Jump to content

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் வெற்றி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் வெற்றி

அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட மிஷேல் ஆனந்தராஜா பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். 

No description available.

இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேர்ந்த பெற்றோருக்கு தென் ஆபிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்.  

இவரின் பூர்வீகம், குடும்ப விபரம் என்பன  தேர்தல் முடியும் வரை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் பல பத்திரிகைகள் இவரின் பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று கூறி வந்தன. 

No description available.

இவர் ஒரு மருத்துவராகவும்  மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் கடமை புரிந்து வந்துள்ளார்.
 
https://www.virakesari.lk/article/128038

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தி வணங்குகிறோம், உங்கள் சேவை தாய் நாட்டுக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்! ஒரு சிங்கள பெண்மணியும் மெல்பேர்ன் பகுதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வாசித்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை அவுஸ்ரேலிய தேர்தலில் முன்னொரு பொழுதும் இல்லாதவாறு சுயேட்சை வேட்பாளர்கள் 12 பேர் அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள் அதிலும் teal candidates எனப்படும் 6 பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.. அந்த 6 பெண்களும் அவர்களது தொழில்துறைகளில் வல்லவர்கள் என்பதுடன் பாரம்பரிய கட்சிகளுக்கு மிகுந்த சவால்களை தரக்கூடியவர்கள்.. 

இம்முறை தேர்தல் பல விடயங்களை பாரம்பரிய கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது.. let’s see 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இம்முறை அவுஸ்ரேலிய தேர்தலில் முன்னொரு பொழுதும் இல்லாதவாறு சுயேட்சை வேட்பாளர்கள் 12 பேர் அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள் அதிலும் teal candidates எனப்படும் 6 பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.. அந்த 6 பெண்களும் அவர்களது தொழில்துறைகளில் வல்லவர்கள் என்பதுடன் பாரம்பரிய கட்சிகளுக்கு மிகுந்த சவால்களை தரக்கூடியவர்கள்.. 

இம்முறை தேர்தல் பல விடயங்களை பாரம்பரிய கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது.. let’s see 

கடந்த காலங்களில் பாட்டாளிக்கட்சி அரச கட்டுப்பாட்டு பொருளாதார கொள்கை கொண்ட கட்சியாகவும் (Fiscal policy), பெரிய பாதீடு அதிக வரி அதிக அரச செலவு என்ற கொள்கையுடைய கட்சி.

வலதுசாரி லிபரல் கட்சி சிறிய பாதீடு, குறைந்த வரி, குறைந்த அரச செலவு என்ற அதிகளவில் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டு பொருளாதார கொள்கையுடைய கட்சியாகவிருந்தது (monetary policy), ஆனால் கோவிட் லிபரல் கட்சியினை பொருளாதார தூண்டல் செய்வதற்காக பாட்டாளி கட்சி போல செயற்பட வைத்து பாதீட்டில் மிகப்பெரிய பற்றாக்குறையினை ஏற்படுத்தியிருந்தது  (சரியான முடிவுதான்).

எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதில் குழப்பம் இருந்தது, எனது குழந்தைகள் (11 வயது - பசுமைக்கட்சி, 8 வயது - லிபரல், 5 வயது - பாட்டாளி கட்சி) வாக்களிக்க சொன்னார்கள்.

வயதில் இளைய இரண்டு குழந்தைகளும் கட்சி தலைவர்களின் பெரைக்கூறி அவர்களது கட்சிக்கு வாக்களிக்க சொன்னார்கள், ஆனால் மூத்த குழந்தை மட்டும் ஏன் பசுமைக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என காரணத்தினை கூறினார்.

இப்போதுள்ள இளைய சமுதாயத்தின் சிந்தனை மாறுபாடு அரசியலில் பிரதிபலிக்கின்றது.

இந்த teals லிபரல் கொள்கையும், பசுமைக்கட்சியின் கொள்கையும் கொண்டவர்கள் (blue + green) எனக்கூறுகிறார்கள், காலத்திற்கேற்ப கொள்கையினை கடைப்பிடிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

இப்போதுள்ள இளைய சமுதாயத்தின் சிந்தனை மாறுபாடு அரசியலில் பிரதிபலிக்கின்றது.

நிச்சயமாக அதை உணரலாம்!! சிலதை too extremeமாக கடைப்பிடிக்கிறார்கள் போல இருந்தாலும் சிந்தனைகளில் வேறுபாடு உள்ளது.. 

