Jump to content

மஹிந்த மற்றும் நாமல்... நாடாளுமன்றுக்கு வருகை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த மற்றும் நாமல் நாடாளுமன்றுக்கு வருகை!

மஹிந்த மற்றும் நாமல்... நாடாளுமன்றுக்கு வருகை!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அவர் நாடாளுமன்றத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியில் 4ஆவது முன்னணி ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

நாட்டில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்து பாதுகாப்பாக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, அவர் திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும் அவர் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இன்று நாடாளுமன்றில் பிரசன்னமாகியுள்ளார்.

mahinda-2.png

namal2-600x375.png

https://athavannews.com/2022/1282507

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமலின்ற முகத்தை பார்க்க, அம்மாவின் அடிக்குப்பயந்து விருப்பமில்லாமல் பாடசாலைக்கு வந்து உம் என்ற இருந்த ஞாபகம் வருகிது. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ragaa said:

நாமலின்ற முகத்தை பார்க்க, அம்மாவின் அடிக்குப்பயந்து விருப்பமில்லாமல் பாடசாலைக்கு வந்து உம் என்ற இருந்த ஞாபகம் வருகிது. 

எனக்கென்னவோ ......இவங்களால் எங்களை என்ன செய்ய முடியும் .......பொறுங்கடா இரண்டு மாதத்தில் மீண்டும் முதலாவது பெஞ்சுக்கு வந்து உங்களை கவனிக்கிறோம் என்பதுபோல் தெரிகின்றது.......!  🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

எனக்கென்னவோ ......இவங்களால் எங்களை என்ன செய்ய முடியும் .......பொறுங்கடா இரண்டு மாதத்தில் மீண்டும் முதலாவது பெஞ்சுக்கு வந்து உங்களை கவனிக்கிறோம் என்பதுபோல் தெரிகின்றது.......!  🤔

இனி இந்த  காடு எனக்கு மட்டும் தான் என்றபடி

சிலிர்த்துக்கொண்டு  திரிந்த  சிங்கமல்லே???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை பிரதமராக்கினதும் ராஜபக்ச குடும்பத்துக்கெதிரான போராட்டமே பிசு பிசுத்து போனது.

இன்னும் ஓரிரு மாதங்களில் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்களை மஹிந்த குடும்பம் தேடி தேடி வேட்டையாடினாலோ அல்லது சிக்கலுகளுக்குள் மாட்டவைத்து உள்ளே தள்ளினாலோ  ஆச்சரியபடுவதற்கில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

ரணிலை பிரதமராக்கினதும் ராஜபக்ச குடும்பத்துக்கெதிரான போராட்டமே பிசு பிசுத்து போனது.

இன்னும் ஓரிரு மாதங்களில் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்களை மஹிந்த குடும்பம் தேடி தேடி வேட்டையாடினாலோ அல்லது சிக்கலுகளுக்குள் மாட்டவைத்து உள்ளே தள்ளினாலோ  ஆச்சரியபடுவதற்கில்லை.

அதுதான் நடக்கப் போகின்றது........மக்களுக்கு அடுத்தவேளை உணவுக்கு ஓடவேண்டும்......அவர்களுக்கு போராட்டங்களை அசால்ட்டா நீர்த்துப் போகச் செய்யும் பயிற்சி + அனுபவம்.......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

அதுதான் நடக்கப் போகின்றது........மக்களுக்கு அடுத்தவேளை உணவுக்கு ஓடவேண்டும்......அவர்களுக்கு போராட்டங்களை அசால்ட்டா நீர்த்துப் போகச் செய்யும் பயிற்சி + அனுபவம்.......!  

இவர்கள் உந்தக் களவாணிகள், இருக்கும் வரை, வெளிநாட்டு கல்லா திறவாது. காசும் வராது..... ரணில் முக்கினாலும் அதுவே கதை...

மிகப் பிரபல்யமான ஆங்கில சொல்லாடல் தான் நிணைவில் வருகிறது...... டாக்டர், டாக்டர்...... ரொம்ப... சத்தமா குசு போகுது..... ஆனால் கக்கா தான் வருதில்லை.....

இன்று ஜரோப்பிய மிகப்பெரிய உல்லாசப்பயண நிறுவனம், இலங்கை சுற்றுலா பயணம் புக்கிங் அணைத்தையும் கான்சல் பண்ணி விட்டது.

இலங்கையில் இவர்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவு.... நீண்டகால பொருளாதார பிரச்சணை.... இலகுவாக தீரக்கூடியதல்ல...

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இவர்கள் உந்தக் களவாணிகள், இருக்கும் வரை, வெளிநாட்டு கல்லா திறவாது. காசும் வராது..... ரணில் முக்கினாலும் அதுவே கதை...

மிகப் பிரபல்யமான ஆங்கில சொல்லாடல் தான் நிணைவில் வருகிறது...... டாக்டர், டாக்டர்...... ரொம்ப... சத்தமா குசு போகுது..... ஆனால் கக்கா தான் வருதில்லை.....

இன்று ஜரோப்பிய மிகப்பெரிய உல்லாசப்பயண நிறுவனம், இலங்கை சுற்றுலா பயணம் புக்கிங் அணைத்தையும் கான்சல் பண்ணி விட்டது.

இலங்கையில் இவர்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவு.... நீண்டகால பொருளாதார பிரச்சணை.... இலகுவாக தீரக்கூடியதல்ல...

இன்று ஒருத்தர்  சொன்னார்  சிறீலங்காவிலிருந்து  வெளியே  வர விமான ரிக்கற்றின் விலை 8 லட்சமாம்??

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

namal2-600x375.png

அடுத்து வரும் காலங்களில் இவர் பிரதமராக வந்து பின்னர் ஜெனாதிபதியாக மிளிர்வார்.இது நிச்சயம். உலக  காலச் சூழல் காரணமாக அரசியல் சட்டங்களில் மாற்றங்கள் வரலாம். அப்போது சுமந்திரனும் சம்பந்தனும் இருக்க மாட்டார்கள் என நம்புவோம்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.