-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Nathamuni · பதியப்பட்டது
உபத்திரவ நாய்: மரநாய். காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels மிக மோசமான ஒரு உபத்திரவ விலங்கு. மிகவும் துணிச்சல் மிக்கது. தன்னிலும் பார்க்க மிகவும் பெரிய விலங்குகளையே உண்டு, இல்லை என்று பண்ணி விடும். சாப்பிட முடியுமோ இல்லையோ, கொல்ல முடியுமோ இல்லையோ, அரிக்கண்டம் கொடுப்பதில் கில்லாடி. கோழிக்கூட்டினுள் புகுந்து, முட்டையினை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடுகிறது. பாம்பினை கூட பொறுத்த இடத்தில் பிடித்து, அலற வைக்கிறது. பெரும்பாலும், கழுத்தை குறி வைத்து கவ்விக் கொள்வதால், பாதிக்கப்படும் விலங்குகள், ஒன்றுமே செய்ய முடியாமல், தடுமாறி, அங்கும் இங்கும் ஓடும். உருளும், புரளும். 😯 இந்த வீடியோவில், தாய் பறவை இல்லாத நேரத்தில், ஒரு மரப்பொந்தினுள் புகுந்து, குஞ்சுகளை தூக்கி வெளியே வீசுகிறது. ஏன் அவ்வாறு செய்கிறது என்று அதுக்கே தெரியாது. எலியின் வாலை பிடித்து இழுக்கிறது. தண்ணீரில் பாய்ந்து, நண்டை பிடித்துக்கொண்டோடுகிறது. அதிலும் பார்க்க, பெரிய முயல்களை பாடாக படுத்துகிறது, சுண்டெலிக்கு விளையாட்டு, பூனைக்கு சீவன் போகுது கதை. 🤭 ஒரு மரங்கொத்திப் பறவையியினை கொலை செய்ய அதன் கழுத்து நோக்கி பாய, அது முதுகில் சுமந்தவாறே பறந்தோட, அதனை ஒருவர் கிளிக் செய்ய, அது சிறந்த புகைப்படமாகி, உலகளாவிய ரீதியில் viral ஆகியது. மரங்கொத்திப் பறவையின் கண் சொன்ன திகில்.... உலகளாவிய ரீதியில் பேசப்பட்டது. அதன் பின்பே, இந்த மிருகம் குறித்து உலகமே தெரிந்து கொண்டது. -
By கிருபன் · பதியப்பட்டது
தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் ! தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். பாடசாலை ஆண்டு இறுதியை கொண்டாடுவதற்கான பதின்ம வயது மாணவர்களின் கொண்டாட்டங்களின் போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் 12 முதல் 20 வயதானவர்கள் என பொலிஸ் அதிகாரி டெம்பின்கோசி கினானா தெரிவித்துள்ளார். அதேவேளை, 13 மற்றும் 14 வயதானவர்களும் இவர்களில் உள்ளனர் என தென்னாபிரிக்காவின் பொலிஸ் துறை அமைச்சர் பேகி செலி தெரிவித்துள்ளார். இம்மரணங்களுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இறந்தவர்களின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் துறை அமைச்சர் பேகி செலி இது தொடர்பாக கூறுகையில், ‘சன நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என முதலில் நாம் எண்ணினோம். ஆனால் சனநெரிசல் எதுவும் இடம்பெறவில்லை’ என்றார். ‘இம்மரணங்கள் குறித்து ஊகம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அதனால் தாம் நாம் முன்னிலை தடயவியல் அணியை வரவழைத்துள்ளோம். இம்மரணங்களுக்கு நஞ்சு ஏதேனும் காரணமாக இருந்தால் அவர்கள் எமக்குத் தெரிவிப்பார்கள்’ என்றார். https://www.virakesari.lk/article/130282 -
By நன்னிச் சோழன் · Posted
அடிபாட்டுச் செய்திகள் செய்திகள் இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 17 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்திலும் 'உதயன்' என்ற உள்ளூர் தமிழ் நாளேட்டிலும் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக. நுழைவாயில் தானைவைப்பில் புலிகளின் தடூகத்தால் சிக்கல் மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4374 செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:23 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022
Recommended Posts