Jump to content

ராஜீவ் காந்தியுடன் இறந்தோர் குடும்பத்தினர் குமுறல்: "நாங்கள் தமிழர்கள் இல்லையா?"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியுடன் இறந்தோர் குடும்பத்தினர் குமுறல்: "நாங்கள் தமிழர்கள் இல்லையா?"

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பேரறிவாளன்

 

படக்குறிப்பு,

பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். இந்தத் தீர்ப்பை அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ள சூழலில், '30 ஆண்டுகளாக நாங்கள் அடைந்துவரும் துயரங்களை அரசும் கண்டுகொள்ளவில்லை' என்கின்றனர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலால், ராஜீவகாந்தி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவருடன் சேர்த்து 18 பேர் இறந்தனர். இந்த வழக்கில் முருகன் என்கிற ஸ்ரீகரன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். குறிப்பாக, மனித வெடிகுண்டு தாக்குதலுக்குப் பயன்பட்ட 9 வோல்ட் பேட்டரியை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

விடுதலையும் சிறைத்துறை உத்தரவும்

ஆனால், 'பேட்டரியை எதற்காகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தனக்குத் தெரியாது' என பேரறிவாளன் கூறிய வார்த்தைகளை நிராகரித்ததால், அவருக்குத் தண்டனை கிடைத்ததாக வாக்குமூலம் வாங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜன் தெரிவித்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அதில் எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாமதம் செய்து வந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் முறையிட்டார்.

இந்த வழக்கின் வாதங்கள் நிறைவுற்ற பிறகு நேற்று (மே18 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 'பேரறிவாளனை விடுவிப்பதற்காக 2018 ஆம் ஆண்டு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. ஆனால், 161 ஆவது சட்டப்பிரிவின்கீழ் முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் காரணமாக 142 ஆவது சட்டப்பிரிவின்படி தனக்குரிய அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்துகிறது.

அதன்படி, 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார்' என நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனையடுத்து, 'சிறையில் உள்ள மற்ற ஆறு பேரையும் விடுவிப்பதற்கு அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் சொல்வது என்ன?

 

அனுசுயா

பட மூலாதாரம்,ANUSUYA

 

படக்குறிப்பு,

அனுசுயா

அதேநேரம், 'பேரறிவாளனை விடுவித்தது அநீதி' என ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பேசி வருகின்றனர். இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற காவல்துறை ஏ.டி.எஸ்.பி அனுசுயா, ''வெடிகுண்டு சம்பவம் நடந்த காலத்தில் காஞ்சிபுரம் காவல்துறையின் மகளிர் பிரிவில் உதவி ஆய்வாளராக இருந்தேன். போலீஸ் பணிக்கான உடல் தகுதியோடு தேர்வான எனக்கு, காலம் முழுக்க மறக்க முடியாத வேதனையை அந்த ஒரு சம்பவம் கொடுத்துவிட்டது.

இதனால், எனது மார்பில் 5 வெடிகுண்டு சிதறல், கண் பாதிப்பு ஏற்பட்டதோடு, இரண்டு விரல்கள் பறிபோயின. இதனால் வழக்கமாக ஒரு மனிதன் செய்யக் கூடிய எந்த வேலையையும் என்னால் செய்ய முடியாது. நான் பிறப்பால் எந்தவித குறைபாடும் இல்லாமல்தான் பிறந்தேன். தற்போது பாத்திரத்தில் வெந்நீர்கூட தூக்க முடியாமல் தவிக்கிறேன். காலம் முழுக்க இந்த வேதனைகளோடுதான் நான் வாழவேண்டும்'' என்கிறார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பேசிய அனுசுயா, '' இது மிகவும் அநீதியானது. வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொன்றுள்ளனர். அவர்களோடு சேர்ந்து 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர குற்றவாளிகளில் இருவரும் இறந்துவிட்டனர். இந்தச் சம்பவத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தபோது உற்சாகம் அடைந்தோம்.

அதற்கடுத்து வந்த நாள்களில் உடனடியாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கலாம். இந்த வழக்கில் உள்ள சட்ட நுணுக்கங்களை வெளிக்காட்டி பேரறிவாளன் தரப்பினர் வாதாடியதால் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. இவர்கள் செய்த தவறுக்காக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளின் மோதலில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகத்தான் பார்க்கிறேன்,'' என்கிறார்.

மேலும், '' இந்திரா காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்களை தூக்கில் போட்டனர், காந்தியைக் கொன்ற குற்றவாளியையும் தூக்கில் போட்டனர். ஆனால், ராஜீவ்காந்தியை கொன்றவர்களுக்கு மட்டும் ஏன் சலுகை காட்ட வேண்டும்? பேரறிவாளனை முதலமைச்சரே கட்டித் தழுவுகிறார் என்றால் எப்படி எடுத்துக் கொள்வது?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.

