Jump to content

கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

18 மே 2022, 04:32 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்
 

சிங்களர் - தமிழர்

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறந்த தமிழர்களுக்கு கொழும்பு காலிமுகத் திடல் போராட்டப் பகுதியில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வு நடத்தி வருகிறார்கள்.

கடந்த காலங்களில் இத்தகைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கை வடகிழக்கில் மட்டுமே நடத்தப்படும் என்பது மட்டுமல்ல. இதற்கு அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பும் இருக்கும். இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்புகள் ஏதுமில்லை என்பதுமட்டுமல்ல. வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை நடத்துகிறார்கள்.

அது நடக்கும் இடமும் மிக முக்கியமானது. தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள இந்த காலிமுகத் திடல் பகுதியில் கடந்த காலங்களில் ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி செயலகம் அருகிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடக்கிறது.

தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நடக்கும் இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட்டு, இனம் கடந்து மக்கள் அந்த நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். ஸ்தூபி அருகே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61489633

  • Like 6
Link to comment
Share on other sites

லங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

 

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

 

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

 

பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.

 

அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

 

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலேயே இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

https://www.madawalaenews.com/2022/05/blog-post_751.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, ஏராளன் said:

கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 

 

11 minutes ago, colomban said:

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இப்படியான நிகழ்வை, கொழும்பில்  நடாத்திய... சிங்கள இளைஞர்களுக்கு நன்றி.   🙏

அவுஸ்திரேலியாவில், துவேசத்தை காட்டிய சிங்களவர், இந்தச் செய்தியை கவனிக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில்... முதல் முறையாக, கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலேயே இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

colo-600x400.png

colombo-600x375.png

https://athavannews.com/2022/1282430

  • Like 1
Link to comment
Share on other sites

8 minutes ago, தமிழ் சிறி said:

பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

மதவெறி இனவெறி அற்ற ஒன்றுகூடல் நிகழ்வும், நினைவேந்தலும், நல்லதொரு ஆரம்பம்.

இடையில் வந்தன கழியட்டும். முன்புபோல் சவரக்கடைகள் முதல் பார வண்டிகளோடு வீடுகள்வரை, சகல மதங்களின் கடவுள்களும் இணைந்து ஒன்றாகித் துலங்கட்டும்.🙏  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“මම කැඳ ඉල්ලා යද්දී අත්බෝම්බය වැටී පිපිරුණා. තුවාල ලැබූ පුද්ගලයෙකුගේ එක් මාංශ පේශියක් මගේ පිගානට වැටුණා. විසී කරොත් ආයේ ලැබෙන්නේ නැති නිසා එය අරන් විසි කරලා මම කැඳ ටික බීවා.. 
- අවසන් සටනින් දිවි ගලවා ගත් 14 හැවිරිදි දැරිය (2009)
 Via සුරේන් කාර්තිකේසු (මාධ්‍යවේදියා)

"கஞ்சி வேண்டிக்கொண்டு போகும் போது எறிகணை வீழ்ந்து வெடித்தது. என்ர சட்டிக்குள்ள காயமடைந்தவரின் தசைத்துண்டு ஒன்று விழுந்திட்டுது. எறிந்தால் திரும்ப கஞ்சி வேண்ட முடியாது என்று  தசைத்துண்டை வெளில போட்டிட்டு தான் குடித்தேன்.” - இறுதிப்போரில் உயிர் தப்பிய 14 வயது சிறுமி(2009)
Via Suren Karththikesu (முள்ளிவாய்க்காலிலிருந்து மீண்ட ஊடகவியலாளர்)

 

இதனை தமது முகநூலில் பகிர்ந்த காலிமுகத்திடல் போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்கும்  சிங்கள திரைப்பட நடிகர்கள் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும்  நன்றி. 

  • Like 3
Link to comment
Share on other sites

இந்த நிகழ்வுக்கு போன ஒருவரின் கருத்து:
மற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிடுகையில் பங்கேற்றவர்களின்  எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆனால் இது ஒரு சிறிய தொடக்கமாகும். இது ஒரு பெரிய நிலைக்கு வளரும் என்றும், சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.
இந்த அரங்கம்  இல்லாமல், இதை நம்மால் சாதிக்க முடியாது .

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரிய மாற்றத்தை, ஏற்றுகொள்ளலை ஏற்படுத்த உயிரை பணயம் வைத்து அயராது உழைத்த தமிழ் உள்ளங்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். ஆனால் இதை சகுனி  இந்தியாவும், சிங்கள இனவாதிகளும் இலகுவில் சகித்துக்கொள்ள மாட்டார்கள். மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் சம்பந்தப்பட்டவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 5 people, people standing and outdoors

 

May be an image of 3 people and flower

 

May be an image of 2 people, people standing and outdoors

 

May be an image of food

 

May be an image of 1 person and outdoors

 

May be an image of 4 people, people standing and outdoors

 

May be an image of 14 people, people standing and outdoors

 

May be an image of 6 people, people standing and outdoors

 

May be an image of 5 people, people standing and outdoors

 

May be an image of 1 person, fire and outdoors

 

May be an image of 4 people and people standing

 

May be an image of 1 person, standing and body of water

 

May be an image of 4 people, people standing and footwear

 

May be an image of 6 people, people standing and outdoors

 

May be an image of 5 people, people standing, sky, beach, crowd and ocean

 

May be an image of 4 people, people standing and outdoors

 

May be an image of 2 people, people standing and indoor

 

May be an image of 10 people, people sitting, people standing and outdoors

 

May be an image of 9 people, people standing, fire and outdoors

காலி முகத்திடல்,  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் படங்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய குழுவினர் தான்

ஆனாலும்  மாற்றத்தின்  முதல்படியில் ஒருவரே வரக்கூடும்

நல்ல  விடயம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நாளை வழமையாக நடக்கும், யுத்த வெ(ற்)றி கொண்டாட்டம் நடக்கும் அசுமாத்தமும் இல்லை.

நடாத்துவதற்கான, முகாந்திரமும் அடிபட்டு போயுள்ளது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திய சிங்கள மக்களின் மனநிலை என்ன?

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

முள்ளிவாய்க்கால்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில், தென் பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்களிடம் இருந்து தமிழ்த் தரப்புக்கு ஆதரவு வந்ததில்லை என்ற உணர்வு இருந்தது. ஆனால், இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிங்கள மக்களில் இருந்தே குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களுடன், சிங்கள மக்களும் இன்று கைக்கோர்த்து காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தினர்.

பிரிவினைவாத அடிப்படையில் நடந்த போரின் வடுக்களுக்கு, தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் சிங்கள மக்களும் தமது ஆதரவை தமிழர்களுக்கு வெளிப்படையாகவே இன்று வெளியிட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த பாதிப்புக்கள், தமிழ் அரசியல் கைதி விவகாரங்கள், படுகொலைகள் ஆகியவற்றுக்கு நீதி கோரி குரல் தமிழர்களோடு இணைந்து சிங்களர்களும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் ஆகின்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர வேறு எந்தவொரு பகுதியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவில்லை.

மாறாக மே மாதம் 19ம் தேதி தேசிய படைவீரர்கள் தினம் என்ற ஒன்றை நடத்தி, ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்களை இலங்கை அரசாங்கம் கொண்டாடி வந்தது.

எனினும், இந்த ஆண்டு தேசிய படைவீரர்கள் தினத்தை கொண்டாடுவதற்கு, தென் பகுதி வாழ் மக்கள் முற்றுபுள்ளி வைக்கும் வகையிலான நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

முள்ளிவாய்க்கால்

இந்நிலையில், காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்ற சிங்களர்களுக்கு தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் என்ன மாதிரி கருத்து கருத்து உள்ளது என்பதை அறிய அவர்களோடு பிபிசி தமிழ் உரையாடியது.

