Jump to content

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்


Recommended Posts

ரிக் வேதத்தின்" முழுமுதல் கடவுள் இந்திரன் கூட இவ்வாறான எத்தகைய சக்திகளையும் பெற்றிருக்கவில்லை.

ரிக் வேதத்தை சரியாக ஆராய்ந்து கற்றுவிட்டு தான் மேற்சொன்ன கருத்தை கூறுகிறீர்களா? இல்லை கூகிள் ஆண்டவர் தான் உங்களுக்கும் அருளினாரா? :unsure:

ரிக் வேதத்தில் சோமன், ருத்ரன் என்ற பெயர்களால் தான் சிவன் குறிப்பிடப்படுகிறான். இந்திரனை தோற்றுவித்ததே சோமன் என்றே சொல்லப்படுகிறது. ஆகவே இந்திரனை சிவனின் ஒரு அம்சமாக தான் வேதங்கள் சொல்கிறது.

" [O Soma!]Father and generator of the gods, the skillful, the Pillar of the Heavens (ie. Lingam), and supporter of Earth. Rishi and Illuminated Sage, greatest of people, apart and wise,

Ushana (Shukracharyar) in knowledge" (Rig Veda .IX.87.2-3)

"Father of sacred chants, Soma flows onwards, the Father of the Earth, Father of the Celestial region, Father of Agni,(Skanda) the creator of Surya,(Brahma) the Father who gave birth to Indra and Vishnu"

(Rig Veda.IX.96.5)

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply

பழம்பெரும் நூல்கள் அடங்கிய இந்த இணையத்தளத்துக்கு சென்று பாருங்கள். வேதம், வேதாந்தம் என்று எத்தனை புரட்டுக்களை பிரித்து பகுதி பகுதியாக வைத்திருக்கிறார்கள். வாசித்தீர்கள் என்றால் அழுத்தம் பன்மடங்கு கூடும். இவற்றை வாசிப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எல்லாம்.

"http://www.sacred-texts.com/hin/index.htm"

அப்படியானால் இந்த வீடியோக்களையும் தவறாது பாருங்கள்

வேதங்களின் விஞ்ஞானம்

(Scientific Verification of Vedic Knowledge in Hinduism )

அந்த வெப்சைட் சொல்கிறது, இந்த வெப்சைட் சொல்கிறது என்று நுனிப்புல் மேயாமல், ஆர்வம் இருந்தால், நேரம் கிடைத்தால் வடமொழி கற்றுக்கொண்டு வேத ஆராய்ச்சி பண்ணுங்கள். அப்போது பல விடயங்கள் தெளிவாகலாம்.

வேதங்களின் அடிப்படை கருத்துக்கள் சரியானவை தான். காலப்போக்கில் சில சுயநலமிகள் அவற்றை பிரயோகித்த விதத்தில் பல திரிபுகளை கலந்து விட்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இது போன்ற திரிபுகளும் தவறான பிரயோகங்களும் எல்லா மத தத்துவங்களுக்கும், மத நூல்களுக்கும் பொருந்தும்.

50 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் சிலரின் தத்துவங்கள் இன்று எத்தனை திரிபுகளையும் ஊழழ்களையும் தவறான தலைமைகளையும் சந்தித்துவிட்டது என்று தமிழகத்தின் திராவிட கழகங்களை பார்த்தாலே தெரியும். அப்படியென்றால் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான தத்துவங்கள் பல தவறான பேர்வழிகளால் திரித்துக் கூறப்படவே வாய்ப்பில்லை என்று கூறிவிட முடியாது.

youtube வீடியோக்களை நேரடியாக களத்தில் எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. கள நண்பர்கள் யாராவது தெரிந்தவர்கள் சொல்லித்தரவும்

Link to comment
Share on other sites

நீங்கள் வேற விஸ்னுதனுசு எண்று கதையை கிளப்பி வொடாதேங்கண்ணா...

[

color="#008000"]'இமைய வில் வாங்கிய ஈசன், "பங்கு உறை

உமையினை இகழ்ந்தனன் என்ன" ஓங்கிய

கமை அறு சினத் தனிக் கார்முகம் கொளா,

சமை உறு தக்கனார் வேள்வி சாரவே.

பொழிப்பு என்ன எண்றால் தக்கனின் வேள்விக்கு செண்று வந்த உமையின் மீது கொண்ட சினதால் வளைந்து பலமான சிவனின் இமைகளை ஒத்தது இந்த தனுசு என்கிறார்.... அதனால்தான் அதற்கு பெயர் சிவ தனுசு...

சபேசன் சொல்லுவது கட்டுக்கதைகள்... ;)

நீங்கள் சொல்வது சரிதான். வால்மீகி இராமயணத்தில் கூட பரசுராமன் இராமனுக்கு வழங்கும் வில்லை விஷ்ணு தனுஷ் என்று குறிப்பிடவில்லை. வெறும் "தனுர்" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தனுசையே காலப்போக்கில் கோதண்டம் என்று அழைத்ததாக கூறுவார்கள். அதை வைத்திருந்ததால் இராமன்

கோதண்டராமன் எனப்படுகிறான்.

பரசுராமன் விஷ்ணுவின் அவதாரமாக கொள்ளப்படுவதால் பேச்சுவழக்கில் அதை விஷ்ணு-தனுசு என்று காலப்போக்கில் மக்கள் அழைக்க தொடங்கி இருக்கலாம்

கம்பனின் பாடல்களை இணைத்தமைக்கு நன்றி. தமிழ் எவ்வளவு அழகான மொழி என்பதற்கு கம்பனின் கவிதைகள் சான்று. கம்பன் வீட்டு கைத்தறி கூட கவி பாடும் என்று சும்மவா சொன்னர்கள்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure::)

குறுக்ஸ். பார்த்தீரா எமது அறிதிறனின் ஆழத்தை. இதை நான் இங்கு இணைக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். நீங்கள் இணைத்துவிட்டீர்கள். :D:D

நமது கல்வியின் படுபிழையான அணுகுமுறை இதுதான். யாராவது கேட்டுவிட்டால், ஒன்று புத்தகத்தை புரட்டி யாரோ சொன்னவற்றை சுமந்து வந்து கொட்டுவது. அல்லது தற்காலத்தில் "எங்கும் நிறைந்தவரும் கேட்டவுடன் ஆயிரமாயிரமாக அள்ளிக்கொடுப்பவருமான கூகிள் ஆண்டவரிடம்" சரணடைவது.

இது காலம் காலமாக, எமது சமயம் கற்பிக்கும் ஒரு வழிமுறை. என்றோ ஆதிசங்கரர் கூறியதை அது உண்மையா அல்லது அவர் ஒரு illusion இற்குள் அகப்பட்டு கொண்டாரா என்று அறியாமல் (கவனிக்க: இது "படிப்பது" அல்ல. It is not studying but learning) அதை எமது முதுகில் சுமப்பது. என்றைக்காவது பழைய குப்பைகளை கிளறாமல் எம்முடைய கூர்ந்த அறிவை பயன்படுத்தி இருக்கிறோமா? :):)

இதில் தவறென்ன.. அகராதி எதற்கு.. உங்களைப் போல அகராதி படிப்பவர்களுக்குத் தானே..???!

இறுதியில் அகராதிக்கே அகராதி படிப்பிக்கப் போயிட்டிங்களே சார். (நினைச்சன் நடந்திட்டுது) :D:D

நாம் சொன்ன ஒரு சிறிய விடயத்தைக் கூட நீங்க உள்வாங்கல்ல.. மீண்டும் மீண்டும்.. உங்கள் விளக்கங்களை ஆங்கிலப் பதங்களை மட்டும் கொண்டு தருவதன் பின்னணியை சுட்டிக்காட்டவே.. ஆங்கில அகராதியைப் பாவிச்சு.. எழுதினோம். உங்கள் விளக்கங்களை ( அதுதான் சிந்தனைக்கு... கற்பனைக்கும் ) உள்ளதை தமிழில் தாருங்கள்..( சரியான தமிழ் பதம் தெரியாட்டில் தெரிந்ததைத் தந்து அடைப்புக் குறிக்குள் () ஆங்கிலத்தில் குறிப்பிடுங்கள். இக்களத்தின் பிரதான நோக்கமே தமிழ் மொழியின் இருப்பை.. வளர்ச்சியை வேண்டுவதுதான். நீங்கள் தமிழன் தானே.. உங்கள் கற்பனை.. சிந்தனை.. எண்ணவுருவை.. தமிழில் வெளிப்படுத்த முடியாமல் இருக்கா சார்.. கம்பன் செய்திருக்கான் தானே..??! நீங்கள் அப்படிச் செய்யுங்க... உங்களுக்கு தமிழனா சிந்தித்து தமிழ் மொழியூடு வெளியீடு செய்கிறேன்... எண்ண உரு (idea)வுக்கு விளக்கமளிக்கிறேன்..!

