Jump to content

தமிழ்நாடு தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் கிராமங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் கிராமங்கள்

 • பி சுதாகர்
 • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் தமிழக கிராமங்கள்

தமிழ்நாட்டில் தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் சில கிராமங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தென்னை நார் மற்றும் நார்த்தூள்கள், மெத்தை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு மைதானத்திற்கும் கார்ப்பரேட் பண்ணைகளுக்கும் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பசுமைக்குடிலில் மண்ணின்றி காயர் பித்தை கொண்டு விவசாயம் செய்யவும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தத் தொழிற்சாலைகளில் நார்த்தூள்களை மூன்று முறை, புதிய நீர் கொண்டு உலர்த்துவதால் நிலம், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுடைந்து மக்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறி வருகிறது. மேலும், வாய்க்கால், ஆறுகளிலிருந்து இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யாமல் இதைச் செய்வதன் மூலம், வணிக நோக்கத்திற்காக தண்ணீர் திருட்டும் செய்துகொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இது குறித்து பேசிய மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கடந்த காலத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காத போதும், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், "முதல் கட்டமாக விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் குழுவை அமைத்து, இந்த மாதத்திற்குள் ஆய்வு செய்யவுள்ளோம்," என்றார்.

கோவை, திருப்பூர், ஈரோடு , திண்டுக்கல், தென்காசி, புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 'நீர்வளம்' அதிகம் இருக்கும் பகுதியிலேயே இந்தத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் தற்போது வரை 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், நீர், காற்று மாசுபட்டு, கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்ய முடியாமல், தொடர்ந்து அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

காயர் பித் கழிவுகள்

இயற்கை முறையில் தென்னை விவசாயம் செய்து வரும் சுமதி, "தேங்காய் மட்டையில் இருந்து, 40 சதவிகித நார்களை எடுப்பார்கள். மட்டையில் மீதம் உள்ள 60 சதவிகிதம் துகளைத்தான், காயர் பித் எனக் கூறுவார்கள். அதை நன்றாகக் கழுவி, கட்டியாக்கி ஹை ஈசி, லோ ஈசி என இரண்டு வகையாகப் பிரித்து ஏற்றுமதி செய்கின்றனர். ஹை ஈசி வகையைவிட லோ ஈசி வகையில் தான் லாபம் பலமடங்கு அதிகம்.

அதற்கு சுத்தமான நீர் அதிகமாகத் தேவை. காயர் பித் 8 மடங்கு அதிகம் தண்ணீரை உறிஞ்சும் தன்மையைக் கொண்டது. ஒரு கிலோ பித்தில் 30 லிட்டர் தண்ணீர் இருக்கும். விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய தண்ணீர் தான் இதற்குச் செல்கிறது.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் ஏக்கர் கணக்கில், மலைபோல மட்டைகள் மற்றும் பித்தை குவித்து வைத்திருப்பதைப் பார்க்க முடியும். இந்த இரண்டு முறைகளை விட, இடையகப்படுத்தல் (Buffering) எனப்படும் ரசாயனத்தின் மூலம் காயர் பித்தை கழுவும் முறை தற்போது அதிகரித்து வருகிறது.

காயர் போர்டு சார்பாக வெளியிடப்பட்ட இதழிலேயே, அதனால் ஏற்படும் கெடுதல்களையும் கூறியுள்ளனர். இது சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து. இந்தியாவிலேயே கேரளா தான் அதிகளவு தேங்காய் உற்பத்தி செய்கின்றனர். அங்கே இந்தத் தொழிலை சிவப்பு நிற பிரிவில் வைத்துள்ளதால், அங்கு இந்தத் தொழிற்சாலைகள் இயங்க முடியாது. அதனால் கேரளாவைச் சேர்ந்த பலர், இங்கு தொழிற்சாலை தொடங்கியுள்ளனர்.

