Jump to content

அவுஸ்ரேலிய பிரதமராக... அந்தனி அல்பனிஸ், தெரிவு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு

அவுஸ்ரேலிய பிரதமராக... அந்தனி அல்பனிஸ், தெரிவு.

நேற்று இடம்பெற்ற அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சியில் இருந்து அவுஸ்ரேலியாவின் பிரதமராக ஒருவர் தெரிவாகியுள்ளார்.

இந்த தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்கொட் மொரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தனி ஆல்பனிஸ் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவியிருந்தது.

அவுஸ்ரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மொத்த 151 உறுப்பினர் இடங்களில் 76 இனை கைப்பற்ற வேண்டியது அவசியமாகும்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அந்தனி அல்பானிஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 இடங்களை கைப்பற்றியதுடன், 55 இடங்களை ஸ்கொட் மொரிசன் கட்சி பெற்றுக்கொண்டது.

15 இடங்களை சுயாதீன மற்றும் ஏனைய கட்சிகள் கைப்பற்றியுள்ளன. ஆனால் அவரது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில் காலநிலை கொள்கையில் பெரிய மாற்றத்துடன் நாட்டை ஒரு புதிய திசையில் கொண்டு செல்வதாக புதிய பிரதமர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

https://athavannews.com/2022/1283242

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி : புதிய பிரதமராகிறார் அந்தனி அல்பானீஸ்

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித்தலைமையிலான கூட்டணி அதிக ஆசனங்களை வென்றுள்ளது.

Australian election: Anthony Albanese set to take power as Scott Morrison  concedes defeat | The Scotsman

தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தோல்வியடைந்துள்ளது.

அவுஸ்திரேலிய பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. 

Australia election: Labor party leader Albanese claims victory | Elections  News | Al Jazeera

151 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்துக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சிக் கூட்டணி 73 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஆளும் லிபரல் கட்சிக் கூட்டணிக்கு 51 ஆசனங்கள் கிடைத்துள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் 10 பேர் வெற்றியீட்டியுள்ளர்.

இதனால் தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தனி அல்பானீஸ் (Anthony Albanese) அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசன் இத்தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதுடன் தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தனி அல்பானீஸுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Australia set to go to polls in expected close election- The New Indian  Express

சுமார் ஒரு தசாப்த காலத்தில் அவுஸ்திரேலிய தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

நாளை மறுதினம் திங்கட்கிழமை தனது தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாக அந்தனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

Australia election: Scott Morrison concedes, Anthony Albanese next prime  minister | RNZ News

இதேவேளை, இன்னும் இரு தினங்களில் ஜப்பானில் நடைபெறவுள்ள குவாட் உச்சிமாநாட்டிலும் தான் பங்குபற்றவுள்ளதாகவும் அந்தனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

New-Prime-Ministerof-Australia-Anthony-A
 
https://www.virakesari.lk/article/127928

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதி அந்தஸ்து கிடையாதவர்கள் மகிழ்ச்சியடைகிறார்களாம்.
வாய்ப்பிருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

Australia election: Scott Morrison concedes, Anthony Albanese next prime  minister | RNZ News

New-Prime-Ministerof-Australia-Anthony-A

புதிய அவுஸ்திரேலிய பிரதமர், 
எல்லாப் படங்களிலும்... 🐕‍🦺 நாய்க் குட்டியுடன் 🐕 நிற்கிறார். 

இவரது கட்சியின் சின்னம் நாய்க்குட்டியா..? அல்லது...
செந்தமிழன் சீமான், கலைஞர் கருணாநிதி மாதிரி...
இவரும்  நாய்க்குட்டி பிரியரா... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

73+10+51=134......,151_134=17

இந்த 17 இடங்களிலும் எந்தக் கட்சி வெற்றி பெற்றது 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

73+10+51=134......,151_134=17

இந்த 17 இடங்களிலும் எந்தக் கட்சி வெற்றி பெற்றது 😄

151= 72 பாட்டாளி கட்சி + 51 வலது சாரி கட்சி+ 10 சுயாதீனம் + 2 பச்சை கட்சி + 2 மற்ற கட்சிகள் + 14 முடிவுகள் தபால் வாக்களிப்பு முடிவுகளை எதிர்பார்த்துள்ளமயால் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 3 தவணைகள் liberal ஆட்சி கொண்டிருந்தது அடிமட்ட உழைப்பாளர்களின் ஊதிய உயர்வை கட்டுப்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்தியினை அடையலாம் என்ற அடிப்படையில் வருமான கட்டுப்பாடுகளை பிரயோகித்து வந்திருந்தது.

இதனால் வருமான பங்கீடு மக்களிடயே சரியான விகிதத்தில் பங்கீடு செய்யப்படாதநிலைல்யில் ஒரு சிறிய தொகுதி மக்கள் நாட்டின் 63% வளத்தினை கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது ( இது நீண்டகால நிகழ்வு).

ஏற்கனவே ஊதிப்பெருத்த balance sheet ஐ வைத்திருக்கும் மத்திய வங்கி, 43 வருட குறைந்த வேலையின்மை வீதம் ,கொவிட் QE.

வீட்டு விலை உள்ளடங்கலாக அனைத்து விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் பெரும்பான்மை சாதாரண மக்களால் அவர்களது வீடுகளைக்கூட காப்பாற்ற முடியாது.

ஆனால் அதிகரிக்கும் பண்வீக்கத்தினை கட்டுப்ப்டுத்த வேண்டும் அத்துடன் பாட்டாளி மக்களின் வருமானத்தினையும் உயர்த்த வேண்டும் அவ்வாறு உயர்த்தினால் அது மேலும் பணவீக்கத்தினை தூண்டும்.

அவுஸ்ரேலியா மற்ற நாடுகளைப்போல பொருளாதார நெருக்கடிக்குள் உள்ள நிலையில் புதிய அரசு அமைந்துள்ளது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2022 at 17:01, ஏராளன் said:

அகதி அந்தஸ்து கிடையாதவர்கள் மகிழ்ச்சியடைகிறார்களாம்.
வாய்ப்பிருக்கா?

பொதுவாக பாட்டாளி கட்சி அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கொள்கையுடைய கட்சி, கடந்த காலங்களில் எதிர்கட்சிகள் அக்கட்சிக்கெதிராக அதனை ஒரு ஆயுதமாகப்பாவித்திருந்தனர், வாக்களிப்புநாளில் (சனிக்கிழமை), இலங்கையிலிருந்து ஒரு படகு அவுஸ்ரேலியாவிற்கு வந்துள்ளது என liberal கட்சி, மக்களின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது.

