-
Tell a friend
-
Topics
-
Posts
-
அட இவரே ஆள்! எங்கடை ஊரிலை மரநாய் கோழியளை புடிச்சுக்கொண்டு போட்டுது எண்டுவினம். ஆனால் இதுவரைக்கும் மரநாயை கண்ணாலை கண்டதில்லை 😁
-
இப்படியான சம்பவங்கள் ஐரோப்பிய நாடுகளும் நடைபெறுவதுண்டு.கூடுதலாக மலிந்த/போலியான மதுபானங்களே இதற்கு காரணம் என சொல்வர்.
-
By தமிழ் சிறி · Posted
பல பிராணிகளை மிரட்டிய… மரநாய், பூனையிடம் மாட்டுப் பட்டுப் போனார். -
By Nathamuni · பதியப்பட்டது
உபத்திரவ நாய்: மரநாய். காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels மிக மோசமான ஒரு உபத்திரவ விலங்கு. மிகவும் துணிச்சல் மிக்கது. தன்னிலும் பார்க்க மிகவும் பெரிய விலங்குகளையே உண்டு, இல்லை என்று பண்ணி விடும். சாப்பிட முடியுமோ இல்லையோ, கொல்ல முடியுமோ இல்லையோ, அரிக்கண்டம் கொடுப்பதில் கில்லாடி. கோழிக்கூட்டினுள் புகுந்து, முட்டையினை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடுகிறது. பாம்பினை கூட பொறுத்த இடத்தில் பிடித்து, அலற வைக்கிறது. பெரும்பாலும், கழுத்தை குறி வைத்து கவ்விக் கொள்வதால், பாதிக்கப்படும் விலங்குகள், ஒன்றுமே செய்ய முடியாமல், தடுமாறி, அங்கும் இங்கும் ஓடும். உருளும், புரளும். 😯 இந்த வீடியோவில், தாய் பறவை இல்லாத நேரத்தில், ஒரு மரப்பொந்தினுள் புகுந்து, குஞ்சுகளை தூக்கி வெளியே வீசுகிறது. ஏன் அவ்வாறு செய்கிறது என்று அதுக்கே தெரியாது. எலியின் வாலை பிடித்து இழுக்கிறது. தண்ணீரில் பாய்ந்து, நண்டை பிடித்துக்கொண்டோடுகிறது. அதிலும் பார்க்க, பெரிய முயல்களை பாடாக படுத்துகிறது, சுண்டெலிக்கு விளையாட்டு, பூனைக்கு சீவன் போகுது கதை. 🤭 ஒரு மரங்கொத்திப் பறவையியினை கொலை செய்ய அதன் கழுத்து நோக்கி பாய, அது முதுகில் சுமந்தவாறே பறந்தோட, அதனை ஒருவர் கிளிக் செய்ய, அது சிறந்த புகைப்படமாகி, உலகளாவிய ரீதியில் viral ஆகியது. மரங்கொத்திப் பறவையின் கண் சொன்ன திகில்.... உலகளாவிய ரீதியில் பேசப்பட்டது. அதன் பின்பே, இந்த மிருகம் குறித்து உலகமே தெரிந்து கொண்டது.
-
Recommended Posts