 

தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து 4-வது இடத்தில்தான் தமிழ்நாடு உள்ளது. ஆனால் நாட்டில் உள்ள 50 சதவீத தொழிற்சாலைகள் பொள்ளாச்சியில்தான் உள்ளன

 

படக்குறிப்பு,

தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து 4-வது இடத்தில்தான் தமிழ்நாடு உள்ளது. ஆனால் நாட்டில் உள்ள 50 சதவீத தொழிற்சாலைகள் பொள்ளாச்சியில்தான் உள்ளன

தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து 4-வது இடத்தில்தான் தமிழ்நாடு உள்ளது. ஆனால் நாட்டில் உள்ள 50 சதவீத தொழிற்சாலைகள் பொள்ளாச்சியில்தான் உள்ளன. இந்தியாவில் உள்ள 50 சதவிகித காயர் பித் கழிவுகளை பொள்ளாச்சியில் கொட்டுகின்றனர்.

இந்தத் தொழிலைச் செய்யவே வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இல்லாமல், விதிகளைப் பின்பற்றி தொழில் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்," என்றார்.

தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி குமாராபாளையத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி பேசுகையில், நான்கு வருடங்களுக்கு முன்பு ஊர் மக்கள் பலரும் தன்னுடைய கிணற்று நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிவித்தார். நார் கப்பிகளைக் கொண்டு வந்து விவசாய நிலம் அருகே கொட்டுவதால், நான்கு ஆண்டுகளில் நிலத்தடி நீர் கெட்டு விட்டது. அதன் விளைவாக, உப்பு அளவு அதிகரித்து நீரைக் குடிக்கப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.

மேலும், "தண்ணீர் இல்லாமல் மரம் வாடிய காலம் போய் 'தண்ணீர் ஊற்றினால் மரம் காய்கிறது'. 350 தென்னை மரம் நட்டதில், வாரத்திற்கு இரு மரம் என இதுவரை 150 மரங்கள், முறிந்து விழுந்து விட்டன. இப்படியே போனால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை," என்றார்.

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடியைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில் 25 வருடங்களாக விவசாயம் மற்றும் பண்ணைக் கோழி வளர்த்து வருகிறார். தனது தோட்டத்து பண்ணை அருகே, காலி நிலத்தில் கொட்டப்பட்ட நார்த் தூள்களால், நிலத்தடி நீர் மாசுபட்டு நீரிலுள்ள திட கரைசல்களின் அளவு (TDS) 2300 க்கு மேல் இருக்கிறது.

 

நார்த் தூள்கள் தண்ணீர், உணவு மீது விழுவதால் கெட்டுப்போகிறது

 

படக்குறிப்பு,

நார்த் தூள்கள் தண்ணீர், உணவு மீது விழுவதால் கெட்டுப்போகிறது

இதனால் கோழிப் பண்ணைக்கும் கால்நடைகளுக்கும் தினமும் 3500 ரூபாய்க்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். குடிநீர் பிரச்சனையால் மாடுகள் எலும்பும் தோலுமாகியதால், 10 மாடுகளை வளர்க்க முடியாமல் விற்றுவிட்டதாகவும் மாசுபாடு குறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கண்ணன் கூறுகிறார்.

கோவை மாவட்டம் செஞ்சேரி மலையைச் சார்ந்த புஷ்பவள்ளி நம்மிடம் பேசும்போது, "நார்த் தூள்கள் தண்ணீர், உணவு மீது விழுவதால் கெட்டுப்போகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சுவாசம், தோல் பிரச்னை ஏற்படுவதால் உறவினர் வீட்டிற்குச் சென்று தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தோட்டத்தில் தண்ணீர் விடவும், காய் பறிக்கவும் முடியாமல் நார்த் தூள்கள் கண்ணில் விழுகிறது. இதைச் சரிசெய்து இயக்கச் சொல்ல வேண்டும் எனப் புகார் கொடுத்தால் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிவிட்டு நடவடிக்கை எடுப்பதில்லை," எனத் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்காவிற்கு உட்பட்ட மருதுறை கிரமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் பேசும்போது, "திருப்பூர் சாயக்கழிவுகளால் நொய்யல் ஆறு பாதிக்கப்பட்டது. இப்போது தென்னை நார் தொழிற்சாலைகளால், மருதுறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட இரண்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்தின் சார்பாக கிராமங்கள் முழுவதும் தென்னை நார் கழிவுகளை விவசாய நிலத்தில் கொட்டக்கூடாது என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கொட்டுவதல், 250 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. நார் தொழிற்சாலைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்தார்.

