• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்

Recommended Posts

மிகவும் நல்லது.

உங்கள் கருத்துப்படி, "ரிக்வேதத்தின் நாயகன் சிவன்" அப்படித் தானே. :lol: இந்திரனையும், விஷ்ணுவையும் சிவன் படைத்தான் என்றால், சிவனை பரிவாரமாக ஆமர்த்த வேண்டிய தேவை என்ன? ஒருவரை பட்டைத்துவிட்டால் "படைத்தவர் பெரியவர்" அப்படியா?. காலத்தையும் கடந்தவன் என கூறப்படும் கடவுளை "படைத்தான்" என்று "காலத்துக்குள் இழுப்பது" எவ்வளவு முட்டாள்தனம் என்று புரிகிறதா? கடவுள் சக்தி மயானவன் என்று கூறுபவர்கள், கடவுளை படைத்தல் என்பது "சக்தியை படைத்தல்" என்று பொருள்படுவதை மறந்ததேனோ? உண்மையில் இங்கு "படைத்தல்" என்ற சொல்லே அர்த்தமற்றது. சக்தி பிரிக்கப்பட கூடியதா? ( Can the energy be divisible? Are there "different energies" or "different forms of energy?". )

வேதம் வேறு வேத நாயகன் வேறு அல்ல, அதனால் தான் வேதங்கள் சப்தபிரம்மம் எனப்படுகிறது. குணப் பிரம்மம், நிர்குண பிரம்மம், சப்தபிரம்மம் என்பதெல்லாம் எங்கும் நிறைந்திருக்கும் ஏகப்பிரம்மத்தையே குறிக்கும். விஞ்ஞானம் முழுதாக வரையரை செய்ய முடியாமல் String theory என்றும் Super String Theory என்றும் M Theory என்றும் இன்று வரை தடுமாறிக் கொண்டிருக்கும் Cosmic Energy யும் அந்த ஏகப்பிரம்மத்திற்குள்ளேயே அடங்கி விடுகிறது.

அதில் இந்திரன் என்றும், அக்னி என்றும், ருத்ரன் என்றும் குறிப்பிடப்படுவதெல்லாம் different forms of source energy தானே ஒழிய வேறல்ல. வேதங்களில் முழுமுதற் கடவுள், சிறு கடவுள் என்ற பேதங்கள் எல்லாம் சொல்லப்படவில்லை. எல்லாமே ஒரே சக்தியின் வெவ்வேறு அம்சம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. இந்திரனை சிருஷ்டித்தான் என்பது பிரபஞ்ச சக்தி தன்னுள் உறைந்திருக்கும் அம்சங்களில் ஒன்றை உணர்த்தும் வண்ணம் தோற்றம் பெற்றது என்றே ஆகிறது.

ஒரே சக்தி ஏன் வெவ்வேறு அம்சங்களை பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்டீர்களானால் ........

ஒருவன் மிகவும் பசியால் வாடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நல்ல காய் கனிகள் அவன் பசியை தீர்க்கும் அல்லவா? காய் கனிகளுக்கு பசி தீர்க்கும் சக்தி எப்படி வந்தது? மூல சக்தியான சூரிய சக்தி பல்வேறு உயிரியல் மாற்றங்களை அடைந்ததன் விளைவு அல்லவா காய்களும் கனிகளும்.

பசியால் களைத்தவனுக்கு காய்களையும் கனிகளையும் வழங்காது, வா காய்களும் கனிகளும் உருவாக காரணமான மூலசக்தியையே உனக்கு தருகிறேன் என்று கூறி அவனை சுட்டெரிக்கும் வெயிலின் கீழ் நிறுத்தினால் அவன் பசி தீருமா? அது போல் தான் மூல சக்தி ஒன்றே ஆனாலும் தேவைக்கேற்ப அது வேறுபட்ட அம்சங்களில் தோற்றுவிக்கப்படும் போது தான் அது வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகிறது.

இந்திரன் (இந்திரியம், நீர்), அக்னி(நெருப்பு) பிரக்ருதி (புவியீர்ப்பு) வருணன் (ஆகாயம்) இப்படி எம்மை சூழ உள்ள இயற்கையின் ஒவ்வொரு தோற்றங்களையும் தான் வேதங்கள் ஆராதிக்கிறது. எல்லாம் ஒரே சக்தியின் தோற்றுவாய்கள் என சொல்வதை 21ம் நூற்றாண்டின் M Theory யும் மறுக்கவில்லை.

