Jump to content

மே-18ஐ இனப்படுகொலை தினமாக அங்கீகரித்து கனேடிய பாராளுமன்றம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மே-18ஐ இனப்படுகொலை தினமாக அங்கீகரித்து கனேடிய பாராளுமன்றம்

(ஆர்.ராம்)

கனடா பாராளுமன்றத்தில் மே 18 ஆம் நாளை இனப்படுகொலை தினமாக  அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

No description available.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி மே 18ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

No description available.

பாராளுமன்றில் குறித்த பிரேரணை முன்நகர்த்தப்பட்டிருந்த நிலையில்,  தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஏற்றுக்கொள்வதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/127781

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலையில் மிகவும்  நல்ல  செய்தி

நன்றி கனடா

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு நேட்டோக்களும் நசிட்டுக்களும் நல்ல நாடுகள் தான்.  தங்கள் பலவந்தமாக கடத்திவந்த ரஷ்ய ஆதரவு இலங்கை தமிழர்களுக்கு மட்டும் வளமான வாழ்வு அளிப்பதோடு நிற்காமல் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களிடமும் அக்கறை கொள்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 வீதிகளில் பைத்தியக்காறர்களாக, கூக்குரலிட்டதற்கு, இப்போது 13 வருடங்கள் கழிந்து Remembrance Day ? 

கேட்டதோ இனப்படுகொலையை தடுக்கும்படி, இப்போது எல்லாம் முடிந்து தமிழர் இருப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைக்கிறார்கள்.  

😏

19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

திருட்டு நேட்டோக்களும் நசிட்டுக்களும் நல்ல நாடுகள் தான்.  தங்கள் பலவந்தமாக கடத்திவந்த ரஷ்ய ஆதரவு இலங்கை தமிழர்களுக்கு மட்டும் வளமான வாழ்வு அளிப்பதோடு நிற்காமல் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களிடமும் அக்கறை கொள்கிறார்கள்.

புலம்பெயர் இலங்கையர்களின் வளமான வாழ்வுதான் ஐயாவுக்கு வவுத்தெரிச்சலைக் கிளப்புவதற்குக் காரணமோ? 

விளங்க நினைப்பவர் தமிழக அகதி முகாமிலா இருக்கிறீர்கள் ? 

😉

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பாராளுமன்றில் குறித்த பிரேரணை முன்நகர்த்தப்பட்டிருந்த நிலையில்,  தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஏற்றுக்கொள்வதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப்

பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்துக் கட்சிகளின் 338 உறுப்பினர்களும் ஏகமனதாக 
அங்கீகாரம் அளித்துள்ளமை மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும்....

கபிதனின்... கூற்று,  மிக நியாயமானது.
வரும் முன் அந்த மக்களின் உயிர்களை காப்பாற்றி இருந்தால்,
ஒன்றரை மக்கள் லட்சம்  மக்கள், இன்று உயிருடன் இருந்து இருப்பார்கள்.

19 minutes ago, Kapithan said:

2009 வீதிகளில் பைத்தியக்காறர்களாக, கூக்குரலிட்டதற்கு, இப்போது 13 வருடங்கள் கழிந்து Remembrance Day ? 

கேட்டதோ இனப்படுகொலையை தடுக்கும்படி, இப்போது எல்லாம் முடிந்து தமிழர் இருப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைக்கிறார்கள்.  

😏

புலம்பெயர் இலங்கையர்களின் வளமான வாழ்வுதான் ஐயாவுக்கு வவுத்தெரிச்சலைக் கிளப்புவதற்குக் காரணமோ? 

விளங்க நினைப்பவர் தமிழக அகதி முகாமிலா இருக்கிறீர்கள் ? 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவின் புலிதாக்குதல் கிலியூட்டும்  அறிவிப்புக்கு இதுவே காரணமாக  இருக்க வேண்டும். நிச்சயமாக கிந்தியாவிற்கு தெரிந்து இருக்கும் இந்த வாக்கெடுப்பு நடைபெறப் போகிறது என்று. 

கனடா தேசிய பாராளுமன்றம் ஏகமானதாஜெ நிறைவேறி இருப்பது, கிந்தியாவின் கொள்கைக்கு, நிலைப்பாட்டுக்கு  பலத்த குறியீட்டு அடி.

கனடா, மேற்கின் எதிர்கால போக்குகளை காட்டுவதாகவும் இருக்கலாம். 

  • Like 2
Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

கபிதனின்... கூற்று,  மிக நியாயமானது.
வரும் முன் அந்த மக்களின் உயிர்களை காப்பாற்றி இருந்தால்,
ஒன்றரை மக்கள் லட்சம்  மக்கள், இன்று உயிருடன் இருந்து இருப்பார்கள்.

