Jump to content

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான ரீதியில் கோட்பாடு, கொள்கை.. விதி.. என்ற நிலைகளில் கோட்பாடுகள் ஆதாரங்களால் நிறுவவும்.. நிராகரிக்கப்படவும் முடியும்.

ஆரியக் கோட்பாடு என்பது ஆரிய இனம் என்ற ஒரு கற்பனை இனம் சார்ந்து எழுவதால் அதை நிராகரிக்கக் கூடிய மனித டி என் ஏ ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் செய்யப்பட்டு வருகின்றன. இவை தொடர்பில் முன்னர் பல தடவை இக்களத்தில் ஆதாரங்களுடன் தந்துள்ளோம். பிறரும் தந்துள்ளனர்.

மீண்டும் மீண்டும்.. நீங்கள் ஒரே இடத்தில் தான் நிற்கிறீர்கள். நாம் ஏலவே குறிப்பிட்டது போல இராமன் அனுமன் பற்றிய தெய்வீகம்.. இராவணன் பற்றிய அரக்கியம் பற்றிய ஆய்வை.. அல்லது தகவல் புகுத்தலை செய்ய நாம் இங்கு கருத்தைச் சொல்லேல்ல. அதை இலக்கியமாக பார்த்து ரசிப்பவர்கள் ரசிக்கட்டும்.. புறக்கணிப்பவர்கள் புறக்கணிக்கட்டும். எமக்கு அவை தேவையில்லை.

இலக்கியம் தாங்கி வரும் விடயங்களுக்குள் வரலாற்று சான்றுகள் உண்டா என்று தேடுவதே எமது இலக்கு. கம்பராமாயணம் பல புவியியல் சான்றுகளை உள்ளடக்கியுள்ளது. கற்பனைக்கு வெளியில் என்ற உண்மையை நீங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அது வெளிப்படையும் கூட. அதில் ஒன்றுதான் இந்தப் பாலம். நாம் அதுகுறித்த ஆய்வைத்தான் கோரி நிற்கின்றம். இப்படியான வரலாற்றுச் சான்றுகளாக அமையக் கூடிய இலக்கிய எடுத்தாடல்களை ஆய்வதும் அறிவியல் கொண்டு நோக்குவதும் தவறே அல்ல.

ஏவாளின் கதையை நீங்கள் நம்புறீங்களோ இல்ல மக்கள் நம்பினமோ இல்லையோ.. ஆனால் விஞ்ஞானிகள் அதை ஒரு ஆய்வுக்குரிய விடயத்தின் தேவைக்காக பாவித்து அறிவியல் ரீதியா அதில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை ( உ+ம்: பறவைகளின் வகைகள்) அணுக முற்படுகின்றனர். அதனால் அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. வரலாற்றுத் தொன்மை பற்றிய நம்பகத்தன்மை குறித்த சான்றுகள் கிடைக்கின்றன. ஆதாம் ஏவாள் கதையை.. அவர்களின் உருவாக்கத்தை நம்பச் சொல்வதல்ல ஆய்வின் நோக்கம். அந்தக் கதையில் கையாளப்பட்ட ஏற்புடைய விடயங்கள் தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வின் விளைவே பப்புனியுகினிய ஆய்வின் முடிவு..!

இந்த வகையில் தான் நாம் இராமாயணத்தை அணுகுகின்றோம். ஆரிய திராவிட கோட்பாட்டியலை இராமாயணத்தால் நிறுவிட முடியும் என்றோ... இல்ல தெய்வத்தை.. அரக்கரை அறிவியல் ரீதியா நிரூபித்துக் காட்டிட முடியும் என்றோ மக்களை நம்ப வைப்பதற்கல்ல.. எமது கருத்து. இதை நீங்கள் தெளிவாக உணரும் போது எம்மோடு நீங்கள் முரண்பட எதுவுமில்லை என்பது புலனாகும்.

இலக்கியங்கள் காலத்தின் பிரதிபலிப்புக்கள் என்ற நிலையும் உண்டு. கற்பனைகள் கலக்காமல் இலக்கியங்கள் இல்லை. காலத்துக்கு காலம்.. இடைச்செருகல்களும் நடந்திருக்கலாம். ஆதிக்கமும் செல்வாக்குச் செய்திருக்கலாம். நமக்கு அவை பற்றிய தேடலுக்கல்ல இலக்கியம். இலக்கியம் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுத் தொன்மைகளை அடையாளம் காட்டக் கூடிய அம்சங்களை இனங்கண்டு அறிவியலூடாக அணுகுவதும் ஆராய்வதும் ஆதாரம் தேடுவதுமே ஆகும்..! :lol:

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைப்பில் உண்மையில் ஒரு பாலம் மண்ணுக்குள் போவது போன்ற காட்சியை காணலாம்..

கூகிள் மப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகன்.. நீங்கள் ஆரிய படைப்புக்கள் என்று புறக்கணிப்பதால் தான் அவை ஆரியர்களுக்கு சாதகமான பிரச்சார இலக்கியங்களாக உருவகிப்படுகின்றன.

இராமாயணம்.. உங்கள் அடையாளமிடலின் படி ஆரியம் திராவிடம் கடந்து.. எம்மைப் பொறுத்தவரை புவியியல் வரலாற்று கூறுகள் சிலவற்றின் அடையாளமிடுதலைச் செய்கிறது என்ற ரீதியில் தான் இருக்கிறது.

இது குறித்த ஆய்வுகள்.. எமது வரலாற்றுத் தொன்மைக்கான தேடலை செய்யுமே தவிர ஆரிய திராவிட கோட்பாட்டை காக்கும் என்று நாம் கருதவில்லை. அந்தத் திசையில் அமையாது புவியியல் கூறுகளை மையமாகக் கொண்டு மட்டும் ஆய்வுகள் செல்லும் போது.

ஆரிய திராவிட கோட்பாடுகளுக்கு வெளியில் தமிழர் என்ற இனத்தின் புவியியல் மற்றும் நாகரிக வரலாற்றுச் சான்று தேடல்கள் செய்யப்படுவதே தேவை. அதுதான் தமிழர்களின் உலக இருப்பை நிறுவ உதவும்.

இராமாயணம் மட்டுமல்ல.. மணிமேகலைக்குள்ளும் தேடல் செய்யலாம்.. பிற இலக்கியங்களுக்குள்ளும் தேடல் செய்யலாம். சாத்தியங்கள் எங்குள்ளதோ அங்கெல்லாம் செய்யலாம். எம்மைப் பொறுத்தவரை எம்மிடம் இந்த இராமாயணம் தொடர்பான கருத்தியல் என்பது.. பார்பரினிய.. ஆரிய..திராவிட கற்பனைச் சித்தாந்தங்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் வரலாற்றுச் சான்றுகளை சாத்தியமான இடங்களில் எல்லாம் அறிவியல் கொண்டு ஆராயவும் நிறுவவும் வேண்டும் என்பதே ஆகும்.

நீங்கள் ஆரிய திராவிட வடிவத்தில் இராமாயணத்தை நோக்குவதால்.. நிச்சயம் எமது நிலைப்பாட்டுக்கு உங்களால் இசைய முடியாது. அதனால் பாதிப்படப்போவது.. ஆரியர்.. திராவிடர் என்று நீங்கள் இனங்காட்டுபவர்கள் அல்ல. தமிழர்கள் ஆகிய நாங்கள் தான். :lol:

Link to comment
Share on other sites

இந்த இணைப்பில் உண்மையில் ஒரு பாலம் மண்ணுக்குள் போவது போன்ற காட்சியை காணலாம்..

கூகிள் மப்

சான்ஸே இல்லை... கரையோரங்களின் உயரம் , அகலம் அதிகம்.. நிச்சயம் மனிதனால் தயாரிக்கப்பட்டதில்லை..

Link to comment
Share on other sites

அந்த லைட் மஞ்சளில் தெரிவதுதான் பாலம் என்றால், இதுதான் உலகில் மிக அகலமான பாலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருந்ததையும் குழப்பினதுதான் மிச்சம். நெடூக்கண்னை போட்ட ஆதாம்(ராமர்) பாலத்த பாக்க மோட்டவே மாதிரியே இருக்கு அவரும் தன்னுடைய புவியியல் ஆதாரங்களா ராவணன்வெட்டு சீதாஎலிய எண்டு பலதும் கொட்டியிருக்கிரார். அவருக்காக நாசா போட்ட உண்மையான படத்தையும் இணைச்சிருக்கிரன். அயின்ச்ரைன் ஐயா சமச்கிருதத்தில சிரிச்சாலும் அதையோ வாங்கு வாங்கெண்டு வாங்கி கற்பு சாதி எல்லாம் இழுத்து ராமாயணத்துக்கு ஆப்படிச்சிருக்கிரார். சபேசண்னா திராவிட ஆரிய சண்டையை மையப்படுத்தி வழமையான பாப்பான் தாக்கு தாக்கி அது ராமர் பாலமில்லை திராவிடர் பாலமே எண்டமாதிரி எழுதியிருக்கிரார்.

பாலம்(மணல் திட்டு)

போய்யோ மெய்யோ அந்தக்கதைகளை எழுதியதாக சொல்லப்படும் வால்மீகியும் அதை மொழிபெயர்த்த கம்பரும் அத்தனை பாத்திரப் படைப்புக்களையும் ஒன்றிணைத்து இப்படியானதொரு காவியத்தை அதுவும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப்பார்த்தும் பிழை கண்டுபிடிக்கமுடியாதபடி(flawless) படைத்திருக்கிறார்களே ஆச்சரியமாக இல்லை?

