Sign in to follow this  
கறுப்பி

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்

Recommended Posts

இராமர் பாலத்தை இடிப்பதற்கு

அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்

சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுவது அமெரிக்க மற்றும் விடுதலைப் புலிகளின் கூட்டுச் சதி என்று விஸ்வ இந்துப் பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.

ராமர் பாலம் இடிக்கப்படுவதைக் கண்டித்து எதிர்வரும் 12ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் விஸ்வ இந்துப் பரிஷத் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இதன்போது இக்கருத்தை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:

ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஆயம் இத்திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தபோதிலும் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்தும், மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யுமாறு கூறியிருந்தது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறிராமர் பாலம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மேலும் ராமர் பாலம் இடிக்கப்படுவதால் திருகோணமலை அருகே உள்ள புல்மோட்டைப் பகுதியில் கனியவள இல்மனைட் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் அதனை இடிப்பதற்கு விடுதலைப் புலிகளும் சதி செய்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக மத்திய அரசு அவசர அவசரமாக ராமர் பாலத்தை இடிக்க முயற்சி செய்து வருகின்றது. இதனால் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார். (க9)

நன்றி - சுடர் ஒளி

Share this post


Link to post
Share on other sites

சுப்பிரமண்ய சுவாமி, ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை, கெகலயா ரம்புக்கெல, சோ போன்றவர்களையும் இந்த வேதாளம் , மன்னிக்கவேண்டும் வேதாந்தம் மிஞ்சி விடுவார் போல இருக்கிறது. சிரிப்புத் தாங்க முடியவில்லை.

Share this post


Link to post
Share on other sites
:huh: :P ;) :) B) :lol: இந்த செய்திக்கு இதை விட என்னங்கபண்ண முடியும்?

Share this post


Link to post
Share on other sites

ராமர் பாலம்-அமெரிக்கா உண்மையை மறைத்து

விட்டது: வி.எச்.பி

ஆகஸ்ட் 06, 2007

சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தக் கோரி ஆகஸ்ட் 26ம் தேதி, 1 லட்சம் சாதுக்கள், பக்தர்கள் கலந்து கொள்ளும் ராமேஸ்வரம் சலோ போராட்டம் நடத்தப்படும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வி.எச்.பி. அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ராமேஸ்வரத்தில் இந்தப் போராட்டம் நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்தும் 1 லட்சம் சாதுக்கள், ராம பக்தர்கள் கலந்து கொள்வர்.

ராமர் பாலத்தை அழிக்க விடாமல் காப்போம் என இந்த ராமேஸ்வரம் சலோ போராட்டத்தில் பங்கேற்போர் உறுதி எடுத்துக் கொள்வர்.

இதுதவிர ஆகஸ்ட் 12ம் தேதி நாடு முழுவதும் 200 இடங்களில் ஒரு நாள் உண்ணாவிதரப் போராட்டமும் நடத்தப்படும். சென்னையில், பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் தலைமையில் போராட்டம் நடைபெறும்.

ராம பக்தர்களின் உணர்வுகளையும், பொதுமக்களின் கருத்துக்களையும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சேது சமுத்திரத் திட்ட அதிகாரிகள் கொஞ்சம் கூட மதிக்கவில்லை.

20 சதவீத ராமர் பாலத்தின் பகுதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள பகுதிகளையாவது நாம் காத்தாக வேண்டும். எனவே இந்தத் திட்டத்தை அப்படியே நிறுத்த வேண்டும்.

ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதுதான் என்ற உண்மையை மத்திய அரசின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதை சேது சமுத்திரத் திட்டக் கழக தலைவர் ரகுபதி தனது சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மறைத்து விட்டார்.

ராமர் பாலத்தை உடைப்பதால் அப்பகுதியில் உள்ள தோரியம் படிவுகள் வீணாகும் அபாயம் உள்ளது.

நாம் வல்லரசாகி விடக் கூடாது என்பதற்காக அமெரிக்கா செய்யும் சதித் திட்டமே இது. ராமர் பாலம் குறித்த உண்மையை வேண்டும் என்றே அமெரிக்கா மறைத்து விட்டது என்றார் அவர்.

http://thatstamil.oneindia.in/news/2007/08/06/sethu.html

Share this post


Link to post
Share on other sites

இப்படியொரு பிரமாண்டமான பாலம் மனிதர்களால் அமைக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக அதைக் கட்டிய மக்களின் தடயங்கள் காணப்படும். ஆனால் இதுவரை அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இராமர் பாலம் என்று கூச்சல் போடுபவர்கள் குறைந்தபட்சம் இதற்கான அகழ்வாராச்சியை மேற்கொள்ளவாவது முயன்றிருக்கலாம்.

