Jump to content

ஜோனி டெப் - அம்பர் கேட் வழக்கு முடிவை நெருங்குகிறது.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சட்டம் பயிலும் மாணவர்களுக்கும், சட்டவியலில் ( பிராக்டிஸ் ) பயிற்சி எடுப்பவர்களுக்கும், அமெரிக்க நீதிமன்றங்கள் வரப்பிரசாதம்.

வழக்குகளை நேரலை செய்வது பிரிட்டிஸ் நீதிமன்ற வழமை இல்லை, ஆனால் அமெரிக்க நீதிமன்றங்களில் இது வழமை.

Why Pirates Of The Caribbean 6 Isn't A Sequel

இந்த வகையில், அமெரிக்க நீதிமன்றில் நடைபெறும், பைரேட் ஒவ் த கரிபியன் பட நடிகர் ஜோனி டெப்பிக்கும், அவரது முன்னாள் மனைவி, அம்பர் க்கேட்டுக்கும் நடக்கும் வழக்கின் தொகுப்புரை நேற்றிரவு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

Amber Heard's $100 Million Defamation Countersuit Against Johnny Depp Is Moving Forward | Vanity Fair

அழகின் பின்னால் இருக்கும் நச்சாபத்தை, புட்டுப்புட்டு வைத்தார், டெப்பின் வக்கில்.

கொடுரமான வீட்டு வன்முறை பாதிப்பாளர் (Victim of Domestic Violence) என்று அம்மணி டெப்ப்க்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். போலீஸில் அல்ல, மீடியாவில்.

நடிகை அல்லவா, அவரது அழுகை..... குமுறல் காரணமாக, டெப்பின் பல படங்கள், விளம்பர ஒப்பந்தங்கள் ரத்தாகின.

Amber Heard Says She Received Death Threats During Defamation Trial

வாசிங்டன் போஸ்டில், அம்மணி ஒரு கட்டுரை வேறு போட்டார். தான் வீட்டு வன்முறைக்கு எதிராக பெரும் முன்னெடுப்பை செய்ய போவதாகவும், தான் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்றும், பாலியல் வன்முறை, உட்பட, டெப்பினால் தனது பிறப்புறுப்பு.... வேறு பொருள் ஒன்றால் தாக்கப்பட்டு தேதமானது என்றும் சொன்னார் அவர்.

இதற்கு மேல் தாமதிப்பது ஆபத்து என வெகுண்ட டெப், அம்பர் மேல் $50 மில்லியன்  நஸ்டஈடு வழக்கு தொடுத்தார். பதிலுக்கு அம்பர், $100 மில்லியன் கேட்டு வழககு தொடுத்தார்.

டெப் தரப்பு சட்ட குழு, தந்திரமாக, கமீலியா எனும் பெண் வக்கீலை முன்னிலைப்படுத்த குறுக்கு விசாரணை செய்த கமீலியா, அம்பர் சொன்னது அணைத்துமே பொய் என நொருக்கித்தள்ளி விட்டார்.

போதையில் இருந்த டெப்பின் கையிலிருந்த வொட்கா போத்தலால் தனது பிறப்புறப்பு, தாக்கப்பட்டது என்று மருத்துவ சான்று  இல்லாமலே சொல்லியிருந்தார் அம்பர்.

ஆனால், வொட்கா போத்தலால் தாக்கப்பட்டு டெப் கை விரல் துண்டாகி, ரத்தம் சிந்தி வைத்திய உதவி கிடைத்ததை நீதிமன்றில் சான்றுகளுடன் நிரூபித்தார் கமேலியா.

இறுதியாக நீ அல்ல, உன் முன்னாள் கணவர் தான் வீட்டு வன்முறை பாதிப்பாளர், இல்லையா என்று ஒரே போடாக போட்டு விட்டார்.

நேற்று, இருபக்க தொகுப்புரை முடிந்து, நடுவர் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

மிகக் கூலாக கமேலியா வழக்கை கொண்டு சென்ற விதம் அருமையானதும், சட்டமாணவருக்கு படிப்பினை தருவதுமாகும்.

Fan pages, video tributes, and romance rumors: How Johnny Depp's fandom turned its focus to his lawyer Camille Vasquez | The Independent

சிறப்பாக வாதாடிய கமீலாவை கட்டி தழுவும் டெப்

டெப்பின் கரீயரை தாக்கியழிப்பதே அம்பரின் ஒரே நோக்கமாக இருந்ததுடன்..... நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படாத அம்பரின் அறிவிப்பை நம்பி, அவருடன் போட்டிருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்த நிறுவனங்களும், இந்த வழக்கில் டெப் வென்றால் நஸ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.