நிலம், நீர், நெருப்பு......... என்று இயற்கை தன்னில் வேறுபாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறதா? அல்லது நீங்களே உங்கள் மனதில் "எண்ணங்கள் மூலம்" இந்த வேற்றுமைகளை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? இதில் எது உண்மை? இந்த இயற்கையைவேறுபிரித்து (divide) பார்க்கும் முட்டாள் கொள்கையை தந்தது யார்?

அப்படியனால் தாகம் வரும் சமயத்தில் கொஞ்சம் நெருப்பை அள்ளி குடித்து பாருங்கள். அப்போது தெரியும் இவை இயற்கையான வேறுபாடா இல்லை நமது எண்ணங்களின் கோளாறால் வந்த வேறுபாடா என்று :D

இன்னொன்று. வேதாந்தம் கூறுவது "சகல அறிவையும் கற்று மற" என்பதே. அதுதான் வேதத்தின் இறுதி.

சகலதையும் கற்று மற என்று வேதாந்தம் சொல்லவில்லை, அப்படி கற்றதும், கற்று விட்டோம் என்ற ஆணவத்தை மற என்று தான் வேதாந்தம் சொல்கிறது, இப்படி தப்பு தப்பாக எங்கே படிக்கிறீர்கள்? :rolleyes:

புரோத்தனும் நியூத்திரனும் என்று இன்னும் எத்தனை காலத்துக்கு கூறப்போகிறோம். அப்படியானால் இயற்கையின் மூலமான "மூலக்கூறை" கண்டுபிடித்துவிட்டோமா? அப்படியானால் ஏன் ஸ்ரிங் தியரி, கே-தியரி என்று மண்டையை போட்டு உடைக்கிறோம்? இன்னமும் மின்காந்த விசையும், ஈர்ப்பு விசையும் ஒன்று சேருதில்லை என்றுதானே சொல்கிறார்கள் (There are only two forces in nature. One is electro-magnetic force and the other one is gravity. Both never coincide )

String theory இருக்கிறது Super String theory இருக்கிறது M Theory இருக்கிறது. அது என்ன K Theory?

There are four forces in the nature not two

1. Gravity

2. Electromagnetic

3. Strong nuclear force (energy that holds neutrons and protons together in nucleus)

4. Weak nuclear force (energy that radiates when neutrons are transformed to protons - (neutron decay))

In short, the basis of string theory is to put all these 4 forces unified under one equation and later string theorists came up with 5 Super String Theories. M Theory is unification of those 5 super string theories. M theory is probably the best candidate on the way of finding Theory Of Everything (TOE).

உங்கள் விடுமுறை நாட்களில் இது பற்றி (String Theory, M theory) தனித்திரி ஆரம்பித்தீர்களானால் மிகவும் விரிவாக கலந்துரையடலாம். இங்கு நாம் செய்வது கருத்துப்பரிமாற்றங்கள் தான். வெற்றி பெறும் நோக்கில் நடத்தப்படும் பட்டிமன்றங்கள் அல்ல. அதனால் உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். நேரம் கிடைக்கும் நேரங்களில் மட்டும் வந்து கருத்துப்பரிமாற்றம் செய்யுங்கள். இது போன்ற கலந்துரையாடல்கள் நமது அறிவை தெளிவுபடுத்திக் கொள்ள கொஞ்சமாவது துணை நிற்குமானால் அதுவே உண்மையான வெற்றி.

Share this post


Link to post
Share on other sites

தயா!

இன்னுமொன்றை சொல்ல வேண்டும்

'இமைய வில் வாங்கிய ஈசன் "பங்கு உறை

உமையினை இகழ்ந்தனன் என்ன" ஓங்கிய

கமை அறு சினத் தனிக் கார்முகம் கொளா

சமை உறு தக்கனார் வேள்வி சாரவே.