அந்தளவுக்கு அகதிகள் விவகாரம் அவுஸ்ரேலியாவில் அரசியலாக்கப்படுகிறது, இந்த நிலையில் இந்த புதிய அரசு அகதிகளுக்கு சார்பானநிலை எடுக்காது என்பது தெளிவாகும்.

குறிப்பாக இலங்கையிலிருந்து வரும் அகதிகளை பொருளாதார அகதிகள் என போர் முடிவிற்கு பின்னர் முத்திரை குத்திவிட்டார்கள், ஆனால் அதற்கு முன்னர் வந்தவர்கள் நிலமை வேறாக இருக்கலாம்.

பல்வேறு தரப்பு மக்களை அவுஸ்ரேலியாவில் பார்த்துள்ளேன், என்னைப்பொறுத்தவரை தமிழர்கள் போல நேர்மையான, கடுமையான உழைப்பாளிகளை பார்த்ததில்லை, அவுஸ்ரேலியா இவர்களுக்கு புகழிடம் கொடுத்தால், அவுஸ்ரேலியாவின் பொருளாதாரத்திற்கே அதிக நன்மை (எனது தனிப்பட்ட கருத்து).

பெரும்பாலும் மக்கள் நகர்ப்புறங்களிலே குடியிருக்க விரும்புகின்ற நிலையில் கிராமப்புற விவசாய  பகுதிகளில் வேலை ஆட் களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

https://www.smh.com.au/politics/federal/labor-to-investigate-asylum-seeker-boat-arrival-as-frontbench-takes-shape-20220523-p5ansx.html

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, vasee said:

பொதுவாக பாட்டாளி கட்சி அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கொள்கையுடைய கட்சி, கடந்த காலங்களில் எதிர்கட்சிகள் அக்கட்சிக்கெதிராக அதனை ஒரு ஆயுதமாகப்பாவித்திருந்தனர், வாக்களிப்புநாளில் (சனிக்கிழமை), இலங்கையிலிருந்து ஒரு படகு அவுஸ்ரேலியாவிற்கு வந்துள்ளது என liberal கட்சி, மக்களின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது.

அந்தளவுக்கு அகதிகள் விவகாரம் அவுஸ்ரேலியாவில் அரசியலாக்கப்படுகிறது, இந்த நிலையில் இந்த புதிய அரசு அகதிகளுக்கு சார்பானநிலை எடுக்காது என்பது தெளிவாகும்.

குறிப்பாக இலங்கையிலிருந்து வரும் அகதிகளை பொருளாதார அகதிகள் என போர் முடிவிற்கு பின்னர் முத்திரை குத்திவிட்டார்கள், ஆனால் அதற்கு முன்னர் வந்தவர்கள் நிலமை வேறாக இருக்கலாம்.

பல்வேறு தரப்பு மக்களை அவுஸ்ரேலியாவில் பார்த்துள்ளேன், என்னைப்பொறுத்தவரை தமிழர்கள் போல நேர்மையான, கடுமையான உழைப்பாளிகளை பார்த்ததில்லை, அவுஸ்ரேலியா இவர்களுக்கு புகழிடம் கொடுத்தால், அவுஸ்ரேலியாவின் பொருளாதாரத்திற்கே அதிக நன்மை (எனது தனிப்பட்ட கருத்து).

பெரும்பாலும் மக்கள் நகர்ப்புறங்களிலே குடியிருக்க விரும்புகின்ற நிலையில் கிராமப்புற விவசாய  பகுதிகளில் வேலை ஆட் களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

இன்றும் ஒரு கப்பல் 67 பேருடன் திருகோணமலையில் இருந்து,
அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட ஆயத்தமாக… பிடி பட்டு விட்டது.

சென்ற கிழமை 40 பேருடன் ஒரு கப்பல் பிடிபட்டது.
பெரிய சமுத்திரத்தை கடக்க இருக்கும்… வள்ளங்களை பார்க்க, பயமாக இருக்கும்.

ஒரு பெரிய அலைக்கு…. தாக்குப் பிட்டிக்குமா என்று யோசிக்காமல், உயிரை பணயம் வைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான் உயிரை பணயம் வைக்குமளவிற்கு அவுஸ்ரேலியா ஒரு சொர்க்கமல்ல ( எனது தனிப்பட்ட கருத்து).

படகில் வருபவர்களின் விண்ணப்பங்களை எவ்வாறு அவுஸ்ரேலிய அரசு எடுத்து கொள்கிறது என தெரியவில்லை ஆனால் கடுமையான கொள்கையை கடைப்பிடிக்க சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆனால் சட்ட ரீதியாக வேறு வடிவங்களில் வருவது சிறந்த முடிவு என நினக்கிறேன், அண்மையில் எமது குடும்ப நண்பர் ஒருவரது சகோதரி ஒருவர் பார்வையாளர் அனுமதியில் வந்து, மாணவ அனுமதி எடுத்துள்ளார். காலப்போக்கில் அதனூடாக வதிவிட அனுமதி பெற்றுவிடலாம் என நம்பிக்கையிலுள்ளார்கள். இது எந்தளவிற்கு சாத்தியமாகும் எனத்தெரியவில்லை?

அத்துடன் இங்குள்ள பல வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழர்கள் புதிதாக வருபவர்கள் மீது வெறுப்புடன் காணப்படுகிறார்கள், நான் அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்பத்தில் என்னுடன் கதைத்த, பல வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழர் ஒருவர், கடைசியாக சொன்னார், அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழாக்கள் மற்ற நாட்டில் உள்ள எங்கடை ஆக்கள் போல் இல்லை, ஏனெண்டால் இங்கை இதுக்கு முந்தி இருந்த ஆக்கள் எல்லாம் படித்த ஆக்கள் எண்டு சொன்னார் (எனது கல்வி விபரங்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டு விட்டார்).

அவர் என்னைதான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என தெரிந்தாலும், தெரியாதபோல கடந்துவிட்டேன்.

இன்னொருவர் இங்கு தமிழர்கள் செறிவாக வாழும் பகுதியில் தெருக்களில் நிகழும் வழிப்பறிகளுக்கு புதிதாக வருபவர்களை குறை சொல்லுவார் (அதற்கு எந்த ஆதாரமுமில்லாமலேயே).

