Jump to content

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்


Recommended Posts

குறுக்காலபோறண்னே எனக்கு ராமாயணம் படிப்பிச்சவர் வேறமாதிரியா சொல்லி தந்தவர், ஆரியர் தமிழ்நாட்டு தமிழர்களை குரங்குகளாக சித்தரிக்கிறார்களெண்டும் உண்மையில தமிழர்கள்தான் இந்த பாலத்தை கட்டியதாகவும் வால்மீகி தமிழர்களை "குரங்குகளாக" கற்பனைசெய்து தமிழர்களை சிறுமைப்படுத்தி ராமாயணத்தை எழுதியதாகவும் கம்பரும் மொழிபெயர்க்கயில் அதில் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் உண்மையாக குரங்குகள் பாலம் கட்டியதாக சித்தரித்ததாகவும் சொல்லித்தந்தார். ராவணனைப்பற்றியும் கொஞ்சம் சொன்னவர் அதை இஞ்ச சொன்னால் அடிக்க வருவியள் அதாலை சொல்லேல்ல. :lol:

ஓம் நானும் அப்படித்தான் கேள்விப்பட்டனான். வால்மீகிக்கு தமிழரோடு ஒரு சின்னத் தனிப்பட்ட கடுப்பாம் (அவருடைய பக்கத்து வீட்டுகாரன் ஒரு தமிழாளாம் அவரோடை வேலிப் பிரச்சனை இருந்தது என்று இப்ப அகழ்வாராச்சியில கண்டு பிடிக்க முடியும் என்று அமெரிக்காவில உள்ள ஒரு பிரபல்ய பல்கலைக்கழகத்து விரிவுரையாளர் (மணிசங்கர் அய்யர்) தனது ஓய்வு நேரங்களில் ஆர்வங்கள் என்ன என்ற பகுதியில் எழுதியுள்ளார்). அதாலான் தமிழரை குரங்குகளாக சித்தரித்து சும்மா தமாசு பண்ணினவராம். அப்பாவியான வால்மீகி மீது பிறகு தமிழரின்ரை விசமப்பிரச்சாரம் கூடினதாலை சமாளிக்கத்தான் கம்பர் பிறகு அது குரங்குகள் தான் ஆனால் தமிழர் இல்லை யாவும் கற்பனையே என்று போட்டு எழுதினவராம். கற்பனை படைப்புகளின் அழகை இரசிக்கத் தெரியாது ஆரியம் பார்ப்பணியம் என்று இராமாயணம் போன்ற அழகான இலக்கியப்படைப்பை வைத்து வம்பளகிறார்கள் பெரியாரிஸ்றுக்கள். அதுவும் சிங்களவனான இராவணனை தமிழருக்காக அழித்த இராமனையே எதிர்த்துக் கொண்டு நிக்கிறார்கள் இன்று விளக்கமில்லாமல். இவர்களால் அனுமான் போல் ஏன் விளக்கமாக இருக்க முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது? அனுமார் மாதிரி விளக்கமாக இருந்தால் இராமாயணத்துக்காலை முழு இலங்கைத் தீவையுமே தமிழருடையது என்று நிறுவி உரிமை கோரி இப்ப எங்கோ போயிருக்கலாம்.

சரி இராமாயணம் பாகம் 1 தான் விளங்கில்லை என்றால் பாகம் 2 ஆவது இவர்களிற்கு விளங்கிச்சுதா? அதுவும் இல்லை! சிங்களவர்களை அழித்து முழு இலங்கைத் தீவையும் தமிழரிற்கு பெற்றுக் கொடுத்து இந்தியாவின் முக்கிய மாநிலமான தமிழ்நாட்டுத் தமிழர் மீது நன்மதிப்பைப் பெற இந்திய மத்திய அரசு விரும்பியது. (இன்னும் சில காலங்களில் வடநாட்டுத் தமிழருக்கும் தென்னாட்டுத் தமிழருக்குள்ளும் இருந்த தொப்புள் கொடி உறவினால் மொழி கலை கலாச்சாரப் பாசப்பிணைப்பிலான் இலங்கைத் தீவை தமிழருக்கு பெற்றுக் கொடுக்க இந்தியா விரும்பியது என்று சொல்லுவார்கள்) அதனால் தான் தமிழ்ப் போராளிகளை உருவாக்கி நிதி ஆயுதம் பயிற்சி என்று கொடுத்தது. அதை அவர்கள் வடிவாக செய்ய முடியாமல் தமக்குள் சின்ன சின்ன விசையங்களுக்கு எல்லாம் அடிபடத் தொடங்க வடநாட்டுத் தமிழர்கள் தென்னாட்டுத் தமிழர்கள் பாவம் என்று சலிக்காது சிங்களத் தலைவர் ஜேயாரை ஒரு மாதிரி மடக்கி உடன்படிக்கை செய்து இந்தியப்படைகளை அனுப்பினவை. இதுவாவது அனுமார் கூட்டமாக விளங்கிக் கொள்ளுங்கள் என்றால் இல்லை. அதையும் இந்தியா தன்னுடைய நலன்களிற்குத்தான் ஆயுதப் பயிற்சி கொடுத்தது இராணுவத்தை அனுப்பினது என்கிறார்கள் விளக்கமில்லாது. வடஇந்தியத் தமிழர் தென்இந்தியத் தமிழருடன் சேர்ந்து சிங்களவரை அழிக்க உதவுவதை தென்னிந்திய தமிழர்களோ ஈழத்துத் தமிழர்களோ அனுமார் போல் சரியாக விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை என்று கேணல் கரிகரன் மாமா கொழும்பில் மனம் விட்டு அழுதிருந்தார். இந்தியா சுயநலனிற்கு காய்கள் நகர்த்துகிறது என்று கற்பனை பண்ணிக் கொண்டு வம்பளக்கிறார்கள் என்று மிகவும் கவலைப்பட்டிருந்தார் மாமா.

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஹிந்தி அமைப்புக்கள் எப்படி கற்பனையில் ஆதார அடிப்படையற்ற ஹிந்துத்துவாவை கொண்டு மத வெறியை வளர்க்கின்றனவோ.. அதற்கு ஈடாகவே மத எதிர்ப்பு வாதிகள் பகுத்தறிவு வாதிகள் என்போரும் கண்ணை மூடிக்கொண்டு தங்கள் கற்பனைகளை அவிழ்த்துவிடுகின்றனர்.

1. மேற்குலக விஞ்ஞானிகள் இலக்கியங்களில் இருந்து செவ்வாய் வரை அறிவியல் தேடல் செய்கின்றனர். நாம் இவ்வளவு காலமும் பார்ப்பர்னியரை எதிர்க்கிறம் என்று ஒவ்வொரு இலக்கியமா புறக்கணிப்பு என்ற சிந்தனையை விதைச்சதை விட என்னத்தை வெட்டி விழுத்தினம். அதைக் கூட கற்பனையோட செய்ய முற்பட்டு அதிலும் தோல்விதான்..! ஆதார அடிப்படை அற்ற எந்தக் கவர்ச்சியான மாறுபாடான கருத்தும் மக்களின் நம்பிக்கையை பெறாது. அவை நீண்ட காலம் மக்கள் மத்தியில் நிலைக்காது.

2. இலக்கியங்களில் படைப்பாளிகளின் காலச் சிந்தனைகளின் ஆதிக்கம் என்பது இயல்பானது. அது எந்த மொழி இலக்கியமாக இருக்கட்டும் அது இருக்கும். அதற்கு அஞ்சி முழு இலக்கியமும் தவறானது இல்ல பக்கச்சார்பானது என்று ஒதுக்கிவிட்டு.. நாம வாழாதிருப்பதில் மறுதரப்புக்கு நியாயம் வழங்குதலைத்தான் செய்யும்.

தமிழில் இலக்கியங்கள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கடைப்பிடிச்சிடுவார்கள் என்று அஞ்சி... அதற்கு பார்ப்பர்னிய கண்ணோட்டம் கொடுத்தால்.. தமிழ் விரோத தோற்றத்தை காட்டினால்.. மக்கள் அதைப் புறக்கணிப்பார்கள்.. அதன் மூலம் பார்ப்பர்னிய ஆதிக்கம் சமூகத்தில் இல்லாமல் செய்யப்படும்.. மூட நம்பிக்கைகள் தகரும் இதுதான் சில பகுத்தரிவு வாதிகளின் சிந்தனை.

அதாவது மக்களுக்காக.. இலக்கியங்களுக்கு முழுமையாக பார்ப்பர்னிய சாயம் பூசனும்..அதை எதிர்க்கப் பண்ணனும்.. அதன் மூலம்.. சமூக வர்க்க வேறுபாடுகளைக் களையனும்.. இதை விட அவர்களின் பகுத்தறிவு விரிவடைய வாய்ப்பில்லை.

ஏன் இலக்கியங்களை மக்கள் முன் சுதந்திரமாக அனுமதித்து மக்களை அதில் தேடல் செய்ய அனுமதிக்க பயப்படிருறீங்க...??!

ஒரு பொதுமகன் இப்படிக் கேட்டால்..தீண்டாமை.. அகற்றிறதுக்கும்.. இராமாயணத்துக்கு பார்பர்னிய சாயம் பூசுவதற்கும் என்ன தொடர்பிருக்கிறது.

பார்பர்னிய.. பிராமணிய எதிர்ப்பு மூலம் வர்க்க பேதங்களை ஆழப்படுத்தும் பகுத்தரிவுவாதிகள்.. இராமாயணத்தை தெளிவாக படித்தார்களோ தெரியாது. இல்ல படிக்க ஊட்டப்பட்ட வெறுப்பு அனுமதிக்குதில்லையோ தெரியல்ல.