அடுத்தவாரம் தீர்ப்பு வரலாம்.

இரு்தாலும், யாழ் களம் சார்பில், வழக்கை பார்த்த வகையில்.... இப்ப இந்த நாட்டாமை நாதமுனியர் தீர்ப்பு; அழகான பெண்கள் பின்னால் ஓடாதே.... பேராபத்து காத்திருக்கலாம். நமக்கெளிது சம்பந்தம் எண்டிருக்க வேணும்.

இப்ப நம்ம பங்கரை, இந்த வீடியோகக்களை பார்த்து தீர்ப்பை சொல்லுமாறு அழைக்கிறோம்.

Edited by Nathamuni
Addition
 • Like 4
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • Nathamuni changed the title to ஜோனி டெப் - அம்பர் கேட் வழக்கு முடிவை நெருங்குகிறது.
 • கருத்துக்கள உறவுகள்

பணம் இருப்பதால் இப்படி செய்கிறார்கள் என நினைத்தாலும் கூட இந்த வழக்கை முழுமையாக பார்க்காவிட்டாலும் வாசிக்க, பார்க்க ஆவல் ஏற்பட்டது உண்மை! 

எப்பொழுதும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவது பெண்கள் என்ற தோற்றத்தை இது மிகச்சிறிய அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த மாதிரி பிரபல்யங்களின் வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை சாதாரன மனிதர்களின் வாழ்க்கையோடு அதிகம் ஒப்பிடமுடியாது. 

அதுமட்டுல்ல இந்த பிரபல்யங்களின் வாழ்க்கை எவ்வளவு பகட்டோ அதற்கு ஏற்ப வேதனையும் கொண்டதே!! 

Amber Heardன் அறிக்கையால் Johnny Deppன் சினிமா வாழ்க்கை முடிவிற்கு வந்துவிடுமோ என்ற நிலை இப்பொழுது மாறிவிட்டது எனலாம்.. 

இங்கிலாந்தில் Amber Heardற்கு வழக்கு சாதகமாக முடிந்தது ஆனால் அமெரிக்காவிலும் அப்படி நடக்குமா தெரியவில்லை. 

Amber Heardன் முன்னைய உறவுமும் சிக்கலில் தான் முடிந்தது, அவரைப் பொறுத்தவரையில் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை அதிகமாக உள்ளது என வழக்கில் கூறப்பட்டது. இரு பக்க கருத்துக்களையும் பார்த்தபொழுது இருவரிலுமே தவறு உள்ளது..

Amber Heardன் வழக்கறிஞர்கள் தாங்களாகவே பொல்லைக் கொடுத்து அடி வாங்கியதைப்போல இருந்தது..

 இது முழுவதும் Johnny Deppற்கு சாதகமான இடத்தில் போடப்பட்ட வழ்க்காக இருந்தாலும் கூட Johnny Deppன் முன்னாள் மனைவி/காதலிகளில் Kate Moss, Vanessa Paradise தவிர மற்றவர்கள் Johnny Deppபற்றி நன்றாக கூறவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்..

இந்த trial Johnny Deppற்கு ஆதரவாக முடியவேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன் ஆனாலும் யாழ்களத்தில் இது பிழையான ஒரு கருத்தையும் உருவாக்கிவிடுமோ தெரியவில்லை அதாவது அழகான பெண்கள் பின்னால் போனால் ஆபத்து உள்ளது என.

என்னைக்கேட்டால் இருவருமே ஒருவகையில் victims of domestic violence/abuse!!

432-DBBAC-78-F8-4881-9-F1-E-9-DA6-CC0-C0

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த trial Johnny Deppற்கு ஆதரவாக முடியவேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன் ஆனாலும் யாழ்களத்தில் இது பிழையான ஒரு கருத்தையும் உருவாக்கிவிடுமோ தெரியவில்லை அதாவது அழகான பெண்கள் பின்னால் போனால் ஆபத்து உள்ளது என.

