Jump to content

இலங்கையில்...  "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக,  இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!

இலங்கையில்...  "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக,  இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!

 

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக... இந்திய புலனாய்வு பிரிவுகள், எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன.

இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான... மே 18ஆம் திகதியை, சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து... தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாகவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1281891

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

.

நன்னிச் சோழன், 
இந்தியா.... சீரியஸாக சொல்ல நீங்கள் சிரிக்கிறீர்கள். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையில்...  "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக,  இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!

மவுனித்த  புலிகளை நினைத்து நினைத்து அழுவது இவன்கள்தான் படுத்துக்கிடந்த கனவு கண்டபின் அறிக்கை விடும் கூட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
12 minutes ago, தமிழ் சிறி said:

நன்னிச் சோழன், 
இந்தியா.... சீரியஸாக சொல்ல நீங்கள் சிரிக்கிறீர்கள். 

எமக்கு இதென்ன புதிதா ஐயனே? 
இந்தியன் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் செய்தி தானே, 
அதனால் சிரித்துவிட்டுக் கடந்து விட்டேன் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான  எச்சரிக்கையா அல்லது பரந்தன் ராஜனைக் கொண்டுவிது ஏதாவது கோள்மாள் செய்ய உத்தேசமோ?

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சக்களுக்கும் ரணில் சஜித் சந்திரிகா இவர்கள் எல்லோருக்கும் இப்ப புலிகள் அவசரமாகத் தேவைப்படுகிறார்கள்.. சிங்கள மக்களை இனவாதத்துக்குள் தள்ளி அவர்களின் தமக்கு எதிரான சிந்தனையோட்டத்தை மாற்றி அரசியல் அராஜகம் செய்ய. அதே தேவை ஹிந்தியா என்ற முதுகெழும்பற்ற பிராந்திய வல்லரசுக் கனவு நாட்டுக்கும் அவசர தேவையாக உள்ளது. பிராந்தியத்தில் தன் தலையீட்டை குறைந்த பட்சம் இலங்கையிலாவது வலுப்படுத்த. 

அதுதான் இந்த புலி அறைகூவல். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமலை தான் இந்த தாக்குதலை...நினைவேந்தல் நிகழ்வில் கொடியசைத்து..ஆரம்பித்து வைத்தவர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

&&@ @?%#}> <~|£ >>&€€<~} ~}}=|!@ &$)($

Link to comment
Share on other sites

விடுதலைபுலிகளின் எந்த தாக்குதலையையும் எதிர்வு கூறாத இந்தியா  இல்லாத புலிகள் தாக்க போகின்றார்கள் என்றால் அவர்களின் புலனாய்வை பாருங்களன்

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சனியன் வாழ விடாது.  புலிகள் இல்லாது விட்டால் கிழிப்பார்கள் என்றவர்களை தேடுகிறேன் 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா குழு

பிள்ளையான் குழு

வரதராஜபெருமாள் குழு

பரந்தன் ராஜன் குழு

இன்னும் பல குழுக்களை தீனி போட்டு வளர்த்து வருகிறோம்.

இனிவரும் காலங்களில் இவர்களுக்கு வேலைகள் வரப்போகுது.

பழிபோட யாராவது வேணுமே?அதுதான் இப்பவே சொல்லிப் போட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தங்கள் இயலாமையை புலிகளுக்குள் மறைக்க முயலுகிறார்கள். புலிகளிடம் வாங்கிக்கட்டியதை மறக்க முடியவில்லை இவர்களால், கனவிலும் நனவிலும் ரொம்ப பயப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் செயற்பாட்டில் அதிருப்தி உற்று இருக்கும் கோத்தா! கைவைத்தால் புதிய பிரச்சனை உருவாகும். செய்த வினை சுத்தி பிடிப்பதென்று நினைத்ததோ? கோத்தாவின் புத்திசாலித்தனத்தை பொறுத்தது அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... இவங்கள் நூற்றாண்டு கடந்தாலும்.......... மாறவே மாட்டாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இந்த சனியன் வாழ விடாது.  புலிகள் இல்லாது விட்டால் கிழிப்பார்கள் என்றவர்களை தேடுகிறேன் 😡

 