எங்கள் கருத்தைக் கேட்கவில்லை

 

அப்பாஸ்

பட மூலாதாரம்,ABBAS

 

படக்குறிப்பு,

அப்பாஸ்

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் இறந்த காங்கிரஸ் பிரமுகர் சம்தானி பேகத்தின் மகன் அப்பாஸிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''1991 ஆம் ஆண்டு தென்சென்னை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக என் தாயார் இருந்தார். அப்போது தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு மாலை அணிவித்தார். அந்த நேரத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலால் எனது தாய் இறந்துவிட்டார். அப்போது எனக்கு பத்து வயது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எனது தந்தையும் இறந்துவிட்டார். கடந்த 30 ஆண்டுகளாக பெற்றோர் இல்லாமல்தான் நானும் என்னுடன் பிறந்த ஐந்து பேரும் வளர்ந்தோம்'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், '' பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் நிரபராதியாக வெளியில் வந்தால் ஏற்றுக் கொண்டிருப்போம். ஆளுநர் தாமதம் செய்ததைக் காரணமாக வைத்து வெளியில் வந்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையும் தீர்மானம் நிறைவேற்றியதால் அதனைக் காரணமாக வைத்து விடுதலை செய்துள்ளனர். இந்தப் படுகொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எங்களிடம் இவர்கள் எந்தக் கருத்தையும் கேட்கவில்லை'' என்கிறார்.

''30 ஆண்டு சிறைவாசம் அனுபவித்ததால், மனிதாபிமான அடிப்படையில் விடுதலை வரவேற்கின்றனரே?'' என்றோம். ''இந்தியாவில் மட்டும்தான் இதுபோன்ற குரல்கள் வருகின்றன. சிறு வயதில் இருந்தே பெற்றோரை இழந்த தவிக்கும் எங்கள் மீது யாருக்கும் பரிதாபம் வரவில்லை. முன்னாள் பிரதமரோடு 16 அப்பாவித் தமிழர்களும் கொல்லப்பட்டனர். அவர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள்? அந்தக் கூட்டத்துக்குச் சென்றதைத் தவிர அவர்கள் செய்த தவறு என்ன?'' என்று கேட்கிறார் அவர்.

நாங்களும் தமிழர்கள்தானே?

''இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டீர்களா?'' என்றோம். '' இந்த வழக்கில் எங்கள் தரப்பைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என நாங்கள் தொடர்ந்த மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டனர். மத்திய, மாநில அரசு ஆகியவைகளுக்கு இடையிலான விவகாரமாக மட்டும் வழக்கை எடுத்துக் கொண்டனர். இந்தச் சம்பவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள்தான். எங்கள் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும். நானும் எவ்வளவோ போராடிவிட்டேன்.

'ஒருநாள் சிறையில் இருந்து பாருங்கள், கஷ்டம் தெரியும்' என பேரறிவாளன் தரப்பில் கூறுகின்றனர். அவர்களும், எங்கள் வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்கட்டும். பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்ததை பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். முதலமைச்சரும் அவரைக் கட்டியணைத்து வாழ்த்து சொல்கிறார். இதெல்லாம் எந்த மாநிலத்தில் நடக்கிறது? எங்களுக்கும் ஸ்டாலின்தானே முதலமைச்சர், நாங்கள் தமிழர்கள் இல்லையா?'' என்றார்.

''உங்கள் தாய் இறந்ததற்கு நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லையா?'' என்றோம். '' அப்படி எதுவும் கிடைக்கவில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்த ஒன்பது போலீசார் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குக் காவல்துறையில் பணி கிடைத்துவிட்டது. வேறு சிலருக்கு மூப்பனார் செய்த உதவி காரணமாக எரிவாயு ஏஜென்சி கிடைத்தது.

நாங்கள் சிறியவர்களாக இருந்ததால் எதுவும் வந்து சேரவில்லை. 30 ஆண்டுகளாக சிரமப்பட்டுத்தான் வாழ்ந்து வருகிறோம். தற்போது அம்பத்தூர், பாடி பகுதியில் கடிகார கடை ஒன்றை நடத்தி வருகிறேன். குண்டுவெடிப்பில் இறந்த சிலரது குடும்பங்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அவர்கள் சீரழிந்துவிட்டனர்'' என்கிறார்.

தி.மு.க சொல்வது என்ன?