இப்பாலத்தை இடிப்பதால் ஏற்படப் போகும் புவியியல் மாற்றங்களை ஆராய்ந்து இதனால் ஏதாவது தீமை ஏற்படுமானால் போராட்டம் நடத்துவது நியாயமானது. இதைவிட்டு அரசியல் நோக்கங்களுக்காக பாலத்தைக் காரணம் காட்டி போராட்டங்களை நடத்துவது சரியல்ல. இதில் புலிகளைவேறு வம்புக்கு இழுக்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

அட இதுக்கெல்லாம் போய் டென்சன் ஆகிக்கொண்டு.. நல்ல விசயங்களை வாழ்த்தி வரவேற்கவல்லவா வேண்டும்?

--------------------------------------------------------------------------------------------------------------------

இறுதியாக கிடைத்த புலனாய்வுத் தகவலின்படி அமெரிக்க புலனாய்வு அமைப்பும், புலிகளின் புலனாய்வு அமைப்பும் இணைந்து இந்து மா சமுத்திரத்தில் பாரிய கூட்டு போர் ஒத்திகை ஒன்றில் இரகசியமான முறையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையோரத்தில் காயப்போடப்பட்டுள்ள கருவாடுகளை திருடி அமெரிக்காவின் புளோரி மானிலத்திற்கு அனுப்பி கள்ளக்கருவாடு கடத்தல் யாவாரம் செய்வதே இதன் நோக்கமாகும் என கண்டறியப்பட்டுள்ளது.

கடத்தப்படப்போகும் இந்த கருவாடுகளினுள் இந்தியாவில் செய்யப்படும் கம்பியூட்டர் உதிரிப்பாகங்கள், மற்றும் மென்பொருட்களும், வேறும் பல இராணுவ இரகசிய விஞ்ஞானத் தகவல்களும் திருட்டுத்தனமான முறையில் வைக்கப்பட்டு அனுப்பப்படலாம் என்று சூப்பிரமணியம் சுவாமி சந்தேகப்படுகின்றார்.

தகவல்: இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் தொடர்பாடலை வழிமறித்து உற்றுக்கேட்டதில் இருந்து..

உற்றுக்கேட்ட செய்தியை எனது காதுகளில் ஓதியவர்: கந்தப்பு :)

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தின் மீதான வரலாற்று ரீதியான முதலாவது அன்னிய அடக்கு முறையின் சின்னம், இராமர் பாலம் உடைக்கப்படுவது கவலை அளிக்க இல்லை... நல்ல விடயம்தான்...

Share this post


Link to post
Share on other sites

இராமாயணமே கம்பர் என்னும் ஒரு மனிதனால் எழுதப்பட்ட கற்பனைக்கதை என்று சொல்லப்படுகிறது..

கற்பனை கதையிலை இருந்து எவ்வாறு இந்தப்பாலம் நிசமாக வந்தது?

Share this post


Link to post
Share on other sites

ராமர் பாலம் பற்றிய தகவல்களை எங்கு எடுக்கலாம்?

Share this post


Link to post
Share on other sites

இராமாயணமே கம்பர் என்னும் ஒரு மனிதனால் எழுதப்பட்ட கற்பனைக்கதை என்று சொல்லப்படுகிறது..

கற்பனை கதையிலை இருந்து எவ்வாறு இந்தப்பாலம் நிசமாக வந்தது?

இப்ப நாசாவக் கேட்டு அறிய வேண்டியதை அப்ப எப்படி கம்பர் கண்டார்.. கற்பனைல வடிச்சது எப்படி நிஜத்தில பிரதிபலிச்சது.. பாலமோவோ.. தரைத்தோற்றமோவோ..??! கம்பருக்கு அமெரிக்காதான் சற்றலைட் அனுப்பி தகவல் அனுப்பிச்சோ..??! :(:(

அமெரிக்கன் சொன்னா வேதவாக்கு என்று நினைக்கிற கூட்டமும்.. சாமி சந்நிதானமும் என்று ஆடுற கூட்டமும் ஒன்றுதான். நாம் தான் எமது பாரம்பரியத்தை ஆராயனும். அந்நியனட்டப் போனா அவன்.. உண்மைகளை ஒழிச்சும்.. தகவல் தருவான்..! அதுவும் அமெரிக்கா.. உண்மை.. சொல்லுது..??! :lol::(

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

வால்மீகி, கம்பர், ராவணன், ஈசுவரங்கள், சைவசமயம் நாசா ஆய்வுகள் எல்லாமே பொய்யாம்

கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன் தமிழன் தோன்றினதுதான் மெய்யாம் ஆதாரம் குறுக்கால போவான் அண்னனிட்ட கிடக்காம்