ஆரியர் திராவிடர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகத்துக்கே ஒரு கதையை சொல்லும் இந்தப்பாலம்(மணல்திட்டு) நம்முடைய இனத்தை மையப்படுத்தி ஒரு சரித்திரத்தை சொல்லுகின்ற முக்கியமானதொரு புவியியல் சான்று என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். அறிவியல்ரீதியாக ஆராய்வதற்காக அண்மையில் நாசா எடுத்த புகைப்படங்கள் அணுகப்படலாம். ஓவ்வொரு குழுமமும் தங்களுக்கு சார்பாக சிலபல புனைகதைகளை சேர்த்து விவாதிக்கலாம். அதனூடு மனஅழுத்தத்தை கூட்டலாம் குறைக்கலாம். அதேபோல பாலம்(மணல்திட்டு) சிதைக்கப்படலாம் பாதுகாக்கப்படலாம் எது எப்படி நடந்தாலும் ராமாயணம் என்ற காவியத்தை அதன் மூலக்கதையை ஒருவராலும் மாற்றமுடியாது. B)

நன்றி

Link to comment
Share on other sites

சுகன்.. நீங்கள் ஆரிய படைப்புக்கள் என்று புறக்கணிப்பதால் தான் அவை ஆரியர்களுக்கு சாதகமான பிரச்சார இலக்கியங்களாக உருவகிப்படுகின்றன.

நீங்கள் ஆரிய திராவிட வடிவத்தில் இராமாயணத்தை நோக்குவதால்.. நிச்சயம் எமது நிலைப்பாட்டுக்கு உங்களால் இசைய முடியாது. அதனால் பாதிப்படப்போவது.. ஆரியர்.. திராவிடர் என்று நீங்கள் இனங்காட்டுபவர்கள் அல்ல. தமிழர்கள் ஆகிய நாங்கள் தான்.- நெடுக்கால போவான்

----------------------------------------------------------------

தமிழர்கள் கூறுபட்டு பிளவுபட்டு கிடப்பதே இந்த புராணங்கள் இதிகாச சாத்திரங்கள் மூலம் சொல்லப்படும் சாதிகள் சம்பிரதாயங்கள் தான். இதில் புறக்கணிப்பதையிட்டு நான் சந்தோசப்படுகின்றேன்.

தமிழர்களுக்கென்று ஒரு தனித்துவமான இறைபொருள் வழிபாடு வணக்கமுறை இருக்கின்றதென்று ஆழமாக நம்புகின்றவன் நான். அது ஆரியன் சொல்லும் பித்தலாட்டங்களுக்கு உடன்படாதவைகள். தென்னாட்டு சித்தர்கள் வழியிலானவை.

எமது தனித்துவமான வாழ்வியல் ஆரியத்தால் சிதைக்கப்பட்டது. திரிக்கப்பட்டது. திருமூலர் பாடல்கள் முதல் திருவள்ளுவருக்கு பூணூல் போட்டு காட்டியது வரை எமது தனித்துவத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள். இப்படி ஆயிரம் ஆயிரம் விசயங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

-----------------------------------------------------

இராமாயணம்.. வெறும் கற்பனை.. புளுகு என்றதை நாங்கள் ஏற்கல்ல. இராமாயணத்தில் எமது வரலாற்றுத் தொன்மையை அடையாளம் காட்டக் கூடிய புவியியல் மற்றும் நாகரிக முறைமைகளுக்கான ஆதாரங்களைப் பெற முடியும் என்று நம்புறம். அதற்கு அறிவியல் சார்ந்த ஆய்வுகள் அவசியம் என்றும் கூறுகின்றோம்.- நெடுக்கால போவான்

-----------------------------------------------------------

உங்களிடம் இப்படி ஒரு கருத்து இருப்பது போல் என்னிடமும்சில கருத்துக்கள் இருக்கின்றது.

நான் இராவணனை எனது மூதாதையராக நம்புகின்றேன். அவன் ஒரு காலத்தில் எனது தேசத்து மன்னன் சிவ பக்தன் என்று நம்புகின்றேன். அவனை அசுரன் அடுத்தவன் பொண்டாடியில் ஆசைப்பட்டவன் அரக்கன் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

சித்தர் ஏடுகளின் படி பூமியின் மத்திய கோட்டுக்கு நேரே உள்ள எமது பிரதேசத்தில் வளரும் மூலிகைகளுக்கு தான் அதிக சக்தி சமச்சீரான சூரிய ஒளியின் பிரகாரம் கிடைக்கின்றது. இந்த மூலிகைகள் எல்லாம் சஞ்சீவி மலையை துர்க்கி கொண்டு அனுமார் வரும் போது கொட்டு பட்டவை என்று நிறுவ வெளிக்கிடும் புலுடாக்களுக்கு உடன்படுவது எனது வாழ்வியல் பிரதேசத்தை அவமதிப்பதாகும்.

நாம் செய்த சிவ வழிபாடு வேறு. அது சைவத்திலும் சேராது பார்ப்பனியத்திலும் சேராத சித்தர் வழியிலானவை. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம் என்ற சித்தர்வழியில் கட்டப்பட்ட சிவதலங்கள் எமது முதாதையர்களின் சொத்துக்கள். மனித உடலை கோயில் வடிவில் கட்டிய எமது முதாதையர்களிடம் இருந்து எத்தனையோ அற்புதங்களை சூறையாடிய ஆரியத்துக்கு வக்காலத்து வாங்க என்னால் முடியாது.

நான் இதில் அதிகம் எழுத விரும்பவில்லை. ஒவ்வொரு புராணமும் ஏன் எழுதப்பட்டது. ஏன் சிவ தத்துவம் அழிவுக்கு உட்படுத்தப்பட்டது என்பதற்கு நிறைய விளக்கங்களும் விடைகளும் உண்டு. இந்த ராமாயணம் ஏன் உருவாக்கப்பட்டது அதன் நோக்கம் என்ன என்றது உங்களுக்கு இருக்கும் கருத்துக்கும் எனக்கு இருக்கும் கருத்துக்கும் நிறைய இடைவெளி உண்டு. ஆனால்நீங்கள் அதிலிருந்து விஞ்ஞான ஆராய்ச்சி செய்ய போறிங்கள் ஆவ்வாறான ஆராய்ச்சிகள் தமிழருக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

----------------------------------------------------------------------------

நீங்கள் ஆரிய திராவிட வடிவத்தில் இராமாயணத்தை நோக்குவதால்.. நிச்சயம் எமது நிலைப்பாட்டுக்கு உங்களால் இசைய முடியாது. அதனால் பாதிப்படப்போவது.. ஆரியர்.. திராவிடர் என்று நீங்கள் இனங்காட்டுபவர்கள் அல்ல. தமிழர்கள் ஆகிய நாங்கள் தான்.- நெடுக்கால போவான்

-------------------------------------------------------------------------

திராவிட அடயாளமும் இன்றி ஆரிய அடயளமும் இன்றி தமிழர் என்று ஒரு கோட்பாட்டில் நீங்கள் நிற்கின்றீர்கள். அவ்வாறு நின்று கொண்டு "ராமாயணம் வெறும் கற்பனை புளுகு என்பதை ஏற்கவில்லை" என்று கூறுகின்றீர்கள். ஆரிய திராவிட வடிவத்தில் நாங்கள் ராமாயணத்தை நோக்குகின்றோம் என்றும் சொல்கின்றீர்கள். நாம் எமது கடவுள் வழிபாடுகள் என்று நீண்ட காலம் வாழ்ந்தோம். ஈழத்தில் ஆரியம் தனது கபடத்தனத்தை அரங்கேற்ற எம் முன்னோர்கள் விடவில்லை. இருந்தும் ஆரியத்தின் கபடத்தனம் சைவத்துள் புகுந்து தனது வேலையை காட்டிக்கொண்டிருக்கின்றது. இதற்கு காரணமும் உங்கள்பார்வையில் அடங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமானம் ஒன்றில் இருந்து பதிவு செய்யப்பட்ட காட்சியொன்று..

Link to comment
Share on other sites

இந்தப் படத்தையும் சும்மா பாருங்கோ.. பாலத்தாலை பெரிய கூட்டமே வருது.. அதனாலைதான் பார்க்க Motorway மாதிரி இருக்கோ தெரியவில்லை..

stonebridge.jpg

ஆமாம் பெரிய கூட்டமே வருது அதற்காக மோட்டர்வேயுடன் ஓப்பிட்டு அதை கேவலபடுத்தாதையுங்கோ.................. :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகன்.. நீங்கள் ஆரிய படைப்புக்கள் என்று புறக்கணிப்பதால் தான் அவை ஆரியர்களுக்கு சாதகமான பிரச்சார இலக்கியங்களாக உருவகிப்படுகின்றன.