 

சூர்யா வெற்றிகொண்டான்

பட மூலாதாரம்,SURYA VETRIKONDAN

 

படக்குறிப்பு,

சூர்யா வெற்றிகொண்டான்

குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குமுறல் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளரும் தலைமைக் கழக வழக்குரைஞருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''வெடிகுண்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் மிக முக்கியமானவர்கள். அவரது பிள்ளைகளே, 'இத்தனை ஆண்டுகாலம் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டீர்கள். உங்களை மன்னித்துவிட்டோம். நீங்கள் திருந்தி வாழ்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தால் அதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்' எனக் கூறிவிட்டனர். இதுதொடர்பாக, வேலூர் சிறையில் நளினியை சந்தித்துப் பிரியங்கா காந்தி பேசினார். அவரை நாங்கள் சிறைக்குக் கூட்டிச் சென்று பார்க்க வைக்கவில்லை'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், '' சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்துவது என்பது மாநில அரசின் அதிகாரம் எனக் கூறிய பிறகும் பலவகைகளில் ஆளுநர் இடையூறு செய்தார். இதனால் அரசியமைப்புச் சட்டத்துக்கு உரிய மரியாதையே போய்விட்டது. எனவே, 'அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் காலதாமதம் செய்தது தவறானது' என்று நீதித்துறை கூறிவிட்டது. மேலும், '161 ஆவது பிரிவை பயன்படுத்தாததால் சட்டமன்றத்துக்கான மாண்பை காப்பாற்ற வேண்டும்' எனக் கூறி பேரறிவாளனை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது,'' என்கிறார்.

நிரபராதி என்பதால் கட்டித் தழுவினார்

''பேரறிவாளனை முதல்வர் கட்டியணைத்ததை விமர்சிக்கிறார்களே?'' என்றோம். '' பேரறிவாளனை நேரில் சந்தித்ததும் முதல்வர் கட்டியணைக்க சில காரணங்கள் உள்ளன. இந்த வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜன், அவரது வாக்குமூலத்தைத் தவறுதலாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். அவரே கூறிய பிறகு அற்புதம்மாள் தொடர்ந்து பேசி வந்த வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில், 'பேரறிவாளன் நிரபராதி' என்ற பார்வை திரும்பியது. அந்த அடிப்படையில் ஓர் அப்பாவி தவறாக சிறையில் சிக்கிவிட்டதை உணர்ந்து, முதல்வர் கட்டித் தழுவினார்.

அந்த 3 நிமிட சம்பவத்தால் பேரறிவாளனின் 30 ஆண்டு சிறைவாசம் மறந்துவிட்டது. இது புனையப்பட்ட வழக்கு என ஐ.பி.எஸ் அதிகாரியே கூறிவிட்டதால், நிரபராதி என்ற உணர்வின் அடிப்படையில் கட்டித் தழுவினார்'' என்கிறார். மேலும், '' பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நீதி எதுவென்றால், இந்த வழக்கில் சிறையில் உள்ளவர்கள் 30 ஆண்டுகால சிறைவாசத்தை அனுபவித்ததுதான்'' என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-61509654

Link to comment
Share on other sites

சுவாமியை இக்கொலை தொடர்பாக பலர் சந்தேகிக்கிறார்கள். ஏன் அவரை பிபிசி பேட்டி காணவில்லை?
பற்றரி கொடுத்தவருக்கு எங்காவது 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டதா?
 இவ்வழக்கில் வேண்டுமென்றே பலர் விசாரணை செய்யப்படாமல் விட்டதன் மர்மம் என்ன?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ராஜீவ் காந்தியுடன் இறந்தோர் குடும்பத்தினர் குமுறல்: "நாங்கள் தமிழர்கள் இல்லையா?"

குமுறுபவர்கள் ஏன் சுப்ரமணியசாமியை விசாரிக்க சொல்லவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை ஒருவரை குற்றவாளி என கூறும்போது நம்பியவர்கள், அதை ஏற்றுகொண்டவர்கள் நீதித்துறை அதே நபரை நிரபராதி என அறிவிக்கும்போது அதை நம்பி ஏற்றுகொள்ள முடியவில்லை என்றால்…? 🤔

யார் குற்றவாளி, யாருக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என இறுதி தீர்மானம் எடுக்க உரித்து உள்ளவர்கள் ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களா அல்லது நீதித்துறையா?

