Jump to content

``தமிழ் அலுவல் மொழி; கச்சத்தீவு மீட்பு; திராவிட மாடல்..!" - ஸ்டாலின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

கச்சத்தீவை ஏன் இந்தியாவுக்கு கொடுக்க வேண்டும் ? பதில் தாருங்கள் (அரசியல் ரீதியான  காரணங்கள் அல்ல)

தானமாக கொடுத்ததின் விளைவு தன்னையே குத்துமென்றல், திரும்ப எடுத்துக்கொள்வதில் என்ன தவறு?

 

4 hours ago, Sasi_varnam said:

...
பேசாம சீனாவுக்கு ஒரு விலையை பேசி வித்துரலாம். நடக்கிற சண்டையை வேடிக்கை பார்க்கலாம். 😉

சிரித்துக்கொள்வதை தவிர வேறொன்றும் எழுத தோன்றவில்லை ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

தானமாக கொடுத்ததின் விளைவு தன்னையே குத்துமென்றல், திரும்ப எடுத்துக்கொள்வதில் என்ன தவறு?

கொடுக்கக்கூடாது என்று நான் கூறுவதற்குக் காரணம் ;

இந்திய மீனவர்கள் ஏற்கனவே தங்கள் கடலை பாலைவனமாக்கிவிட்டு, 30 வருடங்களாக கொடிய போரில் சிக்கி சின்னாபின்னமாகிய இனத்தின் கடல் வளத்தை சட்டத்திற்குப் புறம்பாக உள் நுழைந்து, தடை செய்யப்பட்ட மீன்பிடி குறைகளைப் பாவித்து  சூறையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் தொழில் உபகரணங்களை நாசமாக்குகின்றனர். படகுகளால் மோதி மீனவர்களைக் கொல்கின்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவையும் அவர்களிடம் கையளித்தால், இலங்கையின் வடபகுதி மீனவர்களின் நிலை என்னாகும்? இலங்கையின் வடபகுதி கடல்வளத்தின் நிலை என்னாகும் ? 

ஆதனால்தான்  கூறுகிறேன, இந்திய மீனவர்களை இலங்கை கடல் எல்லைக்குள் நுழையவிடக் கூடாது. கச்சதீவை இந்தியாவுக்கு கொடுக்கக் கூடாது. 

🙏🏼

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Sasi_varnam said:

பறக்காத கிளிக்கு எதுக்கு பட்டு குஞ்சம்..
பல்லில்லாதவனுக்கு எதுக்கு பக்கோடா ..
இருக்கிற பெரும் தீவையே கட்டி காக்க தெரியேல்ல .. அதுக்குள்ளே இத வச்சு என்ன செய்ய.
பேசாம சீனாவுக்கு ஒரு விலையை பேசி வித்துரலாம். நடக்கிற சண்டையை வேடிக்கை பார்க்கலாம். 😉

சண்டை என வந்தால் மனித பேரழிவுகள் வருமல்லவா? நகரங்கள் அழியுமல்லவா? பொருளாதாரம் பாதிக்கப்படும் அல்லவா? மக்கள் இருப்பிடம் இல்லாமல் அலைவார்கள் அல்லவா?

நாம் போரால் பாதிக்கப்படவர்கள். இலங்கையை மீண்டும் போர்க்கள பூமி ஆக்குவதை நான் ஏற்க மாட்டேன்.

 

11 hours ago, கிருபன் said:

கச்சபதீவு எவருடைய ஆள்கைக்குள் இருக்கவேண்டும் என்பதில் இனியும் சந்தேகம் ஏன்? ஸ்டாலின் கேட்பதன்படி நடந்தால்தான் சரியானவரின் ஆட்சிக்குள் எதிர்காலத்தில் இருக்கும். ஆனால் ஆமை எல்லாம் இல்லாமல் போய்விடும்😂🤣

ஆமைகளின் நீரோட்ட பாதையை வைத்தே பழம்பெரும் தமிழன் வணிக ரீதியாக கப்பலோட்டினான் என்பது வரலாறு.

கப்பலோட்டிய தமிழன் உலக சரித்திரம். :cool:

 

9 hours ago, ராசவன்னியன் said:

 

நானொரு தமிழன். எனக்கு புரியாத புதிராக இருப்பது என்னவெனில்?
திராவிடம் அல்லது திராவிட மாடல் என்றால் என்ன?
நான் யாராக யாருக்காக இருக்க வேண்டும்?
திராவிடத்தின் மொழி என்ன?
திராவிடத்தில் சாதிகள் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நாம் போரால் பாதிக்கப்படவர்கள். இலங்கையை மீண்டும் போர்க்கள பூமி ஆக்குவதை நான் ஏற்க மாட்டேன்.

கு.சா. ஐயா .. உங்களுக்கு தெரியாதா ஒரு நிலத்தை வித்து விட்டால் அதுக்கு நாம் சொந்தக்காரர்கள் இல்லையென்று!! அதுக்குள்ள போர் வந்தால், சண்டை வந்தால் நிச்சயம் நீங்கள் கலங்க மாட்டீர்கள். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு விவகாரம் – தமிழரசுக் கட்சியும் அதீத கவனம் செலுத்துவதாக மாவை தெரிவிப்பு!

கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சதீவு விடயம் பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
mavai-000-300x162.jpg
தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவெனக் கோரிக்கை விடுத்திருந்தார். எனவே, இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இது இரண்டு நாடுகளின் உடன்படிக்கை. இந்தநிலையில், கச்சதீவு எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்குச் சாதகமாக இருக்குமானால் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்திய அரசுடன் பேச வேண்டும்.
அதற்கு முன்னதாக கச்சதீவை இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கருத்து தொடர்பில் முதலில் எமது கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறியவேண்டும்.
அவர்களின் கருத்துக்களை வைத்தே எங்கள் முடிவுகள் அமையும். அதற்கு முன்னதாக எழுந்தமானமாகக் கருத்துக்களைக் கூறமுடியாது.
அத்தோடு இலங்கை – இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைப் படகு பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது.
எனவே, அது தொடர்பில் இந்திய அரசுடன் பேசும்போது கச்சதீவு விடயம் பற்றியும் பேசவேண்டும். இதுவொரு இராஜதந்திர ரீதியான நடவடிக்கை” – என்றார்.

 

https://thinakkural.lk/article/179915

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.