குகன் என்ற கதாபாத்திரம் மூலம்.. தொழில்சார் வர்க்க வேறுபாடுகளை களைய முற்படுகின்ற அளவு கூட இந்த சிந்தனைவாதிகள் கம்பராமாயணத்தின் சமூக கருத்தியலை நோக்கத் தயார் இல்லை.. என்று அந்தப் பொதுமகன் சிந்தித்தால்..

அதற்கு இவர்களின் பதில் என்ன..??!

எமது வேலை இவர்களுக்கு கம்பராமாயண விளக்கம் அளிப்பதல்ல. இலக்கியங்களுக்குள் காலப்பதிவுகளாகி இருக்கும் வரலாற்றுச் சான்றுகளை இனங்காண்பதுவும்.. அதை அறிவியல் கொண்டு அணுக வலியுறுத்துவதும் ஆகும். மேற்குலக அறிவியலாளர்கள் செய்வது போன்று.

நாம் எந்த இலக்கியமும் தூய தமிழ் இலக்கியமென்று நிரூபிக்க இங்கு வாதிடவில்லை. எந்த இலக்கியமானாலும் எமக்குத் தேவையான அம்சங்கள் இருக்கா என்றுதான் தேடல் செய்யச் சொல்லுறம். எமக்கு ஆரிய திராவிட பார்பர்னிய.. வேறுபாடுகளை இலக்கியத்துள் புகுத்துவதில் உடன்பாடில்லை. அது மக்களை அடிமுட்டாள்களாக கருதி வைப்பட்டும் ஒரு கருத்தியல் என்பதுவே எமது தெளிவான நிலைப்பாடு.

எமது இலக்கு இலக்கியங்களுள் அறிவியல் தேடல். தேடலின் மூலம் இலக்கியத் தவறு அல்லது பார்பர்னிய திணிப்பு இருப்பது சாத்தியப்படுமானால்.. நிரூபிக்கப்படுமானால்.. அது இன்னும் பலமான நிலையை இந்த இலக்கிய- பார்பர்னிய எதிர்ப்பை காவித்திரிபவர்களுக்கு நன்மை தானே. பொய்யை, திரிபை திரிபென்று காட்ட. ஆனால் அவர்கள் அதற்கும் தயார் இல்லை. நாங்கள் சொல்லுறதுதான் சரி என்று தங்கள் கற்பனையையே மக்கள் சுய பகுத்தறிவுக்கு இடமில்லாமல் ஏற்கனும் என்று சாதிக்க முற்படுகின்றனர். இது அவர்கள் குறிப்பிடும்.. பார்பர்னிய சிந்தாத்த ஆதிக்கத்தை விட.. மிக ஆபத்தான மக்கள் சிந்தனை மீதான ஆதிக்கம். இதற்குள் நிற்க எந்த அறிவியல் அணுகுமுறையை விரும்பும் பொதுமகனும் இருக்கான். :lol:

நாம் இலக்கியங்களுக்குள் மறைந்து எங்கோ ஓரத்தில் கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளுக்கான அம்சங்களை இனங்கண்டு இலக்கிய படைப்புக்களின் அவ்வவ் காலங்களில் இருந்த வரலாற்றுச் சான்றடிப்படையில் புவியியல் மற்றும் நாகரிக முறைமைகள் தொடர்பில் அறிவியல் ஆய்வு மூலம் நிறுவல்கள் செய்ய முற்படனும் என்றதும்.. அதற்குக் கூட.. அறிவியல் மூலம் பார்ப்பர்னிய சிந்தாந்தங்களுக்கு பாதுகாப்பளிப்பு என்று சிந்திப்பவர்கள்.. பார்பர்னன் என்று அவர்கள் இனங்காட்டுபவர்களும் இதே வழியில் சிந்திச்சு ஏன் தங்கள் தேவையை பாதுகாக்க முயல்ல. இரு தரப்பு வாதங்களும் பிரதிவாதங்களும் ஆண்டாண்டா தொடருதே தவிர இராமாயணம் அதன் இலக்கிய ரீதியான சமூக முக்கியத்தை இழந்ததாக நமக்கு புலப்படேல்ல.

இராமாயணத்தில் இராவணனை.. கற்பனையால் தமிழன் என்று நிறுவிடலாம் என்று கருதுபவர்கள்.. இராமாயண புவியியல் ஆதாரங்களை அறிவியல் கொண்டு ஆராயனும் என்றால்.. உடனே பார்பர்னியம் பேசி.. இராமாயணத்தைப் புறக்கணிக்கனும் என்றினம்.

அறிவியல் மூலம் இராமாயணம் போன்ற இலக்கியங்களிலும் வரலாற்றுச் சான்றுகளை தமிழர்கள் தேடல் செய்வது சிங்களப் பேரினவாதத்துக்கும் பார்ப்பர்னியவாதிகள் என்று சொல்வோருக்கும் உதவும் என்று சொல்பவர்களிடம் ஒரு கேள்வி. எந்த வகையில் அவை அவர்களுக்கு உதவும் என்பதை விளக்குவார்களானால் அது எமக்கும் மக்களுக்கும் உதவியா இருக்கும். :)

Link to comment
Share on other sites

ஆதிக்கு இராமாயணம் படிப்பத்தவர் ஏதோ உளறியிருக்கிறார்.

இதை சிங்களவர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சிங்களவர்கள் சொல்கின்ற "வரலாற்றின்படி" விஜயனின் வருகைக்குப் பின்புதான் சிங்கள இனம் என்கின்ற ஒன்று இலங்கையில் உருவாகிறது. (இராமாயணம் அதற்கு முன்பு நடந்ததாக சொல்கிறார்கள்)

நடுநிலையாளர்கள் சொல்கின்ற வரலாற்றின்படி சிங்கள இனம் இலங்கையில் பௌத்த மதத்தின் வருகையின் ஊடாக உருவாகின்றது. (இதுவே எனது கருத்தும்)

ஈழத்தின் மண்ணின் மக்களாகிய திராவிடர்கள் பாளி, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கலந்து பேசியதுதான் சிங்களம்.

ஆகவே இராவணன் சிங்களவனாக இருப்பதற்கு சந்தர்ப்பமே இல்லை.

நெடுக்காலபோவன் சென்ன கருத்துக்களில் எது கிண்டலாக சொல்லப்பட்ட கருத்துக்கள், எது உண்மையாக சொல்லப்பட்ட கருத்துக்கள் என்று தெரியவில்லை.

நெடுக்காலபோவான் குகனுடைய பாத்திரத்தைக் காட்டி வர்க்க பேதம் இல்லையென்று வாதிடுகின்றார்.

குகன் வேடுவ கூட்டத் தலைவன். அவன் அப்படியேதான் தொடர்ந்தும் இருக்கின்றான். அவன் ஒரு சத்திரியன் ஆகவோ, பார்ப்பனன் ஆகவோ முயற்சிக்கவில்லை. தன்னை இராமனின் ஒரு அடிமையாகவே காட்டிக் கொள்கின்றான். இவ்வாறான ஒருவனை இராமன் பாராட்டுவதில் வர்க்க பேதம் எப்படி ஒழியும்?

இராமாயணத்தில் சம்புகன் என்று ஒரு பாத்திரம் இருக்கிறது. அது பற்றிக் கேள்விப்பட்டது உண்டா?

சம்புகன் ஒரு சாதாரண மனிதன். அவன் தவம் செய்கின்றான். ஒரு சூத்திரன் தவம் செய்யக் கூடாது என்பதற்காக இராமன் சம்புகனின் தலையை வெட்டுகின்றான்.

ஆதிக்க சக்திகள் அடிமைகளை அன்போடு "தம்பி" என்று அழைத்து தொடர்ந்தும் வர்க்க பேதங்களை காப்பாற்றுவார்கள் என்பதற்கு குகன் பாத்திரம் ஒரு உதாரணம்.

வர்க்க பேதங்களை மாற்ற விரும்புபவர்களின் தலையை வெட்டி விடுவார்கள் என்பதற்கு சம்புகன் பாத்திரம் ஒரு உதாரணம்.

Link to comment
Share on other sites

:(:lol: நெடுக்ஸ்.

இராமாயணத்தில் சமத்துவமா? ஹி ஹி. நல்லா தான் கதை சொல்றீங்க. கம்பர் தமிழில் பாடும்போது "தமிழ் பண்பாடும்" சேர்ந்து தான் அதை மெருகேற்றியது. வால்மீகி ரமாயணம் படித்தா காறித்துப்ப தான் வேண்டும். :lol::lol:

நீங்கள் கம்பர் தமிழில், அதுவும் எமது பண்பாடு கலந்து பாடிய ரமாயணத்தை கொண்டுவந்து சமத்துவம் பேசாதீங்கோ.

