Jump to content

Recommended Posts

எழுதியவை எல்லாம் கவிதையா?

என எண்ணிய வேளையில்

என்னிடம் பேசியது 

என் எழுதுகோல்

உள்ளத்தில் உறையும் உணர்வை

ஊற்றாய் உரைப்பது கவிதையா?

நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை 

நிரல்படக் கோர்ப்பது கவிதையா?

வலிகளுக்கு அருமருந்தாய் 

மனதை வருடுவது கவிதையா?

வரலாற்றின் பழம்பெரும் உண்மையை 

அழியாமல் வடிவமைப்பது கவிதையா?

இயற்கையின் கொடையை

இனிமையாய் இயம்புவது கவிதையா?

காதலின் கவிரசத்தைக் காய்ச்சி

பருகுவது கவிதையா?

எது கவிதை?

என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம்

கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம்

கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம்

விதையை விதைத்திடும் கவிதை

விடைபெறா உலகின் நடைப்பாதை

எது கவிதை?

எழுதும் அனைத்தும் கவிதையல்ல

இதை ஆராய்ந்து உணர்ந்தால் தவறுமல்ல

காட்சியின் வழியே ஓவியம் பேசும்

கவிதையின் வழியே மானுடம் பேசும்

கற்பனைக் கவிதைக்கு அழகு என்றாலும்

கற்பனையே கவிதை அல்லவே

விழுமியம் தானே நம் பண்பாடு

விழித்தெழுவோம் 

புத்துணர்வோடு

கவிதையை ஆய்வோம் நடுநிலையோடு

விமர்சனம் தானே வெற்றியின் வெளிப்பாடு

சரவிபி ரோசிசந்திரா

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு அறிமுகம் - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்

வணக்கம்... சரவிபி ரோசிசந்திரா, 🙏
உங்களை அன்புடன்... யாழ்.களத்திற்கு  வர வேற்கின்றோம்.  

நல்ல...கவிதையுடன் களத்தில் அறிமுகமாகி உள்ளீர்கள்,
தொடர்ந்து எழுதுங்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

நன்றியும் மகிழ்வும். தங்கள் வரவேற்பில் அகமகிழ்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சரவிபி ரோசிசந்திரா said:

விழுமியம் தானே நம் பண்பாடு

விழித்தெழுவோம் 

புத்துணர்வோடு

கவிதையை ஆய்வோம் நடுநிலையோடு

விமர்சனம் தானே வெற்றியின் வெளிப்பாடு

சரவிபி ரோசிசந்திரா

வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

ஆஹா.....மிகவும் அழகான கவிதை......தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே........!  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல் வரவு  . சரவிபி   ரோஸிசந்திரா . தொடர்ந்து பதிவுகள் போட்டு நிலைத்து இருங்கள். 
 

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சரவிபி.

உங்களுக்கு நிறையவே எழுத்தாற்றல் இருக்கிறது போல தெரிகிறது.

இங்கு நிறைய பகுதிகள் இருக்கின்றன.புகுந்து விளையாடுங்கள்.

நீங்களும் பெருமையடைந்து யாழுக்கும் பெருமை சேருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு வரம்பில்லை

கட்டளைகளுமில்லை

எதுவாக  இருந்தாலும் அதை  சொல்லதே  கவிதை

எடுப்பதும்  பிரிப்பதும் பகுப்பதும் வாசிப்பவரை பொறுத்தது

வருக தருக கவி

Link to comment
Share on other sites

5 hours ago, வாத்தியார் said:

வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

 

நன்றியும் மகிழ்வும்

Link to comment
Share on other sites

2 hours ago, வல்வை சகாறா said:

வணக்கம் வருக வருக.

 

நன்றியும் மகிழ்வும்

2 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சரவிபி.

உங்களுக்கு நிறையவே எழுத்தாற்றல் இருக்கிறது போல தெரிகிறது.

இங்கு நிறைய பகுதிகள் இருக்கின்றன.புகுந்து விளையாடுங்கள்.

நீங்களும் பெருமையடைந்து யாழுக்கும் பெருமை சேருங்கள்.

தங்கள் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி

5 hours ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

ஆஹா.....மிகவும் அழகான கவிதை......தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே........!  👏

 

தங்கள் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி

58 minutes ago, விசுகு said:

கவிதைக்கு வரம்பில்லை

கட்டளைகளுமில்லை

எதுவாக  இருந்தாலும் அதை  சொல்லதே  கவிதை

எடுப்பதும்  பிரிப்பதும் பகுப்பதும் வாசிப்பவரை பொறுத்தது

வருக தருக கவி

இனிய வணக்கம்

Link to comment
Share on other sites

3 hours ago, நிலாமதி said:

நல் வரவு  . சரவிபி   ரோஸிசந்திரா . தொடர்ந்து பதிவுகள் போட்டு நிலைத்து இருங்கள். 
 

நன்றியும் மகிழ்வும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வருக. தங்கள் வரவு நல் வரவாகட்டும். 🙏

Link to comment
Share on other sites

On 16/5/2022 at 06:32, சரவிபி ரோசிசந்திரா said:

 

 

கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம்

கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம்

 

கவிதைக்கு நன்றி  சரவி.  

Link to comment
Share on other sites

14 hours ago, nunavilan said:

கவிதைக்கு நன்றி  சரவி.  

நன்றியும் மகிழ்வும்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.