Jump to content

``தமிழ் அலுவல் மொழி; கச்சத்தீவு மீட்பு; திராவிட மாடல்..!" - ஸ்டாலின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அவரை தமிழக ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்த பிரதமர் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பிரதமர் - முதல்வர்
 
பிரதமர் - முதல்வர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசு விழா இது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திராவிட மாடல் வளர்ச்சி. இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. தமிழ்நாட்டின் வளர்ச்சி சமூக நீதி, சமத்துவத்தின் அடிப்படையிலானது. வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி. ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களின் நிதி சுமையை சமமாக ஏற்க வேண்டும். ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை குறைந்தது இரண்டு ஆண்டுக்காலம் நீட்டிக்க வேண்டும்.

``தமிழ் அலுவல் மொழி; கச்சத்தீவு மீட்பு; திராவிட மாடல்..!" - ஸ்டாலின் ஸ்பீச் ஹைலைட்ஸ்
 

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய நேரமிது. தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். உறவுக்கு கைக் கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்'' என்றார்.

``தமிழ் அலுவல் மொழி; கச்சத்தீவு மீட்பு; திராவிட மாடல்..!" - ஸ்டாலின் ஸ்பீச் ஹைலைட்ஸ் | Tamilnadu cm stalin speech at pm modi function - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் பிரதமர் மோதி: முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஸ்டாலின்

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடைபெற்று வரும் விழாவில் பிரதமர் மோதி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியபோது பிரதமரிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்தார்.

ஸ்டாலின் உரை

தமிழகம் பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகைகளில் தமிழ்நாடு மகத்தான வளர்ச்சியை அளித்து வருகிறது.

மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது.

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு முக்கிய பங்களிப்பை தருகிறது என இந்திய பிரதமருக்கு தெரியும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு.

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 விழுக்காடு. ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு.

ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்

  • தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
  • 15.5.2022 தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை 16 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும்
  • பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகரான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்
  • நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.

மோதியின் உரை

 

மோடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வணக்கம் என்று சொல்லி தனது உரையை தொடங்கினார் மோதி.

மீண்டும் தமிழ் நாட்டிற்கு வருவது என்பது எப்போதுமே அருமையாக இருக்கும் ஒன்று. இது மிகவும் சிறப்பான ஒரு பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி என அனைத்தும் சிறப்பானவை.

பாரதியார் அவர்கள் செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என மிக அழகாக பாடியுள்ளார்.

நண்பர்களே ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்து விளங்குகிறார்.

அண்மையில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பரந்துள்ளது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான அத்தியாயத்தை கொண்டாட நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று தொடங்கி வைக்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.

ஐந்து ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும் மேம்பாடும் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் இது உள்ளூர் கலை, கலாசாரத்துக்கு ஏற்படையதாகவும் இருக்கும்.

மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

திருவள்ளூர் முதல் பெங்களூர் வரை, எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையுமான இயற்கை எரிவாயு குழாய் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநில மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக்கும் தொலைநோக்கு பார்வையோடும், சென்னையில் ஒரு பல்நோக்கு ஏற்பாட்டியல் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டிருக்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது.

தலைசிறந்த தரமும் நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நான் உள்கட்டமைப்பு பற்றி பேசும்போது சமூக மற்றும் புற கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகின்றேன்.

தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.

பனாரஸ் பல்கலைக்கழத்தில் தமிழ் படிப்பிற்காக சுப்ரமணிய பாரதி பெயரில் ஒரு இருக்கை அண்மையில் அறிவிக்கப்பட்டது என மோதி உரையாற்றினார்.

மேலும் அவர் தனது உரையில் இலங்கை குறித்தும் குறிப்பிட்டார்.

"இலங்கை குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும். நட்பு ரீதியாகவும், அண்டை நாடு என்ற காரணத்தினாலும் இந்தியா, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறது." என்று தெரிவித்தார் மோதி.

https://www.bbc.com/tamil/india-61595370

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பிழம்பு said:

தமிழ்நாட்டில் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அவரை தமிழக ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்த பிரதமர் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பிரதமர் - முதல்வர்
 
பிரதமர் - முதல்வர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசு விழா இது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திராவிட மாடல் வளர்ச்சி. இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. தமிழ்நாட்டின் வளர்ச்சி சமூக நீதி, சமத்துவத்தின் அடிப்படையிலானது. வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி. ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களின் நிதி சுமையை சமமாக ஏற்க வேண்டும். ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை குறைந்தது இரண்டு ஆண்டுக்காலம் நீட்டிக்க வேண்டும்.