அண்னை எடுத்து விடுங்கோ

B)

Share this post


Link to post
Share on other sites

இப்ப நாசாவக் கேட்டு அறிய வேண்டியதை அப்ப எப்படி கம்பர் கண்டார்.. கற்பனைல வடிச்சது எப்படி நிஜத்தில பிரதிபலிச்சது.. பாலமோவோ.. தரைத்தோற்றமோவோ..??! கம்பருக்கு அமெரிக்காதான் சற்றலைட் அனுப்பி தகவல் அனுப்பிச்சோ..??! :(:(

அமெரிக்கன் சொன்னா வேதவாக்கு என்று நினைக்கிற கூட்டமும்.. சாமி சந்நிதானமும் என்று ஆடுற கூட்டமும் ஒன்றுதான். நாம் தான் எமது பாரம்பரியத்தை ஆராயனும். அந்நியனட்டப் போனா அவன்.. உண்மைகளை ஒழிச்சும்.. தகவல் தருவான்..! அதுவும் அமெரிக்கா.. உண்மை.. சொல்லுது..??! :lol::(

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் மணல் திட்டைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு கம்பரோ வால்மீகியோ அமெரிக்க சறற்லைடோ அவசியமில்லை.

அறிவியல் ஆதாரங்கள் ஏதுமின்றி கற்பனைக் கதையை மட்டுமே எப்படி சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியும் ?

பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தால் பின்னர் அது மக்களால் பாவிக்கப்பட்டிருந்ததற்கான ஆதாரங்களும் சரித்திரத்தில் இல்லை. இப்படியான ஒரு பாலத்தைக் கட்டி முடிக்க பல வருடங்கள் ஆகியிருக்கும். பாக்கு நீரணையைக் கடப்பதற்கு இலகுவான விரைவான வழி படகுகள் மூலம் கடப்பதேயாகும். இலகுவான வழியை விட்டு பிற்காலத்தில் யாருக்குமே பயன்படாத பாலத்தை ஏன் அமைக்க வேண்டும் ? பாலம் அமைக்கும்வரை இராவணன் பூப்பறித்துக் கொண்டிருந்தானா ?

இராவணன் புஷ்பக விமானத்தில் இலகுவாக கடலைக் கடந்து சென்றுவிட்டான். கடவுள் அவதாரமாகிய இராமருக்கு விமான டெக்னோலொஜி கிட்டாதது ஏனோ ?

Share this post


Link to post
Share on other sites

சிட்னியில் சில இந்தியர்கள், இந்தியா அரசுக்கு மனு அனுப்ப தங்களுக்குள்ளே கையோப்பங்கள் சேகரிக்கிறார்கள். தங்களது வரலாற்றுச் சின்னமான இந்தப்பாலத்தை அழிப்பதை நிறுத்தவே இச்சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலங்கை அரசினால் கொல்லப்படும் இந்தியா மீனவர்களின் உயிர்களைக் காப்பாற்ற ,இந்தியா அரசைக் கேக்க இவர்கள் ஒரு நாளும் கையோப்பம் கேட்டதில்லை.

Share this post


Link to post
Share on other sites

சிட்னியில் சில இந்தியர்கள், இந்தியா அரசுக்கு மனு அனுப்ப தங்களுக்குள்ளே கையோப்பங்கள் சேகரிக்கிறார்கள். தங்களது வரலாற்றுச் சின்னமான இந்தப்பாலத்தை அழிப்பதை நிறுத்தவே இச்சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலங்கை அரசினால் கொல்லப்படும் இந்தியா மீனவர்களின் உயிர்களைக் காப்பாற்ற ,இந்தியா அரசைக் கேக்க இவர்கள் ஒரு நாளும் கையோப்பம் கேட்டதில்லை.

உயிர்கள் விலை மலிந்து விட்டதாக்கும்

Share this post


Link to post
Share on other sites

இராவணன் புஷ்பக விமானத்தில் இலகுவாக கடலைக் கடந்து சென்றுவிட்டான். கடவுள் அவதாரமாகிய இராமருக்கு விமான டெக்னோலொஜி கிட்டாதது ஏனோ ?

--------------------------------------------------------------

இராமருக்கு விமான டெக்னோலொஜி கிட்டவில்லை என்று சொல்வதற்கில்லை. சஞ்சீவி மலையை தூக்கி கொண்டு போகுமளவுக்கு பெரிய அளவில்பொதிகள் ஏற்றி இறக்கும் சேவை வைத்திருந்துதான் உள்ளனர் ஆனால்பயணிகள் சேவை இருக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் மணல் திட்டைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு கம்பரோ வால்மீகியோ அமெரிக்க சறற்லைடோ அவசியமில்லை.