நீங்கள் ஆரிய திராவிட வடிவத்தில் இராமாயணத்தை நோக்குவதால்.. நிச்சயம் எமது நிலைப்பாட்டுக்கு உங்களால் இசைய முடியாது. அதனால் பாதிப்படப்போவது.. ஆரியர்.. திராவிடர் என்று நீங்கள் இனங்காட்டுபவர்கள் அல்ல. தமிழர்கள் ஆகிய நாங்கள் தான்.- நெடுக்கால போவான்

----------------------------------------------------------------

தமிழர்கள் கூறுபட்டு பிளவுபட்டு கிடப்பதே இந்த புராணங்கள் இதிகாச சாத்திரங்கள் மூலம் சொல்லப்படும் சாதிகள் சம்பிரதாயங்கள் தான். இதில் புறக்கணிப்பதையிட்டு நான் சந்தோசப்படுகின்றேன்.

தமிழர்களுக்கென்று ஒரு தனித்துவமான இறைபொருள் வழிபாடு வணக்கமுறை இருக்கின்றதென்று ஆழமாக நம்புகின்றவன் நான். அது ஆரியன் சொல்லும் பித்தலாட்டங்களுக்கு உடன்படாதவைகள். தென்னாட்டு சித்தர்கள் வழியிலானவை.

எமது தனித்துவமான வாழ்வியல் ஆரியத்தால் சிதைக்கப்பட்டது. திரிக்கப்பட்டது. திருமூலர் பாடல்கள் முதல் திருவள்ளுவருக்கு பூணூல் போட்டு காட்டியது வரை எமது தனித்துவத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள். இப்படி ஆயிரம் ஆயிரம் விசயங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

-----------------------------------------------------

இராமாயணம்.. வெறும் கற்பனை.. புளுகு என்றதை நாங்கள் ஏற்கல்ல. இராமாயணத்தில் எமது வரலாற்றுத் தொன்மையை அடையாளம் காட்டக் கூடிய புவியியல் மற்றும் நாகரிக முறைமைகளுக்கான ஆதாரங்களைப் பெற முடியும் என்று நம்புறம். அதற்கு அறிவியல் சார்ந்த ஆய்வுகள் அவசியம் என்றும் கூறுகின்றோம்.- நெடுக்கால போவான்

-----------------------------------------------------------

உங்களிடம் இப்படி ஒரு கருத்து இருப்பது போல் என்னிடமும்சில கருத்துக்கள் இருக்கின்றது.

நான் இராவணனை எனது மூதாதையராக நம்புகின்றேன். அவன் ஒரு காலத்தில் எனது தேசத்து மன்னன் சிவ பக்தன் என்று நம்புகின்றேன். அவனை அசுரன் அடுத்தவன் பொண்டாடியில் ஆசைப்பட்டவன் அரக்கன் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

சித்தர் ஏடுகளின் படி பூமியின் மத்திய கோட்டுக்கு நேரே உள்ள எமது பிரதேசத்தில் வளரும் மூலிகைகளுக்கு தான் அதிக சக்தி சமச்சீரான சூரிய ஒளியின் பிரகாரம் கிடைக்கின்றது. இந்த மூலிகைகள் எல்லாம் சஞ்சீவி மலையை துர்க்கி கொண்டு அனுமார் வரும் போது கொட்டு பட்டவை என்று நிறுவ வெளிக்கிடும் புலுடாக்களுக்கு உடன்படுவது எனது வாழ்வியல் பிரதேசத்தை அவமதிப்பதாகும்.

நாம் செய்த சிவ வழிபாடு வேறு. அது சைவத்திலும் சேராது பார்ப்பனியத்திலும் சேராத சித்தர் வழியிலானவை. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம் என்ற சித்தர்வழியில் கட்டப்பட்ட சிவதலங்கள் எமது முதாதையர்களின் சொத்துக்கள். மனித உடலை கோயில் வடிவில் கட்டிய எமது முதாதையர்களிடம் இருந்து எத்தனையோ அற்புதங்களை சூறையாடிய ஆரியத்துக்கு வக்காலத்து வாங்க என்னால் முடியாது.

நான் இதில் அதிகம் எழுத விரும்பவில்லை. ஒவ்வொரு புராணமும் ஏன் எழுதப்பட்டது. ஏன் சிவ தத்துவம் அழிவுக்கு உட்படுத்தப்பட்டது என்பதற்கு நிறைய விளக்கங்களும் விடைகளும் உண்டு. இந்த ராமாயணம் ஏன் உருவாக்கப்பட்டது அதன் நோக்கம் என்ன என்றது உங்களுக்கு இருக்கும் கருத்துக்கும் எனக்கு இருக்கும் கருத்துக்கும் நிறைய இடைவெளி உண்டு. ஆனால்நீங்கள் அதிலிருந்து விஞ்ஞான ஆராய்ச்சி செய்ய போறிங்கள் ஆவ்வாறான ஆராய்ச்சிகள் தமிழருக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

----------------------------------------------------------------------------

நீங்கள் ஆரிய திராவிட வடிவத்தில் இராமாயணத்தை நோக்குவதால்.. நிச்சயம் எமது நிலைப்பாட்டுக்கு உங்களால் இசைய முடியாது. அதனால் பாதிப்படப்போவது.. ஆரியர்.. திராவிடர் என்று நீங்கள் இனங்காட்டுபவர்கள் அல்ல. தமிழர்கள் ஆகிய நாங்கள் தான்.- நெடுக்கால போவான்

-------------------------------------------------------------------------

திராவிட அடயாளமும் இன்றி ஆரிய அடயளமும் இன்றி தமிழர் என்று ஒரு கோட்பாட்டில் நீங்கள் நிற்கின்றீர்கள். அவ்வாறு நின்று கொண்டு "ராமாயணம் வெறும் கற்பனை புளுகு என்பதை ஏற்கவில்லை" என்று கூறுகின்றீர்கள். ஆரிய திராவிட வடிவத்தில் நாங்கள் ராமாயணத்தை நோக்குகின்றோம் என்றும் சொல்கின்றீர்கள். நாம் எமது கடவுள் வழிபாடுகள் என்று நீண்ட காலம் வாழ்ந்தோம். ஈழத்தில் ஆரியம் தனது கபடத்தனத்தை அரங்கேற்ற எம் முன்னோர்கள் விடவில்லை. இருந்தும் ஆரியத்தின் கபடத்தனம் சைவத்துள் புகுந்து தனது வேலையை காட்டிக்கொண்டிருக்கின்றது. இதற்கு காரணமும் உங்கள்பார்வையில் அடங்கியுள்ளது.

நீங்கள் ஆரிய திராவிட இனவெறியோடு அணுகுவதை நாங்க அறிவியல் வெறியோடு அணுகின்றோம்.

காவியங்கள் 100% சான்றுகளை உமிழ்கின்றன என்பதல்ல எமது கோரிக்கை. காவியங்கள் காட்டும் அடையாளங்களை வரலாற்றுச் சான்றுகளை இனங்கண்டு.. அறிவியல் கொண்டு ஆராய்ந்து.. அதன் பின்னர் தான் முடிவெடுக்கனும்.. அது எமது இனத்துவ வரலாற்றுச் சான்றாகும் என்று. இதைத்தான் குறிப்பிடுகின்றோம். 3 பக்கத்துக்கு. ஆனால் திரும்பத் திரும்ப ஆரியப் பாதிப்பு பார்பர்னியப்பாதிப்பு என்று வெறும் கற்பனைக் கோட்பாடுகளிற்கு பயந்து நடுங்கும் நிலையில் தமிழர்கள் பலவீனமானவர்களா என்றே சிந்திக்கத் தோன்றுகிறது.

ஆங்கில இலக்கியங்கள் ஆகட்டும் பிறமொழி இலக்கியங்கள் ஆகட்டும் எங்கும் மனிதக் கற்பனைகள் விஞ்சித்தான் இருக்கும். சில மனித சிந்தனைகள் ஆதிக்கம் செய்யத்தான் செய்யும். இக்களத்தில் பார்ப்பர்ன..ஆரிய எதிர்ப்பு என்பது முதன்மை பெறுவதுபோல. எமக்கு அவை தேவையில்லை. எமக்குத் தேவை அறிவியல் கொண்டு ஆராயக் கூடிய விடயங்களை இனங்காண்பதுவும் ஆராய்வதும் வரலாற்றுச் சான்றாக்குவதும்.

ஆரிய திராவிட ரீதியில் நோக்கினால் தமிழ் இலக்கியங்கள் என்று சுத்தமா ஒன்றும் நமக்குக் கிடைக்காது. சுத்தமா நமக்கு வரலாற்றுச் சான்றும் இருக்காது. தமிழர்கள் ஆரிய திராவிட மாயக் கோட்பாட்டுக்கு முந்தியவர்காள் என்ற நிறுவல் அவசியமாகிறது. அதை நோக்கித்தான் எமது தேடல். எமது தேடல் ஆரிய இலக்கியத்துக்குள்ளும் இருக்கலாம்.. திராவிட இலக்கியத்துள்ளும் இருக்கலாம்.. ஆங்கில இலக்கியத்துள்ளும் இருக்கலாம்.. கிரேக்க பாரசீக இலக்கியத்துள்ளும் இருக்கலாம். அறிவியல் கண்ணோட்டம் உள்ள எவரும் இதைத் தவறு என்று கொள்ளமாட்டார்கள்.