குறிப்பு: வால்மீகியில், வானரங்கள் கூட "தேவர்களின் மறுபிறப்பு" என்றுதான் கூறுகிறது. உதாரணமாக "இந்திரன் மகன் - வாலி". "வாயு புத்திரன் - ஹனுமான்". "விஸ்வகர்மாவின் மகன் - நளன்", இன்னும் பல. சில நேரம் வானர சேனைகளில் இருந்த ஒன்றுக்கும் உதவாத "கரடிகள்" ஆங்காங்கே வாழ்ந்த "பாவப்பட்ட ஜென்மங்களாக" இருக்கும். :lol: வானர சேனைகளில் கூட "தலமை" என்பது "தேவர்கள் தான்யா". வேறு யாரும் வரமுடியுமா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆதி உங்கள்கேள்வி திரும்பவும் ஒரே இடத்தில் தான் வருகின்றது. நீங்கள் ராமன் கடவுளா ஈஸ்வரன் கடவுளா என்றதில் நிற்கின்றீர்கள். நான் இரண்டுக்கும் அப்பால் ஒரு இடத்தில் நிற்கின்றேன். இது ஒரு கடினமான விடயம் ஏனெனில் ஒன்று கடவுள் மதம் என்று செல்கின்றது அடுத்தது கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று செல்கின்றது. இரண்டு தரப்புக்கும் ஏராளமான காரணங்கள் நியாயப்பாடுகள் உண்டு. இதன் அடிப்படையில் செல்லும் போது நான் சொல்ல வரும் விடயம் பலவீனமானதாகவே படும்.நான் செல்லும் சிவன் என்பது உருவமன்று அது சீவனைக்குறிக்கும். எமக்குள் இருக்கும் உயிர். இந்த உயிரின் உருவாக்கமும் அதன் வளர்ச்சியும் அதன் பராமரிப்புமே எமது மூதாதையரின் கடவுள். இதில் முட்டாள் தனத்துக்கோ அல்லது ஏமாற்று வேலைக்கோ எதுவும் இல்லை.சைவ சமய அடிப்படையில் பல நூறு தேவாரங்கள் உண்டு. உதாரணமாக துப்பார் துருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்பார் தமக்கு என்று முடியும் தேவாரத்தை எடுத்துக்கொள்வோம். இதை பல நூறு ஆண்டு காலம் பாடி சைவ நெறியில் திழைத்துக்கொண்டு வருகின்றோம். இந்தப்பாடல் ஏன் எங்கிருந்து வருகின்றது என்ன சொல்கின்றது என்று யாரும் கற்று தருகின்றார்களா? இது சைவம்அடுத்து பிராமணர் செய்யும் சமஸ்கிரத பூசைகளில் பக்தி கொண்டு வருகின்றோம் இதில் என்ன நடக்கின்றது சொல்லப்படுகின்றது என்று யாருக்கும் தெரியாது காரணம் எமது மொழியில் இல்லை.அடுத்து நாத்திகம் அது கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்கின்றது. அந்த வாதத்திற்கு நிறைய நியாயங்கள் உண்டு. மிக மோசமாக கடவுள் பெயரால் நடக்கும் அடக்கு முறை அவ்வாறு ஒரு மார்கத்துக்கு வழி கோலியது. இதை மறுப்பதற்கில்லை.இவ்வாறு பிரதான கருத்துக்கள் பலமாக நிற்கும் போது நான் சொல்ல வரும் விடயம் பலவீனமானதாகவே படும். ஒரு அடித்தளத்தை கொண்டுதான்மேற்கண்ட பிரிவுகள் தோன்றின. அந்த அடித்தளத்தை தோண்டி எடுக்கும் போது அங்கேதான் உன்னதமான ஆன்மீகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். நான் மேற்சொன்ன தேவரமானதற்கு விளக்கத்தை பார்ப்போமானால். தும்பை குப்பை மேனி கையான் தகரை செருப்படி போன்ற மூலிகைகளை தப்பாமல் பயன்படுத்தி வந்தால் பிணி அண்டாது என்று பொருள். இது பத்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த பிள்ளையாரை எந்த வித கேள்வி விளக்கமும் இன்றி தொழுவதோடு நிற்கின்றது. உண்மை தென்னாட்டு சித்தர்கள் ஓலைச்சுவடிகளில் உள்ளது.இன்று இணையமும் கோயில் வியாபாரமும் மத வெறியும் அது சார்ந்த ஆய்வுகளும் அதற்கெதிரான வாதங்களும் என்று நகரும் காலத்தில் ஓலைச்சுவடிகள் ஆதாரங்கள் பற்றி நிறுவுவது கடினமானது. தவிர அரச கருவூலங்களில் திட்டமிட்டு கறையான் உண்ண விடப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரக்கணக்கிலாகும். அவைகள் வெளியில் வர அதிகாரம் விடாது என்பதே உண்மை. இருந்தும் முயற்சிகள் மிகச்சிறு அளவில் நடக்கின்றது.எமக்கென்று ஒரு வாழ்க்கை முறை எமது புவியியல் தரைத்தோற்றத்துக்கேற்ப அதில் விழையும் தாவரங்களுக்கேற்ப வளங்களுக்கேற்ப இருந்தது. அந்த வாழ்கை முறைக்கேற்ப எமக்கென்று ஒரு ஆன்மீக வடிவம் இருந்தது. நீண்டகால வாழ்கைமுறையில் எமது உற்பத்திக்கும் வாழ்வியல் ஆதரத்துக்கும் கருப்பொருளான சூரியன் வணக்கத்துக்குரிய ஒன்றானது. நோய்தீர்கும் தாவரங்கள் வணக்கத்துக்குரியதானது. பயன்பாட்டுக்கு உரியதானது. உடல் கோயில் வடிவமானது உயிர் கடவுளானது. கோயிலினுள்ளே நோய் தீர்க்கும் அருமருந்துகளினால் செய்யப்பட்ட சிலைகள் நிறுவப்பட்டது. அதை சுவாசித்தும் பாலை ஊற்றி பருகியும் நோய் தீர்கப்பட்டது. இவ்வாறு ஒரு அடித்தளம் எம்மிடம் இருந்ததுக்கு இன்னும் சுவடுகள் இருக்கின்றது. இன்றும் வெறும் மேனியில் வேப்பிலை கட்டி பிணிதீர்கும் பழக்கம் பாழயத்தம்மன் கோயிலில் இருக்கின்றது பட்டி தொட்டிகளில் இருக்கின்றது. பயிர் விழையும் காலத்தில் சூரியனுக்கு பொங்கி படைக்கத்தான் செய்கின்றோம். தேவாரங்களுக்கு உட்பொருள் தென்னாட்டு சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் இருக்கின்றது. மாற்றங்கள் கண்டாலும் மூலிகைகளை இறைவனுக்கு சாத்துகின்றனர். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம் வள்ளல் பெருமானுக்கு வாய் கோபுர வாசல் தௌ;ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் என்று திருமூலர் பாடிய பாடல் இன்றும் இருக்கின்றது. நான் சொல்லும் எமது புராதன ஆன்மீகம் இறைபொருள் என்பவற்றுடன் பெரியாரியம் முரண்பட ஒன்றுமில்லை. மதம் என்ற வெறி வர ஒன்றுமில்லை. சமஸ்கிரதத்தில் புசை செய்ய வேண்டிய அவசியமில்லை. சாதி பிரிவுகள் இறைவன் பெயரால் வர எதுவித மார்க்கமும் இல்லை. சீவன் சிவனாகி ஈஸ்வரனாகி அவனுக்கு உருவம் கொடுத்து கிருஸ்ணருக்கு மச்சானாகி ஆயிரத்தெட்டு புராணங்களில் புரட்டி எடுத்து இன்று இராமர் பாலத்தில் நின்று தர்கிக்கின்றோம். ஆதி உங்களுக்கு மற்றங்களையும் ஆன்மீகத்தின் பெயரால் நடந்த ஆக்கிரமிப்புக்களையும் விளங்கப்படுத்த உதாரணங்கள் சொன்னேன்.தவிர இராமனோ நீங்கள் சொல்லும் ஈஸ்வரனோ எனது கடவுள் இல்லை எமது உயிரே கடவுள்.
சுகனண்னே நீங்கள்; டேஞ்சா பாட்டியண்னே, பாழையத்தம்மன் எண்ரு முதலில ஏன் சொல்லேல்ல, மன்னிச்சுங்கண்னே. மூலிகையால விக்கிரகம் செய்து குழையடிச்சு பால் அபிசேகம்செய்து அதை குடிச்சா வருத்தம் துன்பம் எல்லாம் இல்லாமல் போகிடும் என்ரு கேள்விப்பட்டநான். என்ன செய்யிரது அந்த நேரம் போக வசதி வரேல்ல அதான் இப்ப கச்ரப்படுறன்.நீங்கள் எழுதின தேவாரம் கேட்டமாரிக்கிடக்கு ஆனா ஞாபகம் வருதில்ல, உது எங்க பாடினதாம் முலிகைமரமெல்லாம் இப்பவும் இருக்கோ அல்லாட்டி பாப்பானுகள் எல்லாத்தயும் அழிச்சிட்டாங்களோ? கெட்ட ராசுக்கலுகள் உவங்களை குடுமில பிடிச்சு வெளுக்னும். நான் உவங்கட எழுத்துக்களே எழுதிரேல்ல. நீங்களும் நிப்பாட்டுங்கோ. சூரியனை நானும் கும்பிடுறனான் இனிமேல் முழுக்க சூரியன்தான் செலவும் இல்ல. மணியடிச்சும் கும்பிடலாம் பக்கத்துவீட்டு வெள்ளைக்கார நாய் வரட்டும் வேப்பங்குளையாலை போடுறனோ இல்லையோபார். வேப்பங்குழையும் இம்போட்பண்ணி இனி உதுதான் வழி. நோய் நொடி இல்லாமலும் இருக்கலாம்.பாழையத்தம்மன் கோயிலில வாய்கட்டி பூசையோ அல்லாட்டி தமிழில பூசையோ நீங்கள் சொல்லேல்ல. உங்கட கொயிலெண்டவடியா தமிழிலதான் பூசை என்னண்னே. ராமர்பாலத்திலயிருந்து எங்கயோ போட்டம், நாளைக்கும் நாளையண்டக்கும் வர வசதியிருக்காது கசியர் சோட் கவர் பண்னோனும் திங்கக்கிழமை சந்திப்பமே.
ஓம் நானும் அப்படித்தான் கேள்விப்பட்டனான். வால்மீகிக்கு தமிழரோடு ஒரு சின்னத் தனிப்பட்ட கடுப்பாம் (அவருடைய பக்கத்து வீட்டுகாரன் ஒரு தமிழாளாம் அவரோடை வேலிப் பிரச்சனை இருந்தது என்று இப்ப அகழ்வாராச்சியில கண்டு பிடிக்க முடியும் என்று அமெரிக்காவில உள்ள ஒரு பிரபல்ய பல்கலைக்கழகத்து விரிவுரையாளர் (மணிசங்கர் அய்யர்) தனது ஓய்வு நேரங்களில் ஆர்வங்கள் என்ன என்ற பகுதியில் எழுதியுள்ளார்). அதாலான் தமிழரை குரங்குகளாக சித்தரித்து சும்மா தமாசு பண்ணினவராம். அப்பாவியான வால்மீகி மீது பிறகு தமிழரின்ரை விசமப்பிரச்சாரம் கூடினதாலை சமாளிக்கத்தான் கம்பர் பிறகு அது குரங்குகள் தான் ஆனால் தமிழர் இல்லை யாவும் கற்பனையே என்று போட்டு எழுதினவராம். கற்பனை படைப்புகளின் அழகை இரசிக்கத் தெரியாது ஆரியம் பார்ப்பணியம் என்று இராமாயணம் போன்ற அழகான இலக்கியப்படைப்பை வைத்து வம்பளகிறார்கள் பெரியாரிஸ்றுக்கள். அதுவும் சிங்களவனான இராவணனை தமிழருக்காக அழித்த இராமனையே எதிர்த்துக் கொண்டு நிக்கிறார்கள் இன்று விளக்கமில்லாமல். இவர்களால் அனுமான் போல் ஏன் விளக்கமாக இருக்க முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது? அனுமார் மாதிரி விளக்கமாக இருந்தால் இராமாயணத்துக்காலை முழு இலங்கைத் தீவையுமே தமிழருடையது என்று நிறுவி உரிமை கோரி இப்ப எங்கோ போயிருக்கலாம்.சரி இராமாயணம் பாகம் 1 தான் விளங்கில்லை என்றால் பாகம் 2 ஆவது இவர்களிற்கு விளங்கிச்சுதா? அதுவும் இல்லை! சிங்களவர்களை அழித்து முழு இலங்கைத் தீவையும் தமிழரிற்கு பெற்றுக் கொடுத்து இந்தியாவின் முக்கிய மாநிலமான தமிழ்நாட்டுத் தமிழர் மீது நன்மதிப்பைப் பெற இந்திய மத்திய அரசு விரும்பியது. (இன்னும் சில காலங்களில் வடநாட்டுத் தமிழருக்கும் தென்னாட்டுத் தமிழருக்குள்ளும் இருந்த தொப்புள் கொடி உறவினால் மொழி கலை கலாச்சாரப் பாசப்பிணைப்பிலான் இலங்கைத் தீவை தமிழருக்கு பெற்றுக் கொடுக்க இந்தியா விரும்பியது என்று சொல்லுவார்கள்) அதனால் தான் தமிழ்ப் போராளிகளை உருவாக்கி நிதி ஆயுதம் பயிற்சி என்று கொடுத்தது. அதை அவர்கள் வடிவாக செய்ய முடியாமல் தமக்குள் சின்ன சின்ன விசையங்களுக்கு எல்லாம் அடிபடத் தொடங்க வடநாட்டுத் தமிழர்கள் தென்னாட்டுத் தமிழர்கள் பாவம் என்று சலிக்காது சிங்களத் தலைவர் ஜேயாரை ஒரு மாதிரி மடக்கி உடன்படிக்கை செய்து இந்தியப்படைகளை அனுப்பினவை. இதுவாவது அனுமார் கூட்டமாக விளங்கிக் கொள்ளுங்கள் என்றால் இல்லை. அதையும் இந்தியா தன்னுடைய நலன்களிற்குத்தான் ஆயுதப் பயிற்சி கொடுத்தது இராணுவத்தை அனுப்பினது என்கிறார்கள் விளக்கமில்லாது. வடஇந்தியத் தமிழர் தென்இந்தியத் தமிழருடன் சேர்ந்து சிங்களவரை அழிக்க உதவுவதை தென்னிந்திய தமிழர்களோ ஈழத்துத் தமிழர்களோ அனுமார் போல் சரியாக விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை என்று கேணல் கரிகரன் மாமா கொழும்பில் மனம் விட்டு அழுதிருந்தார். இந்தியா சுயநலனிற்கு காய்கள் நகர்த்துகிறது என்று கற்பனை பண்ணிக் கொண்டு வம்பளக்கிறார்கள் என்று மிகவும் கவலைப்பட்டிருந்தார் மாமா.
எனக்கு படிப்பி ச்ச அன்னன் சொன்னதைத்தான் நான் சொன்னன். குறுக்காலபோறண்னைக்கு எப்பவும் பகிடி. ராமாயண முதல்பாகம் அப்பிடியெண்டா உதென்ன ரெண்டாம்பாகமண்னே கட்சிகிட்சி மாறிட்டியளோ. :angry:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிக்கு இராமாயணம் படிப்பத்தவர் ஏதோ உளறியிருக்கிறார்.

