Jump to content

போரில் உயிர்நீத்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அஞ்சலி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போரில் உயிர்நீத்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அஞ்சலி

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க  குமாரதுங்க தமது இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செய்தியுள்ளார். 

May be an image of 1 person, standing and outdoors

முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாம் இழந்தவை ஏராளம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

தனது முகநூல் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில், 

இலங்கையில்  இடம்பெற்ற கொடூர யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 13 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம் என பிரிந்துள்ளோம். அந்தப் போரினால் நான் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

போரின் முடிவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/127752

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் சுடலையில்தான் ஞானம் பிறக்கும். அதுவரை நன்மையானவற்றைச் செய்யவே மாட்டேன்.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவின் வழமையான நடிப்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

என்ன எல்லாச் சிங்கள ஓநாய்களும் திடீரென்று கண்ணீர் வடிக்கிறது?

ஒரு வேளை வெளிநாடுகளில் உள்ள தமிழரின் முதலீடுகளை சிங்களம் எதிர்பார்க்கிறதோ? எனக்கு அப்படித்தான் படுகுது... நயவஞ்சகமா கூப்பிடுகிறான், தமிழனை!

மோட்டுத் தமிழன்... போய்வேண்டுவானா, இல்லை வேண்டியது காணுமெண்டு குந்தியிருப்பானா? 😁

காத்திருங்கள், 
சற்று இடைவேளைக்குப் பிறகு.... 
உங்கள் சொறி லங்காவிலிருந்து...
🤣🤣

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ ஒரு இடத்தில் சர்வதேச நெருக்கடி ஆரம்பமாகி விட்டது என்பது அர்த்தமாகலாம்.

இனித்தான் ஒவ்வொரு ஈழத்தமிழனும் கவனமாய் இருக்க வேண்டும். 
எதுவுமே செய்யாதே , கண்டதை கதைக்காதே, வீரம் பேசாதே சிவனே என சும்மா இரு.

அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வரைக்கும் காத்திரு.....என்ன நடக்கிறதென பார்க்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் ஓடிவிட்டால் அனைத்துமே மறந்துபோகும் என்று நினைக்கிறார்கள்.

எப்படி பிரேமதாச காலத்தில் கிழக்கில் படுகொலைகள் கட்டவிட்டு விடப்பட்டதோ , அதைவிட பலமடங்கு வேகத்தில் சந்திரிக்காவினால் வடக்கில் படுகொலைகள் கொத்துக்கொத்தாக இடம்பெற்றன.

அவர் மாமன் ரத்வத்தையுடன் சேர்ந்து ஆடிய கொலைகளங்கள் ஒன்றா இரண்டா,அதுவும் பள்ளிகள் வழிபாட்டு தலங்களையும் தகர்த்து   சிறுவர் இளைஞர்களையும் தேடி தேடி கொன்றார் அம்மணி.

நாகர்கோயில் பள்ளிமீதான குண்டுவீச்சு படுகொலை, நவாலி தேவாலய குண்டுவீச்சு படுகொலை,மடு தேவாலய படுகொலை, செம்மணி படுகொலை, ஜெயசிக்குறு நடவடிக்கையில் மன்னார்பகுதி மக்கள் படுகொலை, கிளாலி ஃநீரேரி படுகொலை.............. 

சொல்லிக்கொண்டே அடுக்கிகொண்டே போகலாம், ஆனால் எதுவுமே தன்னால் நடக்காதமாதிரி இறந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்யும் இந்த கொடூரத்தை என்னவென்று சொல்ல?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்தவரே… அஞ்சலி செலுத்தும் கொடுமை.

தான் செய்தவற்றுக்கு… மன்னிப்பு கேட்டு விட்டு,
அஞ்சலி செலுத்தி இருந்தாலும்… ஒரு நியாயம் உண்டு. எல்லாம்.. சுய விளம்பரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

சந்திரிக்காவின் வழமையான நடிப்பு.

வலி உணர்ந்த்தவர்.....🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

சந்திரிக்காவின் வழமையான நடிப்பு.

சுற்றி வர இருட்டு  கரண்டும் இல்லை  மண்  எண்ணெயும்   இல்லை.  அது தான் விளக்கேத்துறா ? சாடசிக்கு ஒத்தரும் இல்லையே ?😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எங்கேயோ ஒரு இடத்தில் சர்வதேச நெருக்கடி ஆரம்பமாகி விட்டது என்பது அர்த்தமாகலாம்.