இலங்கையில் 30 வருட கால யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அருட் சகோதரி தீபா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

'30 ஆண்டுகள் துன்பம் அனுபவித்த, மரணித்த மக்களை நினைவு கூர்வது உரிமை'

''30 ஆண்டுகளுக்கு மேல் துன்பம் அனுபவித்த, மரணித்த அன்புக்குரிய அந்த மக்களை, நினைவு கூர்வது எமது உரிமை. இந்த உரிமையையே எம்மிடமிருந்து பறித்துள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் மிக உற்சாகமாக வெற்றி கொண்டாட்டமாக இதனை கொழும்பில் நினைவு கூர்ந்தார்கள். போர் வெற்றியாகவே அதைக் கொண்டாடினார்கள். யுத்தம் செய்து அழித்தோம் என்ற உற்சவத்தையே கொழும்பில் கொண்டாடினார்கள்;. அவ்வாறான உற்சவங்களை நடத்த முடியும். ஆனால், எமக்கு இன்று இதுதான் தேவைப்பட்டது.

உயிர் நீத்தவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் ஆகியோரை நினைவு கூர்வதே எமக்கு தேவைப்பட்டது. இது இன்று எமக்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமைகின்றது. நான் சிங்கள மக்கள் என்ற விதத்தில், இந்த சந்தர்ப்பத்திலேனும் கவலை அடைந்து மாத்திரம் போதாது. இதற்கு துன்பப்பட்டு மாத்திரம் போதாது. இந்த ஆண்டிலாவது அல்லது இந்த சந்தர்ப்பத்திலாவது அந்த தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அச்சம், சந்தேகம் அடைந்து மறைந்து செய்ய வேண்டிய ஒன்று அல்ல இது.

 

அருட்சகோதரி தீபா

 

படக்குறிப்பு,

அருட்சகோதரி தீபா

இது பகிரங்கமாகவே செய்யக்கூடிய நினைவு நிகழ்வாக இருக்க வேண்டும். சிங்கள மற்றும் இளைய சமூகம் அனைவரும் ஒன்றிணைந்து அங்கு இடம்பெற்ற அநீதிகளுக்கும், அழிவுகளுக்கும் நாம் குரல் எழுப்ப வேண்டும். குரல் எழுப்பி மாத்திரம் போதாது. துன்பப்பட வேண்டும். அவ்வாறு துன்பப்பட்டால் மாத்திரமே உண்மையான நல்லிணக்கத்தை நோக்கி எம்மால் நகர முடியும். நல்லிணக்கத்தின் பேரில் நாம் பல்வேறு விடயங்களை செய்கின்றோம். எனினும், அதை தமிழ் மக்களினால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை" என அவர் கூறுகின்றார்.

யுத்தம் காலத்தில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படையாக அரசாங்கம் கூறி, அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என அருட் சகோதரி தீபா, குறிப்பிடுகின்றார்.

''அவர்கள் இழந்த அந்த மக்கள், அந்த அன்புக்குரியவர்களை ஏதோ ஒரு எதிர்பார்ப்புடனேயே ராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். அப்படியென்றால், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது?. அவர்களை கொலை செய்திருந்தால், அவர்களை கொலை செய்து விட்டோம் என்று பகிரங்கமாகவே கூற வேண்டும். எதற்காக கொலை செய்தோம் என்பதையும் அவர்கள் கூற வேண்டும்.

அதுமாத்திரமல்ல, கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த விடயங்கள் கட்டாயம் நடந்தேற வேண்டும். மறுபுறத்தில் நட்டஈடு வழங்குவதாக கூறுவதை விடவும், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இந்த நட்டஈட்டையும் வழங்க வேண்டும். அதையும் விட, நேர்ந்த சம்பவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொண்டு, அதற்கான பொறுப்பை ஏற்று, அதற்கு நீதி, நியாயம் கட்டாயம் கிடைக்க வேண்டும். அதனை செய்யக்கூடிய மிக சிறந்த காலம் இது. இதுவரை காணப்பட்ட தடைகள் ஏதோ ஒரு வகையில், இந்த போராட்டத்தின் பெறுபேறாக இல்லாது போயுள்ளது. ஏதோ ஒரு வகையில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை தவறவிடாமல் இருப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் என்ற நான் அவதானிக்கின்றேன்." என அருட் சகோதரி தீபா தெரிவிக்கின்றார்.

ஒரு லட்சத்து 44 ஆயிரம் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது? - குரல் எழுப்பும் சிங்கள இளைஞர்

 

அசங்க அபேரத்ன

 

படக்குறிப்பு,

அசங்க அபேரத்ன

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு லட்சத்து 44 ஆயிரம் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் அசங்க அபேரத்ன தெரிவிக்கின்றார்.

''இன்று 18ம் தேதி. மே மாதம் 18ம் தேதி என்பது எமது இதயங்களில் வேதனையை காணப்படுகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறக்கக்கூடாது, எமது நாட்டில் 30 வருட காலம் இனவாத யுத்தம் ஒன்று இருந்தது. தென் பகுதியில் ஏற்பட்ட சிவில் வன்முறைகளில் பெரும்பாலான எமது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டார்கள். பல்வேறு ஆபத்துக்களை சந்தித்தார்கள். அதேபோன்று தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக, வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் எமது தமிழ் மக்கள் பெருமளவில் கொலை செய்யப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், ராணுவத்திடம் சரணடைந்த சுமார் ஒரு லட்சத்து 44 ஆயிரம் எமது தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இலங்கை என்பது காணாமல் ஆக்கப்படுவோர் பட்டியலில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள நாடாக இருக்கின்றது. யுத்தம், அரசியல் வன்முறைகள், அரசியல் கலவரங்கள் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நாம் இன்று நினைவு கூர்கின்றோம். இவ்வாறான யுத்தம், வன்முறைகள் போன்ற இழிவான செயற்பாடுகள் இனியும் இந்த பூமியில் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே நாம் இன்று இந்த இடத்தில் நினைவு கூர்கின்றோம்.

இது வெற்றி கிடையாது. யுத்தத்தின் பின்னர் வெற்றி எதுவும் கிடையாது. ஏனெனில், எமது மக்கள் கொலை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட நாடொன்றில் யுத்தம் முடிவு என்பது வெற்றி கிடையாது." என அவர் குறிப்பிடுகிறார்.

தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்திய துப்பாக்கியை, ராஜபக்ஷ குடும்பம், தென் பகுதி மக்களை நோக்கி தற்போது திருப்பியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் அசங்க அபேரத்ன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கையில் எதிர்காலத்தில் யுத்தம், படுகொலை செய்தல், காணாமல் ஆக்குதல், கடத்தப்படுதல் போன்றவற்றை செய்யாதிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தாம் அழுத்தம் பிரயோகிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

''2009ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் யுத்தத்தை வெற்றிக் கொண்டதாக கூறிய ராஜபக்ஷ குடும்பத்தினர், அதே துப்பாக்கியை தற்போது தென் பகுதியிலுள்ள மக்களை நோக்கி திருப்பியுள்ளனர். கடந்த 9ம் தேதி அதே ராணுவத்தை கொண்டு இந்தப் போராட்டத்தை கலைக்க முயன்றார்கள். இது அவர்களின் வெற்றி மாத்திரமே தவிர, இது மக்களின் வெற்றி கிடையாது. வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் காணி பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை. அந்த மக்களுக்கு ஜனநாயக பிரச்சினை இன்றும் காணப்படுகின்றது. அந்த பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். இன்றும் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு சரியான குற்றச்சாட்டுக்கள் எதுவும் கிடையாது. வழக்கு எதுவும் இன்றி, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நினைவு கூர்தலின் ஊடாக, அரசாங்கத்திற்கு ஒரு தகவலை வழங்க விரும்புகின்றோம். அரசாங்கத்திற்கு இதனூடாக அழுத்தங்களை பிரயோகிக்கின்றோம். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்கான நட்ட ஈட்டை வழங்க வேண்டும். அதற்கு நீதி மற்றும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று, நாடு என்ற ரீதியில் மீண்டும் அவ்வாறான இழிவான யுத்தம், படுகொலை செய்தல், காணாமல் ஆக்குதல், கடத்தப்படுதல் போன்றவற்றை மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் செய்யாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த சந்தர்ப்பத்தில் நாம் அரசாங்கத்திற்கு அழுத்தமாக கூறிக் கொள்கின்றோம்" என்றார் அவர்.