இதை சிங்களவர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சிங்களவர்கள் சொல்கின்ற "வரலாற்றின்படி" விஜயனின் வருகைக்குப் பின்புதான் சிங்கள இனம் என்கின்ற ஒன்று இலங்கையில் உருவாகிறது. (இராமாயணம் அதற்கு முன்பு நடந்ததாக சொல்கிறார்கள்)

நடுநிலையாளர்கள் சொல்கின்ற வரலாற்றின்படி சிங்கள இனம் இலங்கையில் பௌத்த மதத்தின் வருகையின் ஊடாக உருவாகின்றது. (இதுவே எனது கருத்தும்)

ஈழத்தின் மண்ணின் மக்களாகிய திராவிடர்கள் பாளி, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கலந்து பேசியதுதான் சிங்களம்.

ஆகவே இராவணன் சிங்களவனாக இருப்பதற்கு சந்தர்ப்பமே இல்லை.

நெடுக்காலபோவன் சென்ன கருத்துக்களில் எது கிண்டலாக சொல்லப்பட்ட கருத்துக்கள், எது உண்மையாக சொல்லப்பட்ட கருத்துக்கள் என்று தெரியவில்லை.

நெடுக்காலபோவான் குகனுடைய பாத்திரத்தைக் காட்டி வர்க்க பேதம் இல்லையென்று வாதிடுகின்றார்.

குகன் வேடுவ கூட்டத் தலைவன். அவன் அப்படியேதான் தொடர்ந்தும் இருக்கின்றான். அவன் ஒரு சத்திரியன் ஆகவோ, பார்ப்பனன் ஆகவோ முயற்சிக்கவில்லை. தன்னை இராமனின் ஒரு அடிமையாகவே காட்டிக் கொள்கின்றான். இவ்வாறான ஒருவனை இராமன் பாராட்டுவதில் வர்க்க பேதம் எப்படி ஒழியும்?

இராமாயணத்தில் சம்புகன் என்று ஒரு பாத்திரம் இருக்கிறது. அது பற்றிக் கேள்விப்பட்டது உண்டா?

சம்புகன் ஒரு சாதாரண மனிதன். அவன் தவம் செய்கின்றான். ஒரு சூத்திரன் தவம் செய்யக் கூடாது என்பதற்காக இராமன் சம்புகனின் தலையை வெட்டுகின்றான்.

ஆதிக்க சக்திகள் அடிமைகளை அன்போடு "தம்பி" என்று அழைத்து தொடர்ந்தும் வர்க்க பேதங்களை காப்பாற்றுவார்கள் என்பதற்கு குகன் பாத்திரம் ஒரு உதாரணம்.

வர்க்க பேதங்களை மாற்ற விரும்புபவர்களின் தலையை வெட்டி விடுவார்கள் என்பதற்கு சம்புகன் பாத்திரம் ஒரு உதாரணம்.

சபேசண்னே நான் தமிழ் இலக்கியம் பெயிலண்னே மற்றதுகள் என்ன பாசோ எண்டு கேக்கிரமாரி கிடக்கு ஓமண்னை நான் போடர்லைனில சித்தி. உதுதான் காரணமோவெண்டு யோசிக்கிரநான். அப்ப அவர் சொல்லித்தந்ததெல்லாம் பிழையே? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(:lol: நெடுக்ஸ்.

இராமாயணத்தில் சமத்துவமா? ஹி ஹி. நல்லா தான் கதை சொல்றீங்க. கம்பர் தமிழில் பாடும்போது "தமிழ் பண்பாடும்" சேர்ந்து தான் அதை மெருகேற்றியது. வால்மீகி ரமாயணம் படித்தா காறித்துப்ப தான் வேண்டும். :lol::lol:

நீங்கள் கம்பர் தமிழில், அதுவும் எமது பண்பாடு கலந்து பாடிய ரமாயணத்தை கொண்டுவந்து சமத்துவம் பேசாதீங்கோ.

