Jump to content

கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

18 மே 2022, 04:32 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்
 

சிங்களர் - தமிழர்

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறந்த தமிழர்களுக்கு கொழும்பு காலிமுகத் திடல் போராட்டப் பகுதியில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வு நடத்தி வருகிறார்கள்.

கடந்த காலங்களில் இத்தகைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கை வடகிழக்கில் மட்டுமே நடத்தப்படும் என்பது மட்டுமல்ல. இதற்கு அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பும் இருக்கும். இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்புகள் ஏதுமில்லை என்பதுமட்டுமல்ல. வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை நடத்துகிறார்கள்.

அது நடக்கும் இடமும் மிக முக்கியமானது. தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள இந்த காலிமுகத் திடல் பகுதியில் கடந்த காலங்களில் ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி செயலகம் அருகிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடக்கிறது.

தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நடக்கும் இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட்டு, இனம் கடந்து மக்கள் அந்த நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். ஸ்தூபி அருகே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61489633

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

 

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

 

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

 

பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.

 

அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

 

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலேயே இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

https://www.madawalaenews.com/2022/05/blog-post_751.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 

 

11 minutes ago, colomban said:

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இப்படியான நிகழ்வை, கொழும்பில்  நடாத்திய... சிங்கள இளைஞர்களுக்கு நன்றி.   🙏

அவுஸ்திரேலியாவில், துவேசத்தை காட்டிய சிங்களவர், இந்தச் செய்தியை கவனிக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில்... முதல் முறையாக, கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலேயே இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

colo-600x400.png

colombo-600x375.png

https://athavannews.com/2022/1282430

  • Like 1
Link to comment
Share on other sites

8 minutes ago, தமிழ் சிறி said:

பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

மதவெறி இனவெறி அற்ற ஒன்றுகூடல் நிகழ்வும், நினைவேந்தலும், நல்லதொரு ஆரம்பம்.

இடையில் வந்தன கழியட்டும். முன்புபோல் சவரக்கடைகள் முதல் பார வண்டிகளோடு வீடுகள்வரை, சகல மதங்களின் கடவுள்களும் இணைந்து ஒன்றாகித் துலங்கட்டும்.🙏  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“මම කැඳ ඉල්ලා යද්දී අත්බෝම්බය වැටී පිපිරුණා. තුවාල ලැබූ පුද්ගලයෙකුගේ එක් මාංශ පේශියක් මගේ පිගානට වැටුණා. විසී කරොත් ආයේ ලැබෙන්නේ නැති නිසා එය අරන් විසි කරලා මම කැඳ ටික බීවා.. 
- අවසන් සටනින් දිවි ගලවා ගත් 14 හැවිරිදි දැරිය (2009)
 Via සුරේන් කාර්තිකේසු (මාධ්‍යවේදියා)

"கஞ்சி வேண்டிக்கொண்டு போகும் போது எறிகணை வீழ்ந்து வெடித்தது. என்ர சட்டிக்குள்ள காயமடைந்தவரின் தசைத்துண்டு ஒன்று விழுந்திட்டுது. எறிந்தால் திரும்ப கஞ்சி வேண்ட முடியாது என்று  தசைத்துண்டை வெளில போட்டிட்டு தான் குடித்தேன்.” - இறுதிப்போரில் உயிர் தப்பிய 14 வயது சிறுமி(2009)
Via Suren Karththikesu (முள்ளிவாய்க்காலிலிருந்து மீண்ட ஊடகவியலாளர்)

 

இதனை தமது முகநூலில் பகிர்ந்த காலிமுகத்திடல் போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்கும்  சிங்கள திரைப்பட நடிகர்கள் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும்  நன்றி. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வுக்கு போன ஒருவரின் கருத்து:
மற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிடுகையில் பங்கேற்றவர்களின்  எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆனால் இது ஒரு சிறிய தொடக்கமாகும். இது ஒரு பெரிய நிலைக்கு வளரும் என்றும், சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.
இந்த அரங்கம்  இல்லாமல், இதை நம்மால் சாதிக்க முடியாது .

