Jump to content

காதல் பொன் மானே - காசு வேணுமடி என்னன்பே - மோசடி உலகம் 

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

காதல் பொன் மானே - காசு வேணுமடி என்னன்பே - மோசடி உலகம் 

சில மாதங்களுக்கு முன்னர், நடிகர் ஆரியா, ஜேர்மன் வாழ் தமிழ் பெண் ஒருவரை சமூக ஊடகம் ஊடாக அடிக்கடி பேசி திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து, பணம் வாங்கி ஏமாத்தியதாக செய்தி வந்தது.

சென்னை போலீசார் இதுகுறித்து சிலரை கைது செய்தனர். ஆர்யாவுக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை என்றும் அறிவித்தனர்.

இங்கே பலர் கூட, போலீசார் காசு வாங்கிக் கொண்டு ஆர்யாவை தப்ப வைத்து இருப்பார்கள் என்று எழுதினார்கள். இலங்கையில் கூட, முகப்புத்தக மோசடி ஒன்றில், கண்டியில் ஒரு விதவை ஆசிரியையிடம்  25 லட்ச்சம் மோசடி குறித்து போலீசார் அறிவித்து இருந்தனர்.

இன்று செவ்வாய் காலை, பிபிசி யில் ஒளிபரப்பிய நிகழ்வு ஒன்றில் இந்த வகை மோசடியில், மேற்கு ஆப்பிரிக்கர்கள் (அநேகமாக நைஜீரியர்கள்) எப்படி அதி நவீனத்துவம் கொண்டு இயங்குகிறார்கள் என்பதை விளக்கினார்கள். 

பெண்களை, முக்கியமாக தனிமையில் வாடும் நடுத்தர பெண்களை இவர்கள் இலக்கு வைக்கிறார்கள்.

ஜோர்ஜ் குளூனி, ஜோன்னி டெப் போன்ற சமூகத்தில் பிரபல்யமான முகங்களை எடுத்துக்கொண்டு, அவர்கள் விடியோவில் வேறு எங்கோ பேசும் துண்டுகளை எடுத்து, அந்த பெண்கள், போனில், பேசும்போது வலையில் விழுந்து விட்டால்,  ஸ்கைப் மூலம் தொடர்பு கொள்வார்கள். 

இன்டர்நெட் தொடர்பு சரியில்லை என்று சொல்லிக்கொண்டே, how are you போன்ற, குறித்த பிரபல நபர், வீடியோவில் வேறு யாருக்கோ சொன்ன, துண்டுகளை ஓட வைத்து, அந்த பெண்ணுக்கு சொல்லப்படுவதாக காட்டுவர். பெண்ணால் கேட்க்கப்படும் கேள்விக்குரிய பதில் வீடியோ இல்லாவிடில், விடியோவை நிறுத்தி படம் மட்டும் அப்படியே தெரிவதாக வைத்துக்கொண்டு, அவர்கள் குரல் மட்டும் வரும்.

பெண்ணும், இன்டர்நெட் கோளாறு என்று ஏமாறுவர். இவற்றினை சிறப்பாக ஒழுங்கிணைக்க, மென்பொருளை பாவிக்கிறார்கள் என்பதால், சந்தேகமும் வராது என்கிறார், நிகழ்ச்சிக்கு வந்த ஒரு IT பொறியாளர்.

வழக்கு பிரச்சனையில் இருக்கும் டெப்பும், காதல் ரசம் சொட்டி...... வழக்கு முடித்து, உன்னுடன் வந்து நிம்மதியாக இருக்கப்போகிறேன் என்பார்..... வழக்கு நடத்த... கடனாக, காசு கேட்பார். 

கேட்பவர்.... நைஜீரியன் கறுவல் என்றால், காசா கிடைக்கும்... அது, யாருக்கும் தெரியாத, ரகசிய காதலன், ஜோர்ஜ் குளூனி, மனைவியை விவாகரத்து செய்து விட்டு இருக்கும் ஜோனி டெப்.... அல்லது பில் கேட் (10 பில்லியன், தர்ம காரியம் ஒன்றுக்கு கொடுக்கிறேன் அன்பே, உனது பெயரிலும் கொஞ்சம் போக வேண்டமா என்று உருகுவார்)

ஏமாந்து போன பெண்ணும், பணம் அனுப்புவார்....