இதற்கும் தவறான அர்த்தத்தை தந்துள்ளீர்கள். இதில் கண் இமையைப் பற்றி எங்குமே வரவில்லை. "இமைய வில் வாங்கிய ஈசன்" என்பதற்கு "இமைய மலையை வில்லாக வளைத்த ஈசன்" என்றுதான் தமிழறிஞர்கள் அர்த்தம் சொல்கிறார்கள்.

இந்தப் பாடலில் கார்முகம் என்ற சொல்வருகிறது. வில்லை கார்முகம் என்றை சொல்லைப் பயன்படுத்தியும் கம்பர் குறிப்பிடுகிறார். மிதிலையில் சிவதனுசை படைவீரர்கள் கொண்டு வரும் போதும் கார்முகம் என்றே குறிப்பிடுகிறார். தேவதச்சன் விற்களை உருவாக்கியதை குறிப்பிடும் போதும் கார்முகம் என்றுதான் சொல்கிறார்.

இந்தப் பாடலின் அர்த்தம் என்னவென்றால் மலையை வில்லாக வளைத்த சிவன் உமையை அவமதித்த தக்கனின் வேள்வியை தன்னுடைய வில்லைக் கொண்டு அழித்தார் என்பதாகும்.

இந்த வில் இராமானால் முறிக்கப்பட்ட செய்தி கேட்ட தசரதன் இப்படி மகிழ்வதாக ஒரு பாடல் வருகிறது.

வெற்றிவேல் மன்னவன் தக்கன் வேள்வியில்

கற்றைவார் சடைமுடிக் கணிச்சி வானவன்

முற்றஏழ் உலகையும் வென்ற மூரிவில்

இற்றபே ரொலிகொல் அன்றுஇடித்தது ஈங்குஎன்றான்.

தக்கன் வேள்வியை அழித்ததும் ஏழு உலகத்தையும் வென்றதுமாகிய சிவனுடைய வில் இற்ற (முறிந்த) பேரொலி கேட்டு தசரதன் மகிழ்ந்தான் என்று இந்தப் பாட்டு கூறுகிறது.

தயா! இதற்கு மேலும் கம்பராமாயணம் சிவதனுசு, விஸ்ணுதனுசு பற்றிக்கூறவில்லை என்று அடம்பிடிக்காதீர்கள். தவறாக அர்த்தங்களையும் தயவுசெய்து இங்கு எழுதாதீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆனால் கம்பராமாயணம், வான்மீகிராமாயணம் என்று இரண்டையும் கற்றவர்கள் சிவதனுசு, விஸ்ணுதனுசு பற்றி உறுதியாக சொல்கிறார்கள்.

ஆகவே கம்பராமாயணம் தெளிவாகச் சொல்வதை யாரும் திசை திருப்பி திரிபு படுத்த வேண்டாம்.

இங்கே ஒரு விடயத்தை கவனித்தீர்களா?

ஏற்கனவே விஸ்ணு மேலோகத்தில் சிவதனுசை சேதப்படுத்தியிருக்கிறார். பின்பு பூலோகத்தில் ராமராக வந்து மொத்தமாக முறித்துவிட்டு போயிருக்கிறார்.

நான் அறிந்தவரையில் வால்மீகி ராமாயணத்தில் விஷ்ணு தனுசு என்று குறிப்பிடப்படவில்லை. பரசுராமனின் தந்தை ஜமதக்கினியின் வில் என்றே வருகிறது..

அப்படியே விஷ்ணு தனுசு என்று கம்பன் குறிப்பிட்டிருந்தாலும், சிவனை விட விஷ்ணுவை உயர்வாக பாடியிருந்தாலும் அதை ஒரு மக்கள் கூட்டத்தின் ஒட்டு மொத்த கருத்தாக கொள்வது பகுத்தறிவல்லவே.

ஒரு படைப்பாளியின் படைப்பில் அவனது சொந்த விருப்பு வெறுப்புகளின் சாயல் கலந்தே இருக்காது என்று கூறி விட முடியாது.

உதாராணத்திற்கு உங்கள் எழுத்துக்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். இன்னும் 500 வருடம் கழித்து ஒருவர் உங்கள் கட்டுரைகளை வாசித்து விட்டு, தமிழர்கள் எல்லோரும் 500 வருடங்களுக்கு முன் மிகத்தீவிரமாக கடவுள் மறுப்பு செய்தார்கள் என்று நிறுவ முயன்றால் எப்படி இருக்கும்? :lol: அப்படி தான் இதுவும்.