``தமிழ் அலுவல் மொழி; கச்சத்தீவு மீட்பு; திராவிட மாடல்..!" - ஸ்டாலின் ஸ்பீச் ஹைலைட்ஸ்
 

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய நேரமிது. தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். உறவுக்கு கைக் கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்'' என்றார்.

``தமிழ் அலுவல் மொழி; கச்சத்தீவு மீட்பு; திராவிட மாடல்..!" - ஸ்டாலின் ஸ்பீச் ஹைலைட்ஸ் | Tamilnadu cm stalin speech at pm modi function - Vikatan


போன வருடம்… மோடி ஜீ, தமிழகத்துக்கு வரும் போது…. 
“கோ பக் மோடி” என்று… கறுப்பு பலூன் பறக்க விட்ட திராவிட மாடல் கழகத்தினர்
இந்த முறை, அதனை பறக்க விடவில்லையா.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:


போன வருடம்… மோடி ஜீ, தமிழகத்துக்கு வரும் போது…. 
“கோ பக் மோடி” என்று… கறுப்பு பலூன் பறக்க விட்ட திராவிட மாடல் கழகத்தினர்
இந்த முறை, அதனை பறக்க விடவில்லையா.?

மாறிவரும் சூழலை மதிப்பாய்வு செய்து நகர்வததாகவே தோன்றுகிறது. ஸ்டாலின் தனது அரசியலை நன்றாக நகர்த்துகிறார். அரசியலில் எதிரும் இருக்கும் முரணும் இருக்கும். இங்கே பாஜகவுடன் திமுகவுக்கு இருப்பது முரணேயன்றிப் பகையல்ல. தமிழகத்தில் பாஜகவுடனான முதல் கூட்டே திமுகதான். ஈழத்தமிழினம் இங்கே அணிசேரா நிலையெடுத்து நகர்வதே சாலப்பொருத்தமாகும். 

நன்றி. 

  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவைக் கொடுக்கமுடியாது.

அம்புட்டுதே. 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nochchi said:

மாறிவரும் சூழலை மதிப்பாய்வு செய்து நகர்வததாகவே தோன்றுகிறது. ஸ்டாலின் தனது அரசியலை நன்றாக நகர்த்துகிறார். அரசியலில் எதிரும் இருக்கும் முரணும் இருக்கும். இங்கே பாஜகவுடன் திமுகவுக்கு இருப்பது முரணேயன்றிப் பகையல்ல. தமிழகத்தில் பாஜகவுடனான முதல் கூட்டே திமுகதான். ஈழத்தமிழினம் இங்கே அணிசேரா நிலையெடுத்து நகர்வதே சாலப்பொருத்தமாகும். 

நன்றி. 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

மாறிவரும் சூழலை மதிப்பாய்வு செய்து நகர்வததாகவே தோன்றுகிறது. ஸ்டாலின் தனது அரசியலை நன்றாக நகர்த்துகிறார். அரசியலில் எதிரும் இருக்கும் முரணும் இருக்கும். இங்கே பாஜகவுடன் திமுகவுக்கு இருப்பது முரணேயன்றிப் பகையல்ல. தமிழகத்தில் பாஜகவுடனான முதல் கூட்டே திமுகதான். ஈழத்தமிழினம் இங்கே அணிசேரா நிலையெடுத்து நகர்வதே சாலப்பொருத்தமாகும். 

நன்றி. 

சூழலை மதிப்பாய்வு செய்து தானே… அ.தி.மு.க. வும்,
தனது ஆட்சிக் காலத்தில் பா.ஜ.க. வுடன் நட்பு பாராட்டியது.
அப்போ… அ.தி.மு.க. வை, வசை பாடியது ஏன்?

யாழ். களத்தில்…. திராவிடத்துக்கு, சொல்லும்…. அணிசேராக் கொள்கை,
சீமானின், தமிழ் தேசியத்துக்கு… ஏன் பொருந்தவில்லை.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

சூழலை மதிப்பாய்வு செய்து தானே… அ.தி.மு.க. வும்,
தனது ஆட்சிக் காலத்தில் பா.ஜ.க. வுடன் நட்பு பாராட்டியது.
அப்போ… அ.தி.மு.க. வை, வசை பாடியது ஏன்?

