Jump to content

"70 மில்லியன் ரூபாய்க்கு"... என்ன  நடந்தது? நாமலுக்கு, எதிரான வழக்கு... ஒத்திவைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் நிலைமைகளே எரிபொருள் விலையேற்றத்திற்கு காரணம் – அமைச்சர் நாமல்

"70 மில்லியன் ரூபாய்க்கு"... என்ன  நடந்தது? நாமலுக்கு, எதிரான வழக்கு... ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

சுமார் 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலே அவர் நீதிமன்றில் ஆஜரானார்.

இந்த முறைப்பாடு இன்று (25) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வழக்கை எதிர்வரும் புரட்டாசி மாதம் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரக்பி விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக முறைப்பாடு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நிதிமோசடி விசாரணை பிரிவால் 2016 ஆம் ஆண்டு ஆடி மாதம் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1283786

Link to comment
Share on other sites

ஒரு கதைக்கு நீதி மன்றம் பணத்தை கட்ட சொல்லி சொன்னாலும்  35 மில்லியன் ரூபா தான் கட்ட வேண்டும். இவன்கட சேமிப்பு எல்லாம் டொலரில் தான். புரட்டாதி மாதம் பிரச்னை ஓரளவு தணிந்து விடும் என்று நினைக்கலாம் அல்லது வாய்தா.

இந்த கதை இவருக்கும் பொருந்தும்:

இரு நண்பர்கள், ஒருவர் சிறிலங்கா மற்றவர் நைஜீரியா,  லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தார்கள். மூன்று ஆண்டுகளில் படிப்பை முடித்து அவரவர் நாட்டுக்கு திரும்பினார்கள், இருவரும் அரசியலில் நுழைந்து இளம் வயதில் மந்திரி ஆனார்கள். சில வருடங்களுக்கு பின்பு சிறிலங்கா நண்பர் நைஜீரியா நண்பர் நாட்டுக்கு விசிட் அடித்தார். அங்கு அவர் ஆடம்பரமான பங்களாவில் வாழ்ந்து வந்தார், எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று வினவினார். நான் வீதி அபிவிருத்தி அமைச்சராக இருக்கின்றேன் என்று சொல்லி தான் போட்ட நெடுஞ்சாலை வீதியை காண்பித்தார், சிறிலங்கா நண்பருக்கு தூக்கிவாரி போட்டது , அங்கு மணல் தரை மட்டுமே இருந்தது. நைஜீரியன்  இதுதான் அரசியல் என்றார். சனமும் எதிர் கட்சிகளும் இந்த நெடுஞ்சாலைக்கு போராட்டம் நடத்த, நாம் அடுத்த வேலை திட்டத்தில் சுமாரான பணத்தை எடுத்து இந்த பிரச்சனையை பூசி மெழுகி மூடி விட வேண்டும் என்றார்.
சில காலம் செல்ல நைஜீரியன் நண்பர் சிறிலங்கா நண்பரிடம் விசிட் அடித்தார், நண்பரின் செல்வந்த நிலையை கண்டவர் நல்லாத்தான் அரசியல் செய்கிறார் என்றார், எப்படி என்றும் கேட்டார். குருவே எல்லாம் உங்கள் ஆலோசனைதான், இங்கு நான் மகாவலி ஆறு திசை திருப்பும் அமைச்சர் என்று சொல்லி திரை சீலையை விலக்கி ஒரு வறண்ட காய்ந்த பூமியை காண்பித்தார்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தப்பாதான் ..நீதி அமைச்சர்...எப்படி வழக்குப் போகும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நாமல் பிரதமராகும்வரை (அதிஷ்டம் இருந்தால்) அவருக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒத்திவைப்பு, தவணை என்று இழுபடும். அவர் பதவிக்கு வந்தவுடன்; அவர் நிரபராதி என நீதிமன்றம்  தீர்ப்பளித்து, அத்தனை வழக்குகளும்  இழுத்து மூடப்படும். இதென்ன இலங்கை வரலாற்றில் நடவாததா? அப்பன், சித்தப்பன் எல்லாம் இந்த வழியை கடந்து வந்தவர்கள் தானே!

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.