டெப்பும், மேலும் தேறும் வரை காதல் பொன்மானே என்று பொலிவார். அதுக்கு மேல் தேறாது என்றவுடன், காணாமல் போவார்.

ஆக.... romance கடந்து finance போகும் போது விழித்துக் கொள்ளுங்கள் என்கிறது பிபிசி.

டேட்டிங் தளங்களிலேயே இந்த காதல் ஆரம்பித்து, அந்த தளங்களுக்கு வெளியே தள்ளிக்கொண்டு போயே பணம் பறிக்கிறார்கள்.

ஆகவே, டேட்டிங் தளங்களில் உள்ள, பாதுகாப்பு, இல்லாமல் போகிறது. இத்தகைய தளங்களுக்கு வெளியே வருமாறு கோரப்பட்டால், சந்தேகமுறுங்கள் என்கிறது பிபிசி.

அனைத்துக்கும் மேலாக, பண கோரிக்கை வந்தால், மோசடியின் ஆரம்பம் என்று சமிக்கை என்று புரிந்த கொள்ளுங்கள். எவ்வளவு விரைவாக, முறிக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்கள் பணம் தப்பும் என்கிறது பிபிசி.

கேட்பது இனாமாக அல்ல, கடனாக....

போனால், வராது. 

ஏமாந்த சில பெண்களை காட்டினார்கள். தமது முட்டாள் தனம்  குறித்து, தம் மேலே கோபப்பட்டார்கள். தனது மகள் எச்சரித்திருந்தும், தனது இணைய காதலை ரகசியமாக வைத்திருக்க விரும்பியதால், £45,000 இழந்து விட்டதாக ஒரு பெண் அழுதார்.

இன்னோரு பெண்ணோ, காசு போனால் பரவாயில்ல.... அந்த இனைய தெய்வீக காதல், பொய்யா (கோபால்) என்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை என்று புலம்பினார். அவ்வளவு தூரம் காதல் ரசம் சொட்டி, காசை கிளப்பி இருக்கிறார்கள். 

இப்போது, ஆர்யா விடயத்தில் என்ன நடந்து இருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது.

நாளை, விஜயும் வருவார், அஜித்தும் வருவார்.... தகப்பன், வைத்திய செலவுக்கு, காசு கேட்டு, கலியாணம் கட்டாத சிம்புவும் வரலாம்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாத்துபவர்கள் இருப்பார்கள். 

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
 • Like 4
Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

ஆக.... romance கடந்து finance போகும் போது விழித்துக் கொள்ளுங்கள் என்கிறது பிபிசி.

டேட்டிங் தளங்களிலேயே இந்த காதல் ஆரம்பித்து, அந்த தளங்களுக்கு வெளியே தள்ளிக்கொண்டு போயே பணம் பறிக்கிறார்கள்.

ஆகவே, டேட்டிங் தளங்களில் உள்ள, பாதுகாப்பு, இல்லாமல் போகிறது. இத்தகைய தளங்களுக்கு வெளியே வருமாறு கோரப்பட்டால், சந்தேகமுறுங்கள் என்கிறது பிபிசி.

அனைத்துக்கும் மேலாக, பண கோரிக்கை வந்தால், மோசடியின் ஆரம்பம் என்று சமிக்கை என்று புரிந்த கொள்ளுங்கள். எவ்வளவு விரைவாக, முறிக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்கள் பணம் தப்பும் என்கிறது பிபிசி.

கேட்பது இனாமாக அல்ல, கடனாக....

போனால், வராது. 

வணக்கம் நாதமுனி அண்ணா!! ரமணிசந்திரன் உங்களுடைய கட்டுரையின் தலைப்புகளைப் பார்த்து வியக்கப்போகிறார் 😁.. 

ஆனாலும் எழுதிய விஷயம் போல நிறைய நடக்கிறது.. இந்த documentary, Netflixல் வந்தது.. காதல் கண்ணை மறைக்க எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் இந்த பெண்கள் என்பதை நினைக்க கவலையாக இருந்தது.. ஆனாலும் ஏமாற்றுபவர்கள் தப்பித்துக்கொண்டே போகிறார்கள்.. 

தகவலுக்கு நன்றி!!

1 hour ago, Nathamuni said:

கேட்பவர்.... நைஜீரியன் கறுவல் என்றால், காசா கிடைக்கும்..

ஆபிரிக்கர்களை விளித்து எழுதிய இந்த சொல் சரியானதா? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆபிரிக்கர்களை விளித்து எழுதிய இந்த சொல் சரியானதா? 

