Jump to content

தமிழர்களுக்கான... தீர்வை, வென்றெடுக்க... புதிய பிரதமருடன், பேசுவோம் – சம்பந்தன்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

தமிழர்களுக்கான... தீர்வை, வென்றெடுக்க... புதிய பிரதமருடன், பேசுவோம் – சம்பந்தன்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்குவது என்பது இதன் அர்த்தம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் வகையிலும் அரசாங்கம் முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க முன்பு பிரதமராக இருந்தபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளமையினால் அவர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிந்திருப்பர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு என்கின்ற விடயம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடாக இலகுவாக முன்னெடுக்க முடியும் என்றும் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டார்.

எனவே பலமான அரசாங்கம் ஒன்று கட்டியெழுப்பப்பட்ட பின்னர் அவருடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தி தீர்வினை காண்போம் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1282146

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு ஆதரவு அளித்து, எமது விடயங்கள் குறித்து, ஆழ்ந்த அறிவுள்ள, ரணிலுடன் பேசி, பிரச்சனைக்கு தீர்வினை காண்போம். சம்பந்தர். 😁

மைத்திரி - ரணில் அரசு காலத்தில், நல்லா படுத்துக்கிடந்த, அய்யா அவர்கள்..... இப்ப... புது கரடி விட்டுக்கொண்டு வெளிக்கிட்டுள்ளார்....

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழர்களுக்கான... தீர்வை, வென்றெடுக்க... புதிய பிரதமருடன், பேசுவோம் – சம்பந்தன்.

அடங்.....கொய்யால 🥵

ரணில் ஒரு புளிச்ச கள்ளு. நாலுதரம் பிரதமராய் இருந்திருக்கிறார்.அப்ப கதைக்காததை இப்ப என்னத்தை புதிசாய் கதைக்கப்போறியள்? 🤔

சத்தியமாய் எனக்கு பல்லு நெருடுது 😡

Link to comment
Share on other sites

25 minutes ago, குமாரசாமி said:

அடங்.....கொய்யால 🥵

ரணில் ஒரு புளிச்ச கள்ளு. நாலுதரம் பிரதமராய் இருந்திருக்கிறார்.அப்ப கதைக்காததை இப்ப என்னத்தை புதிசாய் கதைக்கப்போறியள்? 🤔

சத்தியமாய் எனக்கு பல்லு நெருடுது 😡

நெருடித்தான் என்ன செய்யிறது. வேற மாதிரி யோசித்து நல்ல முடிவு எடுங்கோ.😀

Edited by Hana
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலம் பேசிப் பேசி  என்னத்தை கண்டோம்.?  தங்கள் தேவைக்கு மட்டும்  தேடுவார்கள். பேசிப் பேசி கால நீடிப்பு த்தான். காகித ஒப்பந்தங்கள்   மட்டுமே.    பின் "பழைய குருடி  கதவை திறடி " கதை தான். வீரமும் விவேகமும் துணிச்சலும் உள்ள ஒரு தலைவனை ..தேடுகிறோம்....  

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிலாமதி said:

இவ்வளவு காலம் பேசிப் பேசி  என்னத்தை கண்டோம்.?  தங்கள் தேவைக்கு மட்டும்  தேடுவார்கள். பேசிப் பேசி கால நீடிப்பு த்தான். காகித ஒப்பந்தங்கள்   மட்டுமே.    பின் "பழைய குருடி  கதவை திறடி " கதை தான். வீரமும் விவேகமும் துணிச்சலும் உள்ள ஒரு தலைவனை ..தேடுகிறோம்....  

வீரமும் விவேகமும் துணிச்சலும் உள்ள ஒரு தலைவனை ..தேடுகிறோம்....

இப்ப விவேகம் மட்டும்  இருந்தாலே  போதும் அடுத்த  கட்டத்துக்கு  மிகச்சுலபமாக நகர்த்தமுடியும்??

ஆனால் இதற்குள்  சுயநலம்  வராமல் இருக்கணும்???