ஹிட்லர் ஜேர்மனியில் யூதர்களை  இனப்படுகொலை செய்யும் போது அதை தடுக்க முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் யூத மக்கள் ஏனைய நாடுகளின் ஆதரவை படிப்படியாக பெற்று இன்று என்ன நிலையினை அடைந்து இருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்றீர்கள். 

நாம்  தமிழ் மக்கள் எப்பவும் இப்படியான சாதகமான விடயங்கள் நடக்கும் போதும், மீண்டும் மீண்டும் பழையவற்றுக்குள் மூழ்கி குறைகளை கண்டு பிடித்துக் கொண்டு இருப்போம்.
 
  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய ஊதுகுலக்களில் எல்லாம் கோத்தாவின் பேச்சே பிரச்சாரமாக  இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

ஹிட்லர் ஜேர்மனியில் யூதர்களை  இனப்படுகொலை செய்யும் போது அதை தடுக்க முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் யூத மக்கள் ஏனைய நாடுகளின் ஆதரவை படிப்படியாக பெற்று இன்று என்ன நிலையினை அடைந்து இருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்றீர்கள். 

நாம்  தமிழ் மக்கள் எப்பவும் இப்படியான சாதகமான விடயங்கள் நடக்கும் போதும், மீண்டும் மீண்டும் பழையவற்றுக்குள் மூழ்கி குறைகளை கண்டு பிடித்துக் கொண்டு இருப்போம்.
 
தமிழீழம் கிடைக்கும்  என்கிறீர்கள். 😃

குறை கண்டுபிடிப்பதல்ல  நோக்கம். அழிவைத் தடுத்திருக்கலாம் என்கிற  ஆதங்கம். அம்புட்டுதே. 😉

Link to comment
Share on other sites

ஜாக் லேற்றனை(மறைந்த) தவிர எனையோர் 2019ல் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பவில்லை. புலிகளின் அழிவில் மிக விருப்பம் கொண்டிருந்தார்கள். 13 வருடங்கள் கழித்து எப்படி இந்த மனமாற்றம் வந்தது?
சில கிழமைகளில் நடக்க இருக்கும் ஒன்ராரியோ தேர்தலில் அனைத்து பெரிய கட்சிகளிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டி இடுகிறார்கள். ஆகவே தமிழ் வாக்காளர்களை கவர என்பது எனது சின்ன ஊகம்.
எமக்கு நல்லது நடப்பதில் சந்தோசம். ஆனால் ஒருவர் சுயநலத்துடன் செய்யும் உதவி ஆபத்தானது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 24,  25 இல், ஒண்டாரியோ பாராளுமன்ற தமிழ் இனப்படுகொலை வார பிரகடனம் சட்ட மன்றத்தில் வழக்கிற்கு வருகிறது.

இயலுமானவர்கள், சமூகமகளிக்கவும். 

அனால், நன்றாக இனப்படுகொலை சிறிலங்க அரசின் திட்டமிட்ட  தமிழ் அழித்தல், ஒடுக்குமுறை கொள்கைகளினால் (புலி எதிர்ப்பிலும்) மீட்க முடியாதபடி அரசிலும், (சிங்கள சமூகத்திலும் ???)  புரையோடிப்போயுள்ளது என்பதை தெளிவாக விளங்கி கொண்டு போகவும். 

ஏனெனில், சமூகமளிக்கும் பொதுமக்களிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு உள்ளது.

மேலே சொன்னதை உங்கள் தனிப்பட்ட அனுபவத்துடன் சேர்த்து விளங்கி கொண்டு போகவும்.

https://www.thestar.com/news/canada/2022/05/17/ontarios-tamil-genocide-education-week-faces-constitutional-challenge.html

  • Thanks 2
Link to comment
Share on other sites

30 minutes ago, Kapithan said:

தமிழீழம் கிடைக்கும்  என்கிறீர்கள். 😃

தமிழீழம் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நேர்மையாக இருந்திருந்தால் நானோ நீங்களோ போராட போகாமல் வெளி நாட்டுக்கு ஓடி வந்து இருக்க மாட்டோம்.  

தமிழ் மக்களுக்கு நிம்மதியாக வாழ நிரந்தரமான ஒரு நியாயமான தீர்வு கிடைத்தாலே போதும். அதற்காக குரல் கொடுக்க முன்வரும் எவரையும் அது கனடாவாக இருந்தால் என்ன, நாளைக்கே ரஷ்சியாவாக இருந்தால் என்ன, பேய் பிசாசாக இருந்தால் என்ன என்பதில் அக்கறை இல்லை.