பின்னூட்டத்துக்கு நன்றி...

நீங்கள் 'political corrections' குறித்து மிகவும் கரிசனை கொள்கிறீர்கள்.

பிபிசி யில், நாசூக்கா, When we analysed the IP address, it was from West Africa where, these kind of activities are at very high level', என்றார்கள்.

கறுவல்களை அப்படித்தானே சொல்கிறோம். இங்கே வெள்ளை என்றும் சொல்கிறோமே. ஒரு நிறுவனத்தில், இன்று போய், நேற்று பேசிய நபர் இல்லாவிடில், பெயர் தெரியாவிடில், எப்படி அவரை குறிப்பிடுவீர்கள்? I was served by an African guy yesterday / A black gentleman served me yesterday..... 

நாம பிரௌன்.... இல்லையா.

கருவேப்பிலை மரம் வளர்ப்பில்..... தேடிப்பிடிச்சு ஒரு வெள்ளையம்மாவை கொண்டுவந்திருக்கிறேன்...

எப்படி வளர்க்கிறது என்று விளங்கப்படுத்திறா, பாருங்கள் என்று போட்டேனே.

அது சரி... இது பிழையா?

அனைத்துக்கும் மேலே, இவர்கள் எமகாதக திருடர்கள்....தமது முகத்தை காட்டாமல், பிரபலமான வெள்ளையர் முகத்தினை காண்பித்து, பணத்தினை பிடுங்குவது, சரியானதுதானா?  வெள்ளையர்களாக நடித்து, அவர்கள் செய்வதே, இன ஏமாற்று வாதம் அல்லவா?

அதேவேளை, தளத்தில் நீக்கப்பட்ட சொற்கள் உள்ளன. நீக்....(neg...) என்று அவர்களை குறித்த சொல், முன்னர் நீக்கப்பட்டுள்ளது. 

அனைத்துக்கும் மேலே.... நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்... வேலை நடுவே.... ஸ்ட்ரெஸ் குறைக்கவே வருகிறோம்...

அழகான பெண்கள் குறித்து கருத்தும் கூட... நகைசுவைக்கானது...

சீரியஸ் ஆக அனைத்தையுமே எடுக்கிறீர்கள் போலுள்ளது. ரிலாக்ஸ் ப்ளீஸ்..... 

அந்த அழகான பெண்கள் விடயத்தை நான் சீரியசாக எடுக்கவில்லை..😊.. 

மேலும், எனக்கு தெரிந்த வீட்டில் பதின்ம வயது பிள்ளையிடம்(இங்கே பிறந்து வளர்ந்தவர்) ஆபிரிக்கர்களை இப்படி கூறுவதுண்டு என கதைப்பொழுது அப்படி கதைப்பது சரியல்ல என்றார்.. அதனால்தான் உங்களிடம் கேட்டேன். நிறத்தை வைத்தோ உருவத்தை வைத்தோ கதைப்பதை அனேகர் விரும்புவதில்லை எ்ன்றுதான் அறிந்திருந்தேன்.. அவ்வளவுதான்.. 

அதே போல நீங்கள் கூறிய கறிவேப்பிலை கதையை பாரக்கவில்லை என்பதால் கருத்து கூறமுடியவில்லை..  

உங்களது ஆலேசனைக்கும் நன்றி!!

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே, வந்த புதிதில், எனது அண்ணா, KFC யில் வேலை பார்த்தார்.

யோவ் பாக்கி, இரண்டு துண்டு சிக்கன் தான் என்று கேட்ப்பார்கள் என்றார். Dogs & Blacks are not allowed என்று board போட்டு வைத்திருந்த நாடு....

இப்போது காலம் மாறி விட்டது.

நிறத்தினை வைத்து தான் இப்போதும் பேசுகிறார்கள்.

அரச படிவங்களை நிரப்பும்போது, பிரிட்டிஷ் வைட், பிரிட்டிஷ் பிளாக், பிரிட்டிஷ் ஏசியன் என்று குறியீடு செய்யுமாறு தான் கேட்க்கிறார்கள்.

ஆகவே அதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அந்த அழகான பெண்கள் விடயத்தை நான் சீரியசாக எடுக்கவில்லை..😊.. 