அப்ப எப்படி கம்பர் இராமாயணம் கற்பனை தான் என்று சாதிக்க முடியும். நிஜயத்தில் இருந்ததை வைத்துத்தானே கம்பர் இலக்கியம் படைத்துள்ளார். இராமர் பாலம் மட்டுமல்ல.. இலங்கையில் சீதா எலிய எனும் பகுதி நுவரெலியாவை அண்மித்து இருக்கிறது. இன்று கூட ஆட்கள் போவது கடினம். நாம் அந்த இடத்தை பார்வையிட்டிருக்கிறம். கம்பன் வர்ணித்த தாவரவியல் மற்றும் புவியியல் அடையாளங்களைக் காணக் கூடியதாக உள்ளது. உ+ம்: பாறைகளின் வடிவங்கள்.

இந்த இடத்தில் நாம் குறிப்பிட வந்தது பாலத்துக்கு அறிவியல் விளக்கம் அளிப்பதையல்ல. இராமாயணம் கற்பனை மட்டுமே என்று சாதிப்பதும் தவறு என்பதை சுட்டிக்காட்டத்தான். இராமாயணத்தில்... படைக்கப்பட்ட பாத்திரங்களில் தெய்வத்தன்மையை.. அரக்க தன்மையை புகுத்தி இருக்கலாம்.. ஆனால் வரலாற்று சான்றுகளை அது உள்ளடக்கவில்லை என்றும் அதை கற்பனை மட்டுமே என்றும் சொல்லிடவும் முடியாது.

அறிவியல் ஆதாரங்கள் ஏதுமின்றி கற்பனைக் கதையை மட்டுமே எப்படி சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியும் ?

அறிவியல் ஆதாரங்கள் இன்றி.. ஜேசு இறந்தார் உயிர்த்தார் என்றும் சொல்லினம் நம்பினம்.. மேரி தோன்றினார் என்று பிரான்ஸ் லூட்ஸ் தேவாயலத்துக்கு படையும் எடுக்கினம்... அப்படித்தான் அறிவியலைக் கடந்த ஒரு நிலை இந்த இடத்தில்... இருக்கலாம்.. இல்லையா..??!

பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தால் பின்னர் அது மக்களால் பாவிக்கப்பட்டிருந்ததற்கான ஆதாரங்களும் சரித்திரத்தில் இல்லை. இப்படியான ஒரு பாலத்தைக் கட்டி முடிக்க பல வருடங்கள் ஆகியிருக்கும். பாக்கு நீரணையைக் கடப்பதற்கு இலகுவான விரைவான வழி படகுகள் மூலம் கடப்பதேயாகும். இலகுவான வழியை விட்டு பிற்காலத்தில் யாருக்குமே பயன்படாத பாலத்தை ஏன் அமைக்க வேண்டும் ? பாலம் அமைக்கும்வரை இராவணன் பூப்பறித்துக் கொண்டிருந்தானா ?

இராமாயணம் தெளிவாகச் சொல்கிறது.. நீண்ட காலம் எடுத்தது என்று.. அது குறிப்பிடும் பாலத்தை அமைக்க..! அதுமட்டுமன்றி பெரும் படையணியை நகர்த்தும் பொருட்டு தற்காலிக தேவை கருதி அமைக்கப்பட்ட பாலம் இது என்ற குறிப்பும் தெளிவாக உள்ளது. இராமாயணத்தில் கம்பர் வெறும் புளுகுகளைத்தான் முன் வைத்தார் என்று புறக்கணிக்க முடியாத நிலையும் இருக்கிறது. அறிவியல் ஆதாரம் தேடுவது எவ்வளவு அவசியமோ.. அந்தளவுக்கு வரலாற்று ஆதாரங்களை புறக்கணிக்காத நிலையும் அவசியம். சில அறிவியலால் உடனடியாக நிறுவ முடியாத விடயங்களாகக் கூட இருக்கலாம்.

இராவணன் புஷ்பக விமானத்தில் இலகுவாக கடலைக் கடந்து சென்றுவிட்டான். கடவுள் அவதாரமாகிய இராமருக்கு விமான டெக்னோலொஜி கிட்டாதது ஏனோ ?