புலிகள் இல்லை என்பதை அவர்கள் நம்பவில்லை......என்னெனில் புலிகள் தான் தமிழர்கள்.....தமிழர்கள் தான் புலிகள்....என்று கோத்தா வரைவிலக்கிணம். சொல்லிக் கொடுத்து உள்ளார் ஆகவே ஒரு தமிழன் இருத்தாலும......புலி இருக்கிறது என்று கருத இடமுள்ளது   எனவே… கிழிக்கவேமாட்டார்கள்.   🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல; வெறும் இளைஞர்களை அழித்தார்களேயொழிய, அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, அவர்களின் உணர்வுகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கு சாட்சி எவ்வளவு அரச கெடுபிடிகள் இருந்தாலும் அதையும் தாண்டி  அவர்களை நினைவு கூர மக்கள் எடுக்கும் முயற்சி. அதை இல்லாதொழிக்க முடியாது இவர்களால். அது இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. அது அழியாமல் ஒவ்வொரு கணமும் அவர்களது உணர்வுகளுக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். ஆகவே அது என்றோ ஒருநாள் கொழுந்து விட்டு எரியும் என நம்புகிறார்கள் இவர்கள். அதை எதிர் கொள்ள பயப்படுகிறார்கள். தங்கள் பயத்தை அவ்வப்போது வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை அழிப்பதற்கு செய்த கொடுமைகள் இவர்களை உறங்க விடாமல் வதைக்கிறது. அந்த பயத்தினால் அவ்வப்போது திடுக்குற்று எழுந்து அலறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220515-080530.jpg

கூர்ந்து கவனித்தால் மே 17க்கு முன்னரும் அடுத்து மாவீரர் தினத்திற்கு முன்னரும் இவ்வாறான அறிக்கைக்களை வெளியிடுவதை கொள்கையாக வைத்துள்ளனர்..சிரித்துவிட்டு செல்வதே சிறப்பு.😊 

டிஸ்கி 

உண்மையில் கோட்டா-ரணில் புத்திசாலிகள் என்றால் உந்த அறிக்கையை சாட்டி "தீவிரவாத தடுப்பு நடவடிக்கை"  ,"புலனாய்வு மேம்படுத்தல்"  என்று தனி -தனியே ஒரு அமொன்ற் கிந்தியனிடம் கடன் அல்லாமல் இலவசமாக கறக்க வேண்டும்.👍 செய்வார்களா.👌ரெல் மீ..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இலங்கையில் கொஞ்ச நாளில் புலிகள் பெயரில் குண்டுதாக்குதல் ஒன்று நடைபெற்று அப்பாவி சிங்கள மக்கள் சிலர் / பலர் பலி கொடுக்கப்பட்டு சில ராணுவத்தினரோ அல்லது ஏதேனும் அரச இலக்குகளோ பாதிப்படைய செய்யப்படலாம்.பழி, இல்லாத விடுதலைப் புலிகள் மேல் போடப்படலாம். அதனால் சிங்கள மக்களின் கோபம் தமிழர் மேல் திருப்பி விடப்பட்டலாம் விளைவாக கோத்தா அண்ட் கோ காப்பாற்றப்படலாம்.

திரைகதை இயக்கம் : Raw 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் காலங்களில், குறைந்தபட்சம் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீரும் வரையாவது மேற்கு நாடுகளின் பாரிய பொருளாதார உதவியில் இலங்கை தங்கியிருக்கபோவது உறுதி. இந்த உதவிகளை சர்வதேசம் வழங்கும் சமகாலத்தில் நாட்டை   அரசியல் பொருளாதார  இஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்லும் சில உத்தரவாதங்களை பெறுவது மட்டுமன்றி பொருளாதார நெருக்கடியிலிருந்து சீக்கிரம் மீள்வதற்கான புதிய அரசியல் பாதையொன்றையும் இலங்கைக்கு முன்மொழிந்து அந்த முன்மொழிவில் இலங்கை விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தர தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடக்கப்படும்.

ரணிலை பிரதமராகியதன் மூலம் மேற்குலகத்தை நோக்கிய கதவை கோத்தா திறந்துவிட்டிரூக்கிறார். தமிழர் இனப்பிரச்சினைக்குரிய தீர்வு (அல்லது அப்படி ஒரு மாயை) தனது கையில் தான் உள்ளது என்று இந்தியா இன்றுவரை  நம்பிக்கொண்டிருக்க, கிணறு வெட்ட புறப்பட அங்கிருந்து  பூதம் கிளம்பிவிடுமோ என்ற பயமும் இப்போது இந்தியாவை பற்றிகொண்டுவிட்டது.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைபோல இலங்கையின் இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக் கோரிக்கை அல்லது நிர்ப்பந்தங்கள் எதுவும்  மேற்குலகிலிருந்து வரவிருக்கும் பொருளாதார உதவிகளுடன் சேர்ந்தே வந்துவிடாமல் தடுக்க வேண்டுமாயின்  புலிகள் மீள்கட்டமைப்பு, பயங்கரவாத தாக்குதல் போன்ற புரளிகளை கையிலெடுத்து கிலி பரப்ப வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் நிச்சயம் தேவை. இந்த திட்டங்களை செயற்படுத்த 2019 ஆண்டில் நடத்தப்பட்டது போன்ற தொடர் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு அவற்றைப் புலிகளின் தலையில் போடும் வாய்ப்புகளும் உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vanangaamudi said:

