Jump to content

நேட்டோ அமைப்பில், இணைய உள்ளதாக.... ஃபின்லாந்து- சுவீடன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக ஃபின்லாந்து- சுவீடன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

நேட்டோ அமைப்பில், இணைய உள்ளதாக.... ஃபின்லாந்து- சுவீடன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக வரும் ஒரு வரலாற்று மாற்றத்தில் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக சுவீடன் மற்றும் ஃபின்லாந்து உறுதிப்படுத்தியுள்ளன.

ஸ்வீடனில், ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியினர் மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியில் சேர்வதை ஆதரிப்பதாகக் கூறியதால், இது நாடு விண்ணப்பிக்க வழி வகுத்தது.

ஃபின்லாந்தும் நேட்டோவில் சேர்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்தது.

சுவீடன் இரண்டாம் உலகப் போரில் நடுநிலை வகித்தது மற்றும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இராணுவக் கூட்டணிகளில் சேருவதைத் தவிர்த்தது.

பின்லாந்து ரஷ்யாவுடன் 1,300-கிமீ (810-மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இப்போது வரை, அது அதன் கிழக்கு அண்டை நாடுகளுக்கு விரோதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நேட்டோவில் இருந்து விலகி இருந்தது.

ஒரு அறிக்கையில், ஸ்வீடனின் சமூக ஜனநாயகக் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் பெரும்பாலான எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முறையான விண்ணப்பம் சில நாட்களுக்குள் கிடைக்கும்.

ஆனால் சமூக ஜனநாயகவாதிகள் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதையோ அல்லது நேட்டோ தளங்களை நடத்துவதையோ எதிர்ப்பதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பிரதமர் மக்தலேனா ஆண்டர்சன், ‘கூட்டணியில் சேர்வது சுவீடன் மற்றும் சுவீடன் மக்களின் பாதுகாப்பிற்கு சிறந்தது.

பால்டிக் பிராந்தியத்தில் நேட்டோ உறுப்பினராக இல்லாத ஒரே நாடாக சுவீடன் இருந்தால், அது பாதிக்கப்படக்கூடிய நிலையில் விடப்படும்’ என கூறினார்.

நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக ஃபின்லாந்து நாடு அதிகாரபூர்வமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது.

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற நேட்டோ கூட்டத்துக்குப் பின்னர், ஃபின்லாந்து ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாக இதனை அறிவித்தனர்.

https://athavannews.com/2022/1282046

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசியா தனது பலத்தை??? 🤣 காட்டியதால்  வந்தவினை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோ ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடமே தோற்ற கூட்டமைப்பு. கடைசியில் துண்டைக் காணம் துணியக் காணம் என்று ஓடினதை மறந்திட்டினம் போல. 

ரஷ்சியா... ஏலவே நோர்வே.. உட்பட பல நேட்டோ நாடுகளுடன் எல்லையைக் கொண்டிருக்குது. ஆனாலும்.. நேட்டோவின் ஆதிக்கம் பால்டிக் கடலை.. கருங்கடலை சூழ்வதை ரஷ்சியா விரும்பவில்லை. அது ரஷ்சியாவின் கடல் சார் நலன்களை பெருமளவில் பாதிக்கும். அதனால் தான் உக்ரைனின் கருங்கடலை ஒட்டிய பகுதிகளை தன் வசப்படுத்துகிறது. 

ரஷ்சியா தன்னை நேட்டோவிடம் இருந்து பாதுகாக்க எல்லா உரிமையும் கொண்டிருக்கிறது.. நேட்டோ ரஷ்சிய எல்லைகளை நெருங்க நெருங்க.. அந்த தேவை இன்னும் அதிகரிக்கும் ரஷ்சியாவுக்கு. இது ரஷ்சியாவின் செயற்பாடுகளை நியாயப்படுத்துமே தவிர.. நேட்டோவுக்கு பெரிய இலாபமாக அமையாது. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் உள்ள அரசியல்வாதிகள் எல்லோரும, மக்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைப்பதற்கான காரணம் என்ன ? 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

உலகெங்கும் உள்ள அரசியல்வாதிகள் எல்லோரும, மக்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைப்பதற்கான காரணம் என்ன ? 

