Jump to content

வடக்கு மக்களுக்கு இந்தியாவிடம் இருந்து உதவிகள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களுக்கு இந்தியாவிடம் இருந்து உதவிகள்!

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இவற்றை காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

தொலைபேசி ஊடாக நேற்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
http://www.samakalam.com/வடக்கு-மக்களுக்கு-இந்திய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

வடக்கு மக்களுக்கு இந்தியாவிடம் இருந்து உதவிகள்!

தெற்கு மக்களுக்கு கடுப்பாக இருந்தால்... 😡
போன முறை இந்தியாவில் இருந்து வந்த கப்பல்... கொழும்புக்கு வந்தது,
இந்த முறை வாற கப்பல்... காங்கேசன் துறைக்கு எண்டு சொல்ல வேண்டியதுதான். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Top 30 Oil Tankers GIFs | Find the best GIF on Gfycat

அடுத்து... ஒரு எரிவாயு கப்பலையும்,  பெற்றோல் கப்பலையும்...
வடக்கு, கிழக்குக்கு அனுப்ப சொல்ல வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எதனால் அக்கா குறைந்தது செய்தியாக வந்து இருக்கிறது?

திராவிடம் அதன் தலைமை, உக்ரைன் போறவற்றில் யதார்த்தத்தை சொல்லும் போது, அது அந்நியப்படுத்துகிறது, அங்கு பாதக விளைவு ஏற்றப்படுத்துகிறது  என்றால்.

இதற்கு yarl காரணமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kadancha said:

இது எதனால் அக்கா குறைந்தது செய்தியாக வந்து இருக்கிறது?

திராவிடம் அதன் தலைமை, உக்ரைன் போறவற்றில் யதார்த்தத்தை சொல்லும் போது, அது அந்நியப்படுத்துகிறது, அங்கு பாதக விளைவு ஏற்றப்படுத்துகிறது  என்றால்.

இதற்கு yarl காரணமோ?

கடஞ்சா... வேறு திரியில், பதிய வேண்டியதை... இங்கு பதிந்து விட்டீர்கள் போலுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

கடஞ்சா... வேறு திரியில், பதிய வேண்டியதை... இங்கு பதிந்து விட்டீர்கள் போலுள்ளது. 

சொல்லியதன அர்த்தம் , yarl இல், சிங்களதின் விருப்பின் படியே உ ணவு தட்டுப்பாட்டிலும் , தமிழர் உணவை  பெற வேண்டும் அல்லது கூடாது என்பது, கிந்தியாவின் காதுகளுக்கு எட்டி, கிந்தியாவுக்கு ரோசம் வந்து விட்டதோ என்பது.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Top 30 Oil Tankers GIFs | Find the best GIF on Gfycat

அடுத்து... ஒரு எரிவாயு கப்பலையும்,  பெற்றோல் கப்பலையும்...
வடக்கு, கிழக்குக்கு அனுப்ப சொல்ல வேணும். 🤣

முதலில் தமிழ்ஈழத்தை வென்று எடுக்க பாருங்கள்...பிறகு தான்பாட்டிலேயே எரிவாயு பெற்றோல். எல்லாம் வரும்.....😂பணத்தை அச்சடித்து  கொடுக்கலாம்  🙏😆

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களுக்கு இடையான கலந்துரையாடல் இருக்கட்டும் . கூட்டமைப்பு டக்கியை முந்தி இருக்க வேண்டும்.. இப்படியே போனால் டக்கி கூடுதல் ஆசனம் பெறுவது உறுதி .. 

வெறும் வாய் சவடால் அறிக்கை /  தமிழ் தேசியம் மட்டுமே உதவாது மக்களின் தற்கால நிலை அறிந்து செயல்பட வேணும் .👍

Link to comment
Share on other sites

No photo description available.
 
பெற்றோலை நம்பியுள்ள #மத்திய_கிழக்கு
முன்னேறுகின்றது.
காடுகளை நம்பியுள்ள #மலேசியா முன்னேறுகின்றது.
மாடுகளை நம்பியுள்ள
#டென்மார்க் முன்னேறுகின்றது.
கடிகாரத்தை நம்பியுள்ள
#சுவிசர்லாந்து முன்னேறுகின்றது.
நிலப்பரப்பை நம்பியுள்ள #அவுஸ்திரேலியா முன்னேறுகின்றது.
தொழில்நுட்பத்தை நம்பியுள்ள #ஜப்பான் முன்னேறுகின்றது.
அறிவியலை நம்பியுள்ள
#அமெரிக்கா முன்னேறுகின்றது.
கூட்டுப்பண்ணைகளை
நம்பியுள்ள #ரஷ்யாவும் முன்னேறுகின்றது.
இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும்
தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை வைத்து முன்னேறிக் கொண்டிருக்க
நீர்வளம், நிலவளம், மலைவளம்,
வனவளம், விவசாயவளம், உற்பத்திவளம்,
இரத்தினக்கல் வளம், தேயிலை, தென்னை, நெல் அரிசி, இறப்பர், கோப்பி, கொக்கோ, கராம்பு, மிளகு, ஏலம் போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம், வாழை, பலா, தூரியன், ரம்புட்டான், மெங்கூஸ் , அன்னாசி போன்ற கனிவளம், மனிதவளம் என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு ஏன் இன்னும் முன்னேறாமல் உள்ளது?
சிந்தனைக்கு?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அமைச்சர்களுக்கு இடையான கலந்துரையாடல் இருக்கட்டும் . கூட்டமைப்பு டக்கியை முந்தி இருக்க வேண்டும்.. இப்படியே போனால் டக்கி கூடுதல் ஆசனம் பெறுவது உறுதி .. 

வெறும் வாய் சவடால் அறிக்கை /  தமிழ் தேசியம் மட்டுமே உதவாது மக்களின் தற்கால நிலை அறிந்து செயல்பட வேணும் .👍

இந்தியாவின் வடக்கு கிழக்கிற்கான உதவியை இலங்கைக்கான உதவியாக மாற்றியதே TNA தான்.

இங்கு தரங்குறைந்த அரசியல் செய்வது டக்கியரே.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.