மேலும், எனக்கு தெரிந்த வீட்டில் பதின்ம வயது பிள்ளையிடம்(இங்கே பிறந்து வளர்ந்தவர்) ஆபிரிக்கர்களை இப்படி கூறுவதுண்டு என கதைப்பொழுது அப்படி கதைப்பது சரியல்ல என்றார்.. அதனால்தான் உங்களிடம் கேட்டேன். நிறத்தை வைத்தோ உருவத்தை வைத்தோ கதைப்பதை அனேகர் விரும்புவதில்லை எ்ன்றுதான் அறிந்திருந்தேன்.. அவ்வளவுதான்.. 

அதே போல நீங்கள் கூறிய கறிவேப்பிலை கதையை பாரக்கவில்லை என்பதால் கருத்து கூறமுடியவில்லை..  

உங்களது ஆலேசனைக்கும் நன்றி!!

நான் ஒரு கறுப்பு  மனிதன் என்று சொல்வதில் பெருமை கொள்பவர்கள் அவர்கள் நாங்கள் கருப்பாக இருந்தும் கறுப்பை  ஏளனமாக பார்க்கும் கூட்டம் .  அந்த பதின்ம வயது பிள்ளளையிடம் கேட்டு இருக்கலாம் எப்படி அவர்களை அழைப்பது என்று  நூற்றாண்டுகளாக  மறைமுகமாக எமது ஜீனில் மறைமுகமாக எழுதப்பட்ட தாழ்வு மனப்பான்மை .

கறுப்பை  கறுப்பென்று கூறாமல் என்னவென்று சொல்வது ?

சில சொற்களை மறக்க நினைக்கிறார்கள் அவை  இங்கு வேண்டாம் .

 • Like 1
Link to comment
Share on other sites

15 minutes ago, Nathamuni said:

இங்கே, வந்த புதிதில், எனது அண்ணா, KFC யில் வேலை பார்த்தார்.

யோவ் பாக்கி, இரண்டு துண்டு சிக்கன் தான் என்று கேட்ப்பார்கள் என்றார். Dog & Blacks are not allowed என்று board போட்டு வைத்திருந்த நாடு....

இப்போது காலம் மாறி விட்டது.

நிறத்தினை வைத்து தான் இப்போதும் பேசுகிறார்கள்.

அரச படிவங்களை நிரப்பும்போது, பிரிட்டிஷ் வைட், பிரிட்டிஷ் பிளாக், பிரிட்டிஷ் ஏசியன் என்று குறியீடு செய்யுமாறு தான் கேட்க்கிறார்கள்.

ஆகவே அதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

சில சொற்கள் ஏற்புடயன். சிலது இல்லை.

White (வெள்ளை), black (கறுப்பு), ஆசியன் என்பது ஏற்புடையது.

ஆனால் பிளக்கி (கறுவல்?) பாக்கி, நிகர், வைட்டி, ஏற்புடையதல்ல.

அதே போலத்தான் coloured man என்பது ஏற்புடையது அல்ல. ஆனால் man of colour ஏற்புடையது.

இது தனியே political correctness மட்டும் அல்ல. உங்கள் வேலையிடத்யில் போய் “a black man delivered these flowers” என்றீர்களானால் ஒரு தப்பும் இல்லை. அதையே “ a blackie delivered these flowers” என்றால் பிரச்சனை வரும்.

ஒருவரை அவரின் நிறத்தால் அடையாளம் சொல்வதை ஏற்கிறார்கள் (describing one’s skin colour - black man/ woman) ஆனால் அதையே சுருக்கி அல்லது வேறு வகையில் திரிபுபடுத்யுவதை, patronising அல்லது தாழ்மைபடுத்துதல் என எண்ணுகிறார்கள் (பிளக்கி, பாக்கி, ). 

இதில் கறுவல், செவ்வல், நரையன் என்பவை இரெண்டாம் வகை. கறுப்பு, வெள்ளை, பழுப்பு என்ற pure description of colour முதல் வகை என நினைக்கிறேன்.

ஆனால் இவை காலத்தின் படியும், இடத்தின் படியும் கூட மாறும்.

ஒரு காலத்தில் ஜிப்சி என்பது ஓகே. இப்போ travellers.

அதே போல் பப் மூடியபின் வெறியில் ரோட்டில் நிண்டு பாக்கி எண்டு கத்தும் மனிதனை யாரும் பொருட்படுத்தாமல் போகலாம், ஆனால் அதே ஆள் ஒரு மணதியலாத்தின் பின் A&E போய் வைத்தியசாலை சிப்னதியை பாக்கி எண்டு ஏசினால் விளைவு வேற மாரி இருக்கும்.