நீங்க ரெம்ப வீக் இதில தான் சார். உங்களைப் போலவே... ஆங்கில அகராதியைப் புரட்டி.. ஆங்கிலச் சொற்களால சோடிக்க பலர் இருக்கினம்.. ஆனால்.. தமிழில் அதற்கு விளக்கமளிக்கத்தான் ஆக்களில்ல...!

உங்களுக்கு விளக்கமளிப்பதற்கு ஆங்கில அகராதிதான் சரியானது என்பதை தீர்மானிச்சுத்தான்.. அப்படியே தந்தோம்..! அதுக்க ஆழ்ந்து கூர்ந்து நோக்கினோம் என்று கதை. ஆங்கிலத்துக்க பதுங்கி இருந்தம் என்று சொல்லுங்க..!

இந்தத் தலைப்பின் நோக்கமும் நாம் சொன்ன விடயமும் முற்றாக உங்களுக்குப் புரியல்ல. பதக் கூர்மை.. கையாடல் என்பன குறித்து ஆராய வேண்டின் தனி ஒரு தலைப்பை ஆரம்பியுங்கள். ஆங்கிலத்தில் ஆராயனும் என்றால்... ஆங்கிலக் களத்துக்குத்தான் போகனும்.. தமிழில் ஆராயனும் என்றால் தொடர்ந்து இங்கு சந்திக்கலாம்..! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணம்.. ஓர் இலக்கியம். அறிவியல் ஆய்வுக்கட்டுரையல்ல...!

இங்கு சிலர் கம்பராமாயணத்தை ஆய்வுக்கட்டுரை என்ற நோக்கில் பார்க்க விளைவதன் பலனே.. அநாவசிய கருத்து மோதல்கள்.

ஓர் இலக்கியவாதி.. கற்பனைவாதியாகவும் இருப்பான்.. சிந்தனைவாதியாகவும் இருப்பான்.. எண்ணவுருக் கோலத்தைக் கொண்டும் இருப்பான்.

கம்பன் கற்பனைவாதியாக பல இடங்களில் மிளிர்ந்திருக்கிறான்.... அதற்கு உதாரணம் அவசியமில்லை... அதுதான் விஞ்சிக் கிடக்கிறது.. இலக்கியங்களில்..!

சிந்தனைவாதியாக இருந்திருக்கிறான்.. அதற்கு மனிதன் கூட விண்ணில் பறக்க முடியும் அதன் மூலம் இடம்பெயர்வுகளைச் செய்யலாம் என்று சிந்தனை செய்ததைக் காட்டலாம்...! நீரால் பிரிக்கப்பட்ட இரண்டு கரைகளை பாலம் என்ற ஒரு கட்டமைப்பின் மூலம் இணைக்க முடியும் என்பதைச் சிந்தித்திருக்கிறான்..! ( பாலம் இயற்கையானதா இல்ல செயற்கையானதா என்பது இரண்டாம் பட்சமா ஆராய வேண்டியது) நமக்கு இவை.. இலகு.. காரணம் இவை நாம் வாழும் காலத்தில் சாதாரணம்.. ஆனால் அவன் வாழ்ந்த காலத்தில் வான்மீகி வாழ்ந்த காலத்தில்.. அவை... சிந்தனைகள்..!

நல்ல எண்ணவுரு idea கொண்டும் இருந்திருக்கிறான்.. அதற்கு... தனது இலக்கியம் மூலம் அவன் சமூகத்தை வழி நடத்தக் கூடிய கருத்துக்களை தாங்கி வந்ததைச் சொல்லலாம். ( குகன் என்ற பாத்திரத்தைக் கையாண்டு... அதன் மூலம் நட்பை.. அதன் ஆழத்தை சமூகத்துக்கு இனங்காட்ட விளையும் எண்ணவுருவை உதாரணமாக்கலாம்.) :unsure:

Link to comment
Share on other sites

தயா,

கம்பராமாயணம் முதலில் எழுதப்படவில்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். வான்மீகி இராமாயணத்தையே கம்பர் தமிழில் பாடினார். தமிழ் பண்பாட்டிற்கு ஏற்றபடி ஓரிரு இடங்களில் சில மாறுதல்களை கம்பர் செய்தார்.

கம்பராமாயணத்தை பார்த்தீர்கள் என்றால் கம்பர் பெரும்பாலும் தூயதமிழிலேயே பாடியிருப்பார். வட மொழிச் சொற்கள் அரிதாகவே காணப்படும். அதில் சிவதனுசு, விஸ்ணுதனுசு போன்ற சொற்களை நீங்கள் காணமாட்டீர்கள்.

ஆனால் அவைகளை கம்பர் மிக அழகாக அதன் பொருள் வருமாறு விளக்குகிறார். பல இடங்களில் கம்பர் எழுதியதற்கு பல பொருட்கள் வருவது போன்று இருந்தாலும், வான்மீகி இராமாயணம் இருப்பதால் குழப்பம் ஏற்படுவதற்கு இடமில்லாமல் போகிறது.

கம்பராமாயணத்தை மட்டும் படித்தவர்களால் பல இடங்களில் கம்பர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முடியாது. ஆனால் வான்மீகி இராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும் படித்தவர்கள் தெளிவாக பல இடங்களில் சிவதனுசு, விஸ்ணுதனுசு பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள்.

இல்லை, கம்பராமாயணத்தில் இருந்தால்தான் நான் ஒத்துக்கொள்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால், அப்பொழுதும் பாதகமில்லை. ஆதாரம் இருக்கிறது. இதோ!

சீரிது தேவர் தங்கள் சிந்தனை என்பது உன்னி

வேரியங் கமலத் தோனும் இவிளைவ தோர் வினயந் தன்னால்

யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவராம் இருவர் தம்மை

மூரிவெஞ் சிலை மேல் இட்டு மொய்யமர் மூட்டி விட்டான்

இதனுடைய அர்த்தம் என்னவென்றால் சிவன், விஸ்ணு இருவரில் யார் உயர்ந்தவர் என்று அறிவதற்கு தேவர்கள் ஆவல் கொண்டதால், பிரம்மன் இருவருடைய வில்லையும் கொண்டு சண்டையை உருவாக்கினான்.

இருவரும் "முலத்து ஒருவரே" என்ற தன்னுடைய கருத்தையும் கம்பர் அழகாக இதற்குள் இணைக்கிறார்.

வான்மீகி இராமாயணத்தில் எழுதப்பட்ட பல விடயங்களை கம்பர் தன்னுடைய சாதூரியமான காரணங்களை சொல்லி மக்கள் ஏற்கும்படி எழுத முயல்கிறார்.

(இனவாத சிறிலங்கா அரசுக்கு அறிக்கை எழுதுபவர்களும் இப்படித்தான். மக்கள், ஜனநாயகம், சமாதானம் என்று மிக அழகாக எழுதுவார்கள்)

Link to comment
Share on other sites

இதில் மேலும் விளக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

'ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன்; மற்றை ஒன்றை

நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான்;

என்று இது உணர்ந்த விண்ணோர், "இரண்டினும் வன்மை எய்தும்

வென்றியது யாவது?" என்று விரிஞ்சனை வினவ, அந் நாள், 27

'"சீரிது தேவர்தங்கள் சிந்தனை" என்பது உன்னி,

வேரி அம் கமலத்தோனும், இயைவது ஓர் வினயம்தன்னால்

யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை,

மூரி வெஞ் சிலை மேல் இட்டு, மொய் அமர் மூட்டி விட்டான்; 28

இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்; உலகம் ஏழும்

வெருவர, திசைகள் பேர, வெங் கனல் பொங்க, மேன்மேல்,

செரு மலைகின்ற போழ்தில், திரிபுரம் எரித்த தேவன்,

வரி சிலை இற்றது ஆக, மற்றவன் முனிந்து மன்னோ, 29

'மீட்டும் போர் தொடங்கும் வேலை, விண்ணவர் விலக்க, வல் வில்

நீட்டினன் தேவர்கோன் கை, நெற்றியில் கண்ணன்; வெற்றி

காட்டிய கரிய மாலும், கார்முகம்தன்னை, பாரில்,

ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்; 30

இரிசிகன் எந்தைக்கு ஈய, எந்தையும் எனக்குத் தந்த

வரிசிலை இது, நீ நொய்தின் வாங்குதி ஆயின், மைந்த!

குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை; யான் குறித்த போரும்

புரிகிலென், நின்னொடு; இன்னம் புகல்வது கேட்டி' என்றான்.

Link to comment
Share on other sites

இதில் தவறென்ன.. அகராதி எதற்கு.. உங்களைப் போல அகராதி படிப்பவர்களுக்குத் தானே..???!