சிகரட்டை உற்பத்தி செய்பவனில் குற்றமா புகைப்பிடிப்பவனில் குற்றமா...??! சாதி.. வர்க்கப்பிரிவினைகள்.. மத மூடநம்பிக்கைகள்... சமூக மூடநம்பிக்கைகள்.. ஆரிய திராவிட பாகுபாடுகள்.. பார்பர்னக் கோசங்கள் எல்லாமே அறிவிலித்தனமானவை. அறிவியலுக்கு அப்பால் பட்டவை. அவற்றை கருத்துக்கு அப்பால் புறக்கணிக்கனும். அதற்காக காலக்கண்ணாடிகளான இலக்கியங்களில் உள்ள உண்மைகளையும் நிராகரிக்கனும் என்றில்லை. அவை உண்மையா என்று ஆராயவும் அறிவியலூடு கண்டறியவும் முனைய வேண்டும். அதில் எந்த கோட்பாட்டுச் சார்பு நிலையும் இருக்க முடியாது.

தமிழர் - சிங்களவர் என்ற பாகுபாட்டை ஏற்கும்.. தங்கள் போன்றோர்.. இலக்கியங்கள் காட்டும் பாகுபாடுகளை கண்டு அச்சமடைவதும் தான் ஏன்..??!

மனிதரில் பாகுபாடுகள் இல்லாத நிலை என்பது மிக அரிது. என்னதான் மனித உரிமைகளை உச்சரித்தாலும். அதற்காக இலக்கியப் புறக்கணிப்பு என்றால்.. நடைமுறை உலகில் கூட பல வற்றைப் புறக்கணிக்கனும். ஏன்.. நீங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளையும் புறக்கணிச்சு தாயகம் திருப்பனும்.. செய்வீர்களா...??! அதுக்கு மனசு வராது. ஆனால் இலக்கிய அடிப்படைகள் சிலவற்றை கொண்டு அறிவியல் அணுகுமுறைக்கு சாத்தியத்தை சுட்டிக்காட்டினால்.. உடனே சாதியை ஊட்டும்.. இராமாயணம்.. பார்பர்னனின் எச்சம் இராமாயணம்.. என்று முழு சாதி மற்றும் வர்க்க வெறியை இன்னும் காவித் திரிவது.. நீங்கள் என்பதை உணர்த்துறீங்க. இதனால் தான் தமிழர்கள் இன்னும் வரலாற்று ஆதாரங்கள் இன்றி சுதந்திர தேசத்துக்கான அடையாளமின்றி.. உலகெங்கும் அகதியாகி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எமது கவிஞர்களின் திறமைகளை இனங்காணாமல்.. அதற்குள் உள்ள குறைகளில் தொங்கி நின்று.. அதில் விவாதம் செய்து விளம்பரம் தேடுவதை விட தமிழர்கள் ஒரு மண்ணாங்கட்டியும் செய்தது கிடையாது. இவர்கள் அறிவைப் பயன்படுத்தி.. கண்டுபிடிச்சு.. உருப்பட்டு...தமிழீழம்..கிடைச்ச

Link to comment
Share on other sites

ஆரிய இனம் என்பது உண்மையில் இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் அப்படி தங்களை அழைக்கின்ற ஒரு மக்கள் கூட்டம் இருக்கின்றது என்பது உண்மை.

அப்படி ஆரியர் என்று சொல்லிக் கொள்பவர்கள் பாரத மற்றும் ஈழ நாட்டின் மண்ணின் மக்களை வென்ற வரலாற்றை மிகைப் படுத்தியும், மண்ணின் மக்களை மோசமான முறையில் சித்தரித்தும் எழுதப்பட்டதுதான் இராமாயணம்.

"இருவர்" என்று ஒரு திரைப்படம் வந்தது. படம் தொடங்கும் போது "இது ஒரு கற்பனைக் கதை, இதில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையானவை" என்று போடப்பட்டது. ஆனால் படம் பார்த்த அனைவருக்கும் தெரியும், அந்தப் படத்தின் பாத்திரங்கள் எவர்கள் என்று.

"இருவர்" படமும் இராமாயணம் போன்று திராவிட கட்சிகளின் வரலாற்றை மோசமான முறையில் திரிவு படுத்தியும், சிறுமைப்படுத்தியும் வெளிவந்த ஒரு திரைப்படம்தான்.

"இருவர்" படத்தை பார்த்த ஒருவன் "அது வெறும் கற்பனைக் கதைதான்" என்று உண்மையிலேயே நம்புவானாக இருந்தால் அவன் ஒரு ஏமாளியாகத்தான் இருப்பான். அவனைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடியும்.

வரலாறு என்பது எப்பொழுதும் வெற்றி பெற்றவர்களின் வரலாறுதான்.

நெடுக்காலபோவான் சொல்கின்ற புவியியல் ஆதாரங்களை கண்டுபிடிப்பதை விட, இராமாயணம் சொல்கின்ற அசுரர்கள் யார் என்று கண்டுபிடிப்பது மிக இலகுவானது.

அப்படி கண்டுபிடித்த தமிழர்கள் இராமாயணம் பற்றி கோபம் அடைவது இயல்பு. அதே வேளை இராமனின் வழித் தோன்றல்களும், அனுமனின் வழித்தோன்றல்களும் இராமயணத்தையும் அது சொல்கின்ற கோட்பாட்டையும் காப்பதற்கு கடுமையாக பாடுபடுவதும் இயல்பு.

Link to comment
Share on other sites

நீங்கள் ஆரிய திராவிட இனவெறியோடு அணுகுவதை நாங்க அறிவியல் வெறியோடு அணுகின்றோம்.- நெடுக்காலபோவான்

-------------------------------------------------------------------------------------

இனவெறியோடு அணுகுவது நாமல்ல. ஆரியத்துக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் தான். உங்கட வக்காலத்து வாங்கலுக்கு இப்போ அறிவியலை இழுக்கின்றீர்கள் அதுதான் உண்மை

சிங்களவனிடம் எவ்வாறு இனவெறி இருக்கின்றதோ அவ்வாறே இந்திய ஆழும் வர்க்கமான ஆரியத்திடமும் உள்ளது. அதன் விழைவுகளை ஒவ்வெரு ஈழத்தமிழன் சாவிலும் காண்கின்றோம்.

ஆரியம் திராவிடம் எண்டதுக்கு அப்பால் தமிழர் என்றும் அறிவியல் என்றும் அழிவுக்கும் அடக்குமுறைக்கும் உட்படும் தரப்பிலிருந்து நீங்கள் கூறும் தமிழர் என்ற உணர்வு இந்திய ஆழும் வர்க்கத்துக்கு இருக்கின்றதா? இருந்தால் எம்மீது இரக்கம் காட்டாமல் சிங்களத்துடன் சேர்ந்து எம்மை அழிப்பார்களா? அழிக்க துணை போவர்களா? சுப்பிரமணியம் சுவாமியாகட்டும் சோ ராமசாமி மற்றும் அனைத்து பார்ப்பன நாளேடுகளாக்டும் ஆரியம் திராவிடஎன்ற உணர்வுக்கப்பால் தமிழர் என்று ஈழத்தமிழனை அனுசரிக்கின்றதா? இனவெறி யாரிடம் உள்ளது?

தமிழர் என்ற பொதுப்பார்வையில் ஒர் தலித்தையும் ஒரு பிராமணனையும் அணுகும் உங்களின் போக்குக்கு அறிவியலை இழுக்கின்றீர்கள். ஒரு தலித்தை தொட்டால் குளித்து தீட்டு நீக்க வேணும் என்றதுக்கு உங்கள் அறிவியல் விளக்கம் தான் என்னவோ? மனிதாபிமானமற்ற வகையில் இனத்தை இறைவன் பெயரால் கூறுபோட அடித்தளமிடும் புராணங்களை பற்றி கதைத்தால் நாம் இனவெறியர்களா?

நான் ஏற்கனவே வரலாற்று ரீதியாக சுட்டிக்காட்டியுளளேன் சிங்களவனின் தனித்தன்மையும் பேரினவாத மனப்பாங்கும் தாமும் ஒரு ஆரியன் என்ற கோட்பாட்டை நிறுவி எழுந்தது என்று. அன்றே சிங்களவன் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்றும் அது இரண்டும் தமிழர் என்று ஒன்று சேர முடியாது என்று தெளிவாக தெரிந்திருந்தான். இன்று அவன் தமிழரை அழித்தொழித்து எவ்வளவோ அவலங்களை தருகின்ற போதும் இந்திய ஆழும்வர்கம் அவனுக்கு துணை போகவே செய்கின்றது. இன வெறி எம்மை எவ்வாறு ஏறி மிதிக்கின்றது என்ற அடிப்படையில் ஒரு பிரச்சனையை அணுக முற்படுகின்றவனை இனவெறியன் என்று அர்த்தப்படுத்துமளவுக்கு உங்களுக்கு என்ன பிரச்சனை?

இராமனும்அவனைப்பற்றி இராமாயணமும் ஆரிய உயர் வர்ககத்தை அடயாளப்படுத்கின்றது. சிங்கள விஜயனும் அவன் வம்சமும் ஆரிய உயர்வர்கம் என்ற கருத்துருவாக்கம் அழமான சிங்களதில் பதியப்பட்ட ஒன்று . மிதிபடும் நாங்கள் ராவணன் வழி என்றும் அசுர அரக்க குலம் என்றும் சித்தரிக்கப்பட்ட ஒன்று இந்த நிலையில் இராமயணம் இராமர் பாலம் என்பதும் அதன் அறிவியல் சார்ந்த பார்வையும் பற்றும் எமக்கு ஏற்படுவது எவ்வளவு ஆபத்தானது என்ற பார்வை உங்களுக்கு எப்படி சொன்னாலும் புரியப்போவதில்லை.

