Jump to content

மாவீரர்களான கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன், பிரேமராஜன் மாஸ்டர் (தீட்ஷண;யன்- நாட்டுப்பற்றாளர்) ஆகியோரின் தாயாரான திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா காலமானார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Paanch said:

அம்மாவை உயிரோடு சந்தித்து அளவளாவி அவரது வீர வாழ்க்கை பற்றியும், போராட்ட வாழ்வுபற்றியும் நேரில் அறியும் பாக்கியம் பெற்ற பேற்றை எண்ணும்போது அவர் மறைவின் துன்பத்தையும் மீறி மனதில் ஒரு உத்வேகம் எழத்தான் செய்கிறது. மறைவு துன்பத்தைத் தந்தாலும் மறைந்த தினம் ஏதோ ஒன்றை உணர்த்தி நிற்கிறது. தமழீழம் வளர உரமாக்கப்பட்ட மக்களோடு என் ஆத்மாவும் இணையவேண்டும் என்று இந்த நாளைத் தேர்ந்தெடுத்து இணைந்தவர்போல் தெரிகிறார்.

பிள்ளைகளைப் பெற்று அவர்களைத் தமிழின விடுதலைக்காக மாவீரர்களாக்கிய அந்த அன்னையின் ஆன்மா சாந்திபெற வேண்டுகிறேன்.🙏

அன்னையைப்பற்றி அறியாதவர்கள் அறிவதற்கு அவரது பிள்ளைகள், மருமகனின் வெளியீடுகளான மனஓசை, சிவா தியாகராசாவின் பெருநினைவின் சிறுதுளிகள், மூனாவின் நெஞ்சில் நின்றவை போன்ற வெளியீடுகளிலிந்து படித்து அறியலாம்.   

எனக்கும் அன்னையோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு உறுதிமிக்கவர். தன்னுடைய பிள்ளைகள் சிலரை விடுதலைத்தீயில் ஆகுதியாக்கிவிட்டுத் துவண்டுவிடாத துணிவுமிக்வராகவே நான் காண்கின்றேன். இயற்கையுள் யாக்கை கலந்துவிடப் புகழுடலாய் வாழும் அன்னையின் கனவு நனவாகட்டும். அகமேந்திய இரங்கல் உரித்தாகுக.

  • Like 1
Link to comment
Share on other sites

9 hours ago, nochchi said:

அமரர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.

இறுதி வணக்க நிகழ்வில் 40பேர் மட்டுமே பங்குபற்ற நகரம் அனுமதித்துள்ளதாக அறிந்தேன், ஆகவே பங்குபற்ற விரும்புபவர்கள், நிகழ்வுக்குப் பொறுப்பானவர்களுடன் முன்கூடியே தொடர்பு கொண்டு செல்லவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு - அனைத்துலகத் தொடர்பகம்.

breaking

20.05.2022

சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில்  ஜேர்மன் நாட்டில் மன்கைம் நகரத்தில்,  தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளராய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காகத் தொடர்ந்து பயணித்த சிவகாமசுந்தரி ஆசிரியர்  என்று பலராலும் அறியப்பட்டவரை 18.05.2022  அன்று நாம் இழந்துவிட்டோம்.

தமிழீழ தேசம் விடுதலைக்காகப் போராடுகின்றபோது, பல அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஒரு தாயாக எமது  விடுதலைப்போராட்டத்திற்கு எத்தகைய பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதை நன்குணர்ந்து செயற்பட்டவராவார். 

நெருக்கடியான இராணுவ ஆக்கிரமிப்புக் காலங்களில் போராளிகளுக்கான காப்பரணாகவிருந்து உணவு, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விடுதலைப்போராட்டத்திற்குப் பலம் சேர்த்தவராவார். 

தாயகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்தபோதும், எமது மக்களின் விடுதலைக்காகவும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்பதற்காக தேசிய செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டது மட்டுமல்லாது, எமது மாணவர்களின் தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்காகக் கல்விக்கழகத்தின் ஊடாகத்  தமிழாலயத்தில் இணைந்து நீண்டகாலம் செயலாற்றிய நல்லாசானாவார். 

மாவீரர்களின் தியாகங்களையும், தாயகமக்களின் விடுதலை அவாவையும் தன்னுள்தாங்கித் தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு தேசியப்பணியாற்றிய  இவரை  நாம் இழந்துவிட்டோம். அன்னாரின் இழப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் இவரிடம் கல்விகற்ற மாணவர்களுக்கும் குடும்பத்தினரிற்கும் பேரிழப்பாகும். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் சிவகாமசுந்தரி தியாகராஜாஅவர்களின் தேசப்பற்றுமிக்கச் செயற்பாட்டிற்காக ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். 

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

அனைத்துலகத் தொடர்பகம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

XKofNnHLovSzT7bcXWQ1.jpg

https://www.thaarakam.com/news/e07abc35-88dc-4359-95b5-0418255b46a7

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.