இறுதியில் அகராதிக்கே அகராதி படிப்பிக்கப் போயிட்டிங்களே சார். (நினைச்சன் நடந்திட்டுது) :lol::D

நாம் சொன்ன ஒரு சிறிய விடயத்தைக் கூட நீங்க உள்வாங்கல்ல.. மீண்டும் மீண்டும்.. உங்கள் விளக்கங்களை ஆங்கிலப் பதங்களை மட்டும் கொண்டு தருவதன் பின்னணியை சுட்டிக்காட்டவே.. ஆங்கில அகராதியைப் பாவிச்சு.. எழுதினோம்.

நெடுக்ஸ். நான் கேட்ட கேள்விக்கு நீங்களோ அல்லது வேறு யாராவதோ பதில்தரவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. உங்களுக்குள்ளே சிறிது சிந்தித்து பாருங்கள். இறுகிப் போய் இருக்கும் மனங்களை விடுவிப்பதற்கு கேள்விகளைப்போல் உபயோகமானது வேறேதும் இல்லை. எண்ணங்கள் நம் ஒவ்வொருவர் மனங்களையும் எவ்வாறு ஒரு சுவரை எழுப்பி, ஒரு எல்லைக்கு அப்பால் போகவிடாது தடுக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவரவர் விருப்பம். வற்புறுத்தல் எந்தப் பயனையும் தராது. ஒவ்வொரு சொற்களையும் எவ்வளவு மேலோட்டமாக பாவிக்கிறோம் என்பதையும், ஒரு serious ஆன தேடலில் இவை எவ்வாறு எங்களை கைவிட்டு விடுகின்றன என்பதை நானும் உங்களுடன் சேர்ந்து அறிந்து பார்க்கவே சொற்களை வைத்து கேள்விகள் கேட்டேன். இதை "நான் ஆங்கில அகராதிக்குள் ஒளிந்திருப்பதாகவும், சிறுபிள்ளைத் தனமாக சொற்களை வைத்து கேள்விகேட்பதாகவும்" நீங்கள் ஒரு முடிவுக்கு வந்தால், நாம் இருப்பது வெவ்வேறு தளங்களில் என நினைக்கிறேன். விவாதிப்பது எனது நேரத்தை மண்ணாக்குவதற்கு சமன். (First, we have to be aware of our miserable life. Then we have to feel the seriousness to understand it completely.)

கம்பராமாயணத்தை ஒரு தமிழ் இலக்கியமக படிப்பதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அதை ஒரு "தமிழிலக்கியம்" என்று "தெரிந்து வைத்துக்கொண்டே" படியுங்கள். அதனுள் மூழ்கிவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

ரிக் வேதத்தை சரியாக ஆராய்ந்து கற்றுவிட்டு தான் மேற்சொன்ன கருத்தை கூறுகிறீர்களா? இல்லை கூகிள் ஆண்டவர் தான் உங்களுக்கும் அருளினாரா? :D

ரிக் வேதத்தில் சோமன், ருத்ரன் என்ற பெயர்களால் தான் சிவன் குறிப்பிடப்படுகிறான். இந்திரனை தோற்றுவித்ததே சோமன் என்றே சொல்லப்படுகிறது. ஆகவே இந்திரனை சிவனின் ஒரு அம்சமாக தான் வேதங்கள் சொல்கிறது.

" [O Soma!]Father and generator of the gods, the skillful, the Pillar of the Heavens (ie. Lingam), and supporter of Earth. Rishi and Illuminated Sage, greatest of people, apart and wise,

Ushana (Shukracharyar) in knowledge" (Rig Veda .IX.87.2-3)

"Father of sacred chants, Soma flows onwards, the Father of the Earth, Father of the Celestial region, Father of Agni,(Skanda) the creator of Surya,(Brahma) the Father who gave birth to Indra and Vishnu"

(Rig Veda.IX.96.5)

ம்..

நான் கேட்டது "ரிக் வேதத்தில் சிவன் இருக்கிறானா, இல்லையா என்பதல்ல". சிவன் முழுமுதற் கடவுளா இல்லையா என்பதே. ரிக்வேதத்தின் படி சிவன் முழுமுதற் கடவுள் இல்லை. சிவன் (அதாவது ருத்திரன்) ஒரு பரிவார தெய்வமாக தான் காட்டப்படுகிறது.

மற்றது. கடவுள் தனித்துவமானவன், பூரணமானவன் (unique and perfect) என்பதை கூற எத்தனிக்கும் இந்த மதங்கள் எல்லம் கடவுளை பல்வேறாக பிரிப்பதன் நோக்கம் என்ன? "பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்தாலும் எஞ்சியிருப்பதும் பூரணமே" என ரிக்வேதம் தான் சொல்கிறது. தனித்துவமான ஒரு வகைக்குள் வெவ்வேறு பூரணங்கள் இருக்க முடியுமா? (Can we have several perfections within a special, unique class. If yes, does it really mean perfection?).

என்னை பொறுத்தவரை, இந்த வேதங்களானாலும் சரி, ஆகமங்களானாலும் சரி, வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் தத்தம் அனுபவங்களுக்கு ஏற்ப எழுதப்பட்டு இணைக்கப்பட்டவை. இவை திடீரென தோன்றியவை அல்ல. தென்னாட்டின் இயற்கையோடிணைந்த சிந்தனைகளும், ஆரியம் எனப்படும் இயற்கைக்கு முரணான கற்பனைகளும் கால ஓட்டத்தில் இணைக்கப்பட்டே இவை உருவாகின.

ஒரு சிறு உதாரணம். இதைப்பற்றி பொறுமையாக சிலகணம் சிந்தித்து பாருங்கள். இன்றும் "மேற்கத்தேய" கலாச்சாரத்துக்கும் "கீழைத்தேய" கலாச்சாரத்துக்கும் அடிப்படையில் வெவ்வேறான இரு அம்சங்கள் இருக்கின்றன. "மேற்கத்தேய கலாச்சாரத்தின்" சமூக அடிப்படை ஓட்டத்தை "காமம்" (Lust) என்பதே உள்வாங்கி இருக்கிறது. "கீழைத்தேய" சமூக அடிப்படை இன்றும் "காதல்" (Love) என்பதை அடிப்படையாக கொண்டதே. மேலும் விஞ்ஞானத்தையும் வியாபாரமாக்குவதும், அரசியலாக்குவதும் மேற்கத்தேயம். விஞ்ஞானத்தை வாழ்க்கையின் படிநிலையாக்குவது கீழைத்தேயம்.

சரி. இந்த இரு கலாச்சார பண்புகளும் ஒருங்கே வேத ஆகமங்களில் புகுந்திருப்பதை பாருங்கள். பலதார மணம், முறையற்ற புணர்ச்சி என்பனவற்றை "ஆரிய தெய்வங்கள்" சுட்டி நிற்கும் (காமம்). காதல், ஒருதார மணம் என்பவற்றை தென்னாட்டு தெய்வங்கள் சுட்டி நிற்கும்.

தென்னாட்டின் தலைசிறந்த வானசாஸ்த்திரத்தை (astronomy) தந்தவர்கள் இருவர். அவர்களை பெயர்மூலம் ஆரியராக்கி (ஆரியப்பட்டர், பாஸ்க்கரர்), அந்த அற்புதக் கலையை சாஸ்த்திரமாக (astrology) அதை இன்றுவரை வியாபாரமாக்கிய கலாச்சாரத்தை காண்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. அதை மட்டுமா வியாபாரமாக்கினார்கள்.

தென்னாட்டு சிந்தனைகள் அற்புதமானவை. மக்களின் அன்றாட வாழ்நிலையை மேம்படுத்தவும், இயற்கை விதிகளை உணர்ந்துகொள்ளவும் அவை உருவாக்க பட்டன. இவற்றை கவர்ந்து சென்று புரட்டி புரளியாக்கி, சிதைத்து வைத்திருப்பதை "வேதப் பெரும் பொருள்" என ஏமாந்து போகிறோம்.

சரி. தத்துவம், மண்ணாங்கட்டி என்று சொல்கிறார்களே. இது "உண்மையாக" (truth but reality) இருக்குமா என்பதை எப்படி தீர்மானிப்பது? இதை எந்த நம்பிக்கையில் நான் நம்புவது? பாருங்கள். "ஆரியம்" கூறும் (அவர்கள் தத்துவங்களை கண்டு தந்ததாக கூறப்படும் அதாவது "மந்த்ர த்ரஷ்ட்டா". அவர் மந்திரங்களை உருவாக்கிய "மந்த்ர கர்த்தா" அல்ல) ரிஷிகளும் முனிவர்களும் தன்னந்தனியே, மனித சஞ்சாரமற்ற காட்டுக்குள் அலைந்து திரிந்து தவம் செய்து இவற்றை வெளியிட்டார்கள் என கூறுகிறது. தென்னாட்டின் தத்துவங்களை தந்த சித்தர்கள், மக்களோடு மக்களாகவே வாழ்ந்து, தமது ஆழ்ந்த சிந்தனை, தொடர்புகள் மூலம் இவற்றை கூறினர். இந்த சித்தர்கள் கூறியதில் மாயாஜாலமில்ல. மனித நேயமும், காதலும் (காதல் Love என்பதைக்கூட நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம்? ஆண்-பெண் காதல் அப்படித்தானே? :lol: . காதல் மிகமிக ஆழமானது. உண்மை எவ்வாறு என்றும் இருந்தவாறே (it appears to be OLD) ஒவ்வொரு கணமும் புத்தம் புதிதாக இருக்கிறதோ (truth is new at every moment) அதேபோல தான் காதலும்) அவற்றில் மிளிர்கின்றன. அங்கு வியாபாரம் இல்லை.