😉

அடுத்த தேர்தலோடு அரசியல்வாதிகளுக்கு ரா ரா காட்டி விடுவார்கள் மக்கள். யூரோவிசனில் உக்ரைனை வெல்ல வைச்சு.. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே.. பக்கச் சார்பாக நடந்ததை.. இப்ப மக்கள் எல்லாரும் நல்லா புரிஞ்சிட்டாங்க. இதுக்கு மேல மேற்குலகம் சொந்த மக்களையே ஏமாற்ற ஏலாது. இவர்கள் இப்படி மக்களை ஏமாற்ற நினைப்பது ரஷ்சியாவுக்கு தான் சாதகம். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நேட்டோ அமைப்பில், இணைய உள்ளதாக.... ஃபின்லாந்து- சுவீடன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

துருக்கி முட்டுக்கட்டை போடும் போல கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

துருக்கி முட்டுக்கட்டை போடும் போல கிடக்கு

துருக்கி நேட்டோ அங்கத்துவம் பெற்றிருந்த போதும் சிரியா யுத்தத்தில் ஒரு கட்டத்தில் அமெரிக்காவால் கைவிடப்பட்ட நிலையில்.. ரஷ்சியா தான் துருக்கியை மதித்து செயற்பட்டது.. துருக்கி நேட்டாவுக்காக.. சில ரஷ்சிய விமானங்களை ஹெலிக்கொப்டர்களை சுட்டு வீழ்த்திய போதும். பின் துருக்கி ரஷ்சியாவிடம் இருந்து எஸ் 400 வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் போட்டது.. நேட்டோ அங்கத்துவத்தை மீறி. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

On 16/5/2022 at 16:35, குமாரசாமி said:

துருக்கி முட்டுக்கட்டை போடும் போல கிடக்கு

துருக்கியை பொருட்டாகவே நேட்டோ கருதுவதில்லை.  துருக்கி  இரண்டு பக்கமும் சாய்வதால் துருக்கியின் நம்பக தன்மை குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

துருக்கியை பொருட்டாகவே நேட்டோ கருதுவதில்லை.  துருக்கி  இரண்டு பக்கமும் சாய்வதால் துருக்கியின் நம்பக தன்மை குறைவு.

துருக்கியை  ஐரோப்பிய யூனியனில் இணைக்காத வரைக்கும்  ஐரோப்பா நிம்மதியாக இருக்கலாம். துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்து பெரிய சில்லெடுப்பு விசயங்கள் ஒரு பக்கம் இருக்க....

நேட்டோவில் துருக்கிக்கு பலம் இருக்கோ இல்லையோ பின்லாந்து சுவீடன்  நேட்டோவில் இணைய துருக்கியின் வாக்கும் அவசியம்.
 

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

நேட்டோவில் துருக்கிக்கு பலம் இருக்கோ இல்லையோ பின்லாந்து சுவீடன்  நேட்டோவில் இணைய துருக்கியில் வாக்கும் அவசியம்

இப்போ அமெரிக்கா எவ் 16 தரலாம் என்று சொன்னால் போதும். துருக்கி  இந்த பக்கம் சாய்ந்து விடும். 
ரஸ்யாவோடு எலியும் பூனையும் போல இருந்த துருக்கி  எஸ் 400  ஐ கொடுத்து தலை அடி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

இப்போ அமெரிக்கா எவ் 16 தரலாம் என்று சொன்னால் போதும். துருக்கி  இந்த பக்கம் சாய்ந்து விடும்

துருக்கி இனியும் பழைய விளையாட்டுக்களை விளையாட முடியாது என நினைக்கின்றேன். ஏனெனில் இன்றைய உலக நிலவரங்கள் கொரோனாவுடன் சேர்த்து கொஞ்சம் வித்தியாசமானது.

சுவீடன் பின்லாந்து நாடுகளில் தங்கியிருக்கும் குர்திஷ் போராட்ட அகதிகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு துருக்கி கோருகின்றது. இது சாத்தியம் ஆனால்  அதுவும் சாத்தியம்.

இவ்வளவுமிருக்க சுவீடன்  பின்லாந்து நேட்டோவில் இணைவதால் தமக்கு எவ்வித ஆபத்துமில்லையென ரஷ்யா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதாவது உக்ரேன் சாம்பல் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அதாவது உக்ரேன் சாம்பல் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது.🤣

அதுதான்… போர் இந்த வருட இறுதி வரை நடைபெறும் என்று சொல்கிறார்களோ.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

அதுதான்… போர் இந்த வருட இறுதி வரை நடைபெறும் என்று சொல்கிறார்களோ.  😂

அதை உக்ரேன் போருக்கு முதல் புட்டினும் பைடனும் தங்கள் ஒரு மணி நேர தொலைபேசி உரையாடலில் முடிவு செய்து விட்டார்கள்.😁

பாவம்  கோமாளி செலென்ஸ்கியும் ஐரோப்பிய யூனியனும் பலிக்கடாக்கள்.

 கோமாளி செலன்ஸ்கி போய் வாற ஐரோப்பிய கூட்டம் மாநாடுகளுக்கு இருக்கிற சனம் எழும்பி நிண்டு கை தட்டினவுடனை  தான் ஏதோ பெரிய மனுசன் எண்டு நினைச்சிட்டார். அதை விட எல்லா நாட்டு பாராளுமன்றத்திலையும் ஒன்லைன் பேச்சாளராய் மாறீட்டார்.😂

இல்லை தெரியாமல் கேக்கிறன் கோமாளி செலன்ஸ்கி செய்த தியாகமென்ன?🤣

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.