Jump to content

அரச ஊழியர்களை... பணிக்கு அழைப்பதை, மட்டுப்படுத்தி உத்தரவு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

அரச ஊழியர்களை... பணிக்கு அழைப்பதை, மட்டுப்படுத்தி உத்தரவு!

அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க அழைக்குமாறு நிறுவன தலைவர்களை வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பளமில்லாமல் வீட்டில் நிற்பதா? (Stand down?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

சம்பளமில்லாமல் வீட்டில் நிற்பதா? (Stand down?)

No photo description available.

சம்பளத்துடன் வீட்டில் நிற்பது என நினைக்கின்றேன்.
ஏனெனில்... காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ, பேரூந்துகளிலோ...
வேலைக்கு சென்று வர... பெற்றோல்  இல்லாமையாலும், விலை உயர்வாலும்..
மிக அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டி உள்ளது.

யாழ். கள உறவு,  ஒருவர் தெரிவித்தபடி...
அவருக்கு பயணச் செலவு, தினமும் 500 ரூபாய்க்கு மேல் தேவைப்படுகின்றதாம்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

சம்பளத்துடன் வீட்டில் நிற்பது என நினைக்கின்றேன்.
ஏனெனில்... காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ, பேரூந்துகளிலோ...
வேலைக்கு சென்று வர... பெற்றோல்  இல்லாமையாலும், விலை உயர்வாலும்..
மிக அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டி உள்ளது.

யாழ். கள உறவு,  ஒருவர் தெரிவித்தபடி...
அவருக்கு பயணச் செலவு, தினமும் 500 ரூபாய்க்கு மேல் தேவைப்படுகின்றதாம்.

நான் திங்கள் கிழமை கொழும்புக்கு சென்றேன் இடமாற்றம் கேட்டு என்னை  பாடசாலை அதிபர் விடுவிக்க முடியாது என்றார் இருந்தும் மினிஸ்றி சென்றால்  கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன்  கைவிரித்து விட்டார்கள் அதிபரிடம் எனது செலவீனங்களை சொன்னேன் பஸ் பயணம் 500/  காலை 7.30 சைன் பண்ண வேண்டுமென்றபடியால் அதிகாலை 4.30 மணிக்கு எழும்பணூம் சமைக்கணும் மதிய சாப்பாடு ( காலைச்சாப்பாடு  200/ பிளேன்டியுடன் சேர்த்து) மீண்டும் வேலை முடிய 3.30 மணி ஆகும் அதன் பின்னர் பஸ்பிடித்து ஊருக்கு 2  மணிநேரம் ஆகிறது ஆக மொத்தத்தில் 1 நாள் தேவை.  எடுக்கும் சம்பளத்துக்கு அரைவாசிக்கு செலவானால் இந்க பொருளாதார நெருக்கடியில் என்ன செய்வது திண்டாடிக்கொண்டிருக்கிறேன் 50 கிலோமீற்றர் போக வர ஆக மொத்தம் 100 கிலோமிற்றர் அண்ண

அடுத்த கிழமை என் கடவுச்சீட்டு முடிந்து பலவருடங்களாகிறது அதை புதுப்பித்து மத்திய கிழக்காவது செல்ல முடிவெடுத்துள்ளேன் .

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தனிக்காட்டு ராஜா, 
பஸ் பிரயாணத்துக்கு… தினமும் 500 ரூபாய் தேவை என்று நீங்கள் சில நாட்களுக்கு முன்பு சொன்னதை,  நினைவில் வைத்தே கூறினேன்.
சில தூதுவரலாயங்கள் கூட…. தற்போதைய நிலையை வைத்து, வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கதைத்தார்கள். உண்மை / பொய் தெரியவில்லை.
தூதுவராலய இணையத்தையும் இடைக்கிடை கவனித்துக் கொண்டு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

தனிக்காட்டு ராஜா, 
பஸ் பிரயாணத்துக்கு… தினமும் 500 ரூபாய் தேவை என்று நீங்கள் சில நாட்களுக்கு முன்பு சொன்னதை,  நினைவில் வைத்தே கூறினேன்.
சில தூதுவரலாயங்கள் கூட…. தற்போதைய நிலையை வைத்து, வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கதைத்தார்கள். உண்மை / பொய் தெரியவில்லை.
தூதுவராலய இணையத்தையும் இடைக்கிடை கவனித்துக் கொண்டு இருங்கள்.