எதிர்வரும் காலங்களில், குறைந்தபட்சம் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீரும் வரையாவது மேற்கு நாடுகளின் பாரிய பொருளாதார உதவியில் இலங்கை தங்கியிருக்கபோவது உறுதி. இந்த உதவிகளை சர்வதேசம் வழங்கும் சமகாலத்தில் நாட்டை   அரசியல் பொருளாதார  இஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்லும் சில உத்தரவாதங்களை பெறுவது மட்டுமன்றி பொருளாதார நெருக்கடியிலிருந்து சீக்கிரம் மீள்வதற்கான புதிய அரசியல் பாதையொன்றையும் இலங்கைக்கு முன்மொழிந்து அந்த முன்மொழிவில் இலங்கை விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தர தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடக்கப்படும்.

ரணிலை பிரதமராகியதன் மூலம் மேற்குலகத்தை நோக்கிய கதவை கோத்தா திறந்துவிட்டிரூக்கிறார். தமிழர் இனப்பிரச்சினைக்குரிய தீர்வு (அல்லது அப்படி ஒரு மாயை) தனது கையில் தான் உள்ளது என்று இந்தியா இன்றுவரை  நம்பிக்கொண்டிருக்க, கிணறு வெட்ட புறப்பட அங்கிருந்து  பூதம் கிளம்பிவிடுமோ என்ற பயமும் இப்போது இந்தியாவை பற்றிகொண்டுவிட்டது.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைபோல இலங்கையின் இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக் கோரிக்கை அல்லது நிர்ப்பந்தங்கள் எதுவும்  மேற்குலகிலிருந்து வரவிருக்கும் பொருளாதார உதவிகளுடன் சேர்ந்தே வந்துவிடாமல் தடுக்க வேண்டுமாயின்  புலிகள் மீள்கட்டமைப்பு, பயங்கரவாத தாக்குதல் போன்ற புரளிகளை கையிலெடுத்து கிலி பரப்ப வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் நிச்சயம் தேவை. இந்த திட்டங்களை செயற்படுத்த 2019 ஆண்டில் நடத்தப்பட்டது போன்ற தொடர் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு அவற்றைப் புலிகளின் தலையில் போடும் வாய்ப்புகளும் உள்ளது.

காத்திருந்தவனை... நேற்று வந்தவன் கொண்டு போகப் போறான் என்று 
இந்தியாவுக்கு.. வயித்தெரிச்சல் வந்து விட்டது.  
அதுதான்.... கீழிறங்கி அசிங்கமான  வேலைகள் பார்க்க வெளிக்கிட்டிருக்கு. 😡

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம்!

ShanaMay 15, 2022
 
IMG_1134_600x450.JPG

 

த ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை கடும் பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஒன்றிணைகின்றனர் என த ஹிந்து நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன.

இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையிலா இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

http://www.battinews.com/2022/05/18_15.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

இந்த ந்த திட்டங்களை செயற்படுத்த 2019 ஆண்டில் நடத்தப்பட்டது போன்ற தொடர் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு அவற்றைப் புலிகளின் தலையில் போடும் வாய்ப்புகளும் உள்ளது.

நானும் இதைத்தான் மேலே சொல்லி உள்ளேன். நீங்களோ நன்கு விளக்கி இருக்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் ஆண்டு தினத்தில் தாக்குதலா? இந்திய நாளிதழ் செய்தியால் இலங்கையில் உஷார்நிலை!

32 நிமிடங்களுக்கு முன்னர்
 

தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை அரசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2019ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஸ்காபரோவில் தமிழ் மக்கள் இனப்படுகொலை தொடர்பாக அனுசரிக்கப்பட்ட நினைவு தின நிகழ்வு (கோப்புப்படம்)

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்தவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய நாளிதழான தி இந்து வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து முழு எச்சரிக்கையுடன் இருப்பதாகக் கூறியிருக்கிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்.