  • Like 5
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

தமிழீழம் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நேர்மையாக இருந்திருந்தால் நானோ நீங்களோ போராட போகாமல் வெளி நாட்டுக்கு ஓடி வந்து இருக்க மாட்டோம்.  

தமிழ் மக்களுக்கு நிம்மதியாக வாழ நிரந்தரமான ஒரு நியாயமான தீர்வு கிடைத்தாலே போதும். அதற்காக குரல் கொடுக்க முன்வரும் எவரையும் அது கனடாவாக இருந்தால் என்ன, நாளைக்கே ரஷ்சியாவாக இருந்தால் என்ன, பேய் பிசாசாக இருந்தால் என்ன என்பதில் அக்கறை இல்லை.

நீங்கள் கூறுவது உண்மை  நிழலி. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

2009 வீதிகளில் பைத்தியக்காறர்களாக, கூக்குரலிட்டதற்கு, இப்போது 13 வருடங்கள் கழிந்து Remembrance Day ? 

கேட்டதோ இனப்படுகொலையை தடுக்கும்படி, இப்போது எல்லாம் முடிந்து தமிழர் இருப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைக்கிறார்கள்.  

தேசியத்தலைவர் பிரபாகரனும் இதற்கு நன்றி கூறியிருப்பார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

ஜாக் லேற்றனை(மறைந்த) தவிர எனையோர் 2019ல் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பவில்லை. புலிகளின் அழிவில் மிக விருப்பம் கொண்டிருந்தார்கள். 13 வருடங்கள் கழித்து எப்படி இந்த மனமாற்றம் வந்தது?
சில கிழமைகளில் நடக்க இருக்கும் ஒன்ராரியோ தேர்தலில் அனைத்து பெரிய கட்சிகளிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டி இடுகிறார்கள். ஆகவே தமிழ் வாக்காளர்களை கவர என்பது எனது சின்ன ஊகம்.
எமக்கு நல்லது நடப்பதில் சந்தோசம். ஆனால் ஒருவர் சுயநலத்துடன் செய்யும் உதவி ஆபத்தானது.

இருக்கலாம், அனால், அவர்கள் எதிர்பாக்காத வடிவில், உத்வேகமும் தனக்கே உரிய வடிவமும் எடுப்பதற்கு இடமும், வாய்ப்பும் (உக்ரைன், தாய்வான்) இப்பொது ஏற்பட்டு இருக்கிறது.  

எல்லாவற்றையும் பார்க்கும் போது 

1. ஹிந்தியா பூச்சாண்டி துறையின் புஷ்வாணம் 2-3 நாட்களுக்கு முதல். 

2. சொறி சிங்களம் கடனுக்கு default 18 May, 19 மே அறிவித்தது.

3. சொறி சிங்களம் சீனாவுக்கு முற்றாக சாய்ந்து விட்டது ஆ;அல்லது சீன சொல்வதத்திற்கு பணிந்து விட்டது? 

4. கனடா வாக்கெடுப்பு மே 18. கனடா இதை அமெரிக்காவிடம் தெரிவிக்காமல் நிச்சயமாக இந்த முடிவை எடுத்து இராது.

5. இன்று செய்தி வருகிறது, IMF (அமெரிக்கா) கோத்தாவை பதவியை விட்டு இறங்குமாறு சொன்னதாக . .  

இவையெல்லம்  தற்செயலாக நடந்ததாக தெயரிவில்லை 

  • Like 2
Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

யூக்ரேனுக்கு போர் தொடங்கி சில கிழமைக்குள் போர்க்குற்றம், ஆதாரம் என்று மேற்கு தொலைக்காட்சிகள்  24 மணி நேரமும் முழங்கி கொண்டிருந்தன. அத்தோடு ரஸ்யா செய்வது இனப்படுகொலை என்று ஒன்றுக்கு ஆயிரம் தடவை கூறினார்கள். எமது இனம் அழிந்த போது ஆயிரக்கணக்கில் ஆதாரங்கள் காட்டியும் அங்கு இனப்படுகொலை நடந்ததாக ஒருவரும் இன்னும் கூறவில்லை. இவர்களிடமா நீதியை எதிர்பார்க்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் தாக்குதல் தொடங்கி 3 நாளைக்குள் ரஷ்சியா மீது சொன்னதை.. ஈழத்தில் தமிழர்களுக்குச் சொல்ல இவ்வளவு காலம் இழுப்பும்.. நீட்டி முழக்கமும்.. அதுவும் உண்மைகள் தெளிவாகத் தெரிந்திருந்தும்.

எனி தமிழர்களால்.. எதுவுமே நடக்காது என்ற நிலையில்.. வாக்குக் கொள்ளைக்கான..கனடாவின் உண்மை முகத்தை இதில் இருந்து காணலாம். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.