Jump to content

இலங்கையில்...  "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக,  இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடியும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்: மே 18-இல் தாக்குதல் நடத்தத் திட்டமா? - கள நிலவரம் என்ன?

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

முள்ளிவாய்க்கால்

பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, பெரிய அளவிலான போராட்டங்கள் என இலங்கை ஒரு திசையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இறுதிப் போர் படுகொலைகளுக்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக வெளியான செய்தி வேறொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

ஆனால் இந்தச் செய்திக்கு மையப்புள்ளியாகக் கருதப்படும் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாகக் காணப்படுகின்றன. இங்கு இப்போது கஞ்சி வாரம் அனுசரிக்கப்படுகிறது.

உப்பு, நீர், அரிசி ஆகியவற்றை மட்டும் கலந்து கொதிக்க வைத்த கஞ்சியை விநியோகிக்கும் நிகழ்வு முல்லைத்தீவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதை முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் என்கிறார்கள்.

கஞ்சி வாரத்தின் பின்னணி, இலங்கை இறுதி யுத்தத்தின் வலி மிகுந்த பல கதைகளைக் கொண்டிருப்பதை, இந்த நிகழ்வுகளில் பங்கேற்றோரிடம் பேசும்போது கேட்க முடிகிறது.

"2009-ஆம் ஆண்டு இறுதி நாள்களில் மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, உணவுப் பொருள்கள் இல்லை. ஒரு வீட்டில் 100 கிராம் அரிசி கிடைத்தாலே அதை கஞ்சியாகக் காய்ச்சி 10 பேர் வரை குடிக்கும் நிலை இருந்தது. இந்த நிலையை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் அதே போன்ற கஞ்சியைக் காய்ச்சி விநியோகிக்கும் இந்த நிகழ்வை தொடர்ந்து நடத்துகிறோம்," என்கிறார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தைச் சேர்ந்த மரியசுரேஷ் ஈஸ்வரி.

முல்லைத் தீவுக்கு பிபிசி தமிழ் குழு சென்ற போது, முள்ளியவிளையில் கஞ்சி காய்ச்சி விநியோகிக்கும் நிகழ்வில் பங்கேற்றோரிடம் பேசியது.

"போரில் எத்தனையோ பேர் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். பலர் கடத்தப்பட்டு காணாமல் போய் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காயப்பட்ட பலர் மருத்துவ வசதி இல்லாமல் ரத்தம் சிந்தித்தான் இறந்து போனார்கள். நாங்கள் காலில் விழுந்தோம். கையேந்திக் கும்பிட்டோம். ஆனால், யாரும் காப்பாற்றவில்லை," என்று போரின் கடைசி நாள்களை நினைவுகூர்ந்தார் ஈஸ்வரி.

 

முள்ளிவாய்க்கால்

 

படக்குறிப்பு,

ஈஸ்வரி

"ஒரு பகுதி மக்கள் குண்டுகளால் இறந்து கொண்டிருந்தபோது, இன்னொரு புறம் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதை அரசு தடுத்தது" என்கிறார், வட மாகாணத்தில் விவசாய அமைச்சராகப் பணியாற்றிய கந்தையா சிவநேசன்.

பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் குழப்பத்திலும் இலங்கை சிக்கியிருக்கும் நிலையில் இறுதிப் போர் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வு மே 18-ஆம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது. இதற்கு முந்தைய ஒரு வாரத்துக்குத்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படுகிறது.

கொழும்பில் நடப்பதைப் போன்ற அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஏதும் இங்கு இல்லை. கொழும்பிலும் பல்வேறு பிற நகரங்களிலும் நீண்ட வரிசையில் பெட்ரோலுக்காக வாகனங்கள் காத்திருப்பதைப் போன்ற காட்சியையும் இங்கு காண இயலவில்லை.

அப்படியானால் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பெரிய பாதிப்பு இல்லையா என்ற கேள்வி எழக்கூடும்.

"முல்லைத் தீவு மாவட்டம் விவசாயத்தையும் மீன் பிடித்தலையும் நம்பியிருக்கிறது. உரம் இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் இல்லாமல் படகுகள் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. ஆனால், இது வளமான மாவட்டம் என்பதால் வீடுகளிலேயே காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. அதனால் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகமாக உணரப்படவில்லை" என்கிறார், சிவநேசன்.

 

முள்ளிவாய்க்கால்

பட மூலாதாரம்,AFP

 

படக்குறிப்பு,

கந்தையா சிவநேசன்

முள்ளியவிளையில் நடந்த நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கஞ்சி காய்ச்சி விநியோகித்தனர். வாகனங்கள், பேருந்துகளில் செல்வோர் என அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது.

இத்தகைய கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்வுக்கு காவல்துறையின் அனுமதி இல்லை. அதே நேரத்தில், இந்த நிகழ்வுகளை காவல்துறையினர் தடுப்பதும் இல்லை என்று இதை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள்.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலைச் சுற்றியுள்ள பல சாலைகளில் குறைந்தது 10 இடங்களில் ராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு வரும் வழியில் பல ராணுவ முகாம்களும், கூடவே சாலைத் தடுப்புகளும் காணப்படுகின்றன. பல இடங்களில் அடையாள அட்டையைக் காட்டிய பிறகே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

முல்லைத் தீவில் இருந்து முள்ளிவாய்க்காலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் குறுகிய பாலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வழக்கமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடக்கும் இடத்தில் ஒரு சிலரைத் தவிர, பெரிய கூட்டம் ஏதுமில்லை. ஆனால் சுற்றிலும் காவலர்களும் ராணுவ வீரர்களும் என சுமார் 50 பேர் வரை கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

 

முள்ளிவாய்க்கால்

 

படக்குறிப்பு,

முள்ளிவாய்க்கால் நினைவிடம்

"போரில் சொந்தங்களை இழந்த தெற்குப் பகுதி மக்களுக்கு அவர்களது உறவுகளை எந்தத் தடையும் இல்லாமல் நினைவுகூர முடிகிறது. அதேபோன்ற உரிமை எங்களுக்கும் வேண்டும்" என்கிறார் நிகழ்வில் பங்கேற்ற ஆறுமுகம் ஜோன்சன்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61468526

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

99f47079-f543-4f10-a262-fa146f4b779a.jpeg

எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்

 நடத்தலாம் என்ற செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

 

எந்தவொரு விடயத்திலும் கவனயீனமாக இருந்துவிட்டு பின்னால் வருத்தப்பட வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்

https://www.madawalaenews.com/2022/05/i1_17.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் படை குறைப்பு  யோசனைக்கு எதிர்வினை கிந்தியமும் கிண்டுவும் இப்ப சரத்தும் நல்லதே நடக்கட்டும் போகிற போக்கில் நாமும் கொளுத்தி போட்டு விட்டு போய்  விடுவம்  ஆம் எதிர்காலத்தில் டிரோன்  மூலம்  இலங்கை படைகள் தாக்கப்படும்  சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது 😁

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.