தமிழர்களை கொலை செய்வது பரவாயில்லை என கூறியது சிங்கள பௌத்த இனவாதிகள் - பிரிட்டோ பெர்ணான்டோ

 

பிரிட்டோ ஃபெர்ணாண்டோ

 

படக்குறிப்பு,

பிரிட்டோ ஃபெர்ணாண்டோ

89 வன்முறை முதல் 2009 யுத்தம் முடிவு வரை பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவிக்கிறார்.

''மக்கள் செறிந்து காணப்படும் ஒரு பகுதியில் நீண்ட தினங்களுக்கு பின்னர் நாம் முள்ளிவாய்க்கால் சம்பவத்தை நினைவு கூர்கிறோம். இந்த நிகழ்வை அந்த பகுதியிலும் நினைவு கூர்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு இடையூறு காணப்பட்டது. கொழும்பில் இன்று மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நினைவு கூர்கின்றோம். காணாமல் ஆக்கப்படுவதில் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்த நாடு. நாம் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு ஒருவர் கொலை செய்துக்கொண்டோம். 70, 80களில் வடக்கில் போரை நடத்த பல காரணங்கள் கூறப்பட்டன. இதில் சாதாரண பொதுமக்கள் உயிரிழந்தார்கள். ராணுவத்தினர் உயிரிழந்தார்கள். இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், இடம்பெற்ற சம்பவங்களுக்கான நியாயத்தை பெற்றுக்கொடுக்க முன்னிற்க வேண்டும்.

எனினும், 'சிங்கள பௌத்த' என்ற ஒரு எண்ணத்தை சிங்கள இனவாதிகள் கொண்டு வந்தார்கள். வடக்கிலுள்ள தமிழ் மக்களை கொலை செய்து, காணாமல் ஆக்குவது பரவாயில்லை என கூறினார்கள். எனினும், 89ம் ஆண்டு இதே விதத்தில் அவர்களின் மக்கள், குழந்தைகள், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோர் அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்திற்காக கொலை செய்யப்பட்டார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 89ம் ஆண்டிலிருந்து இதற்காக முன்னின்று குரல் கொடுத்தாலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், நட்ட ஈட்டை பெறுவதற்கு 30 வருடங்கள் எமக்கு செலவிட வேண்டி ஏற்பட்டது.

அவ்வாறு பெற்றுக்கொண்டாலும், அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. இந்த நாட்டிலுள்ள எந்தவொரு முறையும் தமக்கு பதில் வழங்காது என வடக்கிலுள்ள தாய்மார் கூறுகின்றார்கள். எனினும், எமக்கு வேறு வழி கிடையாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் வந்தால், அரசாங்கத்தை சர்வதேசமே பாதுகாக்கும். கடன்களை வழங்கும், ஆயுதங்களை வழங்கும், ராணுவத்தை வழங்கும். அவ்வாறே கடந்த முறை யுத்தத்தையும் ஒடுக்கினார்கள்.

அதனால், தெற்கில் 89ம் ஆண்டு முதல் காணாமல் போனோரின் தாய்மார்களும் வடக்கிலுள்ளவர்களும் ஒன்றிணையாமல் இதனை வெற்றிக் கொள்ள முடியாது. ஏனென்றால், இந்த அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். எனினும், நாம் இன்று மக்கள் செறிந்துள்ள ஒரு பகுதியில் முன்னோக்கி ஒரு நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றோம். கோட்டா கே கம பகுதியில் இதனை செய்வதை இட்டு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

தமது கருத்துக்களை ஒரு இடத்திலிருந்து கூறுவதற்கு இதற்கு முன்னர் பலருக்கு தைரியம் இருக்கவில்லை. கோட்டா மீதான பயத்தை இல்லாது செய்ததை தொடர்ந்து, மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள். தமது மனங்களிலுள்ள விடயங்களை செய்கின்றார்கள். நாம் ஒன்றிணைந்து செய்வோம். தென் பகுதி மக்களும் அதற்காக முன்நிற்கின்றார்கள் என்பது வடக்கிற்கு நல்ல செய்தியாக இருக்கும்" என அவர் குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61491928

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சின்ன சின்ன மன மாற்றங்கள் மக்களிடையே  நிகழும் பொழுது அதனை தட்டிக்கொடுப்போம். 
துவேசத்தை தூண்டாத, நம்பிக்கை வளர்க்கும் வகையிலான எமது பணியை  தொடர்ந்தும் செய்வோம். பலனை எதிர்பாராது  கடமையை செய்வோம். 🙏

  • Like 7
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

https://www.youtube.com/watch?v=lbUDX4bdgTg

 

எதிர்காலத்தில் ஒரு புதிய வரலாறு இலங்கையில் உருவாக இந்நிகழ்ச்சி ஒரு முன்னோடியாக இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Edited by நிலாமதி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 

https://www.youtube.com/watch?v=lbUDX4bdgTg

 

எதிர்காலத்தில் ஒரு புதிய வரலாறு இலங்கையில் உருவாக இந்நிகழ்ச்சி ஒரு முன்னோடியாக இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நீண்ட தொலைதூரப்பயணம் தான் 👣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நேரத்தில் சரியான இடத்தில செய்த ஒரு முயற்சி,  இது எவ்வளவுதூரம் போகும் என்று ஒருவருக்கும் தெரியாது, ஆனால் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது செய்யும் இப்பிடியான நிகழ்வுகள், புரிந்து கொள்ளக்கூடிய சிங்கள மக்கள் சிலருக்காவது  ஓரளவுக்கு உண்மையான நிலைமையை தெளிவுபடுத்தலாம். 
முழுமையான நம்பிக்கை இல்லாவிட்டாலும், இப்பிடி எங்களுக்கு சாதகமான நிலைமைகள் வரும் பொழுது, இனி என்ன ஏமாற்றங்கள் வரப்போகின்றதோ, அல்லது என்ன நடக்கபோகிறதோ என்று ஒருவித uneasiness வருவதையும் தடுக்க முடியவில்லை 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வை நடத்தியவர்கள்,பங்குபற்றியவர்கள் இதய சுத்தியுடன் நடந்து கொண்டால் மிக்க சந்தோசம். 🙏


ஏனெனில் முள்ளிவாய்க்கால் அனர்த்தம் நடந்து நீண்ட காலமாகி விட்டது. இது வரைக்கும் பொதுவில் எவ்வித  அஞ்சலிகளும் அனுதாபங்களும் இல்லாமல் இருக்க கோ கோத்தபாய நிகழ்வுக்கு பின் இப்படி ஒரு அதிசயக்கத்தக்க நிகழ்வு என்பது சாதாரண விடயமல்ல.

எனக்குள் ஐந்து வருட தவணை வைத்திருக்கின்றேன். இனி வரும் காலங்களில் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.

அரசியல் பொல்லாதது. அதன் பின் விளைவு தெரிய  காலம் செல்லும்.

இராமநாதனை குதிரை வண்டியில் வைத்து இழுத்தவர்கள் தான் இனவாதத்திற்கு முளையிட்டவர்கள்.