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரிய மாற்றத்தை, ஏற்றுகொள்ளலை ஏற்படுத்த உயிரை பணயம் வைத்து அயராது உழைத்த தமிழ் உள்ளங்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். ஆனால் இதை சகுனி  இந்தியாவும், சிங்கள இனவாதிகளும் இலகுவில் சகித்துக்கொள்ள மாட்டார்கள். மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் சம்பந்தப்பட்டவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, people standing and outdoors

 

May be an image of 3 people and flower

 

May be an image of 2 people, people standing and outdoors

 

May be an image of food

 

May be an image of 1 person and outdoors

 

May be an image of 4 people, people standing and outdoors

 

May be an image of 14 people, people standing and outdoors

 

May be an image of 6 people, people standing and outdoors

 

May be an image of 5 people, people standing and outdoors

 

May be an image of 1 person, fire and outdoors

 

May be an image of 4 people and people standing

 

May be an image of 1 person, standing and body of water

 

May be an image of 4 people, people standing and footwear

 

May be an image of 6 people, people standing and outdoors

 

May be an image of 5 people, people standing, sky, beach, crowd and ocean

 

May be an image of 4 people, people standing and outdoors

 

May be an image of 2 people, people standing and indoor

 

May be an image of 10 people, people sitting, people standing and outdoors

 

May be an image of 9 people, people standing, fire and outdoors

காலி முகத்திடல்,  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் படங்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய குழுவினர் தான்

ஆனாலும்  மாற்றத்தின்  முதல்படியில் ஒருவரே வரக்கூடும்

நல்ல  விடயம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை வழமையாக நடக்கும், யுத்த வெ(ற்)றி கொண்டாட்டம் நடக்கும் அசுமாத்தமும் இல்லை.

நடாத்துவதற்கான, முகாந்திரமும் அடிபட்டு போயுள்ளது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திய சிங்கள மக்களின் மனநிலை என்ன?

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

முள்ளிவாய்க்கால்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில், தென் பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்களிடம் இருந்து தமிழ்த் தரப்புக்கு ஆதரவு வந்ததில்லை என்ற உணர்வு இருந்தது. ஆனால், இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிங்கள மக்களில் இருந்தே குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களுடன், சிங்கள மக்களும் இன்று கைக்கோர்த்து காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தினர்.

பிரிவினைவாத அடிப்படையில் நடந்த போரின் வடுக்களுக்கு, தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் சிங்கள மக்களும் தமது ஆதரவை தமிழர்களுக்கு வெளிப்படையாகவே இன்று வெளியிட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த பாதிப்புக்கள், தமிழ் அரசியல் கைதி விவகாரங்கள், படுகொலைகள் ஆகியவற்றுக்கு நீதி கோரி குரல் தமிழர்களோடு இணைந்து சிங்களர்களும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் ஆகின்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர வேறு எந்தவொரு பகுதியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவில்லை.

மாறாக மே மாதம் 19ம் தேதி தேசிய படைவீரர்கள் தினம் என்ற ஒன்றை நடத்தி, ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்களை இலங்கை அரசாங்கம் கொண்டாடி வந்தது.

எனினும், இந்த ஆண்டு தேசிய படைவீரர்கள் தினத்தை கொண்டாடுவதற்கு, தென் பகுதி வாழ் மக்கள் முற்றுபுள்ளி வைக்கும் வகையிலான நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

முள்ளிவாய்க்கால்

இந்நிலையில், காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்ற சிங்களர்களுக்கு தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் என்ன மாதிரி கருத்து கருத்து உள்ளது என்பதை அறிய அவர்களோடு பிபிசி தமிழ் உரையாடியது.

இலங்கையில் 30 வருட கால யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அருட் சகோதரி தீபா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

'30 ஆண்டுகள் துன்பம் அனுபவித்த, மரணித்த மக்களை நினைவு கூர்வது உரிமை'

''30 ஆண்டுகளுக்கு மேல் துன்பம் அனுபவித்த, மரணித்த அன்புக்குரிய அந்த மக்களை, நினைவு கூர்வது எமது உரிமை. இந்த உரிமையையே எம்மிடமிருந்து பறித்துள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் மிக உற்சாகமாக வெற்றி கொண்டாட்டமாக இதனை கொழும்பில் நினைவு கூர்ந்தார்கள். போர் வெற்றியாகவே அதைக் கொண்டாடினார்கள். யுத்தம் செய்து அழித்தோம் என்ற உற்சவத்தையே கொழும்பில் கொண்டாடினார்கள்;. அவ்வாறான உற்சவங்களை நடத்த முடியும். ஆனால், எமக்கு இன்று இதுதான் தேவைப்பட்டது.