தேர்தலிற்கு சில தினங்கள் இருக்கையில் இப்படியொரு செய்தியை Heraldsun/Skynewsல்  எழுதியருந்தார்கள்..

“ Andrew Bolt: Devastated Sri Lanka exposes nightmare reality of Greens’ dream

Before you vote for the Greens – or even a so-called climate independent – please think about a total #### called Gotabaya Rajapaksa.”

https://www.skynews.com.au/opinion/andrew-bolt/sri-lankas-crisis-is-a-green-cautionary-tale-andrew-bolt/video/df8a77558a4ac9ac75fd6e896bb7289f

பசுமை கட்சியை வரவிடாமல் செய்ய கோட்டாவுடன் Adam Bandt ஒப்பிட்டு எழுதியிருந்தது.. ஆகையால் Greens இந்தமுறை அதிக இடங்களை கைப்பற்றியது எனக்கு சந்தோஷமே..

Liberal or Labor யார் வந்தாலும் Greens, tealsற்கும் bargaining power இருக்கவேண்டும் என நினைப்பதுண்டு, அப்பொழுதுதான் சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என நம்புகிறேன்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இலங்கையின் அன்னிய செலாவணி கையிருமப்பு 3 மாத கால அளவினை விட குறைந்த பின்பே இறக்குமதி செய்ய்யப்படும் செயற்கை உரத்தடை இலங்கையரசினால் கொண்டுவரப்பட்டதாக நினைவில் உள்ளது ( கடந்த ஆண்டு யூன் அல்லது யூலை காலப்பகுதியில் என நினைக்கிறேன்).

இல்ங்கையரசு அன்ன்னிய செலாவணி நெருக்கடியினாலேயே அந்த முடிவுக்கு வந்தது.

Sky news, 2GB, மற்றும் சில பத்திரிகைகள் வலது சாரி கட்சியினது கொள்கை பரப்பு ஊடகங்கள் (ரூபர்ட் மெர்டொக் ஊடகங்கள்).

2008 இல் உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது பாட்டாளிக்கட்சி, பொருளாதாரத்தினை தூண்டுவதற்காக பொது செலவினை அதிகரித்து, குடும்பங்களுக்கு காசு வழங்கி (Baby boomers) பொருளாதாரத்தினை தூண்டிய விடயத்தினை, மக்களிடம் பாட்டாளிக்கட்சியின் தவறான கொள்கை என ஆழமாக ஏற்படுத்திவிட்டார்கள்.

ஆனால் கோவிட் காலத்தில் வலதுசாரி லிபரல் அதனை விட மிகப்பெரிய பற்றாக்குறை பாதீட்டினை உருவாக்கியமையினை பாராட்டும் அதே ஊடகங்களே ஒரு காலத்தில் மற்ற கட்சிக்கெதிராக கருத்து தெரிவித்தவை.

இதே ஊடகங்கள் காலநிலை மாற்றம் பொய்யென பெருமளவில் பிரச்சாரம் செய்து அதனை பெருமளவிலான மக்கள் நம்பியிருந்த காலகட்டத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு என்பன மக்களை யதார்த்தத்தினை உணர வைத்துள்ளன (காலனிலை மாற்றம் பொய்யென அவர்கள் சொல்வது உண்மையாகக்கூட இருக்கலாம்).

இந்த ஊடகங்களில் உள்ள பிரபலங்கள் துறைசார் நிபுணர்கள் அல்ல, ஆனால் எந்தவித குற்ற உணர்வுமின்றி கருத்துகளின் உண்மைதன்மை பற்றிய கவலை இன்றி கருத்து தெரிவிப்பார்கள்.

புதிய பொருளாதாரத்தில் Digital eco system  ஒரு முக்கியமான விடயம், ஆனால் அதனை, வெள்ளை யானை, அறைக்குள் யானை வந்துவிட்டது என்று சொல்லுவார்கள்.

இந்த ஊடகங்கள் மக்கள் உணர்வுகளை தூண்டிவிடும் வகையிலும், ஒரு வியாபாரப்பொருளை சந்தைப்படுத்துவது போல தமது கருத்திணை மக்களின் மீது திணிக்கின்ற நிலை காணப்படுகிறது.

இதன் பின்புலத்தில் பெருமளவு காசு புரள்கிறது.

வர்த்தக நிறுவனக்கள் நெறிமுறைப்படுத்தப்படுவது போல ஊடகத்துறையினை நெறிப்படுத்தினாலேயே மக்களுக்கு உண்மை சென்றடையும்.

அத்துடன் ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு ஊடகத்தர்மம் என்ன என்பது தெரிந்திருக்கவேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.