குறிப்பு: வால்மீகியில், வானரங்கள் கூட "தேவர்களின் மறுபிறப்பு" என்றுதான் கூறுகிறது. உதாரணமாக "இந்திரன் மகன் - வாலி". "வாயு புத்திரன் - ஹனுமான்". "விஸ்வகர்மாவின் மகன் - நளன்", இன்னும் பல. சில நேரம் வானர சேனைகளில் இருந்த ஒன்றுக்கும் உதவாத "கரடிகள்" ஆங்காங்கே வாழ்ந்த "பாவப்பட்ட ஜென்மங்களாக" இருக்கும். :lol: வானர சேனைகளில் கூட "தலமை" என்பது "தேவர்கள் தான்யா". வேறு யாரும் வரமுடியுமா? :)

அயின்ச்ரைன் அய்யா அப்பிடி பாத்தா நாங்களும் தேவர்கள்தானே. வானரங்கள் நாங்களாயிருந்து எங்கட தலமை தேவராயிருந்தா நாங்களும் தேவர்கள்தான். என்ர லொசிக் சரிதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தியில் காட்டிய ராமரை ராமேஸ்வரத்தில் காட்ட விரும்புகிறார்கள்: கருணாநிதி

ஆகஸ்ட் 13, 2007

மதுரை: அயோத்தியில் காட்டிய ராமரை தற்போது ராமேஸ்வரத்தில் காட்ட விரும்புகிறார்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

மதுரையில் நடந்த ராமேஸ்வரம் - மானாமதுரை அகல ரயில் பாதை தொடக்க விழாவில் பேசிய கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெகுவாகப் புகழ்ந்தார்.

கருணாநிதி பேசுகையில், இந்த அகல ரயில் பாதை இன்று திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் கடந்த 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் நடந்தது.

இந்தத் திட்டம் அப்படியே அடிக்கல் நாட்டு விழாவோடு நின்று விடாமல், இன்று முழுமை பெற்று அமலுக்கு வந்துள்ளதற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஒரு காரணம். உரிய நிதியை ஒதுக்கி திட்டத்தை முழுமை பெற உதவியவர் அவர்தான்.

அதேபோல மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது சகா வேலு ஆகியோரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

பாலங்கள் ஊர்களை இணைப்பது மட்டுமல்லாமல், சமுதாயங்களை இணைப்பதற்கும் இந்த நாட்டிலேய தேவைப்படுகிறது. அந்தப் பாலங்களையும் இணைக்கக் கூடிய வல்லமையும், திறமையும் வாய்ந்த ஒருவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கிற சோனியா காந்தி.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் சிறந்த உதாரணமாக திகழ்கிறார் சோனியா காந்தி. அவருடைய சிறப்பு மிக்க தலைமையின் கீழ் இந்த பாலங்கள் மட்டுமல்ல, இடையில் உள்ள பாலங்கள் மாத்திரமல்ல, பல மதங்களுக்கிடையே, சமூக நல்லிணக்கப் பாலங்களையும் அமைப்பதற்கான ஆர்வம், அமைப்பதற்கான திறமை நமக்கெல்லாம் நிச்சயம் உண்டு.

மத்தியிலே நடைபெறுகிற ஆட்சி, தமிழகத்திலே நடைபெறுகிற இந்த மாநில ஆட்சி, இந்த இரண்டு ஆட்சிகளும் ஒன்றுக்கொன்று உறவோடு, நட்போடு, விட்டுக் கொடுக்கின்ற தன்மையோடு நடைபெறுகின்ற காரணத்தால்தான் மக்கள் பல நன்மைகளை சாதனைகளைப் பெற முடிந்திருக்கிறது.

இந்த இணக்கமான கொள்கை முறையினால் ஏற்பட்டுள்ள நன்மைகள் பலப் பல. ரூ. 2,427 கோடி முதலீட்டில் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் அதில் ஒன்று. அந்தத் திட்டம் விரைவில் முடியக் கூடிய தருவாயை நெருங்கிக் கொண்டுள்ளது.

அதைத் தடுக்க வேண்டும் என்று ஒரு சிலர் முயன்று கொண்டிருக்கின்றனர். அயோத்தியில் காட்டிய ராமரை தற்போது ராமேஸ்வரத்தில் காட்ட விரும்புகிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி ராமர் எங்களுக்கும் வேண்டியவர்தான், நாங்கள் அவருக்கு துரோகி அல்ல என்று கூறுகிற பொதுமக்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல நூறாண்டு கால கனவான தமிழ் செம்மொழி கனவு நனவாக சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், அர்ஜூன் சிங்குமே காரணம்.

தமிழ் மொழிச் சான்றோர்களுக்கு இனி தேசிய விருது வழங்க வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் அறிவித்துள்ளார். அது தமிழ் மொழிக்கு கிடைத்துள்ள மற்றொரு பெருமையாகும்.

இதுபோல தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆய்வுக் கூடம் ரூ. 500 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை அருகே ஓரகடத்திலே அடிக்கல் நாட்டப்பட்டது. நோக்கியா செல்போன் தொழிற்சாலையும் தொடங்கப்பட்டிருக்கிறது. தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையமும் தமிழகத்திலே, தாம்பரத்திலே நிறுவப்பட்டிருக்கிறது.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் விரைவிலே தொடங்கப்படவுள்ளது. மகா பயங்கரமான பொடா சட்டத்தை ரத்து செய்த பெருமையும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கே உரித்தானதாகும்.

செல்போன் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சேலம் உருட்டாலையை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி, புதிய குளிர் உருட்டாலை அமைக்க ரூ. 1,553 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கத்திப்பாரா சாலை சந்திப்பிலே பிரமாண்டமான மேம்பாலப் பணி மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நடந்து வருகிறது.

தமிழகம், புதுச்சேரி ஆகியவை பயன் பெறும் வகையில் 10 புதிய ரயில்கள் இந்த ஆண்டு இயக்கப்படுகின்றன. வருமான வரித்துறை மூலம் பல சலுகைகளை நம்முடைய நிதியமைச்சர் அவருடைய திறமையினால் அளித்திருக்கிறார்.

இத்தனை திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவேற மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கிறது என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பாம்பன் கடல் பாலப் பணிகளை திறமையாக மேற்கொண்டதற்காக தென்னக ரயில்வேக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்

http://thatstamil.oneindia.in/news/2007/08/13/karuna.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பு சம்பந்தப்பட்ட இராமாயணம் தொடர்பான சில முக்கிய கருத்துக்கள் இவ்விணைப்பிலும் உண்டு காண்க.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry333718

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் மணல் திட்டைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு கம்பரோ வால்மீகியோ அமெரிக்க சறற்லைடோ அவசியமில்லை.

அறிவியல் ஆதாரங்கள் ஏதுமின்றி கற்பனைக் கதையை மட்டுமே எப்படி சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியும் ?

பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தால் பின்னர் அது மக்களால் பாவிக்கப்பட்டிருந்ததற்கான ஆதாரங்களும் சரித்திரத்தில் இல்லை. இப்படியான ஒரு பாலத்தைக் கட்டி முடிக்க பல வருடங்கள் ஆகியிருக்கும். பாக்கு நீரணையைக் கடப்பதற்கு இலகுவான விரைவான வழி படகுகள் மூலம் கடப்பதேயாகும். இலகுவான வழியை விட்டு பிற்காலத்தில் யாருக்குமே பயன்படாத பாலத்தை ஏன் அமைக்க வேண்டும் ? பாலம் அமைக்கும்வரை இராவணன் பூப்பறித்துக் கொண்டிருந்தானா ?

கற்பனைக் கதை என்றால் என்னத்துக்கு இராவணன் தமிழன், திராவிடன் என்ற சுத்துமாத்து வேறு விடுகின்றார்கள். அதையும் கற்பனையாக எடுக்க வேண்டியது தானே?

காலம் காலமாகச் சொல்லப்படுகின்ற ஒருவாதத்தை பொய் என்று நிருபிக்க உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது. அதைச் சொல்லுங்கள். தமிழக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் 100 வீதம் பொய் என்று தான் சொல்லியாகவேண்டும். அதற்கான நியாயங்களையும் சொல்லித் தான ;ஆகவேண்டும். இல்லாவிட்டால் சேது சமுத்திரத்திட்டத்திற்கு ஆயிரம் தடைகளைக் கொண்டு வந்து தடுக்க நிறையப் பேர்கள் உளர்.

இராவணன் பூப்பறித்துக் கொண்டிருந்தானா இல்லையா என்பது எல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பூப்பறிப்பது பற்றி எனக்கும் நிறையச் ந்தேகம் உண்டு. ஆரிய மன்னன் சப்புமல் குமரா யாழ்பாணத்தைப் பிடிக்கின்றபோது ஈழத்தமிழன் பூப்பறித்துக் கொண்டிருந்தனா?

போத்துக்கேயன் இலங்கையைப் பிடிக்க தமிழன் பூப்பறித்தானா?

1948 இல் இலங்கையை ஒன்றாக்கி விட்டு வெள்ளையன் சொல்லும்போதும் தமிழன் பூப்பறித்தானா?

யாழ்பாணத்தை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்த போது 6 லட்சம் தமிழ்மக்களும் பூப்பறித்துக் கொண்டிருந்தார்களா?

இராமர் பாலத்தைக் கட்டி முடிக்கப் பல ஆண்டுகள் ஆனது என்பவர்கள், பிரமிட்டையோ, இதர 7 அதிசயங்களையோ மனிதனால் கட்டி முடிக்க எவ்வளவு காலம் எடுத்திருக்கும் என்பது பற்றிச் சிந்திப்பார்களாக. அதைக் கணக்கில் எடுத்தால் இராமர் பாலம் என்பது வெறும் தூசியாகும்.

மேலும் ஒரு கவிஞன் என்றால் மிதமிஞ்சிய கற்பனையோடு ததான் பாடல்கள் எழுதுவான். அது தான் கவிஞன். திரு. புதுவை இரத்தினதுரை ஐயா ஒரு மாக்சியவாதி. ஆனால் அவர் எழுதுகின்ற பாடல்களைப் பார்த்தாலே தெரியும்,

"....தலைவனின் விழிகளில் தீப்பிளம்பு, தடைகளை உடைத்து...."

