Jump to content

ஆதார் அட்டை நகலை பகிராதீர்கள்' - இந்திய அரசு எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'ஆதார் அட்டை நகலை பகிராதீர்கள்' - இந்திய அரசு எச்சரிக்கை

29 நிமிடங்களுக்கு முன்னர்
 

e aadhaar card download

பட மூலாதாரம்,MINT / GETTY IMAGES

ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதால் உங்கள் ஆதார் அட்டையின் நகலை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் முக்கியத் தகவல்கள் இதோ.

1. ஆதார் அட்டையின் நகலை வழங்குவதற்கு பதிலாக, ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும் வகையில், எண்கள் மறைக்கப்பட்ட (masked) ஆதார் அட்டையைப் பயன்படுத்தவும்.

2. https://myaadhaar.uidai.gov.in இணையதளத்தில் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யும்போது, 'Do you want a masked Aadhaar?' என்ற தெரிவைப் பயன்படுத்தி 'மாஸ்க்டு' ஆதார் அட்டையைப் பெறமுடியும்.

3. ஒரு குறிப்பிட்ட ஆதார எண் பயன்பாட்டில் உள்ளதா என்பதை இணையத்தில் https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar எனும் முகவரியில் சரிபார்க்கலாம். இணையம் இல்லாமல் ஆஃப்லைனில் இ- ஆதார் அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது பி.வி.சி ஆதார் அட்டையில் உள்ள க்யூ.ஆர். கோடு மூலம் ஆதார் எண்ணைச் சரிபார்க்க முடியும்.

 

e aadhaar card download

பட மூலாதாரம்,HTTPS://MYAADHAAR.UIDAI.GOV.IN

4. இ-ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய இன்டர்நெட் கஃபே போன்ற இடங்களில் உள்ள, பலரும் பயன்படுத்தும் கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழல் வந்தால், பதிவிறக்கம் செய்யப்பட்ட இ- ஆதார் அட்டையை அந்தக் கணினியில் இருந்து அழித்து விடவேண்டும்.

5. ஆதார் அட்டையை வழங்கும் UIDAI ஆணையத்திடம் உரிமம் பெற்ற அமைப்புகள் மட்டுமே ஆதார் எண்ணை ஒரு தனிநபரின் அடையாளத்தைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்த வேண்டும். தங்கும் விடுதிகள், திரையரங்குகள் போன்ற அமைப்புகள் போன்றவற்றுக்கு யாருடைய ஆதார் அட்டையின் நகலையும் வாங்கி வைக்க அனுமதி கிடையாது. அவ்வாறு சேகரித்து வைப்பது ஆதார் சட்டம் 2016இன் கீழ் குற்றமாகும்.

6. ஏதாவது தனியார் அமைப்பு உங்களது ஆதார் அட்டை நகலைக் கோரினால், அவர்களிடம் UIDAI வழங்கிய பயனர் உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

https://www.bbc.com/tamil/india-61624767

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.