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்தவர்கள் அங்கவீனமானவர்களின் வேதனையையும் துன்பத்தையும் ஏற்றுக்கொள்கின்றோம். நாங்களும் கவலைப்படுகின்றோம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மூலக்கரணம் ராஜீவ் காந்தி என்பதால் அவரைத்தான் நீங்கள் தூற்றவேண்டும்.  இங்கு அறிவு குற்றமற்றவர்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

      குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்கள் நமது மற்றும் அரசின் அனுதாபத்திற்கும் ஆதரவிற்கும் உரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

          ஆனால் பேரறிவாளன் சந்தித்த வழக்கு எத்தகையது ? அன்றைக்கு இந்தியாவில்  தடைசெய்யப்படாத ஒரு இயக்கத்தின் ஆதரவாளவாராக ஒரு  பத்தொன்பது வயது இளைஞன் இருந்தது இயற்கையான ஒன்று.  பேட்டரியை சொன்ன இடத்தில் கொடுக்கத்தான் பணிக்கப்பட்டிருப்பாரே தவிர, அது எதற்காக என்று அந்த செயலில் முதல் நிலையில் இருந்தோர் தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தாம் காரணத்தை அறிந்திருக்கவில்லை என அவர் தந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்யாதது விசாரணை அதிகாரி தியாகராஜனின் குற்றம் (பணியில் இருந்தபோது இவ்வளவு பெரிய விடயத்தை மறைத்தது கவனக் குறைவாக இருந்திருக்க வாய்ப்பில்லை). இருப்பினும் ஓய்வுபெற்ற பின்னர் நீதிமன்றத்தில் அதை ஒத்துக் கொண்டது வழக்கின் திருப்புமுனை (மனசாட்சி விழித்துக் கொண்டதோ என்னவோ !). சுருக்கமாக பேரறிவாளன் மீதான வழக்கு இவ்வளவுதான். இதற்கு 31 வருடக் கடுங்காவல் நியாயம்தானா ? மரண தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன் கால அவகாசம் நீட்டிக்கப்பெற்று அவர் தப்பித்தது பெரிய விடயம். அக்கால கட்டத்தில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் மரணத்தை விடக் கொடியது என்பது வேறு.

       ஒரு முன்னாள்/அந்நாள்  பிரதமரின் கொலை எவ்வளவு பெரிய சூழ்ச்சியின் விளைவு எனக் காட்ட, இயன்ற வரை நிறையப் பேரை அதில் சிக்க வைப்பது காலங்காலமாய் நிகழும் கொடுமையாகத் தெரிகிறது. இந்திரா காந்தி கொலை வழக்கில், துப்பாக்கியால்  சுட்ட  பாதுகாவலர்கள் பியாந்த் சிங், சத்வந்த் சிங் தவிர பெரிய அளவில் யாரும் சிக்கவில்லை என்பதற்காகவே சத்வந்த் சிங்கின் உறவினர்  கேஹார் சிங் சிக்க வைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. கேஹார் சிங் நிலை மிகவும் கொடுமை. கொலைக்கு மூன்று மாதங்கள் முன்பு பொற்கோயிலுக்குக் குடும்பமாகச் சென்ற போது, அவரும் சந்த்வந்த் சிங்கும் தனியாகச் சென்று உரையாடியதற்கான சாட்சி மட்டுமே உண்டு. "ஏதோ சதித் திட்டமன்றி வேறு எதற்காகக் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து தனியாக உரையாட வேண்டும்?" என்று தீர்ப்பில் உள்ளதாக வாசித்த நினைவு. பெரும் வேடிக்கையாகப் பரிகசிக்கப்பட்ட ஒன்று. குல்தீப் நய்யார் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் எவ்வளவோ முயன்றும் கேஹார் சிங்கைத் தூக்கிலிருந்து காப்பாற்ற இயலவில்லை.

     கேஹார் சிங் அளவிற்கு பேரறிவாளன் துரதிர்ஷ்டசாலி இல்லை என்பது நமக்கான சிறிய மகிழ்ச்சி. நல்லோர் பலர் பேரறிவாளன் பக்கம் நின்றதும் வென்றதும் வரலாற்று நிகழ்வு. தீர்ப்பில் குடியரசுத் தலைவர்  மற்றும் ஆளுநரின் அதிகார வரம்பு சுட்டிக் காட்டப்பட்டது மற்றொரு வரலாற்று நிகழ்வு.

      குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர் பேரறிவாளனின்  விடுதலையை எதிர்ப்பது வெறும் உணர்ச்சிக்கு அடிமையாவது; வருத்தத்திற்குரியது. 

 

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 12
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ்காந்தி சாகும் போது… அதுவரை அருகில்

இருந்த, மரகதம் சந்திரசேகர்…. எங்கு போனார்?

மூப்பனார்,  குண்டு வெடிக்கும் அந்த ஐந்து நிமிடங்களில், ஏன் சிகரெட்
பிடிக்க போனார்..?
 
ராஜீவ் கொல்லப்படுவதற்கு 30நிமிடங்களுக்கு முன்பு,
திருச்சி வேலுச்சாமி தொலைபேசியில்,
சுப்பிரமணிய சாமியை, தொடர்பு கொண்ட போது...
"என்ன ராஜீவ் இறந்துவிட்டார், அதைத்தானே…. சொல்லப்போகிறாய்"
என்று கேட்டுள்ளார்..
இதை, விசாரிக்காமல் விட்டது ஏன்..?
 