இராமர் என்ற பாத்திரப்படைப்பு பிறருக்கு துன்பம் இழைக்கப்படும் போது துன்பத்தை அனுபவிக்கும் மக்களுக்காக உழைக்கிறார் என்பதைத்தான் சொல்ல விளைகிறது. இராமரிடம் புட்பக விமானம் இல்லாமல் இருக்கலாம்.. இருந்திருக்கலாம்.. இருந்திருந்தும் பாவிக்காமல் இருந்திருக்கலாம்..! அதுமட்டுமன்றி இராவணன் என்ற பாத்திரம் கடவுளுக்கு நிகராக இருந்துள்ளது. அவன் சிவனிடம் அனைத்து வரங்களையும் பெற்றவன் என்ற தன்மை.. அவன் துறைசார் பலம் பெற்றவன் என்பதைக் காட்ட சொல்லப்பட்டுள்ளது.

இராவணன்.. அப்படி ஒரு விமானத்தை பாவித்தான் என்பதுவும்... பாலம் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்டது போல அமைய ஆதாரம் இல்லாதது போன்ற ஒரு விடயமே.. இராவணன் விமானத்தில் பறந்ததை நாம் நிறுவினால் விமானத்தைக் கண்டறிந்தவர் பட்டியலில் நாம் முதலிடத்தை அடைவோம்.. இல்லையா...?! கம்பன் கற்பனை என்று சொல்லி வரலாற்று(இலக்கியச்) சான்றுகளுக்கு ஆதாரம் தேடாமல் மேடைகளில் வாதப் பிரதி வாதம் செய்த நேரத்துக்கு.. இலக்கியச் சான்றுகளுக்கு ஆதாரம் தேடி இருந்தால்.. இன்று நாம் அமெரிக்கர்களை வென்றிருப்பம்.

விமானப்படைப்பு முன்னோடி.. லியனாடோவின் சித்திரங்கள் என்று வெள்ளைக்காரன் படம் காட்ட அதில் எடுபடும் நாம் ஏன் எமது இலக்கியங்கள் அறிமுகம் செய்த இந்த பறப்பு என்ற மனித சிந்தனைக்கு முக்கியம் அளிக்கிறமில்ல...??! ஓவியக் கற்பனையை.. நிஜமாக்கி ஆதாரமாக்கிறான்.. வெள்ளைக்காரன். நாமோ எமது படைப்பாளிகள் காட்டிய நிஜத்தைக் கூட கற்பனை என்று புறக்கணிப்பை செய்வதைத்தான் தொடர்ந்து பரமபரை பரம்பரையா விவாதங்கள் மூலம் செய்ய விளைகிறம். அதற்குள் கூட மத எதிர்ப்பு.. சார்பு வாதங்கள்..! பிராந்திய.. அரசியல் ஆதாயத் தேடல்கள். இவைதான் எம்மை குட்டிச்சுவராக்கின்றன. அரசியல் வேறு.. மதம் வேறு.. இப்படியான விடயங்களுக்கு ஆதாரத் தேடல்கள் வேறு.. என்பதை மக்கள் உணரனும்.

மலையகத்தில் சீதா எலியப் பகுதியில் தாரவப்பன்மை என்பதும் கூட மாறுபட்டிருக்கிறது. திருமலையில் இன்றும் கூட அவதானிக்கக் கடினமான இராவணன் வெட்டு என்ற கடற்கரையோர நிலைக்குத்துப் பாறையில் பாரிய வெடிப்பை காண முடிகிறது. கிண்ணியா கிணறுகளுக்கு இன்னும் சரியான அறிவியல் விளக்கம் கொடுக்க முடியல்ல...??!

மூலிகைகள் (தாவரங்கள்) சிறிவாக அடங்கிய பகுதி ஒன்று மலையகத்தில் உண்டு. அந்த இடத்தில் தான் சிரஞ்சீவி மலையை பெயர்த்து வந்து வைத்ததாக இராமாயணம் சொல்கிறது..! ஆக இராமாயணத்தில் வரும் சில விடயங்களுக்கும் புவியியல் தோற்றத்துக்கும் இடையில் உண்மைத் தொடர்பிருக்கிறது.. இன்றும் கூட..! ஆனால் அந்தத் தோற்றங்களுக்கான பின்னணியும்.. இராமாயண விளக்கமும் ஒன்றென்று நிறுவது அல்ல எமது இந்த வாதம். இராமாயணம்.. புவியியல் உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு.. அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை அறிவியலைப் பாவிக்க வேண்டியது நாமே தவிர.. அமெரிக்கன் அல்ல.

