளிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, தமிழ் சிறி said:

கடைசி இரண்டுக்கும்…. சந்தர்ப்பமே இல்லை. அதை ரணில் நிறைவேற்றினால்,
நாதமுனியருக்கு…  உக்ரேனுக்கு சென்று வர விமான ரிக்கற் பரிசளிக்கப்படும்.

நம்ம பங்குக்கு இப்படிதான் டிக்கெட்டை கொடுத்து விட்டிருக்கிறியள் போல.... 

இந்த களேபரத்துக்கிளையும் ஆளை காணம்... 😁

******

இல்லை, மூன்றாவதுக்கு ஒத்துக்கொண்டு தான் கோத்தா, ரணிலை பிரதமர் ஆக்கி உள்ளார்.

மேலும், கடைசிக்கு சந்தர்ப்பம் இல்லை  என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு பொருளாதார தேவை இருப்பதால், வேறு வழியும் இல்லை.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இல்லை, மூன்றாவதுக்கு ஒத்துக்கொண்டு தான் கோத்தா, ரணிலை பிரதமர் ஆக்கி உள்ளார்.

கழுத்துக்கு மேல் பிரச்சனை என்றால் முதலில் ஒத்துக்கொள்வார்கள் பின்பு  சந்தர்ப்பம் கிடைத்தால் தமிழன் தலையை அறுப்பினம்  கோத்தா தேர்தலுக்கு முன் யாழ் பரப்புரையில் என்ன சொன்னவர் தான் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்றார்  பெரும்பான்மை சிங்கள மக்களின் ஓட்டில் வென்றபின் தமிழருக்கு என்ன பிரச்சனை  என்றவர் .

1 hour ago, Nathamuni said:

மேலும், கடைசிக்கு சந்தர்ப்பம் இல்லை  என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு பொருளாதார தேவை இருப்பதால், வேறு வழியும் இல்லை.

தமிழரிடம் கெஞ்சாமல் வேறு வழிகளை  தேடுவினம் பக்கத்து சகுனிகள் ஆதரவு கொடுப்பினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

கழுத்துக்கு மேல் பிரச்சனை என்றால் முதலில் ஒத்துக்கொள்வார்கள் பின்பு  சந்தர்ப்பம் கிடைத்தால் தமிழன் தலையை அறுப்பினம்  கோத்தா தேர்தலுக்கு முன் யாழ் பரப்புரையில் என்ன சொன்னவர் தான் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்றார்  பெரும்பான்மை சிங்கள மக்களின் ஓட்டில் வென்றபின் தமிழருக்கு என்ன பிரச்சனை  என்றவர் .

அப்ப விட்ட கிரந்தங்கள் காரணமாகவே, அடி, சாத்துப்படி வாங்கி ஒருத்தர் நேவி காம்புக்குள்ள இருந்து வெள்ளி பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பிச்சை பாத்திரம் வைத்துக்கொண்டு, இனியும் கிரந்தம் விட்டால், தமிழர்கள், தனியே போக கோருவதில் நியாயம் உண்டு என்று உலகம் சொல்லும்.

அப்படி ஒரு நிலை வரும்போது..... வெஸ்ட் மினிஸ்டர் முன்னால் பழைய படி போய் நிண்டு போராட வேண்டி இருக்கும்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.