இனித்தான் ஒவ்வொரு ஈழத்தமிழனும் கவனமாய் இருக்க வேண்டும். 
எதுவுமே செய்யாதே , கண்டதை கதைக்காதே, வீரம் பேசாதே சிவனே என சும்மா இரு.

அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வரைக்கும் காத்திரு.....என்ன நடக்கிறதென பார்க்கலாம்.

For Immediate Release

OTTAWA, Ontario May 18, 2022

Canadian Parliament recognizes Genocide of Tamils in Sri Lanka and establishes May 18th of each year as Tamil Genocide Remembrance Day

Today, the Canadian Parliament adopted the following unanimous consent motion brought forward by Gary Anandasangaree, Member of Parliament for Scarborough—Rouge Park:
“This House acknowledge the Genocide of Tamils in Sri Lanka and recognize May 18th of each year as Tamil Genocide Remembrance Day.”

“Canada becomes the first National Parliament in the world to recognize the genocide of Tamils in Sri Lanka. It is a recognition of the atrocities committed by the Sri Lankan government. This motion also recognizes each May 18th as Tamil Genocide Remembrance Day” said Anandasangaree.

“This is the culmination of years of hard work and advocacy by so many members of the Tamil community, survivors, family members of survivors, and the many jurisdictions that recognized the genocide of Tamils. I hope this will give some solace to those who are impacted and traumatized by the genocide. I also recognize that much work lies ahead to ensure that those who are responsible for these atrocities are held to account.
I want to thank all the political parties for their support, including the Conservative Party, Bloc Quebecois, New Democratic Party, and the Green Party and the many Members of Parliament who worked so hard to ensure the success of this motion.”

We will have a media availability:
Date: Time: Venue:
Attendees: Contact:
May 18, 2022
4:30 pm
125-B Press Conference Room, West Block
Parliament Hill, Ottawa
Abarna Selvarajah (PEARL)
A Representative of each of the recognized Political Parties in the House Gavin Budimulia, 647-528-8487
  Ottawa
Constituency Office
3600 Ellesmere Road -Unit 3, Scarborough, Ontario, M1C 4Y8 Tel.: 416 -283-1414
Gary.Anandasangaree.C1@parl.gc.ca
 
🧐

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

போரில் உயிர்நீத்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அஞ்சலி

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க  குமாரதுங்க தமது இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செய்தியுள்ளார். 

May be an image of 1 person, standing and outdoors

முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாம் இழந்தவை ஏராளம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

தனது முகநூல் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில், 

இலங்கையில்  இடம்பெற்ற கொடூர யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 13 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம் என பிரிந்துள்ளோம். அந்தப் போரினால் நான் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

போரின் முடிவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/127752

முதலைக்கண்ணீர் என்பது இதுதான்! நேற்றுவரை  பேட்டிகொடுத்தாவே தான் வாங்கிய ஆயுதங்களை கொண்டே ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டு வந்தார் என்று. எல்லாம் கோத்தா கம செய்யும் வேலை. இதையும் அவர்கள் காதில் போட்டு வையுங்கள், புத்தனை வணங்கும் ஒருவர் கூட இல்லாத இடத்தில விகாரைகள் குவிந்து வீண் பண விரயமும்,  பிடிவாதமும், தோத்துப்போன அரசியலும் நடக்கிறதென்று. ஒருநாள் இவைகள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப்படும் இவர்கள் கண்முன்னாலேயே. போரை நடத்தி வெற்றி கொண்டோருக்கு பயம் வந்துவிட்டது. மூச்சுக்கு முன்னூறு தடவை புலிகளை வெற்றி கொண்டோம் எனும் வீர வசனத்தால் மக்களை வெறி ஏற்றி, காரியம் சாதித்தார்களோ அதே வெற்றிகோஷத்தால் அழிவார்கள், சொல்வதற்கே பயப்படுவார்கள், வெட்கப்படுவார்கள். காலம்! இதே மேடையில் அவர்களை ஏற்றி போற்றிய கூட்டம் இன்று  அவர்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்து தாம் செய்ததை நினைத்து வருந்துவது மட்டுமில்லை, அதே சூழ்நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது பாருங்கள்! காலத்தை கடவுள் மாற்றி விட்டார் இல்லையெனில் இன்று வெற்றி களிப்போடு வலம் வந்திருப்பார்கள். 

Link to comment
Share on other sites

சந்திரிக்கா: புன்னகையின் பின்னால் மறைந்துள்ள கொடிய மிருகம்!!
 
  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.