ஈழத்தமிழனின் அவல வாழ்வின் பின்புலத்தில் இந்த இரு உயர்வர்கத்தின் கரங்களும் எவ்வவு தூரம் படிந்துள்ளது என்பதை நிதர்சனமாக உணர்ந்தும் உங்களுக்கு புரியப்போவதில்லை. புரியவைக்கவும் முடியாது. உங்களுக்கு மட்டு மல்ல அவன் அசுர குலம் அரக்க குலம் என்று மிருகத்தை விட கேவலமாக பார்க்கும் போதும் தன்மானத்தை துறந்து கம்பரசம் பருகுவதன் ஊடாக மேம்பாடு அடைந்து விடலாம் அந்தஸ்து அடைந்து விடலாம் என்று கம்பன் கழக ஜெயராச் போட்ட கூத்துக்கள் கொஞ்சமல்ல. அந்த கூட்டத்துக்கும் புரியப்போவதில்லை.

உங்கள் அறிவியல் வெறி தமிழனை விமோசனப்படுத்தும் என்பதற்கு எதுவித முகாந்திரமும் இல்லை. அறிவியலை நான் நேசிக்கின்றேன் ஆனால் அது எனது இனத்துக்கு எதிராக ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கி விடும் என்று அஞ்சுகின்றேன். ஏனெனில் ராமாயணத்தில் இருந்து அறிவியலை ஆராய்ச்சியை தொடங்க முற்படுகின்றீர்கள். இதற்கு உங்களால் சூட்டப்பட்ட பெயர் இனவெறி. இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

* எம்மையும் ஆரியரை இனைத்திருப்பது இது போன்ற கதைகள்தானுங்கோ.....

ராமாயணம் ஒரு மிகைபடுத்தப்பட்ட உண்மைகதை. அதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் அது இலங்கையில் நடக்கவில்லை.. பத்து திராவிட படையையும் இவர்கள் தாண்டி வந்திருக்கமுடியாது. தலைவன் இறந்துவிட கிளை அரசுகள் ஆரியருடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இருப்பதாக டீல் போடப்பட்டுள்ளது... அடிமைகளாக இருக்க அனுமதிக்கப்பட்டது. சகல சின்னங்களும் அழிக்கப்பட்டது. முக்கிய அரிய போர் படைகள் போர் முடிந்த இடத்தோடு நின்றுவிட்டார்கள், அல்லது போய் விட்டார்கள்.. ஆனால் வந்ததவர்கள் எம்மில் கலந்துவிட்டார்கள்.... இதனால்தான் மத்தியில் வசிக்கும் சிலருக்கு ஆபிரிக்க ஆண் (Y) குரோமோசோம் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

நம்ம கார்மேகவண்ணன் வாழ்ந்த இடத்தில் கடலடியில் பாரிய கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஒரு வெள்ளையர் கண்டுபிடித்த (fossilized) வாள்பிடியை கார்பன் டேட்டிங் செய்தபோது அது ஓன்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எண்று அறியப்பட்டது.

அதன்பின் (2001) வெளி ஆய்வாளர்கள் அங்கே செல்வது தடைசெய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இனவெறியோடு அணுகுவது நாமல்ல. ஆரியத்துக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் தான். உங்கட வக்காலத்து வாங்கலுக்கு இப்போ அறிவியலை இழுக்கின்றீர்கள் அதுதான் உண்மை...................... ......... ....
சுகன் அண்னை நீங்கள் எழுதினத வாசிக்க மூச்சு வாங்குது, எழுதின உங்களுக்கு எப்பிடி.... ஆரியம் திராவிடம் பிராமணம் தலித்து(ஓடர் மாத்தியிருக்கிறன்) உயர்ந்தவர்க்கம் தாழ்ந்தவர்க்கம் எண்டு எல்லாத்தயும் தொட்டு அறிவியல் கொண்டு வெளுத்து வாங்கியிருக்கிரியள்.உங்களுக
Link to comment
Share on other sites

கொழுப்புதானே அதி.... எனக்கெப்படி தெரியும்.

நாம் ஆரியரிடம் இழந்ததை விட இந்துக்கள் முஸ்லீம்களிடம் இழந்தது அதிகம். அடயாளங்கள் அளிக்கப்பட்டு விட்டன.. சேதுசமுத்திர திட்டம் தமிழ்தேசத்திற்கு நல்லது. பார்ப்பணர் கண்களில் பகை தெரிகின்றது.. அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

விஞ்ஞான ரீதியில் கோட்பாடு, கொள்கை.. விதி.. என்ற நிலைகளில் கோட்பாடுகள் ஆதாரங்களால் நிறுவவும்.. நிராகரிக்கப்படவும் முடியும்.

ஆமாம். ஒரு இனத்தின் இருப்பு என்பதை தொல்பொருளியல் ரீதியாகவும் நிறுவலாம். அதன் இலக்கிய வளம், மொழியாற்றல், மூலமும் நிறுவலாம். பண்பாட்டு சிதைவுகளை மிக நுணுக்கமாக ஆராய்வதன் மூலம் அதன் மூல வடிவங்களை கண்டுகொள்ள முடியும்.

ஆரியக் கோட்பாடு என்பது ஆரிய இனம் என்ற ஒரு கற்பனை இனம் சார்ந்து எழுவதால் அதை நிராகரிக்கக் கூடிய மனித டி என் ஏ ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் செய்யப்பட்டு வருகின்றன. இவை தொடர்பில் முன்னர் பல தடவை இக்களத்தில் ஆதாரங்களுடன் தந்துள்ளோம். பிறரும் தந்துள்ளனர்.

ம்.. :o ஆரிய இனம் கற்பனையாக கூட இருக்கட்டுமே. ஆனால் ஆரிய கோட்பாடு என்பது முற்று முழுதான உண்மை. வெறுமனே ஆரிய இனம் என்று தேடியலைவதை விட்டு ஆரிய கோட்பாடுகளை பகுப்பாய்வு செய்யுங்கள். பல விடயங்கள் வெளிவரும். எங்கள் வாழ்க்கை முறைகளிலும் சரி , வழிபாட்டு முறைகளிலும் சரி அதன் தாக்கம் "சிறிது சிந்தித்தாலும்" வெள்ளிடை மலையாக தெரியும்.

மீண்டும் மீண்டும்.. நீங்கள் ஒரே இடத்தில் தான் நிற்கிறீர்கள். நாம் ஏலவே குறிப்பிட்டது போல இராமன் அனுமன் பற்றிய தெய்வீகம்.. இராவணன் பற்றிய அரக்கியம் பற்றிய ஆய்வை.. அல்லது தகவல் புகுத்தலை செய்ய நாம் இங்கு கருத்தைச் சொல்லேல்ல. அதை இலக்கியமாக பார்த்து ரசிப்பவர்கள் ரசிக்கட்டும்.. புறக்கணிப்பவர்கள் புறக்கணிக்கட்டும். எமக்கு அவை தேவையில்லை.

ஹி ஹி.. :o:D ஆமாம். எமது பண்பாட்டு கலாச்சாரத்தை சிதைக்கும் இந்த புழுகு மூட்டைகளை தூக்கி தூர வீசுவதே மிகச் சரியான செயல். யாரோ எழுதிய பொய் பூச்சாண்டியை ஆண்டாண்டு காலமாக நாம் எம் முதுகில் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. அது உண்மையை சொல்லும் என நினைப்பது குழந்தைத்தனமானது.

எமது பொன்னான காலத்தை எமது அரும் பெரும் தமிழ் இலக்கியங்களை ஆராய்வதிலும் அதனூடு எமது பண்பாட்டு தொடர்நிலைகளை நிறுவுவதுமே எமது சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமை. அதை விடுத்து "பரந்த மனப்பான்மை", " வந்தாரை வாழவைத்தல்" போன்ற முட்டாள்தனமான கொள்கைகளை பின்பற்றி இன்னும் இருப்பதை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.

இலக்கியம் தாங்கி வரும் விடயங்களுக்குள் வரலாற்று சான்றுகள் உண்டா என்று தேடுவதே எமது இலக்கு. கம்பராமாயணம் பல புவியியல் சான்றுகளை உள்ளடக்கியுள்ளது. கற்பனைக்கு வெளியில் என்ற உண்மையை நீங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அது வெளிப்படையும் கூட. அதில் ஒன்றுதான் இந்தப் பாலம். நாம் அதுகுறித்த ஆய்வைத்தான் கோரி நிற்கின்றம். இப்படியான வரலாற்றுச் சான்றுகளாக அமையக் கூடிய இலக்கிய எடுத்தாடல்களை ஆய்வதும் அறிவியல் கொண்டு நோக்குவதும் தவறே அல்ல.

மிகவும் நல்லது. முதலில் இராமாயணம் என்ற கதை எழுதப்பட்ட ஆண்டை அண்ணளவாகவேனும் கணிக்க முடியுமா? அப்படியாயின் அதற்கு முந்திய காலத்தின் தமிழ் இலக்கியங்களும் இருந்திருக்க வேண்டும். அவற்றை தேடிப்பிடியுங்கள். தமிழ் சமூகமே தலை தாழ்த்தி வணங்கும்.

