Jump to content

2024 ஆம் ஆண்டு வரை... தேர்தலை நடத்தாமல் இருக்க, அரசாங்கம் தீர்மானம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

2024 ஆம் ஆண்டு வரை... தேர்தலை நடத்தாமல் இருக்க, அரசாங்கம் தீர்மானம் !

பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை நெருக்கடிக்கான தீர்வை முன்னிறுத்திய பன்னாட்டு ஒத்துழைப்பு மையத்தை நிறுவுதல், கொழும்பில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக அமெரிக்கர், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனும் கலந்துரையாடலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

https://athavannews.com/2022/1283233

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தா ஜனாதிபதியாக இருந்தபோது, தேவையற்று தனது பரிவாரங்கள் சூழ வெளிநாடுகளுக்கு உல்லாசப்பயணம் செய்து, தேவையில்லாமல் விடுதிகளுக்கு அள்ளி செலவழித்த காசு,  தனி, சொகுசு விமான செலவு  காசே போதும் வெளிநாட்டுக்கடனை அடைக்க. கடன் வாங்கி, வீண் செலவு, செய்து பந்தா காட்டியதே  இத்தனைக்கும் காரணம். எந்த சுகமும் அநுபவியாத அப்பாவி மக்களே அதன் சுமையால் வருந்துவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

மஹிந்தா ஜனாதிபதியாக இருந்தபோது, தேவையற்று தனது பரிவாரங்கள் சூழ வெளிநாடுகளுக்கு உல்லாசப்பயணம் செய்து, தேவையில்லாமல் விடுதிகளுக்கு அள்ளி செலவழித்த காசு,  தனி, சொகுசு விமான செலவு  காசே போதும் வெளிநாட்டுக்கடனை அடைக்க. கடன் வாங்கி, வீண் செலவு, செய்து பந்தா காட்டியதே  இத்தனைக்கும் காரணம். எந்த சுகமும் அநுபவியாத அப்பாவி மக்களே அதன் சுமையால் வருந்துவது. 

இன்னும்... மற்றைய நாடுகளிடம் இருந்து, 
பணத்தை வாங்கத்தான்,  ஆர்வம் காட்டுகின்றார்கள். 

முதலில்... அரசியல்வாதிகள்  கொள்ளை அடித்து, 
நாட்டுக்கு வெளியே கொண்டு போன பணத்தை திருப்பி கொண்டு வர 
எந்த முன்னெடுப்பும், அதற்குரிய நடவடிக்கைகளும் செய்கின்ற மாதிரி தெரியவில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சிறிலங்காவின் நெருக்கடிகளை தீர்க்குமா புதிய சீர்திருத்தம்! அமைச்சரவையின் அனுமதிக்காக நாளை.....

அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக ஆக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நோக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் கொண்டு வருவதற்கும் புதிய திருத்தம் முன்மொழிகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவின் நெருக்கடிகளை தீர்க்குமா புதிய சீர்திருத்தம்! அமைச்சரவையின் அனுமதிக்காக நாளை.....

இதேவேளை, திருத்தங்களின் அடிப்படையில் 21வது சீர்திருத்ததில் இலங்கையின் குடிமகனாக இல்லாத அல்லது இலங்கையின் குடிமகனாக இருக்கும் போது மற்றும் ஒரு நாட்டின் குடிமகன் ஒருவர் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கத் தகுதி பெறமாட்டார்.

அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை தொழில் வல்லுநர் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஏற்கனவே பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கு புறம்பாக நாடாளுமன்றில் பெரும்பான்மை விருப்பத்தை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.

இந்த பேரவைக்கு சபாநாயகர் தலைவராக இருப்பார். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையேஅரச தலைவருக்கு பரிந்துரைக்கும். சுயாதீன ஆணைக்குழுக்கள், தேர்தல், பொது சேவை, தேசிய காவல்துறை, கணக்காய்வு சேவை, மனித உரிமைகள், நிதி, எல்லை நிர்ணயம், தேசிய கொள்வனவு ஆணைக்குழுக்கள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுக்களாக அமையும்.

அரசாங்கத்தால் பொருட்கள் மற்றும் சேவைகள், பணிகள், ஆலோசனை சேவைகள் போன்றவை, கொள்முதல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.