சந்திராசாமியும்., சுப்பிரமணியசாமியும் லண்டனில்
யாரை சந்தித்தார்கள்..?
 
ராஜீவ்,  தமிழ்நாடு வரும் வரை... கூடவே வந்த பல்கேரிய
பெண் ஊடகவியலாளர்,  குண்டு வெடிக்கிற போது எங்கே போனார்..?
 
ராஜீவ், வந்த விமான பைலட் மாற்றப்பட்டது ஏன்..?
 
விசாரணை கமிசன் சுப்பிரமணியசாமியையும்
சந்திரா சாமியையும் விசாரிக்க சொல்லியும்…
விசாரிக்காமல், விட்டது ஏன்..?
 
எம்.கே. நாராயணனிடம் இருந்த,
ராஜீவ் கொலையில் கிடைத்த... அந்த ஒரே காணொளிப் பதிவு,
எப்படி தொலைந்து போனது..?
 
பொதுக் கூட்ட மேடைக்கருகில் குண்டு வெடித்தது.
மேடையில் மூப்பனாரும்,
வாழப்பாடி ராமமூர்த்தியும் இருந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி முன்னாள் பிரதமர் என்ற
முறையிலாவது... அவர்கள் இருவரும்,
கீழே வந்து ...ராஜீவை வரவேற்றிருக்க வேண்டுமே.
ஏன் செய்யவில்லை..?
 
May be a Twitter screenshot of ‎1 person and ‎text that says '‎K.S.ALAGIRI @KS_Alagiri 17m உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம். ר1 17 5 23‎'‎‎
 
எவனாச்சும் காங்கிரஸ்காரன்... அய்யோ ராஜிவ்காந்தியை கொன்றவர்களை விடுவிக்கலாமான்னு,  ஒப்பாரி வச்சா கேளுங்க...
 
அது எப்படி... உங்க உயிர்த் தலைவனோடு குண்டு
வெடிச்சப்போ மாநில தலைவரோ, முக்கிய தலைவர்களோ, காங்கிரஸ்
நிர்வாகிகளோ... பக்கத்துல இல்லாமப் போனீங்கன்னு..?
 
 
Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people, people sitting and people standing

காங்கிரஸ் கட்சியின்... நேற்றைய போராட்டத்தில்,  கலந்து கொண்ட மக்கள்.
எண்ணிப் பார்த்ததில், 10 பேருக்கு மேல் ஆட்களை காணவில்லை.

May be an image of 3 people and text that says 'அட வெட்கங்கெட்ட பயலுகளா இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையுரிங்க mt மக்கள் காங்கிரஸ்'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணமடைந்த 

காயப்பட்ட  மக்களின்  வேதனைகள் ஏற்புடையதே?

ஆனால் ஒருவர் இத்தனை  வருட  சிறை  மற்றும் வேதனைகளையும்  அடைந்த பின்பும்

அவரை கொன்றிருக்கவேண்டும் என்பவர்கள் மனிதர்களே  இல்லையே?😡

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு தாக்குதலிலும் பொதுமக்கள் கொல்லப்படுவது கண்டிப்பாக வருத்தத்திற்குரியதே, அவர்கள் வலிகள் புறந்தள்ளபட முடியாதவையே. அதேநேரம் அவர்களுக்கு அந்த நிலமை ஏற்படுவதற்கான காரணங்களை ஏற்படுத்தியவர் யார் என்பதையும் பார்த்தே ஆகவேண்டும்.

விடுதலைபுலிகள்தான் எங்கள் முன்னாள் பிரதமரையும் அவரோடு சேர்த்து தமிழர்களையும் கொன்றார்கள் என்று நீங்கள் சொன்னால், முன்னாள் பிரதமரை அவர்கள் கொல்வதற்கு காரணம் என்ன என்பதை எப்போதும் நீங்கள் பார்க்க மறுப்பதேன்?

 நீண்டகால இனப்போரை தமக்குள்ள வளங்களை வைத்துக்கொண்டு உயிரை மட்டுமே பெரும் ஆயுதமாக பயன்படுத்தி தற்பாதுகாப்பு போரில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருநாட்டில் கடல்கடந்து வந்து வல்லரசு திமிரில்  லட்சம் படைகள் வளங்களை குவித்து அடிவாங்கி கொண்டிருந்த எம்முடன் எந்த ஒப்பந்தமும் செய்யாமல் மாறாக மிரட்டிக்கொண்டு, அடித்தவனுடன் மட்டும் ராஜீவ் செய்ததற்கு பெயர் அமைதி ஒப்பந்தமா?