Share this post


Link to post
Share on other sites

அட பாவியளா ராமாயணத்தை விட ராமர் பாலம் பற்றிய விவாதம் பெரிசா இருக்கும் போலைஇருக்கே. :lol::)

Share this post


Link to post
Share on other sites

தயா நீங்கள் வேண்டும் என்றே அர்த்தங்களை மாற்றி சொல்கிறீர்கள். இப்படி விவாதிப்பது அழகு அல்ல.

சரி! இப்பொழுது சில விடயங்களை விளக்குகிறேன்.

கம்பராமயாணத்தில் பரசுராமப்படலம் இரண்டு விற்களின் வரலாறையும் தெளிவாகச் சொல்கிறது. கம்பராமாயணத்தில் மேலே உள்ள பாடலின் தொடர்ச்சி அடுத்த பாடலில் இருக்கும். ஒன்றை மட்டும் படித்து விட்டு அர்த்தத்தை முடிவு செய்யக்கூடாது.

இரண்டு விற்களின் வரலாறும் கம்பராமாயணத்தில் இப்படி வருகின்றது.

ஒரு கால் வரு கதிராம் என ஒளிகால் வன உலையா

வருகார் தவழ் வடமேருவின் வலிசால்வன வையம்

அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவனதாம்

இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்நாள்.

ஒற்றைச் சக்கரத்தில வருகின்ற சூரியனைப் போன்றும், வடமேருவைப் போன்று வலிமையுள்ளதாயும், நிலத்தில் வாழுகின்ற மக்கள் அணுகவும் முடியாத தேவ தச்சனால் செய்யப்பட்ட இரண்டு விற்கள் முற்காலத்தில் இருந்தன.

கார்முகம் எண்று சொல்லியவை விற்கள் தான் நான் அதைப்பற்றி விபரிப்பதில் இருந்து விலகுக்கிரென்...

அதற்கும் முதல் இந்த பாடலை கம்பர் எழுதி இருக்கிறார்.... பரசுராமர் தன் வீரவில்லை பற்றி சொல்ல முதல் தன் வில்லை இராமருக்கு தர முன் வருகிறார்... யார் இந்த பரசுராமர் எண்றால் அவரும் விஸ்னுவின் ஆறவது அவதாரம் என்கிறார்கள்... அவர் தன் வில் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் கவி

மானம் மணி முடி மன்னவன், நிலை சோர்வுறல் மதியான்,

தான் அந் நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான்;

'ஆன(ம்)முடை உமை அண்ணலை அந் நாள் உறு சிலைதான்

ஊனம் உளது; அதன் மெய்ந்நெறி கேள்!' என்று உரைபுரிவான்

அதாவது உறு வினை எனும் விதிவசதை தவிர வேறு விதங்களில் மன்னவர்கள் தன்நிலை சோர்வது அறிவு இல்லை... உமையானுக்கு கூட உறு ( விதி) செய்தது... ( சிலை என்பது போர்க்களம்) அதான் நீதி கேள் என்கிறார் கம்பர்.... இதை கேவலப்படுத்த ஒண்றும் இல்லை...

ஒரு கால் வரு கதிராம் என ஒளிகால் வன உலையா

வருகார் தவழ் வடமேருவின் வலிசால்வன வையம்

அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவனதாம்

இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்நாள்

இதன் அர்த்தம் தாங்கள் சொன்னவை இல்லை.....

அதாவது பால்கடலில் மேரு மலையை மத்தாக்கி வடமாகிய வாசுகிப்பாம்பால் கடைந்த போது வலியால் நஞ்சை கக்கியபோது... அருகில் மச்ச அவதாரம் எடுத்து வினை புரிந்த சக்கரம் கொண்ட விஸ்னுவோ.... அல்லது அதன் பால் விடம் உண்ட கண்டன் சிவனால் அமைய பெற்ற கார்முகம் ( இப்படி வராதா என்ன...??)

கடவுளுக்கு வில் செய்யும் கொல்லரா யார் அவர்..??