வீணே "வேதங்கள்", "வேதாந்தங்கள்ள்" எனும் புரட்டுக்களை ஆராய்ந்து அவற்றிற்கு விஞ்ஞான முலாம் பூசி இன்னும் 2000 வருடம் விஞ்ஞானத்தின் பெயரால் அவற்றினை வாழவைக்க முயல வேண்டாம். உண்மையில் வேதாந்தங்கள் அடிப்படையற்றவை. தர்க்க ரீதியக படுபிழை என நிறுவலாம். சதாரண மக்கள் ஆழ்ந்து சிந்திக்க தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக, அவர்களின் தலையில் இந்த அழுக்கு மூட்டைகளை ஏற்றுதல் மிகப் பெரும் மனித உரிமை மீறல். :D:D

ஏவாளின் கதையை நீங்கள் நம்புறீங்களோ இல்ல மக்கள் நம்பினமோ இல்லையோ.. ஆனால் விஞ்ஞானிகள் அதை ஒரு ஆய்வுக்குரிய விடயத்தின் தேவைக்காக பாவித்து அறிவியல் ரீதியா அதில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை ( உ+ம்: பறவைகளின் வகைகள்) அணுக முற்படுகின்றனர். அதனால் அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. வரலாற்றுத் தொன்மை பற்றிய நம்பகத்தன்மை குறித்த சான்றுகள் கிடைக்கின்றன. ஆதாம் ஏவாள் கதையை.. அவர்களின் உருவாக்கத்தை நம்பச் சொல்வதல்ல ஆய்வின் நோக்கம். அந்தக் கதையில் கையாளப்பட்ட ஏற்புடைய விடயங்கள் தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வின் விளைவே பப்புனியுகினிய ஆய்வின் முடிவு..!

ம்.. :D சில மதம் பிடித்த விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்கள் இப்படியெல்லாம் செய்துகொண்டுதான் இருப்பார்கள். ஆதாம் ஏவள் என்ன, எந்தவொரு சமயத்தையும் நான் நம்பவில்லை. இதை இந்தத் திரியில் விரிவாக எழுத முடியவில்லை. முதலில் சமயம் என்பது வெறும் கற்பனை என்பதை உணருதல் வேண்டும். அதற்கு சுயமாக சிந்திக்கும் தன்மையை வளர்க்க வேண்டும். (We often see the mind in a very superficial depth. One has to go much deeper in his mind to find something new.). விஞ்ஞானம் சில நேரங்களில் அரசியல் வாதிகளாலும், சமயவாதிகளாலும் விலைபேசப்படுகிறது. :angry:

Link to comment
Share on other sites

http://www.newtechusa.com/ppi/pressroom.asp#higher

http://www.newtechusa.com/ppi/talent.asp

இது முடியும் என்றால்

ஏன் இது முடியாது என்று பெரியாரிஸ்ட்கள் விதண்டவாதம் பண்ணுகிறார்கள்? :o

http://www.youtube.com/watch?v=7P7bSdGzbBk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த பாலத்தை சேது பாலம், ராமர் பாலம், அனுமன் பாலம் என்றழைக்கின்றனர். இந்திய வரைபடத்தில், இந்த பாலத்தை ஆதம் பாலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை 18 மைல் தூரத்துக்கு கடலுக்கு அடியில் இப் பாலம் உள்ளதை செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் விளக்குகிறது.

பாக் நீரிணைப்பில் உள்ள இப் பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது. இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த பாலத்தின் வரலாற்று தொன்மையை ஏற்கெனவே விளக்கியுள்ளது. இப்பாலம் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகவும், பிரளயம் ஏற்பட்ட பின்னர் இப்பாலம் கடலுக்கடியில் மூழ்கி விட்டதாகவும் ஆய்வுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் உள்ள இப்பாலம், கோரல் ரீப் (இர்ழ்ஹப்நற்ர்ய்ங்) என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பல வசிப்பதோடு, இனப்பெருக்கம் செய்கின்றன.

திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கும் இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர். கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் முழங்கால் அளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்து செல்லலாம். படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல வழி ஏற்படுத்துவதற்காக, இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

கற்கள் மிதக்கும

அதிசயம

இப்பாலத்தில் உள்ள கற்களைப் பெயர்த்து எடுத்தால், அவை கடலில் மூழ்காமல் மிதக்கின்றன. இந்த கற்களை ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் அருகே உள்ள மடத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். அதிசயமான இக்கற்களை பக்தர்கள் வாங்கிச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் இதற்கு ஆதம் பாலம் என்று பெயரிட்டனர். இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும், ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஒருவரின் சமாதி ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது. இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஆபில்-ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் என்று விவரிக்கின்றனர்.

இலங்கை மன்னர் ராவணன் கடத்திய சீதா பிராட்டியை மீட்க, ராமர் தலைமையில் அனுமன் அமைத்த பாலம் இது என்று கூறும் இலங்கை வாழ் மக்கள், இதை அனுமன் பாலம் என்று அழைக்கின்றனர்.

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார். ராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டிய கேமன் இந்தியா என்ற நிறுவனம், ஆதம் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது.

(வாசித்ததில் கிடைத்தது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.newtechusa.com/ppi/pressroom.asp#higher

http://www.newtechusa.com/ppi/talent.asp

இது முடியும் என்றால்

ஏன் இது முடியாது என்று பெரியாரிஸ்ட்கள் விதண்டவாதம் பண்ணுகிறார்கள்? :o

http://www.youtube.com/watch?v=7P7bSdGzbBk

குறுக்காலபோறண்னே எனக்கு ராமாயணம் படிப்பிச்சவர் வேறமாதிரியா சொல்லி தந்தவர், ஆரியர் தமிழ்நாட்டு தமிழர்களை குரங்குகளாக சித்தரிக்கிறார்களெண்டும் உண்மையில தமிழர்கள்தான் இந்த பாலத்தை கட்டியதாகவும் வால்மீகி தமிழர்களை "குரங்குகளாக" கற்பனைசெய்து தமிழர்களை சிறுமைப்படுத்தி ராமாயணத்தை எழுதியதாகவும் கம்பரும் மொழிபெயர்க்கயில் அதில் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் உண்மையாக குரங்குகள் பாலம் கட்டியதாக சித்தரித்ததாகவும் சொல்லித்தந்தார். ராவணனைப்பற்றியும் கொஞ்சம் சொன்னவர் அதை இஞ்ச சொன்னால் அடிக்க வருவியள் அதாலை சொல்லேல்ல. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ராவணனைப்பத்தி ஏடாகூடாமாக சொல்லப்போறீங்க போல இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ ராவணனைப்பத்தி ஏடாகூடாமாக சொல்லப்போறீங்க போல இருக்கு .

இல்ல கருப்பியக்கா, ராவணனை நல்லாத்தான் சித்தரிச்சவர் சரி அதையும் சொல்லிவிடுறனே, ராவணன் சிங்களவனாம், சிங்களவர்களைத்தான் அசுரர்களா சித்தரிச்சு வால்மீகி கதை எழுதினவராம் தமிழருக்கும் சிங்களவருக்கும் அந்தக்காலத்திலயே பகையாம் அதாலதான் தமிழ்நாட்டு தமிழர் வடக்குத்தமிழரோட சேந்து சிங்களவருக்கு எதிரா உதவி செய்தவையாம் அந்த நேரம் சிங்களவரும் சைவசமயமா இருந்தவையாம் உந்த ராமர் விசயத்தோடதான் எல்லா சிங்களவரும் சமாதான சமயமான பவுத்தத்துக்கு மாறினவையம். மிச்சத்தை சொன்னா உறுட்டி எடுத்துப்போடுவியள் எண்டவடியா வேண்டாம்............

Link to comment
Share on other sites

இனவெறியுமில்லை மதவெறியுமில்லைஇ நீங்கள் எழுதியிருக்கிறதைப் பார்த்தால் நெடூக்கண்ணனை கொல்லுற அளவுக்கு கொலைவெறியோடை நிக்கிரமாரி தெரியிது. போகிரமாரிக்கு தலைப்பையே உண்மையாக்கி போடுவியள்போலருக்கு. - ஆதி

----------------------------------------------------------------------

ஆதி .... !

எனக்கு எந்த வெறியும் இல்லை. எனது வாதம் என்னவெனில் இராமயணத்தை அடித்தளமாக கொண்டு அறிவியல் ஆய்வை மேற்கொள்வது பல விதத்திலும் எமக்கு பாதகமானது என்பதே. இதைப்பற்றி கதைக்கும் பேது நான் இனவெறியர்களாக சித்தரிக்கப்படுகின்றேன். நான் பெரியாரியத்துக்கோ அரியக்கோட்பாடுகளுக்கோ சார்பானவன் இல்லை. எமக்கென்று ஒரு தனித்தன்மை தனித்துவமான வழிபாடுகள் இறை வடிவங்கள் இருக்கின்றது என்று ஆழமாக நம்புகின்றவன்.

இந்த பாலம்உண்மையாக இருந்தால் அது எம்மிடம் இருந்து பிடுங்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். எமது ஆன்மீகம் அடியோடு மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. நாம் கடவுள் பெயரால் பாவத்தை செய்து கொண்டிருக்கின்றோம். கடவுள்கள் மாற்றப்பட்டு விட்டனர். அதன் தத்துவங்கள் மாற்றப்பட்டு விட்டது. ஆரியர்கள் பிறந்த அரியான தேசத்தில் இன்று நாம் வணங்கும் சிவன் ஒரு அசுரன். இந்திரன் கிருஸ்ணன் வருணன் ராமன் போன்றோரே தெய்வங்கள். இந்த தடயங்கள் மானுட வியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவர்களின் அசுரர்கள் எவ்வாறு எம் தெய்வத்துள் வந்தனர்?

