-
Tell a friend
-
Topics
-
1
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By nedukkalapoovan · Posted
அவர்கள் கொள்ளை அடிக்கும் போது கூடவே இவையும் அரசியலில் இருந்தவை தானே. ஏன் அதைத் தடுக்கேல்ல. தலையாட்டிக்கிட்டு தானே இருந்தவை. -
By nedukkalapoovan · Posted
இந்த அநியாயம் 2009 இல் இருந்து இன்னும் தொடருது. இந்த சாபக்கேடுகளால் தான் இந்த நாடு இப்படி கிடக்குது. போர்க்குற்றவாளிகளை பாதுகாத்ததன் விளைவையும் சாபக்கேட்டையும் இப்போ சந்திக்கிறார்கள் இலங்கை மக்கள். -
By கிருபன் · பதியப்பட்டது
“பரந்தன் பூநகரி வீதி அரசியல்வாதிகளின் சட்டைப் பையுக்குள் சென்றுவிட்டது” June 26, 2022 வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைக்குள் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் அபிவிருத்தி என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க, “பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக்கும். ஆனால் சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைபக்குள் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் அபிவிருத்தி. விமானம் ஓடாத விமான நிலையம், கப்பல்கள் வராத துறைமுகம், கிரிக்கெட் விளையாடாத மைதானம், கூட்டங்கள் இடம்பெறாத மண்டபங்கள் என்பனவே தற்போது காணப்படுகிறது. இது மக்களுக்கான அபிவிருத்தி அல்ல. இது ஊழல்வாதிகள் கொள்ளை அடிப்பதற்கான வழி. தற்போது எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமுமே எனச் சுட்டிக்காட்டியுள்ளார். https://globaltamilnews.net/2022/177819 -
By கிருபன் · பதியப்பட்டது
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச்சென்ற இளைஞர் மகாவலியில் சடலமானார்! June 25, 2022 வெலிகந்த கந்தக்காடு இராணுவ பண்ணைக்கு பின்புறமாக உள்ள மகாவலி ஆற்றின் கிளையாற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த மூவர் முகாமில் இருந்து தப்பிச்சென்தாக ஏற்கனவே காவற்துறையினர் தெரிவித்தனர். தப்பியோடிய மூவரில் ஒருவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் ஏறாவூரை சேர்ந்த 19 வயதான இளைஞர் என அடையாளங்காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மற்றவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. https://globaltamilnews.net/2022/177807 -
By nedukkalapoovan · Posted
விலையை கூட்டினாப் போல.. டொலர் எப்படி பெருகும்.. பண வீக்கம் தான் பெருகும்... நாட்டில நிதி.. பொருண்மியம் படிச்சாக்கள் இல்லையோ..??! இல்ல கோத்தா கூட்டத்துக்கு பயந்துகிடக்கினமோ..?! யாழ்ப்பாணத்தில் 1800 ஆம்.
-
Recommended Posts