கருத்துக்கள உறவுகள் nochchi பதியப்பட்டது May 19 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது May 19 (edited) ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் யேர்மனி மன்கைம் நகரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மாவீரர்களான கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன், பிரேமராஜன் மாஸ்டர் (தீட்ஷண;யன்- நாட்டுப்பற்றாளர்) ஆகியோரின் தாயாரான திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள் தனது 88 வது வயதில் ஜேர்மனியில் 18.05.2022 ஆம் நாளன்று காலமானார். கப்டன் மொறிஸ் - பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன்(ஐPமுகு) ஏற்பட்ட நேரடிமோதலின்போது வீரமரணத்தைத் தழுவியிருந்தார் . கப்டன் மயூரன் - இவர் எமது தேசியத்தலைவரின் பிரத்தியோக மெய்ப்பாதுகாவலராக பல ஆண்டகள் சேவையாற்றி 1993 இல் விடுதலைப் புலிகளால் சிறப்பாத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகாம் மீது தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின்பொழுது இம்ரான்- பாண்டியன் படையணியில் பங்காற்றி வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார். இவரின் பெயரால் மயூரன் பதுங்கிக் குறி பார்த்துச் சுடும் படையணி உருவாக்கம் பெற்றிருந்தது. பிரேமராஜன் மாஸ்டர்- இவர் ஒரு சிறந்த இலக்கியவாதியும், தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளரும்,ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்தவர். இவர் கவிஞர் தீட்ஷண;யன் என்னும் புனைபெயரில் இலக்கிய வட்டத்தில் அறியப்பட்டவர். இவருடைய படைப்புகளான கவியரங்கம், சிறுகதைகள் கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட புலனாய்வு நூல்கள் என்று பலவிடயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரோடு தனது பெரும் காலத்தைக் கழித்திருந்தார்.அதனால் பொதுவெளியில் அவர் அதிகம் அறிமுகமாகியிருந்தவரில்லை. இவருடைய மகனும் ஒரு மாவீரன். லெப் மொறிஸ்கானகன் (பரதன் பிரேமராஜன் ) ஆக இறுதியுத்தகாலப்பகுதியில் இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது புலனாய்வுத்துறை படையணியில் பங்காற்றி புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் வீரமரணத்தைத் தழுவியிருந்தார். அவர்களின் அப்பாவுடன் இணைந்து அம்மாவின் போராட்டப் பங்களிப்பு என்பது பிள்ளைகளை நாட்டுக்காக உவந்தளித்ததுமட்டுமல்லாமல் வவுனியாவில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இராணுவ நெருக்கடி மத்தியிலும் Pடுழுவுநு தேசவிரோத அணியினரின் முகாமுக்கு முன் வீட்டில் இருந்துகொண்டு புலனாய்வுப் போராளிகளை உபசரித்து இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த போராளிகளை உணவூட்டி பாதுகாத்தும் அனுப்பியுமிருந்தார். அம்மாவும் சில காலத்துக்கு முன்னர் தனது வாழ்வியலின் அனுபவத்தை ஒரு புத்தகமாக('பெருநினைவின் சிறுதுளிகள்') எழுதி வெளியிட்டிருந்தார். அவரும் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை அப்புத்தகம் வாயிலாக நிறுவியுமிருந்தார். யேர்மனி நாட்டில் எமது தமிழ்ச் சிறார்களுக்குப் பல காலமாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழியங்கும் மன்கைம் தமிழாலயம் ஊடாக எமது தாய்மொழியை சிறப்பாகப் போதித்தும்வந்திருந்தார். மேலும் அம்மாவின் இரு பெண்பிள்ளைகள்( திருமதி சந்திரவதனா செல்வக்குமாரன் மற்றும் திருமதி சந்திரா ரவீந்திரன் ) எமது தேசம் சார்ந்த படைப்புகளை (கவிதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், ஐடீஊ இல் வானொலி நிகழ்ச்சிகள் ) படைத்திருந்ததோடு தாயகம் சார்ந்து தமிழர் புனர்வாழ்வு கழக யேர்மன் கிளையினுடாக பல தாயகம் சார்ந்த தன்னார்வத் தொண்டுகளையும் சிறப்பாக ஆற்றியுமிருந்தனர். அம்மா