Jump to content

31க்கு பின்னர்... கட்டுநாயக்க உட்பட, அனைத்து விமான நிலையங்களும்... மூடப்படும் அபாயம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர்... கட்டுநாயக்க உட்பட, அனைத்து விமான நிலையங்களும்... மூடப்படும் அபாயம்!

இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவருகின்றது.

எரிபொருள் பறக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள்... எரிபொருள் நிரப்புவதற்காக, சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1283778

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை  நான் நல்ல  செய்தி  என்பேன்

ஆனால் இன்றைய சூழ்நிலையில் 

தாயகத்தமிழரை இச்சொல் ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இதை  நான் நல்ல  செய்தி  என்பேன்

ஆனால் இன்றைய சூழ்நிலையில் 

தாயகத்தமிழரை இச்சொல் ?????

விசுகர், நல்லூர் திருவிழா வாற நேரம்.... விமானம் ஓடாமல் இருந்தால்,
வெளிநாட்டு பக்தர்களுக்கு, சிரமம் அல்லவா.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

விசுகர், நல்லூர் திருவிழா வாற நேரம்.... விமானம் ஓடாமல் இருந்தால்,
வெளிநாட்டு பக்தர்களுக்கு, சிரமம் அல்லவா.. 

தமிழருக்கொரு  தீர்வு வரும்வரை

அவர்களும்  போகக்கூடாது என்பது  தானே எனது  நிலைப்பாடு??

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

தமிழருக்கொரு  தீர்வு வரும்வரை

அவர்களும்  போகக்கூடாது என்பது  தானே எனது  நிலைப்பாடு??

நீங்கள் இப்படியே சொல்லிக்கொண்டிருக்கவேண்டியதுதான். கொரோனா முடக்கத்தில் செலவழிக்க முடியாத காசைத் தாயகம் போய் செலவழிக்க பயணச்சீட்டெல்லாம் எடுத்து வைத்துவிட்டு எப்போது விடுமுறையெனத் தயாராக இருக்கிறது சிறீமான் பொதுசனம். (இதில் அவசரதேவைகள் நோக்கிச் செல்வோரைச் சுட்டமுடியாது)இந்த ஏமாற்றத்தை  விடுத்து யாராவது முடிந்தவர் முடிந்ததை செய்யும் நிலை. யாரும் எங்கும் எதிலும் நன்மையோ தீமையோ கதைக்க முடியாத ஒரு குமுகாயப் பண்புநிலை தோற்றம் பெற்றுள்ளது.  விசுகரவர்களே "விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி" என்பதைத் தமிழினம் மறந்து பல ஆண்டாகிவிட்டது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nochchi said:

நேற்று எனது  மைத்துணியின் 60வது பிறந்தநாளுக்கு ஒரு ஊரிலுள்ள 50 குடும்பத்தவர்களுக்கு 5 கிலோ  அரிசிப்படி கொடுத்திருந்தார்

இதைக்கூட செய்யாத  அதிகம் புலத்தவர்தான்

ஊரில் போய்  நின்று அந்த  மக்களுக்கு வலியைக்கொடுப்பவர்கள்?

  • Like 4
Link to comment
Share on other sites

போரின் பின் நல்லூர் திருவிழா காலம் என்பது யாழ்ப்பாணம் பொருளாதார ரீதியில் அதிகமாக முன்னேறும் ஒரு சிறு குறுகிய காலம். இது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் அங்கு போய் செலவழிப்பதால் நிகழ்வது.நல்லூர் திருவிழாக்காலத்திலும் அது முடிந்த பின் வரும் அடுத்தடுத்த வாரங்களிலும் ஊரில் இருக்கும் வேறு சிறு கோவில்களிலும் திருவிழாக்கள் நிகழும். 

கடந்த 2 வருடங்களாக கொரனாவால் இந்த வளர்ச்சி பாதிகப்பட்டு இருந்தது. இம் முறையும் பொருளாதார / எரிபொருள் பற்றாக்குறை, விமான நிலைய மூடல் போன்ற காரணங்களால் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வரவு மட்டுப்படுத்தப்படுமாயின், அதன் விளைவு வடக்கு மக்களை பாதிப்பதாகத்தான் அமையும். அதுவும் மிக மோசமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் இன்றைய நிலையில் பாதிப்பு இரட்டிப்பாகும்.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நேற்று எனது  மைத்துணியின் 60வது பிறந்தநாளுக்கு ஒரு ஊரிலுள்ள 50 குடும்பத்தவர்களுக்கு 5 கிலோ  அரிசிப்படி கொடுத்திருந்தார்

இதைக்கூட செய்யாத  அதிகம் புலத்தவர்தான்

ஊரில் போய்  நின்று அந்த  மக்களுக்கு வலியைக்கொடுப்பவர்கள்?

எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகும் போல் உள்ளது யாழில் காரணம் 95க்கு பிறகு இயக்கம் அங்கில்லை 25 வருடங்களுக்கு மேல் வேறுவிதமான மக்களின் வாழ்க்கை முறை தற்போதைய உணவு தட்டுப்பாட்டை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை . சடுதியாக தாக்கப்போகும் உணவு நெருக்கடியை தாங்கும் வல்லமையை பெற ஆண்டவனை வேண்டுவதை தவிர வேறுவழியில்லை சும்மா அற்ப காரணம்களுக்கு தற்கொலை செய்யும் மனோ நிலையில் வேறு இருக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு இருக்கு சாமான் விலை கூடிக்கொண்டு போகுது. குத்தரிசி 250ரூபா.

Link to comment
Share on other sites

என் சிங்கள நண்பர் நேற்று கொழும்பில் இருந்து 'கெதியன கனடாவுக்கு வர ஏதும் வழி இருக்கா" என்று மிக பவ்யமாக (அல்லது பம்மிக் கொண்டு என்றும் சொல்லலாம்) கேட்டார். ஏன் என்று கேட்டேன், "இனி இங்கு இருக் முடியாதாம்...எப்படியாவது எங்காவது ஓடி போக வேண்டுமாம்" என்றார். 

இன்னொன்றையும் சொன்னார்.

அனேகமான தமிழ் குடும்பங்களில் ஆராவது ஒருவராவது வெளி நாட்டில் உள்ளார்கள். அவர்கள் ஒரு நூறு டொலரை மாதம் அனுப்பி வைத்தாலே போதும், தமிழ் குடும்பம் ஒன்று ஓரளவாவது இந்த திடீர் விலை அதிகரிப்பை சமாளிக்க முடியும்... ஆனால் சிங்களவருக்கு அப்படி ஒன்றும் இல்லை. அடுத்த மாசம், கையில் உணவுப் பொருளை எடுத்துக் கொண்டு செல்லும் ஒருவரை அடித்து அந்த உணவை பறிக்கும் நிலைக்கு சிங்கள மக்கள் செல்லப் போகின்றனர் என்றார்.

ஆகவே அவர் சொன்னது போன்று ஒரு குடும்பத்துக்காகவது நாம் மாதம் ஒரு 100 டொலரை மேலதிகமாக அனுப்பி வைப்போம்.

இந்த பொருளாதார சீரழிவில் இருந்தும் எம் மக்களை காப்போம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை, டுபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்கு விமானங்கள் செல்வதாக கொழும்பில் இருந்து வெளி வரும் டெய்லி மிரர் ரும் பின் வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.

Airlines divert to Chennai, Dubai Singapore airports for refuelling

As an alternative solution and measures to minimize the issues of refuelling aircraft at the Bandaranaike International Airport (BIA), it was reported that the airlines would be diverted to airports such as Chennai, Dubai and Singapore, the airport sources said.

SriLankan Airlines which are already flying over India, are operating with fuel for its fleet from Chennai and other Indian airports, a senior official said.

He added that the matter has been discussed with the India authorities earlier.

He further said the fuel required for the aircraft will be procured from the airports on their return flights to Chennai or New Delhi. (T.K.G. Kapila)

Airlines divert to Chennai, Dubai Singapore airports for refuelling - Breaking News | Daily Mirror

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெய்லி மிரர் செய்திக்கு ஆதவன் நியூஸ் கண், மூக்கு, வாய் வைத்து தனது சொந்த சரக்கை இறக்கிவிட்டு உள்ளது.

விமானங்கள் வேறு இடங்களில் எரிபொருள் நிரப்புவது உலகில் நடக்காத புதிய விடயம் இல்லை. எங்கு எரிபொருள் விலை மலிவாக உள்ளதோ அங்குதான் பெறுவார்கள்.

விமானத்தை டிஸ்பட்ச் செய்யும்போது எங்கே எரிபொருள் நிரப்புவது, எந்த பாதையால் செல்வது, எந்த குழு விமானத்தில் பணியாற்றுவது என்பதை எல்லாம் நேரம், வருவாய், இலாபம், நடைமுறை சாத்தியம், விமானத்தின் பாரம், காலநிலை (Headwind, Tailwind, Jet-stream போன்றவை) எல்லாம் பார்த்து தீர்மானிப்பார்கள். 

எங்கள் சுப்பரின் ட்க்சி உள் ஊரில் எரிபொருள் நிரப்புவது போன்றது இல்லை விமானத்துறை. 

