Jump to content

broccoli வாங்கிட்டீங்களா?


Recommended Posts

புற்றுநோய்களால் பாதிக்கப் பட்டவர்கள் உலகில் அதிகம். இங்கிலாந்தில் மட்டும் நாளொன்றுக்கு 24பேர் புற்று நோயால் இறக்கிறார்கள் என அறிக்கை ஒன்று சொல்கிறது. இதைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் இன்னும் வரவில்லை. அப்போ ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் கல்யாணகுமார் எப்படி புற்று நோயாளியான முத்துராமனைக் குணப்படுத்துகிறார் என்று கேட்டு விடாதீர்கள்.

புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிகள் என்ன என்பதை ஆராய்ந்து அவ்வப் போது ஏதாவது அறிவித்துக் கொண்டிருப்பாhகள். சமீபத்தில் 1300 பேரைப் பரிசோதித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

பழவகைகள், காய்கறி வகைகளை உட்கொண்டால் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி உடலில் அதிகரிக்கும் என்ற கதை ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும் கரும் பச்சை நிறம் கொண்ட மரக்கறிகளுக்கே புற்றுநோயை வராமல் தடுக்கும் சக்தி அதிகம் என்ற அறிவிப்பையே அவர்கள் தந்திருக்கின்றார்கள். இதற்காக அவர்கள் பரிந்துரைக்கும் பிரதானமான மரக்கறி broccoli ஆகும்.

broccoli , cauliflower போன்ற மரக்கறி வகைகளில் வாயுத் தொல்லை இருப்பதால், மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராமல் கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து ……

Link to comment
Share on other sites

broccoli , cauliflower போன்ற மரக்கறி வகைகளில் வாயுத் தொல்லை இருப்பதால், மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராமல் கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து ……

விளங்குது..விளங்குது ஆனா எனக்கு இதை கண்ணிலையும் காட்ட ஏலாது.........நான் சாப்பிடுறதே இல்லை வீட்டை போட்டு தந்தாலும் அங்கால போய் கொட்டிடுவேனே............ஆரவல்லி அக்கா நீங்க சாப்பிடுறனீங்களோ.........எப்படி அதை எல்லாம் மனிசன் சாப்பிடுவானோ தெரியாது........... :) ;)

Link to comment
Share on other sites

இதை நீராவியில் வேக வைத்தபின் ஒலிவ் ஒயில் கொஞ்சம் சேர்த்து, சிறிதளவு உப்பும் தூவி சாப்பிடலாம்.

calabrese_thumb.jpg

http://www.seedfest.co.uk/seeds/broccoli/calabrese_thumb.jpg

Link to comment
Share on other sites

புரோக்கோலி தனிய சாப்பிட பிடிக்கா விட்டால் கீழ் வரும் சூப் தயார் செய்யும் முறை சில வேளை

உங்களுக்கு பிடிக்கலாம்.

1 1/2 lbs. Broccoli - fresh

2 C. Water

3/4 tsp. Salt

1/2 C. Cornstarch mixed with 1-cup water

1 pint half-and-half

1 pound pasteurized processed cheese (Velveeta)

1/2 tsp. pepper

Steam broccoli until tender. Place half-and-half and water in top of double boiler. Add cheese, salt and pepper. Heat until cheese is melted. Add broccoli. Mix cornstarch and water in small bowl. Stir into cheese mixture in double boiler and heat over simmering water until soup thickens

Link to comment
Share on other sites

சரி அண்ணா சொல்லுற மாதிரி சூப் வைத்து பார்கிறேன் நல்லா இருந்தா அதை குடிக்கிறேன்..........நீங்க சூப் செய்து தான் குடிகிறனீங்களா...........தகவலுக்கு மிக்க நன்றி. :lol:

Link to comment
Share on other sites

ஆரவல்லி, நல்ல விடயம் அறியத்தந்தீர்கள். இதனுடைய அருமை எங்கே எங்கள் சோற்றுப் பட்டாளங்களுக்குத் தெரியப் போகுது. புரோக்கோலி போன்ற மரக்கறி வகைகளை சாப்பிட்டால் எவ்வளவு நல்லது என்று என்னுடைய புற்று நோயால் பாதிக்கப்பட்ட மைத்துனியிடம் சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் அவர் சாப்பாட்டு விடயத்தில் "so picky picky". சென்ற மாதம்தான் தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் அன்புக் கணவரையும் விட்டுப் பிரிந்தார். பெருந்துயரமான நிகழ்வு.

எமது தமிழ் உறவுகள் அனைவருக்கும் சுகதேகிகளாக வாழ்ந்து எமது நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்பதே எமது அனைவரது விருப்பமும்.

விளங்குது..விளங்குது ஆனா எனக்கு இதை கண்ணிலையும் காட்ட ஏலாது.........நான் சாப்பிடுறதே இல்லை வீட்டை போட்டு தந்தாலும் அங்கால போய் கொட்டிடுவேனே............ அக்கா நீங்க சாப்பிடுறனீங்களோ.........எப்படி அதை எல்லாம் மனிசன் சாப்பிடுவானோ தெரியாது...........

ஒரு செவியினையாவது திருக வேண்டும் என்று என்னுடய விரல்கள் துடிக்கின்றன. நல்லவேளை எனது சொந்தச்சகோதரியாக அவதரிக்கவில்லை. தயவு செய்து அங்கால போய் கொட்டும் போது ஈழத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் எங்கள் உறவுவுகளை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

செயியை திருக போறீங்களா பாவம் நான் அக்கா..........அக்கா இது மட்டும் என்னால சாப்பிட ஏலாது என்று பொய் சொல்லமாட்டேன் மரகறி என்னால சாப்பிடவே ஏலாது............வெறி சொறி அக்கா எனி கொட்டவில்லை.........ஏன் என்றா எனி மரகறி சாப்பிடுறது என்று முடிவுக்கு வந்துட்டன்........ ;) :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.