ஐயையோ... அதெல்லாம் சீரியஸ் ஆ எடுக்கிறேல்ல... சும்மா நகைச்சுவைக்கு சொல்லுறது எண்டு கள உறவுகளுக்கு தெரியும்... 😁

அது சரி... தெரிஞ்ச.... வடிவான பொம்பிளை பிள்ளையள் இருந்தா சொல்லுங்கோ...  😜

Link to comment
Share on other sites

47 minutes ago, Nathamuni said:

ஐயையோ... அதெல்லாம் சீரியஸ் ஆ எடுக்கிறேல்ல... சும்மா நகைச்சுவைக்கு சொல்லுறது எண்டு கள உறவுகளுக்கு தெரியும்... 😁

அது சரி... தெரிஞ்ச.... வடிவான பொம்பிளை பிள்ளையள் இருந்தா சொல்லுங்கோ...  😜

Amber Heard ட்டை பேசி பார்க்கவா?😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 minutes ago, வயலார் said:

Amber Heard ட்டை பேசி பார்க்கவா?😜

வணக்கம் வயலார்... 

அய்யோ... அதிலும் பார்க்க.... காசிக்கு சன்னாசம் போலாம்... 🙏

உவர் டெப்பர்.... அந்தம்மாவுக்கு பயந்து 5 வாஷ்ரூம் ஓடி ஒளிஞ்சு இருக்கிறார். அது கதவை அடிச்சு அதகளம் பண்ணி வெளியாலை இழுத்து எறிஞ்சு இருக்குது, இந்த கருமத்தை...

பத்தாததுக்கு, அந்தாள் படுக்கையில மனிச கழிவு வேற இருந்துச்சாம், அவரது இல்லையாம்..... வேண்டுமென்றே போட்டு அவமதிக்கப்பட்டுள்ளார் .... 

இம்மளவும் செய்து போட்டு, தான் தான் பாதிக்கப்பட்டவராம் எண்டால்... 

நல்ல காலம் அந்தாள், அவோவின் பேச்சுக்களை பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார். அவவுக்கு இப்பதான் தெரிய வந்திருக்கு. ஹிஸ்டீரியா வந்தது மாதிரி, கத்தல், பேச்சிரிப்பு... 

நீதிமன்றில் கேட்க்கும் போதே... வயித்தை கலக்கியது.......  😭

நான் நினைக்கிறேன்... உந்தாளுக்கு இனி... ஒரு கலியாண நினைப்பே வராது. இந்த ஜன்மத்துக்கு போதும் 😁

அதேபோல அந்தம்மாவையும் யாருமே அண்ட மாட்டினம்.. 🙄

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தான் சொல்லுறது

அழகு எங்கே இருக்கோ ஆபத்தும் அங்கே தான் இருக்கும்.

வர்ணனைக்கு நன்றி @Nathamuni@பிரபா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்கு தான் சொல்லுறது

அழகு எங்கே இருக்கோ ஆபத்தும் அங்கே தான் இருக்கும்.

வர்ணனைக்கு நன்றி @Nathamuni@பிரபா

நான் பார்த்த வகையில், இது பேராபத்து.... அம்மாளே.... மனிசன் இரண்டு வருசம்.... எப்படி சமாளித்தாரோ.... 🙄

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த trial Johnny Deppற்கு ஆதரவாக முடியவேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன் ஆனாலும் யாழ்களத்தில் இது பிழையான ஒரு கருத்தையும் உருவாக்கிவிடுமோ தெரியவில்லை அதாவது அழகான பெண்கள் பின்னால் போனால் ஆபத்து உள்ளது என.

உங்களின் கதைகளை பார்க்கும்போது வாட்சப் குழுமங்களில் பகிடியாகவோ அல்லது உண்மையாகவோ தெரியாது பரவிய ஒரு ஒளிநாடா இங்கு இணைக்க வேண்டி வந்துள்ளது .

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நான் பார்த்த வகையில், இது பேராபத்து.... அம்மாளே.... மனிசன் இரண்டு வருசம்.... எப்படி சமாளித்தாரோ.... 🙄

 

4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதுமட்டுல்ல இந்த பிரபல்யங்களின் வாழ்க்கை எவ்வளவு பகட்டோ அதற்கு ஏற்ப வேதனையும் கொண்டதே!! 

இருவரது வர்ணனைகளும் ஒரு நேரலையைப் பார்த்ததுபோல் உள்ளது. பாராட்டுகள். ஒப்பனையின் பின்னாலுள்ள வெப்பத்தையும் பதிவுசெய்துள்ளீர்கள். இவளவு அநாகரீகமாகவா(மனிதகழிவுகளைப்போடும் அளவுக்கு) பிரபலங்கள். வாழ்கிறார்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எப்பொழுதும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவது பெண்கள் என்ற தோற்றத்தை இது மிகச்சிறிய அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும்.