உயிர் நீத்தவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் ஆகியோரை நினைவு கூர்வதே எமக்கு தேவைப்பட்டது. இது இன்று எமக்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமைகின்றது. நான் சிங்கள மக்கள் என்ற விதத்தில், இந்த சந்தர்ப்பத்திலேனும் கவலை அடைந்து மாத்திரம் போதாது. இதற்கு துன்பப்பட்டு மாத்திரம் போதாது. இந்த ஆண்டிலாவது அல்லது இந்த சந்தர்ப்பத்திலாவது அந்த தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அச்சம், சந்தேகம் அடைந்து மறைந்து செய்ய வேண்டிய ஒன்று அல்ல இது.

 

அருட்சகோதரி தீபா

 

படக்குறிப்பு,

அருட்சகோதரி தீபா

இது பகிரங்கமாகவே செய்யக்கூடிய நினைவு நிகழ்வாக இருக்க வேண்டும். சிங்கள மற்றும் இளைய சமூகம் அனைவரும் ஒன்றிணைந்து அங்கு இடம்பெற்ற அநீதிகளுக்கும், அழிவுகளுக்கும் நாம் குரல் எழுப்ப வேண்டும். குரல் எழுப்பி மாத்திரம் போதாது. துன்பப்பட வேண்டும். அவ்வாறு துன்பப்பட்டால் மாத்திரமே உண்மையான நல்லிணக்கத்தை நோக்கி எம்மால் நகர முடியும். நல்லிணக்கத்தின் பேரில் நாம் பல்வேறு விடயங்களை செய்கின்றோம். எனினும், அதை தமிழ் மக்களினால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை" என அவர் கூறுகின்றார்.

யுத்தம் காலத்தில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படையாக அரசாங்கம் கூறி, அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என அருட் சகோதரி தீபா, குறிப்பிடுகின்றார்.

''அவர்கள் இழந்த அந்த மக்கள், அந்த அன்புக்குரியவர்களை ஏதோ ஒரு எதிர்பார்ப்புடனேயே ராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். அப்படியென்றால், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது?. அவர்களை கொலை செய்திருந்தால், அவர்களை கொலை செய்து விட்டோம் என்று பகிரங்கமாகவே கூற வேண்டும். எதற்காக கொலை செய்தோம் என்பதையும் அவர்கள் கூற வேண்டும்.

அதுமாத்திரமல்ல, கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த விடயங்கள் கட்டாயம் நடந்தேற வேண்டும். மறுபுறத்தில் நட்டஈடு வழங்குவதாக கூறுவதை விடவும், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இந்த நட்டஈட்டையும் வழங்க வேண்டும். அதையும் விட, நேர்ந்த சம்பவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொண்டு, அதற்கான பொறுப்பை ஏற்று, அதற்கு நீதி, நியாயம் கட்டாயம் கிடைக்க வேண்டும். அதனை செய்யக்கூடிய மிக சிறந்த காலம் இது. இதுவரை காணப்பட்ட தடைகள் ஏதோ ஒரு வகையில், இந்த போராட்டத்தின் பெறுபேறாக இல்லாது போயுள்ளது. ஏதோ ஒரு வகையில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை தவறவிடாமல் இருப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் என்ற நான் அவதானிக்கின்றேன்." என அருட் சகோதரி தீபா தெரிவிக்கின்றார்.

ஒரு லட்சத்து 44 ஆயிரம் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது? - குரல் எழுப்பும் சிங்கள இளைஞர்

 

அசங்க அபேரத்ன

 

படக்குறிப்பு,

அசங்க அபேரத்ன

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு லட்சத்து 44 ஆயிரம் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் அசங்க அபேரத்ன தெரிவிக்கின்றார்.