உலகில் அரசியல் செய்ய இனவாதம் சிறந்த நிவாரணி. இது சகல இன மக்களுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von 2 Personen und Text „மே 18 இன அழிப்பு நாள்“

உன்னையும் என்னையும் போன்ற இளம்பிள்ளைகள் சிலர் வாழ்ந்தனர்.. நம் சம காலத்தில்
உனக்கு தெரியுமா..?
உன் நாவிலும் என் நாவிலும் நாள்தோறும் பேசும் தாய் தமிழைத்தான் அவர்களும்
பேசினர்..
உன்னையும் என்னையும் போல்
அந்த இளம்பிள்ளைகள்..
வானுயர்ந்த புகழ்மிக்க பல்கலைகழங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல..
வானத்தைவிடவும் புகழ்மிக்க இலட்சியங்களோடு அவர்கள் வாழ்ந்தனர்..
எந்த நடிகரையும் அவர்கள் தலைவராக கொண்டாடியதில்லை..
ஆனால்
உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவனாக கொண்டிருந்தனர்..
அவர்கள் திரையரங்குளில் சத்தம் போட்டதில்லை..
பதுங்கு குழிகளின் நிசப்தம் அறிந்தவர்கள்..
விக்கெட்கள் விழுந்துவிட்டதற்காக பொறுமியவர்கள் அல்ல.. விழும்
பிணங்களுக்கு இடையே ரவைகளை பொறுக்கி கொண்டிருந்தவர்கள்...
அவர்கள் பொறியியல் படித்தவர்கள் அல்ல..
மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்..
விடுதலை வேள்விக்கான மூலப்பொருட்களிலிருந்து
முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்..
அவர்கள் மாலுமிகள் அல்ல..
கப்பலோட்டினர்..
அவர்கள் விமானிகள் அல்ல.
விமானம் இயக்கினர்..
அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல..
தத்துவமாகவே வாழ்ந்தனர்..
அவர்களில் பலர் பள்ளிப்படிப்பையே முடித்தது கிடையாது..
ஆனாலும் அவர்களைப்போல் களத்தில் யாரும் பாடம் கற்பிக்க முடியாது..
அவர்கள் வாழ்வின் அர்த்தம் அறிந்தவர்கள் அல்ல.. ஆனால் அவர்களைப்போல் அர்த்தமுடைய வாழ்வை யாரும் வாழ்ந்துவிட முடியாது..
அவர்கள் புனித நூல்களின் வார்த்தைகளை ஓதியவர்கள் அல்ல..
ஆனால் அவர்கள் உச்சரித்த மண் விடுதலை என்ற வார்த்தையை விட புனிதமானது வேறில்லை..
எந்த துறவியைவிடவும் அவர்களுடைய துறவறம் உயர்ந்தது..
எந்த தவசிகளின் தவங்களை விடவும் அவர்களின் விடுதலை தவம் உயர்ந்தது..
அவர்கள் ஒவ்வொரு நாளும் அடிபட்டு வாழ்ந்தனர்..
ஒரு நாளும் அடிமையாய் வாழ்ந்ததில்லை..
அவர்கள் இருந்தவரை அவர்களுடைய மண் அவர்களுடையதாக இருந்தது..
அவர்கள் இருந்தவரை அவர்களுக்கென்று ஒரு தேசம் இருந்தது..
அவர்கள் மண் அவர்களிடம் இல்லாமல் போனபோது அவர்கள் இந்த மண்ணிலேயே இல்லாமல் போயினர்..
 
முகநூலில் இருந்து.......
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நிதர்சனமாகி விட்ட ஓர் பாடல்....

எங்க இன ரத்தசோறு கேட்டவனே...உன் கோட்டை சரிந்து விழும்.... மாளிகை நொருங்கி விழும்.....

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி முகத்திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் நினைவேந்தலும் 🙏😢 Mullivaikkal Memorial Day in Colombo😢

https://www.youtube.com/watch?v=lbUDX4bdgTg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் 2022 மே  18 இல் 
மனதிற்கு இதமான விடயங்கள் பல
சென்ற வருடம் முள்ளியில் 
வாழைத்தண்டில் மண்சட்டி வைத்து 
கற்பூரம் ஏத்தி 
அஞ்சலிக்கு ஆயத்தம் செய்ய 
சப்பாத்துக் காலால் தட்டி உடைத்தான் ஆமிக்காரன் 
இந்த வருடம் காலிமுகத் திடலில் 
காலிரண்டும்  இல்லாத ஆமிக்காரனும் வந்திருந்து 
முள்ளிக் கஞ்சி வாங்கி அருந்தியது மனதை தொட்டு சென்றது 
2009 இல் கஞ்சி இன்று போல் தடிப்பாக இருக்கவில்லை என்று
முள்ளியில் தமிழர் பட்ட அவலத்தை 
சிங்கள சகோதர்கள் பகிர்ந்து கொண்டார்கள் காலிமுகத்திடலில்.. 
அவலங்களுக்கு பொறுப்பு கண்டடைதலும் வேண்டும்
என்ற அவர்களின் கூற்று 
மண்ணின் கீழே துயில்வோரின் காதுகளில் வீழ்ந்திருக்கவும் கூடும் 
விளங்கா மொழியில் என்றாலுமே விளங்கியிருக்கக் கூடும்
புத்தம் சரணம் கச்சாமி 
இயேசு இரட்சிப்பார் 
அல்லாஹ்வின் அருளால் அமைதி  பெறட்டும் 
ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும் என்று 
இலங்கை  மக்கள் அங்கே ஒன்றாக நின்றது 
வரப்போகும் நன்மைகளுக்கு கட்டியம் கூறுவதாக அமையட்டும் ..