இலங்கையில் மே மாதம் 18ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்தவர்கள் குழுவாகச் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி, தி இந்து நாளிழ் கடந்த 13ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை புலனாய்வு துறையினர், இந்திய புலனாய்வு துறையிடம் விடயங்களை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியைத் தொடர்ந்து சாதாரணமான ஒன்றுதான் என இந்திய உளவுத்துறை, இலங்கை புலனாய்வு துறையிடம் கூறியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் செய்திக்குறிப்பு மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், இந்த தகவல் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கையிடம் தெரிவிப்பதாக இந்திய உளவுத்துறை கூறியுள்ளது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தகவல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து உளவு அமைப்பு மற்றும் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு கிடைக்கும் எல்லா தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு உரிய பாதுகாப்புப் படைகளுக்கு தெரிவிக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

 

இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்

பட மூலாதாரம்,SRI LANKA DEFENCE MINISTRY

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த செய்திக் குறிப்பு பற்றி இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "இலங்கையில் தற்போது நீடித்து வரும் நெருக்கடி மற்றும் மக்கள் போராட்ட எழுச்சி தொடர்பாக ஏற்கெனவே தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவுக்கும் சென்னையில் உள்ள உளவுத்துறை அலுவலகத்துக்கும் எச்சரிக்கை குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த வாரத்தை குறிக்கும் நிகழ்வுகளின்போது அசம்பாவிதம் நிகழலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.

ஆங்கில நாளிதழ் செய்தியில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது?

நாடு ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இலங்கையில் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன என்று தி இந்து நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழ் இன படுகொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதில், தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தீவு நாடு இரண்டு முறை அவசரநிலையை அறிவித்த நிலையில், பன்னாட்டுத் தொடர்புகளைக் கொண்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோரில் சில பிரிவினர், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை "உணர்த்த" முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் தேதி, சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்க தாக்குதல்களை திட்டமிடுவது மட்டுமின்றி, தங்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா மற்றும் பலர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும் முன்னாள் புலிகள் சதித்திட்டம் தீட்டியதாக தி இந்து நாளிதழ் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

மெரைன் போலீஸ்

பட மூலாதாரம்,ANI

உளவுத்துறை உள்ளீடுகளை மேற்கோள்காட்டும் வட்டாரங்கள், இலங்கையில் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதற்காக முன்னாள் எல்டிடிஈ உறுப்பினர் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் இதை கருத்தில் கொண்டு கடலோர மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மாநில உளவுத்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையின் சிறப்புப் படையினர் மாநிலத்தில் சுமார் 1,000 கி.மீ தூரத்துக்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுமமும் கடல் எல்லையில் ரோந்துப் பணியை அதிகப்படுத்தியுள்ளது என்றும் அந்த ஆங்கில நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களுக்கு அறிவுரை

இதேவேளை, கடலுக்குச் செல்லும் இந்திய மீனவர்களுக்கு தற்போதைய சூழலின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், ஆழ்கடலிலும், சர்வதேச கடல் எல்லை பகுதியிலும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் தெரிந்தால் அது குறித்து உளவுத்துறையினர், கடலோர காவல் படையினர் அல்லது மாநில காவல்துறையிடம் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

மெரைன் போலீஸ்

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்கள், தங்களுடைய எல்லை வரம்புக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் கடலுக்குச் செல்லும் அனைத்து வீதிகளிலும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்துவதற்காக அனைத்து கடலோர மாவட்டங்களின் பொலிஸ் அத்தியட்சகர்களும் சோதனைச் சாவடிகளை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்."தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் அல்லது அதன் முன்னாள் செயல்பாட்டாளர்களின் நடமாட்டங்களை சமீப வருடங்களாக தமிழ்நாடு கவனித்து வருகிறது. கடந்த ஆண்டு, இந்தியாவில் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக அமைப்பான என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, சர்வதேச தொடர்புகளுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் புலிகளின் முன்னாள் உளவுப்பிரிவின் செயல்பாட்டாளரான சபேசன் என்ற சத்குணம் என்பவரை கைது செய்தது. அவர் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்க நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.மற்றொரு வழக்கில், செயலற்ற வங்கிக் கணக்கில் கிடக்கும் பெரும் தொகையை மோசடியான முறையில் எடுக்க மும்பை சென்ற பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், இலங்கையில் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக நிதி திரட்டும் பணிக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன," என்று தி இந்து நாளிதழ் செய்தி குறிப்பிட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61454566

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னதான் செய்தாலும் சொன்னாலும் உண்மையை மறைக்க முடியவில்லை அவர்களால். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.