''இன்று 18ம் தேதி. மே மாதம் 18ம் தேதி என்பது எமது இதயங்களில் வேதனையை காணப்படுகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறக்கக்கூடாது, எமது நாட்டில் 30 வருட காலம் இனவாத யுத்தம் ஒன்று இருந்தது. தென் பகுதியில் ஏற்பட்ட சிவில் வன்முறைகளில் பெரும்பாலான எமது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டார்கள். பல்வேறு ஆபத்துக்களை சந்தித்தார்கள். அதேபோன்று தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக, வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் எமது தமிழ் மக்கள் பெருமளவில் கொலை செய்யப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், ராணுவத்திடம் சரணடைந்த சுமார் ஒரு லட்சத்து 44 ஆயிரம் எமது தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இலங்கை என்பது காணாமல் ஆக்கப்படுவோர் பட்டியலில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள நாடாக இருக்கின்றது. யுத்தம், அரசியல் வன்முறைகள், அரசியல் கலவரங்கள் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நாம் இன்று நினைவு கூர்கின்றோம். இவ்வாறான யுத்தம், வன்முறைகள் போன்ற இழிவான செயற்பாடுகள் இனியும் இந்த பூமியில் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே நாம் இன்று இந்த இடத்தில் நினைவு கூர்கின்றோம்.

இது வெற்றி கிடையாது. யுத்தத்தின் பின்னர் வெற்றி எதுவும் கிடையாது. ஏனெனில், எமது மக்கள் கொலை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட நாடொன்றில் யுத்தம் முடிவு என்பது வெற்றி கிடையாது." என அவர் குறிப்பிடுகிறார்.

தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்திய துப்பாக்கியை, ராஜபக்ஷ குடும்பம், தென் பகுதி மக்களை நோக்கி தற்போது திருப்பியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் அசங்க அபேரத்ன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கையில் எதிர்காலத்தில் யுத்தம், படுகொலை செய்தல், காணாமல் ஆக்குதல், கடத்தப்படுதல் போன்றவற்றை செய்யாதிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தாம் அழுத்தம் பிரயோகிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

''2009ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் யுத்தத்தை வெற்றிக் கொண்டதாக கூறிய ராஜபக்ஷ குடும்பத்தினர், அதே துப்பாக்கியை தற்போது தென் பகுதியிலுள்ள மக்களை நோக்கி திருப்பியுள்ளனர். கடந்த 9ம் தேதி அதே ராணுவத்தை கொண்டு இந்தப் போராட்டத்தை கலைக்க முயன்றார்கள். இது அவர்களின் வெற்றி மாத்திரமே தவிர, இது மக்களின் வெற்றி கிடையாது. வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் காணி பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை. அந்த மக்களுக்கு ஜனநாயக பிரச்சினை இன்றும் காணப்படுகின்றது. அந்த பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். இன்றும் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு சரியான குற்றச்சாட்டுக்கள் எதுவும் கிடையாது. வழக்கு எதுவும் இன்றி, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நினைவு கூர்தலின் ஊடாக, அரசாங்கத்திற்கு ஒரு தகவலை வழங்க விரும்புகின்றோம். அரசாங்கத்திற்கு இதனூடாக அழுத்தங்களை பிரயோகிக்கின்றோம். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்கான நட்ட ஈட்டை வழங்க வேண்டும். அதற்கு நீதி மற்றும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று, நாடு என்ற ரீதியில் மீண்டும் அவ்வாறான இழிவான யுத்தம், படுகொலை செய்தல், காணாமல் ஆக்குதல், கடத்தப்படுதல் போன்றவற்றை மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் செய்யாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த சந்தர்ப்பத்தில் நாம் அரசாங்கத்திற்கு அழுத்தமாக கூறிக் கொள்கின்றோம்" என்றார் அவர்.

தமிழர்களை கொலை செய்வது பரவாயில்லை என கூறியது சிங்கள பௌத்த இனவாதிகள் - பிரிட்டோ பெர்ணான்டோ

 

பிரிட்டோ ஃபெர்ணாண்டோ

 

படக்குறிப்பு,

பிரிட்டோ ஃபெர்ணாண்டோ

89 வன்முறை முதல் 2009 யுத்தம் முடிவு வரை பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவிக்கிறார்.