மனைவியால் தாக்கப்படும் கணவன்மார்கள் இப்போது அதிகமாக வெளியே வருகிறார்கள். இங்கிலாந்தில் இதனை போலீசார் ஒரு வேடிக்கையாக பார்ப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தியதால், இப்போது, சிரிக்காமல் சீரியஸ் ஆக, ஓடி வந்து காப்பாத்தி புகலிடத்துக்கு அழைத்து போகிறார்கள். 

தமிழகத்தில் கூட, இது அதிகரித்து உள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, பெருமாள் said:

உங்களின் கதைகளை பார்க்கும்போது வாட்சப் குழுமங்களில் பகிடியாகவோ அல்லது உண்மையாகவோ தெரியாது பரவிய ஒரு ஒளிநாடா இங்கு இணைக்க வேண்டி வந்துள்ளது .

 

இதென்ன கொடுமையப்பா…. வீட்டிலை ஒரு சின்னப்பிள்ளையை, வைத்துக் கொண்டு 
புருசனுக்கு,   இந்த அடி… அடிக்குது, மனிசி.
அந்த மனுசனும்…. திருப்பி ஒரு அடி அடிக்காமல், ஓடி… ஓடி… அடி வாங்கிறார்.
உந்த மனுசன்…. ஆண்களுக்கே அவமானச் சின்னம்.

Edited by தமிழ் சிறி
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

இதென்ன கொடுமையப்பா…. வீட்டிலை ஒரு சின்னப்பிள்ளையை, வைத்துக் கொண்டு 
புருசனுக்கு,   இந்த அடி… அடிக்குது, மனிசி.
அந்த மனுசனும்…. திருப்பி ஒரு அடி அடிகாமல், ஓடி… ஓடி… அடி வாங்கிறார்.
உந்த மனுசன்…. ஆண்களுக்கே அவமானச் சின்னம்.

இந்த கொதியில பள்ளிக்கூடம் போய், பொடி, பெட்டயலை, துவம்சம் செய்திருப்பார்...

இப்பத்தான் விளங்குது... சில வாத்திமார், ஏன் ஆவேசமா நிப்பார்கள் என்று...  🤭

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இந்த கொதியில பள்ளிக்கூடம் போய், பொடி, பெட்டயலை, துவம்சம் செய்திருப்பார்...

இப்பத்தான் விளங்குது... சில வாத்திமார், ஏன் ஆவேசமா நிப்பார்கள் என்று...  🤭

இவ்வளவுக்கும் இவர் தலைமை ஆசிரியராம்.
உந்த அடி வாங்கிப் போட்டு, பெடியளை… எப்பிடி, மேய்க்கப் போறார் எண்டு தெரியவில்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

இதென்ன கொடுமையப்பா…. வீட்டிலை ஒரு சின்னப்பிள்ளையை, வைத்துக் கொண்டு 
புருசனுக்கு,   இந்த அடி… அடிக்குது, மனிசி.
அந்த மனுசனும்…. திருப்பி ஒரு அடி அடிக்காமல், ஓடி… ஓடி… அடி வாங்கிறார்.
உந்த மனுசன்…. ஆண்களுக்கே அவமானச் சின்னம்.

BBC, ITV, Channel 4, Channel 5 என்பவை மட்டுமே பிரதானமாக  இருந்த காலம், இந்த பிரச்னை பறி, ஓர் மிகவும் திடகாத்திரமான ஆண்  மற்றும் அவரின் மனைவிகிட்டு இடையில் நாடாகும் வன்முறை பற்றி ஓர் விவரண நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.

அந்த ஆண் சொன்னார் நித்திரையில் கூட மனைவி, காதுக்குள் புக கூடிய உலோக சமையல் உபகாரணங்க களான கரண்டி போன்றவற்றால் மனைவி காதுக்குள் குத்தி இருக்கிறார் என்றும், அதன் பின் தான் காருக்குள்ளேயே நித்திரை கொள்வது என்றும். 

அப்போது அந்த ஆணிடம் பேட்டி எடுத்தவர் கேட்டார்  நீங்கள் மனைவியை  என் திருப்பி அடிக்கவில்லை என்று.

அவர் சொல்லியது, எனது ஓர் குத்து அவரை அநேகமாக கொன்று விடும்; ஆனாலும், அதைவிட, நான் Church இல் வைத்து கொடுத்த marriage vows நான் அப்படி செய்வதை தடுத்து விடுகிறது.   

சும்மாவா  சொன்னார்கள், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று. feminists  கேள்விப்பட்டால் எனது அதோ கதி!!! 