யாழ். களத்தில்…. திராவிடத்துக்கு, சொல்லும்…. அணிசேராக் கொள்கை,
சீமானின், தமிழ் தேசியத்துக்கு… ஏன் பொருந்தவில்லை.

நன்றி.

அண்ணை,

ஒரு வார்த்தை சொல்லட்டே…

தற்காலிகம் 🤣

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

அண்ணை,

ஒரு வார்த்தை சொல்லட்டே…

தற்காலிகம் 🤣

நன்றி

கோசான்…. நீங்கள், யோகர் சுவாமி மாதிரி…
ஓரு வார்த்தையில் சொன்னால்… நான் எந்த அகராதியில் அர்த்தம் கண்டு பிடிக்கிறது. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்…. நீங்கள், யோகர் சுவாமி மாதிரி…
ஓரு வார்த்தையில் சொன்னால்… நான் எந்த அகராதியில் அர்த்தம் கண்டு பிடிக்கிறது. 😂

🤣 உடான்ஸ் சாமிகள் மிக இளவயதில் இருந்து யோகரின் நற்சிந்தனை கேட்டு வளர்ந்தவர், அந்த பாதிப்போ🤣.

சும்மா இருப்பதே சுகம் - இப்ப விளங்கி இருக்குமே?🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

🤣 உடான்ஸ் சாமிகள் மிக இளவயதில் இருந்து யோகரின் நற்சிந்தனை கேட்டு வளர்ந்தவர், அந்த பாதிப்போ🤣.

சும்மா இருப்பதே சுகம் - இப்ப விளங்கி இருக்குமே?🤣

 

இப்ப விளங்கீட்டுது. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சூழலை மதிப்பாய்வு செய்து தானே… அ.தி.மு.க. வும்,
தனது ஆட்சிக் காலத்தில் பா.ஜ.க. வுடன் நட்பு பாராட்டியது.
அப்போ… அ.தி.மு.க. வை, வசை பாடியது ஏன்?

யாழ். களத்தில்…. திராவிடத்துக்கு, சொல்லும்…. அணிசேராக் கொள்கை,
சீமானின், தமிழ் தேசியத்துக்கு… ஏன் பொருந்தவில்லை.

நன்றி.

அதிமுக செய்தது அடிமை வாழ்க்கை, எல்லாத்துக்கும் தலையை ஆட்டிக்கொண்டு இருப்பது, அது தமிழ் நாட்டுக்கும் தமிழர்களுக்கும் நல்லதல்ல, ஜெயலலிதா இருந்திருந்தால் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும், ஜெயலலிதா இருந்தவரைக்கும் நன்றாக இருந்த நிதி நிலைமையையும், பிறகு மிக மோசமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் நான் செய்தது என்ன? மோடி விளக்கம்!

spacer.png

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். தெலங்கானாவிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்துக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்தார். வழி நெடுகிலும், பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நேற்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. அப்போது, சென்னை - பெங்களூரு இடையே ஆந்திரா வழியாக ரூ.14,870 கோடி மதிப்பில் 262 கி.மீ. விரைவுச்சாலை, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 21 கி.மீட்டாருக்கு ரூ.5,850 கோடியில் இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்ட சாலை, நெரலூரு- தருமபுரி இடையே ரூ.3,870 கோடியில் 4 வழிச்சாலை, ரூ.720 கோடியில் மீன்சுருட்டி - சிதம்பரம் நான்கு வழிச்சாலை, எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் ரூ.1,800 கோடியில் சீரமைப்பு, சென்னை அருகே மப்பேட்டில் ரூ.1,400 கோடியில் பன்மாதிரி போக்குவரத்து பூங்கா, ரூ.2,900 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 5 திட்டங்கள், மதுரை - தேனி இடையே ரூ.500 கோடியில் மேம்படுத்தப்பட்ட அகல ரயில் பாதை, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.590 கோடியில் 3ஆவது ரயில் பாதை, எண்ணூர் - செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் 115 கி.மீ. நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம், திருவள்ளூர் - பெங்களூரு இடையே 271 கி.மீ. தொலைவில் 910 கோடியிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னையில் ரூ.116 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,152 வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்குதல் என 11 திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தும், தொடங்கியும் வைத்தார் பிரதமர் மோடி.