''மக்கள் செறிந்து காணப்படும் ஒரு பகுதியில் நீண்ட தினங்களுக்கு பின்னர் நாம் முள்ளிவாய்க்கால் சம்பவத்தை நினைவு கூர்கிறோம். இந்த நிகழ்வை அந்த பகுதியிலும் நினைவு கூர்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு இடையூறு காணப்பட்டது. கொழும்பில் இன்று மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நினைவு கூர்கின்றோம். காணாமல் ஆக்கப்படுவதில் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்த நாடு. நாம் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு ஒருவர் கொலை செய்துக்கொண்டோம். 70, 80களில் வடக்கில் போரை நடத்த பல காரணங்கள் கூறப்பட்டன. இதில் சாதாரண பொதுமக்கள் உயிரிழந்தார்கள். ராணுவத்தினர் உயிரிழந்தார்கள். இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், இடம்பெற்ற சம்பவங்களுக்கான நியாயத்தை பெற்றுக்கொடுக்க முன்னிற்க வேண்டும்.

எனினும், 'சிங்கள பௌத்த' என்ற ஒரு எண்ணத்தை சிங்கள இனவாதிகள் கொண்டு வந்தார்கள். வடக்கிலுள்ள தமிழ் மக்களை கொலை செய்து, காணாமல் ஆக்குவது பரவாயில்லை என கூறினார்கள். எனினும், 89ம் ஆண்டு இதே விதத்தில் அவர்களின் மக்கள், குழந்தைகள், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோர் அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்திற்காக கொலை செய்யப்பட்டார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 89ம் ஆண்டிலிருந்து இதற்காக முன்னின்று குரல் கொடுத்தாலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், நட்ட ஈட்டை பெறுவதற்கு 30 வருடங்கள் எமக்கு செலவிட வேண்டி ஏற்பட்டது.

அவ்வாறு பெற்றுக்கொண்டாலும், அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. இந்த நாட்டிலுள்ள எந்தவொரு முறையும் தமக்கு பதில் வழங்காது என வடக்கிலுள்ள தாய்மார் கூறுகின்றார்கள். எனினும், எமக்கு வேறு வழி கிடையாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் வந்தால், அரசாங்கத்தை சர்வதேசமே பாதுகாக்கும். கடன்களை வழங்கும், ஆயுதங்களை வழங்கும், ராணுவத்தை வழங்கும். அவ்வாறே கடந்த முறை யுத்தத்தையும் ஒடுக்கினார்கள்.

அதனால், தெற்கில் 89ம் ஆண்டு முதல் காணாமல் போனோரின் தாய்மார்களும் வடக்கிலுள்ளவர்களும் ஒன்றிணையாமல் இதனை வெற்றிக் கொள்ள முடியாது. ஏனென்றால், இந்த அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். எனினும், நாம் இன்று மக்கள் செறிந்துள்ள ஒரு பகுதியில் முன்னோக்கி ஒரு நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றோம். கோட்டா கே கம பகுதியில் இதனை செய்வதை இட்டு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

தமது கருத்துக்களை ஒரு இடத்திலிருந்து கூறுவதற்கு இதற்கு முன்னர் பலருக்கு தைரியம் இருக்கவில்லை. கோட்டா மீதான பயத்தை இல்லாது செய்ததை தொடர்ந்து, மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள். தமது மனங்களிலுள்ள விடயங்களை செய்கின்றார்கள். நாம் ஒன்றிணைந்து செய்வோம். தென் பகுதி மக்களும் அதற்காக முன்நிற்கின்றார்கள் என்பது வடக்கிற்கு நல்ல செய்தியாக இருக்கும்" என அவர் குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61491928

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சின்ன சின்ன மன மாற்றங்கள் மக்களிடையே  நிகழும் பொழுது அதனை தட்டிக்கொடுப்போம். 
துவேசத்தை தூண்டாத, நம்பிக்கை வளர்க்கும் வகையிலான எமது பணியை  தொடர்ந்தும் செய்வோம். பலனை எதிர்பாராது  கடமையை செய்வோம். 🙏

  • Like 7
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=lbUDX4bdgTg

 