;நாம் சீவன் என்று பொருள் பட மூலஸ்தானம் அமைத்து உடலின் உள்பாகம் போல் கோவில் அமைத்து. திருமூலர் சொன்னது போல் உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம் என்பதற்கமைய வாழ்ந்தோம். (இப்போதும் இவ்வாறான அமைப்பில் தலங்கள் தென்னாட்டில் உள்ளது) இங்கே எல்லாம் இவர்கள் எமது தத்துவங்களை மாற்றி அமைத்தனர். எமது பிரதேசத்துக்கே உரிய மூலிகைகளை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட ஆன்மீக வடிவம் அர்ச்சனைப்பொருளானது. துளசி கிருஸ்ணனுக்கும் அறுகு பிள்ளயாருக்கும் போனது.

சீவ தத்துவத்தில் சிவனை செருகி உருவம் கொடுத்து சுடலையில் வைதது ஆட வைத்தார்கள். மண்டை ஓட்டில் பிச்சை எடுக்கும் பித்தனாக்கி வீடு வாசலில் வைக்க கூடாதபடி செய்தனர்.

திரு மூலரை முவாயிரம் வருடம் வாழ்ந்ததாக கூறினர். பிராமணனுக்கு பிறந்ததாக கூறினர். பாடல்களை திரித்தனர். ஆயிரத்தெட்டு புராணங்களை ஏற்படுத்தினர். அகத்தி முனி அகஸ்தியராகி புணூல் அணிவிக்கப்பட்டார். திருவள்ளுவருக்கும் புணூல் அணிவித்தனர். நல்ல காலம் எல்லச்சித்தர்களையும் மாற்றி விட முடியவில்லை.

எங்கெங்கு சிவ தலங்கள் இருக்கின்றதோ அங்கேல்லம் இந்த ஆரியம் தாண்டவமாடியிருக்கின்றது. இன்று திருக்களகத்தி என்று நாம் சிறு வயதில் படித்த கண்ணப்பனாயனார் கண்தோண்டி வைத்த சிவன் கோவில் சிறி காளகஸ்திரியாக மாறியது மட்டுமல்லாது கண்ணப்ப நாயனார் வைத்த சரித்திரம் உள்ள மலைக்கோவிலும் சிலையும் கவனிப்பாரற்று ஓரம் கட்டப்பட்டு விட்டது. சிறி காளகஸ்திரி மலைக்கு கீழே பிராமண ஆதிக்கத்தில் வியாபார தலமாக வியாபாரம் அமோகமாக நடக்கின்றது. குட முழுக்கு கும்பாபிசேகமாகி விட்டது.

பழனி முருகன் சிலை புலிப்பாணி சித்தர் மற்றும் சீடர்களால் நவபாசாண மூலிகைகளால் உருவாக்கப்பட்டு பிணிதீர்க வைக்கப்பட்டது. இது இல்லாத பொல்லாத மம்பழக்கதை கைலாயம் என்றெல்லாம் திரித்து கந்தனின் அர்த்தமே மாற்றப்பட்டு அந்த சிலை இப்போது அங்கு இல்லை. பழனிக்கு போனால் பிணி தீர்கலாம் என்பது எமது வரலாறு. பழனிக்கு போனால் ஆண்டியாகலாம்என்பது இப்போது மாற்றப்பட்ட வரலாறு.

இது ஒரு உதாரணம் இப்படி பஞ்ச பூத தலங்கள் உட்பட அனைத்தும் திரிவு படுத்தப்பட்டு எல்லாம் மாற்றம் கண்டு விட்டது. இராமநாதர் கோயிலை நாம் இன்று இராமேஸ்வராம் என்றுதான் அழைக்கின்றோம். அந்த இடத்தில் இராமனே பிரதிஸ்டை செய்து சிவனுக்கு கோவில் அமைக்கும்படி சொன்னதாக வரலாற்றை திரிவு படுத்தி விட்டார்கள். இந்த தாண்டவம் திருக்கோணமiலாயன் கோவில் வரை நீண்ட ஒரு பின்னணிதான் இந்த பாலமும் இராமயணமும்.

எமக்கென்று ஒரு ஆன்மீக வழி இருந்தது. அது தென்னாட்டு சித்தர்களால் உருவாக்கப்பட்ட வைத்தியத்துடன் இணைந்தது. அதில் முட்டாள் தனத்துக்கு இடமில்லை. அறிவு பூர்வமானது . ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது.

எம்மிடம் உள்ளதை பிடுங்கித்தான் இவர்கள் எம்மை ஆட்டுவிக்கின்றனர். இவர்கள் சாஸ்திரங்கள் புராணங்கள் இப்போது பிராமணர் அல்லாத தரப்பின் ஆய்வுக்குள் வந்து கொண்டிருக்கின்றது. இது நல்ல விடயமே.

எனது பார்வை இந்தக் கேணத்திலே போகின்றது. தவிர திராவிட ஆரிய வெறி என்பது எனக்குள் இல்லை.

இதனால் தான் முந்திய கருத்தில்பின்வருமாறு எழுதியிருந்தேன்

-----------------------------------------------------------------------;

தீடைகளுக்கு இடையில் பாலங்கள் அப்போதைய மக்களாலும் அரசர்களாலும் வணிகம் மற்றும் போக்கு வரத்து தேவைகளாலும் போடப்பட்டிருக்கலாம். அவ்வாறு நடந்திருக்க நிறைய சந்தர்பங்கள் உண்டு. அவ்வாறு நடந்திருக்குமாயின் அது அப்பகுதி வாழ் மக்களின் பெரும் உழைப்பாக இருந்திருக்கும். ஆனால் அது எந்த வகையிலும் வட நாட்டு ராமனும் வானரங்களும்; சேர்ந்து கட்டடியதாக கருத இடமிருக்காது. ஆனால் அதன் கதை மாறிவிட்டது.

http://video.google.ca/videoplay?docid=-50...h&plindex=0

எம்மிடம் ஏற்கனவே நிறைய விசயங்கள் இருப்பில் இருந்தது. கோவில்கள் அதன் சிலைகள் மூலக்கிரகங்கள் எல்லாம் அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் தோற்றம் கண்டிருந்தது. இவைகள் அந்த அந்த பிரதேசங்களில் இருந்து மூலப்பொருட்கள் எடுத்து கட்டப்பட்டது. இவ்வாறான வற்றில் எமது உருவ நிற பாரம்பரிய அமைப்புகள் பிரதி பலிக்கின்றது. இதனுள் என்னுமென்று அதவாது ஆரியம் இடையில் புகுந்ததை சாதரணமாக உணர முடியும். சீரான மானுடவியல் ஆய்வுகளையும் அகழ்வாராய்ச்சிகளையும் முன்னெடுத்து உண்மைகளை கண்டுபிடிக்க மூன்றாம் தரப்புக்கு உள்ள ஆர்வம் எமக்கில்லை. ஆர்வம் இருப்பவர்களும் உக்கப்படுத்தப்பட மாட்டார்கள் அரசு அவர்கள் கையில். இழப்பதற்கு எதுவுமின்றி இழந்து விட்டோம். இராமர் பாலம் இராமயணத்துக்கே சொந்தம் என்று சந்தோசப்பட ரொம்ப காலத்துக்கு முன்னமே உண்மை பொய்களுக்கு அப்பால் பழக்கப்பட்டு விட்டோம்

----------------------------------------------------------------------

அத்தோடு இந்த பால விடயத்தில் தமிழீழம் எல்லைகள் என்ற நெடுக்காலபோவன்வெளிக்கிட்டத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி .... !

எனக்கு எந்த வெறியும் இல்லை. எனது வாதம் என்னவெனில் இராமயணத்தை அடித்தளமாக கொண்டு அறிவியல் ஆய்வை மேற்கொள்வது பல விதத்திலும் எமக்கு பாதகமானது என்பதே. இதைப்பற்றி கதைக்கும் பேது நான் இனவெறியர்களாக சித்தரிக்கப்படுகின்றேன். நான் பெரியாரியத்துக்கோ அரியக்கோட்பாடுகளுக்கோ சார்பானவன் இல்லை. எமக்கென்று ஒரு தனித்தன்மை தனித்துவமான வழிபாடுகள் இறை வடிவங்கள் இருக்கின்றது என்று ஆழமாக நம்புகின்றவன்.

இது ஒரு உதாரணம் இப்படி பஞ்ச பூத தலங்கள் உட்பட அனைத்தும் திரிவு படுத்தப்பட்டு எல்லாம் மாற்றம் கண்டு விட்டது. இராமநாதர் கோயிலை நாம் இன்று இராமேஸ்வராம் என்றுதான் அழைக்கின்றோம். அந்த இடத்தில் இராமனே பிரதிஸ்டை செய்து சிவனுக்கு கோவில் அமைக்கும்படி சொன்னதாக வரலாற்றை திரிவு படுத்தி விட்டார்கள். இந்த தாண்டவம் திருக்கோணமiலாயன் கோவில் வரை நீண்ட ஒரு பின்னணிதான் இந்த பாலமும் இராமயணமும்.

