Jump to content

பிரதமர் ரணிலின், நடத்தை... வெட்கக் கேடானது – சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை – கூட்டமைப்பு

பிரதமர் ரணிலின், நடத்தை... வெட்கக் கேடானது – சுமந்திரன்

எதிர்க்கட்சி சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பிரதமர் ரணிலின் நடத்தை வெட்கக்கேடானது சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் பேசிய அவர், ஜனாதிபதியை யார் பாதுகாக்கிறார்கள், யார் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது நாட்டுக்கு தெரியும் என கூறினார்.

ஜனாதிபதிக்கு எதிரான இந்த பிரேரணை தயாரிக்கப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சியில் இருந்த பிரதமர் அதற்கு ஆதரவு என கூறியதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு ஒருகொள்கையோடும் பிரதமர் பதவி கிடைத்த பின்னர் இன்னொரு கொள்கையை கொண்டுள்ளார் என்றும் சுமந்திரன் கடுமையாக சாடினார்.

https://athavannews.com/2022/1282347

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சிங்கமாயிருந்தாலும் நரியின் குகைக்குள் செல்லும் போது நரியின் உதவி தேவை, இது சாதாரண பாமரனுக்கே தெரிந்த விடயம்.
அவர் எந்த கொள்கை எடுத்தாரோ, தருணம் வரும்போது அந்த கொள்கையை வைத்தே நீங்களும் அடிக்கலாம், ஒற்றுமையாக இருந்தால்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Ahasthiyan said:

நீங்கள் சிங்கமாயிருந்தாலும் நரியின் குகைக்குள் செல்லும் போது நரியின் உதவி தேவை, இது சாதாரண பாமரனுக்கே தெரிந்த விடயம்.
அவர் எந்த கொள்கை எடுத்தாரோ, தருணம் வரும்போது அந்த கொள்கையை வைத்தே நீங்களும் அடிக்கலாம், ஒற்றுமையாக இருந்தால்!

சில கிழமைகளுக்கு முன்... கோத்தபாய, 
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் போது...
புலம் பெயர் தமிழர்கள்... ஸ்ரீலங்காவில், 
முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 

அப்போது சுமந்திரன்... புலம் பெயர் தமிழர்களுக்கு பாலமாக இருந்து,
அவர்களின் முதலீட்டை  ஸ்ரீலங்காவிற்கு பெற்று தருவதற்கு தான் தயாராக....
இருப்பதாக, கோத்தபாயவிடம் நேரடியாக...  தெரிவித்தார்.

இரண்டு  நாள் கழித்து... சுமந்திரன், "கோத்தாகோகம" விற்கு தமிழர்களை...
போகச் சொன்னது மட்டுமல்லாது, காலிமுகத்திடலில்... 
சந்திரிகாவுடன் இருந்து, தனது எதிர்ப்பையும் தெரிவித்தார்.

சிங்கள ஜனாதிபதிக்கு, எதிரான... ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை,
ஒரு தமிழன் கொண்டு வந்தால்... அதனை எப்படியும்... 
பெரும்பான்மை இனம் தோற்கடிக்கும் என்ற, 
அடிப்படை அறிவு கூட  இல்லாமல், இவர்... எப்படி  அந்தப் பொறுப்பை இவர் எடுத்தார்.

இவர்கள்... இன்னும் நிறைய அரசியல் படிக்க வேண்டும்.
அதுவரை... மூக்குடை பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

பிரதமர் ரணிலின், நடத்தை... வெட்கக் கேடானது – சுமந்திரன்

யார் எதை சொல்வது என்ற விவஸ்தை இல்லாமலே போய் விட்டது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் சனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் சனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியாது.

பனங்கொட்டய முளைக்க விடுறாங்களில்ல 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் சனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியாது.

அட…. சட்டத்தரணி சுமந்திரனுக்கு இது கூட தெரியாமாலா, இவ்வளவு நாளும் பாராளுமன்றத்துக்கு போனவர்.

கோட்டு, சூட்டை…. கழட்டி எறிஞ்சு போட்டு, மாடு மேய்க்கிற வேலையை பாருங்கப்பு. 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.