Jump to content

ரணிலின் கரங்களை பலப்படுத்த விக்கி இணக்கம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் கரங்களை பலப்படுத்த விக்கி இணக்கம்!

May 15, 2022
spacer.png


 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.

“எமது கட்சியில் நான் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன். இந்நிலையில், நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளேன்” என்று விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன், ரணில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2022/176731

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அய்யாவுக்கு சம்பந்தி அட்வைஸ்  பண்ணியிருப்பாரோ...என் பணியை நீங்கள்   செய்க..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அவர் விக்கினேஸ்வரன். விளக்கம் கொடுத்து உள்ளார் அதாவது அவரது நான்கு நிபந்தனைகளையும் எற்றுக்கொண்டு நிறுவு செய்தல் மட்டுமே ஆதரவு உண்டு என்று   அந்த நிபத்தனைகள் நிறைவேறும் ஆயின் பூரண சுயாட்சி கிடைக்கும் 😄😄

Just now, Kandiah57 said:

அவர் விக்கினேஸ்வரன். விளக்கம் கொடுத்து உள்ளார் அதாவது அவரது நான்கு நிபந்தனைகளையும் எற்றுக்கொண்டு நிறுவு செய்தல் மட்டுமே ஆதரவு உண்டு என்று   அந்த நிபத்தனைகள் நிறைவேறும் ஆயின் பூரண சுயாட்சி கிடைக்கும் 😄😄