-    மெல்பேணில் துண்டுப்பிரசுரம் கிழித்தெறிந்த சகோதரனுக்கு இது சமர்ப்பணம்

  • Like 2
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர்   சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. 'பழுதுபார்ப்புப் பணி' என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வர ஆர்வம் காட்டும் சீன செயற்கைக்கோள் கப்பலும், சென்னையில் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் வந்திருப்பதும் தற்செயல் நிகழ்வா அல்லது இரு பெரும் வல்லரசுகள் இந்திய பெருங்கடலை வைத்து தங்களுடைய கேந்திர அரசியலை வெளிப்படுத்துகின்றனவா என்ற சந்தேகம் இந்த விவகாரத்தில் எழுகிறது. என்ன நடக்கிறது? காட்டுப்பள்ளியில் அமெரிக்க கடற்படை கப்பல் இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாகவும், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு என்ற கொள்கைக்கு வலுசேர்க்கும் விதமாகவும் இந்திய அமெரிக்க கேந்திர கூட்டணியை வலுப்படுத்தும் வகையிலும் அமெரிக்க கடற்படை கப்பலான 'சார்லஸ் ட்ரூ' (Charles Drew) சென்னையில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு ஆகஸ்டு 7ஆம் தேதி பழுதுபார்ப்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக வந்துள்ளது. அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று சீரமைப்பு பணிகளுக்காக இந்தியா வருவது இதுவே முதல்முறை. இந்த கப்பல் சென்னை எண்ணூரில் உள்ள காட்டுப்பள்ளி கப்பல் தளத்தில் 11 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை கூறியிருக்கிறது.சர்வதேச கப்பல் கட்டுமானம் மற்றும் சீரமைப்பு சந்தையில் இந்தியாவின் கப்பல் தளத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது என்று இந்தியா பெருமிதம் தெரிவித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. மேலும் நவீன கடல்சார் தொழில்நுட்பங்களை கொண்டு இந்திய கப்பல் கட்டும் தளம் கப்பல்களை சீரமைத்தல் மற்றும் பராமரிப்புப் பணியை குறைந்த செலவில் திறம்பட வழங்குகிறது என்றும் இந்தியா அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. அசாதாரணமாக வந்துள்ள உலகின் மிகப்பெரிய வல்லரசின் போர்க்கப்பல் என்பதால் அதன் சென்னை வருகையை இந்திய பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய் குமார், கடற்படை துணைத் தளபதி, கடலோர காவல் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். இது குறித்து பேசிய இந்திய பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார், "அமெரிக்காவின் கடற்படை கப்பலான சார்லஸ் ட்ரூவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் இந்த முன்னெடுப்பை இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கிறோம். இரு நாடுகளும் இணைந்து மேலும் பல நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தொடக்கமாக இது உள்ளது" என தெரிவித்தார். இலங்கை வரும் சீன கப்பல் வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நங்கூரமிட்டிருக்க, இந்திய பெருங்கடல் பகுதி நோக்கி தென் சீன கடல் வழியாக சீனாவின் யுவான் வாங் - 5 கப்பல் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த கப்பலின் இலங்கை துறைமுக வருகை இந்திய பெருங்கடல் பகுதியில் அச்சுறுத்தலாகலாம் என்ற கவலையை இந்தியா கடந்த இரண்டு வாரங்களாக வெளிப்படுத்தி வருகிறது. அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது. சீனாவின் யுவான் வாங் - 5 கப்பல், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனங்களே நிர்வகிக்க குத்தகை எடுத்துள்ளன. அந்த வகையில், சீன செயற்கைக்கோள் கப்பல், இலங்கையில் நிலைநிறுத்தப்படுவதன் மூலம், இந்தியாவின் தென்கோடி கேந்திர கடலோர பாதுகாப்பு அமைப்புகள், தாக்குதல் வியூகங்கள் போன்ற தகவல்களை துல்லியமாக சீன செயற்கைக்கோள் கப்பலால் பதிவு செய்ய முடியும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். சீனா எதிர்வினை இந்த நிலையில் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், திங்களன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க அதற்கு உரிமை உள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பானது இரு நாடுகளாலும் சுயாதீனமாகத் தெரிவுசெய்யப்பட்டு பொதுவான நலன்களைப் பூர்த்தி செய்கிறது. அது எந்த மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை. பாதுகாப்பு பிரச்னைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது" என்று வாங் கூறினார்."சீனாவின் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான வழியில் பார்க்கவும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது" என்றும் வாங் தெரிவித்தார். பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று வாங் கூறினார், இலங்கையின் இந்த நடவடிக்கை இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகளுக்கு காரணம் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால், அந்த கப்பல், செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் என்ற பெயரில் வரும் உளவுக்கப்பல் என்பது இந்தியாவின் வாதம்.   பட மூலாதாரம்,YUVAN WANG 5 அதுவும், யுவான் வாங் - 5, ஆகஸ்டு 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஏற்கெனவே சீனாவிடம் இலங்கை பெரும் கடன் பெற்றிருந்தாலும், நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இலங்கைக்கு இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் உதவியும் தேவையாக இருக்கும் பட்சத்தில் சீன கப்பலுக்கு அனுமதி வழங்கினால், இந்தியாவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம் என்ற நிலைக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தள்ளப்பட்டுள்ளார். அதேபோல, சீன கப்பலுக்கு அனுமதி வழங்காவிட்டால் அது சீன, இலங்கை உறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கவலையும் ரணிலுக்கு உள்ளது. பதில் நடவடிக்கையா? இந்த சூழலில்தான் சீரமைப்பு பணிகளுக்காக முதன்முறையாக இந்தியா வந்துள்ளது அமெரிக்க கப்பற்படை கப்பல். இந்த கப்பல் குறைந்தது 11 நாட்களுக்கு சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என்பதால், சீனாவுக்கு போட்டியாக இது இருக்குமோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகின்றனர். ஆனால், பாதுகாப்புத்துறை தகவல்களை வழங்கி வரும் டிஃபன்ஸ் கேப்பிடல் இதழின் ஆசிரியர் என்.சி. பிபிந்திரா, இந்த இரு விஷயங்களையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புபடுத்த வேண்டாம் என்கிறார். சீன கப்பல் இலங்கை வர திட்டமிடுவதற்கும் அமெரிக்க கப்பல் இந்தியா வந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நம்புவதாக அவர் கூறுகிறார்.   "காட்டுப்பள்ளியில் கப்பல் சீரமைக்கும் வசதிகள் உள்ளன. அதற்காக மட்டுமே அமெரிக்க கப்பல் வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பே இந்தியாவும் அமெரிக்காவும் இதற்காக பரஸ்பர ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே அமெரிக்க கடற்படை கப்பல் இந்தியாவுக்கு வந்துள்ளது," என்கிறார் பிபிந்திரா. தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் ஒரு பின்னணியையும் அவர் குறிப்பிடுகிறார். "பசிஃபிக் பிராந்திய பாதுகாப்பு என்ற ரீதியில் இந்த விஷயத்தை அணுகினால், இந்தியா, அமெரிக்காவுக்கு இடையேயான ஒத்துழைப்பு இந்த போர்க்கப்பலின் வருகை மூலம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்திய பசிஃபிக் பிராந்தியத்தில், பிற ஜனநாயக நாடுகளுக்கு சீனாவிடமிருந்துதான் அச்சுறுத்தல் வருகிறது. அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் அமெரிக்க கப்பல் சீரமைப்புப் பணி இந்தியாவில் நடப்பது ஒரு முக்கிய நகர்வாக இருக்கும். அதே சமயம் சீன கப்பல் வருகையுடன் அமெரிக்க போர்க்கப்பல் வருகையை நேரடியாக தொடர்புபடுத்த முடியாது. ஏனென்றால் இது நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடக்கும் தற்செயலான நிகழ்வு," என்கிறார் அவர். 