அல்லது,

தலைவன் விழிகள் அசையும் திசையில் புலிகள் பாய்ந்தனர் என்ற மாதிரி எல்லாம் பாடல்கள் அமைந்திருக்கும். அதற்காகத் தலைவரின் கண்களில் நெருப்புப் பிளம்புகள் உருவாகுவது போலவோ, அல்லது தலைவர் தேவையில்லாமல் கண் முழிகளை அசைக்காமல் வைத்திருக்கின்றார் என்று வாதிக்க முடியுமா?

இதில் தப்புச் சொல்லவில்லை. ஒரு கவிஞன் என்பவன், அதிக கற்பனையோடு தான் கவி பகிர்வான். அதைப் போய்ப் பிடித்துக் கொண்டு, கருத்தெழுதுவது எல்லாம் சுத்த முட்டாள்தனம்.

இராமன் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது, பிற்காலத்தில் தான், அவர் வாழ்ந்த காலத்தில் அவரைக் கடவுளாக யாருமே கொண்டதில்லை. இராமாயணம் தொடர்பான மக்களின் மனங்களில் ஏற்பட்ட தாக்கம் தான், அவரைப் பிற்காலத்தில் இறைவனின் அவதாரமாகக் கொள்ள வைத்திருக்கலாம்.

இராவணன் புஷ்பக விமானத்தில் இலகுவாக கடலைக் கடந்து சென்றுவிட்டான். கடவுள் அவதாரமாகிய இராமருக்கு விமான டெக்னோலொஜி கிட்டாதது ஏனோ ?

புஸ்பக விமானம் தொடர்பாக வெளிநாட்டவன் எப்படிக் கருத்தெடுத்திருப்பான் என்றால், அக்காலத்திலேயே, ஒரு இந்தியன் பறப்பது தொடர்பாகச் சிந்தித்திருக்கின்றான், அவனின் சிந்தனையுலகம் பரந்துபட்டதாக இருந்தது என்று யோசித்திருப்பான். ஆனால் இப்போதுள்ள நம்மவர்களுக்கு வெள்ளைக்கு கால் நக்கிப் பழக்கமே தவிர சொந்தமாகச் சிந்தித்துப் பழக்கமில்லைத் தானே. அது தான் இப்படிப் பிரச்சனை.

Link to comment
Share on other sites

நல்ல ஒரு இணைப்பு சுகன் அருமையான தகவல்கள் தமிழரின் பெருமையினை சொல்லும் ஒரு வீடியோ.

Link to comment
Share on other sites

:P கொஞ்ச நாட்களாக நான் இங்கு வரவில்லை அதற்கிடையே இப்படி ஒரு ரீல் இங்கே ஓடிக்கொண்டுள்ளதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P கொஞ்ச நாட்களாக நான் இங்கு வரவில்லை அதற்கிடையே இப்படி ஒரு ரீல் இங்கே ஓடிக்கொண்டுள்ளதா

றீலுமில்ல படமுமில்ல நாமளும் நம்ம பங்கிற்கு ராமர்பாலத்த அகழ்வாராச்சி செய்து, அதன்மூலமா ராமாயணத்தின்ர பலவடிவங்கள சீர்தூக்கி பாத்து, நமக்கென ஒரு ராமாயணம் எழுதிறம். நீங்களும் உங்கட பங்களிப்பை செய்யலாம். :)

Link to comment
Share on other sites

தமிழ் பௌவுத்தம்,ஆரியம்,பார்ப்பன சூழ்ச்சி, வர்ணாச்சிரமம் என்று இங்கு நாங்கள் பக்கம் பக்கமாக எழுதிய அத்தனையும் உள் அடக்கியதாக இந்த வார நிலவரம் நிகழ்ச்சி வந்துள்ளது.முதலில் அதனைப்பார்த்து விட்டு வந்து கருத்து எழுதுங்கள்.ஏனேனில் இப்போது தான் பகிரங்கமாக இளங்குமரனும்,யோகியும் இது பற்றி விரிவாகக் கதைத்து உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பௌவுத்தம்,ஆரியம்,பார்ப்பன சூழ்ச்சி, வர்ணாச்சிரமம் என்று இங்கு நாங்கள் பக்கம் பக்கமாக எழுதிய அத்தனையும் உள் அடக்கியதாக இந்த வார நிலவரம் நிகழ்ச்சி வந்துள்ளது.முதலில் அதனைப்பார்த்து விட்டு வந்து கருத்து எழுதுங்கள்.ஏனேனில் இப்போது தான் பகிரங்கமாக இளங்குமரனும்,யோகியும் இது பற்றி விரிவாகக் கதைத்து உள்ளனர்.

3000 4000 வருசத்து க்க முன்னமே உவங்கள் பிளான்பண்ணி கதைகட்டி விட்டிருக்கிறாங்கள். :angry:

Link to comment
Share on other sites

ராமர் பாலத்தை இடிப்பது என்பது தவறான முடிவு..பேனி பாதுகாக்ப்பட வேண்டிய பொக்கிஷம் அது...இந்த பாலம் ஒரு மேற்கத்தைய நாட்டி;ல் அமைந்திருந்தால்..இன்று அதற்கு அளிக்கப்டும் தனித்துவமே வேறு..........

Link to comment
Share on other sites

ராமர் பாலத்தை இடிப்பது என்பது தவறான முடிவு..பேனி பாதுகாக்ப்பட வேண்டிய பொக்கிஷம் அது...இந்த பாலம் ஒரு மேற்கத்தைய நாட்டி;ல் அமைந்திருந்தால்..இன்று அதற்கு அளிக்கப்டும் தனித்துவமே வேறு..........

சுண்டல் அண்ணா தீர்பை சொல்லிட்டார் எல்லாரும் கேளுங்கோ...............சுண்டல் அண்ணா இதை பற்றி தேடல் நீங்க செய்யலாமே..............சுண்டு அண்ணா இராமர் பாலமா இருந்தா சரி வெள்ளவத்தையில இருகிற பாலமா இருந்தாலும் சரி துங்காபியில இருகிற பாலமா என்றாலும் சரி தேவை இல்லை என்றா உடைக்கலாம்......நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லுங்கோ............. :P :P :P

Link to comment
Share on other sites

ராமர் பாலத்தை இடிப்பது என்பது தவறான முடிவு..பேனி பாதுகாக்ப்பட வேண்டிய பொக்கிஷம் அது...இந்த பாலம் ஒரு மேற்கத்தைய நாட்டி;ல் அமைந்திருந்தால்..இன்று அதற்கு அளிக்கப்டும் தனித்துவமே வேறு..........

ஒரு நாட்டின் அல்லது ஒரு நாட்டின் ஒரு பிரதேசத்தின் நலனுகாக உண்மையானதாக இருப்பினும்[ராமாயனம் இல்லை அது வேரு கதை] இடிப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை.ராமாயனம் என்பது கட்டுகதை அபத்தமானது எம்மை அதாவது ஈழத்தமிழர்களையும் தென் இந்திய மக்கள் அதாவது திராவிடர்களையும் அபத்தமான வழியில் சித்தரிக்கும் ஒரு கட்டுக்கதை .என்னங்கடாப்பா அந்த காலத்தில ராமர் அக்கினி அஸ்திரம் நாகஸ்திரம் என பல பல நவீன ஏவுகனைகளை எல்லாம் பாவித்திருகின்றார்.ஆனால் இந்த ஏவுகனை தொழில்நுட்பத்தை பல்லாயிரம் ஆன்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக வால்மீகியாலும் கம்பராலும் புழுடா விட்ட ராமரால் பாவிக்கப்பட்டிருகின்ரது ஆனால் இந்தியா இன்றோ பல்லாகியம் கோடிகளை செலவிட்டு ஆராய்சி செய்கின்றது ஏவுகனைகளை கன்டு பிடிக்க ஏன் ராமர் தனது ஆய்வுகளை ஓலையில் எழுதி வைக்க மறந்திட்டாரோ.

விமானம் இருந்தது என சொல்கின்ரார்கள் ஓகே சிலர் வால்மீகிக்கு வால்பிடிகீனம் எப்படி அவரால் விமானம் என்ற ஒன்றை கற்பனை செய்திருப்பார் என ஆனால் பறவைகள் பறப்பதை அந்த அறிவுஜீவிகள் சிந்திப்பதில்லை ரைட் சகோதரர்களுக்கும் விமானம் என்னும் எண்ணம் பறவைகளை கொன்டுதான் வந்திருந்தது.அன்றைய விமானப்படையை கொன்ட ஈழத்தமிழனாகிய இராவனனின் பரம்பரையன நாம் அதற்கு பிறகு பல்லாயிரம் ஆன்டுகளுக்கு பிறகு இன்றுதான் வான்படையை அமைகவேன்டிய தூரதிச்டம் எமக்கு என்ன செய்ய

பெரியாரை திட்டவென ஒரு கூட்டம் களத்தில் இருகின்றது அந்த நபர்களுக்கு பெரியார் என்னும் தனிமனிதனை பிடிக்காதாம் ஏன் எனின் அவர் ஒரு கன்னடராம் அவர் தமிழரின் தலைவராக முடியாதாம் அதுதான் அவர்களுக்கு பிரச்சினையே அன்றி திராவிடம் அல்ல பெரியாரை எதிர்பதாக சொல்லி முழு திரவிட கொள்கைகலையும் லுசுத்தனமாக எதிர்கீனம் சிலர் என்பது வேதனையானது

சுண்டல் எந்த வேறொரு நாட்டில் என கேட்டிருந்தீர்கள் வேறொரு நாட்டில் என்றால் இதனை நாட்டு நலனுகாக பாவித்திருபார்கல் ஆனால் இந்தியாவில் வடக்கு இந்தியர்களுக்கு தேவை தமிழன் நல்லா இருக்க கூடாது என்பது அதற்காகத்தான் இந்த ராமர் பால அழுகை சேது திட்டத்தால் தெரிந்தோ தெரியாமலோ தமிழீழமும் நலன் பெறும் என்பதும் குறிபிடதக்கது.ஒன்றுக்கும் ஒருபிரியோசனமில்லாத மணல் திட்டுகள் அதாவது சில அறிவுஞீவிகள் சொல்லும் ராமர் பாலம் இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன முழுசாகவும் இடிகவில்லையே சில கிலோமீற்ரர்கல்தானே இடிக்கபடுகின்ரது இவர்களுகேன் குத்துது தமிழகம் பொருளாதார நிலையில் காத்திரமான நிலையை வகிக்க கூடாதென்பதை தவிர வேறு யாது

Link to comment
Share on other sites

கற்பனைக் கதை என்றால் என்னத்துக்கு இராவணன் தமிழன், திராவிடன் என்ற சுத்துமாத்து வேறு விடுகின்றார்கள். அதையும் கற்பனையாக எடுக்க வேண்டியது தானே?