அத்துடன் புதிதாக வருபவர்களை அடிமட்ட (அடிப்படை கூலியின் அளவினை விட மிக குறைவான கூலி) சம்பளத்தில் எம்மவர்கள் வேலை வாங்கும் நிலை காணப்படுகிறது, அவர்களுக்கும் சட்ட ரீதியாக வேலை செய்வதில் பிரச்சினை இருக்கலாம்.

இன்னும் சிலர் முகத்திற்கு நேராகவே சொல்வார்கள் " நீங்கள் எல்லாம் இலங்கையில ஒரு பிரச்சினையில்லாவிட்டால் இங்கை உங்களால் வந்திருக்கவே முடியாது என்று, (அவர்கள் மாணவ அனுமதியில் வந்து பின்னர் அகதியாக அனுமதி பெற்றவர்கள் என்பது எமக்கு தெரியாது என நினைத்து கொள்வார்கள்).

  • Like 4
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோசமான சூழ்நிலையை காரணம் காட்டி ஒரு 5 வருடங்கள் வேலை செய்யும் விசா வழங்கி பொருளாதார ரீதியில் கொஞ்சம் நாடும் வீடும் முன்னேறிய பின் மீள இலங்கை வர அனுமதிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

உண்மைதான் உயிரை பணயம் வைக்குமளவிற்கு அவுஸ்ரேலியா ஒரு சொர்க்கமல்ல ( எனது தனிப்பட்ட கருத்து).

படகில் வருபவர்களின் விண்ணப்பங்களை எவ்வாறு அவுஸ்ரேலிய அரசு எடுத்து கொள்கிறது என தெரியவில்லை ஆனால் கடுமையான கொள்கையை கடைப்பிடிக்க சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆனால் சட்ட ரீதியாக வேறு வடிவங்களில் வருவது சிறந்த முடிவு என நினக்கிறேன், அண்மையில் எமது குடும்ப நண்பர் ஒருவரது சகோதரி ஒருவர் பார்வையாளர் அனுமதியில் வந்து, மாணவ அனுமதி எடுத்துள்ளார். காலப்போக்கில் அதனூடாக வதிவிட அனுமதி பெற்றுவிடலாம் என நம்பிக்கையிலுள்ளார்கள். இது எந்தளவிற்கு சாத்தியமாகும் எனத்தெரியவில்லை?

அத்துடன் இங்குள்ள பல வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழர்கள் புதிதாக வருபவர்கள் மீது வெறுப்புடன் காணப்படுகிறார்கள், நான் அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்பத்தில் என்னுடன் கதைத்த, பல வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழர் ஒருவர், கடைசியாக சொன்னார், அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழாக்கள் மற்ற நாட்டில் உள்ள எங்கடை ஆக்கள் போல் இல்லை, ஏனெண்டால் இங்கை இதுக்கு முந்தி இருந்த ஆக்கள் எல்லாம் படித்த ஆக்கள் எண்டு சொன்னார் (எனது கல்வி விபரங்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டு விட்டார்).

அவர் என்னைதான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என தெரிந்தாலும், தெரியாதபோல கடந்துவிட்டேன்.

இன்னொருவர் இங்கு தமிழர்கள் செறிவாக வாழும் பகுதியில் தெருக்களில் நிகழும் வழிப்பறிகளுக்கு புதிதாக வருபவர்களை குறை சொல்லுவார் (அதற்கு எந்த ஆதாரமுமில்லாமலேயே).

அத்துடன் புதிதாக வருபவர்களை அடிமட்ட (அடிப்படை கூலியின் அளவினை விட மிக குறைவான கூலி) சம்பளத்தில் எம்மவர்கள் வேலை வாங்கும் நிலை காணப்படுகிறது, அவர்களுக்கும் சட்ட ரீதியாக வேலை செய்வதில் பிரச்சினை இருக்கலாம்.

இன்னும் சிலர் முகத்திற்கு நேராகவே சொல்வார்கள் " நீங்கள் எல்லாம் இலங்கையில ஒரு பிரச்சினையில்லாவிட்டால் இங்கை உங்களால் வந்திருக்கவே முடியாது என்று, (அவர்கள் மாணவ அனுமதியில் வந்து பின்னர் அகதியாக அனுமதி பெற்றவர்கள் என்பது எமக்கு தெரியாது என நினைத்து கொள்வார்கள்).

உண்மைதான் vasee… எனது உறவினர்கள் பலர் Europeல் இருக்கிறார்கள் அவர்கள் கூறும் விடயங்களையும் இங்கே எங்களவர்கள் சகதமிழர்களை நடத்தும் விதத்தையும் பார்த்திருக்கிறேன்.. இங்கே உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் இந்த எண்ணங்கள் என்பது விளங்குவதில்லை.. 

கல்வி என்பது மனிதர்களின் பண்பை வளர்க்க உதவ வேண்டும் ஆனால் இ்ங்கே அதை காண்பது அரிது.. இது எனது தனிப்பட்ட எண்ணம்.. அனுபவத்தினால் உணர்ந்தது..

எனது நண்பர்கள் Canadaவிற்கு student visaவிலும் skilled visa விலும் போய்விட்டார்கள்.. போகும் பொழுது கூறிய காரணங்கள் நீங்கள் மேலே எழுதியவையே.. இ்ங்கே உள்ள தமிழர்களில் பெரும்பலானவர்கள் வித்தியாசமானவர்கள்

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான் vasee… எனது உறவினர்கள் பலர் Europeல் இருக்கிறார்கள் அவர்கள் கூறும் விடயங்களையும் இங்கே எங்களவர்கள் சகதமிழர்களை நடத்தும் விதத்தையும் பார்த்திருக்கிறேன்.. இங்கே உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் இந்த எண்ணங்கள் என்பது விளங்குவதில்லை.. 

கல்வி என்பது மனிதர்களின் பண்பை வளர்க்க உதவ வேண்டும் ஆனால் இ்ங்கே அதை காண்பது அரிது.. இது எனது தனிப்பட்ட எண்ணம்.. அனுபவத்தினால் உணர்ந்தது..