இடம், பொருள், ஏவல் …. 

12 minutes ago, பெருமாள் said:

நான் ஒரு கறுப்பு  மனிதன் என்று சொல்வதில் பெருமை கொள்பவர்கள் அவர்கள் நாங்கள் கருப்பாக இருந்தும் கறுப்பை  ஏளனமாக பார்க்கும் கூட்டம் .  அந்த பதின்ம வயது பிள்ளளையிடம் கேட்டு இருக்கலாம் எப்படி அவர்களை அழைப்பது என்று  நூற்றாண்டுகளாக  மறைமுகமாக எமது ஜீனில் மறைமுகமாக எழுதப்பட்ட தாழ்வு மனப்பான்மை .

கறுப்பை  கறுப்பென்று கூறாமல் என்னவென்று சொல்வது ?

சில சொற்களை மறக்க நினைக்கிறார்கள் அவை  இங்கு வேண்டாம் .

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பங்கு... ஆங்கிலம்.... தமிழ்... ரெண்டையும் போட்டு சிப்பிலி ஆடி இருக்கிறியள்... 😁

அதை விடுங்கோ..... மெயின் விசயத்துக்கு வாங்கோ...

நம்ம சந்திரிகா உங்கினை விம்பிள்டன் பக்கம் தனிமையிலே தான் இருக்கிறவாம் எண்டு பெருமாள் சொல்லுறார்........ விசாரியுங்கோ...

நைஜீரியன் லிங்க் ஒண்டு இருக்குது.... காசும் பார்த்தும் ஆகுது.... அவவுக்கு பொழுது போன மாதிரியும் இருக்குமெல்லே... 😜

 • Haha 1
Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

🤣 விம்பிள்டனோ? இல்லையப்பா. ஹார்ட்வர்ட்சியர், ரட்லெட். பெரிய யூத தலைகள் எல்லாம் இருக்கிற ஏரியா.

ஷென்லி டெஸ்கோவுக்கு போத்தல் வாங்க வருவா 🤣. கேட்டுப் பாக்கட்டே?🤣.

சனத் கோவிக்க மாட்டாரோ?🤣 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மேலும், எனக்கு தெரிந்த வீட்டில் பதின்ம வயது பிள்ளையிடம்(இங்கே பிறந்து வளர்ந்தவர்)

அவர்களிலும் பார்க்க (பதின்ம வயது), நீங்கள் காமன் சென்ஸ் கூடுதலாக உள்ளவர் என்பது எனது பார்வை. அந்த வயதில் எமக்கு இருந்த street smartness இங்குள்ள பிள்ளைகளுக்கு இல்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தமான ஒரு பதிவு அண்மையில் இணைத்திருந்தேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சில சொற்கள் ஏற்புடயன். சிலது இல்லை.

White (வெள்ளை), black (கறுப்பு), ஆசியன் என்பது ஏற்புடையது.

ஆனால் பிளக்கி (கறுவல்?) பாக்கி, நிகர், வைட்டி, ஏற்புடையதல்ல.

அதே போலத்தான் coloured man என்பது ஏற்புடையது அல்ல. ஆனால் man of colour ஏற்புடையது.

இது தனியே political correctness மட்டும் அல்ல. உங்கள் வேலையிடத்யில் போய் “a black man delivered these flowers” என்றீர்களானால் ஒரு தப்பும் இல்லை. அதையே “ a blackie delivered these flowers” என்றால் பிரச்சனை வரும்.

ஒருவரை அவரின் நிறத்தால் அடையாளம் சொல்வதை ஏற்கிறார்கள் (describing one’s skin colour - black man/ woman) ஆனால் அதையே சுருக்கி அல்லது வேறு வகையில் திரிபுபடுத்யுவதை, patronising அல்லது தாழ்மைபடுத்துதல் என எண்ணுகிறார்கள் (பிளக்கி, பாக்கி, ). 

இதில் கறுவல், செவ்வல், நரையன் என்பவை இரெண்டாம் வகை. கறுப்பு, வெள்ளை, பழுப்பு என்ற pure description of colour முதல் வகை என நினைக்கிறேன்.

ஆனால் இவை காலத்தின் படியும், இடத்தின் படியும் கூட மாறும்.