தமிழ்நாடு சிறப்பான பூமி

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டுக்கு வருவது என்பது எப்போதுமே மிக மகிழ்ச்சியாக இருக்கும். இது மிகவும் சிறப்பான பூமி. ஒவ்வொரு துறையிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகின்றார். அண்மையில் தான் நான் இந்திய காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பளித்தேன். இதுவரை நடந்த போட்டிகளில் இது தான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாம் வென்ற 16 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஆறு பேருக்கு ஒரு பங்கு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?. இது அணிக்கு மிகச் சிறந்த பங்களிப்புகளில் ஒன்று” என்று குறிப்பிட்டார்.

ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீர்

தொடர்ந்து பேசிய அவர், “குழந்தைகளுக்குச் சிறப்பான எதிர்காலத்தைக் கொடுக்க முக்கியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்று தான் தலைசிறந்த உள்கட்டமைப்பு வசதிகள். எந்த நாடுகள் எல்லாம் உள்கட்டமைப்பு வசதிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்தனவோ, அந்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையிலிருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன.

தலைசிறந்த தரமும், நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசாங்கம் தனது முழு கவனத்தைச் செலுத்துகிறது. நான் உள்கட்டமைப்பு பற்றிப் பேசும் போது, சமூக மற்றும் புறக் கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகிறேன்.

சமூகக் கட்டமைப்பை மேம்படுத்துவதன் வாயிலாக, நம்மால் ஏழைகள் நலனை உறுதி செய்ய முடியும். சமூகக் கட்டமைப்பின் மீதான நமது அக்கறை, அனைவரும் நலன் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் நமக்கு இருக்கும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சரி, கழிப்பறைகளோ, வீட்டுவசதியோ, நிதிசார் உள்ளடக்கத் திட்டங்களோ, அது ஏதுவாக இருந்தாலும், அவையனைத்தும், அனைவரையும் சென்று சேர்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம். ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீரைக் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்ய பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்படி நாம் செய்யும் போது, பாரபட்சமோ, விடுபட்டுப் போவதற்கான சாத்தியக்கூறோ இருக்காது.

உள்கட்டமைப்பு மீது கவனம் செலுத்தப்படும் போது, இந்தியாவின் இளைஞர்கள் தான் அதிகம் பயன் பெறுவார்கள். இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற உதவுவதோடு, வருவாயையும், அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொள்ள இதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். அதிவேக இணைய வசதியை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிவேக இணையத்தை நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்வதே எங்களுடைய தொலைநோக்குப் பார்வையாக உள்ளது. இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்” என்றார்.

தமிழ் மொழி

தமிழ் மொழி குறித்துப் பேசிய பிரதமர், “தமிழ்மொழியையும், கலாச்சாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது.

செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று, இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தப் புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது. விசாலமான ஒரு நூலகம், ஒரு மின்னணு நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், பல்லூடக அரங்கொன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

என்னுடைய தொகுதியில் இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புக்களுக்கான சுப்பிரமணிய பாரதி பெயரிலான ஒரு இருக்கை, அண்மையில் தான் அறிவிக்கப்பட்டது. இந்திய மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை அவற்றுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை காரணமாக, தொழில்நுட்ப, மருத்துவப் படிப்புக்களை உள்ளூர் மொழிகளிலேயே கற்க முடியும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் இதனால் பலனடைவார்கள்” என்று கூறினார்.

இலங்கைக்கு உதவி

மேலும் அவர், “இலங்கை நெருக்கடியான சூழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் தற்போதைய நிலவரம் உங்களுக்குக் கண்டிப்பாகக் கவலையளிப்பதாக இருக்கும்.

நெருங்கிய நட்பு நாடு என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும், இந்தியா இலங்கைக்கு அனைத்துவிதமான உதவிகளையும் அளித்து வருகிறது.

நிதியுதவி, எரிபொருள்-உணவு-மருந்துகள், பிற அத்தியாவசியமான பொருட்கள் உதவி ஆகியன இதில் அடங்கும்.

பல இந்திய அமைப்புக்களும் தனிநபர்களும் இலங்கையின் வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி மற்றும் மலையகத்தில் வாழும் தமிழர்கள் உட்பட, இலங்கையில் இருக்கும் தங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு உதவிகளை அளித்திருக்கிறார்கள்.