எனது நண்பர்கள் Canadaவிற்கு student visaவிலும் skilled visa விலும் போய்விட்டார்கள்.. போகும் பொழுது கூறிய காரணங்கள் நீங்கள் மேலே எழுதியவையே.. இ்ங்கே உள்ள தமிழர்களில் பெரும்பலானவர்கள் வித்தியாசமானவர்கள்

எமது இடத்தில் இந்த பிரச்சனையிருக்கு, ஆனா நாங்கதான் கூடுதல் என்பதால் யாரும் மற்றவர்களை கண்டுகொள்ளவதில்லை,😂🤣😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

எமது இடத்தில் இந்த பிரச்சனையிருக்கு, ஆனா நாங்கதான் கூடுதல் என்பதால் யாரும் மற்றவர்களை கண்டுகொள்ளவதில்லை,😂🤣😎

 அக்கரைக்கு இக்கரை பச்சை உடையார் அண்ணா!! மற்றைய இடங்களிலும் பிரச்சனைகள் இருக்ககூடும்!! 

மற்றைய நாடுகளில் உள்ள தமிழர்கள் கூட எப்படி என இருப்பரர்கள் என்பதற்கு அவர்களுடன் வாழ்ந்து பார்த்தில்லை.. நான் ஊருக்கு போகும் சமயங்களில் ஜரேப்பாவில் இருந்து வரும் எனது cousins, மற்றும் நட்பு வட்டத்தில் பழகிய முறைகளை வைத்தும் இங்கே எனது தனிப்பட்ட அனுபவங்களை வைத்தே என் கருத்து அமைந்திருந்து.. எனது கருத்து தவறாகவும் இருக்கலாம்

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2022 at 08:27, vasee said:

இன்னும் சிலர் முகத்திற்கு நேராகவே சொல்வார்கள் " நீங்கள் எல்லாம் இலங்கையில ஒரு பிரச்சினையில்லாவிட்டால் இங்கை உங்களால் வந்திருக்கவே முடியாது என்று, (அவர்கள் மாணவ அனுமதியில் வந்து பின்னர் அகதியாக அனுமதி பெற்றவர்கள் என்பது எமக்கு தெரியாது என நினைத்து கொள்வார்கள்).

இப்படி சொல்லிப்பாருங்கள்.

இருக்கலாம். நாங்கள் வரும் போதே முன்கதவால் தான் தட்டி விட்டு வந்தோம். அவுஸ் கதவை திறந்தது. இருக்கிறோம். அவுஸ் உம் அதன் தேவையை பொறுத்தே என்னை போன்றவர்களுக்கு கதவை திறக்கிறது. 

நீங்கள்  அவுஸ் க்கு தேவையான student விசா முன்கதவால் வந்து,  அகதி என்ற பின்கதவால் படிப்பு தந்த அவுஸ் ஐ பேய்க்காட்டி வென்று   விட்டதாக நினைக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் படிப்புக்கு கொடுத்த பணம், அவுத்திரேலியாவில் குடியேறிவதற்கு, அதுவும் பின்கதாவால். அதை வைத்தே, உங்கள் பின்கதவு  அவுஸ்க்கு தெரிந்து இருந்தும், இருக்க விட்டு இருக்கிறது. (இதுவே பொதுவாக இப்பொது அவுஸ் செய்கிறது.) 

தெரிநந்து இருந்தால், கதைக்க வாயெடுக்க மாட்டார்கள் என்று  நினைக்கிறன்.

அவுஸ் இல் உள்ள ஓர்   கலாநிதி  எனக்கு  கதை விட்டார். அனால், அவர் migration இல் சென்றவர்.

அவருக்கு நான் சொன்னது, அவுஸ்க்கு தேவை இல்லாமல் உங்களை அவுஸ் உள்ளுக்கு விட்டதா? கதை முடிந்தது அத்துடன். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2022 at 09:04, vasee said:

151= 72 பாட்டாளி கட்சி + 51 வலது சாரி கட்சி+ 10 சுயாதீனம் + 2 பச்சை கட்சி + 2 மற்ற கட்சிகள் + 14 முடிவுகள் தபால் வாக்களிப்பு முடிவுகளை எதிர்பார்த்துள்ளமயால் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

77 இடங்களை கைப்பற்றி பெரும்பாண்மை பலத்துடன் பாட்டாளி கட்சி பதவிக்கு வருகிறது.. நீங்கள் கவனித்தீர்களாக Brittany Higgins பிரச்சனையும், பழைய அரசாங்கத்தின் தோல்விக்கு ஒரு காரணம், அதனால்தான் என்னவோ, புதிய பிரதமர் தனது அரசாங்கத்தில் 10 பெண்களை அமைச்சர்களாக நியமித்து அவுஸ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 
 
அதுமட்டுமல்ல, அதில் Linda Burny Indigenous Affairs அமைச்சராக பணியாற்றும் முதல் பெண்மணிமற்றும் இரண்டாவது பழங்குடியினர் ஆவார். அதே போல Anne Aly முதலாவது முஸ்லீம்  பெண் அமைச்சர். இம்முறை அவுஸ்ரேலிய அரசாங்கம் கண்ணை கவரும் விதமாகவும் தடலடியாகவும் பல மாற்றங்களை கொண்டு வருவதுபோன்ற தோற்றம் .. பொறுத்திருந்து பார்ப்போம் 

https://amp.smh.com.au/politics/federal/record-number-of-women-in-albanese-s-first-cabinet-20220531-p5apwd.html

அதே போல பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களின் அரசியல் பிரவேசமும் முன்னைவிட அதிகரித்துள்ளது.. 

https://www.sbs.com.au/nitv/article/2022/05/23/these-first-nations-politicians-are-headed-canberra-1

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@vasee, நீங்கள் இங்கே இணைத்த அவுஸ்ரேலிய பொருளாதாரத்தைப்பற்றிய சில links இணையத்தில் ஏற்பட்ட தடங்கல்களால் காணாமல் போய்விட்டது. மீண்டும் ஒரு முறை இணைக்கமுடியுமா?

நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@vasee, நீங்கள் இங்கே இணைத்த அவுஸ்ரேலிய பொருளாதாரத்தைப்பற்றிய சில links இணையத்தில் ஏற்பட்ட தடங்கல்களால் காணாமல் போய்விட்டது. மீண்டும் ஒரு முறை இணைக்கமுடியுமா?

நன்றி. 

அவுஸ்ரேலியா எதிர் கொள்ளும் பொருளாதார சிக்கல்கள்

1. பணவீக்கம்

2. பொருளாதார மந்த நிலை

பணவீக்கம் ஏற்படுவதற்கான காரணி கோவிட் பொருளாதார தூண்டல் மற்றும் உக்கிரேன் போர்.

https://www.ceicdata.com/en/indicator/australia/money-supply-m2

பொதுவாக புளக்கத்தில் உள்ள பணத்தின் அளவினை விட பணத்தின் சுழற்சி அதிகமாகக்காணப்படும்.