இராவணன் கற்பனையாக இருக்கலாம் அல்லது உண்மையாக வாழ்ந்த திராவிட அரசனாக இருக்கலாம். ஆனால் இராவணனை கற்பனைக் கதைகள் மூலம் கொடூரமானவனாகக் காட்டுவதன்மூலம் ஆரியரை மேன்மைப் படுத்துவதில்தான் பிரச்சனை.

காலம் காலமாகச் சொல்லப்படுகின்ற ஒருவாதத்தை பொய் என்று நிருபிக்க உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது.

காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருவதனால் பொய் உண்மையாகி விடாது. உண்மை என்று நிரூபிப்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இராமாயணத்தில் சொல்லப்பட்ட இடங்கள் உண்மையாக இருப்பது எப்படி ஆதாரமாக முடியும். அவை இராமாயணம் உருவாவதற்கு முன்னரே இருந்தவை. மலையைப் பெயர்த்தல் விமானத்தில் பறத்தல் போன்ற சம்பவங்களால் அது நூறு வீதம் உண்மை என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது. இராமன் வாழ்ந்த காலத்தைக் கூடச் சொல்லக்கூடிய அளவிற்கு இராமாயணத்தில் ஆதாரங்கள் எதுவுமில்லை.

இராவணன் பூப்பறித்துக் கொண்டிருந்தானா இல்லையா என்பது எல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பூப்பறிப்பது பற்றி எனக்கும் நிறையச் ந்தேகம் உண்டு. ஆரிய மன்னன் சப்புமல் குமரா யாழ்பாணத்தைப் பிடிக்கின்றபோது ஈழத்தமிழன் பூப்பறித்துக் கொண்டிருந்தனா?

போத்துக்கேயன் இலங்கையைப் பிடிக்க தமிழன் பூப்பறித்தானா?

1948 இல் இலங்கையை ஒன்றாக்கி விட்டு வெள்ளையன் சொல்லும்போதும் தமிழன் பூப்பறித்தானா?

யாழ்பாணத்தை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்த போது 6 லட்சம் தமிழ்மக்களும் பூப்பறித்துக் கொண்டிருந்தார்களா?

வலிமையானவர்கள் போர்தொடுத்து பிரதேசங்களைக் கைப்பற்றி வெற்றி பெறுவது ஆச்சரியமானதல்ல. போர்த்துக்கேயர் ஆயுத பலத்தோடு தரையிறங்கியபோது எதிர்க்க முடியாது துப்பாக்கிக்குப் பயந்து பின்வாங்கினர். பிரித்தானியர் வெளியேறியபோது சிறந்த தலைமையைக் கொண்டிராத தமிழர்கள் சிங்களவருக்கு அடிமையாகினர்.

யாழ்ப்பாணத்தைப் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்தபோது அங்கிருந்தவதர்கள் 6 இலட்சம் பொதுமக்களே. இதற்கும் இராவணன் பூப்பறித்ததற்கும் என்ன தொடர்பு ? பாலத்தைக் கட்டி முடிக்க பல மாதங்களாவது ஆகியிருக்கும். என்னதான் காரணம் சொன்னாலும், இராமனின் படையை எதிர்க்க சக்தியிருந்தும் எதிரியை பாலம் கட்டி முடிக்கும்வரை வேடிக்கை பார்ப்பதுதான் பூப்பறித்தலுக்கு ஒப்பானது.

இராமர் பாலத்தைக் கட்டி முடிக்கப் பல ஆண்டுகள் ஆனது என்பவர்கள், பிரமிட்டையோ, இதர 7 அதிசயங்களையோ மனிதனால் கட்டி முடிக்க எவ்வளவு காலம் எடுத்திருக்கும் என்பது பற்றிச் சிந்திப்பார்களாக. அதைக் கணக்கில் எடுத்தால் இராமர் பாலம் என்பது வெறும் தூசியாகும்.

5000 வருடங்கள் பழமையான பிரமிட்டுகளை யார் கட்டியது, எப்போது கட்டியது என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் உண்டு. எப்படிக் கட்டியிருப்பார்கள் என்பதற்கும் ஆதார ரீதியான வாதங்கள் உண்டு. சில கேள்விகளுக்கான விடைகளை இப்போதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இராமர் பாலம் மனிதனால்ல் கட்டப்பட்ட பாலம்தானா என்றுகூட நிறுவப்பட முடியவில்லை.

அத்துடன் முக்கியமாக இப் பாலத்தின் பயன்பாடு பின்னர் வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப் பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் புராணங்களில்கூட இல்லை.

மேலும் ஒரு கவிஞன் என்றால் மிதமிஞ்சிய கற்பனையோடு ததான் பாடல்கள் எழுதுவான். அது தான் கவிஞன். திரு. புதுவை இரத்தினதுரை ஐயா ஒரு மாக்சியவாதி. ஆனால் அவர் எழுதுகின்ற பாடல்களைப் பார்த்தாலே தெரியும்,

இதில் தப்புச் சொல்லவில்லை. ஒரு கவிஞன் என்பவன், அதிக கற்பனையோடு தான் கவி பகிர்வான். அதைப் போய்ப் பிடித்துக் கொண்டு, கருத்தெழுதுவது எல்லாம் சுத்த முட்டாள்தனம்.

கவிஞன் என்றால் மிதமிஞ்சிய கற்பனையோடுதான் எதையும் படைப்பான். இதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. கற்பனைக் காவியத்தை இலக்கிய ரீதியாக இரசிக்காமல் அது உண்மை என்று வாதிடுவதுதான் முட்டாள்தனம்.

புஸ்பக விமானம் தொடர்பாக வெளிநாட்டவன் எப்படிக் கருத்தெடுத்திருப்பான் என்றால், அக்காலத்திலேயே, ஒரு இந்தியன் பறப்பது தொடர்பாகச் சிந்தித்திருக்கின்றான், அவனின் சிந்தனையுலகம் பரந்துபட்டதாக இருந்தது என்று யோசித்திருப்பான். ஆனால் இப்போதுள்ள நம்மவர்களுக்கு வெள்ளைக்கு கால் நக்கிப் பழக்கமே தவிர சொந்தமாகச் சிந்தித்துப் பழக்கமில்லைத் தானே. அது தான் இப்படிப் பிரச்சனை.

இராமாயணம் எழுதப்பட்டு இத்தனை காலத்தில் அதை ஆராய்ந்து அறிவியல் ரீதியாக யாரும் எதையும் சாதித்திக்கவில்லை. வெள்ளைக்காரன் இராமாயணத்தைப் படித்து அறிவியல் ரீதியாகப் பாராட்டினால் அவனது புத்திசாலித்தனத்திற்கு என்ன காரணம்? நாம் இப்போது பாவிக்கும் மலசல கூடம்கூட வெள்ளைக்காரன் வடிவமைத்ததுதான். அந்தவகையில் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அறிவியல் சாதனைகளுக்காக அவர்களைப் பாராட்டுவது எனக்கு அசிங்கமாகப் படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில கூடுதலா மழை பெய்தாலே வெளிநாட்டுச்சதி என்டு சொல்லுற விஸ்வ இந்து பரிஷ சனங்களின்ற கதையெல்லாம் கணக்கில எடுக்கக்கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் சார்

உங்களின்..

இராவணன் = திராவிடன்

இராமன் = ஆரியன் என்ற நிறுவலுக்கு என்ன ஆதார அடிப்படைகளை வைச்சிருக்கிறீங்க..!

நாம் தந்த இணைப்பில் உள்ள கட்டுரையாளர் இப்படியும் சொல்கிறார்

இராவணன் = பிராமணன் ( வான்மீகியின் இராமாயண கூற்றுப்படி)

இராமன் = கறுப்பன் ( வான்மீகியின் கூற்றுப்படி)

இந்தளவுக்கு கூட இல்லாமல்.. உங்கள் தர்க்கம் விதண்டாவாதமாக எழுகிறதே தவிர ஆதாரங்களை தேடும் அளவிற்கு இல்லையே. விதண்டாவாதம் தேவையா.. ஆதாரத் தேடலைச் செய்யக் கூடிய அணுகுமுறைகள் தேவையா..??! தீர்மானியுங்கள்.

Link to comment
Share on other sites

இராவணன் பிராமணனாக இருக்க முடியாது. இராவணன் ஒரு திராவிடன்.

இராவணனை பிராமணன் அல்ல என்று என்னால் முடிந்தளவிற்கு தர்க்கிக்கின்றேன்.

சற்று பொறுமையா படிக்கவும்.

உங்களுக்கு இராமனின் தந்தை தசரதனை தெரிந்திருக்கும். அவனுக்கு பல ஆயிரம் மனைவிகள் உண்டு என்று இராமாயணம் கூறுகின்றது. தசரதனுக்கு பல ஆயிரம் மனைவிகள் வந்ததன் காரணம் உங்களுக்கு தெரியுமா?