இவ்வளவு நுணுக்கமாக தனது காவியத்துள் கம்பன் புவியியல் அம்சங்களைக் கலந்திருப்பது எம்மை வியக்க வைக்கிறது. இப்படி ஒரு மணல் திட்டை அடையாளம் காட்டியவன் (தமிழில் இராமாயணம் மூலம்) கம்பன். அதன் பின்னர் தான் மிகுதி..! வெள்ளைக்காரன் எதையும் கண்டுபிடிச்சா அதற்கு முதன்மை அளிக்கும் நாம் எம் கவிஞன் அறிமுகப்படுத்திய தரைத்தோற்றத்துக்கு வெள்ளைக்காரனிடம் விளக்கம் கேட்கும் நாம் அவன் அடம்ஸ் பாலம் என்று பெயரிட்டுள்ளதுக்கு ஏனாம் விளக்கம் கோர மறுக்கிறம்..??!

எல்லாம் அமெரிக்கன் சொன்னால் வேதவாக்கு என்ற நிலை. எப்படி அன்று பார்பர்னிய கொள்கைகள் சிலவற்றின் ஆதிக்கம் மக்களை முட்டாள் ஆக்கியதோ அதேபோல் அறிவியல் என்று அமெரிக்க வைக்கும் விளக்கங்களை கண்மூடிக்கொண்டு நாம் ஏற்பதும்.. எமது வரலாற்று கண்டுபிடிப்புக்களை தாரை வார்ப்பதும்..முட்டாள் தனம். எம்மிடமும் அமெரிக்க அறிவியல் உண்டு. அதை நாமே பாவித்து நாமே எமது விடயங்களை தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுக்கனும்.. அதுதான் எமக்கு எமது வரலாற்று உண்மைகள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வழி சமைக்கும். அமெரிக்கா சொன்னா எல்லாம் சரி என்று யுஸ் போதையுள் உழலும் நிலை.. வேண்டாம். கம்பன் பாலத்தை அடையாளம் காட்டினான் (தமிழர்களைப் பொறுத்தவரை) என்று கூறினால் கூட அது அவனின் கண்டுபிடிப்பு. இராமாயணத்தில் தான் அந்தக் குறிப்பை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. எனவே இராமாயணம்.. சில புவியியல் கண்டுபிடிப்புக்களின் முன்னோடி.. என்று கூடச் சொல்லலாம்..! ஏன் இந்த நோக்கில் பார்க்கிறீங்க இல்ல..??! :lol::(

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

ராமர் பாலத்தை இடிச்சா புல்மோட்டையில் எப்படி இல்மனைட் அதிக அளவில கிடைக்கும்????

Share this post


Link to post
Share on other sites

இராவணன் ஒரு சிறந்த அரசனாக விளங்கினார். அவரை பத்துத்தலை இராவணன் எனக் கூறிப்பிட்டதற்குக் காரணம் அவர் பத்துப்பேரின் அறிவை ஒன்றாகக் கொண்டிருந்தார் அதி புத்திசாலி எனச் சுட்டிக் காட்டுவதற்காகவேயாகும். அதுபோலவே அவர் தனது ஆட்சியிலும் மிகுந்து விளங்கினார். அவரது ஆளுமைக்குள் இருந்த காட்டுக்குள்ளேயே இராமர் குழுமம் வனவாசத்திற்காக முகாமிட்டிருந்தது. இராவணனின் தங்கை சூர்ப்பணகை அங்கிருக்கும் தடாகத்தில் வந்து நீராடுவது வழமை. சூர்ப்பணகை அழகில் சிறந்து விளங்கினாள். சூர்ப்பணகை நீராடுவதை இராமன் அல்லது லக்ஸ்மணன் (சரியாக ஞாபகமில்லை) ஒளிந்திருந்து பார்த்ததால் வந்தவினையே இராமாயணம். இதனைத் தனது அண்ணனிடம் முறையிட்டார் சூர்ப்பணகை. அதனால் இராவணன் அங்கு வந்து பார்த்தபோது, சீதை மட்டுமே தனியாக இருந்ததால் அவரைக் கடத்திச் சென்றுள்ளார்.

சீதை தீக்குளித்தபின்னரும், அந்நாட்டு மக்கள் தொடர்ந்தும் சீதையைச் சந்தேகப்பட்டதால், அவரது குழந்தைகளுடன் மீண்டும் காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்தக் காட்டு வாழ்க்கையின் போதே, வால்மீகி சீதையைச் சந்திக்கிறார். சீதை தன் கடந்த காலக்கதையை வால்மீகிக்குக் கூற, அதிலிருந்து உருவானதுதான் இராமயணம். பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் சீதை, இராவணர் குழுமத்தை வெறுத்து, அவர்களை இராட்சதர்களுக்கு ஒப்பாகக் குறிப்பிட்டிருப்பார். இன்றுவரை வடநாட்டினருக்கு (பார்ப்பணியர்களுக்கு) கணவன் கண்கண்ட தெய்வம். அதனால்தான் இராமர் எவ்வளவு சந்தேகப்பட்டபோதும், சீதை தொடர்ந்தும் அவரைத் தெய்வத்திற்கு ஒப்பிட்டுக் கதைத்திருக்கலாம். அதுமட்டுமின்றி, கதை சுவாரசியத்திற்காகவும் வால்மீகி அதனை மிகைப்படுத்திக் கூறியிருக்கலாம்.