உதாரணமாக அரசு 1000 டொலரினை அச்சடித்து வெளியிட்டிருந்தாலும் அதனை விட அதிக பெறுமதியில் பணசுழற்சி ஏற்படும்,

அது எவ்வாறு நிகழ்கிறது?

அதே 1000 டொலர் பணத்தினை ஒரு வங்கியில் வைப்பிடும்போது வைப்பீட்டாளர் கணக்கில் 1000 டொலரும் அதில் ஒரு குறிப்பிட்ட விகிதம் இருப்பாக (Reserve) உதாரணமாக 10% எனில் 100 டொலரினை வைப்பாக எடுத்துக்கொள்வார்கள், மிகுதி 900 டொலரினை வட்டி அல்லது முதலீடுகளில் இடுவர்.

$1000= M0 என்பார்கள்

$1000+100= MB என்பார்கள்

1000+900= M1 என்பார்கள்.

M1+ திரவத்தன்மை அதிகமான முதலீடுகள = M2 (1900+ X)

ஆனால் உண்மையாக 1000 டொலர்தான் அச்சடிக்கப்பட்டிருக்கும். ஒரு பலூன் போல அதன் பெறுமதி வங்க்யினூடாக அதிகரிக்கப்படும்.

இந்த M2 Money supply கோவிட் காலத்தில் எவ்வாறு அதிகரித்துள்ளது என காட்டுகிறது.

அரசுகளின் முக்கிய பொருளாதார கொள்கைகள்

1. Sustainable employment

2. Price stability

https://www.investopedia.com/terms/p/phillipscurve.asp 

நியுசிலண்ட் பொருளியல் நிபுணரால் தத்துவ ரீதியாக வேலயின்மை விகிதத்திற்கும் பணவீக்கத்திற்குமிடையேயான தொடர்பு நிறுவப்பட்டது.

அதாவது வேலையின்மை குறையும் போது பணவீக்கம் அதிகரிக்கும், வேலையின்மை அதிகரிக்கும் போது பணவீக்கம் குறையும்.

1.5 -2 வீதம் பணவீக்கம் (Ideal), வேலையின்மை வீதத்தினை குறைவாக வைத்திருப்பதுடன் பொருள்களின் விலைகளையும் உறுதியாகப்பேணும்.

இதனை Anchored inflation expectations என்பார்கள்.

அரசுகள் அதற்கேற்ப Monetary policy, Fiscal policy தீர்மானிகின்றன.

இந்த பிலிப்ஸ் வளைவு புதிதாக பணம் அச்சடிப்பதனூடாக ஏற்படும் Stagflation கையாளாது.

தற்போது அவுஸ்ரேலியா உட்பட உலகலாவிய நிலையில் கோவிட் மற்றும் உக்கிரேன் யுத்தம் stagflation உருவாக்கி விட்டது ?

அவுஸ்ரேலியாவின் பணவீக்கம் 5.1%, இந்த பணவீகம் தனிநபர்களை மட்டுமல்ல உற்பத்தி துறையினயும் பாதிக்கும் (உற்பத்தி செலவு அதிகரிக்கும்)

https://tradingeconomics.com/australia/manufacturing-pmi

https://www.abs.gov.au/statistics/economy/national-accounts/australian-national-accounts-national-income-expenditure-and-product/latest-release

ஏற்கனவே பொருளாதாரம் மந்த நிலையினை அடைகிறது இவை அனைத்தும் வேலையின்மையினை அதிகரிக்கும்.

அது மட்டுமில்லாமல் வேலை வழங்குனர் இதுவவரை காலமும் வேலை செய்பவர்களின் ஊதிய அதிகரிப்பினை கடந்த ஆட்சிகாலத்தில் செய்யாமல் இருந்தனர் ஆனால் அப்போது நிலமை வேறு பணவீக்கம் அதிகரிப்பு இல்லை.

தற்போது வேலை வழங்குனர் 5.1 விகித பணவீக்கத்திற்கெதிராக அதிக பட்சமாக 3% ஊதிய உயர்வு மட்டுமே வழங்க முடியும் என கூறிவிட்டார்கள் (பல் நிறுவனங்களில் அதுவும் இல்லை).

இந்த 2%, பிலிப்ஸ் வளைவு தத்துவத்தின்படி வேலையின்மையினை உருவாக்கும்.

ஆனால் ஊதிய உயர்வு ஏற்படாவிடினும், பணவீக்கத்தினை கையாள வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்.

ஏற்கனவே அதிகரித்த வீட்டு விலை, பொருள்களின் விலை அதிகரிப்புள்ள நிலையில், வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் போது ஊதிய உயர்வு அதற்கேற்ப வகையில் அதிகரிக்கவேண்டும் ஆனால் நிலமை அவ்வாறில்லை.

இவை அனைத்தும் அவுஸ்ரேலிய பொருளாதாரத்தின் எதிர்மறையான நிகழ்வு.

உங்களது கருத்துக்கு பதில் அளித்த பின்புதான் அவதானித்தேன் அவுஸ்ரேலியாவில் உள்ள  சுரங்கத்துறையில் புதிய அரசு வந்த பின் பல புதிய சுரங்க அகழ்வும், அதற்கான புதிய நிறுவனங்களும் உருவாகி வருகின்றதை அறிய முடிந்தது 2007 இலிருந்த பாட்டாளிக்கட்சி காலத்தில் சுரங்க அகழ்வு அதிகரித்து அவுஸ்ரேலிய டொலர் அமெரிக்க டொலரின் பெறுமதியினை விட அதிகரித்தது போல நிகழ வாய்ப்புள்ளது.

AUDUSD மாதாந்த வரைபடமும் அதற்கேற்ற வகையில் உள்ளது (Technical analysis .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, vasee said:

ஏற்கனவே அதிகரித்த வீட்டு விலை, பொருள்களின் விலை அதிகரிப்புள்ள நிலையில், வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் போது ஊதிய உயர்வு அதற்கேற்ப வகையில் அதிகரிக்கவேண்டும் ஆனால் நிலமை அவ்வாறில்லை.

