Jump to content

சவூதி, ஓமான் பெற்றோலிய கம்பனிகளுடன் என்னால் பேச்சுவார்த்தை நடாத்தி நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க ஒத்தாசை வழங்குவேன். I


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

web.jpg

(அஷ்ரப்  ஏ சமத்)

சுற்றாடல்த்துறை அமைச்சா் பொறியியலாளா் நசீர் அஹமட்   இன்று (24) பத்தரமுல்லையில் உள்ள

சுற்றாடல் அமைச்சில் வைத்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டாா். 

 

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளா் வைத்தியா் அனில் ஜெயசிஙக், மற்றும் பாராளுமன்ற உறுப்பிணர்களான  அலிசப்றி ரஹீம், காதா் மஸ்தான்,  முஸாரப் ஆகியோறும்  இந் நிகழ்வில் கலந்து கொண்டனா.

 

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா். 

 

 தனக்கு இந்த அமைச்சு ஏறகனவே 20 நாட்களுக்கு முன்பு தரப்பட்டது. தற்போதைய அமைசச்சரவையில் இளம் அமைச்சா்கள், பல கட்சி சாா்ந்தவா்கள் உள்ளனா். 

 

 இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தன்னால் எடுக்கக வேண்டிய சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவேன். நான் றியாத்தில உள்ள பெற்றோலியம் பல்கலைக்க்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றேன். என்னுடன் கல்விகற்ற ஒரு சிரேஸ்ட மாணவனே தற்போது சவுதி அரேபியாவில் பெற்றோலியத்துறை வள அமைச்சராக கடமையாற்றுகின்றாாா்.  

 

என்னால் பல முயற்சிகளை  எடுக்க முடியும்.   ஓமான் அரம்கோ பெற்றோலியம் கம்பனிகளுடன் என்னால் பேச்சுவாா்த்தை நடாத்த முடியும்.

 

நான் ஏற்கனவே கிழக்கு மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய அனுபவம் உண்டு அங்கு ஊழல் அற்ற சிறந்த நிர்வாக கட்டமைப்பினை கட்டியெழுபியது போன்று இ்ந்த அமைச்சின் ஊடாக  பல்வேறு திட்டங்களை வகுத்து நாட்டுக்கு நன்மை கிடைக்க  கூடிய திட்டங்களை வகுத்து சிறந்த அமைச்சு ஒன்றினை சுற்றாடல் அமைச்சினை கட்டியெழுப்ப முடியும். என நசீர் அஹமட் தெரிவித்தாா்.

https://www.madawalaenews.com/2022/05/i_968.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியை அரபு நாடாக மாற்ற முயலுங்கள்... பெற்றோலும் டீசலும் ஓடும்...கிழக்கிஸதான் முதலமைச்சராக புல்லா இருக்கலாம்...அப்புறம் கல்முனை என்ன யாழ்ப்பாணத்தையே அரபு உலகம் ஆக்கி ஆழலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 Stuff to Buy ideas | jaffna, blog posts, sri lanka  உலமா கட்சியின் உயர் சபைக்கூட்டம்… | Muhasaba Network

Articles Tagged Under: ஹாபிஸ் நசீர் அஹமட் | Virakesari.lk 

ny98xjw

உலமா கட்சி தலைவருக்கு... சிவப்பு தொப்பி. 
இவருக்கு,  சாம்பல் நிற... கோட்டு, சூட்டு தான்... பிடிக்கும் போலை.
இல்லாட்டி... அந்த ஒன்றை வைத்துத்தான், எல்லா இடமும் சமாளிக்கிறாரோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேளாமல் கேட்கிறார் பெற்றோலிய அமைச்சை...அதுதான் இப்ப லாபம் கூடிய தொழில்...அய்யாவுக்கு அறணை மூளை...20க்கு கை உயர்த்தியே  கோடிக்கணக்கில் பணம் பண்ணினவர்...பெற்றோல் அமைச்சர் என்றால் தமிழர் பகுதியை வித்து ..தானும் காசு பார்த்து... மதத்தையும்  வளார்த்து விடலாம்..லாபத்துக்கு லாபம்...காத்தான்குடியில் பெண்களுக்கு பீச்சு கட்டின எந்திரியல்லவா....முதலமைச்சராக இருந்து காணி பறிப்பில் புலியானவர்....கொரனா மையங்களை புதைக்க இடம்தேடிக் கொடுத்த புண்ணியவான்....அப்ப ஒரு நமுட்டுச் சிரிப்புடன் சொன்ன யோக்கு...முதல் எரித்த  மையத்தில் உடல் இல்லாமல் பெட்டிதான் எரித்தது என்று...பெரும் புரட்சி செய்தவர்...இப்பவும் யாழ் கள  படமொன்றில்...அய்யாவின் அடிவண்டியில் கைவைத்து சிரித்து கதைத்தபடியே இருக்கும் ...அதாவது தமிழரின் ..அடிமடியை அழித்தே தீருவேன் என்பதுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

நான் ஏற்கனவே கிழக்கு மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய அனுபவம் உண்டு

அந்தக்காலத்தில் தயாரித்த கள்ளக்காணி ஆவணங்களே அவர் தூக்கி வந்து குற்றச்சாட்டு வைத்தவை. அந்த குற்றச்சாட்டுக்களை ஏன் நீங்கள் முதலமைச்சராய் இருந்த காலத்தில் தீர்க்கவில்லை, தீர்க்க முயற்சி எடுக்கவில்லை? என்கிற கேள்விக்கு, ஒருவருடன்தானே முதலமைச்சராக இருந்தேன் என்று முடித்தார். அவ்வளவும் கள்ள ஆவணங்கள் தயாரிப்பதிலேயே கழித்திருக்கிறா.ர் இதுதான் இந்த நாட்டின் பண்பாடு. சுற்றாடல் துறை அமைச்சர் பெற்றோலியம் பற்றி கதைக்கிறார். ஒருவனும் தன் பொறுப்பை, கடமையை பற்றி பேசுவதில்லை மற்றைய அமைச்சுகளுக்குள் மூக்கை நுழைப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர்களை வகாபிகளாக மாற்றலாம் என்கிறார். 😏

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.