ஒரு காலத்தில் ஜிப்சி என்பது ஓகே. இப்போ travellers.

அதே போல் பப் மூடியபின் வெறியில் ரோட்டில் நிண்டு பாக்கி எண்டு கத்தும் மனிதனை யாரும் பொருட்படுத்தாமல் போகலாம், ஆனால் அதே ஆள் ஒரு மணதியலாத்தின் பின் A&E போய் வைத்தியசாலை சிப்னதியை பாக்கி எண்டு ஏசினால் விளைவு வேற மாரி இருக்கும்.

இடம், பொருள், ஏவல் …. 

3 hours ago, பெருமாள் said:

சில சொற்களை மறக்க நினைக்கிறார்கள் அவை  இங்கு வேண்டாம் .

உங்கடை ஏரியா பிரிக்ஸ்டன்  நில் இருந்து தூரத்தானே பிளந்து கட்டி இருக்கிறியள் .

Link to comment
Share on other sites

36 minutes ago, பெருமாள் said:

உங்கடை ஏரியா பிரிக்ஸ்டன்  நில் இருந்து தூரத்தானே பிளந்து கட்டி இருக்கிறியள் .

🤣 எங்களுக்கு கிட்ட ஸ்டோன்பிரிஜ், ஹால்ஸ்டன் இருக்கெல்லே🤣.

Link to comment
Share on other sites

Posted (edited)
16 hours ago, பெருமாள் said:

நான் ஒரு கறுப்பு  மனிதன் என்று சொல்வதில் பெருமை கொள்பவர்கள் அவர்கள் நாங்கள் கருப்பாக இருந்தும் கறுப்பை  ஏளனமாக பார்க்கும் கூட்டம் .  அந்த பதின்ம வயது பிள்ளளையிடம் கேட்டு இருக்கலாம் எப்படி அவர்களை அழைப்பது என்று  நூற்றாண்டுகளாக  மறைமுகமாக எமது ஜீனில் மறைமுகமாக எழுதப்பட்ட தாழ்வு மனப்பான்மை .

கறுப்பை  கறுப்பென்று கூறாமல் என்னவென்று சொல்வது ?

சில சொற்களை மறக்க நினைக்கிறார்கள் அவை  இங்கு வேண்டாம் .

பெருமாள் அண்ணா! எங்களவர்களை விடுவோம், அவர்களுக்கு கருப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மை இருக்கோ இல்லையோ ஆனால் எனது பள்ளிக்கூட நாட்களில் இந்த வேறுபாடுகளை நானும் அனுபவதித்து இருக்கிறேன். ஆனால் அது என்னைப் பாதித்ததும் இல்லை, தாழ்வு மனபாங்கையும் ஏற்படுத்தியதில்லை ஏனெனில் அதனை நாங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்திலும் எங்களது மற்றைய செயல்களிலுமே தங்கியுள்ளது. இது எனது தனிப்பட்ட அனுபவம்/கருத்து. 

ஆனால் பொதுவாக ஒரு இனத்தவரை பெயர் தெரியாத விடத்து அல்லது பெயர் தெரியாமல் அடையாளப்படுத்தும் பொழுது Caucasian build/appearance or African Black or Pacific Islanders or South Asian or Asian etc  என்பார்கள்.. ஆனால் நிறத்தை/உருவ அமைப்பை வைத்து இப்படி அழைப்பதில்லை அது விரும்பப்படுவதும் இல்லை என்பதுதான் நான் அறிந்தது..  

Anyway அண்ணா, எனக்கு அந்த பதின்மவயது பிள்ளையின் சிந்தனை பிடித்திருந்தது.. சரியெனவும் பட்டது. 
நாதமுனி அண்ணா இந்த மாதிரி fraudபற்றி கூறியதை நான் திசை திருப்ப விரும்பவில்லை. வாசித்த பொழுது மனதில் பட்டது, அதனை எழுதினேன். அவ்வளவுதான். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் பொதுவாக ஒரு இனத்தவரை பெயர் தெரியாத விடத்து அல்லது பெயர் தெரியாமல் அடையாளப்படுத்தும் பொழுது Caucasian build/appearance or African Black or Pacific Islanders or South Asian or Asian etc  என்பார்கள்.. ஆனால் நிறத்தை/உருவ அமைப்பை வைத்து இப்படி அழைப்பதில்லை அது விரும்பப்படுவதும் இல்லை என்பதுதான் நான் அறிந்தது..  