சிறிதுகாலம் மன்கைம் நகரப் பிரதிநிதியாகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. Edited May 19 by nochchi 2 1 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted May 19 கருத்துக்கள உறவுகள் Share Posted May 19 கண்ணீர் அஞ்சலிகள். அவர் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted May 19 கருத்துக்கள உறவுகள் Share Posted May 19 (edited) 39 minutes ago, nochchi said: மேலும் அம்மாவின் இரு பெண்பிள்ளைகள்( திருமதி சந்திரவதனா செல்வக்குமாரன் மற்றும் திருமதி சந்திரா ரவீந்திரன் ) எமது தேசம் சார்ந்த படைப்புகளை (கவிதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், ஐடீஊ இல் வானொலி நிகழ்ச்சிகள் ) படைத்திருந்ததோடு தாயகம் சார்ந்து தமிழர் புனர்வாழ்வு கழக யேர்மன் கிளையினுடாக பல தாயகம் சார்ந்த தன்னார்வத் தொண்டுகளையும் சிறப்பாக ஆற்றியுமிருந்தனர். அம்மா சிறிதுகாலம் மன்கைம் நகரப் பிரதிநிதியாகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல மாவீரர்களை தந்த, அம்மாவிற்கு… கண்ணீர் அஞ்சலிகள். இவரின் மகள் சந்திரவதனாவும், கருத்துப் படங்களை வரையும்… மருமகன் கவி அருணாசலமும், யாழ்.கள உறுப்பினர்கள் என்பது, குறிப்பிடத் தக்கது. உங்கள் துயரத்தில், நாமும்…. பங்கு கொள்கின்றோம். Edited May 19 by தமிழ் சிறி 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted May 19 கருத்துக்கள உறவுகள் Share Posted May 19 என்ன கொடுமை குடும்பமே போராளிக் குடும்பமாகவல்லவா இருந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். தகவலுக்கு நன்றி நொச்சி. 1 hour ago, தமிழ் சிறி said: பல மாவீரர்களை தந்த, அம்மாவிற்கு… கண்ணீர் அஞ்சலிகள். இவரின் மகள் சந்திரவதனாவும், கருத்துப் படங்களை வரையும்… மருமகன் கவி அருணாசலமும், யாழ்.கள உறுப்பினர்கள் என்பது, குறிப்பிடத் தக்கது. உங்கள் துயரத்தில், நாமும்…. பங்கு கொள்கின்றோம். மேலதிக தகவல்களுக்கு நன்றி சிறி. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் Posted May 19 கருத்துக்கள உறவுகள் Share Posted May 19 கண்ணீர் அஞ்சலிகள்….! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நந்தன் Posted May 19 கருத்துக்கள உறவுகள் Share Posted May 19 கண்ணீர் அஞ்சலிகள் அம்மா Link to comment Share on other sites More sharing options...
யாயினி Posted May 20 Share Posted May 20 ஆழ்ந்த அனுதாபங்கள் Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted May 20 Share Posted May 20 கண்ணீர் அஞ்சலிகள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் alvayan Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 கண்ணீர் அஞ்சலிகள் அம்மா Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நிலாமதி Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 மாவீரர்களைப் பெற்ற வீரத்தாய்க்கு என் கண்ணீர் அஞ்சலிகள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் சாமானியன் Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 வணக்கங்களும் அஞ்சலிகளும்…. அம்மாவையும் குடும்பத்தினரையும் ஓரளவு அறிவேன். பக்கத்து ஊர், மற்றும் எனது சகோதரனும் அம்மாவின் மகன்மாரில் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள்;ஒன்றாக பலகாலம் கடமை புரிந்தவர்கள். அம்மா உங்களினதும் உங்கள் குடும்பத்தினரதும் பங்களிப்புகளுக்கு சிரம் சாய்த்து நன்றி சொல்லிக் கொள்கின்றோம். படைப்பில் இருந்தவை எதுவுமே நிரந்தரமாக மறைவதில்லை என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான் . எதோ ஒரு நேரத்தில் எதோ ஒரு வடிவில் உங்கள் நினைவுகளின் நிஜங்களை காண்பீர்கள் அம்மா. அதுவரை