உண்மைதான் புதிய அரசாங்கம் உள்நாட்டில் பல பிரச்சனைகளுடன்தான் பதவியேற்றுள்ளது. அதனால்தான் புதிய அமைச்சர்களும் இயன்றளவில் விளங்கப்படுத்துகிறார்கள் என செய்திகளை பார்க்கும் பொழுது உணரமுடிகிறது. 

அதே போல புதிய பிரதமரது இந்தோனேசிய பயணம் ஓரளவிற்கும் சுமூகமாக முடிந்ததாக வாசித்தேன். இது அவுஸ்ரேலிய பொருட்களை ஏற்றுமதி செய்ய கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள், முக்கியமாக சீனாவின் அவுஸ்ரேலிய பொருட்களுக்கான தடையை, இது ஓரளவிற்கு உதவும் என. புதிய வெளிவிவகார அமைச்சரின் பசுபிக் பிராந்திய தீவுகளுக்கான பயணமும் ஓரளவிற்கு நன்மையில் முடிந்துள்ளது. சீனாவிற்கும் 10 பசுபிக் பிராந்திய நாடுகளுக்குமிடையில் உடன்படிக்கை எட்டவில்லை.. இப்படி சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளது.. ஆனாலும் இந்த புதிய அரசாங்கம் நிறைய சவால்களை எதிர்நோக்கத்தான் போகிறது. 

RBA வட்டி விகித உயர்வு அறிவிப்பு வெளியானவுடன் 4 முக்கிய வங்கிகளும் தங்களது வீட்டு கடனிற்கான வட்டி விகித த்தை உயர்த்திவிட்டன. இன்று மற்றைய வங்கிகளும், வீட்டு கடன் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. ஆனாலும் நீங்கள் எதிர்பார்கிறீர்களா வீட்டு விலைகள் சடுதியாக குறையும் என? இந்த விலை இறக்கம், First Home buyersற்கு உதவுமா? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் வீட்டின் விலை குறையப்போவ்தில்லை என நினைக்கிறேன், லிபரலின் 50000 சுப்பர் காசினை முதலாவது வீடு வாங்குபவர்கள் பயன்படுத்தலாம் என்ற திட்டம் ஒரு நல்ல திட்டம் அது நடைமுறையில் வந்தால் வீட்டின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும்..

பணவீக்கத்தினால் உண்மையான மொத்த தேசிய வருமானம் நடைமுறை தேசிய வருமானத்தினை விட குறைந்து செல்கிறது, அதே போல் வீட்டு விலைகள் கூட குறைந்துவிட்டதாகவே கருதுகிறேன்.

ஆனால் இடது சாரி பாட்டாளிக்கட்சியினது பொருளாதார கொள்கையினை (Fiscal policy) Keynesian model என்பார்கள்.

அது எவ்வாறு செயற்படுகிறது என்றால் அரசின் செலவு 1 பில்லியன் என்றால் அது அப்படியே மக்களிடையே வந்து சேருகிறது (Circular Flow).

அது பின்னர் மொத்த தேசிய வருமானத்தினை பல மடங்காக்குகிறது. (Keynesian multiplier).

பொருளாதார வளர்ச்சி ஏற்படும்போது வீட்டு விலைகளும் அதிகரிக்கும்.

அரசு வீட்டு விலைகளை குறைக்க ஏதாவது புதிய திட்டங்களை ஏற்படுத்தினால்தான் வீட்டு விலை குறைய வாய்ப்பு உண்டு என கருதுகிறேன், தற்போதய வட்டி விகித அதிகரிப்பு மக்களின் செலவினை சுருக்கினால் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு ஆனால் சேமிப்பின் அளவினை குறைத்து செலவினை குறைக்காவிட்டால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என கருதுகிறேன்.

நேரம் இன்மையால் சுருக்கமாகக்கூறியுள்ளேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2022 at 23:04, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான் புதிய அரசாங்கம் உள்நாட்டில் பல பிரச்சனைகளுடன்தான் பதவியேற்றுள்ளது. அதனால்தான் புதிய அமைச்சர்களும் இயன்றளவில் விளங்கப்படுத்துகிறார்கள் என செய்திகளை பார்க்கும் பொழுது உணரமுடிகிறது. 

அதே போல புதிய பிரதமரது இந்தோனேசிய பயணம் ஓரளவிற்கும் சுமூகமாக முடிந்ததாக வாசித்தேன். இது அவுஸ்ரேலிய பொருட்களை ஏற்றுமதி செய்ய கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள், முக்கியமாக சீனாவின் அவுஸ்ரேலிய பொருட்களுக்கான தடையை, இது ஓரளவிற்கு உதவும் என. புதிய வெளிவிவகார அமைச்சரின் பசுபிக் பிராந்திய தீவுகளுக்கான பயணமும் ஓரளவிற்கு நன்மையில் முடிந்துள்ளது. சீனாவிற்கும் 10 பசுபிக் பிராந்திய நாடுகளுக்குமிடையில் உடன்படிக்கை எட்டவில்லை.. இப்படி சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளது.. ஆனாலும் இந்த புதிய அரசாங்கம் நிறைய சவால்களை எதிர்நோக்கத்தான் போகிறது. 

RBA வட்டி விகித உயர்வு அறிவிப்பு வெளியானவுடன் 4 முக்கிய வங்கிகளும் தங்களது வீட்டு கடனிற்கான வட்டி விகித த்தை உயர்த்திவிட்டன. இன்று மற்றைய வங்கிகளும், வீட்டு கடன் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. ஆனாலும் நீங்கள் எதிர்பார்கிறீர்களா வீட்டு விலைகள் சடுதியாக குறையும் என? இந்த விலை இறக்கம், First Home buyersற்கு உதவுமா? 

முக்கிய 4 வங்கிகளும் தமது வீட்டு விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக் சிட்னி மோர்னிங் கேரல்டில் கட்டுரை வந்திருந்தது.

அதில் குறிப்பாக வெஸ்ட்பக் வங்கி ஆய்வாளர் 10% இலிருந்து 20% வரை விலை வீழ்ச்சி அடையலாம் என எதிர்பார்க்கிறார்.

பணவீக்கம் ஆண்டிறுத்க்குள் 6% எட்டும் எனவும் அதனால் ஏற்படப்போகும் வட்டி விகித அதிகரிப்பினடடிப்படையிலேயே வீட்டு விலை தொடர்பான எதிர்வு கூறியிருந்தனர்.