நிறைவு 

 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரணிலே ஒத்த பொம்மை. இந்த பொம்மை ஆட்சிக்கு.. பலரும் ஆதரவாம். இதில் வேடிக்கை என்னவென்றால்.. கொள்ளைக் கொலைக் கூட்டங்களும் ஆதரவு. அவர்களை எதிர்த்து நின்றோரும் ஆதரவு. மொத்தத்தில் கொலைகாரன்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே இந்த பொம்மையை ஆதரிப்பதன் மூலம் நிகழுமே தவிர.. இன நன்மை என்பது எள்ளளவுக்கும்.. அமைய வாய்ப்பில்லை. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சித்திரவதைக்குத் தப்பி இலங்கையிலிருந்து பிரித்தானியா வந்த ஒருவர், ஆரம்பத்தில் தெருவோரமாக படுத்து உறங்கியிருக்கிறார். இன்று ஒரு சமையல் கலை நிபுணராக உயர்ந்து நிற்கும் அவரது பெயர் யோகி. 2008ஆம் ஆண்டு, குடும்பத்தைப் பிரிந்து பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்த யோகிக்கு பிரித்தானியாவில் யாரையும் தெரியாது. கொஞ்ச காலம் தெருவோரம் படுத்துறங்கி, பின்னர் Freedom from Torture என்ற தொண்டு நிறுவனம் அவருக்கு ஒரு அறையை பெற்றுக்கொள்ள உதவியபோது, அந்த அறைக்கு அருகில் ஒரு கோவில் இருந்திருக்கிறது. பெரும்பாலும் அங்கு சென்றுதான் சாப்பிடுவாராம் யோகி. ஆனால், திடீரென ஒரு நாள் இதய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது யோகிக்கு. ஏற்கனவே குடும்பத்தைப் பிரிந்து தனியாக பிரித்தானியாவில் வருத்தத்தில் இருந்த நிலையில் மன அழுத்தம் அதிகரிக்க, அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் யோகி.   ஒரு நாள் திடீரென மயங்கிச் சரிந்த யோகி கண் விழித்தபோது, மன நல மருத்துவமனை ஒன்றில் தான் அனுமதிக்கப்பட்டதை அறிந்துகொண்டிருக்கிறார். மீண்டும், Freedom from Torture அமைப்பு உதவிக்கு வந்திருக்கிறது. அவர்கள் யோகியை Migrateful என்ற தொண்டு நிறுவனத்திற்கு அறிமுகம் செய்ய, அதன் மூலம் சமையல் கற்றுக்கொண்டு, உணவு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டு, பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வேலை கிடைக்க, அந்த வேலையை செய்துகொண்டே ஒன்லைனில் சமையல் வகுப்புகளைத் துவங்கியிருக்கிறார். ஆரம்பத்தில், தன் தாய் மொபைல் மூலம் தனக்குக் கற்றுக்கொடுக்க, முதன்முதலாக பருப்புக் கறி ஒன்று செய்யக் கற்றுக்கொண்டாராம். அப்படியே அம்மா உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்றுக்கொண்டு யோகி சமைக்கத் துவங்க, அவர் தங்கியிருந்த அறையின் அருகே தங்கியிருந்த ஈரானியர்கள் இருவர், யோகியின் சமையல் வாசனையால் ஈர்க்கப்பட்டு, யோகி இன்று என்ன சமைக்கிறீர்கள் என்று கேட்பார்களாம். அந்த அளவுக்கு சமையலில் தேர்ச்சி பெற்றுவிட்டார் அவர்!  இதற்கிடையில், 14 ஆண்டுகள் பிரிந்திருந்த குடும்பத்தையும் பிரித்தானியாவுக்கு வரவழைத்திருக்கிறார் யோகி. தான் இரண்டு வயது குழந்தையாக விட்டு வந்த தன் மகள், வளர்ந்து 16 வயதுப் பெண்ணாக வந்து நிற்க, தந்தையும் மகளும் சந்தித்த சந்தோஷத்தில் இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டு, பிரிந்தவர் சேர்ந்தால் பேசவும் தோன்றுமோ என்பதுபோல, ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி வெகு நேரம் பேசாமலே நின்றிருந்தோம் என அந்த நெகிழ்ச்சித் தருணத்தை நினைவுகூருகிறார் யோகி. சித்திரவதைக்குத் தப்பி இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்தபோது, ஒரு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாத யோகி, இப்போது ஒரு சமையல் கலை நிபுணராக உயர்ந்து நிற்கிறார் என்பது அவருக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறதாம்.   https://news.lankasri.com/article/north-london-news-i-homeless-didnt-even-know-1656052988?itm_source=parsely-external
  • வாங்கோ வாங்கோ நானும் புதுசுதான்.
  • கவிதை கவிதை கோயில் திருவிழா காலம் இது அல்லவா? ஆகவேதான் பக்திப் பரவசமாக வந்துள்ளேன்.
  • கொஞ்சம் தலைப்பில் இருந்து விலத்தி. இப்படியான செய்திகள் யூகே பத்திரிகைகளில் டெயிலி மெயில் போன்ற மிகவும் வலது சாரி பத்திரிகைகளில் வரும் போது கூட - ஆளை வெட்ட வேணும் கொத்த வேணும் எண்டு எழுதினாலும் அநேகமாக குற்றம் சாட்டபட்டவரின் வக்கீலை ஏசுவதில்லை. கிட்டதட்ட குற்றம்சாட்ட படும் எவருக்கும் அது என்ன குற்றமாகிலும் வக்கீல் இருக்க வேண்டும் என்பதை இந்த நாடுகளில் கிட்டதட்ட எல்லாரும் ஏற்கிறார்கள் என நினைக்கிறேன். பணம் இல்லாவிட்டால் அரசே duty solicitor ஏற்பாடு செய்யும். யாழில் மட்டும் அல்ல எந்த இந்திய இலங்கை தளத்திலும் குற்றம் சாட்ட பட்டவருக்கு நிகராக அவரின் வக்கீலுக்கும் பூசை நடக்கும். ஒப்பீடளவில் ஐரோப்பாவை விட எமது நாடுகளில் ஜனநாய கேடாக இருக்க இந்த மாதிரியான மனநிலையில், ஒரு கலாச்சாரம் போலவே பலர் சிந்திப்பகும் ஒரு காரணமாக இருக்க கூடும் என நினைக்கிறேன். எமதுநாடுகளில் சட்டத்துடன் பரிச்சயம் உள்ளோர் மட்டுமே குற்றம் சாட்டபட்டவருக்கும் வக்கீல் வைக்கும் உரிமை வேண்டும் என நினைப்பார்கள். மிகுதி எல்லாரும் வக்கீலை ஏசுவார்கள். இந்த சட்டதின் இயல்பு பற்றிய புரிதல் இன்மையே எமது நாட்டில் ஜமநாய்க ம் ஒப்பீட்டளவில் கேடாக காரணமாகுமோ? ஒரு சிறுவர் துஸ்பிரயோகி என தானே ஒத்து கொண்ட ஒருவரை ஒரு வைத்தியர் பராமரித்தால் ஏசாத நாம், குற்றம் சாட்ட பட்டவர்ருக்கு ஆஜரா வக்கீலை ஏசுவது முரண்நகை. ஆனால் இதுதான் எமது நாடுகளில் பெரும்பாலானோரின் கருத்து.
  • எலேய், பாண்டி சேரி ஒரு தனி யூனிய பிரதேசம் லே. அதுல காரைக்கால் ஒரு பகுதிலே. தமிழ் நாடு இன்னொரு மாநிலம் லே   கப்பல் தமிழ் நாட்டுக்கு போதாலே பாண்டிக்கு போதாலே? என்னலே இதெல்லாம்?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.