 • Sad 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதென்ன கொடுமையப்பா…. வீட்டிலை ஒரு சின்னப்பிள்ளையை, வைத்துக் கொண்டு 
புருசனுக்கு,   இந்த அடி… அடிக்குது, மனிசி.
அந்த மனுசனும்…. திருப்பி ஒரு அடி அடிக்காமல், ஓடி… ஓடி… அடி வாங்கிறார்.
உந்த மனுசன்…. ஆண்களுக்கே அவமானச் சின்னம்.

அதானே லூசுப்பயல்  தெறிச்சு ஓடந்தெரியாமல் நின்று அடிவாங்கிக்கொண்டு இருக்குது .

😃

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மனைவியால் தாக்கப்படும் கணவன்மார்கள் இப்போது அதிகமாக வெளியே வருகிறார்கள். இங்கிலாந்தில் இதனை போலீசார் ஒரு வேடிக்கையாக பார்ப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தியதால், இப்போது, சிரிக்காமல் சீரியஸ் ஆக, ஓடி வந்து காப்பாத்தி புகலிடத்துக்கு அழைத்து போகிறார்கள். 

தமிழகத்தில் கூட, இது அதிகரித்து உள்ளது.

பொலீஸார் குடும்ப வன்முறைகள் தொடர்பான விடயங்களில் சிரத்தை காண்பிப்பதில்லை என்பது இன்னும் உள்ளது. அதனால்தான் இன்றும் இவை குறையாமல் உள்ளது என்பதுடன் வன்முறைக்குள்ளானவர்கள் புகாரும் அளிக்க முன்வராமல் ஒன்றில் தற்கொலை செய்கிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள். 

முன்பே கூறியது போல இது முழுவதும் Johnny Deppற்கு ஆதரவான/சாதகமான இடத்திலே வழக்கு தொடரப்பட்டுள்ளது. Johnny Depp சரி பிழை என்பதைவிட Amber Heardதான் அதிக பாதிப்புகளை அனுபவிக்க போகிறார். ஏற்கனேவே செய்தி தளங்களில் அவருக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வை உருவாக்கிவிட்டார்கள்.

அதேபோல இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது சாதாரன குடும்பங்களில் வன்முறைகளை அனுபவிக்கும் ஆண்/பெண்களே!.. ஒன்றில் பிழையான தகவல்கள்/சாட்சிகளுடன் வரும், இல்லை உண்மையான வன்முறை கூட நியாயம் கிடைக்காமல் போகலாம். “ “என்னை சேற்றிற்குள் தள்ளியதால் உன்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டுதான் சேற்றிற்குள் போவேன்” என்ற நிலைப்பாட்டில் போடப்பட்ட வழக்கு அவ்வளவுதான்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்க கனபேர் மைண்ட்வாய்ஸ் எண்டு நினச்சு சத்தமா கதைக்குனம் போல கிடக்கு🤣. பகிடிதான் நோ டென்சன்.

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

உங்களின் கதைகளை பார்க்கும்போது வாட்சப் குழுமங்களில் பகிடியாகவோ அல்லது உண்மையாகவோ தெரியாது பரவிய ஒரு ஒளிநாடா இங்கு இணைக்க வேண்டி வந்துள்ளது .

 

உண்மையோ பொய்யோ என்பதைவிட இந்த குடும்ப வன்முறைகளை பார்த்து வளரும் குழந்தைகளின் மனநலம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது. குடும்ப அமைப்பில், உறவில் நம்பிக்கை வைப்பது என்பன கேள்விக்குறியாகவே அதிகம் காணப்படும். ஒன்றில் அவர்களும் இதே வழியை பின்பற்றுவார்கள் இல்லாவிடில் abusive relationshipலேயே வாழ்வார்கள். 

இந்த மாதிரி துணைகளை(அது physical violence ஆகட்டும் emotional abuse ஆகட்டும்) கொண்ட கணவர்கள், ஆரம்பத்திலேயே சரியான உதவிகளை நாடினால் பலரது வாழ்க்கை வீணாகாது. ஆனால் ஆண் என்றால் வலிமையானவர்கள் என்ற சமூக தோற்றப்பாடு அவர்களை உதவியை நாடவிடாது. அதே போல சமூகமும் அவர்கள் கூறுவதை முழுமையாக ஏற்காது. 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஜோனி டெப் வழக்கினை வென்றார்.

அம்பேரின் கதைகள் அனைத்தும் நிராகரிப்பு. 