மிகுதிக்கு நேரம் போதவில்லை.....

Share this post


Link to post
Share on other sites

தயா!

சிலை என்பது போர்களம் என்று எங்கே படித்தீர்கள்? நீங்கள் கம்பராமாயணம் படிக்கவில்லை என்பது நன்கு விளங்குகின்றது

கம்பராமாயணம் முழுவதும் சிலை என்று சொல் பலநூறு முறைக்கு மேல் வருகிறது. சிலை என்பதற்கு வில் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு விளங்காது விட்டால், தமிழ் இலக்கியம் கற்ற யாரிடமாவது கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

நான் முன்பே சொன்னேன், கம்பர் வடமொழிச் சொற்களையும், வடமொழிப் பெயர்களையும் முடிந்தவரை தவிர்த்திருப்பார் என்று. வடமொழிப் பெயர்கள் வருகின்ற இடங்களில், அதைத் தவிர்த்து அவர்கள் செய்கின்ற தொழிலைக் கொண்டு அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெயர்கள் தமிழ் ஒலி நடையோடு ஒத்துப் போயிருந்தால் மாத்திரம் அவைகளை பயன்படுத்தியிருப்பார்.

இதை கம்பராமயாணம் படித்த அனைவரும் அறிவார்கள்.

தேவர்களின் தச்சனான விஸ்வகர்மா என்பவன் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. வான்மீகி இராமாயணம் விஸ்வகர்மா செய்த விற்கள் என்று சொல்கிறது. கம்பர் விஸ்வகர்மாவின் பெயரைத் தவிர்த்துக் கொண்டு, அவனுடைய தொழிலைச் சொல்லி விஸ்வகர்மாவைக் குறிப்பிடுகிறார்.

இவைகளை கம்பராமயாணம் படித்தால் புரிந்து கொள்ள முடியும்.

Share this post


Link to post
Share on other sites

"இராமர் பாலம்" தொடர்பான இக் கருத்தாடலில் இருந்து வேறு கருப்பொருளின் கீழ் கருத்தாடப்பட்ட சில கருத்துக்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு, இத் தலைப்பில் கருத்தாடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க "மனமும் அறிவும்" என்கிற தனித்தலைப்பாக "மெய்யெனப் படுவது" என்கிற பிரிவுள் இடப்பட்டுள்ளது. இராமர் பாலமும் - அதன் அரசியலும் - மதப் பின்னணியும் தொடர்பான கருத்துக்களை மட்டும் இங்கு பகிரவும்.

Share this post


Link to post
Share on other sites

"ராமர் பாலத்தை இடித்தால் மீண்டும் சுனாமி ஆபத்து'

ராமேசுவரம், ஆக. 27:

ராமர் பாலத்தை இடித்தால் மீண்டும் சுனாமி வரும்போது, கடலோரப் பகுதிகள் அழியும் அபாயம் உள்ளதாக, 250-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதாக டாக்டர் கல்யாணராமன் தெரிவித்தார்.

ராமேசுவரத்தில் ராமர் பால பாதுகாப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராமசேது பாலம் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் கல்யாண்ராமன் பேசியது:

ராமர் பாலம் உள்ள பகுதியில் தான் தோரியம் கிடைக்கிறது. உலகில் வேறு எங்கும் தோரியம் இல்லை.

ஒரு கிலோ தோரியம் ரூ. 1 கோடிக்கு விலை போகிறது.

25 கிலோ மணல் எடுத்தால் ஒரு கிலோ தோரியம் கிடைக்கும். ராமர் பாலம் தோரியம் எனும் அரியவகை பொக்கிஷத்தைத் தேக்கி வைத்துள்ளது.

ராமர் பாலத்தை இடிப்பதன் மூலம் இத் தோரியத்தை வீணாக்கி விட்டால், கடலோடு கடலாக கரைந்து விடும்.

பின்னர் நாம் தோரியத்தை அதிக விலை கொடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாங்கும் நிலை வரும்.

இந்திய அணுசக்திக்குத் தேவையான மூலப்பொருளை அழிக்க அமெரிக்கா சதித் திட்டம் போடுகிறது.