அது  தான்  மிக  மிக குறைச்சல் இவர்களிடம்??

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

இவ்வளவு காலம் பேசிப் பேசி  என்னத்தை கண்டோம்.?  தங்கள் தேவைக்கு மட்டும்  தேடுவார்கள். பேசிப் பேசி கால நீடிப்பு த்தான். காகித ஒப்பந்தங்கள்   மட்டுமே.    பின் "பழைய குருடி  கதவை திறடி " கதை தான். வீரமும் விவேகமும் துணிச்சலும் உள்ள ஒரு தலைவனை ..தேடுகிறோம்....  

மீண்டும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் காத்திருப்பதா இல்லை எம் தலைவன் சுட்டிய, அறிவின் செயற்பாட்டை இளையதலைமுறை கையிலெடுத்து கொடியை ஏற்றுமா என்பதைக் காலம்தான் பதில்சொல்ல வேண்டும். அனைத்துலக நகர்வுகளை மதிப்பீடு செய்து கருத்துப்போரை ஒருபுறமும் மக்களை அணிதிரட்டி தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை இருமுனையாகவும் நடாத்தியவாறு மூன்றாவது முனையாக அரசுடனும் மற்றும் வெளிநாட்டுக் கொள்கைவகுப்பாளருடனும் பேசவேண்டிய தருணம். ஆனால் இந்த வெத்துவெடிக் கோஸ்டி இப்பிடியே கதைக்கிறன் கதைக்கிறன் என்றே பச்சை ஓலையிபடுத்திடுவார். அதன்பின்தான்............?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப் போரின் பின் ஏற்பட்ட பொருண்மியப் பின்னடைவை அடுத்து இலங்கையை விட்டு பிரித்தானியா போனது போல..

ஹிந்தியா சுதந்திரம் பெற்ற போது இருந்த பொருண்மிய பின்னடைவை அடுத்து பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது போல..

பாகிஸ்தானின் பொருண்மிய பின்னடைவின் விளைவாக.. கிழக்குப் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு.. வங்கதேசம் உருவானது போல..

இலங்கையின் பொருண்மியப் பின்னடைவின் இந்த நிலையில்..

சிங்களவர்களால் தமிழர்களும்.. தமிழர்களால் சிங்களவர்களும் பொருண்மியக் கஸ்டம் படுவதிலும்.. பிரிந்து போவது சிங்களவர்களுக்கும் நல்லம்.. தமிழர்களுக்கும் நல்லம்.

எனவே பேச வேற ஒன்றுமில்லை. பிரித்து விடுவது பற்றி ரணிலோடு மட்டுமல்ல.. இலங்கைக்கு கடன்.. நன்கொடை கொடுக்கிறவையிட்டையும் சொல்லி வைப்பது சிறப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Hana said:

நெருடித்தான் என்ன செய்யிறது. வேற மாதிரி யோசித்து நல்ல முடிவு எடுங்கோ.😀

வந்த கொர்னோவுக்கும்  கண்ணில்லை .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா இவர்களை நம்புபவர்கள் இருக்கிறார்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

புதிய பிரதமருடன், பேசுவோம் – சம்பந்தன்.

இந்த மனிதருக்கு வெட்கமேயில்லையா? இவ்வளவு காலம் அரசியலில் இருந்தும் பழையதை மறக்காத ஆள். தன் பழைய தொழிலை சொல்கிறார் போலுள்ளது.

11 hours ago, தமிழ் சிறி said:

ரணில் விக்ரமசிங்க முன்பு பிரதமராக இருந்தபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளமையினால் அவர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிந்திருப்பர் என்றும் கூறியுள்ளார்.

முதலில் இருந்து சொல்லுங்கோ! கேட்டுத்தெரிந்து கொள்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டியைக்கூட தூக்கமுடியுமாமோ...பாவி மனுசன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் அவர்கள் வாயால் புடுங்காமல் இருந்தால்தான் செய்தி 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.