தொழிற்சாலைகளை மூடச் சொல்லவில்லை

எந்தவொரு விவசாயியும் தென்னை நார் தொழிற்சாலைகளை மூடச்சொல்லவில்லை. நீர், காற்று மாசுபட்டால், அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் தென்னை நார் மற்றும் நார்த் தூள்களை கட்டியாகத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டுமென்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

 

இந்தியாவில் தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி தொழிற்சாலைகள் 16816 தமிழகத்தில் 4608 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன

 

படக்குறிப்பு,

இந்தியாவில் தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி தொழிற்சாலைகள் 16816 தமிழகத்தில் 4608 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன

தென்னை நார்த்தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாடு குறித்து தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி பொருட்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சிவமுருகானந்தம், பொள்ளாச்சியில் 324 சிறு குறு நடுத்தர தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி தொழிற்சாலைகள் அனுமதி வாங்கிச் செயல்படுவதாகத் தெரிவித்தார்.

அதோடு, ஒரு சில பெரிய நார்த் தொழிற்சாலைகளால்தான் நீர் காற்று மாசுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். "அவர்கள் செய்யும் தவறுக்கு நாங்கள் பலியாகின்றோம். எங்கள் சங்கத்திலுள்ள 324 தொழிற்சாலைகளின் மொத்த வர்த்தகம், ஒரு பெரிய நிறுவனத்தின் வர்த்தகத்திற்குச் சம்மாக உள்ளது. மாநில, மத்திய அரசுகள் ஒரு குழுவை உருவாக்கி ஆய்வு செய்து, சிறு குறு தொழிற்சாலைகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று சிவமுருகானந்தம் கூறினார்.

இந்தியாவில் தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி தொழிற்சாலைகள் 16816 தமிழகத்தில் 4608 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தியா முழுவதும் 7.30,381 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். வருடத்திற்கு 7.6 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு 3778.9 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதாக காயர் வாரிய தேசிய தலைவர் குப்புராமு தெரிவித்தார். மேலும், "ஒரு சில தொழிற்சாலைகள் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த தொழிற்சாலைகளும் பாதிக்கப்படக்கூடாது. மத்திய மாநில அரசுகள் காயர் வாரியம், மாசுக் காட்டுப்பாடு வாரியம், உள்ளிட்ட அரசு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, ஆய்வு நடத்தி, அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்," என்றார்.

ஆரஞ்சு வகைப்பாட்டிற்கு மாற்றம்

தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், "சுற்றுசூழல் மாசுபடாமல், நீர் ஆதாரத்தை காப்பதற்காகத்தான், வெள்ளை நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிற வகைப்பாட்டிற்கு இந்தத் தொழிற்சாலைகளை மாற்றியிருக்கிறோம்.

எந்தவொரு தொழிலையும் முடக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்காது. தொழிற்சாலைகள் கழிவு நீரை வெளியேற்றினாலோ, மாசு ஏற்படுத்தினாலோ, வெள்ளை நிறத்தில் இருந்தால், மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஒன்றும் கேட்க முடியாது என்பது மட்டுமே இதை ஆரஞ்ச் வகைபாட்டிற்கு மாற்றியதற்கான முக்கியக் காரணம். தற்போது ஆரஞ்ச் வகைப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதால், ஒவ்வோர் தொழிற்சாலையையும் தொடர்ந்து கண்காணிக்க முடியும்," என்றார்.