அது... அவுஸ்திரேலியாவில்....

இங்க வேறு கதை.. 🙏

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இள பேரரையர்(Lt. Col./ லெப் கேணல்) புனிதா   அன்னாரின் நினைவாய் எழுந்ததே கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணிகளில் ஒன்றான 'புனிதா தரைத்தாக்குதல் அணி'
  • கடலிலே காவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர்   காலம்: 2002  
  • இது இப்போது தான் தெரியுமா? ....நான் எனது சொந்த அனுபவங்களை சொல்லுகிறேன் .  கேளுங்கள்   2021.இல்    வறுமையை ஒழிப்போம். என்ற ஒரு அமைப்பு  என்னை தொடர்பு கொண்டு முல்லைத்தீவு கோப்புலவில்  ஒரு ஏழை பையனுக்கு சைக்கிள் வேண்ட 25 ஆயிரம் ரூபாய் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்கள்  அத்துடன் ஒரு கணணி உம் வேண்டித் தரலாம்  எவ்வளவு முடியும் என்று சொல்லும் படி கேட்டேன்   நல்ல கணணி க்கு 70 ஆயிரம் வேண்டும் என்றார்கள்  சரி தரலாமென்று  ஒரு இலட்சத்து ஐந்து ஆயிரம் அனுப்பினேன்   அவர்கள் முதல் அனுப்பிய பையனின் படமும் கணணி கொடுத்த பின் கணணி...சைக்கிள்..உடன் நின்ற பையனும் வெவ்வேறு நபர்கள்  எவனாவது பயன் படுத்தினால் சரி என்று விட்டுட்டேன்    😛 மேலும் அவர்கள் உதவியை எதிரபார்த்தார்கள்   நான் கடன் என்றால் தரலாம். சும்மா தர முடியாது   என்றேன்  கோழி பண்ணை அமைக்க உதவும்படி கேட்டார் சரி பத்து இலட்சம் கடனாகக் தர முடியும் என்றேன்    ஆறு மாதத்துக்குள் செலவு கூட சீமெந்து விலையேற்றம்  என்று மொத்தம் பதின்நான்கு இலட்சம் அனுப்பியுள்ளேன்“  இதே காரணம் சொல்லி சுவிஸ் அறக்கட்டளை இலும் பணம் வேண்டியவர்கள்  ஆரம்பத்தில் படம் அனுப்பினார்  பிறகு அனுப்பவில்லை  கோழி பண்ணையும் தொடங்கவில்லை மாறாக வீடு கட்டியுள்ளார்கள்    அதாவது உடம்பை முறித்துக் உழைக்க விருப்பமில்லை   இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் பார்ப்போம் 🤣 மொத்தம் ஆறு ஆயிரம் யூரோ  அனுப்பியுள்ளேன்“   அவருக்கு சரிதா என்று பெயர் வங்கி கணக்கு பிரசான்ன நவரத்தினம் என்ற பெயரில் உண்டு   நான் அவருக்கு சொன்னேன் இன்று அந்த ஆறு ஆயிரம் யூரோ  21 இலட்சம் ரூபாய் வரும் என்று   அவர் சொன்னார் இப்ப அதை பற்றி யோசித்து என்ன பலன்   இதுகளைப் பற்றி கவலை படுவது சுத்த வெஸ்ட்       ஒரு நாலு ஐந்து போத்தல்கள் மட்டின் விரான்டியை  குடித்து விட்டு குப்பிறப் படுத்துக்கிடக்கலாம்  😂🤣
  • இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?  
  • மண்ணெண்ணெய் குண்டு சம்பவங்கள்: திருமாவளவன், சீமான் எழுப்பிய சந்தேகமும், ஐ.ஜி. எச்சரிக்கையும் 5 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,GETTY IMAGES சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசிய வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்ற வைத்து, வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக சேலம் மாநகர், அம்மாபேட்டை காவல் நிலையத்தில், ராஜன் அளித்த புகாரின்பேரில் ஏழு பேரை அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   இதில் சிசிடி கேமரா பதிவின்படி காதர் உசேன், சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசியதாக போலிசாருக்குத் தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் சையத் அலி மற்றும் 34 வது கோட்ட கிளை எஸ்டிபிஐ தலைவர் காதர் உசேன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இருவர் மீதும் தீவைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சித்தல், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நீதிமன்ற காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   'மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது' - சைலேந்திர பாபு "நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - அண்ணாமலை பேட்டி   இதற்கிடையே சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சேலம் மாநகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தேகத்திற்குரிய நபர்கள் இருவரை பிடித்து விசாரணை செய்ததில் சையதுஅலி, காதர் உசேன் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்துள்ளோம். மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் முழுவதும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் நஜ்மல் கோடா தெரிவித்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் முகமது ரஃபி, மற்றும் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், முகமது ஆரிஸ், காஜா உசேன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமாவளவன் எழுப்பிய சந்தேகம்   திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம் போன்ற இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டு