ஒரு மனிதன், தன்னை உணர்ந்து கொள்வது எப்படி? உண்மையில் மற்றைய மனிதவுயிர்களுடனான தொடர்புகள் மூலம் (தன்னை தான் மிக அவதானமாக கவனிப்பதன் மூலம்) தன் கோபம், காதல், சோகம், பொறாமை, உள்மன அழுக்குக்கள் என்பவற்றை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறான எந்த தொடர்பும் இல்லாவிட்டால் இவற்றை அறிவதோ அல்லது அவற்றினின்றும் விடுபடுவதோ சாத்தியமல்ல. உண்மையில் எங்கள் தென்னாட்டு சித்தர்கள், மக்களோடு சேர்ந்து வாழ்ந்ததன் நோக்கம் இதுதான். "ஆரியம்" காட்டுக்குள் திரிந்து "பேராசையின் நிமித்தம்" ஒருவித "பொய்த்தோற்ற" த்தினுள் (illusion) அகப்பட்டு இயற்கைக்கு முரணான தகவல்களை பதிந்து வைத்தது. இயற்கையை நம்பி வாழ்ந்த மக்கள் கூட்டத்தை இந்த முரண்கள் நன்றாகவே குழப்பி விட்டன என்பதே கவலைக்குரிய செய்தி.

இன்னும் பல இருக்கின்றன. இவற்றை நீங்கள் உங்களுடைய "மனக் கட்டுப்பாடுகளை தளர்த்தி" (without any conditions in your mind) சிறிதேனும் சிந்திக்க வேண்டும் என்பதே என் முயற்சியின் கரு. சிந்திக்க மாட்டேன் என்பவர்களை நான் வற்புறுத்தவில்லை. யாராவது ஒருவர் அல்லது இருவர் சிந்திக்க தலைப்பட்டாலே போதுமானது.

Fall semester தொடங்கினால் எழுத முடியுமோ தெரியவில்லை. பார்க்கலாம்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

Link to comment
Share on other sites

ம்..

நான் கேட்டது "ரிக் வேதத்தில் சிவன் இருக்கிறானா, இல்லையா என்பதல்ல". சிவன் முழுமுதற் கடவுளா இல்லையா என்பதே. ரிக்வேதத்தின் படி சிவன் முழுமுதற் கடவுள் இல்லை. சிவன் (அதாவது ருத்திரன்) ஒரு பரிவார தெய்வமாக தான் காட்டப்படுகிறது.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

"Father of sacred chants, Soma flows onwards, the Father of the Earth, Father of the Celestial region, Father of Agni,(Skanda) the creator of Surya,(Brahma) the Father who gave birth to Indra and Vishnu"

(Rig Veda.IX.96.5)

ம்!

நான் மேலே கொடுத்துள்ள சுலோகத்திலேயே வேதநாயகன் யார் என்று பதில் இருக்கிறதே! சோமன்(சிவன்) இந்திரனையும் விஷ்ணுவையுமே படைக்கின்ற வேதமுதல்வனாக கூறப்பட்டிருப்பது புரியவில்லையா?!

அடுத்து வரும் சுலோகங்களையும் கவனியுங்கள்

பெயர்கள் பலவனாலும் வேதநாயகன் ஒருவனே என்று உரைக்கிறது

They call him Indra, Mitra, Varuna, Agni, and he is heavenly nobly-winged Garutman. To what is One, sages give many a title they call it Agni, Yama, Matarisvan. - there is One Truth, but with many names (Rig Veda I.164.46; I.2)

I was Manu, I am Surya: I am the sage Kaksivan, holy singer.

Kutsa the son of Arjuni I master. I am the sapient Usans behold me.( Rig Veda.IV.26.1)

மற்றது. கடவுள் தனித்துவமானவன், பூரணமானவன் (unique and perfect) என்பதை கூற எத்தனிக்கும் இந்த மதங்கள் எல்லம் கடவுளை பல்வேறாக பிரிப்பதன் நோக்கம் என்ன? "பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்தாலும் எஞ்சியிருப்பதும் பூரணமே" என ரிக்வேதம் தான் சொல்கிறது. தனித்துவமான ஒரு வகைக்குள் வெவ்வேறு பூரணங்கள் இருக்க முடியுமா? (Can we have several perfections within a special, unique class. If yes, does it really mean perfection?).

ஒரே மின்சாரம் காற்றாய், ஒளியாய், வெப்பமாய் வந்தாலும் அதன் மூலசக்தி ஒன்றாய் இருப்பது போல் ஒரே இறைவன் பல பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் அவை எல்லாம் வேதநாயகனின் அம்சமே என்றே வேதங்கள் சொல்கிறது. அது மட்டும் அல்ல, எல்லாம் ஏகப்பரம்பொருளின் தோற்றம் என்று உணரும் போது பிராமணனும் சூத்திரனும் சுற்றியுள்ள யாவையுமே ஏகப்பரம்பொருளின் தோற்றமே, அவற்றுள் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை உணர்வாய் என்றே வேதங்கள் சொல்கிறது. இதுவே அத்வைத கொள்கை என ஆதிசங்கரரால் பரப்பப்பட்டது.

ஏன், நீர், நிலம், உலோகங்கள், தாவர, விலங்குகள் என உலகம் பல்வேறு தோற்றம் காட்டினாலும் அவை யாவும் இலத்திரன்களாலும் புரோட்டோன்களாலும் ஆன அணு என்னும் அடிப்படை அலகை கொண்டவை இல்லையா. அது போல் தான் இதுவும். வெவ்வேறு தோற்றம் காட்டினாலும் வேதநாயகன் ஒருவனே என வேதங்கள் சொல்கிறது.

ஏன் physics இல் கூட

Astrophysics

Quantum Physics

Biophysics

Geophysics

என subdivisions இல்லையா?

இப்படி பல்வேறு தனி அடையாளம் கொண்ட subdivision கள் physics இல் இருப்பதால் physics என்ற விஞ்ஞானம் பூரணத்துவத்தை இழந்து விட்டது என்றா சொல்வீர்கள்?

UNITY IN DIVERSITY IS DIVINITY

Link to comment
Share on other sites

தென்னாட்டின் தலைசிறந்த வானசாஸ்த்திரத்தை (astronomy) தந்தவர்கள் இருவர். அவர்களை பெயர்மூலம் ஆரியராக்கி (ஆரியப்பட்டர், பாஸ்க்கரர்), அந்த அற்புதக் கலையை சாஸ்த்திரமாக (astrology) அதை இன்றுவரை வியாபாரமாக்கிய கலாச்சாரத்தை காண்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.

உங்களின் இந்த கூற்றை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? அப்படி முடிந்தால் நமக்கும் மகிழ்ச்சி தான். :lol:

எடுத்ததெற்கெல்லாம் நம்மிடம் திருடி விட்டார்கள், நம்மை வடக்கே இருந்து துரத்திவிட்டார்கள் என்று ஆதாரங்கள் இல்லாது கூறும் புலம்பல்களை பலவீனத்தின் வெளிப்பாடாக தான் உலகம் பார்க்குமே ஒழிய நமக்கு பெருமை சேர்க்காது

Link to comment
Share on other sites

ரிஷிகளும் முனிவர்களும் தன்னந்தனியே, மனித சஞ்சாரமற்ற காட்டுக்குள் அலைந்து திரிந்து தவம் செய்து இவற்றை வெளியிட்டார்கள் என கூறுகிறது. தென்னாட்டின் தத்துவங்களை தந்த சித்தர்கள், மக்களோடு மக்களாகவே வாழ்ந்து, தமது ஆழ்ந்த சிந்தனை, தொடர்புகள் மூலம் இவற்றை கூறினர். இந்த சித்தர்கள் கூறியதில் மாயாஜாலமில்ல.

தென்னாட்டின் சித்தர்கள் மக்களோடு மக்களாக வாடகை வீட்டில் தங்கி இருந்தார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது. அன்று மக்கள் அதிகம் வாழாத பகுதிகளிலேயே சித்தர்களின் சமாதிகள் அமைந்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?

வேதத்தின் உட்பொருளையும், பதஞ்சலியின் யோக சூத்திரங்களையும் மறுத்து பாடிய ஒரு சித்தர் பாடலையாவது நீங்கள் காட்ட முடியுமா? நீங்கள் சொல்வது போல் ஆரிய மாயை, ஆரிய திராவிட பாகுபாடு என்ற அடிப்படையில் பாடப்பட்ட ஒரு சித்தர் பாடலையாவது காட்ட முடியுமா?

