Jump to content

பயனர் தரவுகளை விற்பனை செய்த ட்விட்டர் – 150 மில்லியன் டாலர் அபராதம் விதித்த அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயனர் தரவுகளை விற்பனை செய்த ட்விட்டர் – 150 மில்லியன் டாலர் அபராதம் விதித்த அமெரிக்கா

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பயனர் தரவுகளை விற்பனை செய்த ட்விட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவில் சட்ட அமலாக்க அதிகாரிகள், பயனர்களின் தரவுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, பயனர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை விற்க உதவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு அபராதமாக ட்விட்டர் நிறுவனம் 150 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும்.

ட்விட்டர் நிறுவனம் அதைக் கட்டுப்படுத்தும் நிர்வாக அமைப்புகளோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஃபெடரல் டிரேட் கமிஷன் மற்றும் நீதித்துறை கூறியுள்ளது என்று நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.

விளம்பரதாரர்களுக்கு பயனர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தனிப்பட்ட தகவல்களை வழங்கமாட்டோம் என்று ட்விட்டர் உறுதியளித்துள்ளது.

ஆனால், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், அந்த விதிகளை மீறியதாக மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐரோப்பாவின் ஜிடிபிஆர் தரவு தனியுரிமை விதிகளை மீறியதற்காக, ட்விட்டருக்கு, 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் 400,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

நம்பகத்தன்மைக்கு விரோதமாகச் செயல்படுவதைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்துவது மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுகின்ற, எஃப்டிசி என்ற அமெரிக்க அரசின் சுயாதீன நிறுவனம், ட்விட்டர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறாக வழிகாட்டும் வகையில் குறிப்பிடுவதைத் தடை செய்யக்கூடிய, 2011-ஆம் ஆண்டின் தனது உத்தரவை மீறியதாக குற்றம் சாட்டுகிறது.

ட்விட்டர் நிறுவனம், அதன் வருவாயில் பெரும் பகுதியை அதன் தளத்தில் விளம்பரம் செய்வதன் மூலம் பெறுகிறது. இது சராசரி நுகர்வோர்கள், பிரபலங்கள், பெருநிறுவனங்கள் என பல்வேறு பயனர்களை 280 எழுத்துகள் வரையிலான பதிவுகளை ட்வீட் செய்ய அனுமதிக்கிறது.

எஃப்டிசி சார்பாக நீதித்துறை தாக்கல் செய்த புகாரின்படி, 2013-ஆம் ஆண்டில் ட்விட்டர் பயனர்களின் கணக்கை மேம்படுத்துவதற்காக கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை வழங்குமாறு பயனர்களிடம் கேட்கத் தொடங்கியது.

"புகாரில் குறிப்பிட்டு இருப்பதன்படி, ட்விட்டர் நிறுவனம் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் சாக்கில் பயனர்களிடம் தரவுகளைப் பெற்றது. பிறகு பயனர்களைக் குறிவைத்து விளம்பரங்களைக் கொண்டு செல்ல அந்தத் தரவுகளைப் பயன்படுத்தியது.

இந்த நடைமுறை 140 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களைப் பாதித்தது. அதேநேரத்தில், ட்விட்டரின் முதன்மையான வருவாய் அதிகரித்தது," என்று எஃப்டிசியின் தலைவர் லினா கான் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ட்விட்டர் பயனர்களின் நம்பிக்கையை உடைத்துள்ளது

கணினி பாதுகாப்பு நிறுவனமான செக்யூர் டீமின் நிர்வாக இயக்குநர் இயன் ரெனால்ட்ஸ் பிபிசியிடம், "பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தி அவர்களின் வருவாயை அதிகரித்ததன் மூலம், ட்விட்டர் நிறுவனம் மீண்டுமொரு முறை, ட்விட்டர் பயனர்கள் அந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துள்ளது," என்று கூறினார்.