'இந்திய கப்பல் கட்டுமான திறன் அதிகரித்துள்ளது'     படக்குறிப்பு, சென்னை காட்டுப்பள்ளிக்கு அமெரிக்க கப்பல் வந்துள்ள நாளை பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும் என்கிறார் இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார். "இந்தியாவின் கப்பல் கட்டுமான திறனும், சீரமைக்கும் திறனும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. இந்திய கடற்படைக்கு தேவையான 42 போர்க்கப்பல்களில் 40 கப்பல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. இது இந்திய கப்பல் கட்டுமானத் திறன்கள் வளர்ந்து வருவதை காட்டுகிறது. அதேபோல அமெரிக்க கப்பல் இங்கு சீரமைப்பு பணிகளுக்கு வருவது இந்தியா கப்பல் கட்டுமானத்திலும் கப்பல்கள் பராமரிப்பிலும் வளர்ந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது." நட்பு நாடுகளுக்கு கப்பல் கட்டும் பணிகள் இந்தியாவில் பரவலாக நடைபெற்று வருகின்றன. எனவே வர்த்தக ரீதியாக பார்க்கப் போனால் கப்பல் கட்டுமான சந்தையில் இந்தியாவிற்கு இது முக்கிய இடத்தை வழங்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும். சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் கப்பல் கட்டுமானத்தில் முன்னணி வகிக்கின்றன. இனி இந்தியாவும் நவீன கப்பல்களை கட்டமைக்கும் நாடுகளின் பட்டியலில் விரைவில் சேரும்." என்கிறார் பிபிந்திரா. இந்தியாவில் இருக்கும் ஆறு முக்கிய கப்பல் கட்டுமான தளங்களின் மூலம் நாடு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டி வருகிறது. இந்த தகவலை சென்னை நிகழ்வின்போது பதிவு செய்தார் இந்திய பாதுகாப்புத்துறை செயலர் அஜய் குமார். இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் "இந்த மாதிரியான வெளிநாட்டு கப்பல்களின் வருகைகள், ஓரிரு நாட்களுக்கு முன்னதாக திட்டமிடப்படும் ஒரு நடவடிக்கை அல்ல. எனவே இந்தியாவில் அமெரிக்க கப்பலும், இலங்கையில் சீன கப்பல் உத்தேச வருகையும் தற்செயலாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்த இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது," என்கிறார் இந்திய விமான படையின் முன்னாள் உயரதிகாரியான ஏர் வைஸ் மார்ஷெல் (ஓய்வு) கபில் கக். தென் சீன கடல் பகுதியில் தனது நட்பு நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் பிராந்தியம், தைவான் போன்றவற்றில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் கால்பதிக்க வேண்டும் என்ற தமது நெடுநாள் நோக்கத்தை சீனா நிறைவேற்ற பல வழிகளில் முயன்று வருகிறது. அமெரிக்கா, இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்திய குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது கையெழுத்தானது. அதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு போக்குவரத்து பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி இரு நாடுகளும் பரஸ்பரம் அவற்றில் உள்ள விமான தளங்கள் மற்றும் துறைமுகங்களில் உள்ள சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம், எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். இது இந்திய - அமெரிக்க கடற்படை கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும் ஒரு ஒப்பந்தமாகும் என்கிறார் கபில் கக். "அமெரிக்க கப்பலின் வருகை வெறும் ஒரு சீரமைப்பு பணி இதற்கும் உளவுப் பார்த்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இலங்கை வரும் சீன கப்பல் உளவு தகவலை சேகரிக்கும் ஒரு கப்பல். இலங்கை துறைமுகத்தை ஒட்டியுள்ள துறைமுகங்கள் குறித்த பல்வேறு தகவல்களை அதனால் சேகரிக்க முடியும்." என்கிறார் அவர். "சீன கப்பல் சீரமைக்கும் பணிகளுக்காக இலங்கை வருவது என்றால் அதில் எந்த ஆட்சேபனையும் இருக்காது. சீனா இதற்கு முந்தைய காலங்களில் நீர் மூழ்கி கப்பல்களை அனுப்பியது. தற்போது உளவு கப்பலை இலங்கை துறைமுக பகுதியில் நிறுத்த திட்டமிட்டுள்ளது. இலங்கையின் நெருக்கடி காலத்தில் இந்தியா அத்தனை உதவிகளை செய்ததற்கு மத்தியிலும் தனது துறைமுகத்தில் ஒரு சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா அதனை நிச்சயம் அனுமதிக்காது." என்றார் கபில் கக். யுவான் வாங் - 5 கப்பலை இலங்கையில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி சீனாவிடம் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் இலங்கை அதிகாரிகளிடம் இது குறித்து பேச வேண்டும் என சீனா தற்போது தெரிவித்துள்ளது. சந்தேகம் என்ன?   பட மூலாதாரம்,US NAVY உலகின் பெரும் வல்லரசுகளாக கருதப்படும் முதல் மூன்று நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளன. இதில், இந்த மூன்று நாடுகளுடன் இணக்கமான வர்த்தக உறவை இந்தியா பேணி வருகிறது. மறுபுறம், சீனாவும், ரஷ்யாவும் நெருங்கிய கூட்டாளிகளாகவும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் நெருக்கமான உறவையும் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு ரஷ்யா, யுக்ரேன் இடையே ஏற்பட்ட போர் தீவிரம் அடைந்த பிறகு ரஷ்ய சார்பு செயல்பாடுகளை இந்தியா குறைத்துள்ளது. ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் பாதுகாப்புப்படைகளுக்கான ஆயுதங்களின் எண்ணிக்கையும் குறைந்தன. தற்போது பிரான்ஸிடம் இருந்து ரஃபால் விமானம், இஸ்ரேலிடம் இருந்து நவீன இயந்திர துப்பாக்கிகள், அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம் போன்ற செயல்பாடுகளில் இந்தியா அதிக அக்கறை காட்டி வருகிறது. "இந்தப் பின்னணியில் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் சீனா, இந்தியாவுக்கு வெகு அருகே உள்ள இலங்கையில் செல்வாக்கை செலுத்தும் போக்கை அமெரிக்கா விரும்பாமல் இருக்கலாம் என்ற கருத்து பொதுவாகவே நிலவுகிறது. அந்த வகையில், இலங்கைக்கு நட்பு நாடாக விளங்கும் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்க முயலலாம். அதன் மூலம் சீனாவுக்கு சவாலாக இந்திய பெருங்கடல் களத்தில் அமெரிக்கா இருப்பதை காட்டிக் கொள்ள அந்த நாடு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்திருக்கலாம்," என்று பாதுகாப்புத்துறை உளவு வட்டாரங்களில் கூறப்படுகிறது. காரணம், சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு முன்பே திட்டமிட்டபடிதான் அமெரிக்க கடற்படை கப்பல் வந்துள்ளதாக கூறப்பட்டாலும், அந்த கப்பல், இத்தனை நாட்களாக எங்கு இருந்தது, எந்த கடல் வழியைப் பயன்படுத்தி அது இந்திய பெருங்கடலுக்குள்ளும் பிறகு வங்காள விரிகுடாவுக்கும் வந்தது போன்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த தகவல்களை இந்திய பாதுகாப்புத்துறையிடம் இருந்து கேட்டுப்பெற பிபிசி தமிழ் முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை. "இந்தியா அன்றும் இன்றும்" கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெர்ஷிய வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வழியாக இந்தியாவின் லட்சத்தீவுகளின் மேற்குப் பகுதிக்கு 'கடல் போக்குவரத்து நடவடிக்கை' என்ற பெயரில் அமெரிக்க போர்க்கப்பலான ஜான் பால் ஜோன்ஸ் (டிடிஜி 54) வருவதாக அறிவித்தபோது, தற்போது காட்டும் இணக்கமான அணுகுமுறையை அன்றைக்கு இந்தியா காட்டவில்லை. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த அறிவிப்பை அமெரிக்க போர்க்கப்பல் வெளியிட்டபோது, லட்சத்தீவுகளுக்கு 130 கடல் மைல் தூரத்தில் அது இருந்தது. ஆனால், அமெரிக்காவின் இந்த அணுகுமுறையை இந்தியா அப்போது எதிர்பார்க்கவில்லை. உள்நாட்டிலும் அந்த போர்க்கப்பல் நுழைவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, "இரு தரப்பிலும் ராணுவ ஒத்துழைப்பு வலுப்பெற்று வந்தாலும், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பல் முன்னனுமதியின்றி வர உத்தேசித்திருப்பது சர்வதேச கடல் சட்டம் தொடர்பான ஐ.நா சாசனத்துக்கு உகந்ததாக இல்லை," என்ற கவலையை இந்திய வெளியுறவுத்துறை அமெரிக்காவிடம் ராஜீய முறையில் தெரிவித்தது. அமெரிக்கா கோரிய சர்வதேச கடல் பயண நடவடிக்கை உரிமை   பட மூலாதாரம்,US NAVY கடைசியில், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் பின்வாங்கிச் சென்றது. புறப்படும் முன்பாக அந்த போர்க்கப்பல் தளபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் (டிடிஜி 53) இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள், லட்சத்தீவுகளுக்கு மேற்கே சுமார் 130 கடல் மைல் தொலைவில், இந்தியாவின் முன் அனுமதியைக் கோராமல், சர்வதேச சட்டத்திற்கு இணங்க, தனது வழிசெலுத்தல் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பயன்படுத்தியது."   