எதிர்காலத்தில் ஒரு புதிய வரலாறு இலங்கையில் உருவாக இந்நிகழ்ச்சி ஒரு முன்னோடியாக இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Edited by நிலாமதி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 

https://www.youtube.com/watch?v=lbUDX4bdgTg

 

எதிர்காலத்தில் ஒரு புதிய வரலாறு இலங்கையில் உருவாக இந்நிகழ்ச்சி ஒரு முன்னோடியாக இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நீண்ட தொலைதூரப்பயணம் தான் 👣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நேரத்தில் சரியான இடத்தில செய்த ஒரு முயற்சி,  இது எவ்வளவுதூரம் போகும் என்று ஒருவருக்கும் தெரியாது, ஆனால் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது செய்யும் இப்பிடியான நிகழ்வுகள், புரிந்து கொள்ளக்கூடிய சிங்கள மக்கள் சிலருக்காவது  ஓரளவுக்கு உண்மையான நிலைமையை தெளிவுபடுத்தலாம். 
முழுமையான நம்பிக்கை இல்லாவிட்டாலும், இப்பிடி எங்களுக்கு சாதகமான நிலைமைகள் வரும் பொழுது, இனி என்ன ஏமாற்றங்கள் வரப்போகின்றதோ, அல்லது என்ன நடக்கபோகிறதோ என்று ஒருவித uneasiness வருவதையும் தடுக்க முடியவில்லை 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வை நடத்தியவர்கள்,பங்குபற்றியவர்கள் இதய சுத்தியுடன் நடந்து கொண்டால் மிக்க சந்தோசம். 🙏


ஏனெனில் முள்ளிவாய்க்கால் அனர்த்தம் நடந்து நீண்ட காலமாகி விட்டது. இது வரைக்கும் பொதுவில் எவ்வித  அஞ்சலிகளும் அனுதாபங்களும் இல்லாமல் இருக்க கோ கோத்தபாய நிகழ்வுக்கு பின் இப்படி ஒரு அதிசயக்கத்தக்க நிகழ்வு என்பது சாதாரண விடயமல்ல.

எனக்குள் ஐந்து வருட தவணை வைத்திருக்கின்றேன். இனி வரும் காலங்களில் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.

அரசியல் பொல்லாதது. அதன் பின் விளைவு தெரிய  காலம் செல்லும்.

இராமநாதனை குதிரை வண்டியில் வைத்து இழுத்தவர்கள் தான் இனவாதத்திற்கு முளையிட்டவர்கள்.

உலகில் அரசியல் செய்ய இனவாதம் சிறந்த நிவாரணி. இது சகல இன மக்களுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von 2 Personen und Text „மே 18 இன அழிப்பு நாள்“