சத் - சித் - ஆனந்தத்தை அடைந்தவனுக்கு ஆரியமாவது திராவிடமாவது.

நீஙகள் சொல்லும் சித்தர்களில் ஒருவரான திருமூலர் இதோ ரிக் வேதத்தின் சாரமான அத்வைதத்தை பாடும் பாடல்

சீவனார் வேறு சிவனார் வேறிலை

சீவனார் சிவனாரை அறிவாராகில்

சீவனாரே சிவனார் ஆவார்

Link to comment
Share on other sites

தயா,

கம்பராமாயணம் முதலில் எழுதப்படவில்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். வான்மீகி இராமாயணத்தையே கம்பர் தமிழில் பாடினார். தமிழ் பண்பாட்டிற்கு ஏற்றபடி ஓரிரு இடங்களில் சில மாறுதல்களை கம்பர் செய்தார்.

கம்பராமாயணத்தை பார்த்தீர்கள் என்றால் கம்பர் பெரும்பாலும் தூயதமிழிலேயே பாடியிருப்பார். வட மொழிச் சொற்கள் அரிதாகவே காணப்படும். அதில் சிவதனுசு, விஸ்ணுதனுசு போன்ற சொற்களை நீங்கள் காணமாட்டீர்கள்.

ஆனால் அவைகளை கம்பர் மிக அழகாக அதன் பொருள் வருமாறு விளக்குகிறார். பல இடங்களில் கம்பர் எழுதியதற்கு பல பொருட்கள் வருவது போன்று இருந்தாலும், வான்மீகி இராமாயணம் இருப்பதால் குழப்பம் ஏற்படுவதற்கு இடமில்லாமல் போகிறது.

கம்பராமாயணத்தை மட்டும் படித்தவர்களால் பல இடங்களில் கம்பர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முடியாது. ஆனால் வான்மீகி இராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும் படித்தவர்கள் தெளிவாக பல இடங்களில் சிவதனுசு, விஸ்ணுதனுசு பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள்.

இல்லை, கம்பராமாயணத்தில் இருந்தால்தான் நான் ஒத்துக்கொள்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால், அப்பொழுதும் பாதகமில்லை. ஆதாரம் இருக்கிறது. இதோ!

சீரிது தேவர் தங்கள் சிந்தனை என்பது உன்னி

வேரியங் கமலத் தோனும் இவிளைவ தோர் வினயந் தன்னால்

யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவராம் இருவர் தம்மை

மூரிவெஞ் சிலை மேல் இட்டு மொய்யமர் மூட்டி விட்டான்

இதனுடைய அர்த்தம் என்னவென்றால் சிவன், விஸ்ணு இருவரில் யார் உயர்ந்தவர் என்று அறிவதற்கு தேவர்கள் ஆவல் கொண்டதால், பிரம்மன் இருவருடைய வில்லையும் கொண்டு சண்டையை உருவாக்கினான்.

இருவரும் "முலத்து ஒருவரே" என்ற தன்னுடைய கருத்தையும் கம்பர் அழகாக இதற்குள் இணைக்கிறார்.

வான்மீகி இராமாயணத்தில் எழுதப்பட்ட பல விடயங்களை கம்பர் தன்னுடைய சாதூரியமான காரணங்களை சொல்லி மக்கள் ஏற்கும்படி எழுத முயல்கிறார்.

(இனவாத சிறிலங்கா அரசுக்கு அறிக்கை எழுதுபவர்களும் இப்படித்தான். மக்கள், ஜனநாயகம், சமாதானம் என்று மிக அழகாக எழுதுவார்கள்)

வால்மீகி ராமாயணத்தில் பரசுராமன் இராமனுக்கு அளித்த வில் பரசுராமனின் தந்தை ஜமதக்கினியின் வில் என்றே வருகிறது

Link to comment
Share on other sites

வெற்றிவேல்!

இதற்கு பொருள் எழுதத் தேவையில்லை. சற்று கூர்ந்த படித்தாலே பெரும்பாலானவற்றின் பொருள் விளங்குகிறது. உங்களுக்கு நிச்சயம் விளங்கும்.

"வெற்றி காட்டிய கரிய மாலும், கார்முகம்தன்னை, பாரில், ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்; இரிசிகன் எந்தைக்கு ஈய, எந்தையும் எனக்குத் தந்த வரிசிலை இது"

Link to comment
Share on other sites

நான் மேலே கொடுத்துள்ள சுலோகத்திலேயே வேதநாயகன் யார் என்று பதில் இருக்கிறதே! சோமன்(சிவன்) இந்திரனையும் விஷ்ணுவையுமே படைக்கின்ற வேதமுதல்வனாக கூறப்பட்டிருப்பது புரியவில்லையா?!அடுத்து வரும் சுலோகங்களையும் கவனியுங்கள் பெயர்கள் பலவனாலும் வேதநாயகன் ஒருவனே என்று உரைக்கிறது

ஒரே மின்சாரம் காற்றாய், ஒளியாய், வெப்பமாய் வந்தாலும் அதன் மூலசக்தி ஒன்றாய் இருப்பது போல் ஒரே இறைவன் பல பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் அவை எல்லாம் வேதநாயகனின் அம்சமே என்றே வேதங்கள் சொல்கிறது. அது மட்டும் அல்ல, எல்லாம் ஏகப்பரம்பொருளின் தோற்றம் என்று உணரும் போது பிராமணனும் சூத்திரனும் சுற்றியுள்ள யாவையுமே ஏகப்பரம்பொருளின் தோற்றமே, அவற்றுள் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை உணர்வாய் என்றே வேதங்கள் சொல்கிறது. இதுவே அத்வைத கொள்கை என ஆதிசங்கரரால் பரப்பப்பட்டது.

ஏன், நீர், நிலம், உலோகங்கள், தாவர, விலங்குகள் என உலகம் பல்வேறு தோற்றம் காட்டினாலும் அவை யாவும் இலத்திரன்களாலும் புரோட்டோன்களாலும் ஆன அணு என்னும் அடிப்படை அலகை கொண்டவை இல்லையா. அது போல் தான் இதுவும். வெவ்வேறு தோற்றம் காட்டினாலும் வேதநாயகன் ஒருவனே என வேதங்கள் சொல்கிறது.

ஏன் physics இல் கூட Astrophysics, Quantum Physics, Biophysics, Geophysics, என subdivisions இல்லையா? இப்படி பல்வேறு தனி அடையாளம் கொண்ட subdivision கள் physics இல் இருப்பதால் physics என்ற விஞ்ஞானம் பூரணத்துவத்தை இழந்து விட்டது என்றா சொல்வீர்கள்?

மிகவும் நல்லது.

உங்கள் கருத்துப்படி, "ரிக்வேதத்தின் நாயகன் சிவன்" அப்படித் தானே. :lol: இந்திரனையும், விஷ்ணுவையும் சிவன் படைத்தான் என்றால், சிவனை பரிவாரமாக ஆமர்த்த வேண்டிய தேவை என்ன? ஒருவரை பட்டைத்துவிட்டால் "படைத்தவர் பெரியவர்" அப்படியா?. காலத்தையும் கடந்தவன் என கூறப்படும் கடவுளை "படைத்தான்" என்று "காலத்துக்குள் இழுப்பது" எவ்வளவு முட்டாள்தனம் என்று புரிகிறதா? கடவுள் சக்தி மயானவன் என்று கூறுபவர்கள், கடவுளை படைத்தல் என்பது "சக்தியை படைத்தல்" என்று பொருள்படுவதை மறந்ததேனோ? உண்மையில் இங்கு "படைத்தல்" என்ற சொல்லே அர்த்தமற்றது. சக்தி பிரிக்கப்பட கூடியதா? ( Can the energy be divisible? Are there "different energies" or "different forms of energy?". )

சரி. அத்வைதம். :D:) அத்வைதம் கூறுவது என்ன? சகலதும் "பிரம்மம்". அப்படித்தானே? அப்படீயானால், பிரமணன், சூத்திரன் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? அவற்றிற்கிடையே ஏன் வேற்றுமையை உருவாக்குகிறீர்கள். உங்கள் மதங்களினால் "வேற்றுமையற்று பார்க்கக்கூடிய" எண்ணங்களை மக்கள் மனதில் உண்டாக்க முடியாதா? அத்வைதம் மட்டுமல்ல, வேதமும் அதன்முடிவாக கருதப்படும் "வேதாந்தமும்" இன்னொன்றையும் சொல்கிறது. "நான் கூறும் வழிமுறைகளையும், அனுஷ்ட்டானங்களையும் பின்பற்று. நீ கடவுளைக் காண்பாய்". இதைவிட முட்டாள்தனமான ஒரு கொள்கையை நான் காணவில்லை. இதை நான் ஏன் வெறும் முட்டாள்தனம் என்று கூறுகிறேன்?சிறிது சிந்தியுங்கள்.