எந்த வகையிலும் நியாயமற்று சிங்களவன் எமக்கு செய்த கொடூரங்களைவிட பலமடங்கு வேகத்தில் ஓரிரு வருடங்களிற்குள்ளேயே தமிழர் தேசமெங்குமே சுடுகாடாக்கும் அளவிற்கு ஈழ தமிழர்கள்மேல் ராஜீவ் காந்திக்கு வன்மம் என்ன?

சிங்களவன் எம்மை கொன்று குவித்ததைகூட ஏதோ ஒரு காரணத்திற்காக சகித்துக்கொள்ளலாம், ஏனென்றால் அவன் எம்மை எதிரியாக பார்த்தான் நாமும் அவனை எதிரியாக பார்த்தே மோதினோம், ஆனால் இந்திய படைகள் எம்ம்மீது கொலைவெறிகொள்ள எந்த வகை நியாயம் இருந்தது?

அர்த்தமற்ற ஒரு போரை அந்நிய தேசம் ஒன்றில் நிகழ்த்தி பல ஆயிரம் மக்களை துடிக்க துடிக்க கொன்ற ராஜீவ்தான் அவர்மேல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது கூடவே இருந்த பொதுமக்களுக்கும் பொறுப்பாமவர்.

கடல் கடந்துபோயப்பாவி ஈழதமிழரை கொன்று குவித்த ராஜீவ்காந்தியின் அட்டூளீயம் பற்றி பேசாமல், கடல்கடந்து வந்து முன்னாள் பிரதமரை கொன்றுவிட்டார்கள் அது மாபெரும் தவறு  என்று ஒருசில அரசியல் கட்சிகள் கூவுகிறார்கள், அப்படியென்றால் இந்தியாவில் ஜூலியன் வாலா படுகொலையை செய்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியை இங்கிலாந்துவரை போய் தேடி கொன்றாரே ஒரு இந்தியன்  அதுவும் மிக பெரிய தவறுதானே,

அதை மட்டும் எப்படி நியாயம் தியாகம் என்று வாதிடுகிறீர்கள்?

பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதற்காக இந்திராகாந்தி கொல்லப்பட்டார், இந்திராகாந்தியை கொன்றதற்காக அந்த கொலைக்கு பழிவாங்க அந்த  சம்பவத்தில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத பலநூறு சீக்கியர்கள் டெல்லியில் கொல்லப்பட்டார்கள் என்கிறார்கள்.

அப்படி கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக நியாயம் கேட்டபோது , ஒரு ஆலமரம் சரியும்போது அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று சொன்னாராம் இதே ராஜீவ் காந்தி,

அவரின் வார்த்தைகளையே அவரின் படுகொலை விஷயத்திலும் எடுத்துக்கொள்ளலாம், அவரின் தாயார் பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதற்காக கொல்லப்பட்டு அதன் தொடர்ச்சியாக சீக்கியர்கள் கொல்லப்பட்டது ஆலமரத்தின் அதிர்வு காரணமாக என்றால்,

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பிய முட்டாள்தனத்தினால் ராஜீவ் கொல்லப்பட அதன் தொடர்ச்சியாக ஒரு சில தமிழர்களும் கொல்லப்பட்டது ஆலமரத்தின் அதிர்வுதான். அந்த அப்பாவி மக்களின் இறப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பேற்கவேண்டியது ராஜீவ் காந்தியேதான்.

இது விடுதலைபுலிகள்தான் எமது பிரதமரை கொன்றார் என்று  நிற்பவர்களுக்கான தற்கரீதியான வாதம் மட்டுமே.

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியால் இறந்த குடும்பங்களுக்குள் இவையும் வருவினம். ஈழத்தில் ராஜீவ் காந்தியால் இறந்தது தமிழர்கள் இல்லையா..??  இவை ராஜீவுக்கு சேவம் செய்யப் போய் இறந்தார்கள்.. என்றால்.. ராஜீவை நம்பியதற்காக அவரால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்கள் எப்படி மறக்கப்பட முடியும்..??! 

Edited by nedukkalapoovan
  • Like 3
Link to comment
Share on other sites

On 20/5/2022 at 21:29, nedukkalapoovan said:

ராஜீவ் காந்தியால் இறந்த குடும்பங்களுக்குள் இவையும் வருவினம். ஈழத்தில் ராஜீவ் காந்தியால் இறந்தது தமிழர்கள் இல்லையா..??  இவை ராஜீவுக்கு சேவம் செய்யப் போய் இறந்தார்கள்.. என்றால்.. ராஜீவை நம்பியதற்காக அவரால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்கள் எப்படி மறக்கப்பட முடியும்..??! 