அதே நேரம் மே மாதத்தில் கடனட்டையில் செய்யப்படும் செலவு குறைவடைந்துள்ளது (கடனட்டை வட்டி வீதம் பெரும்பாலும்  இந்த வட்டி விகித அதிகரிப்பால் மாற்றம் ஏற்படாதது என நினைக்கிறேன் ஏனெனில் ஏற்கனவே அதிகரித்த வட்டியில்தான் கடனட்டை உள்ளது ( என்னிடம் கடனட்டை இல்லை அதனால் விபரம் தெரியாது).

சில்லறை வர்த்தக செலவீடு இந்த வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தது, அதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

RBA  புள்ளி விபரப்படி கட்டுமான விலைகள் அதிகரித்துள்ளது, பொருள்களை எடுத்து செல்லும் செலவு 2019 இலிருந்ததை விட 5 மடங்காக அதிகரித்துள்ளது அத்துடன் 35% காலவிரயம் பொருள்களை நகர்த்துவதில் ஏற்பட்டுள்ளது.

வீடுகள் காலியாக உள்ள நிலை குறைவடைந்துள்ளதுடன் வீட்டிற்கான வழங்கல் குறைவடைந்துள்ளது.

இவற்றினடிப்படையில் பார்க்கும்போது வீட்டின் விலைகள் 10% இலிருந்து 20% வரை வீழ்ச்சியடையுமா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

வீட்டு விலைகள் குறையும் என்றுதான் நம்புகிறேன். கடந்த நிதியாண்டு(21/22) கடன் வழங்கல் நடவடிக்கைகளில் பாரிய மாற்றங்கள் இல்லை. எதிர்பார்த்த அதிகரிப்பும் இல்லை. மேலும் நேற்று காமன்வெல்த் வங்கி வீட்டுக் கடனிற்கான fixed rate 1.4% சடுதியாக உயர்த்திவிட்டது. இனி மற்ற வங்கிகளும் இதனை பின் தொடரலாம். கடந்த சில வாரங்களாக வணிக கடன் வீதங்களும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

மேலும் நீங்கள் கூறியபடி கட்டுமான விலைகள் அதிகரித்துள்ள அதே நேரம் Metricon போன்ற பிரபல்யமான கட்டிட நிறுவனத்தின் நிலையும், வேறு சில விக்டோரியா கட்டிட நிறுவனங்களும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன. இதனால் வங்கிகளும் சில புதிய விதிகளை கொண்டுவருகிறது. எல்லாமே சிக்கலாக உள்ளது.. 

அத்துடன் விலைவாசி ஏ்ற்றத்திற்கு ஏற்ப சம்பள அதிகரிப்பும் இல்லை. Inflation rate விட minimum wage rate மிகவும் குறைவாகவே உள்ளது. Inflation rate சரியாக minimum wage rate கூட்டினாலும் பிரச்சனைதான்

இவையெல்லாம் சேர்ந்து வீட்டின் விலையில் தாக்கத்தை செலுத்தும் என நினைக்கிறேன். 

இங்குள்ள 4 முக்கிய வங்கிகளின் பொருளியல் வல்லுனர்களில் Westpacன் Chief Economist Bill Evans தான் இந்த துறையில் மிக நீண்டகால அனுபவம் உடையவர்(30 வருட காலம்), இன்று வரை அவரது எதிர்வுகூறல்கள் பிழையானது இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்😊.. 

வீட்டு விலை குறைவடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும் கூட, நான் அவதானித்த வகையில் நீங்கள் ஒரு துறைசார் பொருளாதார கல்வி பின்புலம் கொண்டவர் என கருதுகிறேன்.

பொருளாதாரத்தில் பொருள்களை  வகைகளாகப்பிரிப்பர் என கருதுகிறேன்.
1. அத்தியாவசிய பொருள்கள், பழக்கவழக்க பொருள்கள்
2. ஆடம்பரப்பொருள்கள்

முதலாவது விலை மாற்றம் ஏற்பட்டாலும் அதற்கான தேவைகள் (Demand) குறையாது, இரண்டாவது வகை விலை மாறும் போது தேவைகள் (Demand)மாறும்.

மதுபானம், புகைதலில் வரி விதிப்பதற்கான காரணமாக கூறப்படுவது அதனாலேயே.

இதனை நீங்கள் முதலிலேயே படித்திருக்கக்கூடும்.

எனக்கு இந்த விடயத்தில் ஆளமான அறிவிலை, அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

வீடு கூட ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டதோ தெரியாது, வீட்டிற்கான தேவைகள் மாறவில்லை என கருதுகிறேன்.

ஆனால் புற பொருளாதார சூழலுக்கு மக்கள் தம்மை மாற்றி கொள்கிறார்கள் என்பது கடனட்டை மீதான செலவீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சில்லறை வர்த்தகத்தில் மக்கள் செலவீடு குறைவடைந்துள்ளதை காட்டுகிறது (Consumer confidence).

வீடு கட்டும் ஒருவரிடம் கதைத்த போது சொன்ன ஒரு விடயம் வீட்டு கட்டுமானப்பொருளின் விலை கடந்த ஒரு வருடத்தில் 40 சத விகிதத்தால் அதிகரித்துள்ளதாக கூறினார்.

2014 இல் ஒரு வீட்டின் Frame (42 mm) $40000 இருந்த விலை தற்போது 100000 - 120000 வரை உள்ளது என கூறினார்.

2014 இல் ஒரு தரமான வீட்டை கட்ட  சதுர மீற்றர் ஒன்றிற்கு $1000 செலவாகும் என கூற்யிருந்தார், இப்போதுள்ள நிலை கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளது ($1200 இலிலும் கட்டலாம்).

2014 காலப்பகுதியில் என்னுடன் வேலை செய்தவர், 2014 பின்னர் வீடுகள் கட்டி விற்பது அவரது தொழிலாக மாறிவிட்டது.

ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளை விட புதிதாகக்கட்டப்படும் வீடுகள் தற்போதய விலையினை விட 40% அதிகரித்த விலையிலேயே கட்டமுடியும்.

Westpac கணிப்புபடி சந்தை விலையில் 10 - 20 விகிதம் சரிவடைதல் என்பது நடைமுரையில் புதிதாகக்கட்டப்படும் வீட்டின் விலைகளுக்கு 50% விகிதத்தில் இலிருந்து 60% வரை குறைவடையும் (புதிதாகக்கட்டப்படும் வீடுகள் தற்போதய விலையினை விட 40% அதிகரித்த விலை) அதற்கு வாய்ப்பில்லை எனக்கருதுகிறேன்.