மற்றது, விஞ்ஞான விளக்கம்: :lol::lol:

நிலம், நீர், நெருப்பு......... என்று இயற்கை தன்னில் வேறுபாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறதா? அல்லது நீங்களே உங்கள் மனதில் "எண்ணங்கள் மூலம்" இந்த வேற்றுமைகளை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? இதில் எது உண்மை? இந்த இயற்கையைவேறுபிரித்து (divide) பார்க்கும் முட்டாள் கொள்கையை தந்தது யார்? வேதங்கள் தானே? அவ்வாறு எம்மீது அதை சுமத்திவிட்டு "எதிலும் வேற்றுமை இல்லை" என்று குத்துக்கரணம் அடிப்பது எதனால்?

இந்த வேறுபடுத்தி பார்க்கும் கொள்கைகளால், ஒவ்வொருமுறையும் நீங்கள் ஒரே விடயத்தை பார்க்கும் போது சலிப்பும், அதை முற்றுமுழுதாக புதிதாகவே உணர்ந்து அனுபவிக்கும் தன்மையும் இல்லாது போகிறது தெரிகிறதா?

இன்னொன்று. வேதாந்தம் கூறுவது "சகல அறிவையும் கற்று மற" என்பதே. அதுதான் வேதத்தின் இறுதி. (வேதம் - அறிவு. வேதாந்தம் - அறிவின் முடிவு). சகலதையும் கற்று மற என்ற கோட்பாட்டை வாசித்த உடனயே உங்கள் எண்ணத்தில் தோன்ற வேண்டியது என்ன? இதற்கு உடனே பதிலை தேடாதீர்கள். புத்தகங்களை புரட்டி வீணே நேரத்தை செலவழிக்காதீர்கள். எந்தப் புத்தகமும் இதற்கு பதில் தரப் போவதில்லை. நீங்களே, உங்களினூடு ஆழ்ந்து செல்வதன் மூலம் பதிலை தரிசிக்கலாம்.

புரோத்தனும் நியூத்திரனும் என்று இன்னும் எத்தனை காலத்துக்கு கூறப்போகிறோம். அப்படியானால் இயற்கையின் மூலமான "மூலக்கூறை" கண்டுபிடித்துவிட்டோமா? அப்படியானால் ஏன் ஸ்ரிங் தியரி, கே-தியரி என்று மண்டையை போட்டு உடைக்கிறோம்? இன்னமும் மின்காந்த விசையும், ஈர்ப்பு விசையும் ஒன்று சேருதில்லை என்றுதானே சொல்கிறார்கள் (There are only two forces in nature. One is electro-magnetic force and the other one is gravity. Both never coincide ) பொளதீகம் முழுமையானதா? அல்லது இயற்கையின் இயங்கு விதிகளை ஓரளவேனும் அறிய தலைப்படுகிறதா? பொளதீகம் என்ன, விஞ்ஞானம் முழுமையானதென்றால் அறிவு முழுமையானது என்று ஆகிறது. எனவே தெரியாதவை என்று ஏதும் இல்லை. எனவே கடவுளும் அதற்குள் அடக்கம். பிறகு ஏன் வேதம், வேதாந்தம் என்று கடவுளை தேடி அலைந்து காலட்த்தை கடத்துகிறீர்கள். கல்வியால், அறிவை வளர்ப்பதால் நீங்கள் கூறும் கடவுளை காணமுடியுமா? இல்லை நீங்கள் எவ்வளவுதான் அறிவை வளர்த்தாலும் நீங்கள் கூறும் "கடவுள்" அதற்கு அப்பால் சென்று இன்னும் "தெரியாததாக" இருக்கிறானா? அப்ப்டையானால் "தெரிந்த" என்பதில் இருந்து "தெரியாத" என்பதற்கு போகும் வழி என்ன? உங்கள் வேதங்களை கற்ற்பதன் மூலமா? அறிவு கடவுளை தரிசிக்க செய்யுமா?

நான் சொல்ல வருவது இதுதான். அறிவு என்றுமே பூரணமற்றது. அறிவு காலம் சார்ந்தது. காலம் என்பது எமது "மெமரி". காலத்தை கடந்து நிற்கும் "உண்மை", என்றும் புதியது. ஒவ்வொரு கணமும் தன்னை புதியதாக உருமாற்றுகிறது. ஆனால் அந்த "உண்மை" மாறுவதில்லை. அந்த காலத்தையும் கடந்த உண்மையை தரிசிக்க, அறிவு எந்த விதத்திலும் உதவ போவதில்லை. புத்தகங்களிலும், மற்றையோர் கூறும் வழிமுறைகளினை பின்பற்றுவதாலும் அதை காண முடியாது. வேதவேதாந்தத்தை கற்பது என்பது கால விரயமே அன்றி வேறில்லை.

அதிசயமாக இன்னொன்றையும் இந்தக் களத்தின் நான் பார்த்தேன். கடவுளை கும்பிடுதல் மனிதனை நன்னெறி படுத்தும் என பலர் எண்ணுகிறார்கள். ஒரு மனிதன் "மனிதனாக" இருக்க கடவுள் நம்பிக்கை அவசியமற்றது. பலரை இது மிகக் குழப்பும். கவனமாக எந்த முடிவுகளையும் திடீரென எடுக்காமல், சிறிது சிந்தியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிசயமாக இன்னொன்றையும் இந்தக் களத்தின் நான் பார்த்தேன். கடவுளை கும்பிடுதல் மனிதனை நன்னெறி படுத்தும் என பலர் எண்ணுகிறார்கள். ஒரு மனிதன் "மனிதனாக" இருக்க கடவுள் நம்பிக்கை அவசியமற்றது. பலரை இது மிகக் குழப்பும். கவனமாக எந்த முடிவுகளையும் திடீரென எடுக்காமல், சிறிது சிந்தியுங்கள்.

அயின்ச்ரைன் அய்யா நீங்கள் பூரண அறிவோட பிறந்தனியள், மாமேதை, உங்களாலதான் பதில்சொல்ல முடியும்.

பூமியிலயுள்ள எல்ல நாடுகளும் அதாவது நாட்டுக்கு நாடு (விதிவிலக்கா ஒண்டு இருக்கலாம்) உத்தியோகபூர்வமா ஆகக்குறைஞ்சது ஒரு மதமாவது வச்சிருக்கிறாங்கள், உது கடவுள் இல்லையெண்டதாலயோ அல்லது மனிதனை நன்நெறிப்படுத்தாது எண்டு தெரிஞ்சதாலயோ அல்லது கடவுள் நம்பிக்கை அவசியமில்லையெண்டதாலயோ??

Link to comment
Share on other sites

Ramar Sethu, a world heritage centre?

Shobha Warrier

ஆக்கம் பெற்றுக்கொண்ட தளம்: http://in.rediff.com/news/2007/jul/04spec.htm

யாழ் திரைகடலோடி பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது: http://www.yarl.com/forum3/index.php?showtopic=27481

Link to comment
Share on other sites

அங்கும் இங்கும் ஒரே விடயமாக இருப்பதால் மற்றைய தலைப்பில் இணைத்த ஒரு கட்டுரைக்கான தொடுப்பை மட்டும் இங்கு இணைக்கிறேன். (இங்கு நடைபெறும் விவாதத்தோடு (?) தொடர்புடையது என்பதால் மட்டுமே):

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27298&view=findpost&p=336288

இங்கு இராமாயணம், இராமர் பாலம் என்பது பற்றி கருத்தாடிக்கொண்டு; ஆரியம், திராவிடம், இனக்குழுமம், ஆக்கிரமிப்பு, பரம்பல், இடப்பெயர்வு போன்ற விடயங்களை அந்தத் தலைப்பிலேயே கருத்தாடினால் வாசிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் சுலபமாக இருக்கும். வேண்டுகோள் மட்டுமே. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலம் பற்றி அறிவியல் மற்றும் வரலாற்று சான்றுகளின் ஒப்பீட்டியலோடு.. நல்ல ஒரு அணுகுமுறையில் அமைந்த கட்டுரை இங்குண்டு.