ம் அண்ண பலரும் சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிகமான படிப்பை எதிர்பார்த்த வேலைகள்தான் சொல்வதாக கேள்வியும் பட்டன் பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் திங்கள் கிழமை கொழும்புக்கு சென்றேன் இடமாற்றம் கேட்டு என்னை  பாடசாலை அதிபர் விடுவிக்க முடியாது என்றார் இருந்தும் மினிஸ்றி சென்றால்  கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன்  கைவிரித்து விட்டார்கள் அதிபரிடம் எனது செலவீனங்களை சொன்னேன் பஸ் பயணம் 500/  காலை 7.30 சைன் பண்ண வேண்டுமென்றபடியால் அதிகாலை 4.30 மணிக்கு எழும்பணூம் சமைக்கணும் மதிய சாப்பாடு ( காலைச்சாப்பாடு  200/ பிளேன்டியுடன் சேர்த்து) மீண்டும் வேலை முடிய 3.30 மணி ஆகும் அதன் பின்னர் பஸ்பிடித்து ஊருக்கு 2  மணிநேரம் ஆகிறது ஆக மொத்தத்தில் 1 நாள் தேவை.  எடுக்கும் சம்பளத்துக்கு அரைவாசிக்கு செலவானால் இந்க பொருளாதார நெருக்கடியில் என்ன செய்வது திண்டாடிக்கொண்டிருக்கிறேன் 50 கிலோமீற்றர் போக வர ஆக மொத்தம் 100 கிலோமிற்றர் அண்ண

அடுத்த கிழமை என் கடவுச்சீட்டு முடிந்து பலவருடங்களாகிறது அதை புதுப்பித்து மத்திய கிழக்காவது செல்ல முடிவெடுத்துள்ளேன் .

புதுப்பிக்க 3500ரூபா, 20 வேலை நாட்களில் வருமாம். 3 மாதத்திற்குள் எடுத்த பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட எண் என்பவை தேவை என நினைக்கிறேன். எடுக்கும் போது சகல நாடுகளுக்கும்(All Country ) என கடவுச்சீட்டை எடுங்கோ. 

முன் கூட்டியே அனுமதி எடுத்து கடவுச்சீட்டு எடுக்கும் அலுவலகம் சென்றால் தாமதத்தை தவிர்க்கலாம்.

கடவுச்சீட்டுக்களை ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்காக www.immigration.gov.lk  எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

https://athavannews.com/2022/1282164

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

ம் நன்றி தகவலுக்கு  ஏராளன் திங்கள் பார்த்தன் சரியான கூட்டம்  பாஸ்போட் அலுவலகத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் நன்றி தகவலுக்கு  ஏராளன் திங்கள் பார்த்தன் சரியான கூட்டம்  பாஸ்போட் அலுவலகத்தில் 

கட்டாயம் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பதேவையில்லை எனில் (பெற்றாரை பார்ப்பது போல வேலைகள் இருந்தால் முடியாது) வேலைக்கு போகும் ஊரில் நண்பர்கள்/உறவினர் திங்கள்-வெள்ளி வீட்டில் தங்கி வரமுடியாதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

கட்டாயம் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பதேவையில்லை எனில் (பெற்றாரை பார்ப்பது போல வேலைகள் இருந்தால் முடியாது) வேலைக்கு போகும் ஊரில் நண்பர்கள்/உறவினர் திங்கள்-வெள்ளி வீட்டில் தங்கி வரமுடியாதா? 

இப்போதய நிலையில் எங்கும் தங்கி வாழ முடியாது அண்ண பொருட்கள் இல்லை எரிவாயு இல்லை கடையில் அதிக விலை உணவு.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2022 at 17:19, vasee said:

சம்பளமில்லாமல் வீட்டில் நிற்பதா? (Stand down?)

இன்னமும் stand down என்ற நிலைக்கு வரவில்லை என்றுதான் எனது யாழ்ப்பாண நண்பர்கள் கூறுகிறார்கள். விரைவில எரிபொருள் சேமிப்பை காரணம் காட்டி அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் வேலைக்குஅழைத்தல்  என்பது ஒரு பாரிய வேலைநீக்க திட்டத்தின் முதல் கட்டம் என்பது தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே அரசியல் காரணங்களுக்குக்காக உருவாக்கிய வேலைகளும் அலுவலர்களும் அதிகம்.. 

இலங்கையின் போக்கைப் பார்த்தால் இனி நடுத்தர வருமாண வர்க்கம் என்றது இல்லாமல் போய் அரசியல் செல்வாக்கால் உயரும் பணக்கார வர்க்கமும் வறிய மக்கள் என்ற இரண்டு வர்க்கங்கள்தான் உருவாகும் போலுள்ளது

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.