பட மூலாதாரம்,GETTY IMAGES "ஆனால், இந்தியா தனது பிரத்யேக பொருளாதார மண்டலம் அல்லது கடல் பகுதியில் ராணுவ ஒத்திகைகள் அல்லது நடமாட்டத்துக்கு முன் அனுமதி தேவை என்று கூறியுள்ளது. இந்த கூற்று சர்வதேச சட்டத்திற்கு முரணானது. இந்த சுதந்திரமான வழிசெலுத்தல் செயல்பாடு ("FONOP") என்பது, சர்வதேச சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடல் வழி உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டபூர்வ பயன்பாடுகளைக் கொண்டது. அதை மீறும் வகையில் இந்தியாவின் கடல்சார் உரிமை கோரல்கள் உள்ளன" என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்திய - பசிஃபிக் கடல் பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் அன்றாடம் செயல்படுகின்றன. அவற்றின் அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடத்தில் அமெரிக்கா பறக்கும், பயணம் செய்யும் மற்றும் செயல்படும் என்பதை இது உணர்த்துகிறது. நாங்கள் கடந்த காலத்தில் செய்ததைப் போலவே, வழக்கமான வழிசெலுத்தல் செயல்பாடுகளை (FONOPs) மேற்கொள்கிறோம். FONOP என்பது, ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றியதோ அதை வைத்து அரசியல் செய்வதோ அல்ல," என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய கடல் சட்டம் என்ன சொல்கிறது? "இந்திய சட்டத்தின் கீழ் - பிராந்திய கடல் பகுதி, பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் பிற கடல்சார் மண்டலங்கள் சட்டம், 1976-இன்படி அனைத்து வெளிநாட்டு கப்பல்களும் (நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற நீருக்கடியில் இயங்கும் வாகனங்கள் உட்பட) இந்தியாவின் அமைதி, நல்ஒழுங்கு அல்லது பாதுகாப்புக்கு பாதகமாக இல்லாத வரையில் பிராந்திய கடல் வழியாக செல்லும் உரிமையை அனுபவிக்கலாம். ஆனால், அவ்வாறு வரும் கப்பல்கள் இந்திய அரசின் முன்னனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்," என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அமெரிக்க போர்க்கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் வந்தபோது காட்டிய ஆட்சேபம், இம்முறை அதேபோன்ற வேறொரு கப்பல் 'பழுதுபார்ப்பு' என்ற பெயரில் சென்னைக்கு வந்தபோது, அது மேக் இன் இந்தியா திட்டப்படி உருவான கப்பல் கட்டுமான தளத்தின் திறனுக்கு கிடைத்த வாய்ப்பு என்று இந்தியா கூறியிருக்கிறது. இந்த ஒப்பீடுகளைத்தான் விவரம் அறிந்த பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி தங்களுடைய சந்தேகத்தை எழுப்புகிறார்கள். சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல் - இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல் - இந்திய பெருங்கடலில் உலக அரசியல் - BBC News தமிழ்
    • யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக சீனாவின் 'யுவான் வாங் 5' (Yuan Wang 5) எனும் கப்பல் - இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் கப்பல் எனக் கூறப்படுகின்ற போதும், இதை ஓர் உளவுக் கப்பலாகவே இந்தியா பார்க்கிறது. இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. அப்படியென்றால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் என்பது இந்தியாவின் புகாராக உள்ளது. எதிர்வரும் 11ஆம் தேதி இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து, அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பின்னர் ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த துறைமுகம் 2017ஆம் ஆண்டு சீனாவுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், யுவான் வாங் 5 கப்பல் - ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு, கொழும்பிலுள்ள சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு ஆகஸ்ட் 5ஆம் தேதி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்ததது. இந்த விடயம் தொடர்பாக மேலதிக ஆலோசனைகள் நடைபெறும் வரையில், மேற்படி கப்பலின் வருகையை தள்ளிப்போடுமாறு இலங்கை அதில் கேட்டுள்ளது. சீனா எதிர்வினை இந்த நிலையில் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், திங்களன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க அதற்கு உரிமை உள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பானது இரு நாடுகளாலும் சுயாதீனமாகத் தெரிவுசெய்யப்பட்டு பொதுவான நலன்களைப் பூர்த்தி செய்கிறது. அது எந்த மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை. பாதுகாப்பு பிரச்னைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது" என்று வாங் கூறினார்."சீனாவின் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான வழியில் பார்க்கவும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது" என்றும் வாங் தெரிவித்தார். பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று வாங் கூறினார், இலங்கையின் இந்த நடவடிக்கை இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகளுக்கு காரணம் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இலங்கைக்கு தற்போதைய நிலையில் அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. இலங்கை தனது மொத்த வெளிநாட்டுக் கடனில் 10 வீதத்துக்கும் அதிமான தொகையினை சீனாவுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையில் கணிசமானவை ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம், மத்தள விமான நிலைய உருவாக்கம், கொழும்பிலுள்ள தாமரைக் கோபுர கட்டுமானம் ஆகியவற்றுக்கு செலவிடப்பட்டுள்ள போதும், அவற்றிலிருந்து சொல்லிக் கொள்ளும்படியாக வருமானங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்பது ஒருபுறம். மறுபுறமாக, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடான இந்தியா - எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்டவற்றைக் கொள்வனவு செய்வதற்காக மிகவும் தேவையான நேரத்தில் சுமார் 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கியுள்ளதோடு, அரிசி மற்றும் பால் மா போன்றவற்றினை அன்பளிப்பாகவும் கொடுத்து உதவியுள்ளது. இந்தப் பின்னணியில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் அனுமதிக்கப்பட்டால், அது இலங்கை - இந்திய உறவில் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. அவை தொடர்பில் ஆராய்கிறது இந்தக் கட்டுரை. உறவை இந்தியா கைகழுவி விடாது "சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதில் இந்தியாவுக்கு ராணுவ ரீதியான நெருக்கடிகள் உள்ளன," என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்.     படக்குறிப்பு, பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் வெளியுறவு என்பது தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது எனக் கூறும் அவர், "தற்போதைய நெருக்கடியில் பாரிய அளவு பொருளாதார உதவிகளைச் செய்த இந்தியாவுக்கு எதிரான அனுகுமுறையை இலங்கை மேற்கொள்கிறது எனும் அவதானிப்பு எல்லோரிடமும் உள்ளது" எனவும் குறிப்பிடுகின்றார். பிபிசி தமிழுடன் பேசிய கணேசலிங்கம்; "சீனாவின் பக்கம், தான் சாய்ந்து கொள்ளப் போவதாக காண்பிப்பதன் ஊடாக, இதுவரையில் இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகளை இலங்கை எவ்வாறு கையாண்டதோ, அதே போன்றதொரு தளத்தைத்தான் - சீனக் கப்பலின் வருகை திறந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கின்றார். "சீனாவுடன் தனக்குள்ள உறவை முன்னிறுத்திக் கொண்டு, தன்னுடைய அரசியலை கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல், வெற்றிகரமாக இலங்கை நகர்த்திக் கொண்டு வருகிறது. எனவே, சீனக் கப்பலின் இந்த வருகை இலங்கைக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் அமைந்து விடலாம்" எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.   