மேலும் அவர், "ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய தரவுகளைப் பெறுவதன் மூலம் தனியுரிமை பாதுகாப்பை உறுதி செய்வதாக தவறான பாதுகாப்பு உணர்வுக்கு இட்டுச் சென்றது. ஆனால், இறுதியில் தங்கள் பயனர்களை அது விளம்பரங்கள் மூலமாகக் குறி வைக்க அந்தத் தரவுகளைப் பயன்படுத்தியது.

பயனர்களின் தரவுகள் மீது நிறுவனங்களுக்கு இன்னமும் இருக்கும் அதிகாரத்தை இது காட்டுகிறது. அதோடு, பயனர்கள் தங்கள் சொந்த டிஜிட்டல் தடயங்களின் மீது முழு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்ற நம்பிக்கை வருவதற்கான பாதையில் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது," என்றார்.

பயனர்கள், தங்களது ட்விட்டர் கணக்கை அங்கீகரிப்பதற்காக, ட்விட்டருக்கு கைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.

அவற்றை, தங்கள் கடவுச் சொற்களை மீட்டமைக்கவும் இரண்டு கட்ட ஒப்புதல் அங்கீகாரத்தை இயக்கவும் அது பயனர்களுக்கு உதவுகிறது.

பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றுடன் ட்விட்டரில் உள்நுழைய பயனர்களுக்கு உதவ, கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு குறியீட்டை அனுப்புவதன் மூலம் இரண்டு கட்ட ஒப்புதல் அங்கீகாரம்

பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் ட்விட்டரில் உள்நுழையும் பயனர்களின் கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு குறியீட்டை அனுப்புவதன் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டு கட்ட ஒப்புதல் அங்கீகாரம் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

 

ட்விட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், எஃப்டிசியின் கூற்றுப்படி, குறைந்தபட்சம் செப்டம்பர் 2019 வரை, ட்விட்டர் அதன் விளம்பரங்கள் சார்ந்த வணிகத்தை அதிகரிக்க அந்தத் தரவுகளைப் பயன்படுத்தியது.

பயனர்களின் பாதுகாப்பு தரவுகளை அணுகுவதற்கு விளம்பரதாரர்களை ட்விட்டர் அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இப்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத்தோடு கூடுதலாக, ட்விட்டர் மேலும் சிலவற்றைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும்.

  • சட்டவிரோதமாக சேகரித்த கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்
  • பாதுகாப்பு தரவுகளின் முறையற்ற பயன்பாடு குறித்து பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்
  • எஃப்டிசி சட்ட அமலாக்க நடவடிக்கையைப் பற்றி பயனர்களிடம் கூற வேண்டும்
  • தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்படும் விளம்பரங்களை எவ்வாறு முடக்குவது என்பதையும் பல கட்ட அங்கீகார அமைப்புகளை மதிப்பாய்வு செய்வது எப்படி என்பதையும் விளக்க வேண்டும்
  • கைபேசி எண் தேவையில்லாத பல கட்ட அங்கீகார விருப்பங்களை வழங்க வேண்டும்
  • 30 நாட்களுக்குள் இத்தகைய சம்பவங்களை எஃப்டிசி-க்கு புகாரளிப்பதை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்

"நுகர்வோரின் முக்கியமான தரவுகளின் தனியுரிமையைப் பாதுகாக்க நீதித்துறை உறுதிபூண்டுள்ளது," என்று அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் வனிதா குப்தா கூறினார்.

மேலும், "150 மில்லியன் டாலர் அபராதம் ட்விட்டருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும் முன்மொழியப்பட்ட தீர்வின் விளைவாக விதிக்கப்படும் கணிசமான புதிய நடவடிக்கைகள் பயனர்களின் தனியுரிமையை அச்சுறுத்தும் தவறாக வழிநடத்தக்கூடிய தந்திரங்களைத் தடுக்க உதவும்," என்றும் கூறினார்.

https://www.bbc.com/tamil/science-61619196

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.