 

பெரு நிறுவனங்கள் சராசரியாக ஒரு நாளுக்கு 100 டன் காயர்பித் ஏற்றுமதி செய்து வருகிறது

 

படக்குறிப்பு,

பெரு நிறுவனங்கள் சராசரியாக ஒரு நாளுக்கு 100 டன் காயர்பித் ஏற்றுமதி செய்து வருகிறது

"ஒரு தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு நாரை கழுவுவதற்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவழித்தால் மறுசுழற்சி செய்து 9 லட்சம் லிட்டர் தண்ணீரை மீண்டும் பயன்படுத்தலாம். இதனால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு, மாசுபடுவதும் குறைகிறது," என்று கூறியவர் இது குறித்து தொழிற்சாலைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் உள்ள பல நிறுவனங்களுக்கு, சீனா மற்றும் நெதர்லாந்து நாடுகளில் இருந்து முதலீடு இறக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் மண்வளம் இருக்காது. மேலும், காளான் போன்ற உணவுகள், மண்ணைவிட, தென்னை காயர் பித்தில் போட்டால் எளிதில் வந்துவிடும். இந்தக் காரணத்தால், வெளிநாட்டு விவசாயத்தை வாழ வைக்க, நம் விவசாய பூமியை அழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் .

இடையகப்படுத்தல் முறையில் செய்யப்படும் காயர் பித் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லோ ஈசி முறை காயர்பித் ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிறிய அளவில் இயங்கும் ஒரு தொழிற்சாலையே சராசரியாக நாளொன்றுக்கு 5டன் காயர்பித் ஏற்றுமதி செய்கிறது. பெரு நிறுவனங்கள் சராசரியாக ஒரு நாளுக்கு 100 டன் காயர்பித் ஏற்றுமதி செய்து வருகிறது.

நீர் திருட்டு, காற்று நீர் மாசுபாட்டால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் புகார்கள் என தென்னை நார்த் தொழிற்சாலைகளுக்கு எதிராக 30 வழக்குகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திலும் சில வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்திலும் இருக்கின்றன.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு, காயர் பித்களை சிமெண்ட் தரையில் பரப்பி நீரைப் பாய்ச்ச வேண்டும். அந்த தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். காயர் பித்கள் பறக்காமல் இருக்க மேற்கூரை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 15 விதிகளைக் கட்டாயமாக்கி இருக்கிறது. இதைக் கடைபிடித்தாலே சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும், தொழிற்சாலைகளும் பாதுகாப்பாக இயங்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-61486757