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மத்திய அரசு ராமர் பாலத்தை இடிக்கத் துணிந்துள்ளது. ராமர் பாலம் இடிக்கப்பட்டால் மீண்டும் சுனாமி வரும் போது தமிழக கடலோரப் பகுதிகள் அழிந்துவிடும் என 250-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதையும், அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.

தினமணி

Share this post


Link to post
Share on other sites

தோரியம் கதிர்வீச்சு அபாயம் கொண்ட பொருள் ...அதை எடுக்கும் பொழுது எற்படும் கதிர்வீச்சால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவர்...... எனவே தோரியம் மண்ணோடு இருப்பதே நல்லது

Share this post


Link to post
Share on other sites

ராமர் பாலத்தை சேதப்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சேது சமுத்திரத் திட்டப் பணியின் போது ராமர் பாலத்தைச் சேதப்படுத்தக் கூடாது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் ரூ.2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியின் போது ராமேஸ்வர ராமர் பாலம் இடிக்கப்பட வேண்டியுள்ளது என்று இப்பணி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பா.ஜ., வி.எச்.பி., உள்ளிட்ட கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர். இதனை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். இதனிடையே ராமர் பாலத்தைச் சேதப்படுத்தக் கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் சேது சமுத்திரத் திட்டப் பணியின் போது ராமர் பாலத்திற்குச் சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தினமலர்

Share this post


Link to post
Share on other sites

சேது சமுத்திர திட்டத்தையும் பாதிப்புறச் செய்யாது..இராமாயண காலம் தொட்டு இருக்கும் புவியியல் கூறு பாதுகாக்கப்பட்டதில் திருப்திதான். எதிர்காலத்தில் இக்கூறு குறித்து விரிவான ஆய்வுகளுக்கு இடமளித்திருக்கிறது இந்தச் சர்ச்சை..! :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

ராமர் பாலத்தை இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை

செப்டம்பர் 01, 2007

டெல்லி: ராமர் பாலத்தை செப்டம்பர்14ம் தேதி வரைக்கும் இடிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் சேதுக் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ளவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் கால்வாய் அமைப்பதற்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில், இந்துக்கள் புனிதச் சின்னமாக கருதுவது ராமர் பாலம். அதை இடித்தாலோ, சேதப்படுத்தினாலோ அது லட்சக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளையும், மனதையும் புண்படுத்தும் செயலாகும்.

மேலும் நமது பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஈடு கட்ட முடியாத இழப்பாக அமைந்து விடும். ராமர் பாலத்தின் மீது துளையிடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். விரைவில் வெடிகுண்டு வைத்து பாலத்தைத் தகர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.

எனவே இதை அவசர வழக்காக கருதி விரைந்து விசாரித்து தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சுவாமி.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.பி.நலோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், தமிழக அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

மோகன் வாதிடுகையில், சுவாமி கூறுவதைப் போல அது பாலமே அல்ல. கால்சியப் படிவுகளால் ஆன இயற்கையான ஒரு அமைப்பு என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியானால் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மோகன் பதில் ஏதும் சொல்லவில்லை.

ராமர் பாலம் இடிக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியை அரசு அளிக்குமா என்றும் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு மத்திய அரசின் வக்கீல் உறுதிமொழி அளிக்கவில்லை.

பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். செப்டம்பர் 14ம் தேதி வரை ராமர் பாலத்தை இடிக்கவோ, துளையிடவோ கூடாது. அதற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படக் கூடாது.

பாலத்துக்குச் சேதமில்லாத வகையில் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ளலாம் சென்று கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/09...ptember-14.html

Share this post


Link to post
Share on other sites

ரொம்ப நல்ல விசயத்த சொல்லியிருக்கினம்.... ராமர் பாலத்துக்கு சேதம் வந்தா மனுசுடைஞ்சு போயிடும்.... தடை போடுவினமாம்..... ஆனா அதக் கடந்து ஈழத்தில இருக்கிற மக்களுக்கு சேதம் வந்தா வயைப்பொத்திக்கொண்டு இருப்பினம்.... அதுக்கும் ஏதாவது சுப்ரீம் கோட்டு தடை போட்டா நல்ல இருக்கும்.... :P முதல்ல உந்த சுப்ரீம் கோட் நீதிபதி பார்ப்பானா எண்டு தேடி பார்க்கணும்..... :lol:

Share this post


Link to post
Share on other sites

அப்படிச் சொல்லடி என்ர ராசாத்தி,

அதெப்படியக்கா உந்த நீதிபதிகள் கோடிக்கணக்கான இந்துக்களிட்ட எதாவது கருதுக்கனிப்பு வச்சவையே?