உன்னையும் என்னையும் போன்ற இளம்பிள்ளைகள் சிலர் வாழ்ந்தனர்.. நம் சம காலத்தில்
உனக்கு தெரியுமா..?
உன் நாவிலும் என் நாவிலும் நாள்தோறும் பேசும் தாய் தமிழைத்தான் அவர்களும்
பேசினர்..
உன்னையும் என்னையும் போல்
அந்த இளம்பிள்ளைகள்..
வானுயர்ந்த புகழ்மிக்க பல்கலைகழங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல..
வானத்தைவிடவும் புகழ்மிக்க இலட்சியங்களோடு அவர்கள் வாழ்ந்தனர்..
எந்த நடிகரையும் அவர்கள் தலைவராக கொண்டாடியதில்லை..
ஆனால்
உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவனாக கொண்டிருந்தனர்..
அவர்கள் திரையரங்குளில் சத்தம் போட்டதில்லை..
பதுங்கு குழிகளின் நிசப்தம் அறிந்தவர்கள்..
விக்கெட்கள் விழுந்துவிட்டதற்காக பொறுமியவர்கள் அல்ல.. விழும்
பிணங்களுக்கு இடையே ரவைகளை பொறுக்கி கொண்டிருந்தவர்கள்...
அவர்கள் பொறியியல் படித்தவர்கள் அல்ல..
மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்..
விடுதலை வேள்விக்கான மூலப்பொருட்களிலிருந்து
முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்..
அவர்கள் மாலுமிகள் அல்ல..
கப்பலோட்டினர்..
அவர்கள் விமானிகள் அல்ல.
விமானம் இயக்கினர்..
அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல..
தத்துவமாகவே வாழ்ந்தனர்..
அவர்களில் பலர் பள்ளிப்படிப்பையே முடித்தது கிடையாது..
ஆனாலும் அவர்களைப்போல் களத்தில் யாரும் பாடம் கற்பிக்க முடியாது..
அவர்கள் வாழ்வின் அர்த்தம் அறிந்தவர்கள் அல்ல.. ஆனால் அவர்களைப்போல் அர்த்தமுடைய வாழ்வை யாரும் வாழ்ந்துவிட முடியாது..
அவர்கள் புனித நூல்களின் வார்த்தைகளை ஓதியவர்கள் அல்ல..
ஆனால் அவர்கள் உச்சரித்த மண் விடுதலை என்ற வார்த்தையை விட புனிதமானது வேறில்லை..
எந்த துறவியைவிடவும் அவர்களுடைய துறவறம் உயர்ந்தது..
எந்த தவசிகளின் தவங்களை விடவும் அவர்களின் விடுதலை தவம் உயர்ந்தது..
அவர்கள் ஒவ்வொரு நாளும் அடிபட்டு வாழ்ந்தனர்..
ஒரு நாளும் அடிமையாய் வாழ்ந்ததில்லை..
அவர்கள் இருந்தவரை அவர்களுடைய மண் அவர்களுடையதாக இருந்தது..
அவர்கள் இருந்தவரை அவர்களுக்கென்று ஒரு தேசம் இருந்தது..
அவர்கள் மண் அவர்களிடம் இல்லாமல் போனபோது அவர்கள் இந்த மண்ணிலேயே இல்லாமல் போயினர்..
 
முகநூலில் இருந்து.......
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமாகி விட்ட ஓர் பாடல்....

எங்க இன ரத்தசோறு கேட்டவனே...உன் கோட்டை சரிந்து விழும்.... மாளிகை நொருங்கி விழும்.....

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி முகத்திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் நினைவேந்தலும் 🙏😢 Mullivaikkal Memorial Day in Colombo😢

https://www.youtube.com/watch?v=lbUDX4bdgTg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் 2022 மே  18 இல் 
மனதிற்கு இதமான விடயங்கள் பல
சென்ற வருடம் முள்ளியில் 
வாழைத்தண்டில் மண்சட்டி வைத்து 
கற்பூரம் ஏத்தி 
அஞ்சலிக்கு ஆயத்தம் செய்ய 
சப்பாத்துக் காலால் தட்டி உடைத்தான் ஆமிக்காரன் 
இந்த வருடம் காலிமுகத் திடலில் 
காலிரண்டும்  இல்லாத ஆமிக்காரனும் வந்திருந்து 
முள்ளிக் கஞ்சி வாங்கி அருந்தியது மனதை தொட்டு சென்றது 
2009 இல் கஞ்சி இன்று போல் தடிப்பாக இருக்கவில்லை என்று
முள்ளியில் தமிழர் பட்ட அவலத்தை 
சிங்கள சகோதர்கள் பகிர்ந்து கொண்டார்கள் காலிமுகத்திடலில்.. 
அவலங்களுக்கு பொறுப்பு கண்டடைதலும் வேண்டும்
என்ற அவர்களின் கூற்று 
மண்ணின் கீழே துயில்வோரின் காதுகளில் வீழ்ந்திருக்கவும் கூடும் 
விளங்கா மொழியில் என்றாலுமே விளங்கியிருக்கக் கூடும்
புத்தம் சரணம் கச்சாமி 
இயேசு இரட்சிப்பார் 
அல்லாஹ்வின் அருளால் அமைதி  பெறட்டும் 
ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும் என்று 
இலங்கை  மக்கள் அங்கே ஒன்றாக நின்றது 
வரப்போகும் நன்மைகளுக்கு கட்டியம் கூறுவதாக அமையட்டும் ..

-    மெல்பேணில் துண்டுப்பிரசுரம் கிழித்தெறிந்த சகோதரனுக்கு இது சமர்ப்பணம்

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.