சுகனண்னா நீங்கள் மாற்றப்பட்டுவிட்டது மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது என்ற சொல்லுவதில் தவறில்லை. ஆனால் உங்களது வடிவத்துக்கு ஆதாரமாக கதைகள் இல்லையே. திரிவுபடுத்தப்பட்டுவிட்டது மாற்றப்பட்டுவிட்டது என்று சொல்கிறீர்களேயன்றி எப்படியிருந்து எப்படி மாற்றப்பட்டதென சொல்ல மறுக்கிறீர்கள்.

நீங்கள் எழுதியதை வைத்து சைவசமயத்தின் தற்போதய வடிவங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்வோம், ராமநாதர் கோயிலை ராமஈசுவரமென்று மாத்திவிட்டார்களென சொல்லுகிரீர்கள் நாதர் என்றால் தலைவர் அல்லது கடவுள் என்று பொருள்படும் அப்படியாயின் ராமக்கடவுள்(தலைவர்) கேயிலை ராமஈசுவரம் எனறு மாத்தியதாக எடுத்துக்கொள்ளலாம். சிவனை ஈசுவரன் என்றும் அழைப்போம் என்ற படியால் ராமருக்கான தனிக்கோயில் அல்லாது ஈசுவரக்கோயிலாக மாற்றியிருக்கிறார்கள் அப்படித்தானே? அதில் என்ன குற்றம் குறை?

நீங்களே சொல்லுகிரீர்கள் ராமர் பிரதிட்டை செய்து நாமம் சூட்டியதாக அப்படியாயின் ராமனும் சிவபக்தனாகிறான் அது உங்களுக்கு பெருமையாக இல்லையா? உங்கள் சமயத்துக்கு பெருமையாக இல்லையா? சிவன்(ஈசுவரன்) உங்கள் கடவுள் இல்லையா? ராமர்தான் உங்கள் கடவுளா?

உண்மையாகவே நீங்கள் சொல்லுவது என்னவென்று புரியவில்லை தயவுசெய்து புரியவைப்பீர்களா?

Link to comment
Share on other sites

ஆதி உங்கள்கேள்வி திரும்பவும் ஒரே இடத்தில் தான் வருகின்றது. நீங்கள் ராமன் கடவுளா ஈஸ்வரன் கடவுளா என்றதில் நிற்கின்றீர்கள். நான் இரண்டுக்கும் அப்பால் ஒரு இடத்தில் நிற்கின்றேன். இது ஒரு கடினமான விடயம் ஏனெனில் ஒன்று கடவுள் மதம் என்று செல்கின்றது அடுத்தது கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று செல்கின்றது. இரண்டு தரப்புக்கும் ஏராளமான காரணங்கள் நியாயப்பாடுகள் உண்டு. இதன் அடிப்படையில் செல்லும் போது நான் சொல்ல வரும் விடயம் பலவீனமானதாகவே படும்.

நான் செல்லும் சிவன் என்பது உருவமன்று அது சீவனைக்குறிக்கும். எமக்குள் இருக்கும் உயிர். இந்த உயிரின் உருவாக்கமும் அதன் வளர்ச்சியும் அதன் பராமரிப்புமே எமது மூதாதையரின் கடவுள். இதில் முட்டாள் தனத்துக்கோ அல்லது ஏமாற்று வேலைக்கோ எதுவும் இல்லை.

சைவ சமய அடிப்படையில் பல நூறு தேவாரங்கள் உண்டு. உதாரணமாக துப்பார் துருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்பார் தமக்கு என்று முடியும் தேவாரத்தை எடுத்துக்கொள்வோம். இதை பல நூறு ஆண்டு காலம் பாடி சைவ நெறியில் திழைத்துக்கொண்டு வருகின்றோம். இந்தப்பாடல் ஏன் எங்கிருந்து வருகின்றது என்ன சொல்கின்றது என்று யாரும் கற்று தருகின்றார்களா? இது சைவம்

அடுத்து பிராமணர் செய்யும் சமஸ்கிரத பூசைகளில் பக்தி கொண்டு வருகின்றோம் இதில் என்ன நடக்கின்றது சொல்லப்படுகின்றது என்று யாருக்கும் தெரியாது காரணம் எமது மொழியில் இல்லை.

அடுத்து நாத்திகம் அது கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்கின்றது. அந்த வாதத்திற்கு நிறைய நியாயங்கள் உண்டு. மிக மோசமாக கடவுள் பெயரால் நடக்கும் அடக்கு முறை அவ்வாறு ஒரு மார்கத்துக்கு வழி கோலியது. இதை மறுப்பதற்கில்லை.

இவ்வாறு பிரதான கருத்துக்கள் பலமாக நிற்கும் போது நான் சொல்ல வரும் விடயம் பலவீனமானதாகவே படும்.

ஒரு அடித்தளத்தை கொண்டுதான்மேற்கண்ட பிரிவுகள் தோன்றின. அந்த அடித்தளத்தை தோண்டி எடுக்கும் போது அங்கேதான் உன்னதமான ஆன்மீகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். நான் மேற்சொன்ன தேவரமானதற்கு விளக்கத்தை பார்ப்போமானால். தும்பை குப்பை மேனி கையான் தகரை செருப்படி போன்ற மூலிகைகளை தப்பாமல் பயன்படுத்தி வந்தால் பிணி அண்டாது என்று பொருள். இது பத்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த பிள்ளையாரை எந்த வித கேள்வி விளக்கமும் இன்றி தொழுவதோடு நிற்கின்றது. உண்மை தென்னாட்டு சித்தர்கள் ஓலைச்சுவடிகளில் உள்ளது.

இன்று இணையமும் கோயில் வியாபாரமும் மத வெறியும் அது சார்ந்த ஆய்வுகளும் அதற்கெதிரான வாதங்களும் என்று நகரும் காலத்தில் ஓலைச்சுவடிகள் ஆதாரங்கள் பற்றி நிறுவுவது கடினமானது. தவிர அரச கருவூலங்களில் திட்டமிட்டு கறையான் உண்ண விடப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரக்கணக்கிலாகும். அவைகள் வெளியில் வர அதிகாரம் விடாது என்பதே உண்மை. இருந்தும் முயற்சிகள் மிகச்சிறு அளவில் நடக்கின்றது.

எமக்கென்று ஒரு வாழ்க்கை முறை எமது புவியியல் தரைத்தோற்றத்துக்கேற்ப அதில் விழையும் தாவரங்களுக்கேற்ப வளங்களுக்கேற்ப இருந்தது. அந்த வாழ்கை முறைக்கேற்ப எமக்கென்று ஒரு ஆன்மீக வடிவம் இருந்தது. நீண்டகால வாழ்கைமுறையில் எமது உற்பத்திக்கும் வாழ்வியல் ஆதரத்துக்கும் கருப்பொருளான சூரியன் வணக்கத்துக்குரிய ஒன்றானது. நோய்தீர்கும் தாவரங்கள் வணக்கத்துக்குரியதானது. பயன்பாட்டுக்கு உரியதானது. உடல் கோயில் வடிவமானது உயிர் கடவுளானது. கோயிலினுள்ளே நோய் தீர்க்கும் அருமருந்துகளினால் செய்யப்பட்ட சிலைகள் நிறுவப்பட்டது. அதை சுவாசித்தும் பாலை ஊற்றி பருகியும் நோய் தீர்கப்பட்டது. இவ்வாறு ஒரு அடித்தளம் எம்மிடம் இருந்ததுக்கு இன்னும் சுவடுகள் இருக்கின்றது.

இன்றும் வெறும் மேனியில் வேப்பிலை கட்டி பிணிதீர்கும் பழக்கம் பாழயத்தம்மன் கோயிலில் இருக்கின்றது பட்டி தொட்டிகளில் இருக்கின்றது. பயிர் விழையும் காலத்தில் சூரியனுக்கு பொங்கி படைக்கத்தான் செய்கின்றோம். தேவாரங்களுக்கு உட்பொருள் தென்னாட்டு சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் இருக்கின்றது. மாற்றங்கள் கண்டாலும் மூலிகைகளை இறைவனுக்கு சாத்துகின்றனர். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம் வள்ளல் பெருமானுக்கு வாய் கோபுர வாசல் தௌ;ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் என்று திருமூலர் பாடிய பாடல் இன்றும் இருக்கின்றது.

நான் சொல்லும் எமது புராதன ஆன்மீகம் இறைபொருள் என்பவற்றுடன் பெரியாரியம் முரண்பட ஒன்றுமில்லை. மதம் என்ற வெறி வர ஒன்றுமில்லை. சமஸ்கிரதத்தில் புசை செய்ய வேண்டிய அவசியமில்லை. சாதி பிரிவுகள் இறைவன் பெயரால் வர எதுவித மார்க்கமும் இல்லை.

சீவன் சிவனாகி ஈஸ்வரனாகி அவனுக்கு உருவம் கொடுத்து கிருஸ்ணருக்கு மச்சானாகி ஆயிரத்தெட்டு புராணங்களில் புரட்டி எடுத்து இன்று இராமர் பாலத்தில் நின்று தர்கிக்கின்றோம்.

ஆதி உங்களுக்கு மற்றங்களையும் ஆன்மீகத்தின் பெயரால் நடந்த ஆக்கிரமிப்புக்களையும் விளங்கப்படுத்த உதாரணங்கள் சொன்னேன்.தவிர இராமனோ நீங்கள் சொல்லும் ஈஸ்வரனோ எனது கடவுள் இல்லை எமது உயிரே கடவுள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.