இலங்கைக்குப் பொருளாதார ஆதரவு அளிப்பது தொடர்பாகச் சர்வதேச அமைப்புகளால் இந்தியா தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு ஆதரவாக, இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.

யாழ்ப்பாணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்றதை என்னால் மறக்க முடியாது. யாழ்ப்பாணத்திற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நான்தான்.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையிலே இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் சுகாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கும்” என்று தெரிவித்தார்,

இறுதியாக, நாமனைவரும் இணைந்து இந்தியாவை வலுவானதாகவும், வளமானதாகவும் ஆக்குவோம் என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.


 

https://minnambalam.com/politics/2022/05/27/15/pm-modi-speech-in-chennai-nep-srilanka

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சூழலை மதிப்பாய்வு செய்து தானே… அ.தி.மு.க. வும்,
தனது ஆட்சிக் காலத்தில் பா.ஜ.க. வுடன் நட்பு பாராட்டியது.
அப்போ… அ.தி.மு.க. வை, வசை பாடியது ஏன்?

அதுதான் அவர்களின் அரசியல் 

 

9 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களத்தில்…. திராவிடத்துக்கு, சொல்லும்…. அணிசேராக் கொள்கை,
சீமானின், தமிழ் தேசியத்துக்கு… ஏன் பொருந்தவில்லை.

நன்றி.

நன்று,நன்றி

முதலில் நாமனைவரும் தமிழீழவர்களாக பொதுக் கருத்தியலில் இணைந்து நின்றவாறு, தமிழகத்திலுள்ள கட்சியரசியலுக்குள் சிக்கிவிடாது, எமது அரசியலைக் கையாளவேண்டும். இதனைத் தாயகத்திலே 2009இற்கு முன்பாகச் செவ்வனே கையாள  ஒரு நிர்வாகம் இருந்தது. இன்று அது இல்லை. அதனை நிரப்பிவிடும் ஆற்றலோ வளமோ அற்ற ஒரு மக்கட் கூட்டமாக நாமிருந்தவாறு முரண்களை வளர்த்துவிடாது எமக்கு உதவாதவர்களைக் கடந்து செல்லவதோடு, எமக்கு உதவக்கூடியவர்களைத் தோழமையோடு அணுகுவதும் ஏனையோரை வென்றெடுப்பதும் காலத்தேவையாகும். யார்யாரெல்லாம் எமக்காகக் குரல்கொடுக்கிறார்களோ கொடுக்கட்டும். அது சீமானாக இருந்தாலென்ன ஸ்டாலினாக இருந்தாலென்ன. நாம் முதலில் எமக்கான ஆதரவுத் தளங்களை சரியாகக் கட்டமைத்தலும், முரணாளர்களை வென்றெடுத்தலும் அவசியமானது. 
  
ஒருவகை சுயநலம் இருந்தாலும், தமிழகத்தின் உணவு அனுப்பும் செயற்பாடுகூட ஒருவகைக் குறியீட்டு நடவடிக்கையுமாகப் பார்க்கப்படவேண்டியது. உலகமெங்கும் தமிழீழவர்கள் இருந்தும் நாம் சிந்திக்கவில்லை. ஆனால், தமிழகம் ஒரு மாநில அரசாக சிந்தித்துள்ளது. செயற்பட்டுள்ளது. தமிழீழவர்கள் சிங்களத்துக்குச் சுவறக்கூடாது என்று பார்த்துத் தவிர்க்கிறோம்.ஆனால் சிங்களம்தான் அரசாக இருக்கிறது என்ற யதார்த்தத்தையும் மனங்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

நன்றி

 

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

கச்சதீவைக் கொடுக்கமுடியாது.

அம்புட்டுதே. 

😡

ஏன், அது இலங்கையின் பாரம்பரிய சொத்தா? 🥱 😡 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தி நரிகளும்,raw  பேய்களும் எழுதி கொடுத்ததை விற்க வந்து இருக்கும் மோடி.

சொறி சிங்களத்துக்கு கிந்தியா எல்லாவற்றையும் செய்ய, இழித்த  வாய் வழித்தேஙகாயாக தமிழ் நாடு இருபதற்கு, அதுவும் தமிழ் நாடு அதை உணராமல் இருப்பதற்கு, தொடர்ந்து அப்படியே இருக்கவும் நன்றி.     