இன்றுடன் ராஜீவ்காந்தி மரணித்து 31 வருடங்கள் நிறைவடைகின்றது. அதனையடுத்து ராஜீவ் ஒரு நேர்மையான சுத்தமான கைகளை உடையவர், அவரை அநியாயமாகக் கொன்றுவிட்டார்கள் என ஈழ எதிர்ப்புக் கூட்டங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையிலேயே ராஜீவின் கைகள் சுத்தமானவையா? என்றால் ஒரு போதும் இல்லை. அவர் தமிழ் இனத்தை மட்டுமல்ல, சீக்கிய இனத்தைக் கூட அழிக்கத்துணை நின்ற ஒரு இனப்படுகொலையாளி, ஊழல்வாதி!
தமிழினப் படுகொலையில் ராஜீவ்காந்தியின் பங்களிப்பு!
1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதை அடுத்து 1987 யூலை மாதம் தமிழர் தாயகத்திற்கு இந்தியப் படைகள் ”இந்திய அமைதி காக்கும் படைகள்” என்ற பெயரில் பெருமெடுப்பில் வந்து இறங்கின.
இந்தியப் படைகள் தமிழர் தாயகத்திற்கு வந்ததும், சிறிலங்கா இராணுவத்தினரின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு இந்தியா இராணுவத்தினரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.
இதனால் இந்தியப் படையினர் தங்களைப் பாதுகாப்பார்கள் என்ற தோற்றப்பாடு தமிழர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
இயக்கத்திடமிருந்து ஆயுதங்களை களைந்து அமைதியை ஏற்படுத்துவதாக சொல்லிக் கொண்ட இந்திய அமைதிப்படை மற்றும் உளவு அமைப்பான ரோ, மறுபுறமாக இங்கிருந்து தப்பிச்சென்று இந்தியாவில் ஒழித்திருந்த ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அமைப்புகளை மீள தமிழர் தாயகத்திற்கு அழைத்துவந்து அவர்களுக்கு பாரியளவில் ஆயுதங்களை வழங்கியிருந்தது.
இயக்கத்திடமிருந்து ஆயுதங்களை பறித்துவிட்டு ஏனைய தமிழ் ஒட்டுக்குழுக்களை வைத்து இயக்கம் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ஒழிப்பது தான் இந்தியப்படை மற்றும் ரோ இன் திட்டமாக இருந்தது. இந்தத் திட்டத்தை இயக்கம் உணர்ந்து கொண்டதாலும், இந்தியப்படைகளின் பின்னணியில் இயங்கிய ஒட்டுக்குழுக்கள், இயக்கத்தின் முகாம்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடாத்தத்தொடங்கியிருந்ததாலும் இந்தியப்படைகளின் தந்திர நடவடிக்கைப் பிழைத்துப் போனது.
அதனையடுத்து இந்தியப்படைகள் இயக்கத்தை அழிக்கிறோம் என சொல்லிக்கொண்டு போரை ஆரம்பித்தன. ஆனால் இயக்கத்தை அழிப்பதற்கு மாறாக தமிழ் மக்களை கொன்று குவிப்பதில்த் தான் இந்தியப்படைகள் அதிக முனைப்புடன் செயற்பட்டது.
அந்த வகையில் தமிழர் தாயகத்தில் இந்தியப்படைகள் செய்தி முக்கியமான சில சம்பவங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது!
🔴11.10.1987 - புதுக்காட்டுச் சந்தியில் பொதுமக்கள் மீது இந்தியப்படையினர் நடாத்திய தாக்குதலில் 8 தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
🔴12.10.1987 - கொக்குவில் பிரம்படி மற்றும் பொற்பதியில் இந்தியப்படைகள் நூறிற்கும் மேற்பட்ட தமிழர்களை உயிருடன் நிலத்தில் படுக்க வைத்து அவர்கள் மேல் டாங்கி வாகனங்களை ஏற்றிக் கொலை செய்திருந்தார்கள்.
🔴12.10.1987 - சுன்னாகம் மின்சார நிலையப்பகுதியில் இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 08 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
🔴20.10.1987 - சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் அடைக்கலம் புகுந்திருந்தவர்கள் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
🔴20.10.1987 - யாழ்ப்பாணம் நாவலர் பாடசாலையில் அடைக்கலம் புகுந்திருந்தவர்கள் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 17 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்
🔴21.10.1987 - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 21 வைத்தியசாலைப் பணியாளர்களும், 46 நோயாளிகளும் கொல்லப்பட்டனர்
🔴22.10.1987 - யாழ்ப்பாணம் அராலித்துறையில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 35க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்
🔴24.10.1987 - அச்சம் காரணமாக மக்கள் அடைக்கலம் தேடி தங்கியிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி அகதிகள் முகாம் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 40 தமிழர்கள் கொல்லப்பட்டனர்
🔴26.10.1987 - அளவெட்டி இந்து ஆச்சிரமத்தின் மீது இந்தியப்படைகள் நடாத்திய உலங்குவானூர்தித் தாக்குதலில் அங்கு தங்கியிருந்த முதியோர்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
🔴27.10.1987 - சாவகச்சேரி சந்தைப்பகுதியில் கந்தசஸ்டி விரதகால சூரன்போர் நிகழ்வின் மீது இந்தியப்படைகளின் இரு உலங்குவானூர்திகள் நடாத்திய தாக்குதலில் 68 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
