-
Tell a friend
-
Topics
-
Posts
-
கடந்த காலங்களில் பாட்டாளிக்கட்சி அரச கட்டுப்பாட்டு பொருளாதார கொள்கை கொண்ட கட்சியாகவும் (Fiscal policy), பெரிய பாதீடு அதிக வரி அதிக அரச செலவு என்ற கொள்கையுடைய கட்சி. வலதுசாரி லிபரல் கட்சி சிறிய பாதீடு, குறைந்த வரி, குறைந்த அரச செலவு என்ற அதிகளவில் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டு பொருளாதார கொள்கையுடைய கட்சியாகவிருந்தது (monetary policy), ஆனால் கோவிட் லிபரல் கட்சியினை பொருளாதார தூண்டல் செய்வதற்காக பாட்டாளி கட்சி போல செயற்பட வைத்து பாதீட்டில் மிகப்பெரிய பற்றாக்குறையினை ஏற்படுத்தியிருந்தது (சரியான முடிவுதான்). எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதில் குழப்பம் இருந்தது, எனது குழந்தைகள் (11 வயது - பசுமைக்கட்சி, 8 வயது - லிபரல், 5 வயது - பாட்டாளி கட்சி) வாக்களிக்க சொன்னார்கள். வயதில் இளைய இரண்டு குழந்தைகளும் கட்சி தலைவர்களின் பெரைக்கூறி அவர்களது கட்சிக்கு வாக்களிக்க சொன்னார்கள், ஆனால் மூத்த குழந்தை மட்டும் ஏன் பசுமைக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என காரணத்தினை கூறினார். இப்போதுள்ள இளைய சமுதாயத்தின் சிந்தனை மாறுபாடு அரசியலில் பிரதிபலிக்கின்றது. இந்த teals லிபரல் கொள்கையும், பசுமைக்கட்சியின் கொள்கையும் கொண்டவர்கள் (blue + green) எனக்கூறுகிறார்கள், காலத்திற்கேற்ப கொள்கையினை கடைப்பிடிக்கிறார்கள் என நினைக்கிறேன்.
-
இலங்கையர்களை வகாபிகளாக மாற்றலாம் என்கிறார். 😏
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.