பிரதி உரிமம் இல்லாமல் அதனை பிரதி எடுக்க முடியாது என்பதால் இணைப்புத் தரப்படுகிறது படித்துப் பாருங்கள்..!

http://www.ufoarea.com/aas_nasa_bridge.html

Link to comment
Share on other sites

அங்கும் இங்கும் ஒரே விடயமாக இருப்பதால் மற்றைய தலைப்பில் இணைத்த ஒரு கட்டுரைக்கான தொடுப்பை மட்டும் இங்கு இணைக்கிறேன். (இங்கு நடைபெறும் விவாதத்தோடு (?) தொடர்புடையது என்பதால் மட்டுமே):http://www.yarl.com/forum3/index.php?showtopic=27298&view=findpost&p=336288இங்கு இராமாயணம், இராமர் பாலம் என்பது பற்றி கருத்தாடிக்கொண்டு; ஆரியம், திராவிடம், இனக்குழுமம், ஆக்கிரமிப்பு, பரம்பல், இடப்பெயர்வு போன்ற விடயங்களை அந்தத் தலைப்பிலேயே கருத்தாடினால் வாசிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் சுலபமாக இருக்கும். வேண்டுகோள் மட்டுமே. :lol:

நண்பரே. இந்த விவாதங்கள் ஒரு பொழுது போக்காகவே செல்வதாக தெரிகிறது. :):lol: ஒவ்வொரு விடயமாக விவாதிப்போம் என்று கேட்டும், அதில் யாரும் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. I think, people need only entertainment. :lol::D

அயின்ச்ரைன் அய்யா நீங்கள் பூரண அறிவோட பிறந்தனியள், மாமேதை, உங்களாலதான் பதில்சொல்ல முடியும்.பூமியிலயுள்ள எல்ல நாடுகளும் அதாவது நாட்டுக்கு நாடு (விதிவிலக்கா ஒண்டு இருக்கலாம்) உத்தியோகபூர்வமா ஆகக்குறைஞ்சது ஒரு மதமாவது வச்சிருக்கிறாங்கள், உது கடவுள் இல்லையெண்டதாலயோ அல்லது மனிதனை நன்நெறிப்படுத்தாது எண்டு தெரிஞ்சதாலயோ அல்லது கடவுள் நம்பிக்கை அவசியமில்லையெண்டதாலயோ??

அப்பனே. இன்னும் ஒரு பத்து பக்கங்களை இழுக்க விருப்பமா? :):lol:

Link to comment
Share on other sites

இராமாயணம் பற்றி காரசாரமான விவதங்கள் போய்கொண்டிருப்பதால் அதற்கு உதவியாக சில கருத்துக்கள் உள்ள இணைப்பை தருகின்றேன். இதில் உள்ள கருத்துக்கள் உங்கள் விவாதத்திற்கு உதவியாக இருக்கலாம்.

அன்புடன்

சுகன்

http://www.keetru.com/periyarmuzhakkam/jul06/prabakaran.php

http://www.keetru.com/periyarmuzhakkam/oct05/jagadeesan.php

http://www.keetru.com/periyarmuzhakkam/nov05/esra.php

http://www.keetru.com/periyarmuzhakkam/jun..._nivedhitha.php

Link to comment
Share on other sites

ம்.. தல,

இராமனுக்கு சகல "அஸ்த்திர வித்தைகளை" அருளியவர் விஸ்வாமித்திரர் (இவர் சிவனிடம் வரமாக தனுர் வேதத்தை பெற்றவர் என்று இராமாயணம் கூறுகிறது) இவை சிவன் அருளிய அஸ்த்திரங்களே. இராவணனுக்கு வாளைக் கொடுத்தவரும் சிவன்தான்.

இதிலே ஒன்றைக் கவனியுங்கள். அஸ்த்திர வித்தையானாலும், யோகக் கலையானாலும், நடனக்கலையானாலும் அவற்றை சிவனைத்தவிர வேறு எந்த ஆண் தெய்வங்களும் பெற்றதாக கூறப்படவில்லை. "ப்ரும்மாஸ்திரத்தின்" அதிதேவதையாக மட்டுமே பிரம்மதேவரை இராமாயணம் கூறுகிறது. வைதீக மதத்தின் மூலப்பொருளாக கூறப்படும் "ரிக் வேதத்தின்" முழுமுதல் கடவுள் இந்திரன் கூட இவ்வாறான எத்தகைய சக்திகளையும் பெற்றிருக்கவில்லை.

மேலும், இராமனின் வாயால் "இன்று போய் போர்க்கு நாளை வா" என்று கூறவைத்து, அவனை உயர்த்துவதற்காகவே இந்தக் கட்டம் எழுதப்பட்டது என நினைக்கிறேன். உண்மையில் இது வான்மீகி இராமாயணத்தில் இருக்கிறதா என்பதை "சம்ஸ்க்கிருதம்" கற்றவர்கள்தான் வாசித்து கூறவேண்டும். நான் அறிந்தளவில், இராமனை உயர்த்த, கம்பர் கையாண்ட ஒரு அணியே இது.

உண்மைதான் வான்மீகி இராமரை கடவுள் எண்றது இல்லை எண்றுதான் கம்பன் கழகத்தவர்களே சொல்கிறார்கள்... ஆனல் காம்பர்தான் இராமனை ஒரு அவதாரமாக்கியவர் அட்தே போல துளசி இராமாயனம் இராமனை கடவுள் ஆக்கியது... துளசி ஒரு வைனவர் என்பதால் கிருஸ்னரின் அவதாரதாரமாக்க பட்ட இராமனை கடவுளாக கண்டு இருக்கலாம்.. அதை சைவன் ஆகிய நான் ( கடவுளை தந்தையாக மதிக்கும் ) நான் ஏற்று கொள்ள வேணும் எண்று இல்லை...

வான்மீகி இராமாயனத்தின் இராமனை ஒரு ஒழுக்கம் அதிகமான மானிடனாக தான் வர்ணித்தார்... அதில் இராமன் செய்யும் தவறுகள் பலவற்றை போட்டு உடைத்தும் இருக்கிறார்...

உதாரணமாக கூனி எனும் பெண் ஊன முற்றவருக்கு கல் கொண்டு அடித்தமை... வயதில் முதிர்ந்த அவருடன் வாக்கு வாதம் செய்தமை, வாலியை மறைந்து இருந்து கொல்லுதல் , மயில் இராணனை தூங்கும் போது கொல்லுதல்... சீதையை சிதை ஏற்றுதல்... கர்ப்பிணியாக இருந்த சீதையை காட்டுக்கு அனுப்புதல் எண்று பல...

அதை எல்லாம் நயத்தோடு சொன்னவர் பிழைகள் இல்லாத்து போல சொன்னவர் கம்பர்... ஆனாலும் கம்பர் இராமனை கடவுள் எண்று சொல்ல வில்லை... ஒரு அவதாரம் ஆக்கி இருந்தார்.... அவதாரம் என்பது தீமைகளை அழிக்க கடவுளால் அனுப்ப பாடும் ஒருவன்.. இதை சைவர்கள்ள் ஈசனின் திருவிளையாடல் எண்று சொல்லுவர்... ( யாரப்பா திருவிடையாளல் பாடத்துக்கு ரிக்கட் கேக்கிறது.... படம் தியேட்டரை விட்டு ஓடி கனகாலம் ஆச்சு)

Link to comment
Share on other sites

வெற்றிவேல்!

இதற்கு பொருள் எழுதத் தேவையில்லை. சற்று கூர்ந்த படித்தாலே பெரும்பாலானவற்றின் பொருள் விளங்குகிறது. உங்களுக்கு நிச்சயம் விளங்கும்.

"வெற்றி காட்டிய கரிய மாலும், கார்முகம்தன்னை, பாரில், ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்; இரிசிகன் எந்தைக்கு ஈய, எந்தையும் எனக்குத் தந்த வரிசிலை இது"

நீங்கள் சொல்வது கம்பராமயணத்தில் வருவது. கம்பர் ஒரு வைணவர், நரசிம்மரை (விஷ்ணுவின் ஒரு அவதாரம்) வழிபடும் பரம்பரையை சேர்ந்தவர். அதனால் தான் நரசிம்மம் தோன்றியதாக கூறப்படும் கம்பத்தை (தூண்) குறிக்கும் விதமாக கம்பன் என்ற பெயர் கொண்டிருக்கிறார்.

வைணவரான கம்பர் வைணவத்தை உயர்த்தும் விதமாக வால்மீகி ராமாயாணத்தில் உதாரண மனிதனாக (Ideal Man) கூறப்பட்ட இராமனை கடவுள் அவதாரமாக்கி, வால்மீகி ராமாயணத்தில் பரசுராமரின் தந்தை ஜமதக்கினியின் வில் என்று கூறப்பட்ட வில்லை விஷ்ணுதனுசு என்று கூறி உள்ளார்.

தன் பெரும் கவித்திறனால் தமிழுக்கு அன்பு செய்த கம்பன் தன் வைணவப் பற்றினால் இடைக்கிடை கொஞ்சம் வம்பும் செய்து விட்டான். :rolleyes:

எது எப்படி இருந்தாலும் அந்த கவிச்சக்கரவர்த்தியின் தமிழை இந்த சிறியவன் இதயம் என்றும் வணங்கும்

Link to comment
Share on other sites

இதில் மேலும் விளக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

'ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன்; மற்றை ஒன்றை

நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான்;

என்று இது உணர்ந்த விண்ணோர், "இரண்டினும் வன்மை எய்தும்

வென்றியது யாவது?" என்று விரிஞ்சனை வினவ, அந் நாள், 27

உமைக்கு தன் உடலில் ஒரு பாகம் கொடுத்த சிவனா, அல்லது நிண்ற இடத்தில் இருந்து கால்களால் உலகை அளந்த திருமாலா உயர்ந்தவர் எண்று விண்ணோர் வேண்டினர்...

