Jump to content

இந்திய நிவாரணப் பொதியில்... 20,000 பொதிகளை, கிளிநொச்சி மக்களுக்கு... வழங்க, அரசாங்கம் தீர்மானம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

இந்திய நிவாரணப் பொதியில்... 20,000 பொதிகளை, கிளிநொச்சி மக்களுக்கு... வழங்க, அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் இந்த நிவாரணப் பொதியில் சுமார் 40 மில்லியன் பெறுமதியான உணவுப் பொட்டலங்கள் அடங்கியுள்ளதுடன், கிளிநொச்சி மக்களின் பொருளாதார வறுமை குறித்து அரசாங்கம் முன்னரே உணர்ந்துகொண்டதன் விளைவாக 20,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாக  அரசாங்க அதிபர் கூறினார்.

இந்த நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் கிராம மட்டத்தில் நடைபெற்று வருவதாகவும் பொருத்தமான குடும்பங்களைத் தெரிவு செய்வதற்காக கிராம மட்டத்தில் முன்மொழிபவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1283575

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்கள் அனுப்பிய நிவாரண  உதவி...
இந்திய நிவாரண உதவியாக மாறி விட்டது.
அதனை... தமிழகம் என்று உச்சரிக்கக் கூட... சிங்களத்துக்கு கசக்குது.  

போற போக்கிலை... அரிசி சாக்கிலை, 
ஏன்... சிங்களத்தில் எழுதவில்லை, என்று பேசப் போகிறார்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சிங்கள நாகரீகம், நாளைக்கு புலம்பெயர்ந்தோர் செய்யும் உதவிகளும் இவ்வாறே உச்சரிக்கப்படும்.

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

தமிழக மக்கள் அனுப்பிய நிவாரண  உதவி...
இந்திய நிவாரண உதவியாக மாறி விட்டது.
அதனை... தமிழகம் என்று உச்சரிக்கக் கூட... சிங்களத்துக்கு கசக்குது.  

 

நீங்கள் சிங்களத் தளத்தில் இருந்தா இந்தச் செய்தியை பகிர்ந்தீர்கள்?

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.