பிறர் வீசியதாக கூறிய நிகழ்வுகள் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளன என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சமீபத்திய நிகழ்வுகளின் பின்னாலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் இருக்க வாய்ப்புண்டு என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். தமிழ்நாடு காவல்துறை இந்த கோணத்திலும் அந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சீமான் குற்றச்சாட்டு நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதும் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாகக் கூறி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ள அந்த அறிக்கையில் தென் மாநிலங்களே தமது இலக்கென பாஜகவின் தலைவர்கள் கூறிவரும் நிலையில் அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழ்நாட்டில் மதமோதல், கும்பல் வன்முறைகளை ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயல்கின்றனவோ என்ற ஐயம் வலுப்பதாக கூறியிருக்கும் சீமான் "ஆங்காங்கே ஆர்.எஸ்.எஸ்., பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகிற செய்திகள் கடந்த காலத்தையை நினைவூட்டுகின்றன. தாங்களே தங்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி, தங்கள் வாகனத்தை எரித்து அரசியல் லாபம் பெற முயன்ற பாஜக நிர்வாகிகளின் முந்தைய செயல்பாடுகள் யாவும் சமகாலச் சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் என்னும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை..." என்றும் கூறியிருக்கிறார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 அத்துடன் ஆர்.எஸ்.எஸ். 50 இடங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ள ஊர்வலம் பற்றி குறிப்பிட்ட சீமான், உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலுவான வாதங்களை வைக்கத் தவறியதன் விளைவாகவே அந்த ஊர்வலங்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று குறிப்பிட்டார். ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை இந்நிலையில் விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக் வீசிக்கொண்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளரிடம் பேசுமையில், "திண்டுக்கல் அடுத்துள்ள குடைபாறைபட்டியைசேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாநகரத் தலைவர் செந்தில் பால்ராஜ் செட்டில் இருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்த வழக்கில் திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் (29) என்பவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மேலும் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. சுமார் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்களில், சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் ரோந்துப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.   ''ராமாயண, மகாபாரத புராண குப்பைகளை மக்கள் மூளையில் திணித்துள்ளனர்'' - திருமாவளவன் தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்கள் வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல் - எங்கெங்கு நடந்தன?   தற்போதைய சூழலில் விசாரணை என்பது முழு முன்னேற்றத்தில் சீராக சென்று கொண்டிருக்கிறது. முக்கியமான இடங்களில் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் சில்லறையில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவர்களும் காவல்துறையின் அறிவுறுத்தலை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் யாரெல்லாம் முக்கிய நபர்கள் குறித்து முழு விவரம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய வீடு, அலுவலகம் அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்தார். 'முதல்வர் விழித்து கொள்ள வேண்டும்'   கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசுகையில், "மத்திய அரசு அமலாக்கத் துறை, மாநில காவல் துறை இணைந்து செய்த சோதனைக்கு பாஜக தொண்டன் என்ன செய்வான்? பாஜக தொண்டரின் வீடு உட்பட 25 இடங்களுக்கு மேல் குண்டு போட்டிருக்கிறார்கள். தமிழக காவல்துறை எத்தனை பேரை கைது செய்துள்ளது. தமிழக முதல்வர் விழித்துக் கொள்ள வேண்டும். கோவை மாவட்ட காவல்துறை நடந்து கொண்ட விதம் சரியில்லை. இது திமுகவுக்கும் பாஜகவுக்கும் நடக்கின்ற போர். காவல்துறை அதிகாரிகள் இதில் சிக்கிக் கொள்ளாமல் விலகி இருக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும். பாஜக தொண்டர்களிடம் அத்துமீறிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நானே புகார் அளிப்பேன்." என்றார். https://www.bbc.com/tamil/india-63026410
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.