Mee Too இயக்கத்துக்கு அம்பர், (தமிழகத்தில் சின்மயி) போன்ற போலிகளால் பேரிழப்பு.
 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கு: ஆறு வாரங்களாக நடைபெற்ற விசாரணையின் பின்னணி என்ன?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட்டு

பட மூலாதாரம்,REUTERS

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு, தனது முன்னாள் மனைவியும் நடிகையுமான ஆம்பர் ஹெர்ட் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

இந்த வழக்கில், ஜானி டெப்புக்கு 15 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக வழங்கப்படும் என்று அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாகவும், 5 மில்லியன் டாலர் ஆம்பர் ஹெர்ட் தரப்பு தண்டனைத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நடந்த மூன்று வெவ்வெறு விசாரணையில், ஒரு முறை ஆம்பர் ஹெர்ட் தரப்பு வென்றது. இதன் மூலம், நஷ்ட ஈடாக அவருக்கு 2 மில்லியன் டாலர் வழங்கப்படும்.

என்ன நடந்தது?

 

ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2018ம் ஆண்டு, வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல அமெரிக்க பத்திரிகையில், நடிகை ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில், தான் திருமணம் உறவில் வன்முறையால் பாதிக்கப்பட்டவள் என்று தெரிவித்திருந்தார். இதில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

ஆனால், ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரை, தன்னையும், தன் தொழிலையும் பாதித்தது எனக் கூறி, இது தொடர்பாக, அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தார் ஜானி டெப். இதற்கு அவரது முன்னாள் மனைவி 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி அவதூறு வழக்கு தொடுத்தார். இதற்கு பதிலடியாக, ஆம்பர் ஹெர்ட் 100 மில்லியன் டாலர் நஷ்டஈடு கோடி வழங்க வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆறு வாரங்களாக, வெர்ஜினியாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை தொலைக்காட்சியிலும் இணையத்திலும் ஒளிபரப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு, இந்த விசாரணையை கேட்டது.

இந்த வழக்கில், ஹெர்ட் தனது திருமண வாழ்வு குறித்து பொய் கூறினார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது குறித்து ஆம்பர் ஹெர்ட், "என்னுடைய ஏமாற்றத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் இதயம் நொறுங்கிவிட்டது. என் முன்னாள் கணவரின் அதிகாரத்திற்கும், செல்வாக்கும் முன் மலையளவு ஆதாரங்கள் கூட போதுமானதாக இல்லை. இது மற்ற பெண்களையும் பாதிக்கும் என்பது குறித்தும் நான் ஏமாற்றமடைகிறேன். இது பின்னடைவே. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கும் இது பின்னடைவே", என்றார்.

அதே சமயம், தீர்ப்பு குறித்து ஜானி டெப் தெரிவிக்கையில், இந்த வழக்கின் தொடக்கம் முதலே, உண்மையை வெளியில் கொண்டு வருவதே இலக்காக இருந்தது. என் வாழ்வை இந்த நீதிமன்றம் திரும்ப அளித்திருக்கிறது. உண்மை ஒருபோதும் அழியாது", என்றார்.

திருமணமும் விவகாரத்தும்

கடந்த 2011ம் ஆண்டு, 'தி ரம் டைரி' என்ற திரைப்படத்தில் நடித்தப்போது இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த 2012ம் ஆண்டு முதல் காதலிக்க தொடங்கி, 2015ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணமாகி 15 மாதங்கள் ஆன பிறகு, தங்களின் திருமண உறவு முடிவுக்கு வந்தது என்று தெரிவித்தனர். 2017ஆம் ஆண்டு விவகாரத்து ஆனது.

என்ன குற்றச்சாட்டுகள்?

இந்த வழக்கு விசாரணையில் ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட் - இருவரும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

 

ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட்

பட மூலாதாரம்,REUTERS

ஜானி டெப் 2012ம் ஆண்டு முதலே தன்னை துன்புறுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் தெரிவித்தார். ஒருமுறை, அவர் தனது கையில், ஒரு டாட்டூ அணிந்திருந்தார். அதைப் பற்றி நான் கேட்டப்போது, அவர் முன்பு காதலித்த நடிகை வினோனா ரைடர் பெயர் கொண்ட டாட்டூ என்றார். அவர் நகைச்சுவை செய்கிறார் என்று அதை கேட்டு நான் சிரித்தப்போது, அவர் என்னை அறைந்தார் என்று ஆம்பர் ஹெர்ட் குற்றம்சாட்டினார்.

மேலும், தனது போதை பழக்கத்தை மறைக்க முயற்சி செய்தார் என்றும், அவர் போதையில் இருந்தபோது, கோபமாக நடந்துக்கொள்வார் எனவும் அவர் குற்றம் சாட்டினார். அதே சமயம், அவர் இயல்பாக இருக்கும்போது, தன்னிடம் மன்னிப்பு கேட்டபார் என்று அவர் கூறினார்.

"நான் ஜானியை விரும்பினேன். ஆனால், என் வாழ்வின் மிக மோசமான பகுதியாக அவர் இருந்தார்", என்று கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை ஜானி மறுத்தார்.

"துன்புறுத்துவதும், சண்டையிடுவதும் ஆம்பர் ஹெர்ட்டுக்கு வழக்கமாக இருந்தது. ஆம்பர் அடிக்கடி அவதூறு வார்த்தைகளைப் பேசுவார். மிகவும் வன்முறையாக நடந்துக்கொள்வார். அது சில சமயங்களில் கன்னத்தில்அறையாக இருக்கலாம், சில சமயங்களில் அடியாக இருக்கலாம். என் முகத்தின் மீது, டிவி ரிமோட்டையோ அல்லது மது கோப்பையையோ வீசுவார். ஒருமுறை என் படுக்கையில் இருந்து எழுந்தப்போது, விசித்தராமான ஒன்றை கண்டேன். அது மனித மலம்", என்றார்.

(2018ம் ஆண்டு பிரிட்டனில் நடந்த வழக்கில் இந்த குற்றச்சாட்டுகளை ஆம்பர் ஹெர்ட் மறுத்தார்)

பிற சாட்சியங்கள்:

இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் துன்புறுத்திக்கொண்டார்கள் என்று ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட்டுக்கு திருமணம் உறவு தொடர்பாக ஆலோசனை வழங்கிய முன்னாள் உளவியல் ஆலோசகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜானி டெப்பின் மருத்துவக்குழு அவர் போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தார் என்று தெரிவித்தது.

ஆம்பர் ஹெர்ட் 'Borderline personality, personality disorder' என இரண்டு விதமான மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இத்தகைய பல்வேறு சாட்சியங்களை விசாரித்த பிறகு, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-61671943

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2022 at 16:52, Nathamuni said:

வணக்கம் வயலார்... 

அய்யோ... அதிலும் பார்க்க.... காசிக்கு சன்னாசம் போலாம்... 🙏

உவர் டெப்பர்.... அந்தம்மாவுக்கு பயந்து 5 வாஷ்ரூம் ஓடி ஒளிஞ்சு இருக்கிறார். அது கதவை அடிச்சு அதகளம் பண்ணி வெளியாலை இழுத்து எறிஞ்சு இருக்குது, இந்த கருமத்தை...

பத்தாததுக்கு, அந்தாள் படுக்கையில மனிச கழிவு வேற இருந்துச்சாம், அவரது இல்லையாம்..... வேண்டுமென்றே போட்டு அவமதிக்கப்பட்டுள்ளார் .... 

இம்மளவும் செய்து போட்டு, தான் தான் பாதிக்கப்பட்டவராம் எண்டால்... 

நல்ல காலம் அந்தாள், அவோவின் பேச்சுக்களை பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார். அவவுக்கு இப்பதான் தெரிய வந்திருக்கு. ஹிஸ்டீரியா வந்தது மாதிரி, கத்தல், பேச்சிரிப்பு... 

நீதிமன்றில் கேட்க்கும் போதே... வயித்தை கலக்கியது.......  😭

நான் நினைக்கிறேன்... உந்தாளுக்கு இனி... ஒரு கலியாண நினைப்பே வராது. இந்த ஜன்மத்துக்கு போதும் 😁

அதேபோல அந்தம்மாவையும் யாருமே அண்ட மாட்டினம்.. 🙄

 

வொட்கா போத்தலால் தாக்கப்பட்டு டெப் கை விரல் துண்டாகி, ரத்தம் சிந்தி வைத்திய உதவி கிடைத்ததை நீதிமன்றில் சான்றுகளுடன் நிரூபித்தார் கமேலியா.

அவருக்காவது  கைவிரலோட 😜போச்சு  என்ற உங்களது  பயம் நியாயமானதே🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Amber Heard - John Depp Case Verdict Explained: பரபரப்பை கிளப்பிய ஆறு வார விசாரணை - நடந்தது என்ன?

 

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தாத்தா அடம் பிடிக்காம குளிக்கிற தாத்தாவை குறித்து பேரன் சொன்னான் அம்மாவிடம், தாத்தா சமத்தா குளிக்கிறாருன்னு...! மரித்துப்போன தாத்தா குளிப்பது கடைசிக்குளியல் என்பது தெரியாமல்...!! மாலை போட்டு உட்கார்ந்த நிலையிலிருந்த தாத்தாவை மல்லுக்கட்டி இழுத்துப்பார்த்தான் பேரன், வாங்க தாத்தா வாக்கிங் போலாம்னு… அடுத்த நாள் காரியத்தில் அழுதபடி கேட்டான், தாத்தா எங்கன்னு...? ஆண்டவன் வீட்டுக்கு போயிருக்காரு அடுத்த வாரம் வருவாருன்னு ஆறுதலுக்குச் சொல்லிவைத்தார் அப்பா...! ஒம்மேல கோவப்பட்டு அத்தை வீட்டுக்கு போயிருக்காருன்னு அடக்கமுடியா அழுகையுடன் சொல்லிப்போனாள் அம்மா...!! அம்மாவின் துணை கொண்டு அடுத்த நாளே எழுதினான் பேரன், தாத்தாவுக்கு ஒரு கடிதம்...! அன்பும் பாசமும் நிறைந்த தாத்தாவுக்கு, உன் அன்பு பேரன் எழுதுவது... ஒன்னோட வாக்கிங் ஸ்டிக் இங்க ஹாலில் மாட்டிகிடக்கு, இது இல்லாம, எப்படி நீயும் வாக்கிங் போவ...? ஒன்னோட மூக்குப்பொடி டப்பா, உன் மாலை போட்ட படத்துக்கு முன்னாலே பத்திரமா இருக்கு, அது இல்லாம, எப்படி நீயும் சமாளிக்க போற...? பேப்பர் படிக்கும்போதெல்லாம் பேரன் என்ன தேடுவியே...எங்க வந்து ஒனக்குத் தர... நீ விட்டுப்போன மூக்குக்கண்ணாடிய...? அத்த வீட்டுக்கு போனாலும் அடுத்த நாளே பேசுவியே, அழுதபடி வாட்ஸப்பில் நீயும், பத்திரமா வச்சிருக்கேன்... நீ வந்தவுடன் விளையாட மொபைலில் ஒரு கேம்மும் தானே...! வந்துரு தாத்தா வாக்கிங் போலாம் ரெண்டு பேரும்... ஒனக்கே கொடுத்துர்றேன் விளையாட மொபைல... நீ இல்லாமே, இப்போல்லாம் அப்பா அம்மா வர்ற வரைக்கும் அடுத்த வீட்டுல தான் அதிக நேரம் குடி இருக்கேன்...!!
  • சுவாரசியமான ஒரு திகில் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஒருவர் பாதியில் எழுந்து வெளியில் வந்து அவசரமாக வீட்டுக்குப் புறப்படுகிறார் அவரை பார்த்து திரையங்கின் மேலாளர் கேட்கிறார்.....! "ஏன் சார், படம்பிடிக்கலையா ..? இல்லை பார்க்க ரெம்ப பயமா இருக்கா.. சார்..? " "அப்படி எதுவும் இல்லை சார்..படம் நல்லா தான் இருக்கு...., அப்பே....ஏன்சார் பாதிப்படத்துல எழுந்து போரிங்க... யாராவது பக்கத்துசீட்டு ஆட்கள் பிறச்சனை... பன்னாங்களா..? அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார், ஆனா சுவாரசியமா....படத்த பார்த்துட்டு இருக்கும் போது....எனக்குப் பின்னாடி இருந்து ஒரு குரல்.."யோவ்.... தள்ளி உக்காருய்யா உன்தலை எனக்கு படம்பாக்க முடியாம மறைக்குதுன்னு... கோபமா அதட்டிசொன்னாங்க அதான்....." "அட.... என்ன சார் இதுக்கா கோபப்பட்டுட்டு போரிங்க...சரி நீங்களும் கொஞ்சம் சமாளிச்சு உக்காந்திருக்கலாமில்ல.... நம்ம பின்னாடி உக்காந்திருக்கிறவங்களுக்கு நம்ம தலை மறச்சுதுன்னா.. நாம கொஞ்சம் தள்ளி உக்கார வேண்டியது நீயாயம் தானே......சார்?" "அட என்ன சார்....நீங்களும் கொஞ்சம் கூட புரியாமல் பேசுறிங்களே நான் உக்காந்திருந்ததே கடைசி வரிசை இருக்கையில தான்.....சார்....!!" என்னது.......?
  • எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் என்னென்று சொல்லத் தெரியாமலே நான் ஏன் இன்று மாறினேன்    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.