Jump to content

காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு

33 நிமிடங்களுக்கு முன்னர்
 

காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக நேற்று முற்பகல் 10 மணியளவில் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இந்த சிறுமி கோழி இறைச்சியைக் கொள்வனவு செய்து, மீண்டும் வீட்டிற்கு திரும்பும் காட்சிகள், அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், குறிப்பிட்ட சிறுமியைத் தேடுவதற்காக காவல்துறையின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

பண்டாரகம காவல்துறையினருக்கு மேலதிகமாக, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சிறுமியின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக சுமார் இருபதுக்கும் அதிகமானோரின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61620114

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு

09 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்று முன்தினம் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று 28 சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1284347

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்

ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு... இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி,  நீதியை... பெற்றுத்தருவதாகவும் உறுதி

உயிரிழந்த ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவாக நடவடிக்கை எடுத்து நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

“ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.

இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன். சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்றையதினம் காணாமல் போயிருந்த நிலையில் இன்று 28 ஓடைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1284326

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ஹும் ... ரிஷாத் பதியுதீன் வீட்டில் கொலைசெய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்துவிட்டது, மூன்று ஆண்டுகளுக்கு மேலாய் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலையும் நம் உறவுகளுக்கு நீதி கிடைத்துவிட்டது, இனி இந்த சிறுமியின் பெற்றோருக்கும் நீதி கிடைக்கும். நீதி என்று ஒன்று நாட்டில் இருந்திருந்தால் இது நிகழ்ந்திருக்குமா? கொலையாளிகளுக்கு விடுதலையும், பதவியுமே கிடைக்கும் இவர் காலத்தில்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 9 வயது சிறுமி கொலை: நீதி கிடைக்க உறுதியளிக்கிறேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,AFP

இலங்கை அட்டாலுகம பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை (மே 27) முற்பகல் 10 மணியளவில் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த சிறுமி கோழி இறைச்சியை வாங்கிவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பும் காட்சிகள், அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், குறிப்பிட்ட சிறுமியைத் தேடுவதற்காக காவல்துறையின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

பண்டாரகம காவல்துறையினருக்கு மேலதிகமாக, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சிறுமியின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக சுமார் இருபதுக்கும் அதிகமானோரின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன் ட்விட்டர் பக்கத்தில், "ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன். இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்" என தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61622252

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சியாக இருக்குமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தற்போதைய நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சியாக இருக்குமோ? 

நீங்கள் சொல்வதையும்... தட்டிக் கழிக்க முடியாது.
பட்டப்  பகல் 10 மணிக்கு, சம்பவம் நடந்துள்ளது.
ஜனாதிபதியும்  கண்டு பிடித்து தருகின்றேன் என்று வாக்குறுதி கொடுக்கின்றார்.
கடைசியில்... அப்பாவி தமிழன் ஒருவனை கொண்டு வந்து நிறுத்தி,
அரசியல் ஆதாயம் தேட வாய்ப்பு உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்வதையும்... தட்டிக் கழிக்க முடியாது.
பட்டப்  பகல் 10 மணிக்கு, சம்பவம் நடந்துள்ளது.
ஜனாதிபதியும்  கண்டு பிடித்து தருகின்றேன் என்று வாக்குறுதி கொடுக்கின்றார்.
கடைசியில்... அப்பாவி தமிழன் ஒருவனை கொண்டு வந்து நிறுத்தி,
அரசியல் ஆதாயம் தேட வாய்ப்பு உள்ளது. 

நடந்த இடம் ஏற்கனவே சிங்கள முஸ்லிம் கலவரம் வந்த இடமென நினைக்கிறேன். 

கொல்லபட்ட பிள்ளை முஸ்லிம்.

இனமோதலை பற்ற வைக்கும் முயற்சி என்பது மிக நியாயமான சந்தேகமே

3 hours ago, Kapithan said:

தற்போதைய நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சியாக இருக்குமோ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா?- பொலிஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்!

ஆயிஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா?- பொலிஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்!

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பாரியளவிலான ஆதாரங்களை அழித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சதுப்பு நிலத்தில், பல்வேறு நபர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கால்த் தடங்கள் காணபட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்டவுடன், குறித்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் செய்தி அறிந்த ஏராளமான கிராம மக்களும் பல்வேறு இடங்களில் இருந்து சிறுமியின் உடலைப் பார்க்க வந்ததாக அதிகாரி கூறினார்.

இதன் காரணமாக சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அல்லது பலரை கைது செய்வதற்கான இலகுவான வாய்ப்புகள் தவறவிடப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதன்காரணமாக சிறுமியின் சடலத்தை தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் (28) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1284455

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

ஆயிஷா மரணம் தொடர்பாக... கீரை தோட்ட தொழிலாளி, கைது!

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கீரை தோட்ட தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்தோடு, அந்த நபரின் உடலில் பல இடங்களில் கீறல்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த கீரை தோட்டத்தை அண்மித்த காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இதற்கு முன்னர் தாயும் மகளும் தங்கியிருந்த வீட்டிற்கு இரவில் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் (28) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய சிறுமியின் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1284478

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.