'"சீரிது தேவர்தங்கள் சிந்தனை" என்பது உன்னி,

வேரி அம் கமலத்தோனும், இயைவது ஓர் வினயம்தன்னால்

யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை,

மூரி வெஞ் சிலை மேல் இட்டு, மொய் அமர் மூட்டி விட்டான்; 28

தேவர்களின் வேண்டுகோளை இட்டு , சிவனையும் திருமாலையும் போர் மூட்டி விட்டானாம்.. படைத்தல் கடவுள் பிரம்மா...

இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்; உலகம் ஏழும்

வெருவர, திசைகள் பேர, வெங் கனல் பொங்க, மேன்மேல்,

செரு மலைகின்ற போழ்தில், திரிபுரம் எரித்த தேவன்,

வரி சிலை இற்றது ஆக, மற்றவன் முனிந்து மன்னோ, 29

சண்டை கடுமையான சண்டைக்கு பிறகு ஓய்வு.... அதை கம்பரின் வரிகளிலேயே புரிந்து கொள்ளலாம்...

'மீட்டும் போர் தொடங்கும் வேலை, விண்ணவர் விலக்க, வல் வில்

நீட்டினன் தேவர்கோன் கை, நெற்றியில் கண்ணன்; வெற்றி

காட்டிய கரிய மாலும், கார்முகம்தன்னை, பாரில்,

ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்; 30

மீண்டும் போர் ஆரம்பிக்கும் வேளை தேவர்களின் கோன் எனப்படும் இந்திரன் கொடுக்க முன் வந்த அந்த வில்லை... பெற்று பூவுலகில் அரிய தவம் காட்டி இரந்து கேட்ட தவ வலிமை மிக்க முனிவர் ( அவர் யார் எண்டுதான் தெரியவில்லை) அந்த வில்லை வளங்கினார்களாம்

அதாவது இது இந்திரனுடைய வில்... விஸ்னுவுடையது இல்லை...

அது எப்படி விஸ்னு தனுசாக பட்டது.... ???

இரிசிகன் எந்தைக்கு ஈய, எந்தையும் எனக்குத் தந்த

வரிசிலை இது, நீ நொய்தின் வாங்குதி ஆயின், மைந்த!

குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை; யான் குறித்த போரும்

புரிகிலென், நின்னொடு; இன்னம் புகல்வது கேட்டி' என்றான்.

தவ வலிமை மிக்க அந்த முனிவர் பரசுராமனுக்கு அந்த வில்லை கொடுத்தாராம்...

கம்பர் தெளிவாகத்தான் எழுதி இருக்கிறார்...

Link to comment
Share on other sites

தயா நீங்கள் வேண்டும் என்றே அர்த்தங்களை மாற்றி சொல்கிறீர்கள். இப்படி விவாதிப்பது அழகு அல்ல.

நல்ல வேளையாக வான்மீகி இராமாயணமும் இருக்கிறது. கம்பர் சொன்னது விளங்கவில்லை என்றால், கம்பர் எதைப் பற்றி சொல்லி இருக்கிறார் என்று வான்மீகி இராமாயணத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. அதனால் கம்பராமாயணத்தை தருவது போல் வான்மீகி இராமாயணத்தை தர முடியாத நிலையில் இருக்கிறேன்.

ஆனால் கம்பராமாயணம், வான்மீகிராமாயணம் என்று இரண்டையும் கற்றவர்கள் சிவதனுசு, விஸ்ணுதனுசு பற்றி உறுதியாக சொல்கிறார்கள்.

சரி! இப்பொழுது சில விடயங்களை விளக்குகிறேன்.

கம்பராமயாணத்தில் பரசுராமப்படலம் இரண்டு விற்களின் வரலாறையும் தெளிவாகச் சொல்கிறது. கம்பராமாயணத்தில் மேலே உள்ள பாடலின் தொடர்ச்சி அடுத்த பாடலில் இருக்கும். ஒன்றை மட்டும் படித்து விட்டு அர்த்தத்தை முடிவு செய்யக்கூடாது.

இரண்டு விற்களின் வரலாறும் கம்பராமாயணத்தில் இப்படி வருகின்றது.

ஒரு கால் வரு கதிராம் என ஒளிகால் வன உலையா

வருகார் தவழ் வடமேருவின் வலிசால்வன வையம்

அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவனதாம்

இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்நாள்.

ஒற்றைச் சக்கரத்தில வருகின்ற சூரியனைப் போன்றும், வடமேருவைப் போன்று வலிமையுள்ளதாயும், நிலத்தில் வாழுகின்ற மக்கள் அணுகவும் முடியாத தேவ தச்சனால் செய்யப்பட்ட இரண்டு விற்கள் முற்காலத்தில் இருந்தன.

ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றையொன்றை

நின்றுலகு அளந்த நேமி நெடியவன் அங்கை கொண்டான்

என்றிது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும்

வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அந்நாள்

அந்த இரண்டு விற்களில் ஒன்றை சிவன் விரும்பி எடுத்தான். மற்றொன்றை விஸ்ணு எடுத்தார். இரண்டு வில்லிலும் எது வலியது என்று அறிய தேவர்கள் விரும்பினர்.

சீரிது தேவர் தங்கள் சிந்தனை என்பது உன்னி

வேரியங் கமலத் தோனும் இவிளைவ தோர் வினயந் தன்னால்

யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவராம் இருவர் தம்மை

மூரிவெஞ் சிலை மேல் இட்டு மொய்யமர் மூட்டி விட்டான்.

தேவர்களின் விருப்பத்தை அறிந்த பிரம்மன் சிவனுக்கும் விஸ்ணுவிற்கும் சண்டை மூட்டிவிட்டான்.

இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர்; உலகம் ஏழும்

வெருவர திசைகள் பேர வெங் கனல் பொங்க மேன்மேல்

செரு மலைகின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன்

வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ

சிவனும் விஸ்ணுவும் சண்டை செய்தனர். சண்டையில் சிவனுடைய வில் சற்று முறிந்தது. இதைக் கண்ட சிவன் சினத்துடன்...

மீட்டும் போர் தொடங்கும் வேலை விண்ணவர் விலக்க வல்வில்

நீட்டினன் தேவர்கோன் கை நெற்றியில் கண்ணன்;

மீண்டும் போர் தொடங்கும் சமயத்தில் தேவர்கள் தடுத்தனர். சிவன் தன்னுடைய வில்லை இந்திரனிடம் கொடுத்தான்.

வெற்றி காட்டிய கரிய மாலும் கார்முகம்தன்னை பாரில்

ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்;

வெற்றி பெற்ற விஸ்ணு தன்னுடைய வில்லை இரிசிக முனிவனுக்கு ஈந்தான்.

(இப்படி இந்திரனிடம் கொடுக்கப்பட்ட சிவனுடைய வில் ஜனகனிடமும், இரிசிக முனிவனிடம் கொடுக்கப்பட்ட விஸ்ணுவினுடைய வில் பரசுராமனிடமும் வந்து சேர்ந்தன.)

பரசுராமன் இராமனைப் பார்த்து இப்படிச் சொல்கிறான்.

'ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்;

மானவ! மற்றும் கேளாய்: வழிப் பகை உடையன் நும்பால்;

ஈனம் இல் எந்தை "சீற்றம் நீக்கினான்" என்ன முன் ஓர்

தானவன் அனைய மன்னன் கொல்ல யான் சலித்து மன்னோ....

ஊன வில் இறுத்தவன் என்று இராமனை பரிகாசம் செய்து பரசுராமன் பேசுகின்றன். முறித்தல், உடைத்தல் போன்றவற்றை கம்பர் இறுத்தல் என்றே குறிப்பிடுகிறார். இராமன் சிவதனுசை முறித்ததை "இறுத்தல்" என்றுதான் கம்பர் இராமாயணம் முழுவதும் குறிப்பிடுகின்றார்.

ஏற்கனவே விஸ்ணுவினுடனான போரின் போது சிவதனுசு முறிந்து விட்டது. ஏற்கனவே முறிந்த வில்லை நீ முறித்தது பெருமையன்று என்று பரசுராமன் இராமனிடம் சொல்கின்றான். முறியாத விஸ்ணுதனுசை நாண் ஏற்றும்படி கேட்பதாக பரசுராம படலம் தொடர்கிறது.

ஆகவே கம்பராமாயணம் தெளிவாகச் சொல்வதை யாரும் திசை திருப்பி திரிபு படுத்த வேண்டாம்.

இங்கே ஒரு விடயத்தை கவனித்தீர்களா?

ஏற்கனவே விஸ்ணு மேலோகத்தில் சிவதனுசை சேதப்படுத்தியிருக்கிறார். பின்பு பூலோகத்தில் ராமராக வந்து மொத்தமாக முறித்துவிட்டு போயிருக்கிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.