இராமாயணம் முதலில் வால்மீகியால் எழுதப்பட்டது. பின்னர் கம்பர் அதனை மொழிபெயர்த்தார். இராமாயணத்தில் பல விடயங்கள் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல தமிழாய்வாளர்கள், இராமயணத்தை இராவணனின் கோணத்திலிருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

இராமரும் அணிலும் சேர்ந்து கட்டிய பாலம் நிசம் என்றால் ராவணனுக்கு பத்து தலை இருந்ததும் நிசம். மானாக மாறியதும் நிசம். புட்பக விமானமும் நிசம் ஆகிவிடும். பாலத்த்தை வைத்த அரசியல் நடக்குது என்பது தான் நிசம்.

ஆதிகாலத்தில் இலங்கை இந்தியாவுடன் சேர்ந்த ஒரு நிலப்பிரதேசம் என்றும் சுனாமி போல் ஒரு கடல்கோள் வந்து ஊடறுத்ததால் தான் தீடைகளும் திட்டுக்களும் கூடிய கடல்பகுதியாக உள்ளது என்று மானுடவியல் ஊகங்கள் சொல்கின்றன. இது ஒரு விதத்தில் நம்பக்கூடிய வாறு தரைத்தோற்றம் உள்ளது. தவிர முதற்சங்கத்தை கடல்கோள் அழித்து விட்டதென்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு பார்க்கையில் ராமாயண கதைக்குள் சில இயற்கையான விசயங்களையும் இணைத்த உண்மைத்தன்மையாக்கி விட முயற்சித்திருக்கலாம். உதாரணமாக முருகன் முருகனின் மனைவி குறத்தி வள்ளி எனற் வழிபாட்டு வடிவம் ஆரியத்துக்கு முதல் இருந்தது. பிற்பாடு தெய்வயானையை செருகவில்லையா?

பாரம்பரியமாக இருந்த தமிழரின் வழிபாட்டு தலங்களில் ஆரியத்தை நுளைந்த வரலாறுகளை இப்படியான புராணங்கள் மூலம் நிறைய அறிய முடிகின்றது. ஆரியம் தனது எல்லையை ராமேஸ்வரம் மட்டும் நீட்டியது. அதற்கு அப்பால் ஈழத்தில் ஆரியம் முதன்மை பெற முடியாது போய்விட்டது. அதனால் இராமாயணம்இராமேஸ்வரத்தில் இருந்து பாலம் போட்டு நீட்டி இராமரை அநத்தப்பக்கம் கடத்தி காட்டுகின்றது. இதன் மூலம் அங்கே உள்ளவர்கள் அசுரர்கள் என்றும் தாம் தான் தேவர்கள் என்றும் நிறுவ முற்பட்டிருக்கின்றார் என்பதே உணரக்கூடியவாறு உள்ளது.

தீடைகளுக்கு இடையில் பாலங்கள் அப்போதைய மக்களாலும் அரசர்களாலும் வணிகம் மற்றும் போக்கு வரத்து தேவைகளாலும் போடப்பட்டிருக்கலாம். அவ்வாறு நடந்திருக்க நிறைய சந்தர்பங்கள் உண்டு. அவ்வாறு நடந்திருக்குமாயின் அது அப்பகுதி வாழ் மக்களின் பெரும் உழைப்பாக இருந்திருக்கும். ஆனால் அது எந்த வகையிலும் வட நாட்டு ராமனும் வானரங்களும்; சேர்ந்து கட்டடியதாக கருத இடமிருக்காது. ஆனால் அதன் கதை மாறிவிட்டது.

