Jump to content

கண்ணை கவரும் வண்ண பட்டாம்பூச்சிகள் - இனி இவற்றை நம்மால் காண முடியாது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை கவரும் வண்ண பட்டாம்பூச்சிகள் - இனி இவற்றை நம்மால் காண முடியாது

  • ஜார்ஜினா ரன்னார்ட்
  • பிபிசி நியூஸ் காலநிலை & அறிவியல்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பட்டாம்பூச்சிகள்

பட மூலாதாரம்,KEITH WARMINGTON

சமீபத்தில், 58 பட்டாம்பூச்சி இனங்களில் 24 இனங்கள் விரைவில் அழிந்துவிடும் என்று பிரிட்டனின் பட்டாம்பூச்சி பாதுகாப்பு அமைப்பின் அறிக்கை எச்சரித்துள்ளது.

11 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அமைப்பு கடைசியாக ஒரு சிவப்புப் பட்டியலைத் தொகுத்தது.

தற்போது அந்த பட்டியலில் மேலும் ஐந்து இனங்கள் சேர்ந்துள்ளன.

வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழிப்பதன் மூலம் பட்டாம்பூச்சிகளின் அழிவுக்கு மனிதர்கள் காரணமாகிறார்கள் என பட்டாம்பூச்சி பாதுகாப்பு அமைப்பின் அறிவியல் பிரிவு தலைவர் டாக்டர் ரிச்சர்ட் ஃபாக்ஸ் கூறுகிறார்.

"அவை உண்மையில் அழிக்கப்பட்டு, விவசாயத்தின் போது உழப்பட்டு, உரங்களால் மூடப்பட்டிருக்கலாம்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. தீவிர பாதுகாப்புப் பணிகளால், பல பட்டாம்பூச்சி இனங்கள் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் இத்தகைய பட்டாம்பூச்சிகளை இனி பார்க்க முடியாது.

வூட் வொய்ட் (Wood White)

இந்த சிறிய, மெதுவாக பறக்கும் பட்டாம்பூச்சி தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்து வந்தது. இப்போது அழியும் நிலையில் உள்ளது. இது பெரும்பாலும் மிட்லாண்ட்ஸ் பகுதியில் காணப்படுகிறது.

 

வூட் வொய்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்வாலோடெயில்கள் (Swallowtails)

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், கண்ணை கவரும் இந்த அரிய வகை பட்டாம்பூச்சி அழிவின் விளிம்பில் உள்ளது. இது நார்ஃபோக் பிராட்ஸ் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. அங்கு இது திஸ்டில்ஸ் என்ற ஒரு வகை முட்செடி உட்பட பூக்களை உண்ணும் உயிரினம்.

 

பட்டாம்பூச்சிகள்

பட மூலாதாரம்,IAIN H LEACH

அடோனிஸ் ப்ளூஸ் (Adonis Blues)

இப்போது மீண்டும் அழிவின் விளிம்பின் உள்ள பட்டாம்பூச்சி இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த இனம், தெற்கு இங்கிலாந்தில் காணப்படுகிறது. பொதுவாக ஏப்ரல் மற்றும் ஜூலை பிற்பகுதியில் காணப்படுகிறது.

 

பட்டாம்பூச்சிகள்

பட மூலாதாரம்,IAIN H LEACH

லார்ஜ் ஹீத் (Large Heath)

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பட்டாம்பூச்சிகளில் இதுவும் ஒன்று என்று பட்டாம்பூச்சி பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது. இங்கிலாந்தின் இந்த இனத்தைச் சேர்ந்த நான்கு பட்டாம்பூச்சி இனங்களும், குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான காலநிலையுடன் வடக்குப் பகுதிகளில் வாழுக்கூடியவை.

 

பட்டாம்பூச்சிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்காட்ச் ஆர்கஸ் (Scotch Argus)

இந்த இனத்தின் அழிவுடன் காலநிலை மாற்றத்தின் விளைவுகளும் காணப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு, விஞ்ஞானிகள் இவை அழிவின் விளிம்பில் இருப்பதாக கருதவில்லை. இப்போது அது பாதிக்கப்படக்கூடிய வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

பட்டாம்பூச்சிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்ட பட்டாம்பூச்சிகள்

இது சற்றே நல்ல செய்தி. பட்டாம்பூச்சி உயிரினங்களை விளிம்பிலிருந்து மீட்டெடுக்க பாதுகாப்புப் பணிகள் உதவியுள்ளன. மாறிவரும் நில மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து பட்டாம்பூச்சிகளை பாதுகாப்பதில் இது கவனம் செலுத்துகிறது என்று டாக்டர் ஃபாக்ஸ் விளக்குகிறார்.

லார்ஜ் ப்ளூ (Large Blue)

இந்த சாம்பல் நிறம் கலந்த நீல பட்டாம்பூச்சி 1979 ஆம் ஆண்டு பிரிட்டனில் அழிந்து விட்டது. ஆனால் இப்போது சோமர்செட் பகுதியில் இந்த இனத்தை காணலாம்.

லார்ஜ் ப்ளூ வகை பட்டாம்பூச்சி, தைம் (Thyme) என்ற ஒரு வகை செடியையும், ஒரு குறிப்பிட்ட வகை எறும்பை மட்டுமே உண்ண கூடிய இனம் என்று டாக்டர் ஃபாக்ஸ் கூறுகிறார்.

சரியான சுற்றுச்சூழலுடன் புல்வெளிகளை உருவாக்குவதன் மூலம், பாதுகாவலர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் வெற்றிகரமாக இந்த வகை பாட்டாம்பூச்சிகளை உருவாக்கினார்கள் என்று அவர் கூறுகிறார்.

 

பட்டாம்பூச்சிகள்

பட மூலாதாரம்,KEITH WARMINGTON

பர்ல் பார்டர்ட் ஃப்ரிட்டில்லரி (Pearl-bordered Fritillary)

இது 2011 ஆம் ஆண்டிலிருந்து அழிவின் விளிம்பில் உள்ளது. அதன் கம்பளிப்பூச்சிகள் திறந்த, சற்று வெப்பமான வனப்பகுதியை வாழ்விடமாக கொண்டிருக்கும். அவை ஊதா நிற பூக்களை உண்ணும்.

 

பட்டாம்பூச்சிகள்

பட மூலாதாரம்,IAIN H LEACH

டிக் ஆஃப் பர்கண்டி (Duke of Burgundy)

இப்போது பெரும்பாலும் தெற்கு இங்கிலாந்தில் இவை காணப்படுகின்றன. இவை வாழ, தாவரங்களின் சமநிலையை உருவாக்க சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் கடுமையான முயற்சி செய்கின்றனர்.

 

 

பட்டாம்பூச்சிகள்

https://www.bbc.com/tamil/science-61620433

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.