எங்கிருந்தாலும் நலமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் அம்மா… 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 கண்ணீர் அஞ்சலிகள் அம்மா Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 (edited) 4 hours ago, ஈழப்பிரியன் said: என்ன கொடுமை குடும்பமே போராளிக் குடும்பமாகவல்லவா இருந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். தகவலுக்கு நன்றி நொச்சி. மேலதிக தகவல்களுக்கு நன்றி சிறி. ஈழப்பிரியன்…. மூன்று பிள்ளைகளயும், நாட்டுக்காக கொடுத்துவிட்டு… அந்த அம்மா ஜேர்மனியில்…. ஒரு நகரத்துக்கும் பொறுப்பாளராக இருந்துள்ளார் எனும் போது, அவர் தாய் நாட்டை, எவ்வளவு தூரம் நேசித்து உள்ளார் என்று அறியலாம். அவர் இயற்கை எய்திய திகதி கூட…. மே 18 என்பது, ஆச்சரியமான விடயம். Edited May 20 by தமிழ் சிறி 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kandiah57 Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 கண்ணீரஞ்சலிகள் அம்மா Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஜெகதா துரை Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 ஆழ்ந்த அனுதாபங்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Paanch Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 அம்மாவை உயிரோடு சந்தித்து அளவளாவி அவரது வீர வாழ்க்கை பற்றியும், போராட்ட வாழ்வுபற்றியும் நேரில் அறியும் பாக்கியம் பெற்ற பேற்றை எண்ணும்போது அவர் மறைவின் துன்பத்தையும் மீறி மனதில் ஒரு உத்வேகம் எழத்தான் செய்கிறது. மறைவு துன்பத்தைத் தந்தாலும் மறைந்த தினம் ஏதோ ஒன்றை உணர்த்தி நிற்கிறது. தமழீழம் வளர உரமாக்கப்பட்ட மக்களோடு என் ஆத்மாவும் இணையவேண்டும் என்று இந்த நாளைத் தேர்ந்தெடுத்து இணைந்தவர்போல் தெரிகிறார். பிள்ளைகளைப் பெற்று அவர்களைத் தமிழின விடுதலைக்காக மாவீரர்களாக்கிய அந்த அன்னையின் ஆன்மா சாந்திபெற வேண்டுகிறேன். அன்னையைப்பற்றி அறியாதவர்கள் அறிவதற்கு அவரது பிள்ளைகள், மருமகனின் வெளியீடுகளான மனஓசை, சிவா தியாகராசாவின் பெருநினைவின் சிறுதுளிகள், மூனாவின் நெஞ்சில் நின்றவை போன்ற வெளியீடுகளிலிந்து படித்து அறியலாம். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் வாதவூரான் Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 கண்ணீர் அஞ்சலிகள். அவர் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Ahasthiyan Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 அம்மாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 கண்ணீர் அஞ்சலிகள் மாவீரர்களைப் பெற்ற வீரத்தாய்க்கு, அன்னையின் ஆன்மா சாந்திபெற வேண்டுகிறேன் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Hana Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 கண்ணீர் அஞ்சலிகள் # Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted May 20 Share Posted May 20 கண்ணீர் அஞ்சலி. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted May 20 கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nochchi Posted May 20 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted May 20 அமரர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு. Posted on May 20, 2022 by சமர்வீரன் 62 0 அமரர் திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு கீழ்வரும் முகவரியில் 23.5.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம். Funeral place Krematorium Am Waldfriedhof Schwäbisch Hall GmbH & Co. Rinnener Sträßle 95 74523 Schwäbisch Hall அமரர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு. – குறியீடு (kuriyeedu.com) Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts