Jump to content

யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி.

WhatsApp-Image-2022-05-25-at-06.13.21-21யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி

“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும்.

யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி அழித்த செய்தியை நாமறிவோம்.

நூல்களை எரிக்கின்ற கொடுமையை, நாசிகள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பெர்லின் நூல்நிலையத்திற்குச் சென்ற நாசிகள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான்! இலங்கையில் சிங்கள நாசிகள் செய்ததுபோல, அவர்கள் பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

அதன் வழியில் யாழ் நூலக எரிப்பும் 1981ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அனுபவமும் தமிழ் மக்களுக்கு உண்டு.

உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் இன அழிப்பின் வடிவமாகவே எதிர் இனத்தின் பண்பாட்டம்சங்களையும், வரலாற்றையும், வரலாற்று சுவடுகளையும், கலாசார விழுமியங்களையும், இன அடையாளத்துக்கான அடிப்படை ஆதாரங்கள் அனைத்தையும் சின்னாபின்னபடுத்துவத்தையும் ஒரு வழிமுறையாகவே கொண்டிருக்கிறது. இதனை ஒரு போர் யுக்தியாகவே கைகொள்கின்றார்கள்.

வரலாற்றை அழிப்பது, சிதைப்பது, மறைப்பது, மறுப்பது என்கிற நிலைகளில் இன அழிப்பாளர்களின் வியூகங்கள் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பும் இந்த வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ் பொது நூலக எரிப்பு என்பது ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட இனவழிப்பில் முக்கிய நிகழ்வாகும். .நாசி படைகளால் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட வரலாற்று வளாகத்தில்(Bebelplatz ) எதிர்வரும் 31.05.2022 அன்று மதியம் 17:30முதல் 19 மணிவரை யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும் குறித்து நிற்கிறது.அதைப் பேணுவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்கமும் / முக்கியத்துவமும் கூட.

‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா? முதலில் அவர்களின் மொழியை அழி’ என்ற இன அழிப்புச் சூத்திரத்திற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.பின்பு தரப்படுத்தல் / யாழ் பொது நூலக எரிப்பு/ முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்று வரை மொழி அதன் இலக்காகவே இருந்து வருகிறது.இனம்/மொழி/நிலம்/பண்பாடு என்ற அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அமைந்திருந்தது..

ஆனால் இன்றும் இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக தமிழ் மொழி இலக்கு வைக்கப்பட்டு எமது அடையாளமும்/ தனித்துவமும்/ பண்பாடும் அழிக்கப்பட்டு வருகிறது.

எனவே நாம் ஒவ்வொருவரும்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அனைத்து வழிகளிலும் கட்டிக் காத்து இன அழிப்பிலிருந்து எமது மண்ணையும் மொழியையும் மீட்டெடுக்க வேண்டும்.

இக் கண்காட்சியை வேற்றின மக்கள் மட்டும் அல்ல பேர்லினில் பிறந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு தமிழ் சிறார்களும் பார்வையிட வேண்டும். அந்தவகையில் அச் சிறார்களுக்கான விளக்கங்களும் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழே எங்கள் உயிர் மூச்சு!.

WhatsApp-Image-2022-05-25-at-06.13.21.jp

WhatsApp-Image-2022-05-25-at-06.13.26.jp

யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. – குறியீடு (kuriyeedu.com)
 
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரோட போயிருப்பார்?? தெரிஞ்சா சொல்லுங்க ஏனெனில் அதுக்கு அப்புறம் கல்யாண ஆசையே விட்டு போய்ச்சு மாமாவுக்கு 😂
    • சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் (எம்.நியூட்டன்) சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் கிளிநொச்சி மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மக்கள் அனைவருமே எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை நாங்கள் அவதானித்து வருகின்றோம். இந்த நேரத்தில் உயிர் காக்கும் மிக அதி உயர் அத்தியாவசிய சேவையான சுகாதார சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் தமது கடமைகளை தொடர்ந்து மேற்கொண்டபடி எரிபொருளையும் தமது குடும்பங்களுக்கான அத்தியாவசியப்பொருட்களையும் பெற்றுக்கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.  குறிப்பாக அவர்கள் தமது கடமை நிலையங்களான வைத்தியசாலைகளுக்கும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும் ஏனைய பணிமனைகளுக்கும் கடமைக்கு வருவதற்கான தமது தனிப்பட்ட வாகனுங்களுக்கான எரிபொருளைப் பெற முடியாது மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் படிப்படியாக சுகாதார சேவை முடங்கும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் நிரல் சுகாதார அமைச்சு சுகாதார பணியாளர்களுக்காக விசேட ஏற்பாட்டின் மூலம் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு ஒழுங்குகளை செய்தது. அதற்காக மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் எரிபொருள்களை விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு ஒழுங்குகளை செய்திருந்தது. நேற்று முதல் தடவையாக இந்த ஒழுங்குக்கு அமைய சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வட மாகாணத்திலும் இதற்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டது. இந்த வசதியை நடைமுறைப்படுத்துவதற்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் சுகாதார துணைக்களத்தினராகிய நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம். இதேவேளை வாரத்தில் ஒரு நாள் மட்டும் சுகாதார பணியாளர்களுக்கு என தெரிவு செய்யப்பட்ட ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இருந்து எரிபொருள் வழங்குவதற்காக செய்யப்பட்ட இந்த ஒழுங்கை பல இடங்களில் பொது நல நோக்கற்ற பொதுமக்களில் சிலர் தீவிரமாக எதிர்த்ததுடன் குழப்ப நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். மிகுந்த சிரமத்தின் மத்தியில் பொலிசாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனேயே எரிபொருளை விநியோகிக்கக் கூடியதாக இருந்தமை மிகுந்த மன வருத்தத்துக்குரியது.  இவை அனைத்துக்கும் மேலாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒருங்கிணைப்பதற்காக அம்மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ந. சரவணபவன் அவர்கள் ஈடுபட்டிருந்தார். அப்போது சில பொதுமக்கள் அங்கு வரிசையில் காத்திருந்த தாதிய உத்தியோகத்தர்கள் சிலரை நகரவிடாமல் தடைகளை ஏற்படுத்தினர்.  வைத்திய கலாநிதி சரவணபவன் அவர்களிடம் சென்று தாதிய உத்தியோகத்தர்களை முன்னோக்கி நகர அனுமதிக்குமாறு கேட்டபோது அதற்கு மறுத்து அவருடன் வாக்குவாதப்பட்டவர்களுள் ஒருவரால் அவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வடமாகாணத்தின் சுகாதார பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற, செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தாக்குதலுக்குள்ளான வைத்திய கலாநிதி சரவணபவன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் தற்போது வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பொலிஸாரினால் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் மத்தியிலும் பணியாற்றி பல்லாயிரம் உயிர்களைக்காப்பாற்றிய மற்றும் கோவிட் பெருந்தொற்று நேரத்தில் அனைவருடம் வீடுகளில் முடங்கியிருக்க தமது உயிரைப் பணயம் வைத்து சுகாதார சேவைகளை வழங்கி  பெருமளவு உயிர்களையும் காப்பாற்றி இன்று கொவிட்டை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர உழைத்த வடமாகாண சுகாதார ஊழியர்களுக்கு நேற்றும் கடந்த சில நாள்களாகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் மூலம் ஏற்பட்ட அனுபவங்கள் மிகுந்த மனச்சோர்வையும் கவலையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக தமது குடும்பங்களுக்கு பொருள்களையும் ஏனைய வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்காது சேவையை தொடர்வதற்கு முன்னுரிமை வழங்கி தொடர்ச்சியாக பணியாற்றி வரும் சுகாதார ஊழியர்களுக்கு அவர்களது உயிர்காக்கும் சேவைக்காக பணியிடங்களுக்கு வருவதற்கான எரிபொருளைக்கூட முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்கு தடைவிதிக்கும் மன நிலையில் பொதுமக்கள் இருப்பார்கள் என சுகாதாரத்துறையினர் இதுவரை எண்ணியிருக்கவில்லை. போர்க்காலத்தில் இன்றிலும் விட மிகக் குறைவாக எரிபொருள் இருந்தகாலத்தில் கூட சுகாதாரத் துறையினருக்கான முன்னுரிமை எங்கும் மறுதலிக்கப்படவுமில்லை, எதிர்க்கப்படவுமில்லை என்பதையும் நாம் மறக்க முடியாது. துரதிஷ்டவசமான இந்நிலைமை நீடிக்குமானால் வடமாகாண சுகாதார சேவைகள் முடங்கும் நிலை ஏற்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது போகும். அப்போது வைத்தியசாலை சேவைகளை முற்றாக வடமாகாண மக்கள் இழக்க வேண்டி ஏற்படலாம். அதனால் காப்பாற்றக்கூடிய பல அப்பாவிகளின் உயிர்கள் மட்டுமல்லாது இன்று குழப்பம் விளைவிப்பவர்களின் உயிர்கள் கூட பலியாக நேரிடலாம்.  களத்தில் பணியாற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய சகல சுகாதார பணியாளர்களும் கடமைகளுக்கு வருவதை தவிர்த்து எரிபொருள் வரிசைகளில் காத்திருக்கும் போது டெங்கு மர ணங்கள், தாய்-சேய் மரணங்கள் என்பவை பன்மடங்கு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது போகும். சுகாதாரத்துறை மக்கள் அனைவரதும் உயிர்காக்கும் அத்தியாவசிய சேவை என்பதை புரிந்துகொண்டு எதிர்காலத்திலாவது சுகாதார பணியாளர்கள் தடையின்றியும் தாமதமின்றியும் வேலைக்கு வருவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் முன்னுரிமைச் சேவைகளுக்கு இடையூறு செய்யாது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இவற்றுக்கு எதிராக குழப்பங்களை ஏற்படுத்துகின்ற சமூக விரோத சக்திகளுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.     https://www.virakesari.lk/article/130170
    • ஆமாம். நாங்கள் அவசரப்பட முடியாது.  ஆனால், ******எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் ******ஆயத்தமாக இருக்க வேண்டும். 
    • அவரது  நிபந்தனை எதுக்கு??? அவரே  நிபந்தனையுடன் தான் ஆட்டத்தை  ஆட  விரும்புகிறார்?? இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும் நிபந்தனை  மாறலாம்?? இப்ப  மௌனம்  தொடர்வதே சிறந்தது?? வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.