அப்ப உந்த இந்துக்கள் கோவிலில பிறப்பால பார்ப்பனரானவை தான் பூசை செய்யலாம் எண்டும் சொல்லுகினம்.உது மனித உரிமைகளை மீறிற விசயமா இல்லையோ. அப்ப சாதியத்தையும் இந்திய உயர் நீதி மன்றம் அங்கீகரிக்குமோ? உந்த உயர் நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு இருக்குதோ.

எல்லாரும் அச்சகராகலாம் எண்டு தமிழ்னாடு அரசு கொண்டு வந்த சட்டத்தையும் உந்த உயர் நீதி மன்றம் தான் தடை செய்தது.

ஆனாப்பாரக்கா இங்க லண்டனில, உந்த இந்துக்களின் நம்பிக்கையை விட மனித உயிர்களின் பாதுகாப்பும் வளமும் முன் நேற்றமும் தான் முக்கியம் எண்டு, சம்போ எண்ட மாட்டை கொல்ல வேணும் எண்டு சொன்னவங்கள்.

அனாப்பாருங்கோ உது இதோட முடியாது, இனி வேற கதயள் கனக்க இருக்கு, பிறகு சந்திப்பம் அப்ப நான் வரட்டா? கல்லுக் கனக் கிடக்கு எடுத்து வீசி விளயாடலாம். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இதை விட நல்ல ஒரு வழி இருக்கு.

மொட்டைத்தலை சங்கராச்சாரி வழக்கில் ஒரு நீதிபதி தான் அவருடைய பக்தன், ஆகவே இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன் என்று சொல்லி மறுத்துவிட்டார்.

அப்படியே இந்தியாவின் அனைத்து நீதிபதிகளும் "நான் இந்து, ராமர் பால வழக்கை விசாரிக்க மாட்டேன்" என்று சொல்லி மறுத்துவிடலாம். வழக்கும் ஒரு நூறு வருடம் நிலுவையில் இருக்கும். ராமர் பாலத்தையும் இடிக்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites

ராமர் பாலம் என்பது புராணிகர்களின் கூற்று-கருணாநிதி

செப்டம்பர் 01, 2007

சென்னை: ராமர் பாலம் என்பது புராணிகர்களின் கூற்று, அது பொறியாளர்களின் படைப்பல்ல என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: ராமர் பாலம்- உண்மையா?

பதில்: ராமாயணமே ஆரிய-திராவிடர் போராட்டத்தைத்தான் குறிக்கும் என்று பண்டித ஜவஹர்லால் நேருவும் மற்றும் பல வரலாற்றுப் பேராசிரியர்களும் வலுவான ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார்கள். எனவே ராமர் பாலம் என்பது புராணிகர்களின் கூற்று, பொறியாளர்களின் படைப்பு அல்ல.

சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்திற்கும் அதையொட்டிய மாநிலங்களுக்கும் எவ்வளவு பயன் விளையும், எத்தகைய பொருளாதார வளம் குவியும் என்பதையெல்லாம் நாட்டுப் பற்றுள்ள நல்லவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சேது சமுத்திர திட்டத்தை தடுக்க முடியாது-பாலு

இந் நிலையில் போரூரில் சிறுவர் பூங்கா, விளையாட்டுத் திடல் ஆகியவற்றை திறந்து வைத்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு பேசுகையில்,

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவாகும். இந்த தட்டத்தின் ஒரு பகுதிக்குத் தான் நீதிமன்றம் விதித்துள்ளது. அதுவும் 14ம் தேதி வரை தான் தடை, மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சேது சமுத்திர திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றி விடுவோம். அதை யாராலும் தடுக்க முடியாது. இந்தக் கனவு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2007/09...arunanidhi.html

Share this post


Link to post
Share on other sites