பரசுராமன் என்ற பார்ப்பனன் கோடரியால் சத்திரியர்களை வதம் செய்து வந்தான். (சத்திரியர்களை விட பார்ப்பனர்கள் வலிமை மிக்கவர்கள் என்பதை காட்டுவதற்கு பரசுராமன் பத்திரம் உருவாக்கப்பட்டதாக சொல்வார்கள்)

இந்தப் பரசுராமன் ஒவ்வொரு தேசத்திற்கும் சென்று அந் நாட்டின் மன்னர்களை கொன்று வந்தான். இந்தப் பரசுராமன் கொலை செய்வதிலும் ஒரு கொள்கையை வைத்திருந்தான்.

அன்றைக்கு திருமணமான மன்னர்களை மட்டும் கொலை செய்யாமல் விட்டுவிடுவான்.

இதை தசரதன் அறிந்து வைத்திருந்தான். இதனால் பரசுராமன் தசரதனை கொல்லும் நோக்கத்தோடு அயோத்திக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் கண்ணில் அகப்படுகின்ற பெண்ணை திருமணம் செய்து தப்பித்துக் கொள்வான்.

தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள் என்று சொல்கிறார்கள். ஆகவே பரசுராமன் தசரதனைக் கொல்வதற்கு அறுபதாயிரம் முறை முயற்சித்திருக்க வேண்டும்.

தசரதனால் தப்ப முடிந்ததே தவிர பல ஆயிரம் மன்னர்கள் பரசுராமனின் கோடரிக்கு இரையானார்கள்.

இவ்வாறு சத்திரய வம்சத்தை அழித்தவனும், இராமனுடைய தந்தையை அறுபதாயிரம் முறை கொலை செயய முயற்சித்தவனுமாகிய பரசுராமன் இராமனை சீதையை மணம் முடித்து மிதிலையில் இருந்து திரும்புவம் வழியில் எதிர்கொள்கின்றான்.

தன்னுடைய விஸ்ணுதனுசை நணேற்றி போருக்கு வரச் சொல்லி அறைகூவுகின்றான்.

இராமன் வில்லை நாணேற்றி வெற்றி பெற்றாலும், இராமனின் அம்பு ஒரு இலக்கை தாக்க வேண்டும் என்று கொள்கை இருந்தாலும் பரசுராமன் மேல் அம்புவிட இராமன் மறுக்கின்றான்.

அதற்கு இராமன் சொல்கின்ற காரணம் இதுதான்:

பூதலத்து வேந்தைஎலாம் பொன்று

வித்தனை ஆயனும் வேத

வித்து ஆய மேலோன் மைந்தன் நீ

ஆதலில் நின்னைக் கொல்லல் ஆகாது.

பூமியிலே உள்ள மன்னர்கள் எல்லோரையும் நீ கொன்றிருந்தாலும், உயர்த பார்ப்பனனாக நீ இருக்கிறாய். ஆகவே உன்னைக் கொல்லக் கூடாது என்று இராமன் சொல்கிறான்.

இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்!

பல ஆயிரம் மன்னர்களைக் கொன்ற, தன் தந்தையை பல்லாயிரம் தடவை கொல்ல முயன்ற ஒருவனை பார்ப்பனன் என்ற காரணத்திற்காக இராமன் கொல்லாது விடுகின்றான்.

ஆனால் இராவணனைக் கொலை செய்கின்றான். இராவணன் ஒரு பார்ப்பனாக இருந்திருந்தால் இராமன் கொன்றிருப்பானா?

இல்லவே இல்லை.

இராவணன் ஒரு திராவிடன் என்பதனாலேயே இராமன் இராவணனைக் கொன்றான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்கள் கருத்தே பல திரிபுகளைத் தாங்கியுள்ளது.

செய்யுள் வேதக்கலை பற்றித்தான் உச்சரிக்கிறதே தவிர பார்பர்னன் என்ற உச்சரிப்பை அல்ல.

வேத நூல்களைப் பார்பர்னர் அல்லாதோரும் கற்றுள்ளனர்.

இராவணன் கூட வேதத்தில் சிறந்து விளங்கியவன். சிவ பூசை செய்பவன். சிவனிடம் அழியா வரங் கூடப் பெற்றவன். இருந்தும் தவறான தன் நடத்தையால் தவ வலிமையை இழக்கிறான் என்பதுதான் கதையின் பிரதான பொருளே.

உங்கள் தர்க்கத்தில் எங்கும் இராவணனை திராவிடன் என்று கூறவோ.. அல்லது பிராமணன் அல்ல என்று கூறவோ இடமளிக்கப்படல்ல.

வேதங்களை கற்றவர்களுக்கு இறைமதிப்பளிக்கப்பட்டது.

பரசுராமன்.. வேதத்தைக் கற்றறிந்தவன் என்பதிலும் அவன் பிறர் மனையை அடையவல்ல கொலை செய்கின்றான்.சமூகத்தில் தவறான நடத்தையை கண்டு பொங்கி எழுகிறான். அதைத் தடுக்க கொலை செய்கிறான்.

இராமன் என்ற பாத்திரப்படைப்பை.. வான்மீகி காட்டியதை விட கம்பன் மேலும் புனிதப்படுத்திக் காட்டுகிறான்.

அந்த வகையில் சில சமூகச் சிந்தனைகளை கம்பனும் தன் பங்கிற்கு கதைக்குள் கொண்டு வந்துள்ளான்.

எந்த இடத்திலும்.. இராவணன் திராவிடன்.. என்று கூறி நிற்கல்ல..! பிராமணன் அல்ல என்றும் கூறிநிற்கல்ல.

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் அப்போ.. சிவனை அடையக் கூடிய சக்தி.. இராவணனுக்கு (திராவிடனுக்கு) வழங்கப்பட்டிருக்கே. அப்போ.. பார்பர்னன் மட்டும் தான் உயர்ந்தவன் என்பதும் அவனே கடவுளை அடைய முடியும் என்பதும் தவறென்று ஆக்கப்படுகிறதே.

அதுதவிர விபீடனன் என்ற இராவணனின் தம்பி இராமனின் உற்ற தோழனாக இருக்கிறானே..?! அவனை இராமன் அழிக்கவே முறபடல்லையே. அவனைத்தானே இலங்காபுரிக்கு மன்னன் ஆக்குகிறான். ஏன் யுத்தம் செய்து இராவணைனை ( உங்கள் பார்வையில் திராவிடனை) வென்றவன்.. மீண்டும்.. திராவிடனிடமே.. சத்திரியனிடமே இலங்கையை கையளிக்க வேண்டும்..???!

முற்றாக முரண்பாடா எல்லோ இருக்குது..??!

இராமன்.. சமூக நீதியின் பக்கம் நிற்கிறதாகவே கம்பன் காட்ட விளைகின்றான். அவனைப் பார்பர்ன விசுவாசியாக்கி.. ஆரியனாக்கி.. பார்ப்பது உங்கள் போன்ற சிலரே அன்றி இராமாயணம் அல்ல..!

இராமாயணம் சமூக நீதியைப் போதிக்கும் கதை.

எமக்கு தேவை கதையில் வந்துள்ள வரலாற்றுச் சான்று தேடலை அறிவியல் மயப்படுத்தலே அன்றி.. கதையின் கதாப்பாத்திரத் திரிபுகளால்.. ஆரிய திராவிட பிராமண எதிர்ப்பு வர்க்க பேதக் கருத்துக்களை திரிபுகளூடு விதைப்பதல்ல..! :lol:

Link to comment
Share on other sites

ஒவ்வருத்தரும் ஒவ்வோரு விதமா இரமாயனத்த சொல்லலுறிங்கள் நீங்கள் இப்படி கத்தி கத்தி விவாதிச்சு என்ன பிரியோசனம்? நாளைக்னே சிட்னிக்கு கம்பன் கழக ஜெயராச் வந்தால் சனம் கூட்டம் கூட்டமா போக போதுகள்... :lol::D:):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வருத்தரும் ஒவ்வோரு விதமா இரமாயனத்த சொல்லலுறிங்கள் நீங்கள் இப்படி கத்தி கத்தி விவாதிச்சு என்ன பிரியோசனம்? நாளைக்னே சிட்னிக்கு கம்பன் கழக ஜெயராச் வந்தால் சனம் கூட்டம் கூட்டமா போக போதுகள்... :D:):D:D

சுண்டல்.. எமது விவாவதம்.. கம்பன் கழக நோக்கில் கம்பன் இராமாயணத்தில் தமிழரின் தமிழின் இலக்கியத் தேடல் செய்வதல்ல.

இராமாயணம் இனங்காட்டக் கூடிய புவியியல் வரலாற்றுச் சான்றுகளுக்கும் நிகழ்கால புவியியலுக்கும் இடையில் உள்ள தொடர்புகளை அறிவியல் மூலம் தேடல் செய்வதே.

இதை இங்கு விவாவதத்தின் ஆரப்பத்திலேயே சொல்லிட்டம்.

ஆனால் இடையில்.. இராமாயணத்தில் வரும் பாத்திரப்படைப்புக்களை திராவிடன் ஆரியன் ஆக்கிய ஆதாரமற்ற திரிபுகளுக்கே தற்போது அவர்கள் செய்வது திரிபே அன்றி சான்றுகள் அடிப்படையில் அமைந்த உண்மைகள் அல்ல என்பதை சொல்ல முற்படுகிறம்.

இது எந்த விதத்திலும் இலக்கிய இரசணையாளர்களைப் பாதிக்கப் போவதில்லை என்பதை நாமும் அறிந்தே உள்ளோம். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.