பட மூலாதாரம்,PMD   படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க இந்தியாவின் புகார்கள் மற்றும் எதிர்ப்புகளையெல்லாம் மீறி, சீனக் கப்பலை ஹம்பாந்தோட்ட துறைமுகத்துக்குள் நுழைய இலங்கை அனுமதிப்பது, இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், இலங்கையுடனான உறவை ஒட்டுமொத்தமாக கைகழுவி விடும் வேலையை இந்தியா மேற்கொள்ளாது எனவும் பேராசிரியர் கணேசலிங்கம் கூறுகின்றார். "இலங்கையை முற்றாக நிராகரிக்கும் தீர்மானமொன்றுக்கு இந்தியா செல்லும் என நான் நினைக்கவில்லை. இலங்கையுடன் முரண்பட்ட நிலையை இந்தியா வைத்துக் கொள்ளாது. அதாவது இலங்கையுடன் பகைத்துக் கொண்டு இலங்கைத் தூதுவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை எல்லாம் இந்தியா செய்யாது". "இலங்கை அமைந்துள்ள பிராந்தியத்தை தொடர்ச்சியாக தனது செல்வாக்கினுள் வைத்திருக்க வேண்டும் எனும் அடிப்படையிலும், இலங்கையுடன் உறவை வைத்திருக்க வேண்டும் எனும் எண்ணத்திலும் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு சூழலுக்குள் இலங்கையின் எல்லைப் பகுதிகள் இருக்கின்றன. அதனால் இலங்கையுடன் நெருக்கடிகளை இந்தியா ஏற்படுத்திக் கொள்ளாது". "இன்னொருபுறம் இந்தியா பகைத்துக் கொள்ளுமளவுக்கு - இலங்கை என்பது ரஷ்யா அல்லது சீனா போன்ற வலுமிக்கதொரு தேசமும் கிடையாது," என்றும் அவர் விவரி்த்தார். பகைமையை ஏற்படுத்தும் வகையில் ரணில் நடந்து கொள்ள மாட்டார் இதன்போது, இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ராஜதந்திர அனுகுமுறைகள் குறித்த, தனது அவதானங்களையும் பேராசிரியர் வெளியிட்டார். "இலங்கையின் தற்போதைய நெருக்கடியில், ஏனைய நாடுகளைப் பகைத்துக் கொள்ளும் வகையிலான சூழ்நிலையை - இலங்கை ஆட்சியாளரொருவர் உருவாக்கிக் கொள்ள மாட்டார். அதுவும் இலங்கையின் மற்றைய ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும் போது, ரணில் விக்ரமசிங்க அவ்வாறு பிரச்னைகளை ஏற்படுத்தவே மாட்டார். அவர் ராஜதந்திரியாகவும் தலைவராகவும் லிபரல் (தாரண்மை) முகம் கொண்ட ஒருவராகவும் கடந்த காலங்களிலும் அறியப்பட்டுள்ளார். எனவே, மேற்கினையும் இந்தியாவையும் பகைக்கும் வகையில் - சீனக் கப்பல் விவகாரத்தை அவர் பயன்படுத்த மாட்டார்" என, நம்பிக்கை வெளியிடுகின்றார் பேராசிரியர் கணேசலிங்கம். ஹம்பாந்தோட்ட துறைமுகம் 99 வருடக் குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளமையை நினைவுபடுத்திய பேராசிரியர், "அந்த உடன்படிக்கையின் பிரகாரம் சீனக் கப்பல் - ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதைத் தடுத்து நிறுத்துவற்கான வாய்ப்புகள் இல்லை" என்கிறார். ஒரு துறைமுகத்தைக் குத்தகைக்கு எடுக்கும் உடன்படிக்கை என்பது, அங்குள்ள கடற் பகுதியை தனது செல்வாக்கினுள் குத்தகைக்குப் பெறும் நாடு வைத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் கொண்டதாகவே கருதப்படும் எனவும் குறிப்பிடுகின்றார்.   பட மூலாதாரம்,RANIL   படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க இதேவேளை, இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2017ஆம் ஆண்டு பிரதமராகப் பதவி வகித்த அரசாங்கக் காலத்தில்தான் - ஹம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கப்பட்டமையினையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 2014ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி இலங்கைக்கு வந்தபோது, சீன நீர்மூழ்கிக் கப்பலொன்று இலங்கைக்கு வந்தமையினை நினைவுபடுத்திய பேராசிரியர் கணேசலிங்கம்; அப்போதும் இந்திய எதிர்ப்புக் கிளம்பியதாகவும் அச்சமயம், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாது என அப்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் கூறியிருந்தனர் எனவும் குறிப்பிட்டார். "கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக சீனா மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது என புலனாய்வு ஊடகங்கள் கூறுகின்றன. அவை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், கம்போடியா துறைமுகம், மியன்மார் சிட்வே துறைமுகம் ஆகியவையாகும். அந்த திட்டத்தை சீனா நடைமுறைப்படுத்துகிறதென்றால், அதற்காகவும் யுவான் வாங் 5 கப்பலின் வருகை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி அமைந்திருக்கக் கூடும். அந்த வகையிலும், இந்தக் கப்பலின் வருகை இந்தியாவுக்கும் அமெரிக்காவும் நெருக்கடியை ஏற்படுத்தும் விடயமாகவே உள்ளது".. "ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கான அனுமதியை சீனாவின் இந்தக் கப்பலுக்கு இலங்கை வழங்குவதென்பது கத்திமுனையில் நடப்பதற்கு ஒப்பான விடயம்தான். இதில் நெருக்கடிகள் ஏற்படுமாக இருந்தால் அது இலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்". "இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படும் போது - தமிழர் தொடர்பானதும், வடக்கு கிழக்கு பிரச்னைகளையும் இந்தியா தூக்கிப் பிடிப்பது வழமையாகும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிடமும் இந்தப் பழக்கம் உள்ளது. அப்படிச் செய்து இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அந்த நாடுகள் முயற்சிக்கும்" எனவும் பேராசிரியர் கணேசலிங்கம் கூறுகின்றார். ரணில் வஞ்சம் தீர்க்கிறார் இது இவ்வாறிருக்க, யுவான் வாங் 5 சீனக் கப்பல் விவகாரத்தில், இந்தியாவை வஞ்சம் தீர்க்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார் என்று, 'தமிழன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஆர். சிவராஜா தெரிவிக்கின்றார்     படக்குறிப்பு, ஆர். சிவராஜா "ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகுவதை இந்தியா விரும்பவில்லை. சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவை வழங்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தமையின் பின்னணியில் இந்தியா இருந்தது. அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தியாவை வஞ்சம் தீர்க்கும் வகையில், சீனக் கப்பல் விவகாரத்தில் ரணில் நடந்து கொள்கிறார்" எனவும் பிபிசியிடம் பேசிபோது சிவராஜா கூறினார். "சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் இலங்கை வந்தால், ரணிலை இந்தியா முழுமையாகவே நம்பாத நிலைமையொன்று உருவாகும். மறுபுறமாக சீனாவுடனான இலங்கை உறவு புதுப்பிக்கப்படும். இதனையடுத்து இலங்கைக்கு சீனா உதவிகளைச் செய்யும்" எனவும் அவர் குறிப்பிடுகின்றார். யுவான் வாங் 5 கப்பலின் இலங்கை வருகையானது, இலங்கை - இந்திய உறவில் விரிசலினை உருவாக்கும் என்றும், ஆனால் இந்தியா அதனைக் காட்டிக் கொள்ளாது எனவும் கூறுகின்ற சிரேஷ்ட பத்திரிகையாளர் சிவராஜா; "அடுத்த தேர்தலில் தமக்கு ஆதரவானவர் எனக் கருதும் ஒருவரை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு இந்தியா முயற்சிக்கும்" என்கிறார். இருந்தாலும் தனது பதவிக் காலத்துக்குள் இந்தியாவுக்கு ஆதரவாக ரணில் செயற்பட்டால் நிலைமை மாறக் கூடும் எனவும் அவர் கூறுகிறார். சீன சார்பு - விமல் அணியை வளைப்பதற்கான தந்திரம் இதேவேளை, ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்று சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்படுவதாகக் கூறிக் கொள்ளும் விமல் வீரவன்ச அணியினரை தனது பக்கம் வளைத்துப் போடுவதற்காகவே, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பக்கமாக தான் சாய்ந்து கொண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க காட்டிக் கொள்கிறார்" எனவும் சிவராஜா தெரிவிக்கின்றார். மேலும், "விமல் அணியினர் சீனா மற்றும் ரஷ்யா சார்பானவர்கள் எனவும், சீனா சில விடயங்களை ரணில் விக்ரமசிங்கவுக்கு விமல் தரப்பு ஊடாகவே கூறியுள்ளது" என்றும் சிவராஜா குறிப்பிடுகின்றார். அத்துடன், "விமல் அணியினரை தனது பக்கம் ரணில் விக்ரமசிங்க உள்வாங்கிக் கொண்டால், சிங்கள மேலாதிக்க சக்திகள் ரணிலுக்கு எதிராக கிளம்பாது. ரணிலின் ரஷ்ய மற்றும் சீன சார்பு என்பது, விமல் அணியினரை அரசாங்கத்தின் உள்ளே எடுக்கும் வரையில்தான் இருக்கும். அதன் பிறகு ரணில் தனது விருப்பப்படி வேலைகளைச் செய்யத் தொடங்கி விடுவார்" எனவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா கூறுகிறார். சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா? - BBC News தமிழ்