இந்த காரணங்களினாலேயே விலை இறங்க வாய்ப்பிருப்பதாக நான் நம்பவில்லை, மற்றது 2020 முதல் காலாண்டில் அவுஸ்திரேலிய அரசு மொத்த தேசிய உற்பத்தி -7% சரிந்த போது, அவுஸ்ரேலியா பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் என்று அவுஸ்ரேலிய அரசு கூறியிருந்த போது அப்படி நடக்காது என்று நான் எதிர்வு கூறியிருந்தேன்😀.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளை விட புதிதாகக்கட்டப்படும் வீடுகள் தற்போதய விலையினை விட 40% அதிகரித்த விலையிலேயே கட்டமுடியும்.

Westpac கணிப்புபடி சந்தை விலையில் 10 - 20 விகிதம் சரிவடைதல் என்பது நடைமுரையில் புதிதாகக்கட்டப்படும் வீட்டின் விலைகளுக்கு 50% விகிதத்தில் இலிருந்து 60% வரை குறைவடையும் (புதிதாகக்கட்டப்படும் வீடுகள் தற்போதய விலையினை விட 40% அதிகரித்த விலை) அதற்கு வாய்ப்பில்லை எனக்கருதுகிறேன்.

இந்த காரணங்களினாலேயே விலை இறங்க வாய்ப்பிருப்பதாக நான் நம்பவில்லை, மற்றது 2020 முதல் காலாண்டில் அவுஸ்திரேலிய அரசு மொத்த தேசிய உற்பத்தி -7% சரிந்த போது, அவுஸ்ரேலியா பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் என்று அவுஸ்ரேலிய அரசு கூறியிருந்த போது அப்படி நடக்காது என்று நான் எதிர்வு கூறியிருந்தேன்😀

புதிதாக வீடு கட்ட தொடங்குபவர்கள் நீங்கள் கூறியபடி பல பிரச்சனைகளை எதிர்வுகொள்கிறார்கள். ஆனாலும் எத்தனை வீதமாக குறைந்துள்ளது என்ற தரவை நான் கவனிக்கவில்லை. விலை அதிகரித்துள்ளது அது மட்டுமல்ல கட்டட துறையிலும் வீழ்ச்சி உள்ளது. 

இங்கே நான் இணைத்துள்ள செய்தி இணைப்புகளில் கூட வீட்டின் பெறுமதி குறைந்து வருகிறது எனவும் இன்னொரு வட்டி வீத உயர்வையும் கூறியுள்ளார்கள்.. 

பார்ப்போம்..

https://amp.smh.com.au/property/news/home-values-drop-as-interest-rates-costs-of-living-squeeze-buyers-20220630-p5axxh.html

https://7news.com.au/politics/borrowers-set-for-another-big-rate-rise-c-7387520.amp

3 hours ago, vasee said:

நான் அவதானித்த வகையில் நீங்கள் ஒரு துறைசார் பொருளாதார கல்வி பின்புலம் கொண்டவர் என கருதுகிறேன்.

உங்களைப்போல ஆழமாக விஷயங்களை அறிவதில்லை, ஆனாலும் அடிப்படை அறிவு கொஞ்சம் உள்ளது. அவ்வளவுதான். மற்றப்படி இவற்றை வாசிப்பது ஒரு ஆர்வத்தினால் மட்டுமே. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

புதிதாக வீடு கட்ட தொடங்குபவர்கள் நீங்கள் கூறியபடி பல பிரச்சனைகளை எதிர்வுகொள்கிறார்கள். ஆனாலும் எத்தனை வீதமாக குறைந்துள்ளது என்ற தரவை நான் கவனிக்கவில்லை. விலை அதிகரித்துள்ளது அது மட்டுமல்ல கட்டட துறையிலும் வீழ்ச்சி உள்ளது. 

இங்கே நான் இணைத்துள்ள செய்தி இணைப்புகளில் கூட வீட்டின் பெறுமதி குறைந்து வருகிறது எனவும் இன்னொரு வட்டி வீத உயர்வையும் கூறியுள்ளார்கள்.. 

பார்ப்போம்..

https://amp.smh.com.au/property/news/home-values-drop-as-interest-rates-costs-of-living-squeeze-buyers-20220630-p5axxh.html

https://7news.com.au/politics/borrowers-set-for-another-big-rate-rise-c-7387520.amp

15% - 20% வீட்ட்டு விலை சரிவினை பற்றி சாதாரணமாக எதிர்பார்க்கிறார்கள் என்பது நீங்கள் இணைத்த இணைப்பில் உள்ளது, நாளை மெல்பேர்ன் இன்ஸ்டிட்யுட்டின் மாதாந்த பணவீக்க கணிப்பு வெளிவரவுள்ளது அத்துடன் ANZ வேலை விளம்பர அறிவிப்பு, புதிய கட்டட அனுமதி அறிவிப்பு வெளிவர உள்ளது புதிய கட்டட அனுமதி கடந்த மாதத்தினை விட -2.0 குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுநாள் செவ்வாய்கிழமை வட்டி விகித அறிவிப்பு வெளிவர உள்ளது, 0.50 விகித அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை இன்மை விகிதம் குறைவாக உள்ள நிலையில் வட்டி விகித அதிகரிப்பினை பிற்போடலாம் அதற்கு மாற்றீடாக பொது செலவினை குறைக்கலாம்.

மன்னிக்கவும் கடந்த ஆண்டிறுதியிலிருந்த வீட்டு கட்டட பொருள்களின் விலை 20 - 40 உயர்வடைந்துள்ளதாகக்கூறப்பட்டதினை 40% விகித அதிகரிப்பு என கூறிவிட்டேன்.

வங்கி கடன் முகவராக உள்ள நண்பர் கூறியதன் படி புதிதாக வீடுகள் வாங்குவர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து விட்டது என கூறினார்,

அவர் கூட வீட்டு விலைகள் 10% வீழ்ச்சி அடையலாம் என எதிர்பார்க்கிறார்.

3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களைப்போல ஆழமாக விஷயங்களை அறிவதில்லை, ஆனாலும் அடிப்படை அறிவு கொஞ்சம் உள்ளது. அவ்வளவுதான். மற்றப்படி இவற்றை வாசிப்பது ஒரு ஆர்வத்தினால் மட்டுமே. 

நாணய வர்த்தகத்திலீடுபடுவதால் இவற்றினை கவனிப்பதுண்டு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.