http://video.google.ca/videoplay?docid=-50...h&plindex=0

எம்மிடம் ஏற்கனவே நிறைய விசயங்கள் இருப்பில் இருந்தது. கோவில்கள் அதன் சிலைகள் மூலக்கிரகங்கள் எல்லாம் அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் தோற்றம் கண்டிருந்தது. இவைகள் அந்த அந்த பிரதேசங்களில் இருந்து மூலப்பொருட்கள் எடுத்து கட்டப்பட்டது. இவ்வாறான வற்றில் எமது உருவ நிற பாரம்பரிய அமைப்புகள் பிரதி பலிக்கின்றது. இதனுள் என்னுமென்று அதவாது ஆரியம் இடையில் புகுந்ததை சாதரணமாக உணர முடியும். சீரான மானுடவியல் ஆய்வுகளையும் அகழ்வாராய்ச்சிகளையும் முன்னெடுத்து உண்மைகளை கண்டுபிடிக்க மூன்றாம் தரப்புக்கு உள்ள ஆர்வம் எமக்கில்லை. ஆர்வம் இருப்பவர்களும் உக்கப்படுத்தப்பட மாட்டார்கள் அரசு அவர்கள் கையில். இழப்பதற்கு எதுவுமின்றி இழந்து விட்டோம். இராமர் பாலம் இராமயணத்துக்கே சொந்தம் என்று சந்தோசப்பட ரொம்ப காலத்துக்கு முன்னமே உண்மை பொய்களுக்கு அப்பால் பழக்கப்பட்டு விட்டோம்.

Edited by sukan

Share this post


Link to post
Share on other sites

ராமன் -

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாரிய பட்டாளத்துடன் காணாமல் போன ஒரு எகிப்திய அரசன். (Pharaoh Akhenaten)

குரங்கு சேனை -

அவனுடன் சென்ற சூடனியன் காப்பிலிகள் படை.

ராவணன் -

10 வித திராவிட இனங்களின் அரசன்.

அரக்கர்கள் -

பின் தங்கிய அயுதங்களை உடைய திராவிடர்.

இலங்கை -

ஸிரீ லன்கா - இந்தியா - பாகிஸ்தான் - பாங்களதேஷ்.

:P

Edited by Panangkai

Share this post


Link to post
Share on other sites

அனுமார் பறந்து போனது மறந்துட்டியளோ? அதைவிட முக்கியான குரங்குப்படை பற்ரி ஒண்டும் சொல்லக்கானேல

நெடுக்கண்னை தொடங்கியிருக்கிரார் குறுக்கண்னை தொடருங்கோ

சுக்கிரண்னை சின்ன திருத்தம் வள்ளிக்கு முன்னம் தெய்வயானை எண்டு நெக்கிரன் கடைசீல கம்பர் கடத்திறதுக்கு பரிசம் போட்டாரெண்டும் சொல்லுரியள் ராமாயண்ம் எழுதினது வால்மீகியண்னே

செய்தியள் சரியா போகுதில்ல இதயாவது வாசிப்பம் தெடருங்கோ

:(

Share this post


Link to post
Share on other sites

சுக்கிரண்னை சின்ன திருத்தம் வள்ளிக்கு முன்னம் தெய்வயானை எண்டு நெக்கிரன் கடைசீல கம்பர் கடத்திறதுக்கு பரிசம் போட்டாரெண்டும் சொல்லுரியள் ராமாயண்ம் எழுதினது வால்மீகியண்னே- ஆதி

---------------------------

உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்துள்ளேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆதீ!

Edited by Panangkai

Share this post


Link to post
Share on other sites

ராமன் -

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாரிய பட்டாளத்துடன் காணாமல் போன ஒரு எகிப்திய அரசன். (Pharaoh Akhenaten)

குரங்கு சேனை -

அவனுடன் சென்ற சூடனியன் காப்பிலிகள் படை.

ராவணன் -

10 வித திராவிட இனங்களின் அரசன்.

அரக்கர்கள் -

பின் தங்கிய அயுதங்களை உடைய திராவிடர்.

இலங்கை -

இந்தியா - பாகிஸ்தான் - பாங்களதேஷ்.

:P

ஆதீ!

என்னண்னை கூப்பிட்டமாரி கேட்டுது? என்ன விசயம்?

உங்கட விளக்கமும் பாத்தநான் சோசிக்கவேண்டிய விசயமும்தான் நன்றியண்னே

சுக்கிரண்ணா தலையில ஆரியத்த கட்டி வைச்சுக்கொண்டு அழுவுறார்

சுக்கிரண்னோ உந்த பேர முதல் தூக்கி எறியுங்கோ

B)

Edited by Aadhi

Share this post


Link to post
Share on other sites

இதையும் நோட் பண்ணுங்கோ... ராமனுக்கும் அக்கன்ணாதனுக்கு பல ஒற்றுமைகள் உண்டு.... அவற்றில் 2..

1,சூரிய வழிபாடு

2, பிறந்த இடம்.... ராமன் - சராயு நதிகரை. அக்கன்ணாதன் - சார்யா நதிக்கரை ( ஒரு நைல் நதியின் கிளை ).

''Aadhi'' எங்கட பழைய ஆதிதானோ எண்டு பார்த்தன்....

Edited by Panangkai

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this