மே31 திகதி சோதிடம் பார்த்து அறியப்பட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

உங்களவுக்கு, அவர்களுக்கோ அவர்களது வாசர்களுக்கோ, நீங்கள் சொல்லும் விபரங்கள் புரியாது என்பதால் அப்படி தானே எழுதுவார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

மே31 திகதி சோதிடம் பார்த்து அறியப்பட்டதா?

அந்த திகதி மட்டும் விமான  எரிபொருள் இருப்பு உள்ளது என்கிறார்கள் அதன் பின் நீங்கள்  சொல்வது போல் மாலைதீவு அல்லது திருச்சி மதுரை திருவானந்த புரம்  போன்ற இடங்களை நாடி சென்று எரிபொருள் நிரப்பவேண்டி வரலாம் லண்டனில் இருந்து டோகா கட்டார்  போன்ற இடங்களில் ட்ரான்சிட் ல் நடக்க பஞ்சி பிடித்த கூட்டம்  நேரடி பிளைட் என்று ஏர் லங்காவை 1300 பவுன் என்றாலும் பரவாயில்லை என்று போகின்றவர்கள் இனி 15 அல்லது 16 மணிநேரம் பிரேதம் இருப்பது போல் இருக்கனும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

31க்கு பின்னர்... கட்டுநாயக்க உட்பட, அனைத்து விமான நிலையங்களும்... மூடப்படும் அபாயம்!

என்ன கொடுமை சார்?

பங்களாதேஷ்,மாலைதீவுக்கு கூட இந்த நிலைமை இல்லையே சார் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

ட்ரான்சிட் ல் நடக்க பஞ்சி பிடித்த கூட்டம்  நேரடி பிளைட் என்று ஏர் லங்காவை 1300 பவுன் என்றாலும் பரவாயில்லை என்று போகின்றவர்கள் இனி 15 அல்லது 16 மணிநேரம் பிரேதம் இருப்பது போல் இருக்கனும் .

அவர்கள் தங்களது பகட்டை ஆடம்பரமாக செலவு செய்வோம் என்று காட்ட ஒரு சந்தர்ப்பமாக எல்லோ இதை  நினைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

உங்களவுக்கு, அவர்களுக்கோ அவர்களது வாசர்களுக்கோ, நீங்கள் சொல்லும் விபரங்கள் புரியாது என்பதால் அப்படி தானே எழுதுவார்கள்....

நாங்கள் சொல்வதை கேட்டுவிட்டு பொத்திக்கொண்டு கிடவுங்கோ என்பதுதான் நமது ஊடகங்கள் தொடக்கம் பாடசாலை, ஊர் சங்கங்கள் வரையான மனப்போக்கு. என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

அந்த திகதி மட்டும் விமான  எரிபொருள் இருப்பு உள்ளது என்கிறார்கள் அதன் பின் நீங்கள்  சொல்வது போல் மாலைதீவு அல்லது திருச்சி மதுரை திருவானந்த புரம்  போன்ற இடங்களை நாடி சென்று எரிபொருள் நிரப்பவேண்டி வரலாம் லண்டனில் இருந்து டோகா கட்டார்  போன்ற இடங்களில் ட்ரான்சிட் ல் நடக்க பஞ்சி பிடித்த கூட்டம்  நேரடி பிளைட் என்று ஏர் லங்காவை 1300 பவுன் என்றாலும் பரவாயில்லை என்று போகின்றவர்கள் இனி 15 அல்லது 16 மணிநேரம் பிரேதம் இருப்பது போல் இருக்கனும் .

இலங்கையில் எரிபொருள் நிரப்பவேண்டிய கட்டாயம் இல்லை. தவிர விலை பார்த்தே மலிவான இடங்களில் எரிபொருள் நிரப்புவார்கள். சரி மே 31 இன் பின் இந்த கருத்தாடலை தொடர்வோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க அனுமதி!

எரிபொருள் தட்டுப்பாடு – சென்னை, டுபாய், சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்படும் விமானங்கள்!

சென்னை, டுபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களுக்குத் விமானங்கள் திருப்பி அனுப்பப்படுவதாக  விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கான மாற்றுத் தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவிற்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சென்னை மற்றும் ஏனைய இந்திய விமான நிலையங்களில் இருந்து தனது விமானங்களுக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்து இயங்குகிறது என விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் இந்திய அதிகாரிகளுடன் முன்னதாகவே கலந்துரையாடப்பட்டதென்றும் அவர் கூறினார்.

டுபாய் மற்றும் சிங்கப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்யும் பணியில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1283876

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.