சொல் விற்பனமும், அவதானமும், தமிழ் போற்றும் நல்வித்தையும் இலவசம், சொல்வபவருக்கும், கேட்பவருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

ஏன், அது இலங்கையின் பாரம்பரிய சொத்தா? 🥱 😡 🤗

கச்சத்தீவை ஏன் இந்தியாவுக்கு கொடுக்க வேண்டும் ? பதில் தாருங்கள் (அரசியல் ரீதியான  காரணங்கள் அல்ல)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

கச்சத்தீவை ஏன் இந்தியாவுக்கு கொடுக்க வேண்டும் ? பதில் தாருங்கள் (அரசியல் ரீதியான  காரணங்கள் அல்ல)

 

பறக்காத கிளிக்கு எதுக்கு பட்டு குஞ்சம்..
பல்லில்லாதவனுக்கு எதுக்கு பக்கோடா ..
இருக்கிற பெரும் தீவையே கட்டி காக்க தெரியேல்ல .. அதுக்குள்ளே இத வச்சு என்ன செய்ய.
பேசாம சீனாவுக்கு ஒரு விலையை பேசி வித்துரலாம். நடக்கிற சண்டையை வேடிக்கை பார்க்கலாம். 😉

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Sasi_varnam said:

பறக்காத கிளிக்கு எதுக்கு பட்டு குஞ்சம்..
பல்லில்லாதவனுக்கு எதுக்கு பக்கோடா ..
இருக்கிற பெரும் தீவையே கட்டி காக்க தெரியேல்ல .. அதுக்குள்ளே இத வச்சு என்ன செய்ய.
பேசாம சீனாவுக்கு ஒரு விலையை பேசி வித்துரலாம். நடக்கிற சண்டையை வேடிக்கை பார்க்கலாம். 😉

 

இப்படியே அந்த வடக்கு  கிழக்கையும்??🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Sasi_varnam said:

பறக்காத கிளிக்கு எதுக்கு பட்டு குஞ்சம்..
பல்லில்லாதவனுக்கு எதுக்கு பக்கோடா ..
இருக்கிற பெரும் தீவையே கட்டி காக்க தெரியேல்ல .. அதுக்குள்ளே இத வச்சு என்ன செய்ய.
பேசாம சீனாவுக்கு ஒரு விலையை பேசி வித்துரலாம். நடக்கிற சண்டையை வேடிக்கை பார்க்கலாம். 😉

உண்மைதான்.!

மிகப்பெரும் அழிவுகளைக் கண்டும் நாமின்னும் பலவிடயங்களை அறிவுக்கெட்டியதூரத்தில் வைத்து அலசமறுப்பதின் விளைவென்றே தோன்றுகிறது. இலங்கை அரசோடு விடுதலைக்குப்பின்னான காலத்தில் அமைந்த இந்திய அரசுகளனைத்தும் முரண்பட்டுக் கடந்திருக்கின்றனவேயன்றிப் பகைகொண்டு ஒதுக்கவில்லை.பெரும் ஒத்துழைப்பகளையே செய்துவருகின்றன. மிகப்பெரும் படைபலமும் மக்கட்கூட்டமும் கொண்டபோதும் இராயதந்திர வழிகளையே கடைப்பிடித்து வருகிறது. (அதனால் அது அவமானப்பட்டுவருகின்றபோதும்) இலங்கை சிறியநாடானபோதும் 2500 ஆண்டுகால இராயதந்திர அணுகுமுறை(அதிலும் பல புலமைத் தமிழரது ஆலோசனைகளும் அடக்கம்) அனுபவத்தைத் தன்னகத்தேகொண்ட நாடாகவும் உள்ளது. இந்த இருபெரும் நெருக்குவாரத்துள்ளிருந்து தமிழினம் மீட்சிபெறுவது அத்துணை இலகுவானதல்ல. அதற்கான செயற்பாடுகளைச் சிந்திப்பதும் கூட்டிணைந்து செயற்படுவதுமே தேவையாகும். இதிலே கச்சைதீவை தமிழகம் கேட்டாலென்ன சிறிலங்கா கொடுத்தாலென்ன? எமக்கு எமது நிலம் வேண்டும். ஆனால் தமிழீழம் மலருமபோது சிங்களம் இந்தியாவுக்கு அறுதியாக எழுதிக்கொடுத்துவிடும். இந்த இடைக்காலத்தில் கச்சைதீவு அரசியல் ஊடக இலங்கைக்கு அச்சுறுத்தல் மட்டுமே விடமுடியும். 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Sasi_varnam said:

பேசாம சீனாவுக்கு ஒரு விலையை பேசி வித்துரலாம். நடக்கிற சண்டையை வேடிக்கை பார்க்கலாம். 😉

நான் நினைக்கவில்ல சீனாவும் வாங்க விரும்பும் என்று.. சீனா பசுபிக் பிராந்திய மீன்வளத்தில் கண்ணை வைத்துவிட்டது.. இனி அங்கேதான் dragon dance இருக்கும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

பறக்காத கிளிக்கு எதுக்கு பட்டு குஞ்சம்..
பல்லில்லாதவனுக்கு எதுக்கு பக்கோடா ..
இருக்கிற பெரும் தீவையே கட்டி காக்க தெரியேல்ல .. அதுக்குள்ளே இத வச்சு என்ன செய்ய.
பேசாம சீனாவுக்கு ஒரு விலையை பேசி வித்துரலாம். நடக்கிற சண்டையை வேடிக்கை பார்க்கலாம். 😉

நீங்கள் சொல்வது சரிதான்.

வட மேற்கில் அருணாச்சல் பிரதேசத்தையே காக்க/தக்க வைக்க முடியாத இந்தியா, கச்சதீவைக் கொடுத்தாலும் ஒன்றுமே ஆகப்போவதில்லை. 

பெயரைக் கவனிக்கவும்; கச்சை தீவு. (கோவணத் தீவு) இந்தியாவுக்கு கோவணம் போல இருப்பதால் இந்தப் பெயர் வந்ததோ தெரியவில்லை. அல்லது மீனவர்கள் தங்கள் உள்ளாடைகளைக் காயவிடுவதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். 🤣

இதனை சீனாவிடம் கொடுத்தால் இந்தியாவின் கச்சையும்/கோவணம் கழன்றதாகிவிடும். 

😉

 

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

பெயரைக் கவனிக்கவும்; கச்சை தீவு. (கோவணத் தீவு) இந்தியாவுக்கு கோவணம் போல இருப்பதால் இந்தப் பெயர் வந்ததோ தெரியவில்லை. அல்லது மீனவர்கள் தங்கள் உள்ளாடைகளைக் காயவிடுவதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம்.

ஆமைக்கு ‘கச்சபம்’ என்ற பெயரும் உண்டு. இதனால்தான் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆமைகளின் புகலிடமாக கச்சதீவு இருந்து வந்தது.

இதனால்தான் இந்த தீவு ‘கச்ச 🐢தீவு’ என்று அழைக்கப்படுகிறது.

கச்சபதீவு எவருடைய ஆள்கைக்குள் இருக்கவேண்டும் என்பதில் இனியும் சந்தேகம் ஏன்? ஸ்டாலின் கேட்பதன்படி நடந்தால்தான் சரியானவரின் ஆட்சிக்குள் எதிர்காலத்தில் இருக்கும். ஆனால் ஆமை எல்லாம் இல்லாமல் போய்விடும்😂🤣

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்ச தீவை  இந்தியாவுக்கு திரும்ப கொடுக்கவேண்டும். அப்போதுதான் எல்லை மீறும் இந்தியக் கடற்கொள்ளையருக்கு சரியான பாடம் புகட்டமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘கச்சதீவை வழங்க முடியாது; உறவும் பாதிக்காது’

“கச்சதீவை வழங்க முடியாது; அதில் உடன்பாடு இல்லை. என்னுடைய நிலைப்பாடு அதுவே” என  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கையிலேயே சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு தமிழர்கள் குறிப்பாக மீனவர்களின்  நிலைப்பாடு கச்சதீவை வழங்க முடியாது என்பதுவே. அது எங்களுடைய மீனவர்களுக்கு பாதிப்பாக அமையும்.

“எனவே, கச்சதீவை வழங்கு முடியாது; அதற்கான வாய்ப்பு இல்லை. தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வாறு ஒரு  கோரிக்கையை தமிழக முதலமைச்சர் விடுத்திருக்கலாம். 

“ஆனால், அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழக முதலமைச்சரின்  இந்தக் கோரிக்கை தொடர்பில் தமிழக மற்றும் ஈழத்தமிழ் உறவில் பாதிப்புக்கள் ஏற்படாது.

“ஒரு விடயத்தில் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், அது உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது” என்றார்.
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/கசசதவ-வழஙக-மடயத-உறவம-பதககத/175-297338

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.