🔴05.11.1987 - மூளாய் வைத்தியசாலை மீது இந்தியப்படைகள் நடாத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
🔴11.11.1987 - நெடுங்கேணியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள், கோவில்கள் மற்றும் கட்டடங்கள் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதல்களில் 15க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
🔴12.12.1987 - மட்டக்களப்பு பொதுச்சந்தை மீது இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 159க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். சந்தையிலிருந்த கடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. எரிந்துகொண்டிருந்த கடைகளுக்குள் இரு குழந்தைகள் உட்பட தமிழர்களின் சடலங்களும், உயிருடன் இருந்தவர்களும் தூக்கிப் போடப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களின் 31 பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏனையவர்கள் கடைகளுடன் சேர்ந்து எரிந்து சாம்பலாகினர்.
🔴17.01.1989 - வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் இந்தியப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
🔴02-04.08.1989 - வல்வெட்டித்துறையில் இந்தியப்படையினர் நடாத்திய தாக்குதல்களில் 66 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர்.
பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 8000க்கும் அதிகமான தமிழர்கள் இந்தியப்படைகளால் கொல்லப்பட்டிருந்தனர். உண்மையான தொகை அண்ணளவாக 15000 - 25000 வரை இருக்கலாம் என சொல்லப்படுகின்றது.
3500க்கும் அதிகமான தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தனர். இந்தியப்படைகளின் இவ்வாறான பாலியல் வன்புணர்வுகள் பற்றி மக்கள் இந்திய இராணுவத்தளபதியிடம் முறையிட்ட போது இவ்வாறான முறைப்பாடுகளுடன் யாரும் என்னிடம் வரவேண்டாம் என்றும், இந்தியப்படைகள் யாரையாவது சுட்டால் மாத்திரம் முறையிடவும் எனக் கூறியிருந்தார். அத்துடன் இக் காலப்பகுதியில் இந்தியப்படையினர் பரவலான பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததால் அதையொரு குற்றமாகக் கருதவேண்டாமென இந்திய இராணுவத்தளபதிகள் மக்களை நிர்ப்பந்தித்திருந்தார்கள்.
4000க்கும் அதிகமான தமிழர்கள் இந்தியப்படைகளால் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.
550,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருந்தனர்.
தமிழர்கள் பல பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் இந்தியப்படைகளால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
சீக்கிய இனத்தவர்கள் மீதான வன்முறைகள்!
31.10.1984அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, அவருடைய இரண்டு சீக்கிய இனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் பல இடங்களில் சீக்கிய இனத்தவர்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. அதனால் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கலவரங்களில் ஈடுபடவேண்டாமென காங்கிரஸ் உறுப்பினர்களை வேண்டிக்கொள்ளுமாறு இந்திராகாந்தியின் மகனான ராஜீவ்காந்தியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு ”பெரிய மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்” என சீக்கிய இனத்தவர்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறைகளை ராஜீவ்காந்தி நியாயப்படுத்தியிருந்தார். இது சீக்கிய இனத்தவர்கள் மீதான இனப்படுகொலையெனவும் வர்ணிக்கப்படுகின்றது.
அதைப்போலவே 21.10.1987அன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை மற்றும் பல இடங்களில் இந்திய இராணுவத்தினரால் பல தமிழர்கள் கொல்லப்பட்டு இரு வாரங்களின் பின்னர், இந்தியாவில் ஒரு கூட்டத்தில் பேசிய ராஜீவ் ”இலங்கையில் இந்தியப்படை சிறப்பாக செயற்படுகின்றது” எனக்கூறி தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மூடிமறைத்திருந்தார்.
1984இல் நடைபெற்ற போபால் விசவாயுக்கசிவிற்குக் காரணமானவர்களை தப்பிக்க வைத்தது, மற்றும் ஆயுதக்கொள்வனவில் ஊழல் என ராஜீவ் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்களும் உள்ளது.
ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது அவருடைய கட்சி முக்கியஸ்தர்கள் யாரும் அருகில் இருக்கவில்லை. இவ்வாறான பல விடயங்களால் ராஜிவ் மரணத்திற்கு உட்கட்சிப் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகங்கள் உண்டு
  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.