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நாங்கள் முன்பு…. சூரியாவும், கிங்ஸ்’ம் பாவித்தோம். நன்பர் ஒருவர்… இதனை பாவித்துப் பார்க்கச் சொன்னார். இன்று சமைத்த போது… மிளகாய்த் தூளுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் இதில் இருந்தது. பாவித்து விட்டு,  சொல்லுங்கள்… சுவியர். 🙂
  • பரந்தன் பூநகரி வீதி B357, மாங்குளம் வெள்ளாங்குளம் வீதி B269 இரண்டும் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.
  • "அதிமுக நெருக்கடிக்கு யார் காரணம்? சதி வலை பின்னியது யார்?" - மதுரையில் ஓபிஎஸ் பேட்டி 27 நிமிடங்களுக்கு முன்னர்   அ.தி.மு.கவில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், ' தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது, எவரால் இந்தச் சதி வலை பின்னப்பட்டது என்பதை உணர்ந்து மக்களே உரிய தீர்ப்பினை வழங்குவார்கள்' என்கிறார், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்கும் வகையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி புதிய பொதுக்குழு நடைபெற உள்ளதாகவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஒற்றைத் தலைமையை நோக்கி முன்னேறிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்பட்ட மைத்ரேயன், மா.ஃபா.பாண்டியராஜன், வேளச்சேரி அசோக் உள்ளிட்டவர்களையும் தன்பக்கம் வர வைத்தார். மேலும், தென்மாவட்டங்களில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோரின் ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வளைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பி.எஸ், தனது ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ' அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை. அதேநேரம், தீர்மானம் தொடர்பாக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது' என்றார். இதையடுத்து, இரவோடு இரவாக தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரியிடம் முறையிட்ட ஓ.பி.எஸ் தரப்பினர், இதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு கூறினர். இதன் தொடர்ச்சியாக நடந்த மேல்முறையீட்டு விசாரணையில், 'புதிதாக எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது' என நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியில் ஓபிஎஸ் முகாம் - ஓரம்கட்டுகிறாரா பிரதமர் நரேந்திர மோதி? அதிமுக பொதுக்குழுவில் நடந்தவை என்ன? - 10 முக்கியத் தகவல்கள் இதனால் ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பொதுக்குழு கூட்டத்தில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். தனக்கு மாலை போட வந்தவர்கள் மீதும் எடப்பாடி கோபத்தைக் காட்டினார். ஒருகட்டத்தில், 'ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்த பொதுக்குழுவை புறக்கணிக்கிறோம்' எனக் கூறிவிட்டு ஓ.பி.எஸ் தரப்பினர் வெளியேறினர். அப்போது ஓ.பி.எஸ் மீது பாட்டில் வீச்சு சம்பவமும் நடந்தது. இதையடுத்து, பொதுக்குழு நடந்த அன்றே டெல்லி விரைந்த பன்னீர்செல்வம், 25 ஆம் தேதி இரவு சென்னை திரும்பினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு, வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்ததால், அதற்காக ஓ.பி.எஸ் சென்றதாகக் கூறப்பட்டது.   தீவிரம் அடைந்த மோதல் அதேநேரம், வரும் ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் நடக்கவுள்ள பொதுக்குழுவை தடுப்பதற்கான சட்டரீதியான பணிகளில் ஓ.பி.எஸ் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்கள் வளையத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வத்தை தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் வரவேற்றனர். அப்போது பேசிய ஓ.பி.எஸ், 'எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். தொண்டர்களுடன் நான் என்றும் இருப்பேன். இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆரும் அம்மாவும் மனிதாபிமான இயக்கமாக வளர்த்தெடுத்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றனர். இதன்மூலம் 30 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதல்வராக நல்லாட்சியை நடத்தியுள்ளனர். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது? எவரால் இந்தச் சதி வலை பின்னப்பட்டது என்பதை உணர்ந்து மக்களே உரிய தீர்ப்பினை வழங்குவார்கள். அவர்களுக்கு எம்ஜி.ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் உரிய பாடத்தை வழங்குவார்கள்' என்றார். மேலும், 'எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகியோரின் இதயத்தில் இருந்து என்னை யாரும நீக்க முடியாது. பன்னீர்செல்வலம் போன்ற துய தொண்டனைப் பெற்றது என் பாக்கியம் என அம்மா கூறினார். இதைவிட வேறு என்ன வேண்டும்?' என்றார். இதையடுத்து, பேட்டியை முடித்துக் கொண்டு ஓ.பி.எஸ் கிளம்பியபோது, ' உங்களின் அரசியல் எதிர்காலம் என்ன?' என செய்தியாளர் ஒருவர் கேட்டார். இதற்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ், 'என்னுடைய எதிர்காலத்தை அம்மாவின் தொண்டர்களும் மக்களும் நிர்ணயிப்பார்கள்' என்றார். https://www.bbc.com/tamil/india-61942518
  • நேற்று நம்ம பக்கத்திலயும் பல கிலோ மீற்றருக்கு மக்கள் வரிசையில் பெற்றோலுக்கு காத்திருந்தவை, பாதிப்பேருக்கு மேல பெற்றோல் வாங்காமல் திரும்பினவை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.